சர்க்கரைப்பூசணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(பரங்கிக்காய் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
சர்க்கரைப்பூசணி
சர்க்கரைப்பூசணி
சர்க்கரைப்பூசணி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

சர்க்கரைப்பூசணி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு காய்கறி வகை.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  1. pumpkin
  2. squash gourd

விளக்கம்[தொகு]

  • பூசணிக்காயைப் போன்ற பருத்த ஒரு காய்கறிவகை...பறங்கியர்களால் அதாவது வெள்ளையர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட காயாதலால் பறங்கிக்காய் என்றும் அழைக்கப்படுகிறது...ஆரம்பத்தில் பச்சையாக இருந்து முற்றிய பின் பழுப்பு நிறத்திற்கு மாறும்...பூசணிக்காயைப்போல உருவமும் இனிப்புச்சுவையும் உடையதாகையால் சர்க்கரைப்பூசணி என்னும் பெயருள்ளது...மஞ்சள் பூசணி எனவும் அழைப்பர்...காய் மிகப்பெரிய பெருங்குடத்திற்கு ஒப்பவும் விளையும்...மேற்பரப்பு முழுவதும் இடைவெளி விட்டு விட்டு, பள்ளமாக வெட்டிவிட்டது போல் தோற்றமளிக்கும்...இதன் விதைகளை உரித்து பச்சையாகவே தின்பார்கள்...இனிப்பு உணவுகள் செய்யவும் விதைகள் பயன்படுகின்றன...காய் சமையலுக்குப் பயன்படுகிறது...அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும் 'ஹாலோவின் என்னும் பண்டிகையோடு மிகவும் தொடர்புடையது... தமிழகத்தில் வெள்ளைப்பூசணிக்காய் பயன்படுவதைப்போல திருஷ்ட்டி கழிக்கவோ அல்லது சமய சார்புள்ள காரியங்களுக்கோ பயன்படாது...

குணங்கள்[தொகு]

  1. இந்தக்காய்கள் அனலால் வரும் அழற்சியையும், மிகுபித்தத்தையும் நீக்கும்...நல்ல பசியையும் கபகோபத்தையும் உண்டாக்கும்...பொரியல் செய்து சாப்பிட சுகமாக இருப்பினும் இது உடம்பிலுள்ள இரத்தத்தைக் குழம்புபோல் உறையச் செய்யும்..விரைவில் செரிமானம் ஆகாது...வயிற்றில் வாயு உபரியாகி வயிற்றுப் பொருமலை யுண்டாக்கும்.
  2. இந்தக்காயை துண்டுகளாக்கி தோல் நீக்கி வேக வைத்து அரைத்துக் களிபோல் கிளறி அழுகிய இரணங்களுக்கு வைத்துக் கட்ட ஆறும்...
  3. இந்தக் காயின் மேற்றோலைச் சீவி நன்றாய் உலர்த்தி அதனுடன் சிறிது சீரகம் கூட்டி இடித்துச் சூரணம்செய்து வைத்துக்கொண்டு, வேளைக்கு திரிகடி அளவு கற்கண்டுப்பொடியோடுக் கூட்டி தினம் இரண்டு வேளை உட்கொண்டால் கோடைக்கால அழற்சி போகும்...


"https://ta.wiktionary.org/w/index.php?title=சர்க்கரைப்பூசணி&oldid=1430943" இருந்து மீள்விக்கப்பட்டது