ஆக்கம்
Appearance
- படைப்பு, உருவாக்கம், சிருஷ்டி
- உயர்வு, விருத்தி
- இலாபம், நன்மை, நலன்
- ஈட்டம்
- செல்வம்
- பொன்
- இலக்குமி
- ஆசி
- அமைத்துக்கொள்ளுகை
- கொடிப்படை
- 27 ஒகங்களில் (யோகம்) ஒரு வகை. விருத்தி யோகத்தின் தனித்தமிழ் சொல்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
- creation, construction, production
- increase, development, improvement
- gain, profit, benefit
- accumulation
- wealth, prosperity, fortune
- gold
- Lakṣmi
- benediction
- arrangement, preparation, as in cleansing rice
- van of an army carrying the banner
விளக்கம்
- ஆகுதல் என்னும் வினைச்சொல்லிலிருந்து பிறப்பது ஆக்கம்.
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஆக்க மவ்வவர் கன்மமெலாங் கழித்திடல் (சி. சி. 1, 37).
- தம்மாலா மாக்க மிலரென்று (நாலடி. 301).
- மனநல மன்னுயிர்க் காக்கம் (குறள், 457).
- ஆக்கங் கருதி முதலிழக்குஞ் செய்வினை (குறள், 463).
- அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம் (குறள், 755)
ஆதாரங்கள் ---ஆக்கம்--- DDSA பதிப்பு + வின்சுலோ +