கப்பைக் கிழங்கு
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
Jatropha Manihot//Manihot esculenta...(தாவரவியல் பெயர்)
கப்பைக் கிழங்கு, .
பொருள்
[தொகு]- பெருவள்ளிக் கிழங்கு
- மரவள்ளிக் கிழங்கு
- குச்சிக்கிழங்கு
- குச்சிவள்ளிக்கிழங்கு
- ஆள்வள்ளிக் கிழங்கு
- மரச்சீனிக் கிழங்கு
- ஏழிலைக்கிழங்கு
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- yuca root
- manioc
- cassava
- tapioca
விளக்கம்
[தொகு]- கப்பை + கிழங்கு = கப்பைக் கிழங்கு...இந்தக் கிழங்கு நீண்டு இரு முனைகளும் கூம்பிய வடிவம் கொண்டது. உள்ளே இறுக்கமான மாவுப்பொருளைக் கொண்ட இது ஏறத்தாழ ஒரு மில்லிமீட்டர் தடிப்புள்ள தோலினால் மூடப்பட்டிருக்கும். தோல் கரடுமுரடானதும், மண்ணிறம் கொண்டதாகவும் காணப்படும். நடுவில் 5 முதல் 10 சமீ வரை விட்டம் கொண்டவையாகக் காணப்படும் கப்பைக் கிழங்குகள் பொதுவாக 15 தொடக்கம் 30 சமீ வரை நீளம் கொண்டவை. இதைவிட நீளமான கிழங்குகளும் உள்ளன... கப்பைக் கிழங்கு அதிக அளவு மாவுச்சத்துக் கொண்டது. அத்துடன் குறிப்பிடத்தக்க அளவில் கல்சியம், பொசுபரசு, உயிர்ச்சத்து சி என்பனவும் உள்ளன. எனினும் இக்கிழங்கில், புரதமோ பிற சத்துக்களோ குறிப்பிடத்தக்க அளவில் இல்லை...கப்பைக் கிழங்கின் மாவிலிருந்து சவ்வரிசியும், ஸ்டார்ச் எனும் மாவுப்பொருளும் தயாரிக்கப்படுகின்றன...
மருத்துவ குணங்கள்
[தொகு]- இந்தக்கிழங்கினால் திரிதோஷ தொந்தம், வாதமூலம், வாத குன்மம் போன்ற சில நோய்களும், அக்கினி மந்தமும் உண்டாகும்...உடலுக்கு பலம் கொடுக்கும்..பாகப்படி சமைத்துண்டால் தாது விருத்தி உண்டாகும்...மூலரோகிகளுக்குக் காணும் உதிரம் நிற்கும்...மலம் கட்டும்...
உபயோகிக்கும் முறை
[தொகு]- சுத்தமாகத் தண்ணீரில் அலம்பியக் கிழங்குகளை ஒரு பாத்திரத்திலிட்டு போதிய அளவு தண்ணீர்விட்டு நன்றாக வேக வைத்து எடுத்து ஆறவிட்டு மேற்றோலை உரித்து,சிறிது தேங்காயுடன் சேர்த்து உண்ணலாம்...அல்லது வேகவைத்த கிழங்கை மேல்தோலை நீக்கி, திருவி அதனுடன் போதிய அளவு சர்க்கரை, ஏலக்காய்ப்பொடி, தேங்காய்த்திருவல் முதலியவைகளைக் கூட்டிச் சாப்பிடலாம்...இந்தக் கிழங்கை உண்பதால் ஏற்படும் தீய விளைவுகளைக் குறைக்க தேங்காயுடன் சேர்த்து உண்பதே சிறந்ததாகும்...