உள்ளடக்கத்துக்குச் செல்

அகிலத்திரட்டு அம்மானை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அகிலத்திரட்டு அம்மானை akilathirattu ammanai ஆதியில் அண்டபிண்டங்கள் தோன்றியபின் ஈஸ்வரன் தாண்டவமாடி அறிவித்த பிரபஞ்ச ஜாதகமான அகிலத்திரட்டு வேதம் தேவர்களாலே கயிலையின் சுவர்களிலே முதன் முறையாக பதிக்கப்பட்டது. மீண்டும் வியாசமுனிவரால் வேதமாக எழுதப்பெற்று பூலோக மனிதர்களுக்கு யுகங்கள் தோறும் அவ்வப்போது செய்தியாக அறிவிக்கப்பட்டது. இந்த தேவசெய்திகள் பல்வேறு காரணங்களால் மனிதகுலத்தை முழுவதுமாக சென்று சேரவில்லைo see. மறுபடியும் மகாவிஷ்ணு மகாலட்சுமியின் ஐயம் தீர்க்கும் படி தனது அவதாரமகிமைகளை கலியில் உழலும் கண்ணு மக்களாகிய சான்றோர்கள் அறிய அருளினார். அந்த நிகழ்வுகளின் யுகவழித் தொகுப்பை 1008 மாசி 20ல் நாராயணர் வைகுண்டராக அவதரித்தபின் அவரது 5 சீடர்களில் ஒருவரான அரிகோபாலன் உள்ளத்தில் குடிகொண்டு 1016 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 27ம் நாள் தமிழில்" அகிலத்திரட்டு அம்மானை" யாக மூன்றாவது முறையாக பனைஓலைச் சுவடிகளில் எழுத்தாணி கொண்டு எழுதுவதற்கு திருவருள் பாலித்தார்.

“ஏர்” அணியும் மாயோன் அருளால் “ஏகம் ஒரு பரம்” என்பதை விளக்கி, இறை சக்திகளின் பிறப்பையும் அவைகளின் ஆற்றலையும் பிரபஞ்ச தோற்றத்தையும், வரலாறையும், பல கோடி ஆண்டுகளாக மனிதர்கள் வாழும் பூலோக வரலாறையும் மகாவிஷ்ணு மகாலட்சுமிக்கு அருளிய “அகிலத்திரட்டு அம்மானை” எனும் வேதம் 7 யுகங்களாக பிரித்து விளக்குகிறது. ஒவ்வொரு யுகங்களிலும் தோன்றிய அரக்கர்களையும், அவர்களால் உயிரினங்களுக்கு ஏற்பட்ட கேடுகளையும் அவற்றை அவ்வப்போது அவதரித்த இறைவன் சீர்செய்து தர்மத்தை நிலைநாட்டியதையும் அகிலத்திரட்டு அம்மானை தெளிவாக கூறியுள்ளது. மாசுகலியை வென்று எட்டாம் யுகமாக மலரவிருக்கும் தர்மயுகத்தில் வாழ்வதற்குவித்தாக அன்பான சான்றோர்களை தேர்ந்தெடுக்கும் பணியை தொடங்குவதே வைகுண்ட அவதார நோக்கம். அதற்கான வழிகாட்டியாக அகிலத்திரட்டு அம்மானை விளங்குகிறது. ஏகமொரு பரமானது. அது எங்கும் நிறைந்தது. எல்லாம் வல்லதுமாய் விளங்குகிறது. இம்மென்றொரு வாயுவில் சத்தி விளைந்தது; சத்தியில் சிவம் தோன்றியது. சிவத்தில் சத்தி தோன்றி சத்தியில் நாதம் தோன்றியது. நாதத்தில் விஷ்ணு தேன்றியது. ருத்திரர் மயேசுரர் உலகம் தோன்றியது. உலகில் அண்டபிண்டம் தோன்றியது. அண்டசராசரங்களின் சுழற்சியை ஏகப்பரம்பொருள் மூன்று மூர்த்திகளாகி படைத்தல் காத்தல் அழித்தல் என மூன்று தொழில்களை தொடர்ந்து செய்து நிலை நிறுத்தியது. மும்மூர்த்திகளும் கூடி தேவர்கள் அசுரர்கள் இருபுறமிருக்க ஆதிசேடனைக் கயிறாக்கி மகாமேரு மலையை மத்தாக்கி திருப்பாற் கடலைக்கடைந்து அமிர்தம் எடுத்து அதை திருமாலின் யோசனைப்படி தேவர்களுக்கு மட்டும் வழங்கினர். அமிர்தம் உண்ட தேவர்கள் தமக்கு அழிவில்லை என்று ஆணவம் கொண்டதால் அவர்தம் ஆணவத்தை அழிக்கும் பொருட்டு அரக்கன் குறோணி (1.நீடியயுகம்) பிறவிசெய்யப்பட்டான். தேவரெல்லாம் குறோணியின் முகத்தையும், கரம்குறியையும் பார்த்து “அறமறியா அநியாய கேடனிவன், அண்டர் கயிலை விழுங்கி ஆயனால் சாவான். கண்ட தோஷம் கடற ஏழ்பிறவி பிறக்கவரும்“ என்றார்கள். மீண்டும் மீண்டும் அடுத்தடுத்த யுகங்களில் ( 2.சதுர யுகம், 3.நெடிய யுகம், 4.கிரேதா யுகம், 5.திரேதா யுகம், 6.துவாபரயுகம், 7.கலியுகம்) அதிக பலமுள்ளவர்களாக பிறவிசெய்யப் படுகிறார்கள். ஒவ்வொரு அசுரரையும் அழித்து யுகத்தர்மம் காக்கும் வரம் சிவபெருமானால் மகாவிஷ்ணுவிற்கு வழங்கப்பட்டது.

அசுரர்களை அழிப்பது மட்டுமே இறைவனின் அவதார நோக்கம் அல்ல. உயிர்களை ஆபத்துகளினின்று காப்பதற்கும், பொல்லாத பேர்களை எச்சரிப்பதற்கும், நல்லோர்க்கு வழிகாட்டுவதற்கும் அவ்வப்போது இறைவன் அவதரிக்கிறார். மகாவிஷ்ணு மகாலட்சுமிக்கு அருளிய அகிலத்திரட்டு அம்மானையின்படி நாராயணரின் அவதாரங்கள் வரிசைப் படுத்தப்பட்டுள்ளன.

1. நீடிய யுகம்- நாராயண மூர்த்தி அசுரன் குறோணியை ஆறு துண்டுகளாக வெட்டி அழித்தார். 2. சதுரயுகம்- திருமால் குண்டோமசாலியை தூண்டிலாக மலையைப் பயன்படுத்தி கொன்றார். 3. நெடியயுகம்- மாயன் தில்லைமலாலன் மல்லோசிவாகனன் இருவரையும் மந்திரபுரக்கணையால் வதைத்தார். 4. கிரேதாயுகம்- கந்தன் சூரபத்மன் சிங்கமுகாசூரன் இருவரையும் சக்தியை வேலாக்கி சங்கரித்தார். நரசிம்மர் பத்து மலைகளை விரல் நகங்களாக்கி இரணியனை வதம் செய்தார் 5.திரேதாயுகம்- இராமர் இராவணனையும் கும்பகர்ணனையும் இராமபாணத்தால் அழித்தார். 6. துவாபரயுகம்- .ஸ்ரீகிருஷ்ணர் கம்சனை தானே வதம் செய்தார். துரியோதனனை பீமசேனன் மூலம் தண்டாயுதத்தால் கொன்றார். ஸ்ரீரங்கர் சப்த கன்னியர் மூலம் 7 சான்றோர்களை பிறவிசெய்தார். தக்சனை எதிர்த்து போரிட தான் பெற்ற கண்ணுமக்களான சான்றோர்களை பயன்படுத்தி மாகாளி மூலம் வதம் செய்கிறார். 7. கலியுகம்- சொக்கநாதர் சோழமன்னனிடமிருந்து 5 சான்றோர்கள் உயிரைக் காக்க வைகையடைத்தார். அனந்தபத்மநாபசுவாமி சான்றோர்களை கொடுமை செய்ய வேண்டாம் என கலியரசனுக்கு எச்சரிக்கை விடுத்தார். அய்யா வைகுண்டர் திருச்செந்தூர் கடலுக்குள் மகரமாக நின்ற அன்னை மகாலட்சுமிக்கும் அய்யா நாராயணருக்கும் மகவாக அவதரித்தார். மாய்கையான கலியழிக்க சான்றோர்களுக்கு அகிலத்திரட்டு அம்மானையின் மூலம் வழிகாட்டுகிறார். 8. தர்மயுகம்- வைகுண்டத்தில் தவநிலையில் இருக்கும் அய்யா வைகுண்டர் ஏழுகன்னியர் பெற்றெடுத்த சான்றோர்களை ஒருநிரப்பாக ஒருகுடை ஒருவானம் ஒருமொழி ஒருசொல்லுக்குள் ஆள்வார்.

ஆறாம் யுகமான துவாபரயுகத்தில் ஸ்ரீ கிருஷ்ணன் துரியோதனனை வதைத்துப் பஞ்சவர்க்குக் குருநாடு பட்டஞ்சூட்டி அரசாள வைத்தார். கலிவருவானெனக் காற்று வீசினதைக் காதிலே கேட்டுக் கானகவழிநடந்து பஞ்சவர்களுடைய பாரப் பெலன்களையும் வாங்கினார். பச்சமாலை சுமந்திருந்த மாயக் கூட்டைப் பர்வதா மலை உச்சியிலே கிடத்தினார். அயோக அமிர்த கங்கையுங் கண்டு கங்கையிலே குளித்த ஏழு கன்னிமார்களுடைய கற்பையுஞ் சோதித்துக் கயிலையங்கிரி சென்று ஏழுலோகம் புகுந்து ஏழுவித்து எடுத்து இருதய கமலத்திலே இருத்தி எரியுங்கட்டையெனக் கிடந்தார். ஏந்திழைமாரைச் சூழ வளையும் படியாகக் கொந்தலையும் எழுப்பி ஏழுபெண்களுக்கும் ஏழு மதலை கொடுத்தார். தவசுக்குக் கன்னிமாரை அனுப்பினார். பத்திர மாகாளியிடத்தில் பாலரை வளர்க்கும்படி கொடுத்து ஸ்ரீரங்கம் போய் செகமறிய பள்ளிகொண்டிருந்தார். இந்நிலையில் ஒன்பதாம் பிறவியெடுக்க மகாவிஷ்ணு பூலோகத்தில் இறந்து கிடக்கிறார் என்ற தேவாதிகளுடைய பொய்யான வாக்கினாலே திருமாலைக் கலந்து ஆலோசிக்காமல் ஈசுரர் தாமே கலியனை கலியுகத்தில் பிறவிசெய்தார். கலியன் தோன்றி இருநூற்று முப்பது நூறாயிரம் வருஷமாகக் கட்டங்கொடுமை செய்து அவனியரசாண்டான். கன்னி மக்களாகிய சான்றோர் படுகிற மறுக்கம் பொறுக்காமலே, வியாசர் இடைமுனிவர் வகுத்த ஆகமத்தின்படி மகாபர இந்திர நாராயணர் தாமே வைகுண்டமாய் 1008 ஆம் ஆண்டு மாசி இருபதாம் தேதி உதித்தார். அவனியிலே மனுநிறமாக வந்திருந்து சாதி பதினெட்டையும் ஒருதலத்தில் வருத்தி தர்மமாய் சஞ்சல நோய்பிணி தண்ணீரால் தீர்த்தார். சந்ததியில்லாத பேர்க்குச்சந்ததி கொடுத்து தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுத்தார். சாதைவாதை பேய்களைச்சரிவிலே எரித்ததார். தரணியேழு கணக்கையும் கேட்டு சாஸ்திரவேத நூலுக்குச் சரியொத்த பேர்களுக்கு உபகாரங்கள் செய்தார். போரேதுமில்லாமல் கலியனைத் தன்னாலே தானழிந்து போகச்செய்தார். முதல் ஐந்து யுகங்களில் வித விதமான ஆயுதங்களைப் பயன்படுத்தி இறைவன் தானே நேரடியாக அரக்கர்களை துவம்சம் செய்கிறார். ஆறாவது யுகமான துவாபரயுகத்தில் தனது தொண்டனான பீமசேனன் மூலமாக தனது நேரடி பார்வையில் துரியோதனனை அழிக்கிறார். சத்த பலம் கொண்டவர்களையும் பீமன் மூலம் வதைக்கிறார். துவாபர யுகத்தின் இறுதியில் தக்சனை மாகாளி மூலம் வதம் செய்கிறார். ஏழாவது யுகமான கலியுகத்தை அழித்து தர்மயுகத்தை தோற்றுவிக்க, மண்ணில் பிறந்த மிகவும் சக்திவாய்ந்த இறைவனின் அவதாரமாக , முப்பொருளும் (பிரம்மா, விஷ்ணு, சிவன்) ஒருபொருளாய் இணைந்து , அய்யா வைகுண்டர் அவதரித்தார். கலிக்குள் அகப்பட்ட சடம் கலியழிக்க இயலாது என்பதால் வைகுண்ட அவதாரம் திருச்செந்தூர் கடலுக்குள்ளே மகரமாகநின்ற மகாலட்சுமியின் வயிற்றில் நடக்கிறது. நாரணர் தமக்கு மகனாக வந்துதித்த வைகுண்டருக்கு கலியழிக்கத் தேவையான சக்தியையும் புத்தியையும் விஞ்சையாக வழங்குகிறார். அரூபியாக அவதரித்த நாராயணர் தெச்சணத்தில் வந்து வைகுண்டர் எனும் நாமத்தோடு மனுச்சொரூபம் எடுத்து, தவமிருந்து, அவதார இகனைகள் புரிந்து, கலியை அழிப்பதற்கு புத்திமதிகளை தந்து விட்டு சென்றிருக்கிறார். அவரவர் உள்ளத்தில் புகுந்த மாயக்கலியை அழிக்கும் பொறுப்பை சான்றோர்களின் வசம் விட்டு விடுகிறார்.

 "மானமாக வாழ்ந்திருந்தால் மாளும் கலி தன்னாலே "

கலியை வெல்வதற்கு ஆயுதம் தேவையில்லை. அய்யா வைகுண்டர் எந்த ஆயுதமும் கையில் எடுக்கவில்லை. மாறாக அன்பு சேகரிக்க வந்தார் என்று அகிலம் சொல்கிறது. அன்பென்னும் ஆயுதம் காயங்களை காயப்படுத்தாது. உள்ளங்களையும் காயப்படுத்தாது. அது மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் மட்டுமல்ல கேடயமுமாகும். இதனை கொண்டு எதனையும் வெல்லலாம். கலியை வெல்வதற்கு பணம் தேவையில்லை. எனவே தான் அய்யா பண்டாரமாக அவதரித்தார். அரசனை வெல்வதற்கும் ஆண்டிக்கோலமே பூண்டார். படை எடுத்து வெல்லவில்லை. அன்பாலும் பண்பாலும், பணிவாலும், துணிவாலும், பொறுமையாலும் தர்மத்தாலும் வென்றார். மலரவிருக்கும் தர்மயுகத்தில் தங்க நவரத்தினத்திருமுடி சூடி சகலமாபதி மேடைகள் பாவித்து, சக்கராயுதக்கொடி ஒற்றைக்கொடி கட்டி தரணியோர் குடைக்குள் ஆள்வார். தவசு கிருபை பெற்று, சகலரும் புகழும் தர்மராசாவாக சங்கவிருதுக்கொடி கட்டி அஷ்டதிக்குப் பதினாலுலோகமுமறிய அசையாமணியொன்று கட்டி, ஆதி சர்வேஸ்வரனாகி, அழியாத்திருவுளமாயிருந்து, சர்வ காலமும் அவனியைம்பத்தாறு சீமையும் அடக்கி அரசாள்வார்.

கலி என்பது நீசமடைந்த மாயை. உறவாடி கெடுக்கும். அறிவின் எதிரி.  இது உடலால் வேறுபடுவதில்லை. உள்ளத்தால், எண்ணத்தால் வேறுபடுகிறது. எனவே தான் அய்யா நமக்கு ஞானபொக்கிஷமான அகிலத்திரட்டை கொடுத்துள்ளார். நமது உள்ளங்களை சீர்படுத்தி, தூய்மைபடுத்தி,எங்கும் நிறைந்த இறைவனை உள்ளத்தில் நிரந்தரமாக நிலைப்படுத்தினால் மாயை நீங்கும். இருள் அகலும். தர்மம் பிறக்கும். அகிலத்திரட்டு  நம் கையில் கிடைத்துள்ள அருள்ஞானப் பெட்டகம். அண்ட பகிரண்டம் வெல்ல அய்யா கொடுத்த ஆயுதம். சரியாக அறிந்து,  புரிந்து பயன்படுத்துவோர் கலியை வெல்வதும்,  தர்மயுகம் காண்பதும்  நிச்சயம்.


ஆகமப்பலன்

 திருச்செந்தூர் கடலில் ஆயிரத்தெட்டாமாண்டு மாசி 20ல் பொன்மகர வயிற்றினுள் விஞ்சை பெற்று மகரப்பாலை உமிழ்ந்து தாமரைக்குளத்தூரில் 6 ஆண்டுகள் தவமிருந்து இகனைகள் புரிந்து உலகில் இகபர சோதனை பார்த்த நாராயண வைந்தரின் உவமை சொல்வது கலியுக தர்மமாகும்.  நாராயணர் மகாலட்சுமிக்கு உரைத்த அகிலத்திரட்டு அம்மானையை வாசிக்கக்கேட்டு மகிழ்ந்திருந்த அன்பர்க்கு பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டும்.  இயல்பாக கருவுற்று குழந்தைபெற இயலாத மலடியும் மகாவிருப்பத்தோடிளகி தலமளந்த மாயவனை நாடிக் கேட்டால் மதலை ஈன்றெடுக்கும் பாக்கியம் கிடைக்கும்.  குட்டமென்று சொல்லப்படும் கொடிய தொழுநோயால் பாதிக்கப் பட்டோர்களும் கூட குணம் வைத்து கேட்டால் நோய் தீருவது உறுதியென நாராயணர் கூறுகிறார்.  தர்மயுகமாக்கி தாரணியை ஆளுதற்க்கு கர்மக் கலியில் கடவுளார் வந்த வரலாறான அகிலத்திரட்டு ஆகமம், அதனைப்படிக்கும் அன்புள்ளோர் சாகாதிருக்கும் நிலையை அடைவதற்கு வாகாக அய்யா நாராயணரால் வகுக்கப் பட்டுள்ளது.  கலியுகத்தில் 7 சான்றோர்கள் பிறந்ததும், தரணியை ஆண்டதும், பல பெரிய விருதுவகை பெற்றதும் நாராயணர் உண்மையுள்ள மகாலக்ஷ்மிக்கு உபதேசமாயுரைத்த அகிலத்திரட்டு அம்மானையை தன்போதமாயிருந்து தாழ்மையுடன் கேட்டோர்க்கு கர்மம் முதல் சஞ்சலங்கள் கழியும்.  அகிலத்திரட்டு வாசகத்தின் தன்மையை நம்புவோர்க்கு இறைவன் பாக்கியங்கள் கொடுப்பார். பலனுடன் வாழுவோர்க்கு இறைவன் நோக்கிய கருணை உண்டாகும். நோயில்லாது சுகமாக மகிழ்ந்து வாழ்வார். இறைவாக்கின் படி வைகுண்ட வீடு வந்தவர் வாழ்வார்.  தினமொரு நேரம் அகிலத்திரட்டு திருமொழியைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும்.  கனிமொழி சோதி வாக்கும் கையெழுத்தாதி நோக்கும் துணிவுடன் கேட்டோர் உற்றோர் பிறவியைத் தொலைத்திடுவர். மறுபிறவி இவர்களுக்கு கிடையாது.  அகிலத்திரட்டு அம்மானையை வாசித்தோர் கேட்டோர் மனதினில் உணர்ந்து கற்றோர் ஆசித்தன் பதமே காண்பர். அவ்வழி முறையே நின்றோர் கோசித்தன் பதமே கண்டு கோமலை புவியின் வாழ்வும் தேசத்தின் செல்வத்தோடும் சிறப்புடனிருந்து வாழ்வார்.  மானமாய் புதியதாக்கி நாராயணர் வருத்திய அகிலத்திரட்டு அம்மானை கருத்தினுள் அகம் கொண்டு கவனித்தோர்க்கே தக்கும். உருத்தில்லா கேட்போர் ஓருரை வெளியே காணார். மகிழ்ந்து உரைக்கேட்டோரெல்லாம் சிவபொருள் வெளியே காண்பார்.

 இறைவனது மொழியும் எழுத்தும் ஏடாய் சேர்த்து இவ்வுலகில் சிந்தை மகிழ்ந்த அன்போருக்கு தெரிய திறமாய் அகிலத்திரட்டு அம்மானை எழுதப்பட்டுள்ளது.  இந்தத் திருமொழியை வாசித்து உரைத்தோர் சந்தமுடனே வாழ்ந்து தர்ம பதியும் காண்பார்கள். தர்மக்கண்காட்சை கண்டே மரணமில்லாமல் என்றும் களிகூர்ந்து கண்ணோன் பதத்தைக் காண்பார். கருணாகரராய் கவ்வையற்று கயிலாசம் கண்டே நன்றாய் வாழ்வார்.  நாராயணரின் அவதார இகனைகளை நூலாக வகுத்த நாதன், வகுத்தெழுதி படித்த குலமனுவோர், வீறான தெய்வ சக்தி மடவார், வீரமுகலட்சுமி, நாராயணர் அருளால் படித்தோர் கேட்டோர், நல்லவுரை மிகத்தெளிந்து நவின்றோர், கற்றோர், அனைவரும் அன்றூழி காலமிருந்தாள்வது திண்ணம்.  அகிலத்திரட்டு அம்மானையை திடமுடனே மனவிருப்பமாகக் கேட்டோர் எண்ணம் முந்தவினை தீர்ந்து ஞானமான இறைவரின் பாதாரத்தியல்பும் தர்மபதி வாழ்வும் பெற்று மக்களுடன் கிளை பெருகி மகிழ்ச்சியாக நித்தமிந்த பார்மீதில் சாகா வண்ணம் நீடூழி காலமிருந்தாள்வார்.  மாயனுரைக்க அகிலத்திரட்டு அம்மானையை மாது திரு லட்சுமியாள் கேட்டு மகிழ்ந்து முகம் மலர்ந்து வாய் புதைத்து "தீயனெனும் மாகொடிய அரக்கர் சேர்க்கை திரை அறுக்க நீர் துணிந்து சென்ற நாள் முதலாய் ஞாயநெறி காணாத அடிமை போலே நடுங்கி மனதுடைந்து வெகு நாளாய்த்தேடி ஆயருமை நாயடியாளின்று கண்டு அகமகிழ்ந்தேன் எனது துயர் இழந்திட்டேன்" என்றுரைத்தாள்.

 அன்னை மகாலட்சுமி ஐயங்கள், அச்சங்கள், கவலைகள், துயரங்கள் நீங்கி அகமகிழ்ந்ததுபோல நாமும் நாள்தோறும் மகிழ்ச்சியோடு அகிலத்திரட்டைப் படிப்போம். மாயன் அருளால் எல்லா நலமும், வளமும், சீரும் சிறப்பும், தெளிவும், மகிழ்வும் பெற்று வாழ்வாங்கு வையகத்தில் வாழ்ந்து மாய்கையான கலியை வென்று தர்ம யுகம் காண்போம்.

ஆகமப்பொருளடக்கம்

  1. காப்பு #ஆகமச்சுருக்கம் #அடியெடுத்தருளல் #தெச்சணா புதுமை #சீமையின் இயல்பு #தர்ம நீதம் #தெய்வ நீதம் #பெண்கள் நிலைமை #சாதி வளமை #கயிலை வளமை #மஹாலட்சுமியின் ஐயம் #பிரபஞ்சத்தின் தோற்றம் #அசுரன் குறோணி #மாயவர் தவம் ஈசுரர் வரம் #நீடியயுகம் #சதுரயுகம் #குண்டோமசாலி #தில்லை மல்லாலன் மல்லோசி வாகனன் #நெடியயுகம் #சூரர் முடுக்கம் #தேவர் முறையம் #கிரேதாயுகம் #சூரபற்பன், சிங்கமுகச் சூரன் வரம் வேண்டல் #கந்தன் அவதாரம் #வீரவாகுதேவர் தூது #சூரன் வதம் #இரணியன் வதம் #மேதையின் தவம் #திரேதா யுகம் #கும்பகர்ணன் வரம் வேண்டல் #இராவணன் வரமும் சாபமும் #இராவணன் கொடுமை #இராமாவதாரம் #குறுமுனிவன் சாபம் #இராமன் சீதை திருமணம் #இராமன் சீதை வனவாசம் #இராவணன் சீதையை திருடிச்செல்லல் #அனுமன் ஓற்று #இராவணன் வதம் #துவாபரயுகம் #கும்பகர்ணன் மறுபிறவி #கஞ்சன் கொடுமை #தேவகி ரோகணிபிறப்பு #கம்சனுக்கு நாரதர் அறிவுரை #வசுதேவன் தேவகி ரோகணி கல்யாணம் #நாராயணர் புகழ்பாடி தேவர்கள் அபயம் #சங்குவண்ண மாலோன் வழங்கிய உறுதி #கிருஷ்ணாவதாரம் #கம்சனுக்கு பகவதி எச்சரிக்கை #கண்ணனை கொல்ல அரக்கரை ஏவல் #கம்சன் வதம் #ருக்மணி கல்யாணம் #குருநாடு, அஸ்தினாபுரம், மகாபாரதம் #பஞ்சபாண்டவர் வனவாசம் #துரியோதனன் வஞ்சனை #மகாபாரதப் போர் #துரியோதனன் வதம் #கர்ணனுக்கு மோக்ஷம் #தக்சன் பிறப்பு #சீரங்கத்தில் சாரங்கர் #அயோக அமிர்தவனம் #சப்தகன்னியர்கள் #சான்றோர் பிறப்பு #சப்த கன்னியர்கள் தவம் #சான்றோர்களை மாகாளி கையில் கொடுத்தல் #சான்றோர்க்கு நாமம் அருளல் #சரஸ்வதி தாலாட்டு #சான்றோர்க்கு சேனைவூட்டுதல் #வானோர்கள் மறையவனை சாபமிடல் #மாகாளிக்கு முன்னெச்சரிக்கை #சீரங்கத்தின் பெருமை #தக்சன் வதம் #சான்றோர்க்கு மாலையிட பெண் தேடல் #இராச தெய்வக் கன்னியர்கள் #சான்றோர் திருமணம் #சான்றோர் பெருமை #மாயவர் மாண்டு கிடக்கிறாரா? #தலைகீழாய் கலிப்பிறவி #கலிப்பிறவி ஆயுசும் பலமும் #கவ்வையால் கலியனை வெளியிலே எடுத்தல் #கலிச்சி பிறப்பு #கலியன் கேட்ட வரங்கள் #அகத்தீசர் பிறப்பு #ஸ்ரீரங்கரின் ஆண்டி வேசம் #கலியரசன் சத்தியம் #சக்கராயுதம் பணமாதல் #கலியுகம் #நீதமெல்லாம் காணாதே செல்லல் #நல்ல மிருகங்களுக்கு திருமால் அருளுரை #கலைமுனி ஞானமுனி தவசு #போகமுனி தவசு #ஆகமப்போகன் சலமடவு தவம் #கலிநீசன் கொடுமை #ஈசுரர் கயிலை விட்டு பரலோகம் செல்லல் #நந்தி சொன்ன யோசனை #பேய்ப்பிறப்பு #பேய்கள் கேட்டவரம் #ஈசரின் பண்டாரவேசம் #வைகையில் வெள்ளம் #குட்டையெடுக்க சான்றோர் மறுத்தல் #மன்னன் இரு சான்றோரைக் கொன்றான் #திருமால் சொக்கராகி வைகையடைத்தல் #திருமால் ஸ்ரீரங்கம் விட்டு அனந்தபுரம் ஏகல் #பிரம்மரிஷிகள் சாபவிமோசனம் #எக்காள துர்க்கை சாபவிமோசனம் #வானோர்கள் விண்ணப்பம் #நாராயணர் வானோர்க்கு அருளல் #அச்சுதர் பெண்ணுக்கு வரமருளல் #அச்சுதர் பசுவுக்கு வரமருளல் #கிருஷ்ணர் கேத்திர பாலனுக்குச் சொன்னது #அனந்தபுரத்தில் கிருஷ்ணர் #மதலை வேண்டி கலி நீசன் தவம் #வெண்ணீசன் பிறப்பு #வெண்ணீசன் அசுரவளர்ச்சி #வாசல் மணிமேடை காத்த சான்றோர்கள் #சான்றோர்க்கு நீசனிட்ட சாபம் #கலிநீசன் கொடுமை #ஸ்ரீபத்ம நாபர் கலியரசனுக்கு உபதேசித்தல் #மாயன் திருச்செந்தூர் ஏகல் #திருவனந்தபுரம் சீரழிவு #இறைவன் முன் சாதியெல்லாம் ஒன்று #நவாப்பு சட்டம் #தேவர்கள் முறையமிடல் #உமையாள் வேண்டுதல் #திருமால் ஆதங்கம் #தங்கையுடன் திருமால் கோபம் #அறம் வளர்த்தாள் உருக்கம் #திருமால் கயிலைக்கு ஏகல் #ஈசுரர் மகிழ்ச்சி #ஆறுயுகங்களிலும் சூரரால் பட்டபாடு #ஈசுரனார் சாபம் அச்சுதனார் பெற்றவரம் #தேவர் வானவர் முனிகள் சொன்ன பொய் #வேதா சிவன் திருமால் ஐக்கியம் #நினைத்தது போலே நிச்சயித்துக் கொள்ள வேண்டுதல் #தேவலோகத்தார் மனுப்பிறப்பு #சம்பூரணன் பரதேவதை தவம் #எமலோகத்தார் மனுப் பிறப்பு #சொர்க்கலோகத்தார் மனுப்பிறப்பு #பிரம்ம லோகத்தார் மனுப்பிறப்பு #வைகுண்ட லோகத்தார் மனுப்பிறப்பு #சிவலோகத்தார் மனுப்பிறப்பு #பரலோகத்தார் மனுப்பிறப்பு #திருமால் கலியழிக்க திட்டம் வகுத்தல் #தர்மபுவிச்சிறப்பு #கன்னியர் தவம் காண நாரணர் எழுந்தருளல் #கன்னியர் தவநிறைவு #கன்னியர் சிவனிடம் வரம் வேண்டல் #கன்னியர் சோழனை சபித்தல் #கன்னியர் புலம்பல் #கன்னியர் நாராயணரை சபித்தல் #இறந்த சான்றோரை படைத்தல் #கன்னியரை பூலோகத்தில் பிறவி செய்தல் #நாரணர் வரும் தருணம்-கன்னியர்க்கு அருளியது #சம்பூர்ணன் பரதேவதை தவப்பிறழ்ச்சி #பரதேவதை சம்பூர்ணத் தேவன் மனுப்பிறப்பு #மாகாளி சொன்ன செய்தி #காளிக்கு சிறை #பொன் மகரத்தின் சிறப்பு #நாரணர் வருகை-லட்சுமிக்கு அருளியது #மகாலெட்சுமி மகரமாதல் #கலைகோட்டு முனிக்கு திருமால் அருளல் #இறையின் தனிச்சிறப்பு #இறைவனுக்கு ஏற்றவர்கள் #ஈசுவரன் தாண்டவம் #திருநடன உலா #தாண்டவத்தின் விளைவுகள் #திருவாசகம் எழுதிவிட தீர்மானித்தல் #திருவாசகம் இயம்ப சரசுபதியை அழைத்தல் #எல்லாம் எம்பரன் செயல் #சரசுபதி திருவாசகம் இயம்பல் #முன்னாகமமுறை வியாசர் மொழிதல் #விஞ்சையின் மகத்துவம் #நாராயணர் செந்தூர் ஏகல் #ஆறுமுகன் பதற்றமடைதல் #சம்பூர்ணனனுக்கு கதியளித்தல் #கலைமுனி ஞானமுனி வரவு #நாராயணர் கடலினுள் கனலாய் செல்லுதல் #பொன்மகரம் மனம் கலங்குதல் #நாராயணர் மகரத்துள் செல்லுதல் #நாராயண வைகுண்டர் அவதாரம் #விஞ்சையருளல் #வைகுண்டரை மறையோர் வாழ்த்துதல் #சரசுபதி தாலாட்டு #பள்ளி உணர்த்தல் #நாரணர் வைகுண்டரை வழியனுப்புதல் #முனிவர்களை சாட்சியமர்த்தல் #தேவர்கள் வைகுண்டருக்கு அபயமிடல் #வைகுண்டர் தேவர்க்கு உறுதி சொல்லல் #வானவர் தானவர் நமஸ்கரித்தல் #கயிலை கணக்குகள் வைகுண்டர் வசம் #வைகுண்ட அவதாரம் – திருவாசகம் #முருகனுக்கு வைகுண்டர் கட்டளை #வானோர்கள் வைகுண்டரைப் போற்றுதல் #வானோர் தேவர்க்கு வைகுண்டர் அறிவுரை #பஞ்சதேவர் உற்பத்தி #வைகுண்டர் தெச்சணம் எழுந்தருளல் #செந்தூரில் அழிமதிகள் #வைகுண்டர் மனுச்சொரூபம் எடுத்தல் #மிருகங்களுக்கு வைகுண்டர் சட்டமிடல் #நல்ல குலதெய்வங்கள் மறைதல் #வைகுண்டர் பகவதிக்கு அருளல் #வைகுண்டர் மணவைப்பதி ஏகல் #வியாசர் வைகுண்டர் தவசிருக்க நாடுரைத்தல் #தெச்சணாபூமி வளம் #வைகுண்டர் வருகை நிருபம் #தெச்சணத்தில் வைகுண்டர் தவம் #வைகுண்டர் மக்களுக்கு அருளல் #வைகுண்டர் நொம்பலங்கள் தீர்த்தல் #வைகுண்டர் பேய்களை எரிக்க நினைத்தல் #நாரதரிடத்தில் பேயெல்லாம் செய்திகேட்டல் #வைகுண்டர் பேய்களை எரித்தல் #மந்திரங்கள் பலிக்க வில்லை #குறத்தி சொன்னகுறி #மந்திரவாதிகளின் விசையடக்குதல் #வைகுண்டர் தர்மம் கூறல் #கலியரசன் வைகுண்டரைப் பிடிக்க வருதல் #சாஸ்திரி உரைத்த குறி #கலியரசனுக்குப் பூவண்டர் உபதேசம் #முட்டப்பதி விஞ்சை #நீசன் வைகுண்டரை கொடுமை செய்தல் #சான்றோர்கள் கண்ணீர் #சான்றோர்க்கு மாலோன் ஆறுதல் #ஏகம்படைத்த ஏகன் பெற்ற ஏச்சும் பேச்சும் #அஞ்சுவகை நஞ்சு அமுதமானது #டாணாவில் சிறை #சிங்காரத்தோப்பில் சிறை #நாராயணர்க்கு நருட்கள் நமஸ்காரம் #கடுவாய் தேட சேவகர்களை ஏவல் #மலையில் சேவகர்கள் கடுவாய் தேடல் #சான்றோர்கள் பதற்றம் #கடுவாய் சோதனை தோல்வி #மன்னன் மனக்கவலை #சனங்கள்-விமர்சனங்கள் #வைகுண்டரைப் பாராஇளக்கல் #வைகுண்டர் கைச்சீட்டில் ஒப்பமிடல் #வைகுண்டர் விடுதலை #வைகுண்டர் தாமரைப்பதி திரும்புதல் #துவையல் தவசு #துவையல் தவத்தின் சிறப்பு #சான்றோர் தவத்தின் நிலை பார்த்தல் #முட்டப்பதியில் துவையல் தவசு #துவையல் பண்டாரங்களுக்கு விருந்து #வைகுண்டரை முட்டப்பதி வர அழைத்தல் #வைகுண்டர் ஏற்ற சொரூபம் எடுத்தல் #அய்யா முட்டப்பதி ஏகல் #முட்டப்பதி விஞ்சை #அய்யா தோப்புப்பதி திரும்புதல் #சான்றோர் பக்தி #சப்தகன்னிமார் வருகை #தெய்வகன்னி மடவார் திருக்கல்யாணம் #திருமுகூர்த்தம் #கன்னி மடவார் தெருவீதி வலம் வருதல் #சோபனம் #நித்தந்திருநாள் #மதலைகளை வளர்க்க திருமால் பட்டபாடு #சீசரை மதலையாக ஈதல் #சிலைக்கு கொடுத்த வாக்கு மறதி #மூலப்பதியில் ஆதித் திருமால் #அய்யா கிழவனாக கன்னி பகவதிபதியேகல் #போத்தியுடன் பகவதி பயணம் #பகவதி கன்னிமார்களை காணல் #பகவதி சச்சிதானந்த வடிவைக்காணல் #பகவதியாள் புலம்பித் தவித்தல் #பகவதியாள் கூடு மாறி திரிதல் #கன்னிப் பகவதி காண்டம் படித்தல் #சிவன் ரோமரிஷிக்கு அருளியது #பகவதி திருக்கல்யாணம் #பார்வதி திருக்கல்யாணம் #திருமால் மோகினி கோலம் எடுத்தல் #மண்டைக் காட்டாள் காண்டம் படித்தல் #மண்டைக்காட்டாள் திருக்கல்யாணம் #வள்ளி திருக்கல்யாணம் #அய்யா தாங்கல்களுக்கு எழுந்தருளல் #அய்யா வைகுண்டம் எழுந்தருளல் #வைகுண்டர் தவத்தை வானவர் போற்றுதல் #அய்யா வைகுண்டர்தம் இகனை உரைத்தல் #கலைமுனி, ஞானமுனி சாட்சியம் #அய்யா சான்றோர்க்கு இரங்கல் #ஆங்கார பொய்ச்சொரூபம் #நல்லவை முழித்தல் #நடுத்தீர்ப்பு #கலியன் வன்னரகம் செல்லல் #தர்ம யுகம் உதயம் #மாகாளி விடுதலை #வைகுண்டருக்கு முடிசூட்டுதல் #வைகுண்டர் சான்றோரை வாழ்த்துதல் #வைகுண்டர் தர்மபதியாளுதல் #மகாலட்சுமி மகிழ்ச்சி ☬



ஆகம நூல் விவரம் தலைப்பு: அகிலத்திரட்டு அம்மானை பொருள்: ஆன்மீகம் நூல் வகை: ஆகமம் அருளியவர்: ஶ்ரீமன் நாறாயணசுவாமி மூல ஆசிரியர்: சீடர். இரா அரிகோபாலன் மொழி : தமிழ் இலக்கியம்: அம்மானை, விருத்தம், சிந்து, வாசகம், ஆசிரியப்பா, வெண்பா, அந்தாதி, சோபனம், குறவஞ்சி, தாலாட்டு. தொகுத்தவர்: அகில வாசகன் .இரா. கோபாலகிருஷ்ணன், MSc, BEd, LLB வெளியிடுவோர்:அகிலத்திரட்டு இந்தியா மிஷன், முருகாண்டியூர், AP நாடாரூர் - 627423 பதிப்பு: 2024


மஹாவிஷ்ணு மகாலட்சுமிக்கு அருளிய அகிலத்திரட்டு அம்மானை


நாராயணர் தாமே வைகுண்டராக 1008 மாசி 20ல் அவதரித்தார். நாராயணரின் வார்த்தைகளை கொல்லம் ஆண்டு 1016 கார்த்திகை மாதம் தேதி 27ல் ஓலைச் சுவடிகளில் எழுதியவர் இரா.அரிகோபாலன் (அய்யா வைகுண்டரின் சீடர்) தென்தாமரைகுளம்


நாராயணரின் அருளால் தொகுத்தவர் இரா. கோபாலகிருஷ்ணன், MSc , BEd , LLB ( த /பெ . மு. இராமசுவாமி நாடார், அனந்த பெருமாள் நாடாரூர்-627423)கைபேசி : 7200031169


முதற்பதிப்பு வெளியீடு நிழல் தாங்கல் ஆடி மாத திருநாள், 2022 A .P . நாடாரூர்


“தினம் ஒரு நேரம் இந்த ஆகமத்தைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும்”


மாப்புக் கேட்டல்


அய்யா நாங்கள் அறிந்து அறியாமல் செய்ததெல்லாம் அய்யா பொறுக்கணும்.

அய்யா பொறுத்து, அய்யா மாப்புத்தந்து, எங்களைக் கண்ணின் மணிபோல காத்து இரட்சிக்கணும்.

அய்யா நாங்கள், ஒண்ணு சொல்ல ஒண்ணுகேட்டு, ஒண்ணு சொல்ல ஒண்ணுகேட்டு, ஒண்ணுக்கொண்ணு ஒருநிரப்பாயிருக்கணும்.

அய்யா எங்களை, யாதொரு நோய் நொம்பலம் இல்லாமலும், யாதொரு மனச்சஞ்சலம் இல்லாமலும், அன்னமும், வஸ்திரமும், சொர்ணமும், சுதந்திரமும், புத்திர பாக்கியமும் தந்து அய்யா காத்து இரட்சிக்கணும்!

அய்யா மண்ணும் தண்ணீரும் எங்களுக்கு உணவும், விருந்தும், மருந்துமாகி நோய் தீர்த்து சடம் காக்க அருளணும்

அய்யா எங்களுக்கு ஒருபுத்தியும், உயர் புத்தியும், மனோபலமும்,தன்னம்பிக்கையும் தரணும்!

அய்யா நீரே எங்களுக்கு அன்பும், பண்பும், அடக்கமும், பொறுமையும், அகிலஞானமும், தர்ம சிந்தனையும் தரணும்!

அய்யா நீரே எங்கள் உள்ளத்து கலியழித்து எங்களுக்கு பேறான தர்மயுக வாழ்வு தரணும்!.

ஏகம் ஒரு பரம்

அகில வாசகன். இரா.கோபாலகிருஷ்ணன் அகிலத்திரட்டு இந்தியா மிஷன் Mobile : 7200031169


அகிலத்திரட்டு அம்மானை காப்பு

“ஏர்” அணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி

காரணம்போல் செய்ததை கட்டுரைக்கப்பூரணமாய்

ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி

நாராயணர் பாதம் நாவினில்


பாண்டவர் தமக்காய் தோன்றி பகைதனை முடித்த மாயோன்

வீன்றிய கலியன் வந்த விசளத்தால் கயிலையேகி

சான்றவர் தமக்காயிந்தத் தரணியில் வந்த ஞாயம்

ஆண்டவர் அருளிச்செய்ய அம்மானை எழுதலுற்றேன்


சிவமே சிவமே சிவமணியே தெய்வ முதலே சிதம்பரமே

தவமே தவமே தவக்கொழுந்தே தாண்டவ சங்கராதமியேன் எங்களுட

பவமே பவமே பலநாளுஞ் செய்த பவமறுத்துந்தன்

அகமே வைத்தெங்களை ஆட்கொள்வாய் சிவசிவசிவசிவஅரகரா அரகரா


அலையிலே துயில் ஆதிவராகவா ஆண்டாயிரத்தெட்டில் ஓர்பிள்ளை

சிலையிலே பொன்மகர வயிற்றினுள் விஞ்சை பெற்று திருச்சம்பதியதில்

அலையிலே மகரப்பாலை உமிழ்ந்து பின் உற்ற தெச்சணமீதில் இருந்துதான்

உலகில் சோதனைபார்த்தவர் வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே


திருமொழி சீதையாட்கு சிவதலம் புகழ எங்கும்

ஒருபிள்ளை உருவாய்த்தோன்றி உகபரசோதனைகள் பார்த்து

திருமுடி சூடித் தர்மச் சீமையில் செங்கோலேந்தி

ஒருமொழியதற்குள் ஆண்ட உவமையை உரைக்கலுற்றார்.


