மிடறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஒலிப்பு
(கோப்பு)
பொருள்

மிடறு(பெ)

மிடறு --- கழுத்து
  1. கழுத்து
  2. மூச்சுக்குழல்; ஒலியெழும் கண்டவுறுப்பு
  3. தொண்டை
  4. மிடற்றுக்கருவி - சாரீரக் கருவியாகிய கண்டம்
  5. கீழ்வாய்
  6. ஒருவாய் கொண்ட திரவப்பண்டம்
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

  1. neck
  2. trachea, windpipe
  3. throat
  4. (Mus.) throat, considered, a musical instrument
  5. lower jaw
  6. draught, a quantity of liquid taken at one swallow
விளக்கம்
பயன்பாடு

(இலக்கியப் பயன்பாடு)

  • கறைமிட றணியலுமணிந்தன்று (புறநா. 1).
  • தலையினு மிடற்றினுநெஞ்சினு நிலைஇ (தொல். எழுத். 83).
  • மிடறு மெழுமெழுத்தோட வெண்ணெய் விழுங்கி (திவ். பெரியாழ். 3, 2, 6).
  • நரம்பு நம்பியூழ் மணிமிடறுமொன்றாய் (சீவக. 728).

ஆதாரங்கள் ---மிடறு--- DDSA பதிப்பு + வின்சுலோ +

 :கழுத்து - தொண்டை - மூச்சுக்குழல் - வாய் - # - #

"https://ta.wiktionary.org/w/index.php?title=மிடறு&oldid=1199690" இலிருந்து மீள்விக்கப்பட்டது