உள்ளடக்கத்துக்குச் செல்

எழுத்தாணி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
எழுத்தாணி
தற்கால எழுத்தாணிகள்
தற்கால எழுத்தாணி

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொருள்

[தொகு]
  1. பண்டைக்கால எழுதுகோல்
  2. தற்கால வரையும், கையெழுத்திடும் கூர்முனைக்கோல்

மொழி்பெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ancient writing tool
  2. stylus

விளக்கம்

[தொகு]
  • எழுத்து + ஆணி = எழுத்தாணி...பண்டைய நாட்களில் காகிதங்கள் வராத நிலையில் பக்குவப்படுத்தப்பட்ட பனை ஓலைகளில் பல நூல்களை எழுதினர்...இவை ஓலைச் சுவடிகள் எனப்படுகின்றன...அவ்வாறு எழுத ஓர் எழுதுகோல் தேவைப்பட்டது...அதுதான் எழுத்தாணி...ஒரு கையின் ஐந்து விரல்களாலும் பிடிக்கப்பட கூடிய ஒரு சிறு மரத்துண்டு...கை வழுக்காமலிருக்க அதன்மீது சற்று ஆழமான கீறல்கள் மற்றும் வேலைப்பாடுகள்...ஒரு முனையில் பனைஓலைகளின் மீதுஅழுத்தி எழுதக் கூரியமுனையுள்ள, தேவையான அளவு நீண்ட ஆணி... மறு முனையில் பனைஓலைகளை எழுதப் பயன்படும் வகையில் சிறியதாகச் சீவ ஒரு கத்தி ஆகியவைகளைக் கொண்டதே எழுதும் ஆணி அல்லது எழுத்தாணி ஆகும்...இந்த ஆணியையும், கத்தியையும் மடித்து வைக்க ஏதுவாக அந்த மரத்துண்டின் இரு பக்கங்களிலும் ஆழமாக நீளவாக்கில் குடையப்பட்டு இருக்கும்...இந்த வடிவமைப்புதான் பண்டையகாலத்திலும் சமீபத்திய காலத்தது ஆகும்...இந்த ஆணிகளைக்கொண்டு பனைஓலைகளில் மெய்யெழுத்துக்களின்மீது புள்ளி இடமாட்டார்கள்...உயிர்மெய் எழுத்துக்களாகவே எழுதிவிடுவர்...காரணம்: புள்ளிகள் வைப்பதால் ஓலைகள் பாழாகிவிடும்...
  • தற்காலத்தில் வரைய, தட்டச்சு செய்து நூற்றுக்காண நகல்கள் எடுக்க பயனாகும் காகிதத்தில் ஒரேஒரு முறை கையெழுத்திட பயனாகும் நீண்ட கூர் முனையுள்ள கோலும் எழுத்தாணி எனப்படுகிறது...இன்னும் அநேகக் காரியங்களுக்குப் பயனாகிறது தற்கால எழுத்தாணிகள்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=எழுத்தாணி&oldid=1968703" இலிருந்து மீள்விக்கப்பட்டது