attached document
Appearance
attached document
பொருள்
[தொகு]- உடனிணைக்கப்பட்ட ஆவணம்
விளக்கம்
[தொகு]- ஒரு மின்னஞ்சல் செய்தியுடன் உடனிணைப்பாக அனுப்பி வைக்கப்படும் ஓர் ஆவணம். ஆஸ்கி உரைக் கோப்பு, இரும மொழிக் கோப்பு, ஒரு வரைகலைப் படக் கோப்பு, ஓர் இசைப் பாடல் கோப்பு, ஓர் ஒளிக் காட்சிக் கோப்பு, ஒரு மென்பொருள் தொகுப்பு இவற்றுள் எதை வேண்டுமானாலும் மின்னஞ்சல் செய்தியுடன் இணைத்து அனுப்ப முடியும். வேறு வேறு பயன்பாட்டுத் தொகுப்புகளில் உருவாக்கப்பட்ட ஆவணங்களாக இருக்கலாம். இணைக்கப்படும் ஆவணங்கள் மின்னஞ்சல் செய்தியின் ஒரு பகுதியாகக் கருதப் படுவதில்லை. அவை மைம் (MIME), பின்ஹெக்ஸ் (BINHEX) என்ற முறையில் மாற்றுக் குறியீடாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்படுகின்றன. பெரும்பாலான மின்னஞ்சல் தொகுப்புகள் தாமாகவே இம் மாற்றத்தை செய்து அனுப்பும் திறன் பெற்றுள்ளன. மின்னஞ்சலைப் பெறுபவர் பயன்படுத்தும் மின்னஞ்சல் தொகுப்பு இந்த ஆவணங்களை மீண்டும் மூல வடிவுக்கு மாற்றும் திறன் படைத்ததாக இருக்க வேண் டும். இல்லையேல் அதற்கென உள்ள மென்பொருளை பயன் படுத்தி மாற்றிக்கொள்ள வேண்டும்.