விக்சனரி:தினம் ஒரு சொல்/மார்ச் 8

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தினம் ஒரு சொல்   - மார்ச் 8
அம்புலி (பெ)
அம்புலி

1.1 பொருள்

  1. நிலா
  2. அம்புலிப் பருவம் - பிள்ளைக்கு நிலாவைக் காட்டி உணவு ஊட்டும் பருவம். (பிள்ளைத்தமிழ்ப் பருவங்களில் ஒன்று)

1.2 மொழிபெயர்ப்பு

  1. moon
  2. the stage of childhood in which the mother points out the moon and beckons it to come and play with the child

1.3 பயன்பாடு

  1. தேடியே தேடியே கண்கள் ஓய்கின்றதே, அம்புலி போல நம்பிக்கை தேய்கின்றதே (திரைப்பாடல்)
  2. அம்மா! பிள்ளைக்கு நீயும் -
அம்புலியைக் காட்டாமல் வெம்புலியைக் காட்டினாய்; அதற்கு,
தினச் சோறு கூடவே இனச் சோறும் ஊட்டினாய்! (பார்வதியம்மாளுக்கு அஞ்சலி, வாலி)

1.3 சொல்வளம்

திங்கள், மதி, சந்திரன்,அம்புவி பகுப்பு:இயற்கைச் சொற்கள்
.

தினம் ஒரு சொல் பற்றிபரண்சொல் ஒன்றை முன்மொழிக