விக்சனரி பேச்சு:த. இ. ப. சொற்கள் பதிவேற்றத் திட்டம்/இதுவரை நடந்த பழைய உரையாடல்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
தலைப்பைச் சேர்
கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

திட்டப்பணிக் காலம்[தொகு]

ஆகத்து 01, 2010 முதல் ஆகத்து 15, 2010

  • சொற்பட்டியலில் அடங்கியுள்ள சொற்களின் எண்ணிக்கை எனக்குத் தெரியாது. அது பெருமளவில் இருக்கும் என ஊகிக்கிறேன். இடுகைப் பணிக்குப் பதினைந்து நாட்கள் மட்டுமே போதுமா? ஒரு மாதமாவது வேண்டாமா?--பவுல்-Paul 11:32, 28 ஜூலை 2010 (UTC)

ஆயிரக்கணக்கான சொற்கள் உள்ளன. பக்க வடிவமைப்பை இறுதி செய்த பிறகு, இவற்றைத் தானியக்கமாக ஓரிரு நாட்களிலேயே ஏற்றி விடலாம்--ரவி 12:05, 28 ஜூலை 2010 (UTC)

உண்மை இரவி, ஆனால் புதிதாக ஏற்றவிருக்கும் சொற்களில் பலவும் இங்கு ஏற்கனவே இருக்கும் சொற்களாகவும் இருக்கும். இவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றி முடிவு செய்தாகிவிட்டதா?--செல்வா 13:48, 28 ஜூலை 2010 (UTC)

செல்வா, இப்போது நாம் இங்கு செய்யும் உரையாடல்களே துவக்கம். எனவே, எதைப் பற்றியும் இது வரை முடிவு இல்லை. சென்ற முறை சுந்தரும் நானும் சொற்களை ஏற்றிய போது, தானியங்கி ஏற்கனவே இருக்கும் சொற்களை விட்டு விட்டு புதிய சொற்களை மட்டும் சேர்த்தது. இந்த முறையும் அப்படிச் செய்யலாம். அல்லது, கூடுதல் / இற்றைப்படுத்தப்பட்ட தரவுகள் இருக்கும் நிலையில் ஏற்கனவே உள்ள பக்கங்களைச் சீரமைப்பது குறித்தும் சிந்திக்க வேண்டும். எதுவாக இருந்தாலும், அவற்றுக்கான நிரல் எழுதும் பணியும் பதிவேற்றப்பணியும் இலகுவாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறேன். தற்போது பக்க வடிவமைப்பு உரையாடல்களே கவனம் செலுத்த வேண்டியவை--ரவி 14:21, 28 ஜூலை 2010 (UTC)

நன்றி --செல்வா 03:15, 29 ஜூலை 2010 (UTC)
  • நமக்களிக்கப் பட்ட சொற்களில், ஏற்கனவே இருப்பவற்றை இப்பகுப்பில்(பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்) காணலாம். இப்பகுப்பில் உள்ள சொற்களை தானியங்கி இயக்கத்துக்கு முன்பே பிரித்து விட முயற்சிக்கிறேன். அது எளிதாக முடிந்தால், பலமணி நேரம் மீதமாகும்.--த*உழவன் 14:32, 2 ஆகஸ்ட் 2010 (UTC)
எவ்வளவு சொற்கள். இதை நிரல் கொண்டு செய்ய முடியுமா?--Natkeeran 15:57, 2 ஆகஸ்ட் 2010 (UTC)

எளிதான பணி தான். எனக்குத் தடையாக இருப்பது மின்தடையும், இணையத்தடையும் தான்.--த*உழவன் 07:20, 7 ஆகஸ்ட் 2010 (UTC)


த.இ.ப. வின்சொற்கள்[தொகு]

1 சுந்தர் தானியங்கி வழியாக பதிவேறியவை.அவற்றினைப் பற்றிய உரையாடலை இங்கு காணலாம்.

2) தமிழிணைய மாநாடு-2010, தமிழ்நாடு - த.இ.ப. தந்த சொற்கள்

  • இதனை பழ.கந்தசாமி உதவியுடன் ஆய்கிறேன். விரைவில் ஆவணப்படுத்துகிறேன்--த*உழவன் 01:31, 29 ஜூலை 2010 (UTC)
  • இச்சொற்களைப் பற்றி என்ன ஆய்வு செய்கிறீர்கள் என்று விளங்கவில்லை. என்ன ஆய்வறிக்கை உருவாக்கப்படுகின்றது? --செல்வா 03:13, 29 ஜூலை 2010 (UTC)

ஆய்வறிக்கை

1) தமிழிணைய மாநாடு(2010) - த.இ.ப. தந்த சொற்களில், 1,32,746 சொற்களைப் பல்வேறு பாடப்பரிவுகளில் தந்துள்ளனர். அவற்றில் ஏற்கனவே, சுந்தர் தானியங்கி மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டச் சொற்களை (பகுப்பு:ஆங்கிலம்-த.இ.ப.அகரமுதலியின் சொற்கள்) என்பதில் காணலாம். இப்பகுப்பில், பிற சுந்தர் தானியங்கி மூலம் முன்பு பதிவேற்றம் செய்யப்பட்ட அனைத்துச் சொற்களையும் சேர்க்க வில்லை. தமிழிணைய மாநாடு-2010, தமிழ்நாடு - த.இ.ப. தந்த சொற்கள் மட்டும் (36,589)இணைக்கப் பட்டுள்ளன. மீதமுள்ள 96157 சொற்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்--த*உழவன் 02:31, 29 ஜூலை 2010 (UTC)

2) சுந்தர் தானியங்கி வழியாகக் கிடைத்த அனுபவங்களின் படி, பின்வருவனவற்றை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.

