பயனர்:Thennakoan/மணல்தொட்டி/4
குறிப்பு: ஒரு காலகட்டத்தில் "தேசம்" எனுஞ்சொல் வடமொழிச் சொல் என்று எண்ணிக்கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் தற்போதைய
தமிழ் வேர்ச் சொற்களை சங்கதவயமாக்கி சங்கதம் என்றும், சங்கதச் சொற்களை திணித்தும் கற்பித்தல் எம் குழந்தைகளின் தாய்மொழிப் பற்றை சீர்குலைக்கும். சங்கதத்தையும் அது ஈன்ற குட்டி இந்தியையும் தவிர்த்து, அனைத்து துணைக்கண்ட மொழிகளையும் அழித்தொழிப்பதே சங்கிகளின் தலையாய கடமையாக உள்ளதென்பதை நாம் பார்க்கிறோம். வடக்கில் இலக்கிய செழிப்போடு மிளிர்ந்த மொழிகளையெல்லாம் இன்று சங்கதமும் இந்தியும் விழுங்கி ஏப்பம் விட்டிருப்பதை நாம் அறிகிறோம்.
யானைக்கு மதம் பிடித்தது போன்று, "மதம்" எனும் பெயரில் சங்கதத்தை திணித்து இந்திய-துணைக்கண்டத்தில் உள்ள மொழிகளையெல்லாம் அழித்து "சங்கதம்" மட்டுமே இருக்க வேண்டும் எனும் ஒற்றை மொழி கொள்கையில் முன்னெடுக்கப்படும் இந்தி'ய சங்கிகளின் நுட்பத்தை/தந்திரத்தை நாம் உணர்ந்துக்கொள்ள வேண்டும். சங்கதம் வளர்ப்புக்கென இந்'தீய அரசு பல்லாயிரம் கோடி நிதி ஒதுக்கி, பலரையும் பணியில் அமர்த்தி செயல் பட்டு வருவதையும் நாம் தேடிப்பார்க்க வேண்டும்.
இந்த குருதியோடு ஊறிப்போன குள்ளநரிக் குணத்தாரின் சந்தடிச் சாக்கில் சங்கதம் திணிக்கும் செயல் இன்று நேற்று ஏற்படுத்தப்பட்டதல்ல. நாம்தான் அதனை உணராமல் இருக்கிறோம்.
சங்கிகளின் வேகமும் விவேகமும் நாம் பிரான்சில் வசிக்கிறோம். எமது மொழி தமிழ். எனவே நாம் வாழும் நாட்டில் எம்மவர் கட்டிய கோயில்களில் எம்மொழியாம் தமிழை சிதைத்து சங்கதமயமாக்குதலை எம்மக்களுக்கு எடுத்துரைக்க இடப்பட்ட ஒரு பதிவில், இந்தியாவில் எங்கோ ஒரு மூலையில் இருக்கும் ஒரு சங்கி ஓடோடி வந்து எதிர் முன்னிகை இடுகிறார். பதிவுடன் தொடர்பில்லாத ஏதேதோ கூறி மக்களை திசைத் திருப்பப் பார்க்கிறார். எளிதாக மழுப்பிவிடலாம் என்றெண்ணுகிறார். "மதம்" என்கிறார். "மதம்மாறி" என்கிறார். நற்பன்பு என்னவெனத் தெரியா சங்கியினரின் இழிச்சொற்களும் சேர்ந்தே முன்னிகையாகிறது.
பிரான்சில் உள்ள ஒரு தமிழ் தளத்தில் உள்ள ஒரு பதிவுக்கு: "கோயிலில் இதையாரும் பார்ப்பதில்லை." என்கிறார். ஆம் தமிழர் கோயிலுக்கு சென்றால் கண்களை மூடிக் கடவுளை வேண்டத்தொடங்கிடுவர். சங்கிகளோ சங்கதத் திணிப்பை செய்வதில் மும்முரமாக இருப்பார். எதிர்ப்பு இல்லாததால் எளிதாக தமிழரை ஏய்த்துவிடலாம் என்பது அவர் கணக்கு. அறியாத மொழியில் புரியாதச் சொற்களில் கெட்டப்பேச்சில் திட்டுகிறானா என்பதுக் கூடத் தெரியாமல் கடவுளை மட்டுமல்லாம் இந்த கயவரையும் அல்லவா எம்மக்கள் கைக்கூப்பி வணக்கம் செலுத்துகின்றனர். சாமி என்று சாமியை மட்டுமல்லாம் இந்த சங்கிகளையும் சாமி எனும் மனநிலை எம்மக்களிடமிருந்து என்று அகலுமோ?
கோயில் நிர்வாகமும் சங்கதத் திணிப்புக்கு மோடியின் அரசு ஒதுக்கிய நிதியின் ஒரு பங்கை வாங்கிக்கொள்வதில் குறியாய் உள்ளது. அவர்களை கடவுள் ஒன்றும் செய்யாது போலும். "தமிழகத்தில் தமிழருக்கு தமிழே தெரியாதாம்.", "வடக்கிலிருந்து வந்தவர்கள் தமிழை அழகாக உச்சரித்து வளர்க்கின்றாராம்." பார்த்தீர்களா சங்கிகளின் அரசியலை. வடக்கிலிருந்து தமிழ்நாட்டுக்குள் வந்து குவியும் வடவரின் வருகை எப்படி இந்த சங்கியினர் ஆதரிக்கின்றனர். கூட்டிக் கழித்துப் பார்த்தால், "ஆம், நாம் அப்படித்தான் சங்கதம் திணிப்போம். நீங்கள் எவரும் வாய் திறக்கக்கூடாது." என்பதுதான் அவரின் நோக்கம். இது ஒரு சங்கியின் கருத்தல்ல; கோராவில் (Quora) பாருங்கள் சங்கிகளின் முழக்கங்களை.
பிராமணர் கோயில் கட்டி கடவுளை வணங்கும் வழக்கம் இல்லாதவர். கோயில்களில் உடலுழைப்பு இன்றி, எளிதாக பணமீட்டலுக்காக கோயில் பணியில் நுழைந்தோரே அவர் என்பதை எம்மவர் என்று புரிந்துக்கொள்ளப் போகின்றனரோ?
ஆனால் தமிழரோ எந்தக் கொதிப்பும் இல்லாமல் வேடிக்கைப் பார்க்கிறார்.
சங்கி இன்னமும் கூறுகிறார்.