ஆகமச்சுருக்கம்

சீரான கன்னி செய்குமரி நன்னாட்டில் பாரான தெச்சணமே பரமனுறுதலத்தில் போர்மேனி மாயன் பிறந்து தவம்புரிந்து ஓர்மேனிச் சாதி ஒக்க வரவழைத்து நன்னியாய் நானூறு நாலுபத்தெட்டதிநோய் தண்ணீரால் தீர்த்த தர்மமதானதையும் செய்திருந்த நன்மை தீங்குகலி கண்டிருந்து வயது முகிந்தகலி மாளவந்த வாறுகளும் முன்னாள் குறோணி முச்சூரனுடல் துணித்து பின்னாள் இரணியனைப் பிளந்து இருகூறாக்கி ஈரஞ்சு சென்னி இராட்சதரையுஞ்செயித்து வீரஞ்செய் மூர்க்கர் விடைதவிர்த்தே துவரா தேசாதி தேசர் சென்னி கவிழ்ந்தே பணியும் தீசாதியான துரியோதனன் முதலாய் அவ்வுகத்திலுள்ள அவ்வோரையும் வதைத்து எவ்வுகமும் காணாது ஏகக்குண்டமேகி பொல்லாத நீசன் பொருளறியாமாபாவி கல்லாத கட்டன் கபடக் கலியுகத்தில் வம்பால் அநியாயம் மாதேவர் கொண்டேகி அம்பாரி மக்களுக்கு ஆகயிரக்கமதாய் அறுசிரத்தோன் வாழும் ஆழிக்கரையாண்டி நறுகரத்தோனான நாராயண மூர்த்தி உருவெடுத்து நாமம் உலகமேழுந்தழைக்க திருவெடுத்த கோலம் சிவனாரருள்புரிய பத்துச் சிரசுடைய பாவிதனைச் செயிக்க மற்று நிகரொவ்வா வாய்த்த தசரதற்கு சேயாயுதிக்கச் செடமெடுத்ததுபோலே மாயாதி சூட்சன் மனுவாய்க் கலியுகத்தில் பிறந்து அறமேல் பெரிய தவம்புரிந்து சிறந்த குழலாள் சீதை சிறையதுபோல் இருந்த சொரூபமதும் இமசூட்ச அற்புதமும் மருந்தாகத் தண்ணீர்மண் வைத்தியங்கள் செய்ததும் தர்ம வைத்தியமாய்த் தாரணியிலுள்ளோர்க்கு கர்மமது தீரக் கணக்கெடுத்துப் பார்த்ததுவும் ஏகாபுரிக்கணக்கும் ஏழுயுகக்கணக்கும் மாகாளி மக்கள் வைகுண்டர் பாதமதை கண்டு தொழுததுவும் கைகட்டிச் சேவித்ததுவும் தொண்டராய்ச்சான்றோர் சூழ்ந்து நின்றவாறுகளும் பண்டார வேசம் பத்தினியாள் பெற்றமக்கள் கொண்டாடி நன்றாய்க் குளித்துத் துவைத்ததுவும் சாணாரினத்தில் சாமிவந்தாரென்றவரை வீணாட்டமாக வீறுசெய்த ஞாயமதுவும் மனிதனோ சுவாமி வம்பென்று தானடித்து தனுவறியாப்பாவி தடியிரும்பிலிட்டதுவும் அன்பு பார்த்தெடுத்து ஆளடிமை கொண்டதுவும் வம்பையழித்துயுகம் வைகுண்டந்தானாக்கி எல்லாயிடும்பும் இறையுமிகத்தவிர்த்து சொல்லொன்றால் நாதன் சீமையரசாண்டதுவும் நாலுமூணுயுகக்கணக்கும் நடுத்தீர்த்த ஞாயமதுவும் மேலெதிரியில்லாமல் வினையறுத்து ஆண்டதுவும் இன்னாள் விவரமெல்லாம் எடுத்து வியாகரரும் முன்னாள் மொழிந்த முறைநூற்படியாலே நாரணரும் வந்து நடத்தும் வளமை தன்னை காரணமாயெழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு ஒய்யாரமாக ஊழ்வினைநோய் தீருமென்று அய்யாவும்ஆகமத்தை அருளுகிறாரன்போரே பேயையெரித்துப் புதுமைமிகச் செய்ததுவும் ஆயர் குலத்தை ஆளாக்கிக் கொண்டதுபோல் சான்றோர் குலத்தைத் தற்காத்துக் கொண்டதுவும் நீண்டபுகழ் தர்மம் நிறுத்தியரசாண்டதுவும் பத்தும் பெரிய பாலருக்காகவேண்டி செத்தழியும் பாவி தடியிரும்பிலுமிருந்து படுத்தினபாட்டையெல்லாம் பாலருக்காகப் பொறுத்து உடுத்த துணிகளைந்து ஒருதுகிலைத்தான்வருத்தி தேவஸ்திரீகளையும் சேர்த்தெடுத்துப் பாலருக்காய் பாவக்கலியுகத்தில் பாராத்தியங்கள் பட்டதுவும் நாலு பிறவி நானிலத்திலே பிறந்ததுவும் பாலுகுடித்தாண்டி பருவதத்தின் மேல்தாண்டி நல்லோரையெழுப்பி நாலுவரமுங் கொடுத்து பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்ததுவும் வானம் இடியால் மலைகள் இளகிடவும் கானமது நாடாய் கண்டதுவுஞ் சூரியனும் தெற்கு வடக்காய்த் திசைமாறி நின்றதுவும் ஒக்கவே நாதன் உரைக்கிறாரன்போரே

நாராயணர் அடியெடுத்தருளல் வகுத்த பிரம்மனுக்கும் மாதாபிதாவதுக்கும் தொகுத்த குருவதுக்கும் தோத்திரந் தோத்திரமே தோத்திரமென்று சுவாமிதனைத்தொழுது ராத்திரி தூக்கம் நான் வைத்திருக்கையிலே ஆண்டான ஆண்டு ஆயிரத்துப் பதினாறில் கண்டானைக்கண்டேன் கார்த்திகை மாதமதில் தெய்தியிருபத்தேழில் சிறந்தவெள்ளி நாளையிலே சுருதியுடன் நித்திரையில் சுபக்கியான லக்கனத்தில் நாதனென்னருகில் நலமாக வந்திருந்து சீதமுடனெழுப்பிச் செப்பினார் காரணத்தை காப்பிலொருசீர் கனிவாய் மிகத்திறந்து தாப்பிரிய மாகச் சாற்றினாரெம்பெருமாள் மகனேயிவ்வாய்மொழியை வகுக்குங் காண்டமதுக்கு உகமோரறிய உரைநீ முதற்காப்பாய் அதின்மேல் நடப்பு உன் உள்ளேயகமிருந்து சரிசமனாய் நான்வகுப்பேன் தானெழுது காண்டமதை நானுரைக்க நீயெழுதி நாடுபதினாலறிய யானுரைக்க நீயெழுதி அன்போர்கள் தங்கள்முன்னே வாசிக்கக் கேட்டு மகிழ்ந்திருந்த அன்போர்க்கு பூசித்து நின்ற பூரணங்கள் கிட்டுமடா பழித்தோர் நகைத்தோர் பதிலெதிரியாய்ப் பறைந்தோர் கழித்தோர் வறுமைகண்டு கடுநரகம் புக்கிடுவார் மலடியுமிக்கதையை மாவிருப்பத்தோடிளகி தலமளந்தோனை நாடி தான்கேட்பாளாமாகில் என்னாணை பார்வதியாள் ஏகாபரத்தின் தன்னாணை உன்னாணை மதலை உடனே கிடைக்குமடா குட்டமது கொண்டோர் குணம்வைத்துக் கேட்பாரேல் திட்டமது சொன்னோம் தீருந்திருவாணை அய்யா உரைக்க அன்போர்கள் தங்கள் முன்னே மெய்யாயெழுதி விரிப்பேன்நான் என்பதெல்லாம் ஆனை நடைகண்ட அன்றில் நடையதொக்கும் சேனை சரிவதென்ன சிற்றெறும்பு பத்தியென்ன குயில்கூவக் கண்டு கூகைக் குரலாமோ மயிலாடக் கண்டு வான்கோழியாடுதல்போல் மடந்தை தேனீக்கள் வைத்தரசமறிந்து கடந்தை தாடேற்றும் கதைபோலேயானடியேன் நாலுமூணு யுகமும் நடுத்தீர்க்க வந்தபிரான் மேலோன் திருக்கதையை எழுதுவேனென்றதொக்கும் எம்பிரானான இறையோனருள்புரிய தம்பிரான் சொல்லத் தமியேனெழுதுகிறேன் எழுதுவேனென்றதெல்லாம் ஈசனருள் செயலால் பழுதுமிக வாராமல் பரமேஸ்வரி காக்க தர்மயுகமாக்கித் தாரணியையாளுதற்கு கர்மக்கலியில் கடவுளார் வந்தகதை பொறுமை சான்றோரையும் புண்ணியம் செய்தோரையும் வறுமை அகற்றி வாழ்வித்து வைப்பதற்கு சாகாதிருக்கும் தர்மஅன்புள்ளோர்முன் வாகாகத் தர்ம அம்மானையாய் வகுத்தார் முன்னாள் கயிலையிலே மூவருங்கூடியிருந்து அந்நாள் எழுதிவிட்ட அகிலத்திரட்டு ஆகமத்தை பரமதிருமாலனுப்ப பாராருங்காணாமல் பிராமணன் தடுத்து புதையல் பண்ணிவைத்ததாலே மெய்யான வைகுண்டர்முன் வாசித்துஒப்பமிட அய்யாவும் ஆகமத்தை அருளினார் சீடருக்கே நாடானநாடாம் நாஞ்சில் வளநாடு வாடாத மாகாளி வாழுகின்ற தாமரையூர் தாமரைக்குளத்தூரில் தழைத்தோங்கியே வாழும் ராமகிருஷ்ணநாடன் மகிமையாய் ஈன்றெடுத்த பாலன் அரிகோபாலன் பரந்தாமன் பேரருளால் சீலமுடன் நாதன் சொல்ல திடமாய் எழுதலுற்றேன்

நாராயணர் அவதரித்த தெச்சணத்தின் புதுமை நாராயணரும் நல்ல திருச்செந்தூரில் பாரோர்கள் மெய்க்கப் பள்ளிகொண்டங்கிருந்து ஆண்டாயிரத்து “அ”வென்ற லக்கமதில் நன்றான மாசி நாளான நாளையிலே சான்றோர் வளரும் தாமரையூர் நற்பதியில் மூன்றான சோதி உறைந்திருக்குந்தெச்சணத்தில் வந்திருந்த தெச்சணத்தின் வளமைகேளம்மானை மூவாதி மூவர் உறைந்திருக்குந் தெச்சணமே தேவாதி தேவர் திருக்கூட்டந் தெச்சணமே நாதாந்த வேதம் நாடுகின்ற தெச்சணமே வேதாந்தம் சித்தாந்தம் விளம்புகின்ற தெச்சணமே அகத்தீசுவரரும் அமர்ந்திருக்குந்தெச்சணமே மகத்தான மாமுனிவர் வாழுகின்ற தெச்சணமே தாணுமால் வேதன் தாமதிக்குந்தெச்சணமே ஆணுவஞ்சேர் காளி அமர்ந்திருக்குந்தெச்சணமே தோசமிகு கர்மம் தொலைக்கின்றதெச்சணமே நீச வினைதீர நீராடுந்தெச்சணமே மாது குமரி மகிழ்ந்திருக்குந்தெச்சணமே பாறு படவு பரிந்து நிற்குந்தெச்சணமே ஆனைப்படைகள் அலங்கரிக்குந்தெச்சணமே சேனைப்படைத்தளங்கள் சேருகின்ற தெச்சணமே ஆகமக்கூத்து ஆயன் ஆடுகின்ற தெச்சணமே பார்வதியாள் வந்து பரிந்திருந்த தெச்சணமே சீர்பதியை ஈசன் செய்திருந்த தெச்சணமே மாயனாய்த் தோன்றி வந்திருந்த தெச்சணமே ஆயனார் கூத்து ஆடுகின்ற தெச்சணமே தெச்சணத்தின் புதுமை செப்பத்தொலையாது அச்சமில்லாப் பூமி அடவுகேளம்மானை

கச்சணிதனத்தாளோடு கறைமிடற்றண்ணலீசர் பச்சமால் முனிவர் தேவர் பதுமலர்க் கமல தேவி நிச்சயமான கன்னி நிறைந்திடும் பூமியான தெச்சணாபுதுமைசொல்லி சீமையினியல்புஞ் சொல்வோம்

புன்னை மலர்க்காவில் பொறிவண்டிசைபாட அன்னமதுகுதித்து ஆராடுஞ்சோலைகளும் கன்னல் கதலி கரும்பு பலாச்சுளையும் எந்நேரமும்பெருகி இலங்கி நிற்குஞ்சோலைகளும் எங்கெங்கும் நாதம் இடுகின்ற பேரொலியும் பொங்கு கதிரோன் பூமேற்குடைநிழற்ற நந்தாவனம் பூத்து நகரி மணம் வீச செந்தாமரைபூத்துச் செலம்புமணம்வீச அரகரா வென்று அபயமிடுமொலியும் சிவசிவா வென்று துதிக்கின்ற பேரொலியும் முடியுமடியுமில்லா முதலோனைப்போற்றொலியும் மடியில் பணம்போட்டு மார்க்குத்தும் பேரொலியும் முத்தாலே பாண்டி முதன்மடவாராடொலியும் மத்தாலே மோரு மடமடென்ற பேரொலியும் சமுத்திரத்து முத்து தான்கரையில் சேருவதும் குமுத்திரளாய்ப் பெண்கள் குரவையிடுமொலியும் சங்கீத மேளம் தானோது மாலயமும் மங்கள கீதம் வகுக்கின்ற ஆலயமும் காரண வேதக் கல்விமொழி ஆலயமும் வாரணத்தின் மீதில் வரும்பவனியாரபமும் மாவேறி வீதி வரும்பவனி வீதிகளும் கூரையிலேமுத்து குலைசாய்ந்து நிற்பதுவும் பாதையிலே பார்ப்பார்க்குப் பைம்பொன்னளிப்பாரும் அன்னமிடுஞ் சாலைகளும் ஆலயங்கள் வைப்பாரும் சொர்ணமளித்துச் சொகுசுபெற நிற்பாரும் சிவனே சிவனேயென்று சிவகருத்தாய் நிற்பாரும் தவமே பெரிதெனவே தவநிலைகள் செய்வாரும் கோவிந்தாவென்று குருபூசை செய்வாரும் நாவிந்தையாக நால்வேதம் பார்ப்பாரும் மாரி பொழியும் மாதமொரு மூன்றுதரம் ஏரி பெருகிட ஏரடிப்பார் மள்ளரெல்லாம் நாத்து நடும்புரசி நளினமிகு சொல்லொலியும் கூத்து ஒலியும் குருபூசை தன்னொலியும் எப்பாரெல்லாம் புகழும் ஏகாபதியதுபோல் தப்பிலா தெச்சணத்தின் தன்மையீதம்மானை

காமனை எரித்த ஈசன் கழலிணைமறவா வண்ணம் பூமணக் குழலாள் கன்னி பொருந்திடும் நகரியான சீமையின் குணமுஞ்சொல்லிச் சிறந்திடும் பூமி தன்னில் நேமவர் தர்ம ஞாய நிலைதனை நிகழ்த்துவாரே

ஆதிப் பொருளை அனுதினமுந்தானோதி சோதியுடநீதம் சொல்லுவேனம்மானை தெய்வ மனுநீதம் தேசாதி ராசநீதம் மெய்யருந்தும் நீதம் விளம்புவேனம்மானை ஆயிரத்து எட்டு ஆனதிருப்பதிக்கும் வாயிதமாய்ப் பூசை வகுப்பு முடங்காது கோயில் கிணறு குளங்கரைகளானதையும் தேய்வுவராதே சுற்றுமதில் கட்டிடுவார் எளியோர் வலியோர் என்றெண்ணிப்பாராமல் களிகூர நன்றாய்க் கண்டவழக்கேயுரைப்பார் அன்னமடம்வைத்து ஆகங்களிகூர எந்நேரம் பிச்சை இடுவாரெளியோர்க்கு பந்தலிட்டுத்தண்ணீர் பக்தர்க்களிப்பாரும் எந்த இரவும் இருந்துபிச்சையீவாரும் ஆறிலொருகடமை அசையாமல் தான்வேண்டி தேறியே பரிட்சித்து சீமையரசாண்டிருந்தான் சிவாயநம வென்ற சிவவேத மல்லாது கவாயமாய்ச் சொல்லக் கருத்தறிய மாட்டார்கள் ஆறிலொருகடமை அதுதரவே மாட்டோமென்று மாறொருவர் சொன்னால் மன்னன் மறுத்தே கேளான் பன்னிரண்டாண்டு பரிவாயிறையிறுத்தால் பின்னிரண்டாண்டு பொறுத்திறைதாருமென்பான் இவ்வகையாய் பரிட்சித்து இராச்சியத்தையாண்டிருக்க தெய்வத் திருநிலைமை செப்புவேனம்மானை

இவ்வகையாய் ராச்சியத்தை பரிட்சித்து ராஜனாள கவ்வைகளில்லா வண்ணம் கலியுகம் வாழும் நாளில் செவ்வகைத் திருவேயான திருவுளக் கிருபை கூர்ந்து தெய்வமெய் நீதம் வந்த செய்தியைச் செலுத்துவாரே.

வாரமதில்லாமல் மன்னன் பரிட்சித்து ராஜன் நீதமாய்ப் பூமி நிறுத்தியரசாளுகையில் கண்டு வேதாவும் கமலத் திருமகளும் நன்று தெய்வாரும் நாராயணருமெச்சி அன்றந்த மாமுனிவர் அல்லோருந் தான்கூடி சென்று சிவனார் திருப்பாதந்தெண்டனிட்டு சாகாதிருக்கும் சமூலத்திருப்பொருளே ஏகாபரனே எங்கும் நிறைந்தோனே மூலப் பொருளே முதற்பொருளே காரணரே சாலப் பொருளே தவத்தோரரும்பொருளே நாரணரும் வேதா நாடிப்பொரும்போரில் காரணரே நீரும் கனல் கம்பமானோரே ஆலகால விசமருந்தி அரவை மிகவுரித்துக் கோலத் திருக்கழுத்தில் கோர்வையாயிட்டோனே ஆனைதனையுரித்து அங்கமெல்லாம்புனைந்து மானேந்தியகரனே மழுவேந்திய சிவனே கோனேந்திர கிரியில் குடியிருக்குங்கோவே தானேயிருக்கும் தவமே தவப்பொருளே ஆதியாய் நின்ற அதியத் திருமுதலே சோதியே பரிட்சித்து சொல்நெறியைக்கேளுமையா வாடிவந்த பச்சினுக்கு வாளாலவனுடம்பை தேடிவந்த வேடனுக்குத் துடையரிந்தீந்தவன்காண் ஆறி லொருகடமை அவன்வேண்டிட்டானெனவே மாறியவன்புவியோர் மனதிற்கௌவைகளில்லை கோவில் சிவாலயங்கள் குளங்கூபம் வாவிகளும் சேவித்தனுதினமும் செய்வானே தானதர்மம் ஆதலால் பரிட்சித்து அரசாளுஞ்சீமையிலே நீதங்களைத் தெய்வம் நிலைநிறுத்த வேணுமையா என்று மிகத்தேவர் இறைஞ்சித் தொழுதிடவே அன்றந்த ஈசர் கரியமாலோடுரைப்பார் நல்லதுகாண் மாயவனே நாட்டை மிகக்காக்க வல்லவனே பூமா தேவி தனைவருத்தும் வருணன் தனையழைநீ மாதமும் மாரிபெய்ய கருணைக் குடைவிரிக்க கங்குல்தனையழையும் வாசியது பூவாய் வழங்க வரவழையும் தோசி மறலியையும் சொல்லி விலக்கிடுநீ குருபூசை செய்யும் கூட்டமதிற் சிவமாய் திருவீற்றிருக்கச் செய்திடுநீ கோலமது நித்திராதேவி நித்தமந்தப் பூமியிலே மத்திபமாய்க் காக்க வையென்றாரீசுரரும் நினைத்தோர்க்குறுதி நினைவிலறிவுதோன்ற எனைத்தோத்திரங்கள் இகழாமல் வையுமென்றார் பன்றியோடே கடுவாய் பண்புற்றிருந்திடவும் அன்றிலோடே குயிலும் அன்புற்றிருந்திடவும் கீரியும் பாம்பும் கிளைபோல் குழைந்திடவும் வாரி குளம்போல் வரம்பிலே நின்றிடவும் இட்ட விரைகள் ஈரெட்டுக் கண்டிடவும் பட்டியும் முயலும் பண்புற்றிருந்திடவும் பசுவும் புலியுமொரு பக்கம் நீருண்டிடவும் கசுவுங்கரைபுரளக் கரும்பு முத்தீன்றிடவும் சாத்திர வேதம் சமயம் வழுகாமல் சூத்திரமாகத் துல்யப்படுத்திடவும் மனுவோர் தழைத்து மக்களொரு கோடிபெற்று இனிதாக நாளும் இறவாதிருந்திடவும் சந்திர சூரியர்கள் தட்டுமிக மாறாமல் இந்திரரும் தேவர் இருஷிநிலை மாறாமல் தான தவங்கள் தப்பிமிகப்போகாமல் வானவர்கள் தேவர் வளமாக நின்றிடவும் ஈனமதில்லாமல் இதுதெய்வ நீதமெல்லாம் மானம் நிறுத்தி வையென்றாரீசுரரும்

இப்படித் தெய்வ நீதம் ஈசுரரிதுவே கூற சொற்படி மறவாவண்ணம் திருமருகோனுஞ்செய்தார் அப்படித் தவறா நீதம் அம்புவிதனிலே வாழ மற்பணி குழலார் தங்கள் மனுநெறி வகுக்கக்கேளாய்

கணவன் மொழியக் கலவுமொழி பேசாத துணைவி நிலைமை சொல்லுவேனம்மானை கற்கதவு போலே கற்பு மனக்கதவு தொற்கதவுஞானத் திருவுகோலவள்மனது அன்பாகப் பெற்ற அன்னை பிதாவதுக்கும் முன்பான சோதி முறைபோலுறவாடி போற்றியே நித்தம் பூசித்தவள் மனதில் சாற்றிய சொல்லைத் தவறாமலே மொழிவாள் அரசன் துயில ஆராட்டி ஓராட்டி கரமானதுதடவிக்கால் தடவி நின்றிடுவாள் துயின்ற தறிந்து துஞ்சுவாள் மங்கையரும் மயன்ற ஒருசாமம் மங்கையெழுந்திருந்து முகத்து நீரிட்டு நான்முகத்தோனை தொழுது அகத்துத்தெருமுற்றம் அலங்காரமாய்ப்பெருக்கி பகுத்துவமாகப் பாரிப்பார் பெண்ணார்கள் தவத்துக்கரிய தையல்நல்லார் தங்களுட மனுநீதஞ்சொல்லி வகுக்க முடியாது கனியான பெண்கள் கற்புநிலை மாறாமல் இனிதாக நாளும் இருக்குமந்த நாளையிலே வனியான சாதி வளமை கேளம்மானை சான்றோர் முதல் நீசக்கலியன் வரையும் உண்டான சாதி ஒக்கவொரு இனம்போல் தங்கள் தங்கள் நிலைமை தப்பிமிகப்போகாமல் திங்கள் மும்மாரி சிறந்தோங்கியே வாழ்ந்தார் செல்வம் பெருக சிவநிலைமை மாறாமல் அலுவல் தினஞ்செய்து அன்புற்றிருந்தனராம் தான்பெரிதென்று தப்புமிகச்செய்யாமல் வான்பெரிதென்று மகிழ்ந்திருந்தாரம்மானை ஒருவர்க்கொருவர் ஊழியங்கள் செய்யாமல் கருதல் சிவன்பேரில் கருத்தாயிருந்தனராம் செய்யும் வழக்குச் சிவன்பேரிலல்லாது வையம் வழக்கு வாராதேயிருந்தார் அடிபணிய வென்று அலைச்சல் மிகச்செய்யாமல் குடிபொருந்தி வாழ்ந்து குடியிருந்தாரம்மானை சேயினுட ஆட்டுச் செவிகேட்டிருப்பதல்லால் பேயினுட ஆட்டோர் பூதரறியாதிருந்தார் இந்தப் படிமனுவோர் எல்லாமிருந்துவொரு விந்துக் கொடிபோல் வீற்றிருந்தாரம்மானை

இப்படித் தெய்வ இராச்சிய நீதமும் மற்படித் தேச மனுவுட நீதமும் நற்புடன் தேசம் நாடி வாழ்வதைக் கற்புடனீசர் கண்டு மகிழ்ந்தனர்

முத்தான சீமை மூன்று நீதத்தோடு பத்தாசையாகப் பண்பாய்த்தழைத்திடவே நாலான வேதம் நல்ல கலியுகமாய் மேலாம்பரமாய் விளங்கியிருந்திடவே தேவருறையும் திருக்கயிலை தன்வளமை பாவலர்கள் முன்னே பாடினாரம்மானை ஆயிரத்தெட்டு மண்டபம் அமைந்த கையிலையிலே மாசில்லா ஈசர் மகிழ்ந்து இருக்கையிலே ஈசருறையும் இரத்தின கிரிதனிலே வாசவனுந் தேவர் மறையோரும் வீற்றிருக்க பொன்னம்பல நாதர் பொருந்திருக்கும் மண்டபமும் கின்னரர்கள் வேதம் கிளர்த்துகின்ற மண்டபமும் வேதப்புரோகி விளங்குகின்றமண்டபமும் சீத உமையாள் சிறந்திலங்கும் மண்டபமும் நீதத் திருமால் நிறைந்திலங்கும் மண்டபமும் சீதை மகிழ்ந்து சிறந்திருக்கும் மண்டபமும் ஆதவனுஞ் சந்திரனும் அவதரிக்கும் மண்டபமும் வேதாவும் ருத்திரனும் வீற்றிருக்கும் மண்டபமும் ஆருமறிந்து அளவிடக் கூடாத பாருபடைத்த பரமேசுரனாரை விசுவாச மேலோர் விமலனடிவணங்க வசுவாசு தேவன் வந்து மிகவணங்க மறைவேத சாஸ்திரங்கள் மலரோனடிவணங்க இறவாத தேவர் இறைஞ்சி மிகவணங்க எமதர்ம ராசன் எப்போதும் வந்துநிற்க பூமகளும் வேதப் புரோகி வந்து தெண்டனிட காமதேவன் முதலாய்க் கணக்கர் மிகுமுனிவர் நாமநெடியோன்பதத்தை நாள்தோறும் போற்றிநிற்க தலைவனிருக்கும் தங்கத்திருக்கயிலை நிலைமை யெடுத்துரைக்க நிலையாது அம்மானை

ஆறுசெஞ்சடை சூடிய அய்யனார் அமர்ந்து வாழுங்கயிலை வளமதை கூறக்கூறக்குறைவில்லை காணுமே கொன்றைசூடும் அண்டர் திருப்பதம் வாறுவாறு வகுக்க முடிந்திடா மகிழுங்குண்டவளஞ் சொல்லியப்புறம் வீறுஆகமம் விளம்பவே கேளுங்கோ மெய்யுள்ளோராகிய வேத அன்பரே மஹாலட்சுமியின் ஐயம் கயிலை வளமை கட்டுரைக்கக் கூடாது அகில வளமை அருளக்கேளம்மானை தேவாதி தேவர் திருக்கூட்டமாயிருக்க மூவாதி மூவர் மிக்கவொருமிக்கவொரு சிங்காசனத்தில் சிறந்திருக்கும் வேளையிலே மங்காத தேவி மாதுதிரு லட்சுமியாள் ஈரேழுலகும் இரட்சித்தவுத்தமியாள் பாரேழும் படைத்த பரமதிருலட்சுமியாள் நன்றாயெழுந்திருந்து நாராயணர்பதத்தைத் தெண்டனிட்டு லட்சுமியும் செப்புவாளம்மானை தேவரீரென்னைத் திருக்கலியாணமுகித்து கோவரி குண்டக் குடியிருப்பிலேயிருத்திப் போவது என்ன புதுமை எனக்கறிய தேவரீர் நீர்தான் செப்பிடீர் என்றுரைத்தாள் பின்னுமந்த லட்சுமியாள் பெருமாள்தனைத் தொழுது என்றும் இருக்க இறவாதிருப்போனே ஆதியால் சூட்சம் அளவெடுக்கக் கூடாத நாதியாய் நின்ற நாராயணப்பொருளே தேவாதிக்கெல்லாம் திருமுதலாய் நின்றோனே மூவாதிக்கெல்லாம் முதன்மையாய் நின்றோனே உமக்கும் எதிரி உலகமதிலுண்டோகாண் தமக்கு எதிரிவந்த தன்மை மிகவுரையும் உகத்துக்குகம் பிறந்து உலகிடத்திலேயிருக்க அகத்துவந்த ஞாயம் அருளுவீரெம்பெருமாள் என்று திருவும் இதுவுரைக்க மாயவரும் நன்று நன்றென்று நாராயணருரைப்பார்


ஆதியில் சிவனுதித்தவாறும் ஆதிமால் பிறந்தவாறும் நீதியாய் வானோர் தேவர் நீடூழி வாழ்ந்தவாறும் ஓதினாருகங்கள்வாறும் ஒவ்வொரு அசுரன்வாறும் வாதியாந்தேவர் மனிதராகி வைந்தராளுவதும் சாற்றினார்

ஆதியில் ஏகம் ஒரு பரமாயிருந்தது. பரத்திலிருந்து “இம்”மென்று ஒரு வாயு வந்தது. அந்த வாயு சத்தாய் விளைந்தது. அந்த சத்தில் சிவம் தோன்றியது. சிவத்தில் இருந்து மீண்டும் சக்தி தோன்றினாள். சிவத்தோடு சக்தி இணைந்து தவசு பண்ண விஷ்ணு தோன்றினார். விஷ்ணுவின் தவத்தில் லட்சுமி தோன்றினாள். விஷ்ணுவோடு கூடி லட்சுமி தவசு பண்ண பிரம்மா தோன்றினார். பிரம்மனின் தவசில் சரசுவதி தோன்றினாள். சிவசக்தி, விஷ்ணு லட்சுமி, பிரம்ம சரஸ்வதி கூடி ஆதித்தன், வாயுக்கள், அண்டம், பிண்டம், தேவர்கள், அசுரர்கள், ரிஷிகள், முனிவர்கள், அனைத்து உயிர்களையும் படைத்தார்கள்.

நீடியயுகம் - குறோணி சக்தி சிவமும் தானுதித்த காலமதில் எத்திசையும் நாமள் இருபேர் பிறப்பதிலும் ருத்திரர் மயேசுரர் உதித்த நாளதிலும் பத்தியுள்ள தேவர் பரநாதர் நாளதிலும் வானோர்கள் தெய்வார் மறைவேத சாஸ்திரமும் ஈனமாய்ச் சண்டன் இவன்பிறந்த நாளதிலும் ஆதித்தன் வாயு அண்டபிண்டம் தோன்றியபின் ஈதுதித்த காலம் இராச்சியமொன்றுண்டு கண்டாய் அவ்வுகத்தைக் கண்டு ஆதிபிரம்மா மகிழ்ந்து இவ்வுகத்துக்கு நாமம் என்னவிடுவோமென்று மாலும் பிரம்மாவும் மாயாதிருப்போனும் ஆலோசித்தவர்கள் ஆகமத்தைத்தான்பார்த்து நீடிய யுகமெனவே நியமித்துறுதி கொண்டு தேடிய முப்பொருளும் செப்பினர் காணம்மானை தேவரெல்லாம் கூடி திருக்கயிலையிருக்கையிலே மூவராதி சிவன் அமிர்தம் கடைந்து வைத்தார் அமிர்தமதுதான் அகிலமெல்லாம் வீசினதே குமிர்தமுடனமிர்தம் தேவநாசிவழி போனதே தேகமதிலமிர்தம் சேர்ந்தவுடன் தேவரெல்லாம் சாகவயதில்லையென்று சந்தோசம் கொண்டாடி தேவரெல்லாங்கூடி தாணுமாலயனைப்போற்றி எதிரியுண்டோயெங்களுக்கு ஈசனே சொல்லுமென்றார் திருக்கயிலை ஈசன் சகலதேவரையுங்கூட்டி திருமாலயனைக்கலந்து சங்கமதை வருத்தி தில்லையாடுமீசர் திருவேள்வி தான்வளர்த்தார் நல்லையா வேள்வி நன்றாய் வளர்ந்திடவே வேள்வியில் இறங்கி ஈசன் வேதகாண்டம் படித்தார் கேள்விகேளாத்தேவரெல்லாம் கெருவிதமாயிருந்தார் அப்போது நாதன் ஆதியுரையனைத்தும் நற்பொத்த கயிலை சுவரிலே எழுதிவைத்தார் வன்னியைவிட்டு சிவன் வையகத்தில் இறங்கினாரே உன்னிக்குறோணி உடன் பிறந்தான் வேள்வியிலே அப்போது தேவரெல்லாம் அவன்முகத்தைத்தாம் பார்த்து முப்பொருளோன் வேள்வியிலே உதித்து பிறந்தோனின் கரங்குறியைப்பார்த்து கவனித்துச் சொல்லலுற்றார் அறந்தானறியான் அநியாயக்கேடனிவன் அண்டர் கயிலை விழுங்கி ஆயனால் சாவான்காண் கண்டதோசம் கடற ஏழ்பிறவி பிறக்க வரும் என்று சொல்லி தேவரெல்லாம் இயல்பாய் மனதுழைந்து வந்தார் கயிலை வாழ்ந்திருந்த மண்டபத்தில் பிறந்தான் குறோணி பெரிய மலைபோலே அறந்தானறியா அநியாயக் கேடனுமாய் பிண்டம் நிறையும் பெரும்பாவி தன்னுடம்பு அண்டமலைய அவன்பிறந்தானம்மானை முகங்கண்களெல்லாம் முதுகுப்புறமேலாட நகக்கரங்கள் கோடி கால்களொருகோடி தவங்களறியாச் சண்டித் தடிமோடன் பவமே நாள்தோறும் பண்ணுமியல்புடையோன் குறோணியவனுயரம் கோடிநாலு முழமாய் கயிலை கிடுகிடெங்கும் கால்மாறி வைக்கையிலே அகிலங்கிடுகிடெங்கும் அவனெழுந்தால் அம்மானை இப்படியே குறோணி இவன் தூங்கித் தான்விழித்து அப்படியே பசியால் அவனெழுந்து பார்ப்பளவில் பாருகங் காணான் பலபேருடல் காணான் வாருதி நீரை வாரி விழுங்கினன்காண் கடல்நீர் அவ்வளவும் கடைவயிறும் நிரம்பாமல் குடலெல்லாம் மெத்தக் கொதிக்கு தென்றுசொல்லி அவனியில் திரிந்தான் அங்கொன்றும் காணாமல் தேவர் பூங்காவு வந்தான் தேவர்களை கண்டு கொண்டான் இரையாச்சு நமக்கென்று ஏற்ற குறோணி அவன் தரையில் புரண்டுருண்டு தானேகும் வேளையிலே தேவர் அதையறிந்து திடுக்கிட்டு மெய் தளர்ந்து மூவரோடு கையிலை உவந்திருந்தார் ஆயிழையே வழிநடந்து குறோணி வனங்காவு தானழித்து தெளிந்த புகழ் தேவர்களை தேடியே போனானே கையிலைதனை கண்டு கண்கொள்ளா காட்சி என்று அகில தேவாதிகளும் அங்கே இருக்கக்கண்டு பசியால் வருந்தி பல நாள் திரிந்தலைந்தும் புசிப்பொன்றும் இல்லாமல் பொல்லாக் குறோணியவன் அலறியே சத்தமிட்டான் அங்கொருவர் காணாமல் மலையோரம் வந்தான் மாயசிவஒளி கண்டான் கண்டந்த குறோணி கனத்த சந்தோசம் கொண்டு அன்று விழுங்க அவன் நினைக்கும் வேளையிலே பூதக்குருமுனிவன் புத்தி சொன்னான் கேளாமல் ஆதரவாய் கையிலைதனை அவனும் மிகப்பிடித்து ஆவியே வாய்க்குள் அவன் தள்ளும் அப்போது தாவியே குதித்து தப்பினேன் நானொருவன் மாறி பிடிக்க வந்தான் மண்ணுலோகம் புகுந்தேன் தேறி சிவன் பேரில் சிலகாலம் தவமிருந்தேன் தவசிருந்த காரணத்தை சங்கரனார் தானறிந்து தவம் கண்டு ஈசுரனார் சன்னாசி போலே வந்து ஆரு நீ யிந்த ஆழ வனந்தனிலே ஏது நீ தவசு எனைநினைந்த வாறேது என்று சன்னாசி இதுவுரைக்க மாயவரும் பண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தார் அவரோடே கயிலையெமலோகம் கறைக்கண்டர் சக்திவரை அகிலமதைக் குறோணி அசுரனென்ற மாபாவி விழுங்கினான் நானும் உபாயமாய்த் தப்பிவந்தேன் பளிங்கு மலைநாதன் பாரத்தேவாதிமுதல் பண்டுபோல் நாளும் பதியிலிருந்திடவே என்றுங்கயிலை இலங்கி இருந்திடவும் முண்டு செய்தபாவி முகமுமவனுடம்பும் துண்டாறாக வெட்டித் தொல்புவியிலிட்டிடவும் கண்டங் கண்ட மாய்ப்போட கடிய வரமெனக்கு தண்டமிழீர் நீரும் தரவே தவசிருந்தேன் என்று திருமால் எடுத்துரைக்கவே யீசர் மன்று தனையளந்த மாலோடுரைக்கலுற்றார் கேளாய்நீ விட்டிணுவே கேடன் குறோணிதனை தூளாக்கி யாறு துண்டங்களாக்கி விட்டெறிந்தாலவனுதிரம் மேலுமொருயுகத்தில் கெட்டுக் கிளையாய்க் கொடிய சூரக்குலமாய் துண்டமொன்றுதானும் தொல்புவியிலே கடிய குண்டோமசாலியனாய் குவலயத்திலே பிறப்பான் அப்படியே குறோணி அவனுதிரமானதுவும் இப்படியே ஆறு யுகத்துக்கவனுடம்பு வந்து பிறப்பான் காண் உந்தனுக்கு மாற்றானாய் அங்கு பிறந்தால் அசுரர்களை கொல்வாயா என்று சிவன் கேட்டிடவே இயல்பாக நாதன்மகிழ்ந்து நன்று நன்று ஈசுரரே நம்மோடு நீரிருந்தால் கொன்று நான்வருவேன் குறோணியவன் குலத்தை என்று உரைத்தனரே ஈசருடன் அம்மானை அன்று சிவன்தானும் அதற்கேது சொல்லலுற்றார் அந்தக்குறோணி அவன் வழிகள் அத்தனையும் தன்னால் அறிவழிந்து சத்தியத்தைதான் மறந்து உன்னோடெதிர்த்து யுத்தமிட வருகையிலே புத்தி சொல்வீர் நீரும் புண்ணிய மாயவரே புத்திதனை கேளாவிடில் ஆதியில் நாம் சொன்னபடி மாற்றானைக் கொன்று வம்பையழித்து விடும் ஆக்கமுடன் யாம்வருவோம் உற்ற துணையாய் அங்கே உகத்துக் குகமே உத்தமனாய் நீபிறந்து அகத்துக்கவன்பிறப்பு ஆறு யுகமதிலும் உண்டுமவன் சீவன் உயிரழிவு வந்தஅந்நாள் பண்டு நடுக்கேட்டுப் பாவியவனுயிரை கொன்றுபோட்டு நரகக் குழிதூர்க்க நாள்வருங்காண் என்று விடைகொடுத்தார் ஈசுரர் காணம்மானை அன்று விடைவேண்டி ஆதித்திருமாலும் குன்றுபோல் வந்த கொடிய படுபாவி குறோணிதனைச்செயிக்க கோபம் கொண்டெழுந்து சுறோணிதவேதன் துடியாய் நடந்தனராம் நாகத்தணை கிடந்த நாராயணமூர்த்தி வேகத்தால் குறோணிதனை வெட்டிப் பிளக்கலுற்றார் வெட்டினாராறு மிகுதுண்டமம்மானை கெட்டிதானென்று கிருபைகூர்ந்தே தேவர் துண்டங்கள் ஆறும் தொல்புவியிலே போட்டு பிண்டமதைச் சுமந்து போட்டனர் காணம்மானை

சதுரயுகம்- குண்டோமசாலி தேவர்கள் எல்லோரும் கூடி பெரியோனின் ஆதி ஆகமநூலைப் பார்த்து சதுரயுகத்திற்கு முதல் துண்டு, நெடிய யுகத்திற்கு 2 வது துண்டு, கிரேதாயுகத்திற்கு 3 வது துண்டு, திரேதாயுகத்திற்கு 4 வது துண்டு, துவாபரயுகத்திற்கு 5 வது துண்டு, கலியுகத்திற்கு 6 வது துண்டு என்று எழுதி வைத்தார்கள்.