அ) [[en:{{PAGENAME}}]] என்றி விக்கியிடை இணைப்பை, ஒவ்வொரு சொல்லின் இறுதியிலும் சேர்க்கத் தேவையில்லை.

ஏனெனில், பயனர்:Interwicket என்ற விக்கியிடைத் தானியங்கி, நாம் ஒரு புதியப் பக்கத்தினை ஏற்படுத்திய சில தினங்களில், பிற விக்சனரி தளங்களுடன் இணைத்துவிடும். குறிப்பாக நாம் உருவாக்கிய புதிய சொல், ஆங்கில விக்சனரியில் இல்லையென்றால் அதற்குரிய [[en:{{PAGENAME}}]] என்ற விக்கியிடை இணைப்பை அழித்து விடும்.(எ. கா.) abnormal_psychology. நாம் ஒரு புதிய பக்கத்தினை தமிழ் விக்கிப்பீடியாவில் உருவாக்கியுவுடன் அதனை அதனின் ஆங்கில விக்கிப்பீடியா கட்டுரையுடன் தவறாமல் இணைக்க வேண்டும். இங்கு அத்தகைய கட்டாய நிலை இல்லை. காரணம், மேற்கூறிய படி விக்கியிடைத்தானியங்கியே அற்புதமாக அவ்வேலையைச் செய்து விடுகிறது.

ஆ) புதியதாக உருவாக்கப்படும் பக்கம், தமிழ் விக்சனரியின் ஏதாவதொரு பக்கத்துடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதனை நமது பொது விதியாகப் பின்பற்றினால், முன்பு போல பதிவேற்றத்திற்கு பின், ஏற்பட்ட எண்ணிக்கை இறக்கம் மீண்டும் ஏற்படாது.

அவ்விதம் இணைக்கப்பட, பகுத்தலே சிறந்த வழி. ஏனெனில், அக இணைப்பை ஏற்படுத்துவதில், அனுபவமில்லாப் பங்களிப்பாளருக்கு சற்று குழப்பமே ஏற்படும். அவர்களால் தோன்றும் பிழைகளைத் தவிர்க்க, பகுத்தலே சிறந்த வழியாகும். பகுத்தல் மூலமே கடந்த பொங்கலன்று பழ.கந்தசாமியும், பரிதிமதியும், பெரியண்ணனும், நானும் முன்பு இறக்கமான சொற்களைத்(ஏறத்தாழ 25,000) திரும்ப பெற்றோம். அப்பகுத்தல் முறை வருமாறு;-
விக்சனரியின் சொற்களை, இரு பிரிவாக்கிக் கொண்டோம்.
1.தனிச்சொல் பட்டியல். (எ. கா.) penguin - (பகுப்பு:பகுக்காச் சொற்கள்)
2.கூட்டுச்சொல் பட்டியல். (எ. கா.) (white-flippered penguin)(பகுப்பு:ஆங்கிலம்-கூட்டுச்சொற்கள்)
பகுப்பு:பகுக்காச் சொற்கள் என்பதிலுள்ளச் சொற்கள், பின்பு துறைவாரியாகப் பிரிக்கப்பட்டன.

—முன்நிற்கும் கையொப்பமிடப்படாத கருத்து தகவலுழவன் (பேச்சுபங்களிப்புகள்) என்ற பயனரால் பதிக்கப்பட்டது. .

  • பகுப்பு முடிந்ததென்றால், பக்கவடிவம் முடிந்ததும் பதிவேற்றலாம். பக்கவடிவம் முடிவு செய்ய அடுத்த நடவடிக்கை ஏற்பாடு செய்யவேண்டும். அதற்கென ஒரு நாள் முடிவு செய்யவேண்டுமா? பழ.கந்தசாமி 06:50, 7 ஆகஸ்ட் 2010 (UTC)
  • ஒவ்வொருவரும் ஒரு சொல்லை எடுத்து தாங்கள் விரும்பும் மாற்றங்களை அதில் செய்து, முன்மொழிந்தார்கள் என்றால், அவை அனைத்தையும் இணைத்து, இதற்குரிய பக்க வடிவை உடனே முடிக்கலாம். முன்மொழியும் சொல்லில், வார்ப்புருக்களைப் பயன்படுத்தாமல் மாற்றங்கள் செய்தால் குழப்பம் வராமல் இருக்கும்.--த*உழவன் 07:23, 7 ஆகஸ்ட் 2010 (UTC)

தேவையானவைகள்[தொகு]

