தக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தக்கம், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. நீர்த்த அரைதிட உணவு
  2. வாதம்
  3. தருக்கம்

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. watery solid food accumulated at the end of consuming a meal
  2. argument
  3. debate

விளக்கம்[தொகு]

  1. வடமொழி மூலம்: தட்பவம்..சாம்பார், இரசம், மோர் ஆகிய நீர்மங்களை தாராளமாக விட்டு சோறு பிசைந்து உண்ணும்போது கடைசியில் எஞ்சும் அரைதிடமான நீர்த உணவுக்கு 'தக்கம்' என்பர்.
  2. ஒரு தரப்பு நியாயத்தை காரண காரியங்களுடன் விவரித்து வழக்காடும் செயலுக்கு 'தக்கம்/வாதம்' என்பர்.
  3. மறு தரப்பு கொள்கை, தீர்மானம் ஆகியவைகளோடு முரண்பட்டு நேருக்கு நேர் மறு தரப்போடு சொல்லாடலுக்கு 'தக்கம்/தருக்கம்' என்பர்.

பயன்பாடு[தொகு]

  1. கண்ணா சாப்பிட்டபின் தக்கத்தை வீணாக வெளியே கொட்டி, தட்டை அலம்பி வைத்துவிடாதே... தக்கத்தை உறிஞ்சிக் குடித்துவிடு...உடம்புக்கு நல்லது!
  2. நம் பக்கம்தான் இந்த வழக்கில் நியாயம் இருக்கிறது என்பதைச் சரியாக தக்கம் செய்து நிலைநிறுத்த வேண்டும்!
  3. சோமு எப்பவும் இப்படித்தான்! தான் சொல்வதுதான் சரி என்பார்! அதனால் அவரோடு எல்லாவற்றிற்கும் தக்கம் செய்துக்கொண்டிருக்க வேண்டாம்!! வீணாக மனஸ்தாபம்தான் மிஞ்சும்!


( மொழிகள் )

சான்றுகள் ---தக்கம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதித்

"https://ta.wiktionary.org/w/index.php?title=தக்கம்&oldid=1968525" இலிருந்து மீள்விக்கப்பட்டது