பிஸ்கோத்து
Appearance
தமிழ்
[தொகு]பிஸ்கோத்து, .
பொருள்
[தொகு]- சுலபமாக நொறுங்கும் தன்மை கொண்டது
- ஓர் உணவுப்பொருள்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- biscuit
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...ஆங்கிலம்...biscuit...பி3-ஸ்க்1-கெ1-ட்1-...பிஸ்கோத்து...சிறியவர்களும், பெரியவர்களும், முதியவர்களும் விரும்பி உண்ணும் ஓர் உணவு...உலகம் முழுவதும் பல நூற்றுக்கணக்கான வகைகளில் இனிப்பு மற்றும் உவர்ப்புச் சுவைகளில் கிடைக்கிறது...பலவித வடிவங்களிலும் நிறங்களிலும் கிடைக்கும் இவை பெரும்பாலும் கோதுமைமாவு, சர்க்கரையால் தயாரிக்கப்படுகின்றன...உலர்ப்பழங்களைச் சேர்த்தும், பழங்களின் சுவை மற்றும் மணம் கலந்தும், உயிர்ச்சத்துக்கள் ஊட்டப்பட்டும், இனிப்புக்கலவைகளைச் சேர்த்தும், கோகோபொடி, தேங்காய்ப்பொடி, ஏலக்காய் பொடி, வெண்ணெய் போன்ற பலவிதமானப் பொருட்களைக் கூட்டியும் தனித்தனி வகைகளாக பிஸ்கோத்துகள் உள்ளன...மருத்துவரீதியாக உண்ணப்படும் பிஸ்கோத்துகளும் ஏராளமான தினுசுகளில் உள்ளன...மொத்தத்தில் மொறுமொறுப்பாக இனிப்பு அல்லது உப்புச் சுவையில் எங்கும் எப்போதும் கிடைக்கக்கூடிய ஓர் எளிய உணவுப்பொருள்...