உள்ளடக்கத்துக்குச் செல்

கிரந்த எழுத்துமுறை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
கிரந்த எழுத்துமுறை:
  • பொருள்: சமசுகிருதத்தை, தென்னிந்தியாவில் எழுதப் பயன்பட்ட எழுத்துமுறை.

விளக்கம்

[தொகு]

சமசுகிருதத்தை எழுத தென்னிந்தியாவில் கிரந்தமே பயன்படுத்தப்பட்டது. தற்கால கன்னட, தெலுங்கு, மலையாள எழுத்துமுறையில் கிரந்தத்தின் தாக்கம் உள்ளது. தற்காலத்தில், சில கிரந்த எழுத்துக்கள் (ஜ, ஷ, ஸ, ஹ, ஸ்ரீ) ஆகியன தமிழ் எழுத்துக்களுடன் பயன்பாட்டில் உள்ளன. கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்ட கல்வெட்டுகள் பல உள்ளன. தற்காலத்தில், கிரந்த எழுத்துமுறை வழக்கில் இல்லை. மேற்கூறிய ஐந்து எழுத்துகளை தமிழ் எழுத்துகளுடன் சேர்த்து, மீக்குறிகள் இட்டு சமசுகிருதம் எழுதுவாரும் உளர்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=கிரந்த_எழுத்துமுறை&oldid=1406268" இலிருந்து மீள்விக்கப்பட்டது