தற்கொடைப்படை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • தற்கொடைப்படை, பெயர்ச்சொல்.

மனித குலத்தின் உன்னத விழுமியமாக உயரிய ஈகமாக பிறர்க்காகத் தன்னை இழந்து எதிரிகளில் பலரையோ அல்லது எதிரிகளின் பலமிக்க இலக்கினையோ அழிக்கும் ஓர் படை. - உயிராயுதம் பாகம் - 1 என்னும் புத்தகத்திலிருந்து

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. self-benefication force

விளக்கம்[தொகு]

 தன்+கொடை+படை = தற்கொடைப்படை

இது எண்ணிக்கை, படைவலு மற்றும் படைக்கல வலு ஆகியவற்றில் எதிரியை விட அளவில் குறைவான போராட்டக் கூட்டமொன்று தாம் வெற்றியடைவதற்கு வீராவேசத்திற்கு மாற்றாக ஆற்றாமையையும் வீரத்திற்கு மாற்றாக மிகநுணுக்கமாக திட்டமிடப்பட்ட போர்த் திட்டமொன்றையும் அதேவேளை தன்னை இழப்பதன் மூலம் இலக்கை வெற்றிகொள்ளும் உத்தியையும் இணைத்து வடிவமைத்த படை ஆகும்.

பயன்பாடு[தொகு]

  • மில்லர் தன் உயிரினையே தற்கொடையாகக் கொடுத்து தமிழீழத்தின் முதலாவது தற்கொடைப்படையினன் ஆகினார்.

சொல்வளம்[தொகு]

கரும்புலிகள்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=தற்கொடைப்படை&oldid=1929041" இலிருந்து மீள்விக்கப்பட்டது