அந்தக்குறோணி அவனுதிரமானதையும் கொந்து கொந்தாகக் குளம்போலே குண்டுவெட்டி உதிரமதை விட்டு உயர்ந்த பீடம் போட்டு சதுர யுகமெனவே தான்வகுத்தாரோர் பீடத்தை அவ்வுகத்திலே உதிரம் அசுரக்குலமாகி முவ்வுகத்துப் பாவி முடிந்தவொரு துண்டமதை குண்டோமசாலி எனவே கொடியவனாய் பண்டோர் குறோணி பாதகனாறு துண்டமதில் வந்து பிறந்தான் சதுர வையகத்திலம்மானை முந்து பிறந்த முழுமோசமானதிலும் மந்து முகமாய் மாபாவி தன்னுயரம் நானூறாயிரமுழங்கள் நாடுமவன் கரங்கள் முந்நூறு கால்கை வேழ்கள் துதிபோலே உடைதோளுடம்பு உருவறியா மாபாவி படைத்தோன்தனையறியான் பாரியென்று மறியான் அட்டைபோலேசுருண்டு அம்மிபோலேகிடப்பான் மட்டைபோலேதிரிவான் வயிறு மிகப்பசித்தால் அன்னுகத்திலுள்ள அசுரக் குலங்களையும் தன்வயிற்றுக் கிட்டுத் தடிபோலுருண்டிடுவான் இப்படியே நாளும் இவன் குலங்களானதெல்லாம் அப்படியே தின்று அவன்பசிகளாற்றாமல் அய்யையோவென்று அலறினன் காணம்மானை மெய்யையனான விறுமா அதுகேட்டு சிவனைத் தொழுது செப்புவாரம்மானை தவமே தவப்பொருளே தாண்டவ சங்காரவனே எவனோ ஒருத்தன் இட்டசத்தமானதிலே தவலோகமெல்லாம் தானலைவதேதெனவே மாயனதுகேட்க வகுப்பாரங்கீசுரரும் ஆயனே நீரும் அறியலையோ ஞாயமது குண்டோமசாலி கொடிய மாபாவியனாய் பண்டோர் குறோணி பாதகன்தன் துண்டமதாய் பிறந்தானவனும் பேருதிரந் தன்கிளையாய் இறந்தாரவர்கள் இரையாயவன் தனக்கு ஆன பசிகள் ஆற்றாமலேயவனும் வானமது அலைய வாய்விட்டான் கண்டாயே என்று சிவனார் ஈதுரைக்க மாயவரும் அன்று மகாமாலும் குண்டோமசாலினுக்கு இரையாகத் தேவர்களை ஏற்ற நாங்கிலாக்கி வரையானதைத் தூண்டில் மறையைக் கயிறாக்கி வாயுவைத் தோணி வருணன்தனை மிதப்பாய் தேயமதைச்சூழத் திரைகடலைத் தான்வருத்தி ஓடையாய்ச் சதுர யுகம்வழியே தானேவி தேடரிய மாயன் திருவோணி தானேறி மூவாதி மூவர் ஓணிதனைத் தள்ளிவர காவாலி மாயன் கன்னியிலே தூண்டிலிட்டார் சதுர யுகமாளும் சண்டித் தடிமோடன் எதிரே வருமாற்றில் இரையைமிகக் கண்டாவி நாடிப் பசிதீர நல்ல இரையாகுமென்று ஓடிவந்து பாவி விழுங்கினான் தூண்டில்தனை தூண்டில் விழுங்க சுரண்டிமிகக்கொளுவி மாண்டனன் காண்பாவி வலிய மலைபோலே பாவி மடிந்திட பரமேசுரனாரும் தாவிச்சலத்தால் சதுரயுகமழித்தார் சதுர யுகமழிய தானவர்களெல்லோரும் மதுர மொழியீசன் மலரடியைத்தான்பூண்டு தேவர் மறையோர் தெய்வேந்திரன் முதலாய் மூவர்களும் வந்து முதலோனடிபணிந்து பரமனே நீரும் படைத்தயுகம் இரண்டதிலும் வரமேதுங்கேட்டு வாழ்ந்தவரைக்கண்டிலமே அந்த சந்தமில்லை ஆணுவங்கள் தானுமில்லை இந்த வகைச்சாதி இல்லாமலீசுரரே பிறந்தாலவனும் பெரியோனடிவணங்கி வரந்தாருமென்று வாளாயுதத்தோடே வலுவும் பலமும் வாய்த்த சூரப்படையும் கொலுவும் பெரிய குவிந்தமதில் கோட்டைகளும் கெட்டுக்கிளைபாணி கிரணமதுவுடனே நட்டுப்பயிரால் நாளும் பசிதீர்ந்து இருந்து பொறுக்க இராச்சியமுண்டாக்குமென வருந்தி மகாதேவர் மலரோனடிவணங்கினர்

நெடியயுகம்- தில்லை மலாலன், மல்லோசிவாகனன் ஆதி சிவனும் அதிக சந்தோசமதாய் வேதியரைத்தான்வருத்தி விளம்புவாரீசுரரும் மாலும் பிரம்மாவும் வாய்த்த பரமேசுரரும் நாலு மறையோரும் நடுவர்மிகக் கூடி முன்னேயுள்ள துண்டம் ஒன்றைரண்டாக்கி வைத்து பின்னே படைப்புப் பிரம்மாவுருப்படைக்க சிவாயப் பொருள்தான் சீவ நிலைகொடுக்க உபாயப் பொருள்தான் உல்லாசமேகொடுக்க முண்டமிருபேரும் உருவாயுருவெடுத்து தெண்டமது கொண்டார் சிவனை மிகப்போற்றி அப்போது மாயன் ஆதியடிவணங்கி இப்போது ஈசுரரே இவர்களிருபேர்க்கும் என்னபேர் தானும் இடுவோமெனவுரைக்க வன்னப்பரம ஈஸ்வரனார் வகுக்கலுற்றார் திறந்தான் பெருகும் திருமாலே நீர்கேளும் பிறந்த அசுரருக்குப் பேரிடும் முன்னாலே மாயனே நானுமொரு உபாயம் வகுப்பேன்காண் ஆயனே நீரும் அதுகேட்க வேணுமென்றார் அண்டபிண்டங் காணாத ஆதிகயிலாசமதில் தெண்டனிட்டு நிஷ்டை செய்கிறான் சுருதிமுனி இந்த முனியடுக்கல் இவர்கள் ரண்டு பேரைவிட்டு அந்த முனிதவத்தை அழிக்கவே சொல்லிடுவோம் என்று சிவமுரைக்க எல்லோருஞ் சம்மதித்து அன்று பிறந்த அசுரர்களைத் தானேவ போறாரே சூரர் பொருப்பொரு நூறானதுபோல் வாறாரே சூரர் வாய்களிருகாதவழி சூரருட கைகள் தொண்ணூற்றீரஞ்சதுவும் மூரர்கால் நூறு உயர்ந்த சிரசன்பதுவும் கண்களொருநூறு வெண்டரளமிருகலமே துங்கணங்களாகச் சூரரடந்தேறி கண்கவிழ்ந்து யோகம் கருத்துருத்தாய் நிற்கின்ற வண்கவிழ்ந்த மாமுனியை வாரியெடுத்தவர்கள் அலைமேலெறிய ஆர்ப்பரிக்குமவ்வளவில் கலைமேல் பரந்த கடிய முனிபகர்வான் ஏனடா என்னை இருந்த தவசழித்து வீணடா செய்தாய் விழலாயறமோடா என்னையெடுத்து இக்கடல்மேல் போட்டாலும் உன்னையறுக்க ஓரம்பாயுருவெடுத்து பங்கயக்கண்மாயன் பக்கமதில் நான்சேர்ந்து உங்களிருபேரை ஊடுருவ நானறுத்து இந்தக் கடலில் எடுத்துங்களையெறிந்து உந்தனினூரை ஒக்கக்கரிக்காடாக்கி நானும் வைகுண்டம் நற்பேறு பெற்றிருப்பேன் வானுதிருவாணையென்று மாமுனியுஞ்சாபமிட்டான் உடனே முனியை உயர்த்தியெடுத்தே சூரர் கடல்மேலெறிந்தார் கர்மவிதிப்படியால் அந்த சுருதிமுனி அரனாரருளாலே மந்திரபுரக்கணையாய் வாரியலைக்குள்ளிருந்தான் சுருதி முனிதனையும் தோயமதில் விட்டெறிந்து குருதி குடிசூரர் ஓடியே கயிலை வந்தார் மோசமுடன்வந்த முழுநீசப்பாவியர்கள் ஈசனைத்தொழுது இறைஞ்சி நின்றாரம்மானை

சுருதி முனியுடநிஷ்டை தொலைத்தவர் கருதிய சூரர் கயிலை மேவியே பருதி சூடும் பரமனைப்போற்றியே வருதி கேட்டு வருந்தினர் சூரரே

சுருதி முனிதவத்தைத் தொலைத்தே யவன்தனையும் பொருதி கடல்மீதில் போட்டெறிந்து வந்தவர்கள் ஈசன் தனைத்தொழுது இறைஞ்சி வரங்கேட்டனராம் வாசமுள்ள ஈசன் மாதுமையைத் தானோக்கி தூயவளே மாயவளே சூரரிருவருக்கும் நேயமுள்ளதோர்வரங்கள் நீகொடுக்க வேணுமென்றார் வரங்கொடுக்க வென்று மறையோனதிசயித்து சிரசன்பதுடைய சீர்சூரனை நோக்கி ஏதுவர முங்களுக்கு இப்போது வேணுமென்றார் தீது குடிகொண்ட சிரசன்பதோனுரைப்பான் மாதவரே தேவர்களே மறையவரே மூவர்களே ஆதவரே யெங்களுக்கு அதிகவரம் வேணுமென்றான் அம்புவியிலுள்ள அஸ்திரங்கள் வாளாலும் தம்பிரானானாலும் தாண்டமுடியாதவரம் வானமிது பூமி மலைகளிது மூன்றிலுள்ள தானவராய் வாழுகின்ற தங்களாலெங்களையும் கொல்லத் தொலையாத கொடிய வரமதுவும் மல்லுக்குபாயமதும் வலுவும் பலமதுவும் ஏவலாய் வானோர் எமைத்தொழுது நின்றிடவும் தவறாமலிந்தவரம் தரவேணுமென்றுரைத்தான் உடனே சிவனாரும் உற்ற அசுரருக்கு அடமாயவன் கேட்ட அவ்வரங்கள் தாங்கொடுத்து நீசரிருக்க நெடிய யுகம்வகுத்து பாசனுக்குப் பேரும் பகர்ந்தே விடைகொடுத்தார் அப்போது பிரம்மா அசுரர் சேர்க்கைக்காக முப்போது உரைத்தபடி உதிரமது அத்தனையும் சேத்திர படையாய் சூத்திரமாய் படைத்து விட்டார் சூத்திர படையும் சூரர் இருவருமாய் விடைவேண்டிப்பாவி விமலன் தனைத்தொழுது மடைப்பாவியான மல்லோசி வாகனனும் தில்லைமல்லாலனுமாய் சேர்ந்தங்கிருபேரும் வல்ல சிவன் வகுத்த வையகத்தில் வந்தனராம் வந்தார் சிவன்வகுத்த வையகத்திலம்மானை அந்த அசுரர் அவரிருக்குமந்நாளில் உதிர மதுசூரர் ஒக்க உதித்தெழுந்து செதிர்சூரப் படையாய் சேர்த்தங்கிருந்தனராம் இப்படியே சூரர் இவர்சேர்க்கை தன்னுடனே அப்படியே அந்தயுகம் ஆண்டிருந்தாரம்மானை ஆண்டிருந்த சூரர் அவரிருக்க மேடைகளும் தாண்டிநின்ற வானத் தடாக உயரமதே சூரப் படைகள் தொழுது அடிபணிந்து பாதகருக்கு நித்தம் பணிந்தேவல் செய்திடுவார் ஊழியங்கள் செய்து உற்றயிறையிறுத்து பாளையங்களாகப் பணிந்திருந்தாரம்மானை சூரர் கொடுமுடியைச் சூட்டியரசாண்டு பாரமுள்ள கோட்டைப் பண்ணினாரம்மானை இப்படியே சூரர் இவர்வாழுமந்நாளில் முப்படியே சூரர் ஊழி விதிப்படியால் இறப்பதறியாமல் எரியைமிகக் கண்டாவி உறப்பொசிக்கச்சென்ற விட்டிலிறந்தாற்போல் தம்பி தமையன் சந்ததிகள் மந்திரிமார் மும்பிலுள்ள சூரர் முடுக்கமதைக்கண்டாவி நம்பிபதம் மறந்து நாம்தாம் பெரிதெனவே கெம்பினார் சூரர் கெட்டனர்காணம்மானை சூரரவர்செய்த துட்டம் பொறுக்காமல் வீரமுள்ளதேவர் விரைந்தே முறையமிட தேவர் முறையம் சிவனார் மிகக்கேட்டு காவலாய் நித்தம் கைக்குள்ளிருக்குகின்ற பெண்ணமுதைப் பார்த்துப் புகல்வாரங்கீசுரரும் கண்ணே மணியே கருத்தினுள்ளானவளே பூலோகந்தன்னிலுள்ள புருடராயுதத்தாலும் மேலோகம் வாழும் விமலராயுதத்தாலும் மலைமேலே வாழும் மாமுனிவர் தம்மாலும் அலையா வரங்கள் அச்சூரர்க்கே கொடுத்தோம் தரியா முடுக்கம் தான்பொறுக்காத் தேவரெல்லாம் அரியே என முறையம் அநேகம் பொறுக்கரிதே என்றீசர் சொல்ல இயல்கன்னியேதுரைப்பாள் நன்று நன்று ஈசுரரே நானுரைக்கக் கேட்டருளும் மலைலோகம் மேலோகம் வையமதிலாகாட்டால் அலைமேல் துயிலுமொரு ஆண்டியுண்டு கண்டீரே முன்னேயச் சூரருக்கு முற்சாபமிட்டதொரு வன்னச் சுருதிமுனி மந்திரபுரக்கணையாய் வளர்ந்தங் கிருப்பான் மாயருட பக்கத்திலே கிளர்ந்த மொழிகேட்டுக் கிருபைகூர்ந்தே யீசர் மாலை வரவழைத்து வளப்பமெல்லாமுரைக்க சாலப் பொருளும் சம்மதித்தாங்காரமுடன் வேலை செய்தே அபயமிட்ட வீரத்தேவாதிகளை சாலப் படையாய் சமயம் மிகக் கூட்டி அலையில் வளர்ந்தகணை அன்று மிக எடுத்து மலைபோல் புத்தி மாயனும் சொன்னாரே உலகமாள தேவர் ஊழியங்கள் மாற்றிவிடு கலகம் விளையாதே கருத்தாய் ஆட்சி செய்வாய் என்றுரைக்க மாயனோடு எதிர்த்தானே அசுரனும்தான் அன்று சிலை வளைத்து அம்பு மிக தொடுத்தார் அம்புப்பகையாலும் ஆதிமால் பகையாலும் பம்பழிந்து சூரன் பருங்காலழிந்து வீழ்ந்தான் வீரமுள்ள நாதன் வீணனுட முன்பில் வந்து சூரர் இருவருக்கும் சொல்லி நடுக்கேட்டார் அன்றந்த சூரர் அறிவழிந்து சொன்னது கேள் என்னை நீ கொன்னேன் என்று இளப்பமது சொல்லாதே அலையில் வளர்ந்த அருதிக்கணை எடுத்து காலை முறித்தாய் கடும் திறமை பேசாதே அம்புப்பகையாலும் அதிகமால் பகையாலும் பம்பழித்துச்சூரனூர் பற்பம்போல் தானாக்கி சூரரிருவருட சிரசை மிகஅறுத்து வாரிதனில் விட்டெறிந்து வாளி சுனையாடி மலரோனடிபணிந்து வைகுண்டங்கேட்டிடவே பலமான குண்டப் பதவி மிகக்கொடுத்தார்

கிரேதாயுகம்-சூரபத்மன், சிங்கமுகாசுரன், இரணியன் அவ்வூரை ஆயனுக்கு அன்று பட்டம் சூட்டினபின் செவ்வு மகா விஷ்ணு சேர்ந்தார் கையிலை மலை அவ்வுகத்தை மாயன் அன்றழித்து ஈசரிடம் செவ்வாக நின்று செப்பினாரீசருடன் இன்னமொருயுகத்தை இப்போ படைக்கவென்று மன்னதியத்திருமால் மனமே மிகமகிழ்ந்து சொன்னவுடனீசுரரும் தொன்னூல் மறைதேர்ந்து முன்னே குறோணி முடிந்த துண்ட மாறதிலே ஓரிரண்டு துண்டம் அசுரராய்ப்பிறந்தழிந்து ஈரிரண்டு துண்டம் இருக்குதுகாண் மாயவரே நூல்முறையைப் பார்க்கில் நெடியயுகங் கழிந்தால் மேலுகந்தானிங்கே மிகுத்த கிரேதாயுகந்தான் இருக்குது காணென்று ஈசருரைத்திடவே மருக்கிதழும் வாயான் மனமகிழ்ந்து கொண்டாடி துண்டமொன்றை ரண்டாய் தூயவனார் தாம்வகிர்ந்து மண்டலங்கள் மெய்க்க வாணாள் கொடுத்தருளி சிங்கமுகச்சூரனும் திறல்சூரபற்பனுமாய் வங்கணமாய்ப் பிண்டம் வகுத்தார் காணம்மானை சூரனுடசிரசு தொளாயிரத்து நூறதுவும் போரக்கால் கைகள் பொருப்பெடுக்கு மாபலமும் சூரன் சுரோணிதத்தைச் சுக்கிலங்கள் தானாக்கி ஊரேநீ போவென்று உவந்து விடைகொடுத்தார் விடைவேண்டிச் சூரன் வேண்டும் படையோடே திடமாகப் பூமி செலுத்தியரசாளுகையில் வரம்வேண்டவென்று மலரோனடி வணங்கி திறமான ஓமமிட்டுச் செப்புக்குடம் நிறுத்தி நின்ற தவத்தில் நெடியோனைக் காணாமல் அன்றந்தச்சூரன் அக்கினியில் விழுந்தான் சூரபற்பன் விழவே சிங்கமுகச் சூரனவன் பாரமுள்ள தன்சிரசைப் பறித்தெறிந்தானக்கினியில் ஆனதாலீசுரரும் அம்மை உமையுமிரங்கி ஈனமாஞ் சூரனுக்கு ஏதுவரம் வேணுமென்றார் ஈச னுரைக்க ஏற்ற அந்தச் சூரனுந்தான் பாசமுடன் செத்த பற்பனென்ற சூரனையும் எழுப்பித்தரவேணும் யாங்கள்மிகக் கேட்கும் வரம் மழுப்பில்லா வண்ணம் அருளுவீர் என்றுரைத்தான் சூரனிவன்கேட்க சிவனாரகமகிழ்ந்து பாரமுள்ள ஓம பற்பமதைத்தான்பிடித்து சிவஞான வேதம் சிந்தித்தாரப்பொழுது பவமான சூரபற்பன் பிறந்தனனாம் இறந்து பிறந்தனற்கும் இளையோனவன் தனக்கும் சிறந்த புகழீசர் செப்புவாரப்பொழுது சூரரே உங்களுக்குத் தோற்றமுள்ளதோர் வரங்கள் வீரரே கேளுமென்று வேதனிவையுரைக்க அந்நாளில் சூரன் அகமகிழ்ந்து கொண்டாடி உன்னாலும் ஐந்து முகம் உள்ளவர்கள் தம்மாலும் உலகமதில் பண்ணிவைத்த உற்றஆயுதத்தாலும் இலகுமன்னராலும் இந்திரனார் தம்மாலும் கொல்லத் தொலையாத கொடிய வரமதுவும் வல்லவனே நீயும் வாழுங்கயிலையதும் தேவர் தேவேந்திரனும் திருக்கன்னி மாமறையும் ஏவலாயுன்னுடைய லோகமதிலுள்ளவர்கள் முழுதுமெனக்கு ஊழியங்கள் செய்திடவும் பழுதில்லாதிந்த வரம் பரமனேநீர் தாருமென்றான் தாருமென்று சூரன் தாழ்மையுடன்கேட்க ஆருமொப்பில்லா ஆதியகமகிழ்ந்து கேட்டவரம் முழுதும் கெட்டியாயுங்களுக்கு தாட்டிமையாயிப்போ தந்தோமெனவுரைத்தார் வரங்கொடுத் தீசர் மலைகயிலைக்கேகாமல் பரம உமையாளைப் பையஎடுத்தணைத்து அலைமேலே ஆயன் அருகிலே போயிருந்து மலைமேலே சூரன் வாய்த்ததென்றவ்வரங்கள் கயிலை முழுதும் காவலிட்டுத்தேவரையும் அகில முழுதும் அடக்கியரசாண்டனனே அப்படியே சூரன் அரசாண்டிருக்கையிலே முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே தேவரையும் வானவரைத் தெய்வேந்திரன்வரையும் மூவரையும் பாவி முட்டுப் படுத்தினனே ஆனதால் தேவர் அரிக்கே முறையமிட ஈனமில்லா தாயன் எடுத்தாரொருவேசம் ஈசனிடஞ் சென்று இயம்பினாரெம்பெருமாள் வாசமுள்ள ஈசுரரே மாபாவிச்சூரனுக்கு ஏது வரங்கள் ஈந்திர் காணென்றுரைக்க தாது கரமணிந்த தாமன்பின்னேதுரைப்பார் வையகத்திலுள்ள வலுவாயுதத்தாலும் தெய்வலோகத்தில் சிறந்தமன்னர் தம்மாலும் அஞ்சு முகத்தாலும் அழியாதவனுயிரும் தஞ்சமிட வானோர் தையல்தெய்வக்கன்னிமுதல் கயிலை முழுதும் கமண்டலங்களேழுமுதல் அகிலமுழுதும் அடக்கி வரங்கொடுத்தோம் என்று வேதாவும் இவையுரைக்க மாலோனும் நின்று தியங்கி நெஞ்சமது புண்ணாகிப் பேயனுக்கென்னுடைய பிறப்பைக்கொடுத்தல்லவோ தேயமதில் நானும் திரிந்தலையக்காரணந்தான் என்று திருமால் இதுசதையஞ்சொல்லியவர் இன்றந்தச் சூரர் இருவர்தமைக்கொல்லவே ஆறுமுகமாய் அவதரிக்க ஆயனளவிட்டனரே கூறிடவே சத்திதனைக் கொண்டார் வேலாயுதமாய் நல்ல சிவனாரை நந்தீசுரராக்கி வல்ல பெலமுள்ள வாய்த்த திக்கெட்டிலுள்ள பாலரையும் வீரர்களாய்ப் பண்ணினாரெம்பெருமாள் வாலமுள்ள சன்னாசி மாரைப்பெரும்படையாய் கந்தனெனும் நாமம் கனத்தசடையாண்டியுமாய் கொந்துகொந்தாய்ப் பீற்றைக்கூறைமிக வணிந்து வேலு மிகப்பிடித்து வெண்ணீறுமே தரித்து நாலுரண்டு சிரசில் நல்லருத்திராச்சமிட்டு பத்துரண்டு காதில் பொன்னொவ்வாச்செம்பணிந்து முத்திரிகளிட்டுக்கந்தப் பொக்கணங்கள்தோளிலிட்டு சன்னாசி போலே தானடந்தெம்பெருமான் நன்னா தானாவெனவே நாலஞ்சுகவி தான்பாடி வந்து ஒருமலைமேல் வாய்த்த கூடாரமிட்டு சந்து மிகச்சொல்லி தான்விட்டார் சூரனுக்கு சூரனிடத்தில் தூதாநீ சென்றேகி பாரமுள்ள கயிலை பருவதமுந் தேவருட சிறைகளகற்றிவானோர் தேவரையும் நீயனுப்பி திறவானாயாகச் சீமையரசாளுமென்று இப்படியே ஆகாட்டால் இன்றுகழித்தெட்டாம்நாள் அப்படியே உன்றனக்கும் ஆனகந்த சுவாமியர்க்கும் சண்டை அன்றென்று தரங்கூறிவாவெனவே அண்டர்பிரான் தூது அனுப்பினாரம்மானை தூதன் மிகநடந்து சிவனே செயலெனவே காதமொன்று தான்கடந்து கண்டானே சூரனையும் கந்த சுவாமி கருத்தாயுரைத்ததெல்லாம் அந்த அசுரனுக்கு அத்தூதன் தானுரைத்தான் சூரா கேள்கந்த சுவாமியருளென்றுரைக்க ஏராத பாவி இகழ்த்தினான் அப்போது தூதனென்றோன் போகாமல் துடர்ந்து மிகப்பிடித்து பாரப்பெருவிலங்கில் பாவியை வையென்றுரைத்தான் ஆரடா நீதான் அறியாயோ என்பலங்கள் பாரடாவுன்றன் கந்தன் படுகிறதை ஈசுரனுமென்றனுக்கு இருந்த இடமுமருளி மாயனிடம் போயலையில் வாழ்ந்ததும் கண்டிலையோ எமலோகம் வானம் இந்திரலோகம் வரையும் நவகோளும் நானல்லவோ நாட்டமறிந்திலையோ முப்பத்து முக்கோடி உற்றதேவாதிகளும் நாற்பத்துநாற்கோடி ரிஷிநமக்கென்றறிந்திலையோ அறியாத வாறோகாண் ஆண்டிக்குத் தூதுவந்தாய் சிறியனென்றிராதேயென் சிரசுடம்பு கண்டிலையோ உன்னுடைய கந்தன் உயரமது நானறிவேன் என்னுடைய உயரம் இனிநீ யறிவாயே ஆனதாலென்னுடைய ஆங்காரமத்தனையும் கானகத்தில் வாழும் கந்தனுக் கேவுரைநீ என்று மதமாய் இவன் பேசத்தூதனுந்தான் அன்றந்தச்சூரனுக்கு அறையாமலேதுரைப்பான் நீயோ தானெங்கள் நிமலன் தனக்கெதிரி பேயோரி நாய்நரிகள் பிய்ச்சிப்பிடுங்கியுன்னை கண்ட விடத்தில் கழுக்கள் மிகப்பிடுங்கிக் கொண்டோடித் தின்ன வேலாயுதங்கொண்டுவந்தார் தேவர் சிறையும் தெய்வமடவார் சிறையும் மூவர் சிறையும் மும்முடுக்கமுந் தீர்த்து உன்னுடைய சேனை உற்றபடையழித்து நின்னுடைய கோட்டை நீறு பொடியாக்கி அரசாள்வாரெங்கள் ஆறுமுக வேலவனார் துரையான கந்தசுவாமி சொல்லியனுப்பினர்காண் என்றேதான் தூதன் இவையுரைக்கச் சூரனுந்தான் அன்றே மனது அளறித்துணிந்தேதுரைப்பான் ஆனாலறிவோம் ஆண்டிதனையுமிங்கே போனாலென்னோடே போருசெய்ய ஏவிடுநீ சூரனிவையுரைக்கச் சூலாயுதப் பெருமாள் தூதன் மிகநடந்து சொன்னான் சுவாமியர்க்கு சுவாமி மனமகிழ்ந்து சூரன்தனையறுக்க காமிவேலாயுதத்தைக் கையிலெடுத்தாரம்மானை வேலாயுதமெடுத்து வேதப் படைசூழ சூலாயுதப்பெருமாள் துடியாய் நடக்கலுற்றார் கந்தனார் வேசம் கரந்திருந்த மாயவனார் வந்தார்காண் சூரன் வலுவிழந்தானம்மானை சூரனவன் கண்டு தோசப்படையணிந்து மூரன் படைக்கு முன்னே நடக்கலுற்றான் கண்டாரீராறு கரத்தோனகமகிழ்ந்து பண்டார வேசம் பண்பாயெடுத்திறுக்கி முன்னே வருஞ்சூரன் முகத்தையவர் பார்த்து பின்னே சுவாமி புத்தி மிகவுரைப்பார் வம்பிலிறவாதே வாழ்விழந்து போகாதே தம்பி தலைவன் தளமுமிழவாதே பற்பக்கிரீடப் பவுசுமிழவாதே அற்பமிந்த வாழ்வு அநியாயம் விட்டுவிடு கரணமீதில்லாமல் கௌவையற்று வாழ்ந்திருந்து மரணம் வந்துசீவன் மாண்டுபோகும்போது நன்மையதுகூட நாடுமேயல்லாது தின்மை வராது தேவரையும் விட்டுவிடு தீட்சையுடன்புத்தி செவ்வேநேரிட்டுவொரு மோட்ச மதுதேட முடுக்கமதை விட்டுவிடு இத்தனையும் நாதன் எடுத்து மிகவுரைக்க புத்திகெட்டப் பாவி போர்சூரனேதுரைப்பான் இரந்து திரியுகின்ற இரப்பனுக்குள்ளபுத்தி பரந்த புவியாளும் பாரமுடிக் காவலற்கு ஏற்குமோஞானம் இரப்போருக்கல்லாது ஆர்க்குமே சொல்லாதே ஆண்டிவுன் ஞாயமதை சண்டைக்கு வாவெனவே தரங்கூறித்தூதுவிட்ட பண்டாரமென்ற படைக்காரனும்நீயோ என்னுடைய சேனை எல்லாமிக அழித்து என்னையும் நாய் நரிக்கு இடுவேனென்றதும் நீயோ என்றேயச்சூரன் இயம்பி மிகநகைத்து பண்டாரனோடே படையெடுத்தானம்மானை சூரனுட படைகள் துண்டந் துண்டமாய் விழவே வீரர்களும் வந்து வெட்டினாரம்மானை வெட்டினதால் செத்தார் மிகுசூரக்குலங்கள் பட்டார்களென்று பார்சூரன் தான்கேட்டு வந்து எதிர்த்தான்காண் மாயாண்டி தன்னோடே இன்று வந்து வாய்த்துதென்று எம்பெருமாளுமகிழ்ந்து வேலாயுதத்தை விறுமாபதஞ்சேவித்து மேலாம் பரனார் விமலனருளாலே எறிந்தார் காண் சூரன் இறந்தானே மண்மீதில் பறிந்தே வேலாயுதமும் பாற்கடலில் மூழ்கியதே சூரன் மடிந்து துடித்து உயிர் போகுகையில் வீரமுள்ள நாதன் வீணனவன் முன்பில்வந்து சொன்ன மொழியெல்லாம் சூட்சமாய்க் கேளாமல் இந்நிலம்மேல் பாவி இறந்தாயே வம்பாலே நாட்டமுடன் நானுரைத்த நல்லமொழி கேளாமல் கோட்டையு முன்னுடைய குஞ்சரமுந் தோற்றாயே சந்துவிட்ட சொற்படிக்குத் தந்தரசு ஆளாமல் விந்துக் குலங்களற்று வீணாய்நீ மாண்டாயே மாளா வரங்கள் மாகோடி பெற்றோமென்று பாழாக மாண்டாயே பண்டாரங் கையாலே என்றந்த ஆதி இத்தனையுந் தான்கூற முந்து பிறந்த முப்பிறப்புச் சூரமதால் என்னையோ கொல்ல இரப்பனோ ஏலுவது உன்னையோ கொல்ல ஒட்டுவனோ நான்துணிந்தால் வேலாயுதத்தாலே வென்று கொன்ற தல்லாது ஏலாதுவுன்னாலே இளப்பமிங்கே பேசாதே என்றானே சூரன் எம்பெருமாள் கோபமுடன் கொன்றாரே சூரனுட குறைவுயிரையம்மானை

சூரனைத் துணித்த சக்தி சூலமும் கடலில் மூழ்கி வீரமால் பதத்தைப்போற்றி விளம்புவாள் சக்தி மாது மூரனைச் செயிக்க முன்னே முச்சூலமாய்ச் சபித்த சாபம் தீரவே வேணு மென்று திருப்பதம் வணங்கி நின்றாள்

ஆதியனாதி அறனில் உதித்தோனே சோதியே என்னுடைய சூல்சாபம் தீரும் என்று உமையாள் எம்பெருமாளுக்குரைத்தாள் நன்று நன்றென்று நாராயணர் தானும் சாபமதுதீரச் சாந்திமிகக்கழித்தார் தாபமுள்ளமாயன் பரமசிவனை நினைத்தார் உண்மையாய்த் தர்மம் ஓங்கி மிகவளர செம்மையுடன் சத்தியும் சிவனாரிடம் சேர்ந்தாள் அம்மை உமையாளின் ஆனசாபந் தீர்ந்து செம்மையுடன் கயிலை சென்றனள் காணம்மானை கந்தத்திருவேசம் கரந்திருந்த மாயவர்க்கு செந்தூர்பதியில் முடி சூட்டி வைத்தனரே அப்போது சிவனும் ஆதிநாராயணரும் இப்போது மாண்ட இச்சூரன் தனக்கு கிரேதா யுகத்துக்கு கீர்த்தியிருக்குதென்று சூரனை இரணியனாய் படைத்தார் அயன்சிவனும் பிறந்த இரணியனும் பரமசிவனாரிடத்தில் வரம் கேட்டவிதத்தை வகையாக கேட்டிருநீ இலகு மன்னராராலும் இந்திரனார் தன்னாலும் உலகமதிற் பண்ணிவைத்த உற்ற ஆயுதத்தாலும் இதற்க்கு முன்பிறந்த யாராராலும் மாளாவரம் மருக்கணியும் ஈசுரரே எந்தனுக்குதாரும் என்றான் கேட்டவரம் முழுதும்கெட்டியாய் உந்தனுக்கு தாட்டிமையாய் தந்தேன் என உரைத்தார் ஈசர் வரம் வேண்டி இரணியனும் வையகத்தில் இருந்து வருத்தி தேவரையும் தனக்கு ஏவல்செய்யவைத்தான் கன்னியரை தானழைத்து கவரியது வீசவைத்தான் தன் பேரைநன்றாக தரணியில் சாற்றவைத்தான் சீதையிடமிருந்த சீரான பெண்ணதையும் பேதமின்றிமேடை பெருக்கவைத்தான் மாபாவி தேவர் முதலாய் தெய்வேந்திரன் வரையும் மூவரையும் தேடி முறையமிட்டார் அச்சுதர்க்கு மாயவனும் ஈசுரரும் மறைநூல்தனை ஆராய்ந்து ஞாயமுள்ள அரிபத்தனை பிரகாலதானென பிள்ளையாய்அசுரனுக்கு பிறவிசெய்திடவே பள்ளிக்கு போகவைத்தான் படிப்பித்த வாத்தியாரும் இரணியாய நமோவென எழுத்தோதி கொடுத்திட அறநெறியாய் பாலன் அரிஓம்நமோ என்றனனே பிரியாமல் பிள்ளையெல்லாம் பின்தொடர்ந்து சொல்ல அறியாமற் பின்னும் ஆசானும் தான்பிடித்து இரணியனிடம் சென்று இடறுசொன்னதை உரைத்தார் மறவரை அழைத்திவனை மலைஉருட்டிகொல் என்றான் அப்படியே கொண்டுபோய் அருமலையில் உருட்டினரே செப்பொத்த மாலவரும் ஏந்திக்கொண்டார் பாலகனை இப்படியே பலவிதமாய் இளம்பாலகனை கொல்லவிட்டான் அப்படியே வந்து அரியோனும் காத்து நின்றார் பாலன்தனை பிடித்து பாராளும் இரணியனிடம் கொலைகாரர் விட்டாருன் குழந்தை சாகவில்லையென பிரகலாதனே எந்தன் பிள்ளாய் கண்மணியே இறவாதமகனே என்று அவன் கையைத்தான்பிடித்து அப்பன் இரணியனும் அரிபாலனை பார்த்து எப்போதும் நீசொல்லும் அந்த அரிஎங்கே என்றான் அப்போது அரிபாலன் சொன்னதைகேள் நன்மாதே செப்பரியஎன்னரிதான் ஏகமெங்கும் இருக்கிறார் என்னுளம் உன்னுளமும் ஏகமும் நிறைந்திருக்கார் என்றுரைக்க கேட்டு இரணியனும் கோபமுற்று இந்தா நிற்கும் தூணில் இருப்பானோ உன்னரிதான் என்று கேட்க சிரித்து ஏதுசொல்வான் அரிபாலன் தூணதிலும் இருப்பார் துரும்பதிலுமே இருப்பார் வீணரை வதைக்க வேளைதனில் வந்திடுவார் என்று சொல்லக்கேட்டு இராசனும் கோபமுற்று அன்று வாளால் தூணை இரணியன் வெட்டினனே வெட்டின வேகமதால் வீரநாராயணரும் குட்டிசிங்கமாய் குதித்தவனைத்தான் பிடித்து வாசல்நடையில் வைத்து மாபாவி இரணியனை நேசமில்லாதிறுக்கி நெறிக்கின்ற வேளையிலே காலொடுகால் தென்னி கையை பிடித்தானே மாலோன் அதிக மான கோபத்துடனே சித்தா நீ வாஎனவே சிவனை மிகநினைத்தார் பத்தன் அரிசிங்கன் கையில் பாரநகமாய் முளைத்தார் நெஞ்சை அவர்நகத்தால் நேரே பிளந்து வதைத்து வஞ்சகனோடு மாயன் வார்த்தை ஓன்று கேட்கலுற்றார் சூரபற்பனாகத் தோன்றினாயந்நாளில் ஊரிரப்பனாக உருவாக நான்தோன்றி கொன்னேனானென்று கூறினேனப்போது அந்நேரம் நீதான் ஆண்டியல்லக் கொன்றதென்றாய் வேலாயுதத்தாலே வென்றாய் நீ யல்லாது ஏலாது உன்னாலே என்றன்று பேசினையே ஆயுதங்களம்பு அஸ்திரம் வாளில்லாமல் வாயிதமாயென்னகத்தால் வகிர்ந்தேனுன் வயிற்றை என்று மாயனுரைக்க ஏதுரைப்பான் சூரன் உந்தன் கை காலதையும் உடன்பிடித்திறுக்கையிலே பித்தனுடபேரில் பிராணபயம் போட்டாய் நீ பத்துமலையும் பார நகம் தானாக சீற்றமுடன் வந்து சீறிமுளைத்ததினால் கீற்றாய் என்னைகீறி கீழேவிடாதே தடுத்தாய் உதிரங்கீழே விழுந்தால் ஓன்றுபத்தாய் ஆகுமென அதிர நகமுருவி அப்போ உதிரங்குடித்தாய் பத்து மலையைப் பாரநகமாய்ப் பதித்து இத்தலத்திலென்னை இறக்கவைத்தாயல்லாது ஏலாது உன்னாலே இந்தமொழி பேசாதே மாலான வேதன் மனதுகோபம் வெகுண்டு உன்னை யின்னமிந்த உலகில் பிறவிசெய்து கொன்னாலே விடுவேன் கிரேதாயுகம் வயது திகைந்தல்லோ போச்சு திரேதாயுகம் பிறந்தால் பகையுந்தானப்போ பார்மீதிலுண்டாகும் முப்பிறவித் துண்டம் உயிர்ப்பிறவி செய்கையிலே இப்பிறவி தன்னில் இசைந்தமொழி கேட்பேனான் என்று இரணியனை சங்காரமிட்டாரம்மானை அன்று இரணியன் மேடை அழகாய் பெருக்கி வந்த மேதையும் ஓர் நினைவு மெல்லி நினைத்தது கேள் சீதை புருஷன் ஸ்ரீ ராமனாயிருக்க நானும் அவரோடு நாடி மிகச்சேர்ந்து ஆண் பிள்ளை பெற்று அரசாள வேணுமென்று எண்ணி மனதில் எம்பெருமாளை நோக்கி உன்னி கயிலை பக்கம் உடன் போய் தவசிருந்தாள் கந்தத்திருவேசம் கலந்திருந்த மாயவனார் செந்தூர்ப்பதியில் சேர்ந்திருக்கும் வேளை ஆதி கயிலை அரனாரிடத்தில்வந்து வேதியரும் நன்றாய் விளம்புவாரம்மானை

