பஞ்சகச்சம்
Appearance
பொருள்
பஞ்சகச்சம்(பெ)
- (பஞ்ச+கச்சம்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]ஆங்கிலம்
- A mode of wearing cloth by Brahmin males mostly.
விளக்கம்
- பஞ்சகச்சம் = பஞ்ச + கச்சம்
- பஞ்ச எனில் ஐந்து. கச்சம் எனில் செருகல்.
- பஞ்சகச்சம் எனில் ஐந்து செருகல் கொண்ட ஆடை.
- வலது இடுப்பில் ஒரு செருகல், இடது இடுப்பில் ஒன்று, பின்புறத்தில் ஒன்று, தொப்புள் பகுதியில் இரண்டு என்று ஐந்து செருகுதல் முறையையே பஞ்சகச்சம் என்று பெரியோர்களால் கூறப்படுகிறது. (மின்தமிழ் கூகுள் குழுமம்)
பயன்பாடு
- தலையில் கிரீடம்; இடுப்பில் பட்டுப் பீதாம்பரத்தில் பஞ்சகச்சம் - இவற்றோடு சந்திரன் சபையில் தோன்றி "பொய்யாமொழிப் புலவர் நிரபராதி!" என்று சொல்லிப் போவான் சந்திரன், (நினைவு நாடாக்கள், வாலி, ஆனந்தவிகடன், 28-செப்டம்பர்-2011)
(இலக்கியப் பயன்பாடு)
( மொழிகள் ) |
சான்றுகள் ---பஞ்சகச்சம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி