உள்ளடக்கத்துக்குச் செல்

விளக்கேற்றல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விளக்கேற்றல்

சொல் பொருள் விளக்கம்

புதுமனை புகுவிழாவில் விளக்கேற்றல் சிறப்பிடம் பெறும் நிகழ்ச்சியாகும். சில நிறுவனத் தொடக்க விழாக்களிலும் விளக்கேற்றல் முதல் நிகழ்ச்சியாக நிகழ்கின்றன. திருமணமாகி மணமகன் வீடு புகுந்த மணப்பெண்ணை விளக்கேற்ற வந்தவள் என்பதும், அவளை விளக்கேற்றச் சொல்வதும் நிகழ்வுகள் எனினும் அந்நிகழ்வுகளைக் கடந்த பொருளும் உண்டு. குடும்பத்திற்கு வளஞ்சேர்க்க வந்தவள் என்னும் பொருளில் விளக் கேற்ற வந்தவள் என்பது வழங்குகின்றது. குடும்ப வாழ்வுக்கு உதவுபவரையும் எங்கள் குடும்பத்துக்கு விளக்கேற்றியவர் இவர் என நயந்து பாராட்டலும் வழக்கே.

"https://ta.wiktionary.org/w/index.php?title=விளக்கேற்றல்&oldid=1912983" இலிருந்து மீள்விக்கப்பட்டது