petrol
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]petrol
- கல்நெய்; கன்ணெய்
- பெட்ரோல் (ஒலிபெயர்ப்பு; தவறான வழக்கு)
விளக்கம்
- முதலில் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் சிறப்பாக உணர்த்திப் பின் காலப்போக்கில் பல பொருள்களை உணர்த்திப் பொதுச் சொல்லாதலைப் பொதுப் பொருட்பேறு என்பர். எள்ளிலிருந்து எடுக்கப்படும் திரவப் பொருளை எண்ணெய் என்று தொடக்கக் காலத்தில் வழங்கி, பின் அவ் "எண்ணெய்' என்பதே பொதுப் பெயரால் நின்று தேங்காய் எண்ணெய், நல்ல எண்ணெய், கடலை எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய் எனத் திரவப் பொருளுக்குப் பொதுவாய் நின்று, அடைபெற்று வெவ்வேறு வகை குறித்து நின்றது. பூமியிலிருந்து பிற்காலத்தே தோண்டி எடுக்கப்பட்ட எரிபொருளாகிய திரவம் "மண்ணெண்ணெய்" எனப் பெயர் பெற்றதையும் சிந்திக்க வேண்டும். பெட்ரோலியப் பொருள்களுள் ஒன்றான "பெட்ரோல்" என்பதைத் தனித்தமிழ் இயக்கத்தினர் கல்நெய், கன்னெய் எனக் குறிக்கத் தொடங்கினர்.. (நல்ல தமிழ்ச் சொற்கள் அன்றும் இன்றும், முனைவர் ச.சுப்புரெத்தினம், தமிழ்மணி, 27 பிப் 2011)