toothbrush tree

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

streblus asper...(தாவரவியல் பெயர்)

பிராயன் மர இலைகள்
  • toothbrush tree, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. பிராயன் மரம்

விளக்கம்[தொகு]

  1. இந்தியா, தாய்லாந்து, மலேசியா, வியத்னாம் நாடுகளிலுள்ள வறண்டப் பகுதிகளைத் தாயகமாகக் கொண்ட மருத்துவ குணமுள்ள ஒரு சிறியவகை மரம் பிராயன்...தாய்லாந்தில் காகிதம் தயாரிக்கப் பயன்பட்டது...இந்தவகைக் காகிதங்கள் தட்பவெப்ப நிலையால் பாதிக்கப்படாது...பழம் புத்தமதச் சுவடிகளும்,அரசு ஆவணங்களும் இந்த வகைக் காகிதத்திலேயே எழுதப்பட்டன...தற்காலத்தில் வேறு பொருட்களால் காகிதம் தயாரிக்கப்பட்டாலும் இன்றளவும் கைவினைக் கலைஞர்கள் தங்கள் தேவைக்கு பழைய முறையிலேயே காகிதம் தயாரித்துக் கொள்ளுகிறார்கள்...வியத்னாம் நாட்டில் பாரம்பரியமான மரவேலைகளில் இம்மரத்து இலைகளையே மரங்களைச் சுத்தம் செய்ய உப்புக்காகிதமாகப் பயன்படுத்துகிறார்கள்...இந்த மரத்துக் குச்சிகளை பற்களைச் சுத்தம் செய்ய உபயோகிப்பர்...ஆதலால் இந்த மரத்தை ஆங்கிலத்தில் 'toothbrush tree' (டூத் ப்ரஷ் ட்ரீ) என்றனர்...இந்த மரத்துப் பால், இலைகள் முதலியன மருத்துவத்திலும் பயன்படுகின்றன...
"https://ta.wiktionary.org/w/index.php?title=toothbrush_tree&oldid=1844380" இலிருந்து மீள்விக்கப்பட்டது