தெலங்காணா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
இந்தியாவில் தெலங்காணா இருப்பிடம்
இந்தியாவில் ஆந்திரப் பிரதேசம்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

தெலங்காணா, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஓர் இந்திய மாநிலம்.

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. an indian state.

விளக்கம்[தொகு]

இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்த 'தெலங்காணா' பத்து மாவட்டங்களை உள்ளடக்கியது...ஐதராபாத் நவாபுகளின் ஆட்சியில் ஒரு சமஸ்தானமாக இருந்தபோது, அதில் ஒரு பாகமாக இருந்து, பின்னர் மொழி அடிப்படையில் ஆந்திராவுடன் இணைக்கப்பட்டு,ஆந்திர பிரதேச மாநிலத்தின் ஓர் அங்கமானது...ஆந்திர பிரதேசத்தினுடன் ஏற்பட்ட இணைப்பை விரும்பாமல் அறுபது ஆண்டுகாலமாக இந்தப்பகுதி மக்கள் தனி மாநிலத்திற்காகப் போராடிவந்தனர்...கடந்த பதினான்கு ஆண்டுக் கால தீவிர போராட்டத்தின் விளைவாக தெலங்காணா இந்தியாவின் இருபத்து ஒன்பதாவது மாநிலமாக 2014-ம் ஆண்டு சூன் இரண்டாம் நாள் உதயமானது... நீண்ட காலம் ஆங்கிலேய ஆட்சியிலில்லாமல் முசுலீம் அரசர்களால் ஆளப்பட்டதால், இந்தப் பகுதி மக்களின் வாழ்க்கை முறை, உணவு, கலாசாரம், தெலுங்கு மொழி பேசப்படும் முறை மற்றும் அதன் சொற்கள் போன்றவை மற்ற தெலுங்கு மக்களிடமிருந்து மாறுபட்டது...தெலுங்கு மொழியே அதிகமாகப் பேசப்பட்டாலும், உருது மொழி பேசுவோரும் அதிக அளவில் உள்ளனர்...இவ்விடத்து தெலுங்கில் உருதுமொழியின் தாக்கம் நன்றாகவே தெரியும்... இப்பகுதியில் உள்ள பத்து மவட்டங்கள்:-தலைநகர் 1) ஐதராபாத்,2) ரங்கா ரெட்டி, 3) அதிலாபாத்,4) மெஹ்பூப் நகர்,5) நிஜாமாபாத்,6) கரீம் நகர்,7) கம்மம், 8) வரங்கல், 9) நல்கொண்டா,10) மெதக் ஆகியவை... ஐதராபாத் மாநகரே தெலங்காணாவுக்கும் பிரிக்கப்பட்ட பகுதியாகிய எஞ்சிய ஆந்திர பிரதேசத்திற்கும் பத்து ஆண்டு காலத்திற்கு பொதுவான தலைநகராக விளங்கும் என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது..
"https://ta.wiktionary.org/w/index.php?title=தெலங்காணா&oldid=1233399" இலிருந்து மீள்விக்கப்பட்டது