  1. தமிழக அரசு கொடுத்த தகவல்களை மின்னூல்(PDF) ஆக மாற்றி, ஆதாரம் என்பதற்கான தொடுப்பாக மாற்றலாமா? ஏனெனில், முன்பு த.இ.பல்கலைக்கழக இணையத்திற்க்கே கொடுத்தோம். தற்போது இப்படி செய்யலாமா? --த*உழவன் 12:41, 10 ஆகஸ்ட் 2010 (UTC)
(எ. கா.) நூலகம் தளத்திற்கு இது போல மின்னூல்களை தர முடிகிறது. அது போல மேற்சொன்ன மின்னூலை அனைவரும் காணும் படி செய்வோமா?--த*உழவன் 17:11, 11 ஆகஸ்ட் 2010 (UTC)
  • வேண்டாம் என்பது என் கருத்து. இவை மாறக்கூடியவை, வளரக்கூடியவை. விக்கித் திட்டத்திலேயே வேண்டியவற்றை நூல்வடிவாகவோ, கட்டுரை வடிவாகவோ கொள்ள வசதிகள் உள்ளன.--செல்வா 16:02, 14 ஆகஸ்ட் 2010 (UTC)(இக்கருத்து பேச்சு:constant of aberration பக்கத்திலுள்ளது--த*உழவன் 05:45, 15 ஆகஸ்ட் 2010 (UTC))
  • ஆதாரமாக மற்ற அகராதிகளைப் போலவும், இதற்கு முன்னர் செய்தது போலவும் த.இ.ப. தளத்தையே கொடுத்துவிடலாம். மின்னூல் செய்து ஆதாரமாகத் தருவது பற்றிப் பின்னர் பார்க்கலாம். இப்போது, பக்கவடிவம் இறுதி செய்து, பதிவேற்றம் செய்வதில் கவனம் செலுத்தலாம். பழ.கந்தசாமி 17:50, 14 ஆகஸ்ட் 2010 (UTC)
  • உகந்த வடிவில் மேற்குறிப்பிட்ட த.இ.ப சொற்களை, பிறர் மாற்றமலும், பலர் கண்டுரும் வண்ணமும் செய்வது குழப்பத்தைத் தவிர்க்கும்--த*உழவன் 05:45, 15 ஆகஸ்ட் 2010 (UTC)
  • தற்காலிகமாக ஆதாரம் பகுதிக்கு {.{செந்தமிழ் மாநாடு-2010}}(வார்ப்புரு பேச்சு:செந்தமிழ் மாநாடு-2010 காணவும்)என்ற வார்ப்புருவை இட்டுவிடலாம். பின்பு, அதில் தேவையான மாற்றங்களைச் செய்து கொள்ளலாம். இவ்வார்ப்புரு {.{ஆங்கில ஆதாரங்கள்}} அடுத்து இடலாமென்று கருதுகிறேன்.--த*உழவன் 06:07, 23 ஆகஸ்ட் 2010 (UTC)

மாதிரிப் பக்க வடிவங்கள்[தொகு]

  • மறவாமல், கீழ்காணும் சொற்களின் உரையாடல் பக்கங்களையும் கண்டு கருத்திடவும்
  1. a pair of compasses (சுந்தர் தானியங்கி மூலம் பதிவேறிய வடிவம்)
  2. thou (செல்வா முன்மொழியும் வடிவம்.)
  3. abacus²(த*உழவன் முன்மொழியும் முதல் வடிவம்.)

பதிவேற்றச் சோதனைகள்[தொகு]

  • மறவாமல், கீழ்காணும் சொற்களின் உரையாடல் பக்கங்களையும் கண்டு கருத்திடவும்

முதற்கட்டம்[தொகு]

  1. பயனர்:Ganeshk/Translation(இதில் த.இ.ப.சொற்கள் 9 உள்ளன.உங்கள் சோதனைக்குத் தேவைப்படின் பயன்படுத்தவும்)
  2. constant of aberration(சுந்தர் தானியங்கி வடிவம்)

இரண்டாம் கட்டம்[தொகு]

  1. dado (த*உழவன் முன்மொழியும் 2ஆம் வடிவம்)
  2. dado2     - செல்வா பரிந்துரைக்கும் முதல் முயற்சி வடிவம் (மேலும் சில இனி வரும்; பேச்சு:dado என்னும் பக்கத்தைப் பார்க்கவும். thou, பேச்சு:thou ஆகிய பக்கங்களையும் பார்க்கவும்.
  3. dado3, dado4 ஆகியவற்றையும் காண்க (பேச்சுப் பக்கங்கங்களையும் காண்க)

இறுதி கட்டம்[தொகு]

மாதிரிப் பக்க வடிவ உரையாடல்கள்[தொகு]

சொற்களைப் பதிவேற்றுவதற்கான மாதிரிப் பக்க வடிவங்களைக் கீழே தரலாம்.

  • தற்போது நாம் பயன்படுத்துகின்ற "புதிய சொற்களைச் சேர்க்கவும்"(சொல்-பொருள் மாதிரி வடிவம்)என்னும் பாணியைக் கடைப்பிடித்தால் நன்றாயிருக்கும் என எண்ணுகிறேன். அதில் எளிமை உள்ளது; ஏற்கெனவே பல சொற்கள் அவ்வடிவத்தில் உள்ளீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், புதிதாக இடப்படும் சொற்களையும் ஏற்கெனவே இடப்பட்டவற்றையும் தரப்படுத்தும் முயற்சியும் கைகூடும்.
  • மற்றொரு கருத்து: த.இ.ப. சொல்-பொருள் அமைப்புப் பாணி "dove" -புறா-dove-வடிவமைப்பு

போன்று விரிவாக இராது என்றே நினைக்கிறேன். பிற மொழிச் சேர்க்கை, படிமங்கள்...எல்லாம் இராது. இத்தகைய மேம்பாடுகள் அடுத்த படியாக அமையலாம். தற்போது அடித்தள அமைப்பே போதுமாகலாம்.--பவுல்-Paul 11:32, 28 ஜூலை 2010 (UTC)

