நஞ்சுண்டான்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(நஞ்சுண்டன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
நஞ்சுண்டான்

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • நஞ்சுண்டான், பெயர்ச்சொல்.
  1. இறைவன் பரமசிவன்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lord shiva, a hindu god, as having drank poison.

விளக்கம்[தொகு]

தேவர்களும் அசுரர்களும் அமுதத்திற்காக பாற்கடலைக் கடைந்தபோது முதலில் வெளிப்பட்டது ஆலாகலம் என்னும் மிகக்கொடிய நஞ்சாகும்..இந்த நஞ்சின் பெரும் நாசகார அழிப்பு சக்தியை உணர்ந்த அனைவரும் மிகவும் அச்சமடைந்தனர்...அப்போது சிவபெருமான் முன்வந்து அப்படி வெளிப்பட்ட நஞ்சை உடனே உண்டுவிட்டார்....அப்போது அந்தக் கொடிய நஞ்சு சிவபிரானின் வயிற்றில் இருக்கும் பிரபஞ்சத்தை அழித்துவிடுமோ என்று பயந்த அவருடைய பத்தினி பார்வதி தேவி சிவபெருமானின் தொண்டையை, விடம் கீழே வயிற்றில் இறங்காமல், அழுத்தி இறுக்கிப்பிடித்துக்கொண்டார்... அந்த நஞ்சு சிவபெருமானின் வாயிலிருந்து வெளிப்படாமலிருக்க நாரதமுனிவரும் சிவபிரானின் வாயை இறுக்கி மூடிவிட்டார்...ஆக அந்த ஆலாகல (ஹாலாஹல) விடம் சிவபெருமானின் தொண்டையிலேயே தங்கிவிட்டது...இப்படியாக பரமசிவன் நஞ்சை உண்டுவிட்டதால் 'நஞ்சுண்டான்' என்று கொண்டாடப்படுகிறார்
"https://ta.wiktionary.org/w/index.php?title=நஞ்சுண்டான்&oldid=1393386" இருந்து மீள்விக்கப்பட்டது