உள்ளடக்கத்துக்குச் செல்

எட்டுக்கும் எழவுக்கும்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

எட்டுக்கும் எழவுக்கும்

சொல் பொருள்

எட்டு – இறந்தார்க்கு, எட்டாம் நாள் செய்யும் கடன். இழவு – இறந்தோர்க்குப் பதினாறாம் நாள் செய்யும் கடன்.

விளக்கம்

“எட்டுக்கும் சேர்வான்; இழவுக்கும் சேர்வான்” என்பது பழமொழி. எட்டா நாள் கடன் செய்வார் தாய் வழியார்; பதினாறாம் நாள் கடன் செய்வார் மாமன் வழியார்; இரண்டற்கும் கூடுவார் என்பது முறைபிசகைச் சுட்டுவதாம். கூடத்தகாத இடத்துக்கு கூடும் இயல்பினரை இவ்வாறு சுட்டுவது வழக்கு. தனக்கென்று எவ்வொரு திட்டமும் கொள்கையும் இல்லாமல் எங்கேயும் சேர்ந்து எப்படியும் வாழ்வாரை இழித்துரைப்பதற்கு இப்பழமொழியை ஆள்வர்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=எட்டுக்கும்_எழவுக்கும்&oldid=1913227" இலிருந்து மீள்விக்கப்பட்டது