  • இரவி, மொழியைக் குறிப்பிடும் தலைப்பு என்னும் பக்கத்தில் வடிவமைப்பு பற்றி நிறைய உரையாடி உள்ளோம். சொல்லுக்குப் பொருள் அறிய ஒருவர் ஒரு பக்கத்துக்கு வரும்பொழுது அங்கு அட்டவணை, உள்ளடக்கம் போன்றவை வருவது அழகாக இல்லை. எளிமையாக thou, ಕಾನು (கானு), tano போன்ற சொற்களில் உள்ளவாறு பக்கங்கள் அமைந்தால் அழகாக இருப்பனவாக எனக்குப் படுகின்றது. பல பொருள்கள் உள்ள சொற்களுக்குப் பிறமொழிகளில் மொழி பெயர்ப்பு தர தொங்கு நிரல் (drop down menu) வழி தரலாம். பக்க வடிவமைப்பு மட்டுமல்லாமல், உள்ளடக்கத்தின் ஒழுக்கமும் (எதற்கு பின் எது வருதல் வேண்டும், படங்கள் எங்கு இருத்தல் வேண்டும், என்பன) மிக முக்கியம்.நான் முன்னர் கூறியதை மீண்டும் இங்கு இடுகின்றேன்
நேர்த்தியான வடிவமைப்பு வெறும் அழகு கூட்டுவதுமட்டுமல்லாமல், ஒருவகை நமபகத்தன்மையும், வரவேற்புணர்வும் தரும். பொருளுக்கு முதன்மை தரும் விதமாக அமைவது விரும்பத்தக்கது. நிறங்களை இணக்கமான முறையில், கலையுணர்வுடன் பயன்படுத்தவேண்டும். ஒளிரும் பச்சை நிறத்தில் இருப்பது தவறாக (கலைநோக்கில்) கண்ணை ஈர்ப்பதாக உணர்கிறேன் (இது என் நினைப்புதான், ஆனால் நான் வடிவமைப்பின் அழகை விரும்புபவன்). வடிவமைப்பு, நிறவிணக்கம் (colour coordination?) என்பன நுட்பமானவை, அவை நேர்த்தியுடன் செய்தால்தான் ஈர்ப்புண்டாகும். தற்பொழுது இருக்கும் புதிய முறை சற்று நிறைவு தருவதாக உள்ளது. hebrew என்னும் பக்கத்தைப் பாருங்கள் அது என்ன எபிரேய மொழிச்சொல்லா, அல்லது ஆங்கிலத்தில் அம்மொழியை எழுதும் வழக்கமா என புரிவதற்கு சிறிது கூட நேரம் எடுக்கின்றது. carrot என்னும் சொல்லின் பக்கத்தைப் பாருங்கள் "ஆங்கிலம்", "பெயர்ச்சொல்" ஆகிய "அறிவிப்புகள்" தேவைக்கு அதிகமான அளவில் தூக்கலாகத் தெரிகின்றன. பட்டை கட்டி விடுவதால் அவை சொற்பொருளில் இருந்து விலகி (ஒதுக்கமாக) நிற்கின்றது. இவை என் தனிக்கருத்துகள்தாம். thou, ಕಾನು (கானு), tano போன்ற சொற்களின் பக்கங்கள் எளிமையாக, அழகாக இருப்பனவாக எனக்குப் படுகின்றது.

--செல்வா 13:37, 28 ஜூலை 2010 (UTC)

செல்வா, உங்கள் பெரும்பாலான கருத்துகளுடன் ஒப்புகிறேன். பொதுவான பக்க வடிவமைப்பு குறித்த உரையாடல்களை இங்கு செய்யலாம். த. இ. ப. சொற்களுக்கு மட்டும் ஏதேனும் சிறப்புத் தேவைகள் இருப்பின் இங்கு உரையாடுவோம்.--ரவி 14:21, 28 ஜூலை 2010 (UTC)


நான் முன்பு முன்மொழிந்த பக்கத்தில், த.உழவன் செய்த மாற்றங்களினால், நிறவிணக்கம் இழந்து காணப்படுகின்றது. பக்க வடிவம் பற்றிய என் கருத்துகளைப் பல முறை கூறியிருக்கின்றேன். இந்த மீண்டும் தொகுத்து இடுகின்றேன். விரைவில் இவை பற்றி முடிவு செய்தல் நலம். --செல்வா 12:35, 14 ஆகஸ்ட் 2010 (UTC)

முக்கியமான கருத்துகளில் சில:
(1)மொழியைக் குறிக்க ஒரு பட்டை (கொடியுடனோ, கொடி இல்லாமலோ இருக்கட்டும்; இதன் நோக்கம் தலைச்சொல்லுக்கு அடியில் கொட்டையாக மொழியின் பெயர் வருவது தவிர்க்கப்படும் (hebrew போன்ற சொற்களில் குழப்பம்கூட வரக்கூடும்; கொடியிருந்தால் நல்லது என்பது என் கருத்து);


(2) பொருள், விளக்கம், பயன்பாடு (+ இலக்கியப் பயன்பாடு), இலக்கணக்குறிப்பு, மொழிபெய்ர்ப்பு, சான்றுகோள்கள் போன்றவற்றுக்குத் தனிப் பட்டைகள் இருந்தால் தகவல்கள் ஒழுங்குபட்டு நிற்கும்;


(3) மொழிபெயர்ப்புகளைத் திறந்து மூடும் அட்டவணையில் பல மொழிகளுக்கும் தருவது நல்ல முறை;


(4) பொருத்தமான , தேர்ந்த படங்கள் வலப்புரம் பொருத்தமான பருவளவில் இருத்தல் வேண்டும்;


(5)தமிழல்லாத எழுத்துகளில் பதுவாகும் வேற்றுமொழிச்சொற்கள் யாவற்றுக்கும், தமிழ் எழுத்துகளில் ஒலிப்பைச் சுட்டுவதும் குறியீடுகளை விளக்கும் உதவிப்பக்கத்துக்கு உள்தொடுப்பு இருப்பதும் வேண்டும்;


(6) பட்டைகளும் பிற பக்க அமைப்புகளும் வரவேற்புணர்வு தரும் நல் நிறவிணக்கம் உடையதாக இருத்தல் வேண்டும் (அசையும் படங்கள், ஓடும் குறிகள், குதித்துக்கொண்டிருக்கும் உருவங்கள் இல்லாமல் இருத்தல் நன்றாக இருக்கும்);


(7) அட்டவணைகள் வினைச்சொற்கள் காலம், பால் உணர்த்துமாறு மாறுவது எப்படி என்னும் வினைவடிவங்களைக் காட்டுவதற்கு (verb declension), வேண்டுமானால் காட்டலாம், சொல்லின் பொருள்களைக் காட்டப் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.


