வயின்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வயின், பெயர்ச்சொல்.
  1. இடம் (பிங். )
    (எ. கா.) யாழ்ப்பாணர் வயின்வயின் வழங்குபாடல் (கம்பரா. நாட்டுப். 8)
  2. பக்கம்
    (எ. கா.) புடைவீ ழந்துகி லிட வயிற்றழீஇ (நெடுநல்.181)
  3. வீடு (சூடாமணி நிகண்டு)
  4. வயிறு
    (எ. கா.) வயின்கட்டோற்று மகவு (இரகு. தேனுவ. 46)
  5. பக்குவம்
    (எ. கா.) மகடூஉ வயினறிந்தட்ட (பெரும்பாண்.304)
  6. முறை
    (எ. கா.) வயின்வயி னுடன்றுமேல் வந்த வம்பமள்ளரை (புறநா. 77)
  7. எல்லை (அரு. நி.)
  8. பிணை (அரு. நி.) -part
  9. ஏழாம் வேற்றுமையின் சொல்லுருப்பு
    (எ. கா.) தம்வயிற் குற்றம் (குறள். 846)
  10. ஓர் அசைச் சொல் (பெருங். அரும்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Place
  2. Side
  3. House
  4. Belly, stomach
  5. Proper stage, as in boiling rice
  6. Order
  7. Boundary
  8. Security
  9. Sign of the locative
  10. An expletive


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வயின்&oldid=1343085" இலிருந்து மீள்விக்கப்பட்டது