திரேதா யுகம்-இராவணன், கும்பகர்ணன், வாலி சூரபற்பனென்ற சூரக்குலங்களைத் துணித்து வீரம் பறைந்ததினால் மேலுமந்த அவ்வுகத்தில் இரணியனாய்த் தோன்றி நின்றஇராச்சதனைக் கொன்னு கிரேதா குவலயமும் தானழித்து முன்னு கரந்திருந்த ஆறுமுகவேசம் செந்தூருவாரி திரைமடக்கில் வாழ்ந்திரென்று வந்தோங்காணய்யா மலர்ப்பாதந்தெண்டனிட என்றேதானாதி ஈசுரரோ டேதுரைப்பார் அன்றேதானீசர் அருளுவாராயருக்கு முன்னே குறோணி முடிந்த துண்டு ஆறதிலே இன்னும் மூன்று துண்டு இருக்குது இங்கேதான் என்னவிதமாய் படைக்க இசையும் எனஉரைத்தார் மண்ணுக்கு அதிகாரி மாறி உரைத்ததுகேளு வசைசொன்னான் இரணியன் வதைபடும் வேளையிலே அசையாத மாயவரே அவ்வசையை சொல்லும் என்றார் பத்துமலைதனையும் பாரநகம் தானாக்கி இத்தலத்தில் என்னை இறுக்கி கொன்றாய் என்றானே பத்துமலை என்று பகர்ந்த மொழியாலே பத்துமலைதனையும் பாரத்தலையாய்ப் படையும் என்றுமாயன் உரைக்க இருவரும் நல்லதென்று அன்று படைத்தார் அரக்கன் ராவணனை பத்து தலையும் பத்துரண்டு கண்காதும் தத்துவத்தோடு தான்படைத்தார் பாதிதுண்டம் கூடியுள்ள பாதியையும் கும்பகர்ணனாய்ப் படைத்தார் நாடறிய ராவணனுக்கு நல்ல படைதானாக கூடப்பிறக்கக் குண்டிலிட்டரத்தமதை வாட அரக்கர் குலமாய்ப்பிறவிசெய்தார் அப்போ படைக்கும் அவ்வளவில் மாயவனார் மெய்ப்பான மேனிதனில் வியர்வை தனையுருட்டி விபீஷணனென்று மெய்யுருவம் தானாக்கி கவுசலமாயரக்கன் தம்பியெனக் கருத்தாய் கூடியிருந்து அரக்கன் குறியறிந்து வேடிக்கையாக வீற்றிரென்றுரைத்தார் அப்போது கும்பகர்ணன் அன்று வரம்வாங்கவென்று செப்போடுவொத்த சிவனை மிகநினைத்து நித்தமும் சாகாமல் நீணிலத்தை ஆளவென்று தத்துவத்தோடு வரம் தாரும் என்று நின்றானே கும்பகர்ணன் நின்ற கொடுந்தவம் பார்த்து மாயன் அன்பான நாரதரை அழைத்தேது சொல்லிவிட்டார் சரஸ்வதி இடத்தில் சட்டெனவே ஏகி நீயும் வீரமுள்ள கும்பகர்ணன் வெகுநேரம் தவசிருக்கான் அவன் தவத்தைபார்த்தால் அழியாவரம் கேட்பான் சிவனும் கொடுத்தால் சிரமமாகும் எந்தனுக்கு நித்தியதத்துவம் வாங்க நினைத்து நிற்கின்றான் நித்திய தத்துவத்தை நித்திரை தத்துவம் எனவே மாற்றி உரைக்கணும் என்று சொல்லிவாரும் என்றார் நாற்றிசையும் புகழும் நாரதர் நடந்தேறி சொன்னார் சரஸ்வதிக்கு சுவாமி அருளாலே நன்றென்று சொல்லி நாடி சரஸ்வதியும் கும்பகர்ணன் நாவில் குணமாய் இருக்கையிலே வம்பன் கும்பகர்ணன் வாய்திறந்து ஈசனிடம் நித்தியதத்துவம்என நினைவில் உருவேற்றி நித்திரை தத்துவம் என்றே கேட்டான் ஈசரிடம் சிவனார் அதுகேட்டு சீரான கும்பனுக்கு அவன்கேட்டதுபோல அளித்தார் வரங்களும் ஆறுமாதம் தூக்கம் ஆறுமாதம்உணவு வீறாகவே வரவே வேண்டி நீஇருப்பாய் என்று வரம் கொடுத்தார் ஈசுரரும் அந்நாளில் எண்டிசையும்தானறிய இந்தவரம்கொண்டனனே பத்துதலைகொண்ட பாவிஅரக்கனவன் மற்றும் நிகரொவ்வா வாய்த்தபடையோடு வீற்றிருக்கும் நாளையிலே வீணனந்த ராவணன் மாற்றி தவமிருந்து வரம்வேண்ட வேணுமென்று கயிலைக்குஏகிக் கரம் கொண்டு தட்டினனே அகிலம் அசையுது என்று ஆதிசிவன் தானும் கால்கொண்டு தட்டிவே கருநீச ராவணனும் பொல்லாதார் போகும் புழுக்குழியில் போய் விழுந்தான் அங்கே இருந்து அரக்கனந்த ராவணனும் செங்கண் சிவனை சேவிக்க வேண்டும் என்று பத்து தலையில் ஒன்றை பண்பாகத்தான் எடுத்து சித்தருடபேழைஎன்று திடமாக வைத்துக் கொண்டு இருபது கையில் இரண்டுகையை தான்உருவி குருநரம்பு எடுத்து கோர்த்து வீணையாக்கி இராமுழுதுமே இழுத்து ஈசனை அழைத்தான் ராவணாநீயும் என்னை அழைத்ததேது என்றார் அனைத்துயிரும் படைத்த ஆதியே உம்மிடத்தில் வணங்கிப் பணிந்து வரம்வேண்ட வந்தேனான் கயிலையில் வந்து கதவுதட்டும் வேளையிலே அகிலம் அசையுதென்று ஆதியுமே கோபமுற்று நரகலோகமதில் நம்மையும் தள்ளிவிட்டீர் அரகராவென்று ஐயா அழைத்தேன் என்றான் அப்போது ஈசர் அரக்கனை பார்த்து இப்போது வாஎனவே ஈசர் அழைத்தாரே நரகத்தை விட்டு நற்கையிலை வரும்வழியில் கரம்குவித்து மேதை கண்ணரை நினைத்திருக்க இச்சித்து ராவணனும் இவளைத் தொடர்கையில் அச்சமில்லா மேதை அரக்கனுக்கு சாபமிட்டாள் என்தவசை அழித்து எனைத்தொடர்ந்த ஏதுவினால் உன்னால் வதைபடவே என்னை எடுத்து போவாய் என்று சபித்து எரிஅதிலேதான் விழுந்தாள் அன்று அந்தஅக்கினியும் அவள்தவசைபார்த்து அக்கினிதேவி அவளை வளர்த்து வந்தாள் அக்கினிக்குள் மேதை அருந்தவசு பண்ணலுற்றாள் அப்போதுராவணனும் ஆதிசிவன் இடத்தில்வந்து இப்போது எந்தனுக்கு ஏற்றவரம் தாரும் என்றான் தவத்தைகண்டு தலைபத்து அரக்கனுக்கு சிவத்தலைவரானோர் என்னவரம் வேண்டும்என்றார் அப்போது ஈசனிடம் அரக்கன்வரம் கேட்கலுற்றான் இப்போது ஈஸ்வரரே என்தலை இரண்டுகையும் முளைக்கவே வேணும் முதலே முதற்பொருளே அழைத்து நான்கேட்டவரம் ஆதிசிவனே நீரும் தருவேன் நான்என்று தந்திமுகனவன் பெயரில் உறுதியாகவே எனக்கு உண்மைசொல்லும் என்றான் அப்படியே ஈசர் ஆணையிட்டுதான்கொடுக்க அப்போது நல்லதென்று அரக்கன்வரம் கேட்டதுகேள் மூன்று லோகத்திலுள்ள முனிவர் தேவாதிகளும் வேண்டும்பல ஆயுதமும் விதவிதமாயம்புகளும் வீரியமாய் நானிருக்கும் விண்தோயுங் கோட்டைசுற்றி சூரியனுஞ் சந்திரனும் சுற்றியது போய்விடவும் சிவனாரொருகோடி செய்ய வரந்தரவும் புவனம் படைக்கும் பிரம்மாவொருகோடி உமையாளொருகோடி உற்ற வரந்தரவும் இமையோரரைக்கோடி இப்படியே உள்ளவரம் மூணரைக் கோடி உள்ளவரமத்தனையும் துடுக்கமுடன் கேட்ட சுத்தவரம் அத்தனையும் கொடுக்கும் போது குன்றெடுத்தோன் தன்தேவி அலங்காரமாகி அன்றைய பொழுதினிலே கலங்காதான் தேவி கயிலைஉமையாளருகில் மணிமேடை தன்னில் மகிழ்ந்திருக்கும் வேளையிலே கெணியாது அரக்கன் கெடுவதறியாமல் அம்மைதனை கண்டு அயர்ந்து முகம் வாடினனே செம்மையாக சினம் கொண்டு திருமகளும் மோதி அவன் பேரில் மொழிந்தாள் ஒரு சாபம் சீறியே அரக்கா நீ சினம் கொண்டு பார்த்ததினால் பாரில் எனை நினைந்து ஒருபெண்ணை கொண்டேகி ஸ்ரீ ராமர் பாணமதால் சிரமறுந்தே சாவாய் என்றாள் இப்படியே சாபமிட்டு இயலான லட்சுமியும் அப்படியே கயிலை அறைக்குள் சென்றிருந்தாள் கர்ம விதியால் கைமறந்து அரக்கனவன் நின்ற உணர்வை நெடிய சிவமறிந்து கேட்ட வரங்கள் கெட்டியாய்த் தான்கொடுத்து நாட்டமுடன்சீதை நகையாலழிவையென்று இரக்கமில்லான்கேட்ட ஏற்றவரங்களெல்லாம் அரக்கனவன்றனக்கு ஆதிமிகக்கொடுத்தார் வரம்வேண்டிஅரக்கன் வாழ்இலங்கை ஏகுகையில் குரந்த தவசி இருந்த குறுமுனிவன் தனையும் ஒற்றினான் காலால் உடன்சாபமிட்டானே கர்த்தரை நாடி கனநாள் தவமிருந்தேன் ஒற்றினாய் உன்காலால் உன்னால் தவம்கலைந்தேன் சித்தன் அருள்கண்டு சிவன் பாதம்சேர்வதற்கு அரக்கா உன்தலையறுக்கப் பிறப்பேன் ராமபாணமாய் அறச்சாபம்கூறிமுனி அலைக்குள்ளே வீற்றிருந்தான் ஆதிகொடுத்த அவ்வரங்களத்தனையும் நீதியில்லான்வேண்டி நெடியோன் தனைவணங்கி கொண்டுபோகும்போது குன்றெடுத்த மாயவனார் கண்டு மறித்துக் கௌசலமிட்டே மாயன் அரைக்கோடி வரமாய் ஆக்கிவிட்டார் மாயமதாய் சரக்கோடி மூணும் தான் தோற்றுப் போயினனே முக்கோடி வரத்தை உச்சிக்கொண்டார் மாயவரும் அக்கரைக் கோடி அரக்கன்வரம் கொண்டேகித் தேவரையும் மூவரையும் தேவேந்திரன் வரையும் நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டானம்மானை

ஆதியைத் தொழுது போற்றி அரக்கனும் வரமும் வேண்டி சீரிய சீதையாலே சீவனுக்கிடறும் பெற்று வாரிய மூணு கோடி வரமது தோற்றுப் பின்னும் மூரியன் மூணுலோகம் முழுதுமே யடக்கியாண்டான்

வாசுவும் அரக்கன் மணிமேடை தூராட்டால் வீசுவேன் வாளாலே வெட்டுவேன் பாருவென்பான் வருணனவன் மேடை வந்து தொளியாதிருந்தால் மரணம் வரையும் வலுவிலங்கில் வைப்பேனென்பான் சந்திரருஞ் சூரியரும் சாய்ந்துமிகப்போகாட்டால் சந்து சந்தாகச் சரத்தாலறுப்பேனென்பான் தெய்வ மடவார்கள் திருக்கவரி வீசாட்டால் கைவரைந்து கட்டிக் கடுவிலங்கில் வைப்பேனென்பான் நாலு மறையும் நல்லாறு சாஸ்திரமும் பாலு குடஞ்சுமந்து பணிந்து முன்னே நில்லாட்டால் அஸ்திரத்தால் வாந்து அம்மிதனில் வைத்தரைத்து நெற்றிதனில்பொட்டிடுவேன் நிச்சயமென்பானரக்கன் வானவர்களெல்லாம் மலரெடுத்து என்காலில் தானமது பண்ணித் தாழ்ந்து நில்லாதேயிருந்தால் சாகும் வரைக்கும் தடியிரும்பிலிட்டவரை வேகும் படிக்கு வேள்வியதிலிட்டிடுவேன் மாமறலி மூவர் வந்தென்சொல் கேளாட்டால் காமனையும் ஈசன் கண்ணாலெரித்ததுபோல் என்னுடைய கண்ணால் எமனையுங்காலனையும் துன்னுடைய வல்லத் தூதனையும் நானெரிப்பேன் இவ்வுகத்திலுள்ள இராசாதி ராசரெல்லாம் முவ்வுகமுங் கப்பமிங்கே முன்னாடி தாராட்டால் நெருப்பெடுத்திட்டிடுவேன் நேரேகொண்டுவராட்டால் எரிப்பேனொருஅம்பால் இராசாதிராசரையும் இப்படியே பாவி இந்திரலோகம்வரையும் அப்படியே அரக்கன் அடக்கியரசாண்டிருந்தான் அப்படியே அரக்கன் ஆண்டிருக்கு மந்நாளில் முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே தேவாதி தேவர் தினமேவல் செய்திடவே மூவாதி மூவர் ஊழியங்கள் செய்திடவே முறுக்கமதால் பாவி ஊழியங்கள் கொண்டதினால் பொறுக்க முகியாமல் பூலோகத்தார்களெல்லாம் தெய்வ ஸ்திரீயும் தேவாதி தேவர்களும் அய்யா திருமாலுக்கு அபயம் முறையமென்றார் அபயமிடு மொலியை அச்சுதருந்தானமர்த்தி கபயமிடும் வேதன் கயிலையது தானேகி ஆதி பரமன் அடியைமிகப்போற்றி சோதித் திருமால் சொல்லுவாரம்மானை பத்துத் தலையுடைய பாவியரக்கனுக்கு மற்றும் பலகோடி வரங்கள்மிக ஈந்ததினால் தேவரையும் மூவரையும் தேவேந்திரன் வரையும் நால்வரையும் வேலைகொண்டு நாடாண்டானம்மானை ஆனதால் தேவர் அரிக்கே முறையமிட ஈனமாய்க் கேட்டு இருக்க முடியுதில்லை பள்ளியுறக்கம் பரிவாய் வருகுதில்லை தள்ளினால் தேவரையும் தற்காப்பாராருமில்லை என்ன வசமாய் எடுப்போஞ்சொரூபமது தன்னிகரில்லாதவனே சாற்றுவீரென்றனராம் மாயனுரைக்க மறையோனகமகிழ்ந்து தூயவரு மங்கே சொல்லுவாரம்மானை பாவி யரக்கனுக்குப் பண்டுநாமீந்தவரம் தாவிப்பறிக்கத் தானாகாதென்னாலே என்றரனார் சொல்ல எம்பெருமாளச்சுதரும் அன்றெம்பெருமாள் ஆலோசனையாகி என்னை மகவாய் எடுக்கத் தசரதரும் முன்னே வரங்கேட்டு உலகிலவரிருக்க அன்னுகத்திலுள்ள அரசன் தினகரனும் பொன்னு திருவைப் பிள்ளையென வந்தெடுக்க நிஷ்ட்டையாயரசர் நெடுநாள் தவசிருக்க சட்டமதைப்பார்த்துத் தானனுப்புமீசுரரே பின்னும் பெருமாள் பெரியோனைப்பார்த்து முன்னு முறையாய் முறைப்படியே தேவரையும் வானரமாய்ப் பூமியிலே வந்து பிறந்திருக்க தானவரேயிப்போ தான்படைக்கவேணுமென்றார் ஏவலாயென்றனுக்கு இப்பிறப்பானதிலே காவலா யென்றனுக்குக் கைக்குள்ளே நிற்பதற்கு பள்ளிகொண்டு நானிருந்த பாம்புராசன்தனையும் வெள்ளிமணி மெத்தையையும் வீற்றிருக்குமாசனமும் இம்மூணு பேரும் என்னோடுடன்பிறக்க சம்மூலப்பொருளே தான்படையுமென்றுரைத்தார் மாயனுரைக்க மறையோனகமகிழ்ந்து தூயவருமந்தப் படியே தெளிந்திருக்க படைக்கும் பொழுதில் பரதேவரெல்லோரும் அடைக்கலமே மாயன் அடியெனத்தெண்டனிட்டார் தெண்டனிட்டுத் தேவரெல்லாம் செப்புவாரம்மானை மண்டலமெங்கும் மயமாய் நிறைந்தோனே எங்களை லோகமதில் இப்போபடைப்பீரால் மங்களமாயுள்ள வலுவும் பெலமதுவும் ஆயனுக்கு நாங்கள் அடிபணிந்தேவல்செய்ய நேயனே நீரும் நெறியாய்ப் படையுமென்றார் ஈசர் மகிழ்ந்து இப்படியே தான்படைக்க வாசத் தசரதரும் வந்து தினகரரும் மகவாசையுற்று மகாபரனைத்தானோக்கி அகப்பாசமற்று அதிகத் தவமிருந்து நாதனறிந்து நன்மறையைத் தான்பார்த்து பாதகனரக்கன் பத்துச்சிரத்தானை தேவர் துயரமறத் திருமால் தசரதற்கு மூவருடன்கூடி உலகமதிலே பிறக்க அரக்கர் குலமறவே அம்மைசீதாலட்சுமியை இரக்கம்போலுள்ள ஏற்ற தினகரற்கு மகவாய்ப் பிறக்க மறைதான் விதித்தபடி செகமீதில் ஞான சிருஷ்டி சிவமயமாய் இப்படியே வேதத்து எழுத்தின் படியாலே அப்படியே ஈசர் அமைக்கத் துணிந்தனராம் உடனே தசரதற்கு உற்ற திருமாலை திடமாய்ப் பிறவி செய்ய எனத்துணிந்தார் அப்போது ராமராய் அய்யா திருமாலை இப்போது படைக்க ஈசுரனார் சம்மதிக்க படைக்கும் பொழுது பரமசிவனாரை நடக்குந் திருமால் நாதனைப் பார்த்துரைப்பார் அவ்வுலகிலென்னை அதிகத் தசரதற்கு இவ்வுலகு விட்டங்கு என்னைப்பிறவிசெய்ய வந்த விபரம் வகைவகையாயீசுரரே என்றனக்குத் தானமைத்து என்னையனுப்புமென்றார் மாயனிது கேட்க மறையோனக மகிழ்ந்து தூயவரு மங்கே சொல்லுகிறாரம்மானை பரலோகமென்ற பைம்பொன் கயிலையதில் சாலோகந்தன்னில் தானிருந்த மாமுனிவர் துசுவீசு மாமுனியும் சுகசீல மாமுனியும் விசுவாசமாயிருந்து விசாரமதிட்டனராம் வாரும் துசுவீசு மாமுனியே நீர்கேளும் நீரும் நாமுங்கூடி நீணிலத்தில் போயிருந்து நானுமொரு பெண்மதலை நல்ல மகவாக தானுமோராண்மதலை தலைவன் தனைவாங்கி சம்மந்தமாகித் தானிருந்து நாடாண்டு உம்மந் தமான உதவிபெற வேணுமென்று இருபேருமிருந்து எனைநினைந்து மாமுனிவர் உருவேற்றிவேள்வி ஓமமதுவளர்க்க இந்தப்படியே இவர்களிரு மாமுனியும் எந்தன் தனைநோக்கி இருந்தார் தவசுகண்டீர் அல்லாமற்பின்னும் அரக்கன்ராவணன்தனக்கு கொல்லாமற்கொல்லவொரு குறுமுனிவன் சாபமுண்டு அரக்கன் வரம்வேண்டி அவன்போகுமவ்வளவில் இரக்கமாய் மாமுனியும் இருந்தான் தவசதிலே தவசுநிலை பாராமல் தலைபத்தரக்கனுந்தான் பவிசு மதமாய்ப் படுவதறியாமல் முனியையவன் காலால் ஒத்தினான் மாபாவி அநியாயப்பாவி அரக்கனவன்றனக்கு கூறினான் மாமுனியும் கொள்ளை கொண்டச்சாபமது தூறின சாபத்துல்லியத்தை நீர்கேளும் மாலை மிகப்போற்றி வாய்த்ததவம் நிற்கையிலே காலெடுத்து ஒத்தினையே கள்ளாவுன்றனக்கு இந்தத் தவசுதனில் ஈசுரரைத் தானினைந்து உந்தன் தனையறுக்க ஒரு ராமபாணமது வந்து பிறந்திடவும் மாயனதைத்தானெடுத்து உந்தனுட மார்பில் ஊடுருவவிடவும் துசுவீசு மாமுனிவன் தசரதராய்ப் பூமிதனில் பிறந்து இருந்திடவும் பின்னுஞ் சுகசீல மாமுனியும் தினகரராய் வந்து பிறந்திடவும் ஓமுனிக்கு லட்சமியும் வில்லோடுதித்திடவும் இராமபாணத்தோடே இராமர் தசரதற்கு முராகமத்தின் படியே உலகிலுதித்திடவும் பாணமது தன்னாலும் பத்தினிதன் கற்பாலும் நாணங்கெட்டு அரக்காவுன் நல்லதலைப் பத்திழந்து சேனைத்தளமிழந்து சிரசிழந்து வாழ்விழந்து வானரங்கள் வந்து உன் வையகத்தைச் சுட்டழித்து உன்சடலமெல்லாம் உழுத்துப் புழுப்புழுத்து தன்சடலம் விட்டுச் சண்டாளா நீ மடிவாய் வேண்டுவேன் தவசு விமலன் தனைநோக்கி ஆண்டுபன்னிரண்டாய் அவன்றவசு நின்றனனே நின்ற தவத்தின் நிலைமையறிந்துமையாள் அன்றைக்கு வரமது அருளினாளாயிழையும் உரைத்த மொழிகேட்டு உற்ற முனிதனக்கு துரைத்தனமாயிதனைச் சொல்லி விடைகொடுத்தேன் இப்படியே மாமுனிக்கு ஈந்திருக்கு மிவ்வரங்கள் அப்படியே துசுவீசு மாமுனியுஞ் சுகசீல மாமுனியும் நம்மை வருந்தி நிஷ்டை செய்யுகிறார் ஓமுனிக்கு நல்ல ஒழுங்கு செய்யவேணுமல்லோ அல்லாமல் தேவாதி அபயம் பொறுக்கரிது எல்லாமிதுகண்டு இப்பிறவி செய்யுமென்றார் நல்லதுகாணென்று நல்லதிருலட்சுமியை வல்லமுள்ள பெட்டகத்தில் வைத்தார் காணீசுரரும் இராமபாணமதையும் நன்றாய்ப் பிறவிசெய்ய சீராமஸ்ரீயம்பகனும் சிவனும் அகமகிழ்ந்து என்ன விதமாய் இதுபிறவி செய்வோமென்று பொன்னம்பலத்தோர் புத்திநொந்து தாமிருந்தார் ஈசுரருமப்போ இரத்தின கிரிதனிலே வீசு பரனும் வேள்வியது வளர்க்க வேள்வி வளர்த்து விமலனுருவேற்ற தாழ்வில்லா ஆயன் தற்சொரூபந்தானாகி திருக்கணைக்காலில் செய்ய நரம்புருவி கருக்கணமாய் ராம பாணக்கணையெனவே உறுதிகொண்டு வேள்விதனில் விட்டெறிந்தாரம்மானை பிறிதிகொண்டு லட்சுமியும் பிலத்த திருக்கரத்தில் தூண்டு விரலில் துய்ய நரம்புருவி வேண்டும் பெரிய வீரவில்லீதெனவே வேராரு மிந்தவில்லை அம்பேற்றக் கூடாமல் ஸ்ரீராமரேற்ற சிந்தித்தாளம்மானை உடனேயது வில்லாய் ஓமமதில் பிறக்க திடமாக ராமர் திருக்கணைக்கால் நரம்பு பாணமதாய் வேள்விதனில் பரிவாய்ப் பிறந்திடவே தாணரும் வானோரும் சங்கத்தோருங் காண எல்லோருங்கண்டு இதுகண் மாயமெனவே வல்லோர்களான வாய்த்த தேவாதியெல்லாம் சங்கடங்கள் தீர்ந்ததென்று சந்தோசங் கொண்டாட அங்கணங்களான அலகைமிகக் கூத்தாட இராமபாணத்தாலே இராவண சூரனையும் ஸ்ரீராமர் சென்று தென்னிலங்கை தன்னிலுள்ள அரக்கர் குலமறுப்பார் அச்சுதனாரென்று சொல்லி இரக்கமுள்ள தேவரெல்லாம் இரங்கிமிகக்கொண்டாட வில்லோடுடன் பிறந்த வீரலட்சுமியெனவே வல்லோர்களாராலும் வந்திந்த வில்லதையும் வளைத்தோர்க்கு நல்ல மாலைசூட்டலாமெனவே தழைத்த சுகசீல தாட்டீக மாமுனியை தினகரராய்ப் பூமிதனில் செய்துவைத்து லட்சுமியை மனோகரமாய்ப் பூமியிலே வைத்தபெட்டகத்தோடே வில்லோடே பிறக்க விமலனருளினராம் நல்ல துசுவீசு மாமுனியை நாடதிலே தசரதராய்த் தோன்றவைத்து தேசாதி ராசனுக்கு விசமாலை ராமருமாய் வீரக்கணையோடே கூடப் பிறக்கக் குன்றெடுத்தார் தான்துயிலும் நீட அரவணையை நீதலட்சுமணராக்கித் தலையணை மெத்தையையும் சத்துருகன் பரதனுமாய் நிலைவரமாய் ஈசன் நெறியாய்ப் பிறவிசெய்ய தேவரையும் வானரமாய் சிவனார் பிறவிசெய்ய மூவரையும்பிறவி உள்ளதெல்லாஞ்செய்திடவே கொடுமுடியாய்ப் பிறந்த கோளிலங்கைப்பாவிகளை முடியடிவேரில்லாமல் முழுதுமறுப்பதற்கு வேண்டும் பிறவியெல்லாம் விமலனருளிமிக தாண்டவ சங்காரம் தானிதென்றாரம்மானை ஸ்ரீராமரும் இராவணனைச் செயிக்க ஒருவிதமாய் இராமபாணத்தோடே நாட்டில் பிறந்தனராம் தென்னிலங்கை தான்முடிய சீதை சிறையிருக்க பொன்னரிய வில்லோடு உடன்பிறந்தாள் பொன்மாது தேவரெலாம் வானரமாய் தென்னிலங்கைசுட்டழிக்க பூவர் சுகுமுனிவர் போர்விசுவகன்மனெனும் வானரத்துக் கேற்ற மதிமந்திரி தானாகி தானவரையுமனுப்பித் தரணிதனிலெம்பெருமாள் லட்சுமணரெனவே ஏற்ற சத்துருகன் பரதன் கட்சியுடன் மாயன் கணையோடுடன் பிறந்தார்

இராவணன் தன்னைக்கொல்ல இராமபாணங்களோடே ஸ்ரீராமராய் மாயன் தானும் தசரதன் தனக்குத்தோன்ற விராகன மாது சீதை வில்லுடனுதிக்கத்தேவர் மராமரக்குலங்களாகி வந்தனர் புவியின் மீதே

இப்படியே ராவணற்கு எல்லோரும் பகையாய் முப்படியே உள்ள முறைநூற்படியாலே மாபலியை வதைத்து மண்ணுக்குள் சிறைவைக்க வாமனராய் முன்னாள் அவதரித்து மாயவரும் முன்னூராயிரரூபமாய் உலகளந்த வேசமதில் எண்ணாயிரத்தில் எடுத்தார் ஸ்ரீராமர் உரு இப்படியே ராமர் ஏற்ற தசரதற்கு அப்படியே பிறந்து அங்கிருந்தாரம்மானை சீதை வளர திருவில்லுந்தான்வளர கோதைக் குழல்சீதைக் கோமான் மிகவளர சிராமர் பிறப்போர் சிறப்பாய் வளர்ந்திடவே இராமர் குலங்கள் இரகசிய மாய்வளர அரக்கன் கொடுமை அண்டமளவே வளர சீதை வளர்ந்து சிறந்த வயதானதிலே மாதை மணமிடவே மாதா மனதிலுற்று தன்புருசனோடே தையல்நின்றேது சொல்வாள் அம்பும்வில்லும்வளர ஆயிழையுந்தான்வளர்ந்து பக்குவங்களாச்சே பைங்கிளிக்கு மாலையிட ஒக்குவ தென்ன உரைப்பீரென்னுத்தமரே என்று மடமாது ஏற்ற தினகரரை நின்று வணங்கி நேரிழையுஞ்சொல்கையிலே வில்லை வளைத்தல்லவோ மெல்லிமணஞ் சூடுவது வல்ல கலைக்கோட்டு மாமுனியைத் தான்வருத்தி இன்னபடி யீதென்று எடுத்துரைக்க மாமுனியும் அன்னப் பொழுதில் அருளுவான் மாமுனியும் பூராசமான புவியைம்பத்தாறிலுள்ள இராசாதி ராசரெல்லாம் இப்போ வரவழைத்து வில்லை வளைத்தவர்க்கு மெல்லிமணஞ்சூட்டுமென்று சொல்லியே மாமுனியும் தசரதனார் கண்மணியை கண்டு மாமுனியும் கண்ணனார்க்கேதுரைப்பான் பண்டு உனக்குப் பரம சிவனாரும் வில்வளைத்து மாலையிட விதியில் விதித்திருக்கு செல்லந்த மன்னன் தினகரானர் தன்மகட்கு இன்று கலியாணம் இப்போது அங்குசென்றால் பண்டு அமைத்த பலனுனக்குக் கிட்டுமிப்போ என்று கலைக்கோட்டு மாமுனியுந்தானேகி சென்றான் தினகரரின் செல்வி மணந்தனிலே அன்றைம் பத்தாறு அரசருக்குமாளனுப்பி தேசாதி தேசர் திசைவென்றமன்னரெல்லாம் மேசாதியானோரும்மேவுந்தெய்வேந்திரனும் இராவண சூரன் இராமர்முதலானவரும் இராமர்குல ராசாதி நல்லமன்னர் வந்தனராம் வில்லை வளைத்து வில்லில் நாண்பூட்டாமல் முல்லை மன்னரெல்லாம் முகம்வாடிப்போயிருந்தார் இராமரெடுத்து இராமசரமேற்றி ராமர் மணஞ்செய்தார் சீதைத் திருமாதை மணம் முகித்துவானோர் மங்கள கீதத்தோடே துணைவர் தலைவரொடு சென்றார் அயோத்தியிலே அயோத்தியாபுரியில் ஆனதம்பிமாரோடும் கையேற்று வந்த கன்னி திருவோடும் வாழ்ந்திருக்கும் நாளில் மாதா கைகேசியம்மை தாழ்ந்தமொழி சொன்னதினால் தம்பி பரதனையும் நாடாள வைத்து நல்லஸ்ரீ ராமருந்தான் கூடவொரு தம்பியோடும் குழல்சீதை மாதோடும் நாடி நடந்தார் நல்ல வனவாசமதில் வாடிவந்து கானகத்தில் வாழ்ந்திருக்கும் நாளையிலே லட்சுமணருமங்கே ஏற்றகனி தான்பறிக்க கட்சியுடன் நடந்து காட்டில் மிகப்போக சூர்ப்பநகை தன்மகனும் துய்ய தவசுநிற்க ஆர்ப்பரவாயீசர் ஆகாசத்தேவழியே வாளை அயச்சார் வாய்த்த பரமேசுரரும் தாழ வரும்போது தாமனந்த லட்சுமணர் கண்டந்த வாளைக் கைநீட்டித் தான்பிடித்து துண்டம் விழஆலைத் துஞ்சிவிழ வெட்டினர்காண் பட்டந்த ஆலும் படபடெனச்சாய்ந்திடவே வெட்டுண்டு வீழ்ந்தான் மீண்டுதிரம் பாய்ந்ததுவே அரக்கன்தாய் கண்டு அலறி வெகுண்டெழுந்து இரக்கமில்லாச் சூர்ப்பநகை இலட்சுமணரைத்தேடி தேடி ஸ்ரீராமர் சீர்பாதங்கண்டணுகி நாடியெனைத்தாவுமென்று நாணமில்லாதுரைத்தாள் என்பாரியிங்கே இருக்கவே வேறொருவர் தன்பாரி தன்னைத் விரும்பேன்நீ போடியென்றார் போடிநீ யென்ற புத்திதனைக் கேட்டரக்கி தேடியே லட்சுமணரைச் சேரவுறவாடிநின்றாள் உறவாடி நின்ற ஒயிலையவரறிந்து பறபோடியென்று பம்பத்தன மூக்கரிந்தார் மூக்கும் செவியும் முகமும் வடிவிழந்து நாக்குரைக்க வாடி நாணங்கெட்டத் தீயரக்கி தன்னுடனே கூடித் தமயனெனப்பிறந்த மன்னன் ராவணன் தமக்கு வகையாயுரைக்கலுற்றாள் காட்டிலொருபெண் கமலத் திருமகள்போல் நாட்டிலொவ்வாக்கன்னி நான்கண்டதில்லையண்ணே உன்றனக்கு ஆகுமென்று உற்றவளை நான்பிடித்தேன் என்றனுட மூக்கரிந்தோர் இருவருண்டல்லாது மற்றொருவரங்கே வாழ்ந்திருக்கக்கண்டதில்லை கற்றொருவர் காணாது கையிலம்பு காணாது மருவனைய அண்ணேவுன் வாய்த்த விரலதிலே ஒருயிறைக்கே வுண்டு உற்றஅவர் தன்னுயரம் என்றந்த அரக்கி ஈனம்பல துரைக்க அன்றந்த ராவணனும் ஆகாசத் தேரேறி பிச்சைக் கெனவே புறப்பட்டான் காடதிலே அச்சமில்லா லட்சுமணர் ஆனஸ்ரீ ராமருமாய் மானின் பிறகே மனம் வைத்து நின்றிடவே லட்சுமி இடத்தில் நாடியே பிச்சை என்றான் அச்சமயம் லட்சுமியும் ஆதி முறைப்படியே முன்னுருவாயிருந்த மேதை என்ற ஆச்சியையும் என்னுருவாக நீயும் இருந்து பிச்சை ஈ என்றாள் அந்நேரம் ராவணனும் அங்கு வந்து பிச்சைகேட்டு உன்னை எடுத்து தேர் மேல் ஊக்கமுடன் வைத்து சிறையிலே வைப்பான் சீர்வனத்தில் இராவணன் மறைவிலே வைத்து வாய்த்த காவல் செய்திடுவான் என்தலைவனான ஏற்ற ஸ்ரீ ராமர் வந்து உன்னை எடுத்து போகும் இராவணன் குலமறுத்து அயோத்தி ஏகும் வழியில் அக்கினியில் நீயும் போது கையேற்க வருவேனென கருத்தாய் வரம் கொடுத்து மிக்கான சீதை என மேதையை ஆக்கிவைத்து அக்கினி தேவன் இடத்தில் அருந்தவசு செய்தனளே அன்று வரம் வேண்டி ஆதி மேதை யானவளும் நின்று அரக்கனுக்கு நேராக பிச்சை இட்டாள் வானின் செயலால் வானவர்கள் பார்த்திருக்க நாராயணர்தேவி நல்லதிருலெட்சுமி என ஏராத பாவி இலச்சைகெட்டத் தீயரக்கன் தேரிலே அம்மையென திருடிக்கொண்டேகினனே பாரிலே வுள்ள பட்சி பறவைகளும் கண்டு பதறிக் கதறிமிக அழவே அண்டர் முனிதேவர் எல்லோருந்தாமழவே மான்வேட்டையாடி மாரீசனை யறுத்து தான்வேட்டையாடும் தகையாலே தம்பியுடன் வந்தார் காண் லட்சுமியும் வாழ்ந்திருக்கு மண்டபத்தில் பந்தார் குழலனைய பாவையரைக் காணாமல் கலங்கி மிகவாடி கண்ணீர் மிகச்சொரிய மலங்கியே லட்சுமணர் மண்ணிற்புரண்டழுதார் என்னே மணியே எனைப்பெற்ற மாதாவே பொன்னேயமுதே பெற்றவளே யென்றழுதார் இராமர் முகம்வாடி நாயகியைத் தான்தேடி ஸ்ரீராமர்கலங்கி சினேகமுடனழுதார் மனுவாய்ப் பிறக்க மனுவுடம்பு கொண்டதினால் தனுவானதையடக்கித் தானே புலம்பலுற்றார் அன்ன மயிலோடும் அன்றில் குயிலோடும் புன்னை மலரோடும் புலம்பி மிகவழுதார் வன்னமுள்ள யானை வாய்த்த சிங்கத்தோடும் பெண்ணமுதைக் கண்டீரோ என்று புலம்பலுற்றார் இப்படியே ராமரும் இளையபெருமாளும் அப்படியே சொல்லி அழுதழுது தான்வாடி சோலை மரத்தின்கீழ்ச் சோர்ந்து முகம்வாடி மாலவரும் தம்பி மடிமேல் துயின்றிருக்க அஞ்சனையாள்பெற்ற அனுமனதில் வந்தடைய சஞ்சலமேதென்று சாரதியுங்தெண்டனிட மின்செறியு மாயன் விழித்தவனைத் தானோக்கி கவசகுண்டலமணிந்த கார்குத்தா யாரெனவே உபசரித்துச் சொன்ன உச்சிதத்தைத் தானறிந்து அய்யரே யென்னை ஆட்கொண்ட நாயகமே மெய்யரே நீங்கள் மெலிந்திருப்பதேதெனவே கேட்க அனுமன் கிருபைகூர்ந்தெம்பெருமாள் சேர்க்கையுடன் சொன்னார் சீதையுட தன்வளமை ஏற்கை யாகக்கேட்டு இயலுனுமன் ஏதுசொல்வான்

நல்லது அடியேன் கேட்டேன் நானினிவுரைக்கும் வாறு சொல்லவுங் கேட்பீரெந்தன் திருவடையாளஞ்சொன்னீர் வல்லவர் தகப்பனானீர் வரந்தரவேணு மிப்போ புல்லர்வாழிலங்கை சுட்டு அம்மையைக்கூட்டி வாறேன்

என்தாய் மொழிந்த இயலடையாளத்தாலே முன்தானே பெற்ற முதல்வர்தானென்றனக்கு அய்யா தானாகும் அடைக்கலமே யாமடியார் பொய்யாம லென்றன் பேரனுமன் கண்டீரே இலங்கை தனைச்சுட்டு அம்மையைக் கூட்டிவர மலங்காதே போவென்று வாக்கருள வேணுமையா சுக்ரீவன் சாம்புவனும் சுத்தமுள்ள வீரர்களும் ஒக்கவொரு முகமாய் உடையோன் பதமடைய கெருடன் மிகமறித்துக் கேலியிட்ட ஞாயமதும் திருடன் கொடிய தீபாவி ராவணனும் அம்மை தனைக்கொண்டு அவன்கோட்டையானதிலே செம்மையில்லாப்பாவி சிறையில்வைத்த ஞாயமதும் எல்லாமறிந்து எம்பெருமாள் கோபமுற்று வெல்லத் துணிந்தார் மிகுபடைகள் தான்திரட்டி எழுபது வெள்ளம் ஏற்றவானரங்களையும் முழுதும் வருத்தி ஒப்பமிட்டெம்பெருமாள் விசுவகம்மாளனையும் விரைவாயருகழைத்து வசுவாசு மைந்தன் வாய்த்த அனுமனையும் அனுமன்தனையேவி ஆனமலையெடுத்து துனுமனுடனே தோயக் கடலதுக்குள் கோட்டையதிட்டுக் குக்குளித்தங்கேகி ஓட்டனாய் விட்டார் உற்ற அனுமனையும் பூட்டமுடன் வாயு புத்திரனுந்தான்மகிழ்ந்து நாட்டமுடனிலங்கை நாடாளும் பாதகனை கண்டு முடுகிக் கருத்தழியத் தான்பேசி கொண்டு இலங்கை குப்பையிடத் தீக்கொளுத்தி மால்கொடுத்த வாளி மாதுகையிலேகொடுத்து வால்கொண்டு வீசி வனங்காவு தானழித்துக் கேதார மாமலையும் கீர்த்தியுடனேகுதித்து பாதாரமென்று பணிந்தானே ராமரையும் அரக்கனவன்பேசும் அநியாயந் தான்கேட்டு இரக்கமுள்ள எம்பெருமாள் எழுந்தார் படைக்கெனவே படைக்கு இவர்நடக்க பார்த்து விபீஷணனும் அடைக்கல மென்று அவர்பாதஞ்சேர்ந்தானே சேர்ந்தவுடனே திருமால் மனமகிழ்ந்து ஓர்ந்த படையோடே உடன்யுத்தஞ்செய்திடவே அரக்கன் படையும் அச்சுதனார் தன்படையும் இரக்கமில்லாமல் இருபேருஞ்சண்டையிட்டார் படைபொருது வெல்லாமல் பத்துத்தலையுள்ளோனும் கடகரியுந்தோற்றுக் கையிழந்தானம்மானை பத்துத் தலையும் பார்மீதிலற்றுவிழ மற்று நிகரொவ்வா மாயத் திருநெடுமால் அரக்க னுயிரு அங்குமிங்கும் நிற்கையிலே இரக்கமுடன் நின்றங்கு ஏதுரைப்பாரம்மானை கேளாய்நீ ராவணா கிரேதாயுகந்தனிலே பாழாய் இரணியனாய்ப் பாரில் பிறந்திருந்தாய் உன்னிடுக்கங் கண்டு உன்புதல்வனானாகி தன்னருகில் வந்துனக்கு தைரியமாய் புத்திசொன்னேன் சிம்மமாய்ப் பிறந்து வதைத்தேனான் பாரறிய சென்மபகை நானென்று பண்பு மிகக்கூற அப்போது நீயும் அன்றுரைத்த வார்த்தையினால் இப்போது உன்குலங்கள் எல்லாங் கருவறுத்து நாணமில்லாது உன்னிலங்கை நகரை தீயாலழித்து பாணமொன்றாலுன்னைப் படஎய்தேன் கண்டாயே அல்லாமலுன்றனக்கு அங்கமொரு நூறு எல்லாரும் வெல்லா ஈசன் கயிலையதும் எடுத்தபெலமுமுண்டே ஈரஞ்சு சென்னியுண்டே கடுத்தபெலமுள்ள காலாட்கள் பொரவுண்டே இந்திரனை வென்ற ஏற்ற புதல்வருண்டே சந்திரனுஞ் சூரியனும் தன்னிடத்திலுண்டல்லவோ மூணுலோ கத்தாரும் உன்னிடத்திலுண்டல்லவோ ஆணுவங்கள்பேசினையே அம்பொன்றில் மாண்டாயே கோலுபோலே உயர்ந்த கொடும்பாவி நீகேளு நாலு முழமல்லவோ நல்லதலை ஒன்றல்லவோ என்கை வாளி எடுத்துவிடத் தாங்காமல் உன்கை காலுமற்று உயிரழிந்து மாண்டாயே பத்து மலைபோலே பருந்தலைகள் பெற்றதெல்லாம் இத்தலத்தில் கண்டிலனே என்கையால் மாண்டாயே மாண்டாய்நீ யென்று வசைகூறக் கேட்டரக்கன் ஏண்டா மழுப்புகிறாய் இராமனோ கொல்லுவது தம்பி யெனப்பிறந்து சத்துரு போல் தான்சமைந்து என்பெலங்களெல்லாம் எடுத்துரைத்தானுன்றனுக்கு ஆனதாலென்னுயிரை அடையாளம் பார்த்துலக்காய் ஊனமுற எய்தாய் உயிரழிந்தேனல்லாது நீயோடா என்பெலங்கள் நிலைபார்த்துக்கொல்லுவது பேயா நீபோடா புலம்பாதே யென்றானே அப்போது மாயன் அதிகசீற்றத்துடனே ஒப்பொன்றில்லாதார் உரைப்பார் காணம்மானை

உன்னுட தம்பி யாலே உயிர்நிலையறிந்து யானும் என்னுடசரத்தால் கொன்றேன் என்றியம்பிய அரக்காவுன்னை பின்னுகப் பிறப்பில் நூறு பிறப்புடன் பிறவி செய்து இன்னொரு ஆளின் கையால் இறந்திடச்செய்வேனுன்னை

என்றுசொல்லி மாயன் இராவணனை சங்கரித்து அன்று கயிலை அரனிடத்தில் சென்றிருந்தார் அன்று மேதை சிறையை அரிராமரும் மாற்றி வென்ற இலங்கைதனை விபீஷணருக்கு பட்டம் சூட்டி நன்றாய் அயோத்திக்கு அவர்கள் வரும் வழிதனிலே ஒன்றான ஜானகியும் கனலாறாய் வந்தனளே மேதையும் வந்துமேவி ஆற்றில் இறங்கிடவே மேதையை சீதை மேவி ஆற்றிலே அனுப்பி சீதையும் இராமரோடு சேர்ந்து நடந்தனளே மாதை மிகப்பார்த்து மாயராமர் ஏதுரைப்பார் இதுவரையும் லட்சுமியே எங்கே மறைந்திருந்தாய் அது உரைத்து லட்சுமியும் அன்று வழி நடந்தாள்