(8) பெயர்ச்சொல், வினைச்சொல், ஒலிப்பு, ஆங்கிலம், கிசுவாகிலி போன்ற சுட்டுகள் தரும்பொழுது சொற்களுக்கு இடையே இடைவெளி தருதல் வேண்டும். (hebrew என்னும் சொல்லில் பிறைக்குறிகளுக்குள் உள்ள ஆங்கிலம் என்பது எப்படி சொல்லுடன் ஒட்டிக்கொண்டிருக்கின்றது என்று பார்க்கவும். பொதுவாக எப்படி இருந்தால் பார்ப்பதற்கு நேர்த்தியாக இருக்கும் என்று பார்த்து இடைவெளிகள் தருவது நல்லது.


(*)இன்னும் சிலவும் உள்ளன. நான் மாதிரிப்பக்கம் 2-3 செய்து காட்டுகிறேன் (நிறைகுறைகளை ஏற்கனவே பல முறை விரிவாகக் கூறியிருந்தாலும் மீண்டும் இன்னொரு முறையும் எடுத்துக்காட்டுகிறேன்! என் செய்வது!)

--செல்வா 12:35, 14 ஆகஸ்ட் 2010 (UTC)


  • இந்தப் (constant of aberration)(11.07.2010 அன்று தானியங்கி மூலம் பதிவேறியது. அப்பொழுது இத்திட்டப்பக்கம் (28.07.2010) இல்லாததால், ஏற்கனவே இருக்கும் சுந்தர் தானியங்கியின் வடிவம் பின்பற்றப்பட்டது)

பக்கவடிவத்திலிருந்து மாறுவதுபற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். அதனால், இதுவரை இடப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் ஒருமித்த ஒரு பக்கத்தை மணல்தொட்டியில் பதிவேற்றி, அதைப் பற்றி உரையாடி இறுதிவடிவம் கொடுக்க முயற்சிக்க வேண்டும். பழ.கந்தசாமி 17:54, 14 ஆகஸ்ட் 2010 (UTC)

  • த*உழவன், மாதிரிப் பக்கவடிவங்களுக்கு நன்றி. பயன்பாடு, விளக்கம், சொல்வளம்/ஒத்த கருத்துள்ள சொற்கள் போன்ற பகுதிகள் தேவை என நாம் பக்கவடிவ உரையாடலில் தெரிவித்து வருகிறோம். மேலும் பட்டைநிறம், கொடி பற்றியும் சில கருத்துகள் உள்ளன. அவ்வுரையாடலில் இருந்து பொதுவான கூறுகளைக் கொண்ட ஒரு பக்கத்தை முன்மொழிதல், அதற்கு சோதனைப் பக்கமிடல் அனைவரையும் ஒரே பாதையில் இட்டுச்செல்லும். விரைவில் பக்கவடிவை இறுதிசெய்ய உதவும். நன்றி. பழ.கந்தசாமி 18:03, 14 ஆகஸ்ட் 2010 (UTC)

சொற்களைப் பதிவு செய்யும் பொழுது கருத வேண்டியன[தொகு]

1)எத்துறையைச் சேர்ந்த சொற்கள் என்னும் துறையைக் குறிப்பிடும் சொற்கள் சிறியதாக சாய்வெழுத்துகளில் இருத்தல் வேண்டும்.--செல்வா 03:56, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

  • துறைச்சொற்களில் கருத்து வேறுபாடுகள் இருப்பதால், இப்போதைக்கு அவை பகுப்புகளில் மட்டும் பயன்படுத்தப்படுவதே சிறந்தது.துறைசார்ந்த வல்லுனர் ஒருவர் சரிபார்த்து கொடுத்தால் தான், நம்பகத்தன்மை ஓங்கும். ஏற்கனவே, பல சொற்களில் அத்தகைய பிழைகளைச் சுட்டி காட்டியுள்ளனர்.--த*உழவன் 06:54, 13 ஆகஸ்ட் 2010 (UTC)
  • என் துறையில் தன்மையால் பல துறைகளைச் சார்ந்த பட்டறிவு உண்டு. இயற்பியல், வேதியியல், உயிர்வேதியியல், பல்துறை பொறியியல், மருத்துவம், கலைகள் என்று பல. எங்களுக்கு எதுவும் காட்டாமல் நீங்களாக முடிவு செய்தால் நான் என்ன சொல்ல இயலும்?சொல்லப்போனால், இந்த கலைச்சொல் தொகுப்பு முதலில் நாங்கள் (நற்கீரன், பொன்னவைக்கோ, செந்தமிழ்க்கோதை, வேந்தன், நான் போன்ற குழுவினர்) தொகுத்த முதல் 5,000 சொற்களில் இருந்தே வளர்ந்தெழுந்தது. பின்னர் பலரும் வந்து சேர்ந்து பல்லாயிரக்கணக்கான சொற்களாக வளர்த்தெடுத்தனர். இப்பொழுது அவர்கள் கைக்கொண்டு சொல்லாக்கிய முறைகளை அறியேன். பல சொற்கள் பொருந்தாதனவாகவும் இருக்கும் என்பதையும் மிக நன்றாக அறிவேன். ஆனால், துறைகளை வகுப்பதில் பெரும் இடர் ஏதும் இராது. இச்சொற்களை என்னைப்போல் இன்னும் சிலரும் காண வசதி இருந்தால் நன்றாக இருக்கும்.--செல்வா 13:01, 13 ஆகஸ்ட் 2010 (UTC)

