ஓதி விடு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஓதி விடு வினைச்சொல் .

பொருள்[தொகு]

  1. அன்பளிப்பு செய்தல்
  2. கோள் சொல்லல்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. giving gifts
  2. talking ill of a person to another

விளக்கம்[தொகு]

  1. திருமணம், பூச்சூட்டல், சீமந்தம் போன்ற சுபகாரியங்களில் அந்த கொண்டாட்டங்களுக்கு அழைக்கப்பட்டோர் அளிக்கும் அன்பளிப்புகளை அறிவிக்கும் முறைக்கு ஓதி விடுதல் என்பர்கள்.. இதையே 'மொய் எழுதுதல்' என்றும் சொல்லுவார்கள்..அப்படியான அன்பளிப்புகளை ஒருவர் உரத்த குரலில் இன்னார், இந்த உறவினர், இதை அன்பளிக்கிறார் என்று ஓத (சொல்ல/படிக்க) மற்றொருவர் விவரமாக எழுதிக்கொள்ளுவார்.
  2. ஒருவர் மீது மற்றவரிடத்தில் தீங்காக கோள் சொல்லுவதற்கும் ஓதி விடுதல் என்பர்.

பயன்பாடு[தொகு]

  1. என் மருமகள் திருமணத்திற்கு ஐந்தாயிரம் உரூபாய்கள் ஓதி விட்டேன்.
  2. சுகுமாரன் என்னோடு இப்போதெல்லாம் சரியாகப் பேசுவதில்லை...யாரோ என்னைப் பற்றி ஓதி விட்டிருப்பார்கள்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஓதி_விடு&oldid=1225952" இலிருந்து மீள்விக்கப்பட்டது