camera - ready

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

camera - ready


பொருள்[தொகு]

  1. அச்சுக்குத் தயாராய்

விளக்கம்[தொகு]

  1. நூல் அச்சுத்துறையில் கணினியின் பயன்பாடு அதிகரித்துள்ளது. நூலில் இடம் பெற வேண்டிய விவரங்களை கணினியில் தட்டச்சு செய்து தாளில் அச்செடுப்பர். பிறகு விவரங்களையும் இடையிடையே இடம்பெறும் படங்களையும் வெட்டி ஒர் அட்டையில் ஒட்டுவர். அச்சில் வர வேண்டிய பக்கங்களை இவ்வாறு அட்டைகளில் ஒட்டி வடிவமைப்பர். பிறகு அதனை ஒளிப்படக்கருவி மூலம் ஒளிப்பட ஃபிலிமாக படம் பிடிப்பர். அந்த ஃபிலிமை வைத்து அச்சு வார்ப்பினை உருவாக்குவர். அச்சு வார்ப்பினைக் கொண்டு நூல் பக்கங்களை அச்சிடுவர். ஆனால், இப்போதெல்லாம் அட்டைகளில் வெட்டி ஒட்டிப் பக்கங்களை வடிவமைக்க தேவையில்லை. கணினித் திரையிலேயே வெட்டி ஒட்டி பக்கங்களை வடிவமைக்க வல்ல மென்பொருள் தொகுப்புகள் பயன்பாட்டில் உள்ளன. அச்சுக்கு தயாரான பக்கங்களை உருவாக்க முடியும் என அவை விளம்பரப்படுத்தப்படுகின்றன.


உசாத்துணை[தொகு]

  1. தமிழ் விக்கிமூலம்
"https://ta.wiktionary.org/w/index.php?title=camera_-_ready&oldid=1907250" இலிருந்து மீள்விக்கப்பட்டது