2)ஆங்கிலச்சொற்களுக்கு ஈடான தமிழ்ச்சொற்கள் அனைத்திற்கும் (கூடிய மட்டிலும்) உள்ளிணைப்பு உருவாக்க வேண்டும். தானியங்கியாகவே இந்த உள்ளிணைப்புகளுக்கு ஆங்கிலச்சொற்களை மொழி பெயர்ப்பாக இட முடியுமா எனவும் எண்ணிப்பார்க்கலாம். இப்படிச் செய்வதால் எண்ணிக்கை இரட்டிப்பாகும் (அதுவல்ல நம் நோக்கம் எனினும், புதிய சொற்கள் பதிவாகும்). இதில் ஓர் அச்சம் என்னவென்றால் தமிழ்ச்சொற்கள் யாவும் பொருத்தமானவைதாமா என்று அறியாமல் இப்படிச்செய்வது சரியாக இருக்குமா என்பதே. எ.கா நுண்ணுயிரி என்பதற்கும் நுண்மம் என்று கொடுத்துள்ளார்கள். இது சரியானதாக எனக்குப் படவில்லை. பல பகுப்புகளும் மிகவும் பொருத்தம் இல்லாததாக உள்ளன.--செல்வா 03:56, 11 ஆகஸ்ட் 2010 (UTC)

  • தமிழ் விக்சனரியில் தமிழிலிருந்து பிற மொழிகளுக்குச் செல்லும் சொற்கள் குறைவாக இருக்கிறதே என்று பல முறை வருத்தப்பட்டிருக்கிறேன். நீங்கள் சொல்லும் முறை ஓரளவு இக்குறையை நீக்கும். ஆனால், நமக்கு அளிக்கப்பட்டச் சொற்களில் பெரும்பாலானவை இரண்டிற்கும் மேற்பட்ட சொற்களாகவே இருக்கின்றன. எனவே, அக இணைப்புகள் தருவதிலும் இடர் உள்ளது.--த*உழவன் 06:54, 13 ஆகஸ்ட் 2010 (UTC)
  • அப்படிக் கூட்டுச் சொற்களாக இருந்தாலும் பொருட்படுத்தாமல் இணைப்பு தரலாம். ஏனெனில் ஆங்கிலத்துக்கு ஈடான தமிழ்ச்சொற்களைக் காணுவது போலவே தமிழ்ச்சொற்களுக்கும் ஆங்கிலச்சொற்களும் (பிறமொழிச் சொற்களும்) காண வசதி இருக்க வேண்டும். கூட்டுச் சொற்களாக இருந்தாலும், முதல் சில எழுத்துகளைத் தேடு பெட்டியில் இட்டாலே தொடர்பான சொற்களைத் தொங்கு பெட்டில் காட்டும் வசதி இருப்பதால், அப்படிச் செய்வதில் தவறில்லை. இதனைச் செய்ய மீண்டும் வலியுறுத்துகின்றேன்.--செல்வா 13:01, 13 ஆகஸ்ட் 2010 (UTC)

3)பல உயர்வான கருத்துக்கள் இருப்பினும், தமிழக அரசு தந்த சொற்பட்டியலை, உள்ளது உள்ளபடியே பதிவேற்றுவதே, பல விடயங்களை எண்ணிப் பார்க்கும் போது, சிறந்ததாகப் படுகிறது. அடுத்த மாத இறுதிக்குள், ஓரளவு உகந்த படங்களை, இயன்றவரை தானியங்கி மூலம் இட்டுவிட எண்ணியுள்ளேன்.--த*உழவன் 06:54, 13 ஆகஸ்ட் 2010 (UTC)

  • உள்ளதை உள்ளபடியே ஏற்றலாம், ஆனால் பின்னர் செய்ய வேண்டிய பணிகளை எளிமைப்படுத்துமாறு செய்வது முக்கியமானது. பவுல், செந்திலோடு நானும் சொற்களைப் பார்த்தால் பயனுடைய கருத்துகளைத் தெரிவிக்க முடியும். --செல்வா 13:01, 13 ஆகஸ்ட் 2010 (UTC)

பக்க வடிவமைப்புகள் இல்லாமல் சொற்களை மட்டும் இட்டு பிறரின் கருத்தை அறியலாமா?[தொகு]

மணல்தொட்டி, அல்லது தனிப்பக்கங்களில், முன்னர் த.இ.ப என்று அழைக்கப்பட்ட நிறுவனச் சொற்களை இட்டு முதல் ஓட்டமாக பிறருடைய கருத்தையும் அறியலாமா? பவுல், செந்தியோடு நானும் கருத்துகளைத் தெரிவிக்கலாமே? இப்பொழுது நீங்கள் செய்யும் முறையில் என்ன நடக்கின்றது என்றே தெரியவில்லை. ஆங்கிலச் சொற்களை மட்டும் காட்டினால் என்ன பயன்?!--செல்வா 13:07, 13 ஆகஸ்ட் 2010 (UTC)

  • ஏற்கனவே உள்ள த.இ.ப சொற்களில் நாம் சோதனைச்((எ. கா.) dado) செய்வோம். கொடுக்கப்பட்ட த.இ.ப.சொற்களை பலரும் அறியவே, மின்னூல் பற்றி வினவினேன். மேலுள்ள தேவையானவைகள் என்ற தலைப்பில், உங்கள் கருத்தினையும் அனைவரும் காணும் படி பதிவு செய்துள்ளேன்.--த*உழவன் 06:37, 16 ஆகஸ்ட் 2010 (UTC)

