உள்ளடக்கத்துக்குச் செல்

மகாமாயாத் தைலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(மகாமாயா தைலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தமிழ்

[தொகு]
(கோப்பு)

மகாமாயாத் தைலம், .

பொருள்

[தொகு]
  1. ஒரு மர்மமான முறையில் ஆக்கப்பட்ட எண்ணெய்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. akind of mystic oil of ancient india.

விளக்கம்

[தொகு]
  • வடமொழிச்சொல்: மஹாமாயாத் தைலம்...பண்டைய மந்திர, தந்திர வித்தைகளில் ஒன்று...மிகவும் அச்சமூட்டக்கூடியதும் ஆகும்... மனிதப் பிணங்களில் இருந்து, ஒரு விசேட முறையில், பற்பல மூலிகைகளின் சாறுகளைப்பூசி, சில சடங்குகளைச் செய்து இறக்கப்படும் எண்ணெய்...இந்த எண்ணெயைப் பயன்படுத்துவோர் மிகுந்த பலசாலிகளாக இருப்பதோடு தீ, நீர், ஆயுதங்கள், கொடிய நஞ்சு மற்றும் வேறு எந்தவிதமான காரணங்களாலும் துர்மரணம் அடையாதவர்களாகவும், பிறரால் கொல்லப்பட முடியாதவர்களாகவும் இருப்பார்கள் எனப்படுகிறது...மேலும் நரை, திரை மூப்பு ஆகியவை விரைவில் அண்டாதவர்களாகவும், நீண்ட காலம் நோயற்று வாழ்ந்து இயற்கையாகவே மரணிப்பவர்களாகவும் இருப்பராம்... பண்டைய தமிழ் நாட்டுக்கும் அறிமுகமான ஓர் எண்ணெய்...தமிழில் இதை பிணநெய் என்பர்...இன்றும் ஆந்திர கிராமப்புறங்களில் நீ என்ன மமயா தைலம் (மகாமாயாத் தைலம்) குடித்தாயா? உன்னை ஒன்றும் செய்ய முடியாதா?என்று பேச்சில் பயன்படுத்தப்படுகிறது...

  • தமிழ்ஆதாரங்கள்...[[1]][[2]]
"https://ta.wiktionary.org/w/index.php?title=மகாமாயாத்_தைலம்&oldid=1885527" இலிருந்து மீள்விக்கப்பட்டது