உருட்டு புரட்டு
Appearance
உருட்டு புரட்டு
சொல் பொருள்
உருட்டு – ஒன்றைப் போகும் போக்கிலேயே தள்ளிவிடுதல். புரட்டு – ஒன்றை நேர்மாறாக அல்லது தலை கீழாக மாற்றிவிடுதல்.
விளக்கம்
உருளல் புரளல் வேறுபாட்டைச் சாலைச் சீர் உருளை உருளற்கும், கற்றூணைப் புரட்டற்கும் உள்ள வேறுபாடு கண்டு தெளிக.
கற்றூணைப் புரட்டுவார் அத்தூணுக்குக் கீழே உருளைகள் வைத்து எளிதாகப் புரட்டிச் செல்லுதல் அறிக.
உருளல் புரளல் என்பவை ஏமாற்றுக் கருவியாய் உருட்டுப் புரட்டெனச் சொல்லப்படுகின்றனவாம். உருட்டினும் புரட்டு, சிக்கல் மிக்கதாம்.