த*உழவனின் த.இ.ப. சொற்களுக்குரிய படிவ கருத்து முடிவு[தொகு]

கருத்துக்கள்[தொகு]

1) அழகு என்பதைவிட, கருத்துகளை ஒழுங்குபடுத்திப் படைப்பது என்று கருதுவது பொருந்தும். படிவத்தால் விரைவுக்கு அதிகத் தட்டுப்பாடு நேராது. படங்கள் இரண்டுக்கு மிகாமல் இருப்பதே நல்லது என்பது என் தனிக்கருத்து (வேறு காரணங்களுக்காக, விரைவைக் கூட்டுவதற்காக அல்ல). கொரியம் (கொரிய மொழி) விக்கி அகரமுதலியில் jellyfish என்பதற்கான பக்கத்தைப் பாருங்கள். பக்க வடிவமைப்பு என்பது வெறும் அழகுக்காக அல்ல, கருத்தை ஒழுங்குபட அளித்தல், காண்போருக்கு உதவுதல். ஏதொன்றையும் அழகாகச் செய்வதால் இன்பம் கூடும். கற்கத் தூண்டும், உள்ளம் உள்ளொழுங்குபடும். இவை எல்லாம் மேலோட்டமான செய்திகள் அல்ல. செய்வன திருந்தச்செய் என்பது தமிழ் மரபும் கூட (இது அரிதாகி வருகின்றது என்பது வேறு செய்தி). அழகு என்பதற்கு மேலான பொருள்களுள் ஒன்று எதெது எங்கெங்கு இருக்கவேண்டுமோ, அதது அங்கங்கு வீற்றிருந்தல் அழகு. இருப்பவை ஒன்றுக்கொன்று இணக்கமாக ஒன்றுக்கொன்று அணி சேர்ப்பதாக இருப்பது அழகு.--செல்வா 13:39, 20 ஆகஸ்ட் 2010 (UTC)

  • கொரியன் jellyfish கண்டேன். விக்கி நிறமான சாம்பல் நிறத்தில் அற்புதமான, மனதை வருடும் வடிவம். எனக்கு கொரியன் மொழியில் ஒரு எழுத்துக் கூட தெரியாது. எனினும், அங்கு புரிந்து கொண்டவைகளில் பின்வருவனவற்றை நாமும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.
  1. மேலுள்ள தொகு வசதி மட்டும் நீல நிறமாக மாற்றினால் சிறப்பு..
  2. ஒலிப்பை தமிழிலும், IPA இரண்டிலும் விளக்குவதற்கான இட வசதி
  3. மொழிப்பெயர்ப்பு என்பதனை தகவற்பெட்டிக்குள்ளேயே எழுதினால் சிறப்பு .--த*உழவன் 05:49, 23 ஆகஸ்ட் 2010 (UTC)

2)பக்கத்தில் படம் பொருளை வளப்படுத்தும். ஒரே பக்கத்தில் பல படங்கள் கொடுக்கும்போது, எம்மாதிரியான, எத்தனை படங்கள் என்பது வேகத்தைப் பாதிக்கக் கூடும். பொதுவாக இன்றைய இணையதளங்களின் பக்கச்செறிவைப் பார்க்கும்போது, அவற்றில் உள்ள விளம்பரங்களைப் பார்க்கும்போது, தமிழ் விக்கியோடு ஒப்பிடும்போதுகூட, நமது விக்சனரிப் பக்கங்கள் அளவில் மிகச்சிறிதே. அவற்றில், சில எளிய செறிவற்ற படங்களைச் சேர்ப்பதால், சிறிய பட்டைகளால் ஏற்படும் வேகக்குறைவு குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என்றும் தோன்றவில்லை. அதனால், தேவைப்படும் பக்கங்களுக்கு பொருளோடு ஒன்றிப்போகும் ஒரு படம், பொதுப்பக்க அமைப்பு ஏற்படுத்துவது சிறந்தது. புதுப்பக்கங்களுக்குச் சம்பந்தமில்லாத ஒன்றெனினும், ஒரு பக்கத்துக்கு நாமிடும் பகுப்புகளின் எண்ணிக்கையும் சில சமயங்களில் தேவைக்கு மிகுதியாகத் தோன்றுகின்றன. பக்கமுடிவில் இடப்படும் பகுப்புகள் போக, ஏதோ தானியங்கி, பக்கத்தின் இடையில் ஒரே பொருளுக்குப் பல பகுப்புகள் செய்து பக்கத்தை நீளமாக்கியதோடு மட்டுமல்லாமல், பொருளையே எளிதில் கண்ணுக்குத் தெரியாதவாறும் செய்துவிட்டது. த. இ. ப. வடிவமைப்பு ஆங்கிலம்-தமிழ் என்பதால் முதலில் அதற்கான பக்கவடிவத்தை இறுதிப்படுத்த முயலலாம். தமிழ்ச்சொற்களுக்குப் பக்கவடிவம் பல மொழிகளில் தரவேண்டும் என்பதால், அதைக்கூடப் பின்னர் முடிவு செய்யலாம். பழ.கந்தசாமி 06:30, 22 ஆகஸ்ட் 2010 (UTC)

