சக்கைப்போடு
Appearance
சக்கைப்போடு
சொல் பொருள் விளக்கம்
“சக்கைப்போடு போட்டான்”, “மழை சக்கைப் போடு” போட்டு விட்டது” என்பது தென்னக மக்கள் வழக்கு. இது மிகுதி என்னும் பொருள் தருவது. கரும்பை ஆட்டிச் சாறெடுத்த எச்சம் சக்கை. பலாப்பழத்தின் சுளை நீங்கிய தோல் மூடு முதலியவை சக்கை. இவற்றில் பயன் பொருளிலும், சக்கை மிகுதியாதல் கண்கூடு. இதனால் சக்கை என்பதற்கு மிகுதிப் பொருள் உண்டாயிற்று. சாரம், சாறு ஆயவற்றினும் சக்கையே மிகுதியாதல் பெரும்பாலும அறியத் தக்கது. இது தென்னக வழக்கு.