பயனர்:TNSE AGRI CHANDRASOORIAN SVG/மணல்தொட்டி
பசுந்தாள் உரம் மற்றும் பசுந்தழை உரம்
[தொகு]பசுந்தாள் உரம் என்றால் என்ன? பசுந்தாள் உரம் ஒரு குறுகிய கால, சதைப் பற்றான இலையுடைய, பயறு வகைத் தாவரங்களை வளர்ந்த பின் விதைகள் உருவாகும் முன்னரே அதே வயலில் தாவரங்களை மடக்கி உழும் முறையாகும். பசுந்தழை உரம் என்றால் என்ன? பசுந்தழை இலைகள் உரமிடுதல் என்றால், பயறு வகைத் தாவரங்கள், அல்லது மரங்களின் இலைகளை ஒரு வயலில் இட்டு மண்ணில் கலக்குமாறு அவற்றை உழும் முறையாகும்.
பசுந்தாள் பயிர்கள் அகத்தி, க்ரோட்டலேரியா, 'பில்லிப்பயிறு', காராமணி போன்றவை நல்ல பசுந்தாள் உரங்கள்.
பிரபலமான பசுந்தழை உர பயிர்கள்
கிளைரிசிடியா, புங்கை, குதிரை மசால் போன்றவை பொதுவான பசுந்தழை உரங்கள் ஆகும்.
எப்படி இஞ்சி, பூண்டு சாறு உற்பத்தி அல்லது தயார் செய்வது?
இஞ்சி மற்றும் பூண்டு ஒவ்வொன்றும் சுமார் 1 கிராம், 2 கிராம் பச்சை மிளகாய், 5 லிட்டர் மாட்டு கோமியம் மற்றும் தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும். பூண்டு, இஞ்சி மற்றும் பச்சை மிளகாய் போன்றவற்றை அரைத்து பேஸ்ட் செய்து மாட்டு கோமியம் மற்றும் தண்ணீரில் கலக்க வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு, கலவையை வடிகட்டி பயன்படுத்த வேண்டும் . பரிந்துரைக்கப்படும் அளவானது, 500 மில்லி கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு தெளிக்கவும். நீர்த்த இந்தக் கரைசலைத் தெளிக்க சரியான நேரம் காலை 6 மணியிலிருந்து 8.30 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை ஆகும். மண், பயிர் மற்றும் பிற காலநிலைக் காரணிகளை பொறுத்து இந்த கரைசலின் செறிவை உயர்த்தலாம் அல்லது குறைக்கலாம்.
மேற்கோள்:தமிழ்