  • விளம்பரங்கள் இல்லா விக்கி என்ற அடிப்படையில் பக்கவேகம் குறித்த தங்களது கருத்துக்கள் எனது புரிந்துணர்வை மேலோங்கச் செய்தது. மிக்க நன்றி. படங்களின் அளவும், படங்கின் எண்ணிக்கையும் பற்றி அனைவரின் கருத்தினையும் உள்வாங்கிக் கொண்டேன். பகுப்புகள் 3 அல்லது4 மட்டுமே வரும் என்று மேலே கூறியுள்ளேன். அதனால் நம் பக்கம் தெளிவாகும். மேலும், நிறைய பக்கங்களைப் பதிவேற்றத்திற்கு பிறகு வளர்ப்பவர் இல்லையெனலாம். அதனாலும், பகுப்புகள் அதிகமாக இருப்பது போல, தூக்கலாகத் தெரிகிறது. த.இ.ப.பகுப்புகளில் சிலவற்றினை நீக்க வேண்டும்.(எ. கா.) உயிரியல், தாவரவியல், விலங்கியல், கால்நடையியல் இவற்றில் விரிவாக உள்ள உயிரியல் என்பதனை விட, கால்நடையியல் என்ற சிறப்பு பகுப்பை வைத்துக்கொள்ளலாம். உயிரியல் என்பதனை வேறு சிறப்பு பகுப்புகள் இல்லாத சூழ்நிலையில் பயன்படுத்தலாமென்று கருதுகிறேன்.
  • ஒரே பக்க வடிவம் அனைத்திற்கும் பொருந்துவதில்லை. வேறுபட்டும் இருக்கலாமென்று நீங்கள் முன்பு கூறியதன் பொருளை இப்பொழுது தெளிவாக புரிகிறது. *{{செந்தமிழ் மாநாடு-2010}} என்ற வார்ப்புருவினை அனைத்து பதிவேற்றச்சொற்களுக்கும் இட்டுவிடலாம். பின்பு காலத்தால் காக்கப்பட வேண்டிய மின்னூலாகவோ,அல்லது பிற விக்கி வடிவத்திலோ அதில் மாற்றி விடலாம். இது அவசியம். ஏனெனில், த.இ.ப. அளிக்கப்பட்ட சொற்களுக்கு அதுவே சான்றாகும்.--த*உழவன் 05:49, 23 ஆகஸ்ட் 2010 (UTC)

3)

4)

த.இ.க. சொற்களுக்கான பக்கவடிவம் முடிவு செய்யும் வழிமுறை?[தொகு]

கீழ்க்கண்டவை பற்றி உரையாடி, த,இ.க.கான பக்கவடிவை இறுதிசெய்யலாமா?

  • இதற்கென ஒரு நாள் குறிக்கலாமா? இன்னும் எவ்வளவு நாட்கள் தேவைப்படலாம்?
  • அதற்கென ஒரு கருத்துக்கணிப்பு அப்போது நடத்தலாமா?
  • அவற்றுக்கான ஒவ்வொருவரின் மாதிரிப்பக்கங்கள் எவை?

த,இ.ப சொற்கள் ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்புகள் என்பதால், அதற்கான பக்கவடிவில் கருத்திணக்கம் ஏற்பட்டால் அவற்றை முதலில் பதிவேற்றலாம். முடிவு செய்யப்படும் பக்கவடிவம் எசுப்பானியம்-தமிழ், இந்தி-தமிழ் போன்றவற்றுக்குப் பொருந்துமாறு வரவேண்டும். (தமிழ்ச் சொற்களுக்கான பக்கவடிவங்கள் பன்மொழிக்கான பிரிவுகள் கொண்டிருக்கும் என்பதால் வேறுபடும்). பழ.கந்தசாமி 01:46, 1 செப்டெம்பர் 2010 (UTC)Reply

இப்பொழுதே கருத்துக்கணிப்பைத் தொடங்கலாம். என்னைப் பொருத்த அளவிலே dado2, dado4 என்பவை அந்தவரிசையிலேயே சிறந்ததாகத் தோன்றுகின்றது. என்னென்ன பக்கங்களை மாதிரிகளாகக் கொண்டு கருத்துப் பதிய வேண்டும் என்று முடிவு செய்யலாம். இதுவரை அலசியதற்கு மேலும் கருத்துகள் முதலில் அலச வேண்டுமா அல்லது கருத்துக்கணிப்புக்குச் செல்லலாமா என ஒரு அறிவிப்பு விட்டு அடுத்த நாளோ அதற்கு அடுத்த நாளோ கருத்துக் கணிப்பைத் தொடங்கலாம் என்பது என் கணிப்பு. பழ.கந்தசாமி, தகவலுழவன், மாகிர், பவுல், செந்தி, பரிதிமதி, நற்கீரன், இரவி, செல்வா + பெரியண்ணன், என குறைந்தது 9-10 பேர் உள்ளோம். இது கணிசமான எண்ணிக்கை. அதிக நாட்களைக் கடத்தாமல் 5 நாட்களுக்குள் கருத்துக் கணிப்பு செய்தால், சொல்லேற்றத்தைத் தொடங்கலாம். --செல்வா 02:44, 1 செப்டெம்பர் 2010 (UTC)Reply


  • dado2, dado4 இரண்டும் வேறுப்ட்டவையாகத் தெரியவில்லையே? அவற்றிடையே என்ன வேறுபாடு?
தகவலுழவன், எழுத்துகள் நீலநிறத்தில் வேண்டாம் என்றதால், செந்நீல நிறத்தில் உள்ளன. இது ஒன்றுதான் மாறுபாடு. (நீல நிறம் உள்ளிணைப்பு இருப்பதைக் காட்டும் என்றார்).--செல்வா 03:45, 1 செப்டெம்பர் 2010 (UTC)Reply

கருத்துக்கணிப்புக்கு செல்வா முன் மொழியும் பக்க வடிவங்கள்[தொகு]

கருத்துக்கணிப்புக்காக முன்மொழியப்படும் பக்கங்களை கீழுள்ள பட்டியலில் இடவும்.

  1. dado2
  2. dado4

03:31, 1 செப்டெம்பர் 2010 (UTC)