ராஜாளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ராஜாளி:
Falco peregrinator
ராஜாளி:
Micronisus badius
ராஜாளி:
Nisaetus bonelli
ராஜாளி:
Falco peregrinus
ராஜாளி:
Gyps africanus
ராஜாளி:
எனில் இறக்கை முளைத்த நாகம் (கற்பனை}


பொருள்[தொகு]

  • ராஜாளி, பெயர்ச்சொல்.
  1. வல்லூறு
  2. சின்னவல்லூறு
  3. ராசாளி
  4. பைரி
  5. கருடப் பட்சி
  6. ஒரு வகை பருந்து இனப் பறவை
  7. பறவைநாகம்
  8. கள்ளச்சாதியாருள் ஒரு பட்டப் பெயர்
  9. தமிழக அரக்கோணத்தின் இந்திய இராணுவக்கடற்படை விமானதளம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. royalfalcon, prized for hawking, the varieties being red, white, blue and black
  2. falcon
  3. crestless hawk-eagledark above and white beneath
  4. peregrine falcon
  5. vulture
  6. winged serpent as decscribed in hindu, chinese, south east asian and other world cultures
  7. a title among Kaḷḷars in the Tanjavur district of tamilnadu
  8. name of a indian naval air station located near Arakkonam in tamilnadu


விளக்கம்[தொகு]

  • பருந்து/கழுகு இனப்பறவைகளுக்கு பொதுப்பெயர் ராசாளி...பெரும் மாமிச உணவுப் பறவைகளான இவை, உலகெங்கும் பலவேறு உருவத் தோற்றங்களிலும், வண்ணங்களிலும், செயலாற்றும் திறன்களிலும், குணாதிசங்களிலும் ஒன்றுக்கொன்று சிறு வேறுபாடுகளைக் கொண்டுக் காணப்படுகின்றன...வல்லூறு எனப்படும் வகையே ராசாளி எனச் சிறப்பித்துக் கூறப்படுகிறது...வானில் பறந்துக்கொண்டே தரையில் நடமாடும் இரைகளை, மிகத்துல்லியமாகக் கூரியப் பார்வையால், எவ்வளவு தொலைவிலிருந்தாலும், சட்டென்றுக் கீழேப் பாய்ந்துப் பற்றி/ஓடஓட விரட்டிப் பிடித்து தனக்கு இரைக்கிக்கொள்ளும் மிக்கப் பேராற்றல் கொண்ட பறவையினம் ராசாளி....மேலும் இவ்வினப் பறவைகள் நிலத்தில் இறந்துக் கிடக்கும் சிறிய, பெரிய எத்தகைய உயிரினங்களையும், அவற்றின் அழுகும் இறைச்சியின் துர்நாற்றத்தினால் எளிதாக மோப்பம்பிடித்து, அவை கிடக்குமிடத்திற்கு வந்து, அவற்றை முற்றிலுமாகத் தின்றுத் தீர்த்துவிடுகின்றன...
  • India, சீன,தென் கிழக்காசிய, மற்றும் சில மேல்நாட்டு ஆதிக்குடி மக்களின் கலாச்சாரத்தில் சித்தரிக்கப்படும், இறக்கைகள் முளைத்த சீற்றங் கொண்ட, விடம் கக்கும், பெரிய நாகப்பாம்பு வகைகளும் ராசாளி என்றழைக்கப்படுகின்றன..
  • தமிழ்நாடு, தஞ்சாவூர் மாவட்டத்தில் கள்ளர் குலமக்களில் ராசாளி எனும் பட்டப்பெயர் வழக்கத்தில் உள்ளது.
  • தமிழ்நாடு, அரக்கோணம் நகருக்கருகிலுள்ள இந்தியக் கடற்படை விமானத் தளத்தின் பெயர் ராசாளி/ராஜாளி ஆகும்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ராஜாளி&oldid=1985425" இலிருந்து மீள்விக்கப்பட்டது