துவாபரயுகம்-கம்சன், துரியோதனன், கர்ணன், தக்சன் முன்னேயுள்ள துண்டம் ஓரிரண்டு உள்ளதிலே ஒன்னேயொரு துண்டம் ஒருநூறு பங்குவைத்து துவாபரயுகம் வகுத்துத் துரியோதனனெனவே கிரேதா யுகமழித்துக் கீழுலகில் தோணவைத்தார் பாவி பிறக்க பச்சைமால் தான்கூட தாவிப் பிறந்த தம்பியர் மூவரையும் விபீஷணனும் நல்ல வெற்றிச்சாம்புவனையும் அபூருவமாய்க் குந்தியர்க்கு ஐவராய் பிறவிசெய்தார் ஐவரையும் பூமி அதிலே பிறவிசெய்து மொய்குழலான மெல்லி திரௌபதியாய் அம்மை திருக்குழலில் அமர்ந்திருந்தபொற்சடையை நம்மை விபீஷணற்கு நல்மகளாக்கிவைத்து அரக்கர் குலமறுக்க அம்மை யெழுந்தருளி இரக்கர் புரமேகி இருக்குமந்த நாளையிலே தோழியாய் முன்னிருந்த துய்யத்திரிசடையை நாழிகை தன்னில் நாதன் பிறவிசெய்தார் பின்னுமந்த மாயன் பெரியோனடிவணங்கி நின்னுகரங் குவித்து நெடியோனுரைத்தனராம் எழுபது வெள்ளம் ஏற்றவானரங்களுடன் முழுது மிலங்கைமுடித்துநான் நிற்கையிலே என்படைகளான எழுபது வெள்ளமதிலும் உன்படைக ளெல்லாம் உயிரழிந்தாரெனவே ஆராய்ந்து என்படையை அளவிட்டு நிற்கையிலே தோராத மன்னன் துடியானச் சேவகன்தான் ஒருவன் தனைக்காணேன் உடனே மறலிதனை வருக அழைத்து வகையேதெனக்கேட்க நானில்லை யென்றே நமன்தான் மிகவுரைக்க ஏனில்லை யென்று இறுக்கிநான் கேட்கையிலே அய்யாவே உம்முடைய ஆளான வீரனைத்தான் கையாலமுள்ள கும்பகர்ணனொருசமரில் பிடித்து நசுக்கிப் பிசைந்து திலகமிட்டான் அடுத்துநின்று பார்த்து அரக்கனவனுயிரை கொண்டேகி நானும் கொடுநரகில் வைத்திருக்கேன் என்றே தான்மறலி இத்தனையுஞ்சொன்னான் ஆனதால் கும்ப கர்ணனவன்தனையும் ஈனமில்லாக் கஞ்சன் எனப்படையுமிவ்வுகத்தில் என்றே தான் மாயன் இதுவுரைக்க ஈசுரரும் அன்றேதான் கும்பனையும் அப்படியே தான்படைத்தார் படைத்த சடமதுக்குப் பரமனுயிர்கொடுக்க சடத்தை மிகயெழுப்பித் தானனுப்ப ஈசுரரும் துவாபரயுகமெனவே தொன்முறையைத் தான்பார்த்து தவறாத வண்ணம் தான்படைத்தாரெல்லோரும் அப்படியே ஈசர் அன்று படைத்தபடி இப்படியே வந்து இவர்கள் பிறந்தனராம் முன்னுள்ள பீடத்து உதிரமெல்லாந் தானெழுந்து அன்றுள்ள பாவி அவன்கூடத் தானிருக்க அரக்கனிராவணனும் அதிகத் துரியோதனனாய் மூர்க்கன் பிறப்போர் ஒருநூறு பேரோடு வந்து பிறந்தான் வையகத்திலம்மானை சந்துபயில் மாயன் தன்னோடுடன்பிறந்த தம்பி பரதன் சத்ருக்கன் லட்சுமணன் நம்பி விபீஷணனும் நல்லதொரு சாம்புவனும் ஐவரும் பூமிதனில் அப்போது தோன்றினராம் தெய்வத் திரிசடையும் தேவி துரோபதையாய் மெய்வரம்பாயுள்ள மேன்மையதின்படியே ஐவருட தேவியென்று ஆயிழையுந்தோன்றினளாம் இப்படியே ஐபேரும் ஏற்றரிய நூற்றுவரும் அப்படியே பங்கு வகைபாதியாய்ப் பிறந்தார் இராச்சியத்திலுள்ள இறைதான முள்ளதெல்லாம் தராச்சியமாய்ப்பாதியெனத் தங்கள்சில நாளாண்டார் கும்பகர்ணனென்ற கொடும்பாவி கம்சனுமாய் வம்பகனாய் வந்து மதுரைதனில் பிறந்தான் கம்சனவன் பிறந்து கடிய கொடியவனாய் வஞ்சனையும் பெற்ற மாதா பிதாக்களையும் சிறையதிலே வைத்துத் தேசமதைத் தானாண்டு இறைமிகுதி வேண்டி இராச்சியத்தையாண்டனனே ஆனதாலவனுடைய அம்புவியி லுள்ளோர்கள் ஈனதுன்பமாகி இருந்தார் பயமடைந்து தேவரையும் வானவரைத் தேவேந்திரன் வரையும் மூவரையுஞ் சற்றும் முனியாமல் மாபாவி தெய்வ மடவாரைத் திருக்கவரி வீசிடவே வைவனவன்பிடித்து வாவெனவே ஆள்விடுவான் வருணனொடு வாயுவையும் வலுவிலங்கில் போட்டு அருணன் முதலாய் அந்தி வரும்வரையும் வேலையவன்கொண்டு விடுவானவன்தொழிலாய் மாலை நினையான் மறையைமிக நினையான் ஆலயங்கள் கோயில் அன்ன மடங்கள்வையான் சாலயங்கள் செய்யான் தர்மசிந்தனைகள்செய்யான் அந்தணர்க்குமீயான் அன்னதானங்களிடான் பந்தலிட்டுத் தண்ணீர் பக்தர்தமக்களியான் ஆவு தனையடைத்து அதுக்கிரைகள் போடாமல் கோவுகளைக் கொல்வான் கொடும்பாவி நெட்டூரன் கண்ட வழக்குரையான் கைக்கூலி கேட்டடிப்பான் சண்டனையாருவென்பான் தன்னைப்பாவித்திருப்பான் எம்மைப்படைக்க ஏலுமோ மற்றொருவர் நம்மைப்படைத்ததுவும் நான்தானெனவுரைப்பான் இப்படியே கம்சன் எதிரியில்லையென்றுசொல்லி அப்படியே மீறி ஆண்டான்காணம்புவியை மேலோகந்தன்னில் மிகுத்ததெய்வக்கன்னியரில் வாலோகமான வாய்த்தகன்னி தேவகியும் ரோகணியாளென்னும் நுதல்மடவாரண்டுபேரும் புரோகணிய மான பொய்கைநீர் தானாடி அக்காளுந் தங்கையுமாய் அவர்கள்ரண்டு மாமயிலும் மிக்கான பட்டுடுத்து மேவிவழி தான்வரவே மாயன் சிறுமதலை வடிவெடுத்துத் தானழவே ஆயனுட கோலம் அறியாமல் மங்கையர்கள் தெய்வகியும் பார்த்துச் சொல்லுவாள் தங்கையிடம் நெய்நிதியக் கன்னி நெடியவிழி ரோகணியே இன்னா அழுது இதில்கிடக்கும் ஆண்மதலை பொன்னான பூமியிலும் பெண்ணே நான்கண்டதில்லை காலில் சிவசக்கரமும் கையில் மால்சக்கரமும் மேலில்சத்தி சக்கரமும் விழிசரசு சக்கரமும் வாயு பகவான் வடிவுமிகப் போலே ஆயும் பலகல்வி ஆராய்ந்த அச்சுதர்போல் கண்கொள்ளாக் காட்சி கைமதலை தன்னழகு விண்கொள்ளாக் காட்சி மெல்லியரே யிம்மதலை இம்மதலை தன்னை எடுத்துநாம் தாலாட்டி பொன்மதலைதன்னைப் போட்டுவைத்துப்போவோம் என்றுசொல்லி மாதர் இருபேருஞ்சம்மதித்து வண்டுசுற்று மெல்லி வந்தெடுத்தாரம்மானை மதலைதனையெடுத்து மார்போடுதானணைத்து குதலை மொழியமர்த்திக் கோதைரண்டு மாமயிலும் கயிலையதுக்கேகி கறைக்கண்டர் பாதமதில் மயிலனைய மாமயிலார் வந்தார் காணம்மானை வந்த மாடவர்கள் மார்பில் அமுதிளகி அந்தப் பரம ஈசுரனார் அவரறிந்து கன்னியரே உங்கள் கற்பு அகன்றதென்ன மின்னித்தனங்கள் மெல்லியுடலானதென்ன பச்சை நிறமேனி பால்வீச்சு வீசுதென்ன அச்சமில்லாக் கொங்கை அயர்ந்து உடல் வாடினதேன் ஏதெனவே சொல்லுமென்று ஈசுரனார் தான்கேட்க சூதகமாய் நின்ற தோகையர்கள் வாடிநின்றார்

வாடியே மடவார் தாமும் மார்பதில் துகிலை மூடி கோடியே அயர்ந்துஏங்கிக் குருவதைப்பாரா வண்ணம் நாடியே தாழ்ந்து பெண்கள் நாணியே நின்ற தன்மை தேடியே மாயன் செய்த செயலெனஅறிந்தாரீசர்

அறிந்தார் மாயன் சேயாகி அழுதே இரங்குங் குரலதினால் செறிந்தார் குழலார்கள் சேர்த்தே யெடுத்தணைத்ததுவும் பறிந்தே யிவர்கள் நாணினதும் பாலது தனத்தில் பாய்ந்ததும் அறிந்தே கன்னியிருவரையும் அழித்தேபிறவி செய்தனராம்

பிறவி செய்யவென்று பெரியோனுரைக்கபெண்ணார் அறவி யழுது முகம்வாடி அரனாரடியை மிகப்போற்றி திறவி முதலே திரவியமே சிவமே உமது செயலைவிட்டு இறவியானாலெங்களுக்கு இனிமேல்பிறவி வேண்டாமே

வேண்டாமெனவே மெல்லியர்கள் விமலனடியை மிகப்போற்ற மாண்டாரெலும்பை மார்பணியும் மறையோன் மகிழ்ந்துரைப்பார் தூண்டாச்சுடரோன் திருமாலை சேயென்றெடுத்த செய்கையால் ஆண்டாருமக்கு மகனாகி அதின்மேல் பதவி உங்களுக்கே

மெல்லியரே உங்களுட மெய்வரம்பு தப்பினதால் செல்லுவீர் துவாரகா சீமையில் விதிபோலே என்றே அரனார் இருகன்னி யோடுரைக்க அன்றே மடவார் ஆதிதனை நோக்கி ஆதியே நாதி ஆனந்த மெய்ப்பொருளே சோதியே அநாதி சொரூபத் திருவிளக்கே அல்லாய்ப் பகலாய் ஆரிருளாய் நிற்போனே வல்லாய்ப் புவியை வார்த்தையொன்றாற்படைத்த ஆதிப் பொருளே அனாதித் திருவுளமே சோதிப் பொருளே சொல்லொணா தோவியமே எட்டாப் பொருளே எளியோர்க் கெளியோனே முட்டாத செல்வ முதலே முழுமணியே கண்ணுள் மணியே கருத்தினுள்ளானவனே பெண்ணுமாணாகிப் பிறப்பில்லா நின்றோனே இறப்புப் பிறப்பில்லாத எளியோர்க்கெளியோனே பிறப்பு இறப்பில்லாத பேசமுடியாதவனே கருவிதொண்ணூற்றாறும் காவலைந்து பேருடனே உருவு பிடித்து உயிர்ப்பிறவி செய்வோனே மூவரு முன்றன் முடிகாண மாட்டாமல் தேவருந் தேடித் திரிந்தலைய வைத்தோனே மவ்வவ் வாகி வருந்தி யவ்வும் ஒவ்வாகி செவ்வவ்வாய் நின்ற சிவனே சிவமணியே மாயனெடுத்த மகவான கோலமதை நேய மறியாமல் நெறிதவறிப்போனதினால் பின்னே நீரெங்களையும் பிறவி செய்யவேண்டாங்காண் எந்நேரங்கயிலை இப்பூமியானதிலே தெய்வப் பசுப்போல் தேவரீரெங்களையும் மெய்யறிவு கூடி மிகப்படையு மேலோனே அல்லாதே போனால் அடியார்களெங்களையும் இல்லாதே செய்யும் இனிப்பிறவி வேண்டாங்காண் அம்மை உமையாள் அருகே மிகஇருந்து உம்மையும் போற்றி உம்மூழியங்கள்செய்து பூவுலகில் நாங்கள் பெண்ணாய்ப் பிறந்ததுண்டால் பாவிகட்கு வேலைப் பண்ணி முடியாதே பூவு முடித்துப் பூமேடையும்பெருக்கி நாவுலகு மெய்க்க நல்லகவி தான்பாடி தம்புரு வீணை சப்தக் குழலுடனே இன்புருகராகம் இசைந்தமுறை தானிகழ்த்தி நரசென்மம் வாழும் நசுரக்குலங்களிலே அரசே நீரெங்களையும் அழுந்தப் படையாதேயும் இப்படியே கன்னி இரங்கியழுதிடவே அப்படியே கன்னி அவர்களுக்காதியுந்தான் சொல்லுவார் வேதச் சுடரோனதிசயித்து நல்லதுகாண் பெண்ணே நம்மைரண்டுஞ்சொல்லாதே மாயன் துவாபர வையகத்தில் போய்ப்பிறக்க வாயமிட்டாருங்களையும் மாதாவெனவாக்க நாமென்ன செய்வோம் நவ்விமால் செய்ததற்கு போமெனஈசர் பிறவிசெய்தாரம்மானை வாயு மகாதேவன் வடிவென்ற இச்சையினால் ஆசையாலுங்களுக்கு அவனே புருஷனென்றார் சங்கு சரங்கொண்ட தம்பியென்ற இச்சையினால் அங்குப்பகவதியும் அச்சுதருமுங்களுக்கு மதலையென வந்துதிப்பார் வையமது கொண்டாட குதலை மொழியாரே கொம்பேறிடையாரே விலங்குச் சிறையும் மிகுசிறையுமுங்களுக்கு மலங்குவது மெத்த மாய்ச்சலுண்டாகியபின் ஸ்ரீகிருஷ்ணனாகத் திருமாலுதித்தபின்பு குறுக்கிட்ட தோசம் கொடுமை மிகத்தீர்ந்து பின்னே பதவிப் பேறுண்டு முங்களுக்கு மின்னேரொளியை விமலன் பிறவிசெய்தார் பிறவியரன் செய்யப் பிறந்தார்கள் பூமியிலே திறவியது விட்டுத் தேவகியும் ரோகணியும் மதுரைதனில் வந்து மாபாவிக் கம்சனுக்கு இருதையல் மாமயிலார் ஏற்ற பிறப்பெனவே கூடப்பிறந்தால் கொடியதோசமெனவே தேட வொருராசன் சிறுவி யெனப்பிறந்தார் பிறந்தே கஞ்சனுக்குப் பிறப்பெனவே பேசுவாராம் சிறந்தேயிவர்கள் திருத்தமாய் வாழுகையில் இப்படியே கஞ்சன் இவர்களிரு தங்கையையும் அப்படியே கூட்டி அவன்வேட்டையாடிவர மாமுனிவன் தனக்கு வாய்த்திருந்த மாம்பழத்தை தாமுனிந்து கம்சன் தானக்கனி பறித்துத் தங்கையர்க்குத் தானீந்தான் சயோகமுனியறிந்து மங்கையர்க்கு வந்த மகனாலழிவையென்று மாயனுட ஏவலினால் மாமுனியு மப்போது பாயமுள்ள கம்சனுக்குப் படுசாப மிட்டனனே சாபமது கம்சன் தானறியா வண்ணமுந்தான் பாவமிக தான்வருத்தி மிகுத்தகேடுள்ள கம்சன் சோதிரியங்கேட்கத் தொடர்ந்தான் காணம்மானை அப்போது சோதிரிஷி அந்தமுனி சாபமதால் எப்போது ஆகிடினும் இடுக்கம்வரும் என்றுரைத்தான் சோதிரியங் கேட்டுத் துக்கமுற்றுக் கம்சனுந்தான் வேதியனையனுப்பி மிகுத்தகேடுள்ளகம்சன் கலியாணஞ் செய்யக் கருத்தல்லவென்றுசொல்லி வலியான கம்சன் வைத்திருந்தானம்மானை அந்தநல்ல செய்தி அறிந்தந்த நாரதரும் வந்து கம்சனுக்கு வளப்பமெல்லாஞ் சொல்லலுற்றார் கேளாய் நீ கஞ்சா கீர்த்தியுள்ள சாஸ்திரங்கள் வாழாத மங்கையரை வைத்திருந்தால் ராச்சியத்தில் தர்மந்தலைகெடுங்காண் சாஸ்திரத்துக்கேராது வர்மம் வந்துசிக்கும் மாரியது பெய்யாது கோத்திரத்துக்கேராது குடும்பந்தழையாது சூத்திர நோய்கள் சுற்றுமடா அக்குடும்பம் மானம் வரம்புகெட்டு மனுநீதி தானழிந்து ஊனமடா அக்குடும்பம் உலகத்துக்கேராது கோட்டையழியும் குளங்கரைகள் தானிடியும் நாட்டை முடிக்குமடா நல்லகன்னி காவல்வைத்தால் பொன்னான சீதை பிலத்தகற்பானதாலே கண்ணான இலங்கை கரிந்ததுவுங் கண்டிலையோ இப்படியே வேதம் இயம்பியிருப்பதினால் அப்படியே பெண்ணார் அவர்கள் ரண்டுபேரையுந்தான் காவலிட்டு வைத்தால் கற்பதினாலுன்றனக்கு பாவம் வந்து சுற்றும் பலிக்குமடா வேதமது ஆனதால் பெண்கள் அவர்கள் இரண்டுபேரையும் மானமுள்ள மன்னனுக்கு மணஞ்செய்துதான்கொடுத்து கெற்பமது உண்டாகிக் கீழே பிறக்கையிலே அப்போ நீ கொன்றாலும் ஆனாலும் பாரமில்லை என்றுஅந்த நாரதரும் இத்தனையும் தான்கூற நன்று மொழியெனவே நவ்வியே கம்சனுந்தான் எனக்குப்படிப்புரைத்த ஏற்றவசுதேவன் தனக்கு இவர்களையும் தான்சூட்ட வேணுமென்று வேணுமென்று சீட்டோட விரும்பி வசுதேவனுந்தான் வாணுவங்களோடே வந்தான் மதுரையிலே தேவகியை ரோகணியைச் சிறப்பாயலங்கரித்து வைபோகமுள்ள வசுதேவனையுமொப்பிவித்து சங்கீதத்தோடே தையல் ரண்டுபெண்களையும் மங்களத்தோடே வசுதேவன் தாலிவைத்து கட்டிக்கைபிடித்துக் கனசீதனத்தோடே கொட்டித்திமிர்த்தூதும் குழலோடே வீற்றிருந்தான் வாழ்ந்திருந்து பெண்கள் வயிறு வளருகையில் ஆய்ந்தறிந்து கம்சன் அருவிலங்கில் வைத்தனனே தெய்வகியாளுமழுது சிந்தைமுகம் வாடிநின்றாள் மெய்யன் வசுதேவன் மிகக்கலங்கி தானிருந்தான் மங்கை நல்லாள் ரோகணியும் வாடியழுதிருந்தாள் சங்கையுள்ள தேவர்களும் தையல்தெய்வக்கன்னியரும் எல்லோருங் கம்சனுட இடுக்கமது தன்னாலே அல்லோருமெத்த அறமெலிந்தாரம்மானை இப்படியே செய்யும் இடுக்கமதுக்காற்றாமல் அப்படியே மாயனுக்கு அபயம் அமரரிட நிலந்தேவி ஆகாய நீர்தேவியார்கூடி தலந்தேவி மன்னன் தனக்கேயபயமிட தேவாதி தேவர் தேவிமுறையாற்றாமல் மூவாதி முத்தன் முழித்தார்காண் பள்ளியது கண்டுதேவாதிகளும் கன்னி புவிமகளும் விண்டுரைக்கக்கூடாத விமலனடிபோற்றி ஆதியே அநாதி அய்யாநாராயணரே சோதியே வேதச் சுடரே சுடரொளியே பத்தர்க்கு நித்தா பரனேற்றார்க்கேற்றோனே உத்தமர்க்கு சொர்க்கம் உவந்து அளிப்போனே மூவர்க்கு மாதி முழுமணியாய் நின்றோனே தேவர்க்கும் நல்ல சிநேகமாய் நின்றோனே கிட்டவரார்க்கெட்டாத கிருஷ்ணாவுன் நற்பதத்தை கட்டவருமட்டான கருணாகரக்கடலே உச்சிச்சுழியே உம்மென்றெழுத்தோனே அச்சிச்சுழியே அம்மென்றெழுத்தோனே அஞ்செழுத்துமூன்றெழுத்தும் ஆதி’அ’என்றெழுத்தும் நெஞ்செழுத்துமெட்டெழுத்தும் நீயாகி நின்றோனே எண்ணொருபத்தெண்ணிரண்டும் இவ்வே நடுவாக ஒண்ணெழுத்தாய் நின்ற உடைய பெருமாளே தண்டரளத்தூணாகித் தருவைந்து பேராகி மண்டலத்துள்ளூறலுமாய் மயமுமாய் நின்றோனே போக்குவரத்துப் புகுந்துரண்டு கால்வீட்டில் நாக்குரண்டுபேசி நடுநின்ற நாரணரே அல்லாய்ப்பகலாய் ஆணாகிப்பெண்ணாகி எல்லார்க்குஞ்சீவன் ஈயுகின்ற பெம்மானே பட்சிப்பறவை பலசீவசெந்துமுதல் இச்சையுடன் செய்நடப்பு இயல்கணக்குச் சேர்ப்போனே ஒருபிறப்பிலும்மை உட்கொள்ளாப்பேர்களையும் கருவினமாயேழு பிறப்பிலுங்கைகேட்போனே ஆறு பிறவிதனில் அரியேவுனைப்போற்றாமல் தூறு மிகப்பேசித் தொழாதபேரானாலும் ஏழாம் பிறப்பிலும்மை எள்ளளவுதானினைத்தால் வாழலாமென்றவர்க்கு வைகுண்ட மீந்தோனே இப்படியே ஏழு பிறப்பதிலும் உம்மையுந்தான் அப்படியே ஓரணுவும் அவர்நினையாதேயிருந்தால் குட்டங்குறைநோய் கொடியகன்னப்புற்றுடனே கட்டம் வந்து சாக கழுத்திற்கண்ட மாலையுடன் தீராக் கருவங்கும் தீன்செல்லா வாய்வுகளும் காதானதுகேளார் கண்ணே குருடாகும் புத்தியற்று வித்தையற்றுப் பேருறுப்புமில்லாமல் முத்திகெட்ட புத்தி முழுக்கிரிகை தான்பிடித்து பிள்ளையற்று வாழ்வுமற்றுப்பெண்சாதி தானுமற்று தள்ளையற்று வீடுமற்று சப்பாணி போலாகி மாநிலத்தோரெல்லாம் மாபாவி யென்றுசொல்லி வானிழுத்து மாண்டு மறலியுயிர் கொள்கையிலே நாய்நரிகள் சென்று நாதியற்றான் தன்னுடலை தேயமது காணத் திசைநாலும் பிச்செறிந்து காக்கை விடக்கைக் கண்டவிடங்கொண்டுதின்ன போக்கடித்துப் பின்னும் பொல்லாதான் தன்னுயிரை மறலி கொடுவரச்சே வலியதண்டாலடித்துக் குறளி மிகக்காட்டிக் கொடும்பாவி தன்னுயிரை நரகக்குழிதனிலே நல்மறலி தள்ளிடவே இரைநமக்கென்று எட்டிப்புழுப்பிடித்து அச்சுதரை நினையான் அய்யாவைத்தானினையான் கச்சி மனதுடைய காமாட்சியை நினையான் வள்ளிக்குந்தேவ மாலவருக்காகாமல் கொள்ளிக்குபிள்ளையிலா கொடும்பாவிஎன்றுசொல்லி எவ்வியே அட்டை எழுவாய் முதலைகளும் கவ்வியே சென்று கடித்துப்புழுப்பொசிக்கும் என்றுநீரேழு இராச்சியமுந்தானறிய அன்று பறைசாற்றி அருளிவைத்த அச்சுதரே வானமது பூமியிலே மடமடென வீழாமல் தானவனே உன்விரலால் தாங்கிவைத்த பெம்மானே வாரி வரம்பைவிட்டு வையகத்திற்செல்லாமல் காரியமாய்ப்பள்ளி கடலில் துயின்றோனே மானம் வரம்பு மகிமைகெட்டுப்போகாமல் ஊனமில்லாதே உறும்பொருளாய் நின்றோனே சீவனுள்ள செந்துகட்குத் தினந்தோறுமே பொசிப்பு தாவமுடனீயுகின்ற தர்மத்திறவோனே வலியோரெளியோர்க்கும் மண்ணூருஞ்செந்துகட்கும் கலிதீர ஞாயம் கண்டுரைக்கும் பெம்மானே சிவசெந்துக்கெல்லாம் சீவனுமாய் நின்றோனே பாவமும் புண்ணியமாய்ப் பாராகி நின்றோனே கண்ணாகி மூக்குக் கருணாகரராகி மண்ணாகி வேத மறையாகி நின்றோனே சாத்திரமும் நீயாய் சந்திரனும் நீயாகிச் சூத்திரமும் நீயாய் சுழியாகி நின்றோனே நட்சேத்திரமாகி நாட்கிரகம் நீயாகி இச்சேத்திரமாய் இருக்குகின்ற பெம்மானே மெய்யனுக்கு மெய்யாய் மேவியிருப்போனே பொய்யனுக்குப்பொய்யாய் பொருந்தியிருப்போனே இமசூட்சமாகி ஏகம் நிறைந்தோனே நமசூட்சமான நாராயணப்பொருளே கல்வித்தமிழாய் கனகப்பொருளாகி செல்வித்திதுவாய்ச் செவ்வாகி நின்றோனே அண்ட பிண்டமாகி அநேகமாய் நின்றோனே கண்ட இடமும் கண்ணுக்குள்ளானோனே ஈசர் கொடுத்த ஏதுவரமானாலும் வேசமிட்டு வெல்ல மிகுபொருளாய் நின்றோனே நடக்க இருக்க நடத்துவதும் நீயல்லவோ திடக்க மயக்கம் செய்வதும் நீயல்லவோ ஆருமொருவர் அளவிடக்கூடாமல் மேரு போலாகி விண்வளர்ந்து நிற்போனே எண்ணத்தொலையாத ஏது சொரூபமதும் கண்ணிமைக்கு முன்னே கனகோடி செய்வோனே மூவராலுன்சொரூபம் உள்ளறியக் கூடாது தேவராலுந்தெரியாத் திருவுருவங்கொள்வோனே ஆயனே யெங்கள் ஆதிநாராயணரே மாயனே கம்சன் வலிமைதனை மாற்றுமையா பாவமாய்க் கஞ்சன் பலநாளாயெங்களையும் ஏவல்தான் கொண்ட இடுக்கமதை மாற்றுமையா ஊழியங்கள் செய்து உடலெல்லாம் நோகுதையா ஆழியடைத்த அச்சுதரே யென்றுரைத்தார் வாணனென்ற கம்சன் மாபாவியேதுவினால் நாணமது கெட்டு நாடுவிட்டுப்போறோங்காண் நரபாலனென்ற நன்றிகெட்ட கம்சனால் வரம்பானதுகுளறி மானிபங்கள் கெட்டோமே இத்தனையுங்காத்து இரட்சிக்க வேணுமையா முத்தியுள்ள தேவர் முறையம் அபயமிட பூமாதேவியும் புலம்பி முறையமிட நாமாது லட்சுமியும் நன்றாயபயமிட நாராயணர்பதத்தை நாயகியுந்தெண்டனிட்டு சீரான லட்சுமியும் செப்பினள் காணம்மானை என்னைப்போல் பெண்ணல்லவோ இவள்தானிடுமுறையம் வன்னமுள்ள மாலே மனதிரங்கிக்காருமையா உடனேதானாதி ஓலமிட்டத் தேவருக்கும் திடமான பூமா தேவிக்குஞ் சொல்லலுற்றார் வந்து பிறப்போங்காண் மாபாரத முடிக்க நந்தி குலம்வளர நாம்பிறப்போங்கண்டீரே சாரமில்லாக்கம்சனை சங்கரித்துப்பூமியுட பாரமது தீர்ப்போம் பாரத முடித்துவைப்போம் துவாபரயுகத்தில் துரியோதனன்முதலாய் தவறாத வம்பன் சராசந்தன்வரையும் அவ்வுகத்திலுள்ள அநியாயமுமடக்கி செவ்வுகத்த மன்னவர்க்குச் சிநேகமது செய்வதற்கும் உங்களுக்கும் நல்ல உதவிமிகச்செய்வதற்கும் அங்குவந்து தோன்றி ஆயருடன் வளர்வேன் போங்களென்று பூமா தேவிக்குந்தேவருக்கும் சங்குவண்ண மாலோன் தானே விடைகொடுத்தார் விடைவேண்டித்தேவர் மேதினியில் தாம்போக படைவீரரான பச்சைமால் தானெழுந்து ஆதி கயிலை அரனிடத்தில் வந்திருந்து சோதி மணிநாதன் சொல்லுவாரம்மானை வாணநரபாலனென்ற மாபாவிக் கம்சனால் நாணமது கெட்டோமென நாடிமிகத்தேவரெல்லாம் பூமாதேவிமுதல் பொறுக்கமிகக்கூடாமல் ஆமா அரியே ஆதிமுறையமென்றார் முறையம் பொறுக்காமல் முடுகியிங்கே வந்தேனென்று மறைவேத மாமணியும் மகிழ்ந்துரைத்தாரம்மானை அதுகேட்டு ஈசர் அச்சுதருக்கேதுரைப்பார் இதுநானுங்கேட்டு இருக்குதுகாணிம்முறையம் ஆனதால் கம்சன் அவனைமுதல் கொல்வதற்கு ஏனமது பாருமென்று எடுத்துரைத்தாரீசுரரும் பாருமென்று ஈசர் பச்சைமாலோடுரைக்க ஆருமிகவொவ்வாத அச்சுதருமேதுரைப்பார் மேருதனில் முன்னாள் வியாசர் மொழிந்தபடி பாருபாரதமுதலாய்ப் பாரதப்போர் வரையும் நாராயணராய் நாட்டில் மிகப்பிறந்து வீரான பார்த்தன் மிகுதேரை ஓட்டுவித்து சத்தபலமுள்ள சராசந்தன் முதல் மற்றவனோராறு வலியபலக்காரரையும் கொல்லவகை கூறி குருநிலையைத் தான்பார்த்து வெல்லப்பிறப்பாரெனவே வியாசர் மொழிந்தபடி அல்லாமற் பின்னும் ஆனதெய்வ ரோகணியும் நல்ல மகவான நாராயணர் நமக்கு மகவாயுதிப்பாரென மகாபரனார் சொன்னபடி தவமாயிருந்து தவிக்கிறாள் தேவகியும்

முன்னே வியாசர் மொழிந்தபடி முறைநூல் தவறிப்போகாமல் தன்னை மதலையெனஎடுக்கத் தவமாயிருந்த தெய்வகிக்கு சொன்ன மொழியுந்தவறாமல் துயர மறவே தேவருக்கும் என்னைப் பிறவி செய்தனுப்பும் இறவாதிருக்கும் பெம்மானே

இப்படியேயுள்ள தேவ எழுத்தின் படியாலே அப்படியே யென்னை அனுப்புமென்றாரம்மானை முன்னேவியாசர் மொழிந்தமொழிமாறாமல் என்னையந்தப்பூமியிலே இப்போபிறவிசெய்யும் செந்தமிழ்சேர்மாயன் சிவனாரையும்பணிந்து எந்தனக்கு ஏற்ற ஈரஞ்சாயிரமடவை கன்னியராயென்றனக்கு கவரியிடநீர்படையும் பன்னீர்க்குணம்போல் பைம்பொன்னிறத்தவராய் முன்னுகத்திலெனையணைய உகந்திருந்தபேரை இன்னுகத்திலெனக்கு இயல்பாய் படையுமென்றார் மேருதனிலிருந்து மேகவண்ணர்செயலெனவே தாருகாவனத்தில் தவசிருந்தரிஷியையெல்லாம் ஆயர்குலத்தில் அநேகமடவாராய் பாயமுறவாடிருக்கப் படைப்பீர் காணீசுரரே ருக்மணியாய் இலட்சுமியை உலகிற்பிறவிசெய்யும் கரும்பினியதெய்வக் கயிலாசமாமணியே சத்தபெலமுள்ள தத்துவத்தார் தங்களையும் மெத்தவரம் பெற்ற மிகுவசுரர் தங்களையும் எல்லோரையுமிப்பிறவி இதிலே வதைத்திடவே அல்லோரையும் பிறவி ஆக்கிவையுமென்றுரைத்தார் என்றனக்கு நல்ல ஏற்றகிளைபோலே விந்துவழிக்குலம்போல் மிகுவாய்ப்படையுமென்றார் இப்படியேமாயன் இசையஅந்த ஈசுரரும் அப்படியேபிறவி அமைக்கத் துணிந்தனராம் தெய்வகியாள் வயிற்றில் திருமால்பிறந்திடவே ஐவர்க்குறுதியிட அச்சுதருந்தோன்றுவாராம் கவிழ்ந்திருந்தமாதுவுட மலக்கமதுதீர புவியளந்தமாய மலரோன் பிறக்கலுற்றார் ஐவர்க்குபகாரம் அன்பாகச்செய்திடவும் தெய்வகிக்கும் ரோகணிக்கும் சிவகெதிகளீவதற்கும் கம்சனுடவலுமை கட்டழித்துக்கொல்வதற்கும் விஞ்ச வரம் பெற்று வீறுசெய்யும் பேர்களையும் சத்தபெலமுள்ள தத்துவங்களுள்ளோரை தத்தியுள்ள வீமனையும் தன்னாளாய்க் கூடவிட்டு கொல்வதற்கும் தேவருட கூர்முறையம் தீர்ப்பதற்கும் வெல்வதற்கும் பூமியுட விதனமதை மாற்றுதற்கும் முன்னே வியாசர் மொழிந்தமுறைப்படியே தன்னிகரில்லாத தையல்தெய்வகி வயிற்றில் பிறக்கிறாரென்று பெரியோர்கள்கொண்டாட இறக்கிறார்பொல்லாதார் என்றுலகம் கொண்டாட முன்பெற்றபிள்ளை முழுதுமவன் கொன்றதினால் வன்பற்றமாது மங்கையந்தத்தெய்வகியும் மெத்தமயங்கி முன்னம்விதி தன்னைநொந்து கர்த்தன் செயலோ கரியமால் தன்செயலோ என்று அந்தக்கன்னி இருபேருந்தான்புலம்பி விண்டுசொல்லாத விதனமிகவடைந்து அழுது கரைந்து அவளிருக்கும் வேளையிலே பழுதில்லாதாயன் பாவை வயிற்றிலுற்றார் பகவதியுமங்கே பாவையசோதை வயிற்றில் சுகபதியுமங்கே தோன்றினள்காணம்மானை மாயனந்தத்தெய்வகியாள் வயிற்றிலுற்றதவ்வளவில் தேயமெல்லாம்நன்றாய்ச் செழித்ததுகாணம்மானை கெற்பமுற்றதெய்வகியாள் கெஞ்சுகவாயஞ்சுகமும் நற்பதமாய்த்தேகம் நாட்டமுடன் கோட்டியுமாய் பத்துமாதந்திகைந்து பாலன்பிறந்திடவே சுற்றுமதிற் காவல்வைத்த துடியோர் வலுவிழந்து வசுதேவன் காலிலிட்ட வாய்த்த விலங்குமற்று விசுவாசமாதருட விலங்கது தானுமற்று தாள்திறந்துநேரம் தான்விடியுமுன்னாக கண்டாளே தெய்வகியும் கனத்த மதலைதனை கொண்டாடித்தானெடுத்துக் கூறுவாள் தன்னாலே கண்ணணோ சீவகனோ கரியமுகில் மாயவனோ வண்ணனோ தேவேந்திரனோ மறையவனோ தூயவனோ அய்யோ முன்பெற்ற அதிக மதலையெல்லாம் மெய்யோ இம்மதலைக்கு ஒவ்வாது மேதினியே என்று பிரியமுற்று ஏற்றமதலைதனை அன்று கொடுத்து அனுப்பினாள் யசோதையிடம் கொண்டு வசுதேவன் யசோதைக்குடிலேகி கண்டுஅயோதை கன்னியங்கேபெற்றிருந்த பெண்மதலைதன்னை பூராயமாயெடுத்து ஆண்மதலைதன்னை யசோதை யிடமிருத்தி வந்துவசுதேவன் மங்கை கையில்கொடுத்து புந்திமிகநொந்து போயிருந்தானம்மானை அந்தயிரா விடிந்து அலைகதிரோன் தோன்றினபின் கந்தமனசுள்ள கம்சனவன் தனக்கு ஒற்றாளாய்த் தூதன் ஒருவன் மிகஓடி பெற்றாளுன்தங்கை பிள்ளையென வுரைத்தான் கேட்டானே கம்சன் கெருவிதமாய்த்தானெழுந்து பூட்டானநெஞ்சன் பிள்ளைதனை வந்தெடுத்து தூக்கி நிலத்தில் துண்ணெனவே தானடிக்க ஆக்கிரமத்தாலே அவன் தூக்க ஏலாமல் சோர்வுற்று கம்சன் துடியிழந்து நிற்கையிலே பாரளந்தோன் தங்கை பகவதியுமேதுசொல்வாள் என்னையெடுத்து ஈடுசெய்யாதே கெடுவாய் உன்னைவதைக்க உற்றயெங்களச்சுதரும் ஆயர்பாடி தன்னில் அண்ணர் வளருகிறார் போய்ப்பாரெனவே போனாள் பகவதியும் கேட்டந்தக் கம்சன் கிலேசமிகவாகி வீட்டுக்குள் போயிருந்து விசாரமுற்றானம்மானை அய்யோ மறையோன் அன்று சபிபத்தபடி சையோ இடையர் தம்பதியில் போகறியேன் தங்கை வயிற்றில் செனித்தபிள்ளைவுண்டானால் பங்கம்வருமென்றனக்குப் பதறுதடாஎன்னுடம்பு என்றுமனங்கருகி இயலழிந்த கம்சனுந்தான் அன்று ஒருதூதனையும் அனுப்பினன் காணம்மானை

அய்யோ முனிவனன்று சபித்தபடி ஆயர்பாடிபோகறியேன் மெய்யோ தளருதுடல் மெலியுதே மெல்லிமொழிந்த விசளமதால் கையோசலித்துக் காலயர்ந்து காலவிதியாற் கருத்தயர்ந்து பையோராளைத் தானழைத்து பார்க்க விடுத்தான் கம்சனுமே

வாராய் நீ தூதா மற்றோரறியாமல் பாராய் நீதூதா யசோதைப் பதியேகி என்று அந்தத் தூதனையும் ஏகவிட்டான் கம்சனுமே நன்று நன்றுஎன்று நடந்தானே தூதனுந்தான் தூதன் மிகநடந்து தோகை யசோதைமனையில் புகுந்தந்தப் பிள்ளை பொன்தொட்டிலிலே கிடக்க கண்டு அந்தத்தூதன் கம்சனுக்கு நஞ்செனவே விண்டுபறையாமல் விரைவாகப்போயினனே போயந்தத் தூதன் பொறையுள்ள கம்சனுக்கு வாயயர்ந்து சிந்தை மறுகியே சொல்லலுற்றான் காமனோ சீவகனோ கண்ணனோ சந்திரனோ மாமதனோ சூரியனோ மறையவனோ இறையவனோ நாமத்திறவானோ நாராயணன்தானோ சோமத்திருவுளமோ தெய்வேந்திரன்தானோ ஈசனோ வாசவனோ இந்திரனோ சந்திரனோ மாயனோ வுன்னை வதைக்கவந்த மாற்றானோ ஆரோஎனக்கு அளவிடவுங்கூடுதில்லை பேரோ யசோதைப் புதல்வனெனக் காணுதில்லை தெய்வகியாள்தேகத் திருச்சுவடு தோணுகொஞ்சம் மெய்யதிபனான விட்டிணுபோல் முச்சுவடு என்றந்தக் கஞ்சனுக்கு இத்தூதன்சொல்லிடவே அன்றவன்கேட்டு அயர்ந்திருந்தானம்மானை என்செய்வோமென்று இருக்குமந்த நாளையிலே முன்செறியும்பூத மூரிதனையேவியவன் கொல்லவென்றுவிட்டான் குழந்தைதனை யம்மானை வல்லபெலமுள்ள மாபூதம் பட்டபின்பு பின்னுமே தானும் பிலஅரக்கரையேவி கொன்றுவா என்றான் குழந்தைதனையம்மானை கொல்ல வந்தபேரையெலாம் கொன்றது காணக்குழந்தை வெல்ல விட்டப்பேரிழந்து மெலிந்திருந்தான் கம்சனுமே ஆயர்குடியில் அரியோன் மிகவளர்ந்து மாயன் விளையாடி மடந்தையோடுங்கூடி வென்றுபால்வெண்ணெய் மிகப்பொசித்துக்காடதிலே கன்றாவு மேய்த்துக் காளியன் தனைவதைத்து கம்சனுட ஏவலினால் காட்டில் வந்தசூரரையும் துஞ்சிவிடக்கொன்று தொலைத்தனர் காணம்மானை ஆயருக்குவந்த ஆபத்து அத்தனையும் போயகற்றி நந்தன் பிள்ளையெனவே வளர்ந்தார் மதுரைதனில் வாழும் மாபாவிக் கம்சனுக்கு இறுதி வரும்போது ஏதுசெய்தான் கம்சனுமே நந்திடையன் பாலன் நல்ல ஸ்ரீகிட்டிணனை இந்திடத்தில் கொண்டுவர ஏவிவிட்டான்ஓராளை கம்சனுட ஆளும் கண்ணர் ஸ்ரீகிட்டிணரை அஞ்சலென்றுகண்டு அழைத்தாருமை கம்சனென்றான் அந்தவிசளமறிந்து அரியோனகமகிழ்ந்து வந்த விசளம் வாச்சுதென்றெம்பெருமாள் கூடச்சிலபேரைக் குக்குளிக்கத்தான்கூட்டி ஈடவியென்ற எக்காளசத்தமுடன் குஞ்சரமும் பரியும் குரவைத்தொனியுடனே கம்சனரசாளும் கனமதுரைசென்றனரே நாட்டமுடன் யசோதை நல்லமகன் வந்தானென்று கேட்டவிசளம் கெட்டியெனக் கம்சனுந்தான் இங்கே நான்சென்று ஏற்றவனைக் கொல்லவென்று சங்கையற்றக்கோடி தத்திப்படையுடனே கொல்ல விட்டக் கம்சன் குதிரைத்தளம் படையும் எல்லாந் திருமால் இறக்க வைத்தாரம்மானை கம்சன்படைகள் கட்டழிந்து போனவுடன் வஞ்சகனும் வந்து மாயனுடனெதிர்த்தான் மாயனுடபோரும் வஞ்சகக் கம்சன்போரும் தேசமெல்லாமதிரச் சென்றெதிர்த்தாரம்மானை மாயனுக்குக் கம்சன் மாட்டாமல் கீழ்விழவே வாயமிட்டுக் கம்சன் மார்பிலே தானிருந்து கம்சன் குடலைக் கண்ணியறத்தான்பிடுங்கி வெஞ்சினத்தால் மாயன் விட்டெறிந்தார் திக்கதிலே கம்சனையுங்கொன்று கர்மமது செய்தவரும் தஞ்சமிட்டத் தேவருட தன்னிடுக்கமுமாற்றி மாதாபிதாவுடைய வன்சிறையுந்தான் மாற்றி சீதானஉக்கிர சேனனையுமாளவைத்து அவரவர்க்கு நல்ல ஆனபுத்திசொல்லிமிக எவரெவர்க்கும் நல்லாய் இருமென்றுசொல்லியவர் திரும்பிவரும் வேளையிலே தீரன் சராசந்தனவன் எந்தன் மருமகனை இவனோதான் கொன்றதென்று வந்தனனே மாயனுடன் வாதாடியுத்தமிட அப்போது மாயன் ஆராய்ந்து தான்பார்த்து இப்போதிவனை ஈடுசெய்யக்கூடாது சத்தபெலமல்லோ சராசந்தவேந்தனுக்கு கொற்றவ வீமனல்லோ கொல்லவகையுண்டுமென்று இதுவேளைதப்பவென்று எம்பெருமாள்தானடந்து செதுவோடுகூடிச் செகலதுக்குள்ளேகினரே கடலதுக்குள்வந்து கனத்தமதிலிட்டவரும் திடமுடனேமாயன் துவாரகைபதியிருந்தார்

பூதனைச்சகடனோடு பின்னுள்ள அரக்கர் தம்மை சூதனையெல்லாங் கொன்று சுத்தமாய் மதுரைபுக்கி நீதமேயில்லாக் கம்சன் நெஞ்சையும் பிளந்துகொன்று மாதவன் துவாரகையில் குணமுடனிருந்தாரன்றே

கம்சனையுமற்றுமுள்ள காலவுணர் தங்களையும் வஞ்சகமாயுள்ள வாணநரபாலனையும் இம்முதலாயுள்ள ஏற்றஅரக்கரையும் அம்முதலாயுள்ளவரை அரியோனறுத்தனராம் சத்தபெலமுள்ள தத்துவத்தார் தங்களையும் வித்தகனார்கொல்ல மேல்நினைத்தாரம்மானை கம்சன் வலிமை கட்டழித்துத் தேவருக்கு அஞ்சலருளி ஆழிக்குள் வீற்றிருந்தார் வாரிக்குள் கோட்டை வளைந்துமணி மேடைவைத்து வீரக் குருநாதன் வீற்றிருந்தாரம்மானை மாயன் துவாரகா பதிவாழ்ந்து தானிருக்க நாயனுக்கு வந்த நல்ல ருக்மணியை விதியை யறியாமல் மேலுமொரு ராசனுக்கு திருமாங்கலியம் சேர்க்கத் துணிந்தனராம் அப்போது நாரதரும் அரியோனடிபணிந்து இப்போதுவுன்றனக்கு இசைந்த ருக்மணியை பாணிக்கிரணம் பண்ணப்பறையடித்தார் நானிதையுங்கேட்டு நாடியுரைத்தேனென்றார் அம்முனிவன் சொல்ல அரியோன் மிகக்கேட்டு இம்முனிந்து போக இசைந்தார் காணம்மானை மோகத்திருமாலை முக்கோடி பொன்னதுக்கு வேகத்தாலுண்டுபண்ணி விரைவாய்க் கொடுநடந்தார் முழுத்திரு மாலைதன்னை மொய்குழலாள் கன்னியுட கழுத்திலேயிட்டுக் காமக்கண்ணீட்டிடவே மாயனுக்கும் மோகம் மாதுக்கும் மும்மோகம் தேயமெங்கும் மோகம் சென்றது காணம்மானை முன்னாலே கேட்டு முகூர்த்தமிட்ட பேர்களையும் அந்நாளே கொன்று அவன்படையுந்தானறுத்து ருக்மணிக்குத் தேவரெல்லாம் குரவையிட மாலையிட்டு விருப்புகழ்ந்த மாயன் விமானமதிலேறி மனோன்மணியையுங்கூட்டி மாயன் படையுடனே வினோகரமால்தானும் விரைவாய் நடைநடந்து வடவெல்லாந்தீர்த்து வைகுண்டப்பெம்மானும் கடலுக்குள் சென்றிருந்தார் காயாம்பு மேகவண்ணர் இப்படியே முன்னம் இசைந்திருந்த பெண்ணையெல்லாம் அப்படியே மாலையிட்டு அமர்ந்திருந்தாரம்மானை ருக்மணி முதலாய் ஒத்துவந்த பெண்களையும் திருப்பொருத்தம் பூட்டிச்செகலதுக்குள் வீற்றிருந்தார்

ஆயர்குடியில் வளர்ந்து வெண்ணெய் அருந்தி முறைமாதரையணைந்து தீயன் கொடிய கம்சனையும் திருக்கியறுத்து அசுரரையும் உபாய முடனே கொலையடக்கி ருக்மணி முதலாய்ப் பெண்களையும் தேயம் புகழ மணமுகித்துத் துவரயம் பதியிலிருந்தனரே.

