விக்சனரி பின்னிணைப்பு:இயற்பியல் கலைச் சொற்கள் (ஆங்கிலம் - தமிழ்)

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

இயற்பியல் என்பது "Physics" என்பதற்குச ஈடாகத் தமிழ்நாட்டில் வழங்கும் தமிழ்ச் சொல்லாகும். இலங்கையில் மாணவர்கள் பௌதீகவியல் என்னும் சொல்லைப் பயன்படுத்திவருகின்றார்கள். இவ்வாறே பல கலைச் சொற்கள் வெவ்வேறாக இவ்விரு இடங்களிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. "பயன்படும் இடங்கள்" என்பதன் கீழ்த் தரப்பட்டுள்ள இல என்பது இலங்கையில் பயன்படுத்தப்படும் சொல் என்பதையும், தநா என்பது தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவது என்பதையும் குறிக்கும்.


ஆங்கிலம் தமிழ்
alpha particle/ray அல்பா துணிக்கை/கதிர் (இல) ஆல்பா துகள்/கதிர் (தநா)
alternating current ஆடலோட்ட மின்சாரம் (இல) மாறுதிசை மின்னோட்டம் (இல)
ammeter அம்மீட்டர் (இல) மின்னோட்டமானி (இல)
ampere அம்பியர் (இல) ஆம்பியர் (தநா)
astronomical telescope வானியற் தொலைநோக்கி (இல) வானியல் தொலைநோக்கி (தநா)
atmosphere வளி (இல) வளிமண்டலம் (தநா)
atomic nucleus அணுக் கரு (இல,தநா)
bar magnet சட்டக் காந்தம் (இல,தநா)
beta particle/ray பீற்றா துணிக்கை/கதிர் பீட்டா துகள்/கதிர் (தநா)
capacitance மின்தேக்கு திறன் (தநா)
capacitor மின்தேக்கி (தநா)
carbon resistor காபன் தடையி (இல) கார்பன் மின்தடையாக்கி (தநா)
combination of lenses கூட்டு வில்லைகள் (இல)
combination of resistances கூட்டுத் தடைகள்
communication தொடர்பு (இல)
compound microscope கூட்டு நுண்ணோக்கி
concavemirror குழியாடி (இல)
conductor கடத்தி (இல)
conservation of electric charge மின்னேற்றக் காப்பு (இல) மின்னூட்டங்களின் அழிவின்மை (தநா)
convex mirror குவியாடி (இல)
coulomb's law கூலோமின் விதி (இல) கூலூமின் விதி (தநா)
current electricity ஓட்ட மின்சாரம் (இல) மின்னோட்டவியல் (தநா)
dispersion of light ஒளிப் பரவுகை (?) நிறப்பிரிகை (தநா)
electric cell மின் கலம்
electric charge மின்னேற்றம் (இல) மின்னூட்டம் (தநா)
electric current மின்னோட்டம் (தநா)
electric field மின் புலம் (இல,தநா)
electric field intensity மின்புலச் செறிவு (தநா)
electricpolarisation மின் முனைவாக்கம் (இல) மின் முனைவாக்கல் (தநா)
electric potential மின்னழுத்தம் (இல,தநா)
electric potential energy மின்னழுத்த சக்தி (இல) மின்னழுத்த ஆற்றல் (தநா)
electric power மின்வலு (?) மின் திறன் (தநா)
electrical conductivity மின் கடத்துதிறன் (தநா)
electrical resistance மின் தடை (இல,தநா)
electricalresistivity மின் தடைத்திறன் (?) மின் தடை எண் (தநா)
electricitygenerator மின் பிறப்பாக்கி (?) மின்னியற்றி (தநா)
electrochemicalcell மின்னிரசாயனக் கலம் (இல) மின் வேதிகலம் (தநா)
electrolysis மின்பகுப்பு (இல) மின்னாற்பகுப்பு (தநா)
electro magnet மின்காந்தம் (இல,தநா)
electro magnetic induction மின்காந்தத் தூண்டல் (இல,தநா)
electron இலத்திரன் (இல) எலக்ட்ரான், மின்னணு (தநா)
electrostatic field நிலைமின் புலம் (இல,தநா)
electrostatics நிலைமின்னியல் (இல,தநா)
experiment பரிசோதனை (இல) ஆய்வு (தநா)
