மொட்டைத்தலை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
மொட்டைத்தலை, .
பொருள்
[தொகு]- முடிமழித்த தலை
- வழுக்கைத்தலை
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- bald or shaven head
விளக்கம்
[தொகு]மொட்டை + தலை = மொட்டைத்தலை...தெய்வங்களுக்கு வேண்டுதல் பேரிலோ, நோயுற்றதாலோ அல்லது சௌகரியத்திற்காகவோ முடியை முற்றிலும் சிரைத்தத் தலைக்கும், அல்லது இயற்கையாகவே முடியெல்லாம் உதிர்ந்து வழுக்கையான தலைக்கும் மொட்டைத் தலை என்று பெயர்.
- பழமொழி='மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டாற்போல'...பொருள்: மொட்டைத்தலையிலும், முழங்காலிலும் முடிச்சுபோட ஏதுவான இடங்கள் இல்லாதபோது இந்த இடங்களை இணைத்து முடிச்சுப் போட்டால் இணையாது, பிரிந்துவிடும் என்றுப் பொருள்..எனவே பொருந்தாத விடங்களைப் பற்றி பேசும்போது, இந்தப் பழமொழி பயனாகிறது...
பயன்பாடு
[தொகு]- என்ன? சுந்தரும், கண்ணனும் நண்பர்களா?..நம்பவே முடியவில்லையே..'மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டாற்போல' இருக்கிறது...சிறிது நாட்களில் பிரிந்துவிடுவார்கள்.நீ வேண்டுமானால் பார்!