கம்சனிடுக்கம் கழித்தந்தக் காரணரும் பஞ்சவர்க்கு நன்மைசெய்ய பார்த்தனர் காணம்மானை பிறந்த துரியோதனனும் பிறவியொரு நூற்றுவரும் சிறந்தபுகழைபேரும் தேசமதிலே வாழ்ந்து அவரவர்க்குத் தக்க ஆர்க்கமுள்ள வித்தைகற்று எவரெவருமெய்க்க இவர் வளர்ந்தாரம்மானை வளர்ந்து நிமிர்ந்து வரும் வேளையானதிலே இழந்துருகி வாடும் இசைகெட்ட மாபாவி துடியாய் மனுவழக்குச் சொல்லித் துரியோதனனும் முடிய வினைசூடி உலகாண்டானம்மானை பாவியிருந்து பாராண்டச்சீமையிலே கோவுகட்கு நீர் குடிக்கக் கிடையாது தன்மரவ்வீமன் சகாதேவன் விசயன் நன்மை பரிநகுலன் நாடான நாடதுதான் குருநாடெனவே கூறுவாரந்நகரு திருநாடு தன்னுடைய சிறப்புக்கேளம்மானை துரியாதனாதி செலுத்துமஸ்தினாபுரத்தில் பரியொட்டகமும் பலமிருகமானதுவும் பசியால் தகையால் பட்சி பறவைகளும் விசியாய்க் குருநகரில் மேவித் தகையாறிவரும் அத்தினாபுரத்தில் அரதேசியாவரெல்லாம் பத்தியாயுள்ள பஞ்சவர்களாண்டிருக்கும் குருநாடு தன்னில் குழாங்கொண்டிருந்தனராம் திருநாட்டுக்கொவ்வும் சிறந்த குருநாடு ஒருநாடுமந்தக் குருநாட்டுக்கொவ்வாது பருநாடு பத்தியுள்ள பஞ்சவர்கள் தந்நாடு தேவரும் வானவரும் தெய்வத்திருமாலும் மூவரும் நன்றாய் உகந்த குருநாடு ஆளியொடு சிங்கம் ஆனையிறாஞ்சிப்புள்ளும் வேளிசமாயுள்ள வெகுவைந்தலையரவும் வெள்ளானை வெள்ளை மிகுசாரையானதுவும் துள்ளாடி நித்தம் துலங்கிவரும் நன்னாடு அந்நாடு நாடு அரன்நாட்டுக்கீடாகும் பொன்னாடு நாடு புத்தியுள்ளோர் தந்நாடு அரனருளைப்பெற்றிருக்கும் ஐவருட நன்னாடு இரவலர்க்கு ஈயும் ஏற்றதர்மர் தன்னாடு மாயனருள் பெற்ற மன்னவர்கள் தந்நாடு தாய்நாடு ஆனத் தமிழ்க்குரு நன்னாட்டில் மெய்யில்லா மன்னனுக்கு மேதினியில் பேர்பாதி பொய்யில்லாத் தர்மருக்குப்பேர்பாதியாகவேதான் ஆண்டார் சிலநாள் ஆளுக்கோர் பங்காக தாண்டவராயர் தண்மையாலம்மானை இப்படியே ஆண்டு இருக்குமந்த நாளையிலே முப்படியே விட்டகுறை முடிவாகும் நாளையிலே வணங்கா முடியுடைய மன்னன் துரியோதனனும் இணங்காமல் பிணங்கி ஏதுசெய்தானம்மானை தலைவீதம் பங்கு தான்வையா வண்ணமுந்தான் நிலைபகிர்ந்து விட்டோமே நினைவுசற்றுமில்லாமல் இனியவன் பூமிதனை யாம்பறித்து ஐவரையும் தனியே வனத்தில் தானனுப்பி இராச்சியத்தை அடக்கியரசாள அவன்நினைத்து மாபாவி உடக்கிச் சூதுபொருத்தி ஒட்டிவைத்தான் ஐவரையும் பாவி துரியோதனனும் பஞ்சவரைத்தான்விரட்டி சோவிதமாய் நாட்டைச் சுற்றியரசாண்டிருந்தான் வனவாசந்தன்னில் வந்திருந்தைபேரும் இனமானதுபோல் இருந்தார் குகையதிலே அப்போது வேத வியாசரவரறிந்து செப்போடு வொத்தத்திருமாலருகேகி மாயவரே பஞ்சவர்க்கு வாரமதாய்த் தானிருந்து தீயதுரியோதனனைச் செயிக்கவந்த பெம்மானே பஞ்சவரை மாபாவி பழுதுசூதாடிவென்று வஞ்சகமாய்ப்பாவி வனத்தில் துரத்திவிட்டான் ஐபேரும் பத்தினியும் அந்தவனந்தனிலே பசுப்போல் அலறி பசித்திருந்து வாடுகிறார் அன்றுமகா மேருவில் அடியேனுரைத்தபடி இன்றுபாரதமுடிக்க எழுந்தருளும் நாளாச்சு என்று முனிதான் எடுத்துரைக்க மாயவரும் அன்று திருமால் ஐவரிடம்தான்நடந்தார் வேத வியாகரரும் வேயூதும் வாயானும் சீதக்குணத் தர்மர்முன் சென்றனர் காணம்மானை நாராயணர் வரவே நல்ல தர்மாதிகளும் பாரானதையளந்தோன் பதம் பூண்டாரம்மானை கால்பிடித்துத் தர்மர் கண்ணர் பதந்தொழவே மால்பிடித்துத் தர்மரையும் மார்போடுறவணைத்து பதறாதே பாண்டவரே பத்தியுள்ள பஞ்சவரே கதறாதே ஐவரையும் காத்தருள்வோமென்றுரைத்தார் அப்போது தர்மரும் அச்சுதரையும் போற்றி இப்போது எங்களுக்கு ஏற்ற பசிதீர சூரிய பாண்டம் தனை அழைத்துச் சுத்தமனே ஆரிய மான அன்னமருளுமென்றார் அப்போது மாயவனார் ஆதிதனை நினைத்து மெய்ப்பான பாண்டம் மிகவருத்தி ஓரரியும் ஐயாயிரங்கோடி ஆட்கள்மிக வந்தாலும் என்பேரரிதான் எனைநினைந்து பாண்டமதில் அன்பரே நீரை அதுநிறைய விட்டவுடன் என்பேரரியை எடுத்ததிலிட்டதுண்டால் அன்பாக எல்லோர்க்கும் அமுதாய் வளருமென்றார் இத்தனையுஞ் சொல்லி ஈந்தாரேயன்பருக்கு சித்திரம்போல் வேண்டித் தெளிந்திருந்தாரம்மானை மாயனுஞ் சொல்லி மண்டபத்தில் போயினபின் தூயவியாகரரும் சொல்லுவார் தர்மருடன் பஞ்சவரே உங்களுக்குப் பச்சைமாலின்றுமுதல் தஞ்சமென்று சொல்லித் தான்போனார் மாமுனியும் மாமுனியும் போக வனத்திலந்த ஐபேரும் ஓமுனியே தஞ்சமென்று உகந்திருந்தாரம்மானை பாவிதுரியோதனனும் பஞ்சவரைக்கொல்லவென்று ஆவியவன்செய்த அநியாயமத்தனையும் ஒக்கவொருமிக்க உரைக்கக்கேளொண்ணுதலே சிக்கெனவே நஞ்சைத் தீபாவியிட்டனனே நஞ்சைக்கலந்து நல்ல தயிரென்றீந்தான் அஞ்சலென்று மாயன் அதுகாத்தாரம்மானை பாதாளம் வெட்டிப் பார்வீமனையோட்டிட நீதாளமான நெடியோனது காத்தார் கன்னிதனிற்பாவி கழுநாட்டி ஐவரையும் கொன்றுவிடவைத்ததை குன்றெடுத்தார் காத்தனரே அரவதையும் விட்டு அருள்வீமனை வதைத்தான் விரைவுடனே மாயன் விசந்தீர்த்துக் காத்தனரே தண்ணீரில் நஞ்சைவிட்டுச் சதித்தானே ஐவரையும் மண்ணீரேழுமளந்த மாயனது காத்தார் பூதத்தையேவிப் பில்லி செய்தான் மாபாவி நீதத் திருமால் நிலைநிறுத்தியாண்டனரே இப்படியே பாவி இடறுசெய்த தோசமெல்லாம் அப்படியே மாயன்காத்து ஆண்டனரே ஐவரையும் பாவியவன் செய்ததெல்லாம் பலியாமலைபேர்க்கும் சோவிதமாய் மாயன் துணைசெய்தாரம்மானை பின்னுமந்தப்பஞ்சவர்க்கு பெரும்பாவி சொன்னபடி பன்னிரண்டாண்டு பரிவாய்க்கழிந்தபின்பு தாள்போல் புத்தி தானுரைத்துப்பஞ்சவர்க்கு வாழ்வுபெறப் பூமி வாரென்றார் வாமனுமே மாயன் தூதனானார் வஞ்சமில்லாப்பஞ்சவர்க்கு தீயதுரியோதனனும் திருமாலைப் பாராமல் மாயனையும் பாவி வாபோவெனப்பேசி ஈயேனெனச் சொன்ன இயல்பு கேட்டெம்பெருமாள் கன்னன் பலமும் கடிய விதுரன் பலமும் மன்னன் ஸ்ரீபீஷ்மர் வாழுந் துரோணர் பலமும் தென்னன் துரியோதனன் பலமுந்தானழித்து வன்ன விசயனுக்கு வாளி பலகொடுத்து வீமனுக்கு நல்ல விசைதண்டாயுதங்கொடுத்து தாமன் சகாதேவனுக்குச் சத்தி சூலமுங்கொடுத்து நகுலனுக்கு ஆயுதமும் நல்லபரியும் கொடுத்து புகலான தர்மருக்குப் பொறுமை அரிகொடுத்து மங்கை துரோபதைக்கு வாய்த்தக்கனல் கொடுத்து செங்கையிலே பாரதத்தைச்சேவித்தார் மாயவரும் மாயருட கையில் வளர்ந்த திருமுடியில் ஓசையிடவொன்று ஒத்துதே பாரதப்போர் ஐபேருட படையும் அரவக்கொடியோன் படையும் கைப்போர் விற்போரும் கணைப்போர்வாள்போரும் அம்புப்போருங்கரியின் அச்சுப்போரும் பொருது கன்னன் சகுனி கனத்த வலுச்சல்லியனும் மன்னன் ஸ்ரீபீஷ்மர் வாய்த்த துரோணர்முதல் சராசந்தன்வரையும் சத்தியக் கீசகனும் பூராச வீமன் பெலியிட்டான்அம்மானை இத்தனைபேர் மாண்டால் இருப்பாரோ நூற்றுவரும் அத்தனைபேரையும் அறுத்தானருச்சுனனும் துரியோதனன்படைகள் சேர மடிந்தபின்பு விரிமாறு தூவி வெளியில் வந்தான் மாபாவி தம்பி படைகள் தலைவர் புதல்வர் முதல் வம்பிலிறந்தாச்சே வாழ்வதேனென்றுசொல்லி எல்லாரிறந்திடிலும் எண்ணமில்லையென்றிடலாம் வெல்லாரும் வெல்லா விசகர்ணன் மாண்டதினால் இருப்பதோ பூவுலகில் இறப்பதுவே நன்றெனவே விருப்பமுள்ள கர்ணனை வெற்றிகொண்ட அர்ச்சுனனை இன்றுகொல்லவென்று எழுந்தான் படைக்கெனவே அன்றுமால் தானறிந்து வாள்வீமனையழைத்து உன்றனக்கு நல்ல உறுவேட்டை யின்றடவா என்றனக்கு இன்றுமுதல் இளைப்பாற லாமடவா வண்ண மகள்தனக்கு மயிர்முடித்தலின்றடவா எண்ணமற்றுத் தர்மர் இருப்பதுவு மின்றடவா என்றந்த வீமனுக்கு இசைந்த போர்க்கோலமிட்டு வண்டுசுற்று மார்பனுக்கு வரிசைமிகக் கொடுத்து வீமனுட தண்டதுக்கு விசைமால்விசைகொடுத்து போமெனவே வீமனுக்குப் போர்க்கு விடைகொடுத்து விசையன் பரிநகுலன் வெற்றிச்சகாதேவனையும் இசையொத்த தர்மரையும் இன்றகல நில்லுமென்று வீமனையுங்கூட்டி வெளியிலரி வந்திடவே காமக்கனல்மீறிக் கரியோனெழுந்ததுபோல் வந்தானே பாவி வணங்காமுடியோனும் சந்தானமான தமிழ்வீமன் தான்மாறி எதிர்த்தாரிருவர் எனக்கெனக்கென்றேதான் செதுத்தான் வலுமை செய்வதுகேளம்மானை மண்விண்ணதிரும் வானமது தானதிரும் திண்திண்ணெனப்பூமி தொந்தொமெனக்குலுங்கும் மலைகளசைந்து மடமடென ஓசையிடும் கலைகள் கரிகள் கதறி மிகஓடும் அலைகள் சுவறி அங்குமிங்கோடிடவே இலைகளுதிர்ந்து இடிந்துவிழுமாமரங்கள் தூளெழும்பிச் சூரியனைத் தோன்றாமலே மறைக்கும் வேழ்எழும்பிக் காட்டில் விழுந்தலறி ஓடிடவே தவமுனிவர் நிட்டை தானெகிழ்ந்து தட்டழிந்து திசைமாறித் திக்கில் திரிந்தலைந்து போயினரே வேதா சிவனும் வெம்மருண்டு தாம்பதற நாதாந்தமோதும் நன்மறையோர் தாம்பதற துரியோ தனன்போரும் செயவீமன் றன்போரும் எரியோடெரிதான் எதிர்த்துப் பொருதாப்போல் ஒண்ணுக்குவொண்ணு ஒல்கிப்புறஞ்சாயாமல் மண்ணும்விண்ணுமதிர மண்டியுத்தமிட்டார் துரியோதனனடிக்கத் துடிவீமன் சாயாமல் மரியாதை வீமன் மாறியவனடிக்க அடிக்க அவன்பிடிப்பான் அப்படியே சண்டையிட்டு சாயாவிதத்தைத் தானறிந்திருபேரும் வாயால் சபதம் வகுத்தே பொருவோமென்று கட்டான கள்ளன் கசடன் வெகுகெடும்பன் துட்டாளனான துரியோதனனுரைப்பான் இத்தனை நேரம் இருபேருஞ்சண்டையிட்டு புத்தியில்லா வண்ணம் பொருதோமே வம்பாலே உன்பெலமுன்னுடைய உயிர்ப்பெலமும் நீயுரைத்தால் என்பெலமுன்னோடே இயம்புகிறேனென்றுரைத்தான் அப்போது வீமன் அவனிலைகளத்தனையும் தப்பாமல் தானுரைத்தான் சகலோரறிந்திடவே கேட்டுத்துரியோதனனும் கேளுநீ யென்பெலங்கள் தீட்டுகிறேனென்னிடது செய்யபுஜமென்றுரைத்தான் கள்ளக் கௌசலமாய்க் கபடுரைத்த ஞாயமெல்லாம் எவ்வளவு போலே இசையாத வீமனுக்கு மெய்யுரைத்தானென்று மேலான போர்வீமன் கையாரத் தண்டால் கனக்க அடித்தனனே அடிக்கவே வீமன் அசையாமல் மற்றோனும் திடத்த முடனே சென்றவ்வீமன்பேரில் மாறியவனிடிக்க வாட்டமுற்றுப் போர்வீமன் தேறியே மாயவரைச் சிந்தைதனில்நினைக்க திலர்தமுள்ள மாயன் செயவீமனைநோக்கி வலது தொடைதனிலே மாயன் கண்காட்டினரே அடித்தானே வீமன் அதுதான் குறியெனவே துடித்தான் கிடாய்போல் துரியோதனன் விழுந்து மூடற்ற மாமரம்போல் முறிந்துகீழ் தான்விழுந்தான் கூடற்ற உயிர்போல் குலைகுலைந்து வீழ்ந்தனனே அப்போது மாயன் அரவக்கொடியோனிடத்தில் தப்பாமல் வார்த்தையொன்று தான்கேட்கப்போயினரே முன்னே பிறப்பில் ஸ்ரீலங்கையாண்டிருந்தாய் தென்னனிராவணனாய்ச் சிரசுபத்தோடிருந்தாய் அப்போது நீதான் அநியாயஞ்செய்ததினால் செப்போடு வொத்த ஸ்ரீராமனாய் நான்தோன்றி பத்துச் சிரசறுத்துப் பார்மீதிலே கிடத்தி உற்று வொருவசனம் உரைத்தேனானுன்னிடத்தில் தம்பியாலென்னை சரமறுத்தாயல்லாது எம்பிராணனை வதைக்க ஏலாது என்றனையே தம்பியொரு நூறோடே தான்படைத்துன்னையுந்தான் கொம்பிலொருஆளைவிட்டு கொன்றேனே உனையென்றார் என்றுரைக்கப் பாவி இகழ்த்துவானப்போது தண்டுகொண்டேயடித்த தமிழ் வீமனல்லாது இன்றுமுன்னாலேலாது இடையாபோவென்றனனே அப்போது மாலும் அதிகக்கோபம்கொண்டு துப்புரைகள் கெட்ட தீயனுக்கங்கேதுரைப்பார் உன்னை இன்னமிந்த யுகத்தில் பிறவி செய்து பெண்ணாலே மாளவைத்து இன்று பேசினதும் கேட்பேன் பிடித்து மார்பு பிளந்து பேறான திரௌபதியும் வடிந்த உதிரம் தேய்த்து வாய்த்த கூத்தல் முடித்தாள் அன்றவனைக்கொன்று ஐவரையுந்தான்வருத்தி அண்ணன் துரியனுடன் கர்ணன் கூடி மாண்டதினால் கர்மச்சடங்கு கழிக்க விடைகொடுத்தார் தர்மமுள்ள கர்ணனுக்கு சாஸ்திரத்திலுள்ளமுறை எல்லாச்சடங்கும் இவருக்கும் நூற்றுவர்க்கும் உல்லாசமுள்ள தர்மர் ஒக்கமுறை செய்தனராம் முறைசெய்து கர்ணனுக்கு முத்திமோக்ஷங்கொடுக்க மறைதேர்ந்த மாயன் வந்தாரவனருகே அப்போது வேத வியாசரவரங்கு வந்து செப்போடுவொத்த திருமாலோடே கேட்பார் பாவியோடே கூடிப் படைசெய்த கர்ணனுட ஆவிக்கு மோக்ஷம் அருளுவதோ மாயவரே என்றுரைக்க வியாசர் எடுத்துரைப்பாரெம்பெருமாள் நன்றுநன்று மாமுனியே நானுரைக்கக் கேட்டருள்வாய் பண்டு இலங்கைப் பாரழிக்கவே நினைந்து தொண்டுபண்ணி நின்ற துய்யவானரங்களிலே வல்லபெலமுள்ள வாலியிவன் முற்பிறப்பில் நல்லவனாய் முன்னே நாட்டிலிருக்கையிலே இராவணனோடேகூடி இராமசரத்தாலிறந்தான் சிராமனாய் நானிருந்து செயித்த விதமறிந்து வந்து பணிந்தான் வாலியவனென்காலில் நன்றியுள்ள மாலே நானுமுன்னேவலனாய் முன்னேநீரமிழ்தம் உவரிதனிற்கடைய என்னையொருபுறமாய் ஏவல்கொண்ட மாயவரே பத்துத் தலையுள்ள பாவியந்த ராவணனை கொத்திச்சிரசறுத்துக் கொல்லேனோ நானடியேன் என்றந்த வாலி இறைஞ்சிநின்றானென்னை அன்றுவாலிதனக்கு அருளினது நீர்கேளும் எனக்கேவலாக இப்பிறவி நீபிறந்து தனக்கேராப்பாவிதனைச் சங்காத்தங்கொண்டதினால் இனிமேலவனோடிருந்து என்சொல்கேட்கவைத்து கனியான மோட்சக் கயிலாசமே தருவேன் என்றவனையழித்து இப்பிறவி ஐவருடன் முந்தி உதித்து முதற்பிறவி செய்தவனை அரவக்கொடியோன் இடத்திலனுப்பிவைத்து இரவலர்க்கு மீந்து என்புத்தியுள்ளிருத்தி அன்னை குந்திசொல் அசராமல் ஐபேர்க்கு ஒன்னேவொருகணைமேல் விடேனென்ற உத்தமன் ஆனதால் முன்னே அருளிவைத்த சொற்படிக்கு மானமாய் மோக்ஷம் வகுத்தேனிவனுக்கென்றார் நல்லதுதானென்று நன்முனிவன் தான்மகிழ்ந்தான் எல்லைவைத்த பாரதப்போர் இன்று முடிந்ததென்று கொண்டாடி ஐபேரும் குருமுனியைத்தெண்டனிட்டு வண்டாடும் வண்ணமகள் மயிர்முடித்து நீராடி ஐபேரும் பத்தினியும் அச்சுதரையும் போற்றி மெய்போகமான வியாசரையுங்குவித்து ஆண்டார்கள் சீமை அச்சுதனாருண்டெனவே பாண்டவர்கள் நன்றாய்ப் பாராளும் நாளையிலே கயிலைக்கு ஏகியே கண்ணனார் சிவனிடத்தில் அகில முறையுரைத்து அரவக்கொடியோனை தக்சனாக படையுமென்று தாமோதரனாருரைத்தார் பக்குவமாய் தக்சனாய் பரமசிவனார் படைத்து என்ன வரம் வேணுமென்று ஈசுரரும் கேட்டிடவே முன்பகையையெண்ணி மூர்க்கனந்த தக்சனுமே ஆணாலும் பெண்ணாலும் அழியாவரம் தாருமென்றான் நானாக ஆளுதற்கு தேவர்களின் ஊழியமும் தங்கமுடி இரட்டைச்சங்கும் தாரும் என் கையில் என்றான் மங்காத ஈசுரரும் மகிழ்ந்து வரம் கொடுத்தாரே வாங்கியே தக்சன் வாரிக்குள் கோட்டை கட்டி தாங்கா மணிதூக்கி தரணியை ஆண்டிருந்தான் வைகுண்டமேக மனதிலுற்று எம்பெருமாள் பொய்கொண்ட வேசம் பொருந்திப்பொருப்பேறி ஆங்கார மோகத்து அம்புக்கணுவாலே ஓங்கார மாமுனிவன்விடையேற்றுத்தான்மெலிந்து பஞ்சவர்க்கு உள்ள பாரப்பெலங்களையும் துஞ்சிவிட வாங்கித் தோற்றமுள்ள ஐவருக்கு மேல்நடப்புள்ள விசளமெல்லாந் தானுரைத்து நூல்நடந்து வாருமென்று மோக்ஷத்திறவோனும் சீரங்கமாபதியில் செல்கின்ற அப்பொழுது சாரங்கர் செய்த தன்மைகேளம்மானை

சப்தகன்னியர்க்கு ஏழு சான்றோர்கள் பிறப்பு அரிகோண மாமலையில் அயோகவமிர்த கங்கை பரிகோண மாமலையின் பகுத்துரைக்கக் கூடாது தேன்கமுகு மாங்கமுகு தென்னங்கமுகுகளும் வான்கமுகு வாழை வழுவிலா நற்கமுகும் சோலை மரமும் சுபசோபனமரமும் ஆல மரமும் அகில்தேக்கு மாமரமும் புன்னை மரமும் புஷ்ப மலர்க்காவும் தென்னை மரமும் செஞ்சந்தனமரமும் மாவு பலாமரமும் வாய்த்த பலாமரமும் தாவு மரத்தின் தண்மைசொல்லக் கூடாது சோலையிலே வீற்றிருக்கும் சீர்பறவையின்பெருமை தூல மின்னதென்று சொல்லத் துலையாது பார்வதியும் ஈஸ்வரனும் பாவித்திருப்பதுபோல் தேர்பதியும் மேடைகளும் சிங்காசனங்காணும் அலையில் துயில்வோர் அங்கிருந்த பாவனைபோல் நிலையில் முனிவோர் நிற்பதெண்ணக் கூடாது கயிலையீதென்று கண்ணான மாமுனிவர் ஒயிலாகக் கூடி உவந்திருப்பது அவ்வனத்தில் வைகுண்டங்காண வந்த தர்மியெல்லோரும் மெய்குண்டங் கண்டோமென இருப்பாரவ்வனத்தில் அப்படியே நல்ல அயோக அமிர்தவனம் இப்படியே நன்றாய் இயல்பாயிருப்பதுதான் புட்டாபுரங் கிழக்கு பூங்காவு நேர்மேற்கு வட்டமுள்ள ஸ்ரீரங்கம் வடக்கு வனந்தெற்காக தெற்கே திரிகோணம் செங்காவு நேர்வடக்கு மிக்கவகை மேற்கு மிகுத்தவனம் நேர்கிழக்கு இவ்வெல்கை சூழ்ந்த அயோக அமிர்தவனம் அவ்வனத்திலுள்ள அமிர்தகங்கையானதிலே குளித்து விளையாடிக் கூபந்தனிலிறங்கி களித்து மகிழ்ந்து கையில்நீர் தான்திரட்டி ஈசருட முடியில் இட்டுக் கரங்குவித்து வாசமுடன் கயிலை வாழ்ந்திருக்கு மாமடவார் மரகத வல்லி வள்ளி சலிகையெனும் சரகதக் கன்னி சரிதை அரிமடவும் ஏழு மடவும் எண்ணெண்ணுமிப்படியே நாளு முறையாய் நடத்திவரும் நாளையிலே மாலறிந்து கன்னிமுன்னே வந்தார் சன்னாசியென ஏலறிந்து கன்னி இவரல்ல ஈசரென்று சாய்ந்து விலகித் தையல்நல்லார் போகுகையில் ஆய்ந்து தெளிந்த அச்சுதரு முன்னேகி பலநாளு மீசுரர்க்கு பாவையரே நீங்களுந்தான் செலந்திரட்டி மேன்முடியில் செய்தீரனுஷ்டானம் இனியெனக்கு நீங்கள் எல்லோருமிக்கவந்து கனிநீரெந்தலையில் கவிழுமென்றாரெம்பெருமாள் அப்போது கன்னி எல்லோருமேதுரைப்பார் எப்போதுந்தானாய் இருப்பவர்க்கேயல்லாது மாயவர்க்கும் மற்றுமுள்ள மயேசுரர்தன்றனக்கும் வாயமுள்ள வானவர்கோன் மறைமுனிவர்க்கும் இல்லை எருதேறி நித்தம் இறவாதிருக்குகின்ற ஒருவனுக்கேயல்லால் ஊழியங்கள் வேறில்லையென்றார் கேட்டுஸ்ரீ கிருஷ்ணரும் கிளிமொழியோடேதுரைப்பார் ஒட்டிலிரந்துண்ண ஊர்வழியே தான்திரியும் ஆண்டிக்கேயல்லாது அரவணையிலே துயிலும் காண்டீபனுக்கேவல் கருதோமெனவுரைத்தீர் தோகையரே கங்கையினி சுருட்டுவதைப்பார்ப்போம் ஆகட்டுமென்று அச்சுதருங்கோபமுற்று மேலோகமாயிருக்கும் வேதயேழுவுகத்தில் சாலோகமான சத்திபரலோகமதில் ஆருரூபமில்லாத ஆகாச சத்தியொன்றும் சீருரூபமான சிவலோக மானதிலே மெய்கொண்ட வானோர் வித்தொன்று ஆனதுவும் வைகுண்ட லோகமதில் வாய்த்த தர்மியானதிலே தன்மியொரு வித்துத் தானெடுத்து வேதாவின் சென்மித் தெடுத்தார் சிவயிருஷியொன்றதிலே தபோதனராய்ச் சண்டன் தன்னுகத்தில் வாழுவோரில் சகோதரராயொன்று தானெடுத்தாரம்மானை சொர்க்கலோகமதிலே ஸ்ரீராமர் தன்றனக்கு பக்குவங்களாகப் பணிவிடைகள் செய்வோரில் நல்லகுலமான நயனவித் தொன்றெடுத்து வெல்லமர் கோன்வாழும் வெற்றிதெய்வலோகமதில் புத்தியுள்ள நாதன் பின்யுகத்தில் வாழுதற்கு சத்தியுள்ள வித்தொன்று தானெடுத்தாரம்மானை இப்படியே மேலோகம் ஏழு லோகமதிலும் அப்படியே நல்ல ஆர்க்கமுள்ள வித்தேழு எடுத்துத் திருமால் இருதயத்திலேயடக்கி கொடுத்துநின்ற தாதாவைக் குவித்துப்பதம்போற்றி கன்னியுட கற்பதுக்குக் கருத்தேது செய்வோமென்று உன்னி மனதில் ஒருமித்துப் பார்த்தனரே பார்த்தனரே கற்பதுக்குப் பக்குவம்வேறில்லையென்று தீத்தழலாய்ப் போகத் திருவுருவங்கொண்டனரே பிரமா உபதேசம் பிறப்பு உருவேற்றி குரமாய் வருணன் குளிரத்தொளிந்திடவே காமத் தழலாய்க் கருமேனியானதிலே வேமக் கனல்போல் விழிகொழுந்திட்டெரிய சாந்தணியுங்கன்னி தையல்தெய்வ மாமணிகள் கூந்தல் விரித்துக் கூபந்தனிலிறங்கி அரிஓம் எனவே ஆடிக்கரையேறி தரிதோம்மெனவே சலக்கரையை விட்டவர்கள் உயர வரவே உள்ளுதறத் துள்ளல்கொண்டு அயரக் கரங்கால் அங்கமெல்லாந்தொங்கலிட கிடுகிடெனத் தேகம் கிளிமொழிவாய் கொட்டிடவே திடுதிடெனஅக்கனியைத் திரைபோல் வளையலுற்றார் கன்னியேழுபேரும் கனலை மிகஆவ உன்னித் திருமால் ஓங்கார மோகமதால் மங்கையேழுபேர்க்கும் வயிற்றிலுற்றதம்மானை சங்குவண்ண மாலோன் தற்சொரூபங்கொண்டனரே உடனே ஸ்திரீகள் உள்தரித்த பிள்ளைகளை தடமேலே பெற்றுச் சஞ்சலித்து மாமடவார் வெருவிப் பயந்து விழிமடவாரெல்லோரும் கருவிதொண்ணூற்றாறும் கலங்கியே தானோடி துகிலையெடுத்துடுத்துச் சுருட்டினார் கங்கைதனை கையில் சலந்தான் கட்டித் திரளாமல் கலங்கியழுது கண்ணீர் மிகச்சொரிந்து மலங்கியழுது மண்ணிலவர் புரண்டு அய்யோ பொருளை அறியாமல் விட்டோமே மெய்யோடேகுத்தி விழுந்தழுதாரம்மானை

கனலைத்துணையாமென்றாவி கற்பை இழந்தோங்கன்னியரே புனலைத்திரட்டப் பெலமின்றி புத்தியழிந்தோம் பூவையரே அனலைதரித்த அரன் முன்னே அங்கே சென்றால் பங்கம் வரும் இனத்தைப்பிரிந்த மான்போல் இருப்போம் வனத்திலென்றனரே

கன்னியர்கள் மேனி கனிந்து மினுமினுத்து மின்னித்தனங்கள் மிகுபால் சுரந்திடவே கற்புக்குழறி கயிலையுகமானதற்கு அற்புத வேள்கங்கை அவர்நினைவில்லாமல் எல்லோரும் ஒருமிக்க ஈசுரரைத் தானினைத்து வல்லோனே யென்று வரம்பெறவே நின்றனராம் நின்றார் தவத்தின் நிலைமைகேளம்மானை இன்றெங்கள் கற்பை ஈடழித்த மாமுனிவர் வந்தெங்கள் தம்மை மாலையிட வேணுமென்று பந்துத் தனமின்னார் பாவையேழுபேரும் ஈசுரரே தஞ்சமென இருந்தார் தவசதிலே மாசொன்றுமில்லா மாதரேழுபேரும் தெற்கு முகமாய்த் தேவியரேழுபேரும் மிக்கத் தவசு மிகப்புரிந்தாரம்மானை கற்பழித்தெங்கள் கையில் கன்னிதிரளாமல் வைத்தோர் பொற்பாத முண்டெனவே பூவையர் தவசுநின்றார் பாலிளகி நல்லமிர்தம் பாலாறாயோடிடவே காலிளகா வண்ணம் கடுந்தவசு செய்தனரே பிள்ளையேழுபேரும் பெற்றுப்பெருகிடவும் கள்ளஞ்செய்த மாமுனிவர் கைப்பிடிக்க எங்களையும் மக்களையுமெங்களையும் மாமுனிவர் வந்தெடுத்து ஒக்கவொருமித்து உலகாள வைத்திடவும் நின்றார் தவசு நேரிழைமாரெல்லோரும் நன்றான மாமடவார் நாடித்தவசிருக்க பிறந்த பிள்ளைதன்னுடைய புதுமைகேளன்போரே அறந்தழைக்கும் நாராயணர் மகவாகியதோர் சான்றோர் பிறந்ததுவும் தரணியரசாண்டதுவும் வேண்டும் பெரிய விருதுவகை பெற்றதுவும் மெய்யான போத மேலோர்கள் முன்பதிலே அய்யா உரைக்க அரி கோபாலனெழுதும் அன்பான இந்த அகிலத்திரட்டம்மானை தன்போதமாயிருந்து தாழ்மையுடன் கேட்டவர்க்கு கன்மமுதல் சஞ்சலங்கள் கழியுமென்றெம்பெருமாள் உண்மையுள்ள லட்சுமிக்கு உபதேசமாயுரைத்தார் இப்படியே பிள்ளைதனை ஈன்றபின்பு கன்னியர்கள் அப்படியே சென்று அவர்போய்த் தவசிருக்க பிள்ளைகளைப்போட்டுப் புண்ணியனார் போகாமல் வள்ளலந்த மாலும் மதலைதனையெடுத்து ஆரிடத்தில் மதலை அடைக்கலமாய் வைப்போமென்று விசாரித்து நன்றாய் விசாரமுற்றாரம்மானை தெய்வேந்திரன் பசுக்கள் திரைமேயக் கண்டவரும் கையதிலே சீங்குழலைக் கனிவாயில் வைத்திருத்தி நிரைவாவெனவே நியமித்தங்கூதிடவே அரை நொடியிலாவு அங்கொன்றுமில்லாமல் அங்குவந்து மாயனிடம் அழைத்ததென்னக் கேட்டிடுமாம் சங்குதனில் பாலுமிழ்ந்து தாருமென்றாரெம்பெருமாள் பாலுமிழ்ந் தாவு பலநாளும் பாலருக்கு நாலொருநாள் மட்டும் நடந்துவரும் வேளையிலே கன்றுக்குப்பாலு காணாமல் மேய்ப்போர்கள் ஏதென்றெனப் பார்த்து இயலறிந்து வானவர்கோன் தானறியச் சொல்லிச் சண்டையிட வந்தனனே வந்தவனுக் கெதிரே மாமுனிவன் சூலமதை இந்தாப்பாரென்று எறிந்தாரவன் கண்டு ஆரோவெனப்பயந்து அயிராவதத்தோனும் போரொல்கிப் போனான் பொன்னுலோகந்தனிலே நல்லதென மாமுனியும் நளினமுடன்மகிழ்ந்து செல்லமகவான சிறுவர்தமை வளர்க்க மாகாளியென்ற வடபத்திரகாளி ஓகாளியென்ற உயர்ந்த பெலக்காரி பெண்ணல்லப் போர்க்குப் புருடர்மிகப்போராது விண்ணவரும் மண்ணவரும் விறுமாவும் போராது அப்படியே துஷ்ட ஆங்கார மாகாளி இப்படியே நன்றாய் இவளிருக்கும் நாளையிலே ஆணாலும் பெண்ணாலும் அழியாவரங்கள் பெறவே தாணொருவனையும் சத்தி உமையையும் வேண்டி கெணியாவரங்கள்பெற்றுக் கீழுமேலுமடக்கி துணிவாகத் தேவர்களைத் தூளிபட ஏவல்கொண்டு தேட்ட முடனேழு செகல்கடந்தப்புறத்தில் கோட்டையிட்டு தக்சன் குறும்புசெய்தாண்டனனே தேவர்கள் சென்று சிவனார்க்கபயமிட மூவரு மொத்திருந்து முழுதும் விசாரமிட்டார் ஆணாலே தக்சனையும் அழிக்கவகையில்லையிங்கே பூணாரம் பூண்டு புட்டாபுரமாளும் காளி படையும் கமண்டலத்தில் சென்றதுண்டால் தூளிபடத் தக்சன் சிரசறுப்பாளென்றுமிக மாலுரைக்க ஈசுரரும் மறையோருஞ் சம்மதித்து வேலுகந்த காளிதனை விளித்தார் காணம்மானை உடனறிந்து மாகாளி உடையோன் பதம்பணிந்து வடவாக்கினிமுகத்தாள் வருத்தினதேன் என்றிடவே தக்சன் தலையறுத்துச் சங்காரஞ் செய்திடவே மிக்கநீ போவெனவே விடைகொடுத்தாரீசுரரும் விடைவேண்டி காளி விமலனடிபோற்றி படைக்காரிபின்னுமொன்று பரமனோடேகேட்டாள் என்னோடுதவி இயல்படையாய்த் தான்வரவே வன்னப் புதல்வர் வகிருமென்றாள் மாகாளி அப்போது ஈசுரரும் ஆங்காரியை நோக்கி கற்போடு வொத்த கன்னியேவுன்றனக்கு பெண்ணாணுமில்லாப் பெரிய பெலக்காரி கண்ணான காளி காரிகையே நீகேளு தரித்துப் பிறக்கத் தகாதே மாகாளி மரித்துப் பிறக்காத மாகாளியேயுனக்கு விடையாயொருவசனம் விரிக்கக்கேளொண்ணுதலே படைக்காகப் பாலர் பச்சைமால் தரவேண்டி தவசு மிகப்புரிந்தால் சங்குசரத்தாமன் விபுசு தனிற்பிறந்த வீரரேழுபேர்களையும் உன்னையழைத்து உன்கையிலே தருவார் முன்னே தவசு மிகப்புரியப் போவெனவே அரனார் விடையும் அருளி மிகக்கொடுக்க பரமான தேவி பச்சைமால் தன்றனைத்தான் நினைத்துத் தவசு நெடுநாளாய் நின்றிடவே அனைத்துயிருங் காக்கும் அச்சுதருந்தானறிந்து மக்களேழு பேர்களையும் மாகாளி கைக்கொடுக்க கொக்கரித்துக் காளி கொண்டாடித்தான்மகிழ்ந்து வாங்கு மளவில் மாமுனியைத்தானோக்கி தாங்கிநின்றுபாதத் தடிதாழ்ந்து ஏதுசொல்வாள் வேத முனியே வித்தைக் கருத்தோனே மாதவங்கள் கற்ற மாமுனியே யிம்மதலை ஆனோர்க்கு நாமம் அருளிநீர் தாருமென்றாள் வானோர்கள் போற்றும் மாமுனியுந்தான்மகிழ்ந்து உள்ளதுதானென்று உடனே மனமகிழ்ந்து வள்ளல் சிவனாரறிந்து மறைவேதனையழைத்து முப்பத்து முக்கோடி முனிவரவர் தங்களையும் நாற்பத்து நாற்கோடி நல்ல ரிஷிகளையும் தேவர் முதலாய்த் தேவேந்திரன்வரையும் மூவரறுவர் உள்ளோரையு மழைத்து கிணநாதர் வேதா கிம்புருடரையும்வருத்தி குணமான தந்தி குமரனையும் வருத்தி சத்தி உமையும் சரசுவதி பார்பதியும் எத்திசையும் வானோர் எல்லோரையும்வருத்தி சங்கமது கூடி சாஸ்திரங்கள் தானோதி மங்கள வாத்தியங்கள் மடமடென நின்றதிர இப்படியே சங்கம் எல்லோருந்தான்கூடி அப்படியே தானிருக்க அருளுவாரச்சுதரும் பிறந்தபிள்ளையேழதுக்கும் பேரிடவேணுமென்று அறந்தழைக்குமீசர்முன் அவர்வைத்தாரம்மானை அப்போது ஈசுரரும் அன்பாயகமகிழ்ந்து இப்போது மாயவரே எல்லோருக்கும் பொதுவாய் நீர்தானே நாமம் இட்டாலதுபோதும் பார்தானளந்த பாலவண்ணா என்றுரைத்தார் கார்வண்ணருங்கேட்டுக் கறைக்கண்டரோடுரைப்பார் தார்வண்ணரே முதற்பேர் நீருரைக்க வேணுமென்றார் நல்லதுதானென்று நாட்டமுற்று ஈசுரரும் வல்லவனே உன்னாத விந்தில்வந்து தோன்றி தோணாப்பொருளைத் தொடர்ந்து கண்ட மன்னவர்க்கு சாணாரென நாமம் சாற்றினாரீசுரரும் முதற்பேர் தானீசர் மொழிந்தபின் வேதாவும் மதமான விந்து மாயமுனி சேயதற்கு சான்றோரென நாமம் சாற்றினார் வேதாவும் ஆண்டாரிதுவுரைக்க அச்சுதரும் அகமகிழ்ந்து நாடாள்வாரென்று நாமமிட்டார் பாலருக்கு தாடாண்மையுள்ள சத்தியங்கேதுரைப்பாள் அண்ணர் விநோதமதில் அவதரித்த பிள்ளைகட்கு வண்ணமுள்ள பேரு வாழ்த்தி விடைகொடுப்பாள் எங்கும் புகழ்பெற்று இராஜபட்டந்தான்சூடும் சங்குமன்னரென்று தானுரைத்தாள் சத்தியுமே பேறுபெற்ற பாலரென்று பிரியமுடன் மகிழ்ந்து பார்வதி நாமம் பகருவாளம்மானை சென்றஇடம் வென்று சீமைகட்டித்தானாண்டு மண்டலங்கள் தோறும் வரிசை பெற்று வாழ்ந்திருக்கும் பொற்பமுடிமன்னரென்று பேரிட்டாள் பார்வதியும் கற்பகத்துக்கொத்த கன்னி சரசுவதியும் வெள்ளானை வேந்தரென்று வெண்டாமரையுரைத்தாள் பிள்ளையார் தானும் பிரியமுடன் மகிழ்ந்து நன்றான வீர நகுலவேந்தரெனவே அன்றானை முகத்தோன் அருளினர் காணம்மானை சண்முகனுந்தான் மகிழ்ந்து தவலோக மன்னரென்று விண்ணுகமுமெய்க்க விளம்பினர் காணம்மானை வானோர்கள் வேத மாமுனிவர் தாமகிழ்ந்து தானான மாயவனார் தான்பெற்ற பாலருக்கு தர்மகுல வேந்தரென்று சாற்றினாரம்மானை கர்மமில்லாத் தேவர் கரியமால் பாலருக்கு மெய்யுடைய பாலர் மென்மேலும் வாழ்ந்திருக்க தெய்வகுலமன்னரென்று திருநாமமிட்டனரே வீரியமாய்ச்சூரியனும் வெற்றிமால் பாலருக்கு சூரியகுலவேந்தரென்று சொன்னார் காணம்மானை வாசவனுந் தான்மகிழ்ந்து மாயனுட பாலருக்கு வீசவிசைய வேந்தரென்று நாமமிட்டார் இப்படியே நாமம் இவர்மொழிந்ததின்பிறகு கற்புடைய சன்னாசி கருத்தாகவேயுரைப்பார் நாட்டுக்குடைய நாதனுட கண்மணிக்கு காட்டுராசனெனவே கருத்தாக நாமமிட்டார் இப்படியே ஈசர்முதல் எல்லோரும் நாமமிட்டு அப்படியே பிள்ளைகட்கு அவரவரே காப்பணிந்து சத்தியுமையும் சரசுவதி பார்பதியும் எத்திசையுமெய்க்க எடுத்து நீராட்டுவராம் அமுதமது சேனையிட்டு எல்லோரும் தாமகிழ்ந்து குமுதமொழி மாதர் குரவையிட்டுத் தாமகிழ்ந்து அண்டர் முனிவோர் எல்லோரும் பார்த்திருக்க தண்டாமரை மாது தாலாட்டவுத்தரித்தாள்