frictional electricity உராய்வு மின்சாரம் (இல,தநா)
gamma rays காமா கதிர்கள் (இல, தநா)
gammaparticle/ray காமா துணிக்கை/கதிர் காமா துகள்/கதிர் (தநா)
impedance மின்னெதிர்ப்பு (தநா)
inductance மின்நிலைமம் (தநா)
infra red அகச் சிவப்பு (இல,தநா)
insulator அரிதிற் கடத்தி் (இல) மின்காப்பு, மின்கடத்தா பொருள் (தநா)
internal resistance உட்தடை (இல) அக மின்தடை (தநா)
joule' law யூலின் விதி (இல)
magnification உருப்பெருக்கம்
magnetic dipole காந்த இருமுனை (தநா)
magnetic effect காந்த விளைவு (இல)
magnetism காந்தவியல் (இல)
magnifying power உருப்பெருக்க வலு (இல) உருப்பெருக்கு திறன் (தநா)
mass number திணிவெண் (இல) நிறை எண் (தநா)
matter சடம் (இல) பருப்பொருள் (தநா)
metalicconductor உலோகக் கடத்தி (தநா)
mirror ஆடி (இல,தநா)
mutual inductance பரிமாற்று மின்நிலைமம் (தநா)
neutron நியூத்திரன் (இல) நியூட்ரான் (தநா)
nuclear fission கருப்பிளவு அணுக்கருப்பிளவு (தநா)
nuclear force கரு விசை அணுக்கரு விசை (தநா)
nuclear fusion கருச் சேர்க்கை அணுக்கரு இணைவு (தநா)
nuclear reaction கருத் தாக்கம் (இல) அணுக்கரு வினை (தநா)
nucleus கரு (இல) அணுக்கரு (தநா)
ohm's law ஓமின் விதி (இல,தநா)
optical instruments ஒளியியற் கருவிகள்
optics ஒளியியல் (இல,தநா)
particle nature துகள் பண்பு,இயல்பு (தநா)
permanent magnet நிலையான காந்தம் (இல} நிலைக்காந்தம் (தநா)
photo electric cell ஒளிமின் கலம் (இல,தநா)
photo electric effect ஒளிமின் விளைவு (தநா)
plane mirror தள ஆடி சமதள ஆடி
polarisation முனைவாக்கம் (இல) முனைவாக்கல் (தநா)
potential difference அழுத்த வேறுபாடு மின்னழுத்த வேறுபாடு (தநா)
potentiometer அழுத்தமானி (இல) மின்னழுத்தமானி (தநா)
power of a lens வில்லையின் வலு (இல) லென்சின் திறன் (தநா)
primary cell முதன்மை மின்கலன்(தநா)
prism அரியம் (இல) முப்பட்டகம் (தநா)
proton புரோத்தன் புரோட்டான் (தநா)
radiation கதிர்வீச்சு (இல,தநா)
radioactivity கதிரியக்கம் (இல,தநா)
radioactive decaylaw கதிரியக்கச் சிதைவு விதி (தநா)
radiomicrowave ரேடியோ மைக்ரோ அலை (தநா)
ray கதிர்
reactance மின் மறுப்பு (தநா)
refraction of light ஒளிமுறிவு (இல) ஒளி விலகல் (தநா)
scattering of light ஒளிச்சிதறல் (இல,தநா)
secondary cell துணைக்கலன்(தநா)
self inductance தற் தூண்டல் (இல) தன் மின்நிலைமம் (தநா)
semiconductor அரைக் கடத்தி (இல) குறைக் கடத்தி (தநா)
semiconductordevice குறைக்கடத்திப் பொருள் (தநா)
solar cell சூரியக் கலம்
solid statecell திண்மநிலைக் கலன்
sphericallens கோள வில்லைகள்
thermal effects of current மின்னோட்டத்தின் வெப்ப விளைவு (இல)
transformer மின்மாற்றி (இல,தநா)
total internal reflection முழுவுட்தெறிப்பு (இல) முழு அக எதிரொளிப்பு (தநா)
voltage வோல்ட்டளவு (இல) மின்னழுத்தம்
voltmeter வோல்ட்மானி (இல)
ultra violet அகச் சிவப்பு (இல) புற ஊதா (தநா)
wave front அலை முகப்பு (தநா)
wave nature அலைப் பண்பு, அலை இயல்பு (தநா)
wire கம்பி (இல)
x ray எக்ஸ் கதிர் radiolysis

கதிர் பகுப்பு

photolysis}

ஒளிப்பகுப்பு]]