மடப்பயல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மடப்பயல்(பெ)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

விளக்கம்
  • மடப்பயல் = மடம் + பயல்
  • இப்போது மடப்பயல் என்றால் முட்டாள் பையன் - அறிவற்றவன் என்று பொருள் கொள்கிறோம். இது பொருள் மாறிவிட்ட பழந்தமிழ்ச் சொல்.
மடம் என்பது இளமையைக் குறிக்கும் ஒரு சொல். (பூசை செய்யும் மடம் என்பது வேறு). மானே மட மகளே என்றால்,மான் போன்ற இளம் பெண்ணே என்று பொருள். மடக்கொடி கேளாய் எனில் கொடி போன்ற மெல்லிய இளம் பெண்ணே கேட்பாயாக என்பதே பொருள். பெண்ணிற்குச் சிறந்த நான்கில் (அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு) மடம் என்பது இளமையைக் குறிப்பதேயாகும். (காணாத ஒன்றைக் கண்டபோது ஒருவகையான வியப்பு ஏற்படும். அதுவே பயிர்ப்பு எனப்பட்டது. (பிழையின்றித் தமிழ் பேசுவோம்- எழுதுவோம்!, கவிக்கோ ஞானச்செல்வன், தினமணிக்கதிர், 17 ஏப் 2011)
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

(இலக்கணப் பயன்பாடு)

முட்டாள் - அறிவிலி - மடையன் - அறிவீனன் - ஞானசூனியம் - மடசாம்பிராணி - மடமை

ஆதாரங்கள் ---மடப்பயல்--- DDSA பதிப்பு + வின்சுலோ +

"https://ta.wiktionary.org/w/index.php?title=மடப்பயல்&oldid=1980157" இலிருந்து மீள்விக்கப்பட்டது