உள்ளடக்கத்துக்குச் செல்

செங்கோற்கடவுள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
செங்கோற்கடவுள்
திபத்துநாட்டின்(சீனா)பௌத்த சமயத்தில் செங்கோற்கடவுள்
செங்கோற்கடவுள் அரசவையில் பாவம் செய்தோர் அனுபவிக்கும் தண்டணைகளைக் காணீர்.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

செங்கோற்கடவுள், .

பொருள்

[தொகு]
  1. யமன்
  2. காலன்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. lord yama, a hindu god of death, dispensing impartial justice


விளக்கம்

[தொகு]
இந்து சமயத்தில் இறப்புக்கு கடவுளான யமன் என்னும் காலனுக்கு செங்கோற்கடவுள் என்று பெயர்...விதிப்படி நிர்ணயம் செய்யப்பட்டக் காலத்தில் மிகத் துல்லியமாகக் குறி தவறாது பூமியிலிருந்து உயிர்களை அவரவர் உடல்களிலிருந்துப் பிரித்தெடுத்து யமலோகத்திற்குக் கொண்டு செல்வதும் பிறகு எந்தவிதமான பக்கசார்பும், விருப்பு வெறுப்புமில்லாமல் ஒரு சீவன் உலகிலிருந்தபோது செய்த நல்வினை, தீவினைகளுக்கு ஏற்ப அந்த சீவனை சுவர்கத்துக்கு அனுப்பியோ அல்லது நரகத்திற்கு அனுப்பித் தண்டித்து மீண்டும் பூவுலகிலேயே பிறக்கும்படிச் செய்தோ செங்கோலோச்சி ஆள்வதால் இந்தப்பெயரை உடையவரானார்....நடுநிலையோடு, விருப்பு வெறுப்பு இல்லாமல் சத்தியம், நியாயம், தருமம், விதி ஆகியவைகளுக்குக் கட்டுப்பட்டு ஆள்வதே செங்கோலோச்சுதல் எனப்படும்...இவ்வாறு செங்கோலோச்சும் யமன் செங்கோற்கடவுள்...இவர் சூரியதேவன்-சாயாதேவியின் இரண்டாவது மகன்...முதல் மகன் சனீசுவரனின் தம்பி....எண்திசை காவலர்களுள் தெற்கு திசைக்கு அதிபதியான ஓர் ஆதித்தர்...இந்து சமயம் மட்டுமல்லாது சீக்கிய, பௌத்த மதங்களிலும் போற்றப்படுகிறார்...



( மொழிகள் )

சான்றுகள் ---செங்கோற்கடவுள்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=செங்கோற்கடவுள்&oldid=1215852" இலிருந்து மீள்விக்கப்பட்டது