சரசுவதி சான்றோரை தாலாட்டுதல் வைகுண்ட கண்ணோ வரம்பெற்ற மாதவமோ கைகண்ட வித்தை கருத்தறிந்த உத்தமரோ தங்கமுடி பெற்றவரோ சங்குமுடி காவலரோ வங்கம நிசங்கண்ட மங்காத சான்றவரோ சிங்கமுகத் தண்டிகையும் சிலம்புனைந்த ரத்தினமும் சங்கக்கொடிவிருது சங்குரட்டை பெற்றவரோ முத்துச்சிலாப முதலாளியானவரோ கொத்துமுங்கையாபரணம் கொடிவிருது பெற்றவரோ மூலப்பொருள் கண்ட முதற்சாதி யானவரோ தாலம்பாலுண்டு தானிருக்கும் மன்னவரோ நடைக்காவணங்களிட்டு நல்ல தீ வட்டியுடன் படையோடே வீற்றிருக்கும் பாரமுடி மன்னவரோ வெள்ளானை மேலேறி வீதிவலஞ் சுற்றிவந்து துள்ளாடி சிங்காசனம் வீற்றிருப்பவரோ பூதமது முன்னேபந்தம் பிடித்து தான்வரவே நாதமிரட்டையூதி நாடாளு மன்னவரோ எக்காளமூதி இடமடம் மானமுடன் மிக்கான சீமையெங்கும் மேவிவரும் மன்னவரோ வாரணங்கள் கட்டி வையகத்தைத்தானாண்டு தோரணங்கள் நாட்டிவைத்த தெய்வத்திருச்சான்றவரோ கர்மமதில்லாமல் களிகூர்ந் திருப்பவரோ தர்மமுடி பெற்றவரோ சாஸ்திரத்துக்குற்றவரோ உடற்கூறு சத்தி உயிரோ டுதித்துவந்த சடக்கூறு மூலச் சட்டமது கொண்டவரோ கல்விக்குகந்த கருணாகரரானவரோ செல்விக்குகந்த சென்மமது கொண்டவரோ தேவர்க்கும் வானவர்க்கும் திருப்பதிகளாவதற்கும் மூவர்க்குமுதவிசெய்ய உதித்துவந்த கற்பகமோ சென்ற இடமெல்லாம் சிறப்புவெகுமானமுடன் மண்டலங்கள் மெய்க்க வாழுகின்ற சான்றவரோ சாணாருக்குள்ளே சர்வதுமேயடக்கி கோணாத மாயன் குருக்கொடுத்தீன்றகண்ணோ அறிவு ஞானத்தோடும் ஆதிப் பிறவியோடும் செறியுங்கலையோடும் செடமெடுத்த சான்றவரோ துட்டரென்ற பேரைச் சூரசங் காரமிட்டு கொட்டமிட்டு கோட்டை கொடிவிருதுபெற்றகண்ணோ ஆண்டிருக்கு மன்னவரோ அச்சுதரின் பாலகரோ தாண்டி வரம்பெற்றுத் தரணியரசாண்டவரோ பாண்டவரோஆண்டவரோ பாலவண்ணர்பெற்றெடுத்த சான்றவரோ ராராரோ தழைத்திருக்க ராராரோ

தங்கமணியோ நவமணியோ சலத்தில் விளைந்த தரளமுதோ சிங்கக்கொடிகள் பெற்றவரோ சீமையடக்கி யாண்டவரோ துங்கவரிசை பெற்றவரோ திருமால் விந்திலுதித்தவரோ சங்கமகிழ வந்தவரோ சான்றோர் வளர ராராரோ

சந்தோசமாகச் சரசுவதி தாலாட்டி வெந்தோசமெல்லாம் விலகவே நீராட்டி வைகுண்ட மூர்த்தி மாமுனிதன் கைக்கொடுக்க மைகொண்ட வேதன் மதலை தனைவாங்கி ஈசர் முதலாய் எல்லோருங்கூடியிருந்து வாசமுள்ள பிள்ளைகள் தாம் வளரத்திருவமிர்தம் சேனைமிகவூட்டுதற்கும் செல்வமுண்டாவதற்கும் வானத்தமிர்தம் வருத்திமிக ஈயவென்று கயிலைதனிலிருக்கும் கண்ணான பேர்களுக்கு அகிலமதிற்பாயும் ஆகாய வூறலதை வருத்திக்கொடுக்கவென்று மாயவருமீசுரரும் பொருத்தமுள்ளவானோரை போய்வேண்டிவாருமென்றார் அப்படியே வானோர் ஆகாய மீதேகி செப்பமுடனமிர்தம் சென்றவர்கள்பார்க்கையிலே ஆருரூபமில்லா ஆகாசமேல்வழியே சீருரூபமான சிவகயிலையானதிலே பாயுமளவில் பலசாஸ்திரங்கள் கற்ற வீயுமறை வேதியனும் விழிநுதலாள் கன்னியரும் அமுதமதையெல்லாம் அள்ளித்தலைமேலும் குமுதமுடன் குடித்துக் கொழுத்துப்பாளைவைத்து தேகமது நிமிர்ந்து தேவியு மன்னவனும் ஆகமது கூர்ந்து அலங்கரித்து நிற்பளவில் வானோர்கள் பார்த்து வாய்த்தமிர்தங்காணாமல் ஏனோயிது மாயமென்று எண்ணிமிகப்பார்ப்பளவில் கொண்டாடி நின்ற கூர்மறையவன் தனையும் பெண்டாட்டியான பெண்ணதையும் வானோர்கள் பிடித்து இழுத்துப் பின்னுமுன்னுந் தள்ளிமிக அடித்துச் சிவன்முன்னே அச்சுதரும் பார்த்திருக்க கொண்டுவந்து விட்டுக் கூறுவார் வானோர்கள் பண்டுமுதலின்றுவரை பாய்ந்த அமிர்தமெல்லாம் உண்டுகொண்டு தேகம் உரத்துமிகப்பாளைவைத்து வண்டுறுக்கி மிக்க வலுப்பேசினானெனவே சொல்லிடவே வானோர் திருமாலதுகேட்டு நல்லதுதானென்று நாடிச்சிவனோடுரைக்க அப்போது நல்ல ஆதி சிவமுரைப்பார் எப்போதும் பாலர் இவருண்ணமிர்தமெல்லாம் கொடுக்கும் படியாய்க் குருக்கவையுமென்றுரைத்தார் அடுக்கநின்ற தேவர் அதுகேட்டுச் சீக்கிரமாய் மறையோனையும் மாதுவையும் வந்தெடுத்து சாபமிட்டார் இறையவரைப் பார்த்து ஏதுரைப்பான் மறையோன் இப்போது இட்ட இச்சாபமானதுதான் எப்போது நீங்கும் என்றேகேட்டான் மறையோன் நீசக் குலமறுத்து நெடிய திருமாலும் மாசில்லாத் தர்ம வையகத்தையாளுதற்கு அன்பு சேகரிக்க அங்குவருவார் கண்டீர் வம்பு மாறும்போது மாறுமுங்கள் சாபமென்றார் உடனே மறையோனும் ஓவியமுள்ளதென்று தடமேலே நின்று தாலமென வளர்ந்தார் வளர்ந்த அமிர்தமதை மக்களேழு பேர்களுக்கும் பழமமிர்தக்காயோடு பலவகையுந்தானாண்டு அமிர்தமதை நீங்கள் ஆக்கிரகந்தானடக்கி குமிர்தமுடனீங்கள் குடித்திருங்கோவென்றுசொல்லி உங்களுக்குப் பாலமிர்தம் ஊறுமல்லாலித்தாலம் எங்களுக்குமித்தாலம் இசையாது கண்டீரோ பாலருக்கு இந்தவரம் பரமயுகத்தோர்கொடுத்து ஞாலமுள்ள காளி நாயகியைத்தானழைத்து பாலரையுங் காளி பண்பாக வாங்குகையில் ஆலமுதமுண்ட அச்சுதரும் ஏதுரைப்பார் அடவு பதினெட்டும் அலங்கார வர்மமதும் கடகரியின் தொழிலும் கந்துகத்தின் தொழிலும் மாவேறுந் தொழிலும் வாள்வீசுந் தொழிலும் பாவேறு பாட்டும் பழமறை நூலானதுவும் அடவு மேலான அதிகப்பல வித்தைகளும் திடமுமிகவருத்தி சேனாபதியாக்கி எல்லா விதத்தொழிலும் இசைவானராகமதும் நல்லா வருத்தி நாட்டமுடனே கொடுத்து உயிர்ச்சேதம் வராமல் ஒன்று போலென்மகவை நெய்ச்சீதம் போலே நீவளர்த்துத் தாவெனவே அல்லாமலென்மகவை ஆரொருவரானாலும் கொல்லாமல் காக்கக் கூடுமோவுன்னாலே அன்பான காளி அதற்கேது சொல்லலுற்றாள் என்பாலகர்தனையும் ஈடுசெய்யயிங்கொருவர் உண்டோகாணிந்த உலகிலெனக்கெதிரி என்றேதான் காளி இப்படியே சொல்லியபின் பாலரையுந்தானெடுத்துப் பரமசிவனாரருளால் கோலமுள்ளமாயன் கொடுத்தாரொரு வார்த்தைசொல்லி சீலமுள்ள காளியென் சித்திரப்பாலருக்கு பாலருக்குப் பங்கமது பற்றாமல் காத்திடுநீ மதலைதனக்கோர் தீங்கு வந்ததேயுண்டானால் குதலையரேவுனக்குக் கொடுஞ்சிறை சிக்குமென்று சொல்லியே காளிகையில் சிறுவரையுந்தான் கொடுத்து வல்ல பெலமுள்ள மாடுதனிலேறியையும் வேதாவையும் நல்லநெற்றி விழியுடையாள்தனையும் மாதாவுமான வாய்த்த சரசோதியையும் தேவர்முதல் வானவரை சிட்டர்முனிவோர்களையும் மூவர்களையுங்கயிலை ஊரேபோமென்றனுப்பி காளிதனைப்பிள்ளைகளை கருத்தாய்வளர் நீயென்று ஆழியடைத்த அச்சுதருந்தான் நடந்து சீரங்கமாபதியில் சென்றிருந்தாரம்மானை சாரங்கர் சீரங்கம் தான்வந்தாரென்றுசொல்லி சீரங்கமெல்லாம் செழித்து மிகவாழ்ந்து பாரெங்குமெச்சிப் பரந்தது காணம்மானை அப்படியே அச்சுதரும் அப்பதியிலங்கிருக்க எப்படியும் சீரங்கம் இனிதழைக்குமென்றுமிக மூவர் முதலாய் முப்பத்து முக்கோடி தேவருங்கொண்டாடி சிந்தை மகிழ்ந்தேயிருந்தார் சீரங்கமான திருப்பதியின் வளமை சாரங்கராயர் தாமுரைத்தாரம்மானை மாரியது மூன்று வருசிக்கத் தான்பொழிந்து ஏரி பெருகிட ஏற்றசெந்நெல்விளையும் கரும்பு முத்தீனும் கசுவுங்கரைபுரளும் அரும்பு வனமும் அகில்தேக்கு மாமரமும் கோவுஞ் ஸ்ரீரங்கரெனக் கூப்பிடுங்காணச்சுதரை மாவுஞ் ஸ்ரீரங்கரென வந்தழைக்குமச்சுதரை மயில்குயில்மான்கலை வாய்த்த அணில் பட்சிகளும் ஒயிலாக அச்சுதரை உள்ளாக்கியாடிவரும் அவ்வூரிலுள்ள அந்தணர்களெல்லோரும் கவ்வைவேறில்லாமல் கரியமால் தன்றனக்கு பூசை முறைவைத்துப் பிராமணர்கள் செய்துவர ஆசையுடனச்சுதரும் அங்கேயினிதிருந்தார் சீரங்க மாபதியில் சிறந்திருக்குமப்போது சாரங்கர் பெற்ற சான்றோர்களின் பெருமை நல்லது காணென்று நாடித் திருகேட்க சொல்லுகிறாரெங்கள் திருமால் காணம்மானை அன்பான சான்றோரை ஆனமாகாளியம்மை தன்கோட்டை புட்டாபுரம் தன்னில் எடுத்துப்போய் தரந்தரமாய் தொட்டில்கட்டி தன்பிள்ளை போலாக கரங்கொண்டமுதூட்ட கன்னிமக்கள் தான்வளர நடந்தோடி வளர நடைவண்டி செய்து கொடுத்தாள் தடபுடலாய் நடந்துவர தள்ளுவண்டி செய்து கொடுத்தாள் தொட்டிலில் இருத்தி சுற்றி இழுத்துவர நாட்டில் விலையுயர்ந்த நல்லபொன் தொட்டில் செய்தாள் இப்படியே சான்றோர் புட்டாபுரம் வளர அப்படியே மகிழ்ந்து ஆயன் ஶ்ரீரங்கமிருந்தார் காளியும் சான்றோர்க்கு கல்விகற்றுக்கொடுக்கவென்று நாழிகை தன்னில் நடைபூதங்களை வருத்தி பள்ளிக்கூடம் கட்டுமென்று பரகாளி விடை கொடுத்தாள் துள்ளியந்தப் பூதமெல்லாம் துரைத்தனமாய் ஒன்றுகூடி தங்கப்பொன்மலையைத் தான்பிடுங்கிக் கொண்டு வந்து பங்கமில்லாப்பள்ளிக் கூடம் கட்டிவைத்தனவே பள்ளிக்கூடம் கட்டினதை பரகாளிக்குச் சொல்லிடவே துள்ளிவளர் சான்றோரை தூக்கிப் பள்ளிக்கேகுமென்றாள் அப்படியே பூதங்கள் ஆயன்மக்கள் சான்றோரை முப்படி நூல்போலே பள்ளியிலே கொண்டுவிட்டார் அப்போது மாகாளி ஆயன்மக்கள் சான்றோரை இப்போ முத்தையள்ளுமென்று இன்பமாய் காட்டிடவே அப்படியே சான்றோரும் அள்ளினார் முத்துக்களை இப்படியே ஒண்ணுரெண்டு எண்ணெழுத்தும் கற்றாரே எண்ணிலக்கம் கற்றார்கள் ஏழுஇனச்சான்றோர்கள் மண்ணளந்தோர் பார்த்து மகிழ்ந்திருந்தார் ஶ்ரீரங்கம் வாசிக்கக் கற்றபின்னால் வாழ்வரசி மாகாளி காசுஎண்ணக் கற்பித்தாள் கட்டழகி மாகாளி கல்விகலைக்கியானம் கற்பித்துக்கொடுத்திடவே செல்லக்கன்னி மக்களெல்லாம் சீராய் கற்றுணர்ந்தார் அப்படியே மாகாளி ஏழினச் சன்றோர்க்கு நற்படியே கற்பித்து நலமாயிருக்கையிலே தக்சன் அநியாயம் தான் பொறுக்காத் தேவரெல்லாம் ஒக்க முறையமிட்டார் உடனேயந்த அச்சுதரும் புட்டாபுரத்தில் வந்து போர்காளியிடம் சொல்ல கட்டாத காளியம்மை காரணத்தை தான் கேட்டு மக்கள் தெய்வச்சான்றோரை வாருமென்று தானழைத்தாள் ஒக்கவந்து சான்றோர்கள் உடனழைத்ததென்னவென்றார் தேவர்களைத் தக்சன் முடுக்கமது செய்கிறானாம் மூவரிட்ட முறையம் முகுந்தன் தான்கேட்டு என்னிடத்தில் சொல்லி என் அண்ணர் கிருஷ்ணனும் உன்னிக் கடல்மேல் உறக்கமாய் இருக்கின்றார் படையாக நீரும் பாலர்களே வாரும் என்றாள் நடைக்காவணத்தை நன்றாக அலங்கரித்தாள் போர்க்கோலம் பூண்டார் பொன்னரியக் கன்னிமக்கள் ஆர்க்கமுள்ள காளியம்மை அலகைப்படை வருத்தி நடைக்காவணத்தில் சான்றோரை ஏற்றிவைத்தாள் கடல் நோக்கி அலகைகள் காவணந்தூக்கிச்செல்ல வித்தகலை ஏறினளே வீரகாளியம்மை சித்தம் மகிழ்ந்தாரே ஶ்ரீரங்கப் பெருமாளும் கடற்கரையில் வந்து காளி கூடாரம் போடு என்றாள் அடர்த்தியாய் போட்டு அலகைகளும் வைத்தாரே அங்கே அமர்ந்தாள் ஆரியனூர் எல்லையிலே மங்கையந்த மாகாளி மாணிக்கப்பூதம் வருத்தி நாக்கை நீட்டச்சொல்லி நாக்கில் சூலம் கொண்டெழுதி காகுத்தாவென்று கடல்முழுதும் நீட்டுவென்றாள் என்றதுவும் நாக்கை நின்றுபூதம் நீட்டினதாம் வந்த அலகையெல்லாம் வாய்த்த காவணம் தூக்கி நடந்தாரே நாக்குவழி நாயகி படைகளெல்லாம் கடலில் ஒரு தீவு கண்டு கூடாரமிட்டார். தேவாதியெல்லாம் திருமுறையமிட்டனரே மூவாதிமூவர்களும் மோடுவழிதாள் திறந்து அங்குபார்த்திருந்தார் அரக்கன் கொடுமைதன்னை சங்குவண்ணர் மக்கள்வர தக்சன் அவன் பார்த்து காலமே வந்தீரே கல்தூக்கிப் போடுமென்றான் மாலவரின் மக்கள் மாகாளி வாய்பார்க்க கல்லெடுத்து அவன்மேல் கட்டாகப்போடு என்றாள் மல்லுக்கு வந்தாளென்று வாளெடுத்து தக்சனவன் வெட்டுவேனென்று வீர காளிமேல் சாடினனே கட்டாக காளியம்மை கையால் பிடித்தனளே வாளைப்பிடித்து அம்மை வலக்கையால் சவட்டிவிட்டாள் காளைபோல் கீழ் விழுந்தான் காலையம்மை முறித்தாளே ஞாயமாய் தக்சனையும் நடுக்கேட்க வேணுமென்று மாயவரும் தக்சனிடம் வந்துநின்று கேட்டாரே முன்பிறப்பில் நீயும் துரியோதனனாய் பிறந்தாய் என்னோடு பிறந்தவரை பஞ்சவராய் நான் படைத்தேன் நாடு கொடுக்காமல் நம்முடைய பஞ்சவர்க்கு கேடு நினைத்தாய் நீயும் கெடுவதறியாமல் பதினெட்டு நாளையிலே பாரதப்போரும் முடித்து சதிவீமன் தண்டால் தட்டியுன் தொடைமுறித்து முன்னுகத்தில் நீ சொன்ன மொழிகேட்டேன் உன்னிடத்தில் என்தம்பி வீமன் தான் எனைக் கொன்றான் என்றாயே உன்தம்பியானாலோர் நாடுகொடுக்க ஒண்ணாதோ என்றன்று சொல்லி இனிமேல் பிறவியிலே பெண்ணாலே மாளவைப்பேன் இன்று பேசினதும் கேட்பேன் என்று சொல்லி உன்னை சங்கரித்தேன் அப்போது பின்னுன்னை தக்சனென பிறவியது செய்தோம் உன்னி நீ கேட்ட வரமனைத்தும் தந்தோமே பின்னுந்தேவாதிகளை பிடித்தேவல் கொண்டாயே இன்றும் நீ என்மகவை ஏவல் கொண்ட ஏதுவினால் பெண்ணொருத்தி உன்காலை பிடித்து முறித்தாளே கண்ணாலே பார்த்தாயா கால் முறித்ததும் பெண்தானே இன்றோடுனக்கு யுகப்பிறப்பு ஆறதிலும் என்னை நினைக்கவில்லை என் சொல்லும் நம்பவில்லை உன்னையின்னமிந்த உலகிலொருபிறவி சின்னவன்னமாகச் சிரசொன்றாய்த்தான்படைத்து அறிவுபுத்தி யோடும் ஆணுவங்கள் தன்னோடும் செறியுங்கலையோடும் சிறப்போடுந் தான்படைத்து என்பேரிலன்பு இருக்கவெகு சாஸ்திரமும் தன்போதமறியத் தான்படைப்பேன்கண்டாயே முன்னேவுனக்கு உற்ற பிறப்பாறதிலும் என்னை நினைப்பு எள்ளளவும் நம்பவில்லை ஏழாம் பிறப்பதிலும் என்னைநினையாதிருந்தால் பாழாவாய் மேலும் பகையில்லை யென்றனக்கு என்று தக்சனிடம் இயம்பினார் மாயவரும் கொன்னாளே காளியம்மை குறையுயிரை கோபமாய் நின்று வதைத்து நிறையுடனே காளியம்மை அன்று சான்றோர்க்கு அவ்வூரைப் பட்டம் சூட்டி மூவர் சொற்படியே முத்தான காளியம்மை தேவர் சிறையகற்றி தேன்மொழியாள் ஆண்டிருந்தாள் தக்சன் கோட்டையின் தங்கமுடி ரெட்டைச்சங்கு ஒக்கக் கொடுத்தாள் உற்ற மக்கள் சான்றோர்க்கு வெற்றி விருதும் பெற்று வீரமுள்ள சான்றோர்கள் பெற்றிருந்த பெருமைதன்னை பேறான லட்சுமிக்கு அய்யா உரைத்தார் அடியேன் அதைஎழுதி வைகுண்டர் முன்னே வாசித்து ஒப்பமிட்ட அன்பான இந்த அகிலத்திரட்டு அம்மானை தன்விரதமாயிருந்து தண்மையெனக் கேட்டவர்க்கும் தர்மம் மிகச் செய்து தாழ்மையுடனிருந்தோர்க்கும் பொறுமைப்பெரியோர்க்கும் பொய்யில்லா மெய்யோருக்கும் கர்மம் முதல் சஞ்சலங்கள் கழியும் தன்னாலே வன்மம் வைத்திருந்தோர் வன்னரகம் வீழ்வாரெனவும் உண்மையுடன் லட்சுமிக்கு உபதேசம் எனவுரைத்தார் நன்மைகண்டு கடல்விட்டு நடந்தாரே ஶ்ரீரங்கம் கட்டான காளியுடன் கண்ணர் மக்கள் சான்றோர்கள் புட்டாபுரம் வந்தார் பூதக்கணம் சுமக்க மக்களை மனையதிலே மகிழ்ந்து இருங்களென்று சிக்கெனவே காளி சிம்மாசனமிருந்தாள் சான்றோர்கள் நல்லோரென்று சகலவிதமான பேரும் வந்துபணிந்தாரே வர்ணனையாய் பேசினரே தக்சனைக் கொன்றவர்கள் தனிவிருது பெற்றவர்கள் ஒக்க ஒருமுகமாய் உலகாள வந்திடுவார் என்றன்று பேசி இருக்குமந்த நாளையிலே நன்றான சான்றோரை நாட்டில் மிகப்பார்த்து வந்தாரே நாரதரும் வல்ல காளி தன்னிடத்தில் சொந்தமாய் நாரதரும் சொன்னார் மாகாளியிடம் நன்றான சான்றோர்கள் நாட்டில் பெரியோராய் வந்தார் வலங்கையிலே வலுவீரரென்று சொல்லி கலியாணம் பண்ண கருத்துண்டே மக்களுக்கு வலிய பெலக்காரி வகையென்ன சொல்லு என்றார் அப்போது காளி அவரைப் பார்த்து ஏதுரைப்பாள் இப்போது நாரதரே என்னண்ணரிடம் கேட்டு மாமுனியே நீயும் மக்களேழு பேர்களுக்கும் நீமுயன்று பெண்ணேழு நிச்சயித்து வாருமென சாதனையாய் சொல்மொழியை கேட்டு நாரதரும் நீதமுடன் நாடாண்ட நிருபதி ராசனவன் பெற்ற மதலைகள் பெண்ணேழு இருக்குது காண் சித்தம் இரங்கி சிணம் கேட்டு வாறேனென்றார் காடு கடந்து கரியவனம் தான் கடந்து நாடு கடந்து நல்ல கடல் தான் கடந்து ஶ்ரீரங்கம் சென்று எம்பெருமாளுடன் கேட்டார் அறிந்தெம் பெருமாள் அச்சுதரும் நல்லதென்றார் உடனந்த நாரதரும் ஓட்டமுடனே நடையாய் நடையாய் நடந்து நல்லவனவாசம் விட்டு நிருபதிராசனிடத்தில் நேராக கேட்டதுகேள் குரு எம் பெருமாளின் குணமான மக்களுக்கு உன் மக்கள் ஏழதையும் உகந்து கொடுக்கிறாயா என்றுமிக கேட்டாரே இயலான நாரதரும் அன்று நாரதர்க்கு அரசன் சொன்னதைக்கேளு நன்றான நாலுபத்து நானான்கு தேசமதை ஆளப்பிள்ளை இல்லையென்று ஆதிசிவனை நோக்கி நாளு கடத்தாமல் நாட்டில் தவசிருந்தோம் ஈசரும் ஈசுவரியும் எங்கள் தவத்தில் வந்து ஆசையாய் நீங்கள் அழைத்தது ஏதுவென்றார் பிள்ளையொன்றும் இல்லையே பேருலகை ஆளுதற்கு வள்ளலான ஈசுரரே மதலையது தாருமென்றேன் ஆண்பிள்ளை உந்தனுக்கு ஆகமத்தில் இல்லையென்றும் பெண்பிள்ளை ஏழு பிறக்கும் என்றும் சொன்னாரே அப்போது ஈசுரரை அடியேன் மிகப்பார்த்து இப்போது என்றனக்கு இரணமுடிவாகுகையில் கொள்ளிவைக்கப்பிள்ளை ஒன்றுகொடுவுமென்றேன் தெள்ளிமையாயீசர் சொன்னமொழிகேளும் தெய்வச்சான்றோராய்த் திருவான மாகாளி கையதுக்குள் வாழ்ந்துன் கன்னியேழுபேர்களையும் மாலையிட்டுன்றனக்கு வருமாபத்தையெல்லாம் மேலவராய்க் காத்து மேதினியோர் தாமறிய உன்றனக்கு நல்ல உதவிமிகச்செய்வதற்கும் வந்தங் கிருப்பாரென வகுத்தாரே ஈசுரரும் ஆனதால் பெண்ணேழும் அவர்க்கேதானல்லாது மான முனியே மற்றெவர்க்கு மாகாதே என்று நிருபதனும் ஏற்றமுனியோடுரைக்க நன்று நன்றென்று நாரதருஞ்சம்மதித்து மன்னவனே கேளு மாகாளி தன்னிடத்தில் சொன்னபிள்ளையேழும் சிறந்திருக்கிறாரெனவே அந்த மன்னரான ஆண்பிள்ளைகளானோர்க்கு இந்த முகூர்த்தம் யான்கேட்க வந்தேனென்று சொல்லமுனி மன்னவனும் சோபிதமாய்மகிழ்ந்து நல்ல முகூர்த்தம் நாளிட்டானம்மானை நாளிட்டு நாரதரும் நல்ல மாகாளியுட தாளிணையைப்போற்றி தானுரைத்தாரம்மானை மாகாளியுன்றனுட மக்களேழுபேர்களுக்கும் வாகான மன்னன் வாய்த்த நிருபனுட மக்களேழு பெண்களையும் மாலைமணஞ் சூட்டுதற்கு மிக்கநாளிட்டு மேவிவந்தேன் மெல்லியரே என்றுமுனி சொல்ல ஏற்ற மாகாளி சொல்வாள் நன்றுநல்ல மாமுனியே நான்வளர்த்த கண்மணிகள் தெய்வப் பிறவியல்லோ திசைவென்ற சான்றோர்கள் மெய்வரம்புள்ள மெல்லியரைசொல்லுமென்றாள் பியற்றிவந்த பெண்ணதுக்குப்பிறவியென்ன மாமுனியே உய்த்துவந்தபெண்ணேழின் உற்பவஞ்சொல்முனியே அப்போது பெண்ணார்கள் ஆதிப்பிறவியெல்லாம் செப்புகிறோமென்று காளிதனைத்தெண்டனிட்டு கேளாய் நீயென்று கிருபையுடனேதுரைப்பான் நாளான நாளதிலே நல்லதெய்வலோகமதில் தெய்வேந்திரனார்க்குச் சொல்லேவல் செய்திருந்த நெய்நெடியக் கன்னி நேரிழைமாரேழ்பேரும் வேலையின்னதென்று விவரித்துக்கேள் மாகாளி மாலையிலுங்காலையிலும் வானவர் கோன்றனக்கு பூவெடுத்திட்டுப் பூசைபுனக்காரமிட்டுக் கோவெடுத்த ராசனுக்குக் குஞ்சமிட ஆடிநிதம் ஏவல் புரியுகின்ற இராசதெய்வக்கன்னியர்கள் நாவுலகு மெய்க்க நடந்துவரும் நாளையிலே பூவுலகு மன்னர்களைப் பூத்தான மாகவெண்ணி பாவினியக் கன்னி பஞ்சமது வேறாகிப் பூவெடுக்கக் கன்னி போகாமல் வாட்டமதாய் ஆவடுக்கங் கொண்டு அவர்களொருப்போலே காச்சல் குளிரெனவே கவ்வையுற்றுத் தானிருக்க மாச்சல்தனையறிந்தான் மகவானுமப்போது ஆனதால் வேதாவின் அண்டையவனணுகி தீனம்வந்ததேந்த தேவியர்க்கு வேதாவே வேதா தெளிந்து விரித்துரைப்பாரப்போது சூதானமான தோகையேழுபேரும் பூலோக மன்னருக்குப் பிரியமுற்று மையல்கொண்டு காலோயுதென்று கவ்வையுற்ற தல்லாது வேறில்லையென்று வேதா இதுவுரைக்க தேறியே வாசவர்கோன் தேவியெழுபேர்களையும் அப்படியே பூவுலகில் அமையுமென்றார் வேதாவை இப்படியே வந்து இவர்பிறந்தாரென்றுமுனி சொல்லச்சிவகாளி சிரித்து மனமகிழ்ந்து நல்லதிது மாமுனியே நன்முகூர்த்தம் பார்த்துரைநீ உடனே முனியும் உகந்த முகூர்த்தமென்று திடமே நிருபனுக்குச் செய்திசொல்ல ஆளும்விட்டு நாளை முகூர்த்தமென்று நாற்றிசையுந் தானறிய கோழையில்லா மன்னர் குலதெய்வச்சான்றோர்க்கு முகூர்த்தமென்று சாற்றி மூவுலகுந் தானறிய பகுத்துவமாய் நல்ல பந்தலிட்டாரம்மானை வயிரக்கால் நாட்டி வயிர வளைகளிட்டுத் துயிரமுள்ள தங்கத் தூண்கள் மிகநாட்டி முத்து நிரைத்து முதுபவள வன்னியிட்டுக் கொத்துச் சரப்பளியைக் கோர்மாலையாய்த் தூக்கி மேற்கட்டி கட்டி மேடைபொன்னாலேயிட்டு காற்கட்டி பட்டுக் கனமாயலங்கரித்து வாழை கரும்பு வகைவகையாய் நாட்டிமிக நாளை மணமென்று நாட்டுக்குப் பாக்குவைத்து வெடிபூவாணம் மிகுத்தகம்பச்சக்கரமும் திடிமனுடன்மேளம் சேவித்தார் பந்தலுக்குள் வாச்சியங்களின்னதென்று வகைசொல்லக் கூடாது நாச்சியார் மாகாளி நாயகியுங் கொண்டாடி பாலருக் கேற்ற பணியெல்லாந்தான்பூட்டி சாலமுள்ள சிங்கத் தண்டிகையில் தானிருத்தி பட்டணப் பிரவேசம் பகல்மூன்று ராமூன்று இட்டமுடன் பூதம் எடுத்து மிகச்சுற்றி வந்து மண்டபத்துள் வைத்து மாபூதஞ் சூழ்ந்து நிற்க தெண்டனிட்டு மன்னர் தேசாதி சூழ்ந்து நிற்க பதினெட்டு வாத்தியமும் பட்டணமெங்கு முழங்க ததிதொம்மெனவே சில தம்புருசாரங்கி கெம்ப பந்தமது பிடித்துப் பலபூதஞ் சூழ்ந்துநிற்க நந்த கோபால நாராயணர் மகிழ்ந்து மைந்தருக் கின்று மணமுண்டு என்றுசொல்லி வைந்தர்பல தேவர்களை வாருமெனவேயழைத்து பாலருட முகூர்த்தம் பார்க்கப்போமென்றுசொல்லி சீலமுடனனுப்பி ஸ்ரீரங்கமேயிருந்தார் தேவதேவர் புகழத் திசைவென்ற சான்றோர்க்கு மூவர்களும் வந்து உதவிசெய்தாரம்மானை நல்ல முகூர்த்தம் நாள்பார்த்து சான்றோர்கள் எல்லாச்சடங்கும் இயற்றி வைத்தாரம்மானை சடங்கு முகித்துச் சான்றோரை யொப்பமிட்டு தடங்கொண்ட மன்னவரைத்தண்டிகையின் மீதிருத்தி அரசர் மிகச்சூழ அணியீட்டியாட்கள்வர விரைவாகக் காளி வித்தகலையேறிவர அரம்பையர்களாடிவர அயிராவதத்தோன்வரவே வரம்பெரிய தேவர் மலர்மாரி தூவிவர ஆலத்தியேந்தி அணியணியாய்த் தான்வரவே மூலத்தி கன்னி மோகினியாள் தன்னுடனே பூதமதாடி பிடாரியது சூழ்ந்துவர நாதம் ரெட்டையூதி நடந்தார் மாப்பிள்ளைகண்டு விருதிற் பெரிய வீரதெய்வச்சான்றோர்கள் நிருபன் மக்களை நியமித்து மாலையிட வீரியமாய் நல்ல விவாகமிட வாறாரென பூரியலிற் சொல்லி பேர்கள் சிலரூத இப்படியே வாத்தியங்கள் இசைந்திசைந்தேவூதி அப்படியே நிருபன் அரசன் மகள்தனையும் மாலை மணமிட்டு வாழவந்தாரம்மானை வாலையது வான மாகாளி வாழுகின்ற மண்டபத்துள் வந்து மகிழ்ந்திருந்தாரம்மானை தண்டமிழ்சேர் கன்னி சான்றோர்களானோர்க்கு கோட்டையும் மாளிகையும் குமாரருக்கும் பெண்களுக்கும் தாட்டிமையாய் கொடுத்தாள் வாழ்ந்திருந்தார் சான்றோர்கள் மெய்த்துப்புவி கொண்டாட மெல்லியர்கள் தங்களுக்கு வயிற்றில் கெற்பமாகி மதலைபெற்றாரம்மானை இப்படியே கன்னி எல்லோரும் நன்றாக அப்படியே மதலைபெற்று அகமகிழ்ந்தாரம்மானை பாலருக்குப் பாலர் பரிவாய் மிகவளர சீலமுள்ள வித்தை சிறக்க அவர்வருத்தி எமத்திறைவராக எங்கும் புகழ்ந்திடவே சமர்த்தரெனஅவர்கள் தலையெடுத்தாரம்மானை முத்து வியாபாரம் முதல்வியாபாரமுதல் பத்தரை மாற்றுப் பசும்பொன் வியாபாரமுடன் மாணிக்க வியாபாரம் வயிரப்பொன் வியாபாரம் ஆணிப்பொன் வியாபாரம் அழகுகச்சை வியாபாரம் கப்பல் வியாபாரம் கறிமிளகு வியாபாரம் ஒப்பமுள்ள வியாபாரம் ஒக்கமிகச்செய்தனராம் தாலம தேறித் தைரியமாய்ப் பால்வாங்கி மேலுள்ள சான்றோர் மிகுதியாயாண்டிருந்தார் நெய்த்தொழில் வில்தொழிலும் நெறடுவிதத்தொழிலும் மெய்த்தொழில்கள் கற்று மேலோரெனவளர்ந்தார் சோழனதையறிந்து தெய்வச்சான்றோர்களுக்கு வேழம்பல கொடுத்து மிகுகற்பமுங்கொடுத்து நல்லமன்னரென்று நாடி மகிழ்ந்திருந்தார் செல்லமன்னரான தெய்வச்சான்றோர்களுக்கு அடிக்கல்லெழுதி ஆயிரம் பொன்கொடுத்து முடிக்கு முடிச்சோழன் முத்துமுடியுங்கொடுத்து வீர விருதுகளும் வேழம் பரிகொடுத்து பாரமுள்ள சீமைதனில் பங்கு மிகக்கொடுத்து சோழன் முடியும் துலங்க மிகக்கொடுத்து ஆழமுள்ள சான்றோர் அரசாண்டாரம்மானை சோழனுடனெதிர்த்துச் சோரவந்த மாற்றானை வேழமுடி மன்னர் வெற்றிகொண்டாண்டிருந்தார் வெட்டாத படையை வெட்டி விருதுபெற்று அட்டாளத்தேசம் அடக்கியரசாண்டிருந்தார்


கலியன் கலிச்சி பிறப்பு இப்படியே சான்றோர் இராச்சியத்தையாண்டிருக்க அப்படியே சீமை அவர்க்குள்ளேயாக்கி வைத்து தர்மமுடன் பூமி தானாண்டிருக்கையிலே வர்மம் வந்தஞாயம் வகுக்கக்கேளொண்ணுதலே சீரங்கமானதிலே சீரங்கநாதருந்தான் பாரெங்கு மெய்க்கப் பள்ளிகொண்டிருக்கையிலே நாட்டுக்குக்கேடு நாட்பிடித்த செய்திதன்னை கூட்டுக்கிளியே கூர்மையுடனே கேளு முன்னே குறோணி முடிந்ததுண்டமாறதிலே அன்னே கேளஞ்சுதுண்டம் அவனிதனிலே பிறந்து ஆதிதனைநினைத்து ஆளாமலவ்வுயிர்கள் நீதிகெட்ட மோச நீசனைப்போல் தானாகி முப்பிறவியோடாறும் முதலோனைப்போற்றாமல் அப்பிறவியாறும் அழித்ததன்மேலாயிழையே குருமுனிவனான கூர்மையுள்ள மாமுனிவன் அருமுனிவனான ஆதிமுனியைநோக்கி தவமே தவப்பொருளே தாண்டவசங்காரவனே சிவனே என போற்றிச் சொல்லுவான் மாமுனிவன்

முன்னே பிறந்த குறோணிதனை மூவிரண்டாகவுடல் பிளந்து தன்னேவுயிரோடுஅஞ்சுசெய்தும் சுவாமி உனைநினையாததினால் வன்னத் திருமால் கொலையடக்கி வந்தார் சடலமிழந்து குண்டம் இன்னம் பிறப்பொன்றுண்டே இறந்த குறோணியவன் தனக்கே

