உள்ளடக்கத்துக்குச் செல்

மின்மாற்றி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
மின்மாற்றி
மின்மாற்றி

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
(கோப்பு)

மின்மாற்றி, .

பொருள்

[தொகு]
ஒருசுருளைச் சுற்றி இரண்டாம் சுருளும் சுற்றப்பட்டுள்ள மின்மாற்றி
  1. ஒரு மின் கருவி. மின்காந்தப் புலத்தால் இரண்டு மின்கம்பிச்சுருள்கள் தொடர்பு கொண்டிருக்கும் ஒரு கருவி. ஒரு மின்சுருளில் உள்ள மின்னழுத்ததைப் போல பலமடங்கு மின்னழுத்தமோ ஒன்றுக்கும் கீழான குறைமடங்கு மின்னழுத்தமோ மற்ற மின்சுருளில் தூண்டப்படும். மின்சுருளின் சுற்றுகளின் எண்ணிக்கையைப் பொருத்து இந்த மின்னழுத்த மாற்றம் அமையும். மாறுமின்னோட்ட மின்கடத்தலில் உயர் மின்னழுத்தத்திலிருந்து வீடுகளுக்குப் பயன்படுமாறு குறைந்த மின்னழுத்தம் (220 வோல்ட்டு அல்லது 110 வோல்ட்டு என) உள்ளதாக மாற்ற இக்கருவிகள் பயன்படுவது ஒருவகைப் பயன்பாடு.

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. transformer

விளக்கம்

[தொகு]
  • மின் நிலையங்களிலிருந்து வழங்கப்படும் உயர்ந்த அல்லது தாழ்ந்த மின்னழுத்ததில் உள்ள மின் ஆற்றலை தேவையின்படி உயர்ந்த அல்லது தாழ்ந்த மின் அழுத்தத்திற்கு மாற்றும் ஒரு மின்கருவி... மின் தேவை அதிகமுள்ள அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் கண்டிப்பாக அமைக்கப்படும்...மின் நிலையங்களில் பல மின்மாற்றிகள் அந்தந்தப் பகுதியின் தேவைக்கேற்றபடி அமைந்திருக்கும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=மின்மாற்றி&oldid=1879597" இலிருந்து மீள்விக்கப்பட்டது