scorched-earth policy
Appearance
பொருள்
- scorched-earth policy, பெயர்ச்சொல்.
- பொசுக்கல் கொள்கை; தீய்ந்த நிலக்கொள்கை, கருகிய நிலக்கொள்கை
விளக்கம்
- ஒருவகைப் போரியல் உத்தி. எதிரிக்குப் பயன்படாது இருக்கும் வண்ணம் ஒரு பகுதியில் உள்ள பயிர்கள், கட்டிடங்கள், மரம், செடிகொடிகள் என அனைத்து வளங்களையும் அடியோடு அழிப்பது. போரில் மட்டுமல்லாது பிற துறைகளிலும் கடுமையான உத்திகளை இவ்வாறு அழைப்பர்.
பயன்பாடு
- ரஷ்யாவுடன் ஜெர்மனி யுத்தம் ஆரம்பித்தவுடன் Scorched Earth Policy என்ற பதங்கள் புதிதாய் உபயோகத்திற்கு வந்தன. இதற்குத்தான் "பொசுக்கல் கொள்கை" என்ற தமிழ்ப் பதம் அமைக்கப்பட்டது. (வேருக்கு நீர் வார்த்தவர்கள் - 24: தற்கால தமிழ்ப் பத்திரிகை, தமிழ்மணி, 22 சன 2012)
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---scorched-earth policy--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் #