துறை
Appearance
தமிழ்
[தொகு](கோப்பு)
பொருள்
[தொகு]- ஒரு பாடத்தின் உட்பிரிவு.
- (எ. கா.) உயிரியல் என்ற பாடத்தின் உட்பிரிவாகத் தாவரவியல், விலங்கியல் போன்ற பிரிவுகளைச் சொல்லலாம்.
- சமயத்துறை, ஆங்கிலத்துறைத்தலைவர் (head of english department).
- வீரராயவர் புரிவதாண்மைத் துறையென லாயிற் றன்றே (கம்பரா. வாலி. 82)
- கரையோரத்தில் நிற்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள அமைப்பு.
- (எ. கா.) நீர்த்துறை,துறைமுகம்
- தண்புனற் றுருத்தியுந் தாழ்பூந் துறைகளும் (மணி. 1, 65)
- இடம்.
- அத்துறை யமலனும் (ஞானா. 48, 2)
- நியாயவழி.
- துறை திறம்பாமற் காக்கத் தோன்றினான் (கம்பரா. வாலி. 74). (தொல். பொ. 56, உரை.)
- உபாயம்.
- துறையறிந்து காரியம் நடத்துகிறான்
- கடற்றுறை.
- துறை வளர் நாட்டொடு (சீவக. 1618)
- கடல்.
- துறைமுற்றிய துளங்கிருக்கை (மதுரைக். 85)
- ஆறு
- வண்ணானொலிக்கும் இடம்.
- துறைச்செல்லா ளூரவராடை கொண் டொலிக்குநின் புலைத்தி (கலித். 72, 13)
- சபைகூடுமிடம்.
- சாஸ்திரம்.
- மற்றைத் துறைகளின் முடிவும் (கம்பரா. வாலி. 132)
- அகமும் புறமும் பற்றிய தமிழ்ப் பொருட்கூறு.
- தீந்தமிழின் றுறைவாய் நுழைந்தனையோ (திருக்கோ. 20)
- ஒழுங்கு வேதந் துறைசெய்தான் (குமர. பிர. சிதம்ப. செய். 13)
- பாவினத்தொன்று. (காரிகை, செய். 6, உரை.)
- இசைப்பாட்டு வகை
- வரலாறு.
- துறை யெனக் கியாதெனச் சொல்லுசொல்லென்றான் (கம்பரா. மீட்சி. 255)
- நீர்த்துறை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- branch, sector, field, department
- Ghat, bathing ghat
- Place, location, situation, space, position
- Way, path, as of virtue or justice
- Method, means
- Seaport, harbour, roadstead
- Sea
- River
- Place where washermen wash clothes
- Frequented place, place of meeting, rendezvous
- Branch of knowledge, science;
- Subject or theme, in akampuṟam
- Proper arrangement; codification
- A minor variety of any of the four classes of verse, one of three pāviṉam
- A kind of singing
- History
சொல்வளம்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +