உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஆக்கம் (பெ)

பொருள்
  1. படைப்பு, உருவாக்கம், சிருஷ்டி
  2. உயர்வு, விருத்தி
  3. இலாபம், நன்மை, நலன்
  4. ஈட்டம்
  5. செல்வம்
  6. பொன்
  7. இலக்குமி
  8. ஆசி
  9. அமைத்துக்கொள்ளுகை
  10. கொடிப்படை
  11. 27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை. விருத்தி யோகத்தின் தனித்தமிழ் சொல்.
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. creation, construction, production
  2. increase, development, improvement
  3. gain, profit, benefit
  4. accumulation
  5. wealth, prosperity, fortune
  6. gold
  7. Lakṣmi
  8. benediction
  9. arrangement, preparation, as in cleansing rice
  10. van of an army carrying the banner
விளக்கம்
  • ஆகுதல் என்னும் வினைச்சொல்லிலிருந்து பிறப்பது ஆக்கம்.
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  1. ஆக்க மவ்வவர் கன்மமெலாங் கழித்திடல் (சி. சி. 1, 37).
  2. தம்மாலா மாக்க மிலரென்று (நாலடி. 301).
  3. மனநல மன்னுயிர்க் காக்கம் (குறள், 457).
  4. ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை (குறள், 463).
  5. அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் (குறள், 755)

ஆதாரங்கள் ---ஆக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +


சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஆக்கம்&oldid=1633158" இலிருந்து மீள்விக்கப்பட்டது