வாசமுள்ள நேசா மற்றொப்பில்லாதவனே ஈசனே நானுமொன்றுஇயம்புகிறேன் கேளுமையா குறோணியவனுடலைக் கூர்மையுடனேபிளந்து சுறோணித மாயன் தொல்புவியில் விட்டெறிய அஞ்சுதரமுயிரு அவனிதனிலேபிறந்து பிஞ்சுமதி சூடும் பிஞ்ஞகனைப் போற்றாமல் மாயனையுமெண்ணாமல் மதமாயிருந்ததினால் ஆயனந்தச்சூரரையும் அழித்தார் காணீசுரரே முச்சூரனோடாறு யுகமுமுயிரழித்து அச்சூரக்குடும்பம் அறுத்தந்த மாயவரும் கொண்டிருந்தபொய்ச்சடலக் கூட்டை மிகக்களைந்து ஆண்டிருந்த குண்டம் அவரடைந்தாரம்மானை முச்சூரன் துண்டம் ஒன்றுண்டு ஈசுரரே அச்சூரன் பிறவி ஆறொன் றீரரையாய் ஆறாம் யுகத்தில் அமையுமென்று மாமுனியும் வீறாக ஈசுரரை விண்ணப்பஞ்செய்து நின்றான் நல்லதுதானென்று நாட்டமுற்று ஈசுரரும் வல்லவனே மாமுனியே மாயன் வரவேண்டாமோ என்றுநல்ல ஈசர் இயம்பமுனியேதுசொல்வான் நன்றுகாண் மாயவர்க்கு நாலுரண்டோராம்பிறவி பிறக்கத் தவசு புரியப்போய்க்கீழுலகில் உறக்க மெய்ஞ்ஞான ஒளியிருக்கிறாரெனவே தேவமுனி சொல்ல சிவனாரகமகிழ்ந்து கோவுகத்திலுள்ள குருவசிஷ்டர் தங்களையும் தெய்வலோகத்திலுள்ள தேவரையும் வருத்தி வைந்தலோகத்திலுள்ள வாய்த்த தர்மி தங்களையும் கிணநாதர் கிம்புருடர் கிங்கிலியரையும் வருத்தி இணையாக மேலோகத்து எல்லோரையும்வருத்தி சத்தி மறையும் சாஸ்திரத்தையும் வருத்தி அத்தி முகவனையும் ஆனவ கும்பனையும் சங்கமறையை வருத்தித் தான்கேட்பாரீசுரரும் இங்குண்டோ மாலும் எங்கிருப்பதுண்டனவே எல்லோருங்கூடி இதமித்துச் சொல்லுமென்றார் அல்லோருங்கேட்க அரன்சொன்னாரம்மானை வேழமொத்ததேவரெல்லாம் மேகவண்ணரிங்கில்லை கீழுலகில் மாண்டு கிடக்கிறாரென்று சொல்லி ஒன்பதாம் பிறவி ஒடுங்கியவர் பிறக்க இன்பமறக் கீழுலகில் இறந்துகிடக்கிறாரெனவே எல்லோருஞ் சொல்ல ஈசுரரும் நல்லதென்று அல்லோருங் கேட்க அவரேது பின்சொல்லுவார் முன்னே பிறந்த முண்டசுரன் தன்னுயிரை தன்னோடாறுபிறவி தான்செய்தோமசுரரென ஆறு பிறவியிலும் அசுரரெனவே பிறந்து வீறுடனே நம்மை விரும்பவும் நாம் கண்டிலமே இப்போதவன் தனக்கு ஏழாம் பிறவியிது அப்போதும் நம்மை அவன்நினையாதிருந்தால் இல்லை மேற்பிறவி இறப்புமுடிவாகுமல்லோ நல்ல பிறவியதாய் நமைத் துதிக்கப் புத்தியதும் அழகு சவுந்தரியம் அலங்கார மெய்யறிவும் குழவு மிகப்புத்தி கூர்மையலங்காரமுடன் மேலு மாலாறு முடித்த யுகங்களுக்கு நாலுமுழமொன்றுதலை நல்லோரசுரர்களை கொன்றதாலவ்வசுரர் கூறுதற்குச் சொல்லுமுண்டே இன்னமிந்த மாயன் எடுத்தவுருப்போலே படைத்துநாம் வைத்தால் பகருமொழிவேறில்லையே நடத்துவதேதெனவே நவிலுமென்றார் தேவர்களை அப்போது தேவர்களும் ஆனமறை வேதியரும் எப்போது மிறவாது இருக்கும் முனிவர்களும் நல்லது தானென்று நாடியகமகிழ்ந்து வல்லப் பிறவி வகுக்கத் துணிந்தனராம் பிறவி வகுக்கவென்று பெரியோனகமகிழ்ந்து திறவி முதலோன் தெளிந்துநிற்கும் வேளையிலே துண்டமது பிண்டமதைத் துளைத்துக்கால் மேல்நீட்டி மண்டைகீழ் கால்மேலாய் வந்துதித்தானம்மானை எல்லோருங்கண்டு இதுகண் மாயமெனவே அல்லோரும் வந்து ஆதியோடேவுரைத்தார் உடனே சிவமும் உள்ளமிகக்களித்து இடமே தான்பேர்ந்து எழுந்தருளி ஈசுரரும் அதிசயத்தைப்பார்க்க அவரேகும் வேளையிலே எதிராக நின்று நந்தி ஏதுரைப்பாரம்மானை மூவர்களுந் தேவர்களும் மூர்த்திகளுங்காணாத தேவரீரெழுந்தருளி திசைநோக்கி வந்ததென்ன அப்போது நந்தியுடன் ஆதி மிகவுரைப்பார் இப்போதோரற்புதமாய் இருக்குதென்றாரெல்லோரும் வானோக்கிக் காலும் மலர்நோக்கிச்சிரசும் தானமது மாறி தலைகீழாய் நிற்பதுவும் பார்த்து வரலாமெனவே பைய நடந்தேனென்றார் அங்கல்ல தானம் அழிந்தது காணீசுரரே இங்கு நான்கண்டேன் எழுந்தருளி வந்ததினால் தலந்தானிளகி தான் வந்ததாலேதான் குலந்தானழியும் குசல்பிறக்கும் ராச்சியத்தில் வரம்பழியு மாரி மனுநீதங் குன்றுமையா பரம்பெரிய வேதம் பழுதுவருங்கண்டீரே என்றந்த நந்தி ஈசுரரையுங்கூட்டி குன்றுபொன்னான கிரிமேவித் தானிருந்தார் நடந்த புதுமையென்ன நாம்வருத்திப் பார்க்கவென்று திடந்தெளிந்த மாமுனிவன் செப்பவே ஈசுரரும் சாத்திர வேதச் சதுர்மறையைத்தான் வருத்தி சித்திரபுத்திரரைச் சீக்கிரத்திலே யழைத்து வந்த புதுமை வகையென்ன நம்கணக்கா இந்தக்கணக்கை எடுத்துரை நீ யென்றனராம் அப்போது ஈசுரரை அன்போடுறவணங்கி செப்போடு வொத்த சித்திரருஞ்செப்பலுற்றார் சாத்திரத்திலுற்ற தன்மை மிகக்கேளும் சீத்துவமாகச் சித்திரரும் செப்பலுற்றார் முன்பிறந்த குறோணி உடலாறு துண்டதிலே தன்பிறவியோடாறு தான்பிறந்தான் சூத்திரமாய் மண்தானுடம்பு வந்துதித்தோன்றனக்கு விண்தானுடம்பு விலாசக்குருவோடு சலந்தானுடம்புக்கு உறுதி தைரியங்கள் வலந்தானிளகி வன்னியோடுங்கூடி கலந்து திரண்ட கட்டைமுண்டமானதுக்கு பிலந்தூக்கும் வாயு பிராணன்காணீசுரரே முப்பழியோடாறு உயிரழித்த மாயனுக்கு இப்போது வந்த இவன்தான் கொடியனையா மாயனாலு முழமாய் மனுச்சிங்கமுகமாய் வாயமாய் நம்மை வதைத்தானேயென்றுசொல்லி அன்றாயனெடுத்த அளவாயுருவெடுத்து சென்றாலவனுடைய திறத்தைநாம் பார்ப்போமென்று வேகத்தால் துண்டம் வெடித்ததுகாணிப்புதுமை ஏகந்தானாளும் ஈசனே யென்றுசொல்லி இப்படியே சித்திரரும் எடுத்துரைக்கவே ஈசர் அப்படியே வந்தவனுக்கு ஆயுசுமவன்பலமும் கரணமுதல் நடப்பும் கட்டாக நீதேர்ந்து மரணமுதல் நடப்பும் வகுத்துரைநீ நம்கணக்கா அப்போது சித்திரரும் ஆதியருள்நெஞ்சில் வைத்து பொற்பாதமுண்டெனவே புகல்வாரியல்கணக்கர் அப்பனுமம்மை அடங்கிமிகப்பெறாமல் கொப்பளித்துத் தானாய்க் குதித்துவந்த நீசனுக்கு தத்துவந்தொண்ணூற்று ஆறுந்தடிக்குணந்தான் புத்தி புலனைந்தும் பொய்ப்பூண்ட பூதமுமாய் சத்துருக்கன் கண்கால் தலையும் வெறும்நீசம் உற்றுணர்ந்து பாராத உடலுமவன்காலும் மாயக்காயமதுக்கு வருசமொரு நூறிருப்பு தோயநாதத்துளிர் தொகைபத்து நூறாயிரந்தான் வாழ்வுவந்து சேர்க்கை வருசம் பதினாறு தாழ்வு தசைநரம்பு சனித்த முப்பத்தோராண்டில் ஆர்க்கை எலும்பு அடைக்கும் நரம்புடனே மூர்க்கத்தசையும் உதிரப்புனலுடம்பும் மண்தண்ணீரோடே வகைக்காகாப்பாண்டமிது விண்பரந்த வீடு வெளிவாயில் ஓட்டலுமாய் ஓட்டை மடத்துக்கு ஒன்பது பொந்துடனே வீட்டைப்பிரித்தால் விறகுக்குமாகாது விசையிட்டு ஆட்டும் வித்தாரப்பாவையிலும் பசையில்லாப்பாவையிது பட்சியொன்றாடிவரும் பட்சிக்குக்காயம் பகைத்துக்கிட்ட முட்டுகையில் குச்சியைக்கீழ்ப்போட்டு குதித்தோடு மக்குருவி இக்குருவிக்கூடு இவன்மணியமீசுரரே அக்குருவியேகும் அவ்வளவுமிந்நீசன் பண்ணுகிற நீசம் பரமனுக்குமேராது கண்ணிமைக்கு முன்னே கனவுருட்டுச்செய்திடுவான் இப்படியேவுள்ள இயல்புமிவன்நினைவும் அப்படியே நீசம் அடைந்த மனவீடும் உள்ளவனாய் வந்து உருவெடுத்தானாகையினால் எள்ளளவும் நன்றி இருக்காது ஈசுரரே என்று கணக்கர் எடுத்துரைக்க ஈசுரரும் அன்று அவன்தனக்கு ஆளனுப்பித்தான்வருத்தி ஆரைவிடுவோமென்று ஆராய்ந்து ஈசுரரும் சூரமுள்ள காலன் தூதனெமன்தனையும் துட்டமுள்ள பூதக் கிங்கிலியர் துர்க்கையையும் மொட்டைக்குறளிகளையும் முக்கோடிக்கூளியையும் விட்டழைத்து வாருமென்று விடைகொடுத்தாரீசுரரும் துட்டக்குணத்தோர் துடியாய் மிகநடந்து கொட்டங்கீழாகக் குருத்துநின்ற பாதகனை தட்டு மிகமாறி தலைகீழாய் நின்றவனை ஈசரழைத்தார் எழுந்திருந்து வாவெனவே நீசன் தனையழைக்க நெளிந்தேவுருண்டவனும் பிரண்டுருளப் பிண்டம் பிசைபிசைந்து தான்மலங்க மருண்ட விழியால் மாகமதுகலங்கி மண்ணை விட்டுயர மண்டைவரமாட்டாமல் விண்ணெல்லா மெத்த வெம்மருண்ட தம்மானை கயிலை கிடுகிடெங்கும் கண்டபேர் தாம்பதற அகிலங்கிடுகிடெங்கும் அழைக்கவந்தோர் தாம்பதற அரனாரிடத்தில் அவர்கள் சிலரோடி சிரமானது வெளியில் செல்ல வரமாட்டாமல் பூமி கலங்கிப் பொறுக்கமிகக் கூடாமல் சாமியந்த நீசன் தான்வரவே மாச்சலுண்டு என்றந்தத் தூதர் இப்படியே சொல்லிடவே அன்று சிவனார் அதற்கென்ன செய்வோமென்று தம்மாலேயாகும் தந்துதெளிந்தெடுத்து கம்மாளன் வேலையினால் கவ்வையொன்றுண்டாக்கி குத்திப்பு றத்தே கோதிவையுமென்றுசொல்லி எத்திசையும் நந்தி ஈசுவரனார் கைக்கொடுத்து வேண்டியந்த நந்தி விரைவாயவர் நடந்து ஊண்டிநின்ற நீசனையும் ஒருகவ்வையால் கோதி வெளியிலே வைக்க வெப்பெடுத்த பாதாளம் பளிரெனவே வந்து பொருந்தியதேயம்மானை பூமிதனில் வெடித்த பொல்லாத நீசனையும் சுவாமிமுன்பாகவே சுரண்டியதனாலிழுத்து கொண்டுவந்து விட்டார் குருநாதர் முன்பதிலே கண்டுஅந்த ஈசர் கனமாய் விசேசமுற்று உன்றனக்கு வேணுமென்று உகந்ததெல்லாமிப்போது என்றனிடங்கேளென்று ஈசுரனார் தானுரைக்க உடனேயவனும் உள்ள மிகக்களித்து விடமேதான் பூண்டு விரிகந்தைத்தானுடுத்து மேலெல்லாங் குப்பை மிகப்பூசி யானையுட தோலிலிருப்பவனோ சொன்னதெல்லாந் தாறதுதான் என்று களிப்பாய் ஈசுரரையந்நீசன் அன்று மொழிய அமரரதையறிந்து பொல்லாத நீசா பொருளறிய மாட்டாமல் எல்லாரைப் போலே ஏசாதே ஈசுரரை லோகம் படைத்தவர் உறுபொருளாய் நிற்பவர் ஏகம் நிறைந்தவர்காண் இறவாதிருப்பவர்காண் பட்சி பறவை பலசீவ செந்துகட்கும் நிச்சயமாய்ப்பொசிப்பு நிதமுமளிப்பவர்காண் மாயவனும் நான்முகனும் மறையுமிகக்காணாமல் தேயவாறுங்காணாத் திட்டிக்க வல்லவர்காண் இத்தனையும் நீசனுக்கு இயம்ப அமரர்களும் புத்திக்கு நட்புப் போதாமல் பின்சொல்லுவான் ஆனால்தான் தேவர்களே அப்படி நீரொப்பினீரே தானாயிருந்து சர்வமதுமுண்டாக்கி வைத்த ஆனாலெனதுடைய அளவிலளவாக மானாரொருகுழலை வகுக்கச்சொல் பார்ப்போம் என்றந்த நீசன் இழிவாகச்சொல்லிடவே அன்றந்த ஈசர் அவரறிந்து ஏதுரைப்பார் நல்லதுநீ கேட்டதுதான் நாம்படைத்துத் தாறோமென்று வல்லபரமேசுரனார் வகையேதெனப்பார்த்து உந்தனக்கு நேரே ஒத்த பலம்போலே அந்தமுடன் பிறந்தால் ஆகுமோவென்றுரைத்தார் அப்போது நீசன் அரனார்தனைநோக்கி ஒப்பமாகாதென்பலத்தில் ஒன்றிலரைப்பலமாய் அழகிலதிகமுமாய் ஆங்காரம் பாதியுமாய் குழகிய வாயழகாய் குரும்பத்தனத்தழகாய் மேனியழகாய் விழியழகாய் வீச்சழகாய் யோனியழகாய் ஒடுங்குமிடையழகாய் கரமழகாய் காலழகாய் கண்ணழகாய்ப் பல்லழகாய் சரக்கூடு முன்னழகாய் தலைகண்டம் பின்னழகாய் தொடையழகாய்விரலழகாய் சொல்லோடுபல்லழகாய் நடையழகாய் வீச்சழகாய் நல்ல குழலழகாய் இடையழகாய் மேனி இறுக்கத்துடனழகாய் உடையழகாய்த் தேகம் ஓங்காரத் தொங்கலுமாய் அழகுக்கு ஏற்ற அஸ்தர் மணத்தோடு கழப கஸ்தூரி கம்மென்ற வாசனைபோல் மூவர் தேவர்களையும் மோகமாய் மயக்க சீவனதுகொடுத்துத் திட்டித்துத்தாருமென்றான் அப்போது ஈசுரனார் அகமகிழ்ந்து கொண்டாடி இப்போது கேட்டதற்கு என்செய்வோமென்றுசொல்லி அருகில் சிவனார் அகமதிலே வீற்றிருக்கும் திருவுக்கு நன்றாய்த் தெரிவித்தாரம்மானை கேட்ட மாநீசனுக்குக் கீர்த்தியென்ன மாமயிலே தேட்டமுடனிப்போ செப்பென்றெனவுரைத்தார் அப்போது சத்தி ஆதியடிவணங்கி ஒப்பொன்றில்லாத உடைய பெருமானே பாதியாய் நீசனையும் வகுந்தேயவனுடம்பில் விதியா யிடது விலாவிலொரு யெலும்பை தட்டிக் கழற்றி சச்சுவருந் தானாக்கி திட்டித்து நீசனுக்குச் சிணங்கொடுவுமீசுரரே என்று உமையாள் இப்படியே சொன்னவுடன் அன்றந்த நீசனுட அரையிலோராக்கையிட்டு இருக்கக் கீழ்கட்டி எழுந்திரு நீ யென்றவுடன் பொருக்கெனவே இடது புறத்திலொருயெலும்பைத் தெறிக்க அதையும் சிவனார் மிகப்பார்த்து வெறிகொண்ட நீசன் விலாவி லொடித்ததினால் நீசன் பலத்தில் நேர்பாதியாகுமென்று வாச மடவாய் வரவே மதனை அரன் நினைத்தார் மதனையரன் நினைக்க மாநீசன் தன்னெலும்பு வதன மடமாதாய் வந்ததுவே யம்மானை நீசன் நினைத்த நினவுபோலம்மடவை பாசக்கலை தூவி பகட்டிவிழித்தாள்மருட்டி மும்மடங்காய் மோகம் முருகுக் குழல்சரிய கம்மடங்காத் தோசம் கரைபுரளத்தான்பிறந்தாள் கண்டானே மாநீசன் கண்கொள்ளாக் காட்சியுடன் அண்டாளைச் சென்று ஆவிமுகத் தோடணைத்து நன்றாகத் தர்மம் நாள்தோறுஞ் செய்து குண்டம் கண்டாரைப் போலே கட்டினான் மங்கையரை மங்கையரை நீசன் வாயார முத்தமிட்டு கொங்கைதனைக் கண்டு கொண்டாடி ஆசையுற்று எடுப்பானவளை இடுப்பிலே வைத்திடுவான் படுப்பமோவென்று பாய்விரிக்க நின்றிடுவான் பெண்ணோடுறவாடிப்பேதலித்து அந்நீசன் மண்ணோடு மண்ணும் மருவுவது போல்மருவி ஆசையவள்பேரில் அங்கமெல்லாந் தானுருகி நீசனவள்பேரில் நினைவாக நின்றதல்லால் படைத்தருளி வைத்த பரமனையுமெண்ணாமல் தடதடெனப்பெண்ணைத் தானெடுத்து முத்திடுவான் அப்போது தேவர் அமரர்களும் பார்த்தவனை இப்போது உன்விழிக்கு ஏற்கும் படியாக பெண்படைத்துத் தந்த பெரியோனைத்தான்வணங்கி மண்பரந்த மன்னா வரங்கேளு என்றனராம் என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன் அன்றந்த ஈசர் அடிவணங்கி ஏதுசொல்வான் என்றனக்கு ஏற்ற இளமயிலையுண்டாக்கி தந்தருளுங்கோவே சர்வ தயாபரனே இனியெனக்கு ஏற்ற இயல்வரங்களானதெல்லாம் கனியிதழும் வாயானே கையில்தரவேணுமென்றான் அப்படியே ஈசர் அவனை முகம்நோக்கி இப்படியே உன்றனக்கு ஏதுவரம் வேணுமென்றார் என்ற பொழுது இயல்புகெட்ட மாநீசன் தெண்டனிட்டு ஈசர் திருவடியைத் தான்பூண்டு கேட்பான் வரங்கள் கீழுமேலும் நடுங்க வீழ்ப்பாரங்கெட்ட விசைகெட்ட மாநீசன் மாயவனார் தன்னுடைய வாய்த்த முடிதனையும் தூயவனார் சக்கரமும் சூதமுடன் தாருமென்றான் அரனுடைய வெண்ணீறும் அந்தணரின் தன்பிறப்பும் வரமுடைய சத்தி வலக்கூறுந்தாருமென்றான் சிவமூலஞ்சத்தித் திருமூலமானதுவும் தவமூலம் வேதாவின் தன்னுடைய மூலமதும் மாலுடைய மூலம் வாய்த்த லட்சமிமூலம் மேலுடைய தெய்வ விதமூலமுந் தாரும் காலனின் மூலம் காமாட்சி தன்மூலம் வாலைச் சரசோதி மாகாளி தன்மூலம் கணபதியின் மூலம் கிங்கிலியர் மூலம் துணையதிபனான சுப்பிரமணியர் மூலமதும் ஆயிரத் தெட்டு அண்டம்நிறை மூலமெல்லாம் வாயிதக்கண்ணே வரமாகத்தாருமென்றான் அல்லாமற்பின்னும் அந்நீசன் கேட்டவரம் பொல்லாத வித்தை புகலக்கேளொண்ணுதலே கூடுவிட்டுக்கூடு குதிக்கக்கருவதுவும் நாடு பாழாக்கி நகரிகொள்ளையாக்கிடவும் துயில்வோர்போலுலகம் துஞ்சவைத்துகொள்ளைகொண்டு அயதிமோகினிக்கருவும் அரனேநீர் தாருமென்றான் ஆவடக்கு மோகினியும் அழைக்கவெகு மோகினியும் நாவடக்கு மோகினியும் நருளழைக்கும் மோகினியும் ஆண்பெண் பிரிக்க அதிகவெகு மாரணமும் கோண்பிரித்துக் கட்டிக் குடிகெடுக்கும் மாரணமும் கொல்ல உச்சாடனமும் குடிகெடுக்க மாரணமும் தொல்லை வருத்தி சோலிசெய்யுச்சாடனமும் லோகமது வாழாமல் உள்ளமுங்கித்தாழ்ந்திடவும் ஏகமாய்த்தம்பனமும் இதின்கருவுந்தாரும் கொட்டிக்கலைக்க கூறுகெட்டச்சல்லியமும் ஒட்டியமுந்தாரும் உள்ளகருவுந்தாரும் பூசை முறையும் புவனச்சக்கரமுடனே தீட்சை விதிமுறையும் சிவவிதியுந்தாருமையா சலமேல் கனல்மேல் தானிருக்குமோடிகளும் கலைமேல் குடைபிடிக்கக் கருவதுவுந்தாரும் மிருகமதை வருத்தி வேலையது கொண்டிடவும் இறுக்கமுள்ள வாதை எனக்குவிட்டுத்தாருமையா அட்டகர்மமெட்டும் அடக்கி வரந்தாருமையா மொட்டக் குறளிகளையும் முன்னேவலாய்த் தாரும் மந்திரசாலம் மாய்மாலத்தந்திரமும் இந்திரசாலமும் எனக்கருளுமென்றுரைத்தான் நோவுக்கிரகம் நுழையாமலென்றனக்குத் தாவுகெவுனக் குளிகை தாருமென்றான் மாநீசன் வந்த பிணிதீர்க்க வைத்திய வாகடமும் தந்துதந்தாகப்பல சாஸ்திரமுந்தாரும் மூவருட வடிவும் உதித்துவந்த முற்பிறப்பும் தேவருட பிறப்பும் தெளிந்தெழுதித்தாருமென்றான் பறக்குங்குளிகை பரனையழைக்குங்குளிகை மறைக்குங்குளிகை மாலைவருத்துங்குளிகை சாலக்குளிகை சத்திவருத்துங்குளிகை வாலைக்குளிகை மறையைவருத்துங்குளிகை காளிதனை வருத்திக் கைக்குள் விடுங்குளிகை கூளிகணத்தைவருத்திக் கொண்டுவரும் நற்குளிகை தேவரையும் வானவரைச் சென்றழைக்குங்குளிகை மூவரையுமழைத்து மோடிசெய்யுங்நற்குளிகை பழிசெய்தால் வெல்லப் பாரத்தொழில்கள்முதல் சுழிவரைகள் தானறிய சூதானமாய்த் தாரும் மருட்டு விதமும் மாஞாலக்குண்டணியும் உருட்டுங்கொடிய உரம்பேசிய மதமும் வாள்வெடிகளாயுதங்கள் வாய்த்தடுக்கத்தந்திரமும் வேழ்வருத்தி வேலைகொள்ள விசையடக்குந்தந்திரமும் துட்ட மிருகம் தூறுவிசங்கொண்டதெல்லாம் கட்டுக்குள் கட்டிக் கீழ்ப்படியத் தந்திரமும் கட்டுச்சுருக்கும் கடியபல வித்தைகளும் நட்டு முட்டுள்ள நவநிதிய வஸ்துக்களும் தந்திந்தப் பெண்ணுடனே சார்ந்துவிளையாடிருந்து விந்து சனங்கள் மிகுவாகத் தானுதித்து கிளையோடே வாழ்வு கெறுவிதமாயாண்டு வளையான மாதை மறவாமலெப்போதும் புத்திக்கருத்தும் பெண்பேரிலென்றனக்கு சற்றும் நெகிழாமல் தாரும்வரமென்றுரைத்தான் அப்படியேவுள்ளவரம் அந்நீசனுக்கருள எப்படித்தானென்று எண்ணினாரீசுரரும் எண்ணியே ஈசர் ஏந்திழையாள் சத்தியுடன் புண்ணிய நாதன் புகலலுற்றாரம்மானை முப்பத்திரண்டறமும் முகித்திருந்தவொண்ணுதலே செப்புத் தனத்தழகு செவ்வே கருங்குயிலே வின்னோத நீசன் விபரீதமாய்க் கேட்டதற்கு இன்ன விதமென்று இயம்பு நீ பெண்மயிலே அப்போது சத்தி ஆதியடிவணங்கி நற்போது மறவா நல்லகன்னியேதுரைப்பாள் சாத்திரமும் வித்தைகளும் தந்திரமுங்கேட்டதினால் சூத்திரச் சித்தனொன்று சுறுக்காயுண்டாக்குமென்றாள் உடனேதான் ஈசர் உள்ளங்களிகூர்ந்து திடமாய்த்தான் ஈசர் சிந்தைதனிலுத்தரித்து அகத்தீச னென்று ஆதிமனதுள்ளிருந்து செகத்தோர்கள் காண சித்தாதி தானாகி சாத்திரமும் வித்தை சமூலக்கருவுடனே சூத்திரச் சித்தாதி தோன்றினன் காணம்மானை எல்லோருங் கண்டு இவராகுமென்றுசொல்லி அல்லோரு மெச்சி அகமகிழ்ந்து கொண்டாடி நல்லதென்று ஈசர் நன்முனியைத்தானோக்கி வல்ல கவியோடு வந்துதித்த சாஸ்திரியே என்னென்ன சாஸ்திரங்கள் ஏதேதுவானாலும் இன்னாநிற்கும் நீசனுக்கு ஈந்து கொடுவுமென்றார் அப்போதகத்தீசர் ஆதிமறை முதலாய் மைப்போடும் வித்தை மாஞால அச்சரமும் கொடுத்தோமெனவே கூறினார் மாமுனியும் கடுத்தமுள்ள நீசன் கையதிலே வேண்டிநின்றான் நிற்கவே பின்னும் நிகழ்த்துவார் மாமுனியும் அக்கறுகு சூடும் ஆதிமுதலந்தம்வரை வசமாகும் வித்தை மரணம்வரா வித்தைகளும் நிசமாகும் வித்தையெல்லாம் நீசனுக்கே கொடுத்தோம் கொல்லவே மெத்தக் கோபத்தால் நீசனையும் வெல்லவகை யில்லையல்லோ விடையேறு மீசுரரே இந்நீசன் லோகமதில் இருந்தாளும் நாளையிலே அன்னீதமல்லால் அறமறியமாட்டானே அல்லாமற் பின்னும் அச்சுதனார் சக்கரமும் பொல்லாதான் கொண்டு போறான்மால் கிரீடமும் இவ்வரிசை ரண்டும் இவனிடத்திலேயிருந்தால் எவராலும் வதைக்க ஏலாது நீசனையும் என்று அகத்தீசர் இப்படியே தான்கூற அன்று ஸ்ரீரங்கர் ஆண்டியுருதானாகி தலைவிரித்துக்கந்தை சற்றே கலைபூண்டு சிலையிலா வெறுங்கையால் சென்றாரே நீசனிடம் நீசனிடத்தில் நெடுமால்தான் முன்னேகி வாசமுடன் வார்த்தை வழுத்தினாரம்மானை ஈசனிடத்தில் இறைஞ்சிவரம் பெற்றதிலே தேசஇரப்பனுக்குச் சிறுக ஈ யென்றுரைத்தார் தாராதே போனால் சாபமிடுவேனுனக்கு பாராய்நீ யென்று பகட்டினாரெம்பெருமாள் அப்போது நீசன் ஆண்டி தனைப்பார்த்து இப்போது போடா இரப்பனோடேது சண்டை மாயன் வரவேணும் வலுப்பார்த்து விட்டிடுவேன் பேயனுடனெனக்குப் பேச்சென்ன நீ போடா என்று அந்தநீசன் இவ்வளமை கூறிடவே அன்று பரதேசி அவனோடங்கேதுரைப்பார் பிச்சைக்காரன் தனக்குப் பெலமில்லையென்றோநீ அச்சமதில்லாமல் அடமாயிதுவுரைத்தாய் பண்டாரந்தன்பலமும் பழிநீசாவுன்பலமும் சண்டையிட்டுப் பார்த்தால் தான்தெரியும் மாநீசா என்று பண்டாரம் இதுவுரைக்க அந்நீசன் குன்று கரத்தெடுத்த கோபாலரோடுரைப்பான் ஆள்படைகளில்லாமல் ஆயுதங்களில்லாமல் வேழ்படைகளில்லை வெட்டவாளிங்குமில்லை தடியில்லை சக்கரமும் தானில்லை உன்கையிலே முடிவிரித்துக் கந்தை உடுத்தவனோடு யுத்தமிட்டால் ஆண்மையில்லை என்றனக்கு ஆயிழைமாரேசுவரே தாண்மைமொழி பேசாதே தலைவிரித்தபேயாநீ மூவர் முதலாய் முப்பத்து முக்கோடி தேவரையும் வேலைகொள்ள சிவமூலம் பெற்றிருக்க ஒன்றில்லாப்பேயனோடு யுத்தமிட்டாலென்றனையும் நன்றினியப் பெண்கள் நகைப்பார் நீ யப்புறம்போ என்று அந்தநீசன் இயம்பத் திருமாலும் நன்றுநன்று நீசா நானுரைக்க நீகேளு பண்டாரத்தோடே படையெடுத்தாலாண்மையில்லை என்றேதானிப்போது இயம்பினையே மாநீசா பண்டாரமென்றும் பயித்தியக்காரனென்றும் ஒண்டியாய் வந்தவனொடு யுத்தமிடமாட்டேனென்றும் பிச்சைக்காரனெனவும் பெரிய இரப்பனென்றும் கச்சையில்லானென்றும் கணைகம்பில்லாதானென்றும் இப்படியே பண்டாரம் என்றிருக்கும் பேர்களுக்கு எப்படியும் வம்பு செய்வது இல்லையென்று சத்தியமாகவே உரைநீ பார்ப்போமென்றார் புத்தியில்லா நீசன் புகலுவான் பின்னாலே பண்டாரமென்றும் பரதேசியானவரை தண்டரளக் கந்தைத் தலைவிரித்த ஆண்டிகளை அட்டியது செய்யேன் அவரோடு சண்டையிடேன் ஒட்டியே வம்பு ஒருநாளுஞ் செய்வதில்லை என்றான்காண் நீசன் எம்பெருமாள் தானுரைப்பார் நன்றாக இப்படியே நட்டிசெய்ய மாட்டேனென்று ஆணையிட்டுத்தாவென்று அருளினாரெம்பெருமாள் வீணமட நீசன் விளம்புவானப்போது ஆரார்கள் பேரில் ஆணையிட வேணுமென்று பேராகச்சொல்லு பிச்சையெடுப்போனேஎன்றான் அப்போது பண்டாரம் அகமகிழ்ந்து கொண்டாடி இப்போது நீதான் ஈசன்தனை வணங்கி வேண்டியே போற வெகுவரங்கள் பேரதிலும் பெண்டிவள் பேரதிலும் பெலமாக இப்போது ஆண்டி பரதேசி ஆகிவந்த பேர்களையும் வீண்டிடறு செய்யேன் எனவே நீயாணையிட்டு ஆணைக் கிடறுசெய்து ஆண்டிகளைச் சின்னமிட்டால் வீணேபோ மென்வரங்கள் வீட்டுப்பெண்ணார்கள்முதல் பெண்தோற்று நானும் பெற்றவரமுந் தோற்று மண்தோற்று வாழ்வும் மக்கள்கிளை தோற்று சேனைத் தளந்தோற்று சீமையரசுந்தோற்று ஆனைப் படைதோற்று அரசுமேடைதோற்று என்னுயிருந் தோற்று என்கிளையோடேநானும் வன்னரகில் போவேன் என்றேவாக்குரைத்திடுநீ அப்போது நீசன் ஆண்டியுரைத்தபடி எப்போதும் மறவேன் இதைமறந்து வம்புசெய்தால் சொன்னபடி யெல்லாம் தோற்றிறந்தென்னுயிரும் வன்னரகில் போவேனென்று ஆணையிட்டான் மாநீசன் நல்லது தானென்று நாட்டமுற்றுச்சன்னாசி வல்ல பெலமுள்ள மாநீசா நீகேளு மந்திரங்களாலே மகாகோடி ஆயுதங்கள் தந்திரங்களாலே தான்வருத்தலாகிடுமே அப்படியே யொத்த அச்சரங்கள் தானிருக்க இப்படியே ஆயுதத்தை எடுத்துச்சுமப்பதென்ன நீகேட்ட சக்கரத்தை நிமலனவர் தாராமல் தொனிகெட்ட வெற்றிரும்பை சுமவென்று தந்தார்காண் இரும்பைச் சுமந்தால் இல்லைகாணொன்று பயன் தரும்பொருள்போலுள்ள சம்பாத்தியந்தாறேன் மண்டலங்கள் தேசம் வாழ்வுகளுண்டாவதற்கும கண்டார்கள் மெய்க்கக் கனக திரவியம்போல் தருகிறே னுன்றனக்குத் தான்வேண்டு நீயெனவே பருமுறுக்காயாண்டி ஈந்தாரே சக்கரத்தை அப்போது நீசன் அகமகிழ்ந்து கொண்டாடி இப்படியே தாருமென்று வேண்டினான் சக்கரத்தை சக்கரத்தை வேண்டி சங்குசரத் தாமன் மிக்கப்பணமாக்கி மிகுத்தசக்கராயுதத்தை சபிக்கவே மாயன் சக்கராயுதங்கேட்கும் நீசனிடத்தில் என்னைப்பணமாக்கி ஈயுறீரே சுவாமி இப்போது சாபமிட்டு இப்போதிடுஞ் சாபம் எப்போது தீருமென்று அப்போது சக்கரமும் ஆண்டியடி போற்றிடவே கலிமாறும்போது கடருமுன் சாபமென்றார் வலியான சக்கரமும் வாய்த்தபணமாகியதே பணமாகிக்கீழே பறந்து குதித்திடவே இணமான நீசன் எட்டியவன்பிடித்து கண்ணில்மிக வொற்றிக்காரிகை கைகொடுப்பான் பெண்ணே நமக்குப் பெலங்கள்வந்து வாய்த்ததடி என்று பிரியமுற்று ஈசுரரைத் தான்வணங்கி மன்றுதனில்போக வரந்தாருமென்றுரைத்தான் அப்போது தன்னில் ஆண்டியவரங்குசென்று இப்போது இங்கேவைத்து கலியன்மொழிந்ததெல்லாம் தப்பாமலாகமத்தில் தானெழுதி வையுமென்றார் முப்போது வுள்ள முறைபோலே மாயவரும் ஆகமத்திற்பதித்து ஆண்டார் துரிதமுடன் நாகரீக நாதன் நடந்தார் ஸ்ரீரங்கமதில்

கலியுகம் நீசனையு மூரேபோ என்று நிமலனுந்தான் ஈயுகிற போது ஏதுரைப்பாள் சத்தியுமே வன்னச் சிவனாரே மாபாவி கேட்டவரம் என்னென்ன வாயமதாய் இருக்குதுகாணுத்தமரே வலியான மாதே மாநீசன் கேட்டதுதான் கலியுகம் போலிருக்கு கண்ணமுதேயென்றுரைத்தார் சிவம் வாய் திறந்து செப்பக் கலியுகமென்று இதமான தேவர் எழுதினாரகமத்தில்

கலியுக மெனச்சிவம் கருதிடத் தேவர்கள் பொலிவுடன் சேர்த்தனர் பூரண மறைதனில் சலிவுடன் நீசனும் தரணியில் போந்திட வலியுள்ள மாயன் ஸ்ரீரங்கம் மேகினார்

மாயனுக்கு ஆணை மாநீசனிட்டதெல்லாம் தூய பெருங்கணக்கில் தொகுத்தெழுதிவைத்தனராம் நீசக்கலியன் நிறைவோன் பதம்போற்றி தேசமதில் வரவே சென்றான்காணம்மானை கலியன் கலிச்சி கட்டாய் வருகையிலே சிலிரெனவே லோகம் திணுக்கிட்டதே அம்மானை தர்மமாய்ப் பூமி தானிருக்கும் நாளையிலே வர்மமாய் நீசன் வரவே கண்டம்புவியில் நல்ல பறவை நல்மிருக ஊர்வனமும் வல்ல வகைநீதம் மாற்றங்கேளன்போரே வெள்ளானை வெள்ளை வேங்கையொடு வெண்கடுவாய் தள்ளாத சற்பம் தலையைந்து கொண்டதுவும் வெள்ளன்னம் வெண்குயில் வெண்புறா வெள்ளைமயில் கள்ளமில்லா வெண்சாரை கடியபெல வெண்கருடன் நல்ல அனுமன் நாடுங்காண்டாமிருகம் வல்லவெண் நரிகள் வளர்ந்துவரும் வெண்காகம் ஆளியொடு சிங்கம் ஆனையிறாஞ்சிப்புள்ளும் வேளிசை வெண்கலைமான் வெண்புள்ளுவெள்ளணில்கள் மிருகமதில் வெள்ளைகொண்ட மேல்மிருகமானதெல்லாம் அறியவே குண்டம் அதுநோக்கிப் போயிடவே பால்நிறமான பட்சிப் பறவைகளும் மேல்பரனார் குண்டம் மிகநோக்கி நாடிடவே வெண்சாரையைந்துதலை விசஅரவமானதெல்லாம் துஞ்சாத நாதன் துணைதேடி நாடிடுமாம் முன்னிருந்த சாஸ்திரமும் முறையும் பஞ்சாங்கமதும் பின்வந்த நீசனினால் போகவழி தேடிடுமாம் நீசனுக்கு முன்னிருந்த நீதநெறி மானுபமும் போயகல்வோமென்று புத்திதனிலெண்ணிடுமாம் முன்னிருந்த ரத்தினங்கள் முத்துவைடூரியங்கள் பன்னுமறை சாஸ்திரமும் பாதையது கொண்டிடுமாம் சங்கு சமூலம் சலக்கண் சலத்தில்விழ பொங்கு நவரத்தினமும் போகவழி தேடிடுமாம் கடல் விளைவெல்லாம் கண்காணாதோடிடுமாம் தடவரையி லுள்ள தங்கமது மண்கோர்க்க சிலைகள் பதிகள் தெய்வத்திருச்சமூலம் அலையுள்ளும் பூமி அதனுள்ளும் போய்மறைய மாரி மறைய மலர்க்கண் மிகமறைய ஏரி பாழாக எண்ணினதே அம்மானை கர்மக் கலியதனால் கடல்கோபித்தேயடிக்க தர்மம் தலைகவிழ்ந்து தானிருந்ததம்மானை தருமமெய் நீதமதும் தாரணியில் ஊர்வனமும் பொறுமையுடைய பெரிய மிருகமதும் நாகமணி தங்கமணி நவரத்தின மாமணியும் தாகமுள்ள முத்து சாஸ்திர மாமறையும் நீதத்தோரெல்லாம் நீலவண்ணர் சங்குடனே பாதத்திருக்குண்டம் பாதைவழி தேடிடுமாம் நடந்தோர்களெல்லாம் நாடி வழிவரவே கடந்தார்கள் வல்ல கலியைவிட்டுக் காடதிலே காடதிலே செல்ல கனத்தபஞ்சபாண்டவர்கள் வாடலுடவாய் வைகுண்டந்தானேக கண்டாரே தர்மர் கடந்துநின்ற நீதமதை பண்டாரத் தர்மர் பகர்ந்தாரதனோடு நாட்டிலுள்ள நீதமெல்லாம் நடந்து காணாதேசென்றால் வீட்டிலுறுதியுள்ள மேல்வீடு காண்பதற்குப் போவேனோ தர்மம் போனதினால் நாயடியேன் சேர்வேனோ குண்டம் செய்தர்மமில்லையென்றால் என்றுரைக்கப் பாண்டவர்கள் இயல்தர்மமேதுரைக்கும் பொன்றுவந்து லோகம் பொய்ப்பூண்டதானதினால் எங்களுக்கங்கே இருந்தாலாகாதெனவே செங்கண் மாலாயனையும் தேடியே போறோமென்றார் அப்போது பாண்டவர்கள் அன்பாய் பதம்பணிந்து இப்போது உங்களையும் இழந்து விட்டிங்கிருந்தால் கர்மக்கலிமூழ்கிக் காண்பதில்லை குண்டமது தர்மத்தோடங்கே தான்வருவோம் கண்டீரே தர்மமும் நீதமதும் தாட்டீகப் பாண்டவரும் வர்மமில்லாக் குண்டம் வழிநோக்கிச்செல்லுகையில் மேலான மாமிருகம் வேதக்காராவுகளும் நாலாமொருதலையும் நல்ல அரவமதும் வெண்பட்சியான மேலான பட்சிகளும் இன்பட்சியெல்லாம் எங்கேகினிப்போவோமென்று கதறியழுது கனைத்துநின்றார் காடதிலே பதறியழுது பறவை மிருகமொடு நிற்குமளவில் நீலவண்ணர் தானறிந்து பக்குவப்பிராயப் பண்டாரமாகிவந்து ஏதுகாணீங்கள் இந்தவனவாசமதில் ஓதிக்கரைய உங்கள்விதியானதென்ன செப்போடு ஒத்த திருமால் தனைப்பார்த்து அப்போது எல்லாம் அழுதழுதேது சொல்லும் நீசக் கலியன் நீணிலத்தில் வந்ததினால் தேசமதிலெங்களுக்குச் செல்லவிருப்பில்லையையா என்றுரைக்கச் சன்னாசி ஏதுரைப்பாரன்போரே நன்று நன்று கேளும் நான்சொல்ல நீங்களுந்தான் பாண்டவரைத் தர்மமதைப் பாரநீதமதையும் ஆண்ட வைகுண்டம் அடையப்போம் என்றுரைத்தார் தெய்வக்காராவைச் சிறந்தவெள்ளானைகளை மெய்வரம்பு கொண்ட மிகுத்த மிருகமெல்லாம் கும்பக் குருமலையில் கூடியே நீங்களெல்லாம் சம்பு சதாசிவத்தைத் தான்போற்றியுள்ளிருத்தி நீசன் தனையறுத்து நீதயுகந் தானாள வாசமுடனேவரவே வரம்வேண்ட நில்லுமென்று ஐந்தலை நாகமதை அந்தமுனி தானழைத்து உன்றனக்குச் செய்தி உரைக்கிறேன் கேளெனவே அலைமுகத்தில் நூற்றொன்று ஆழம் வரைக்கீழே நிலைதனிலே நின்று நெடியோனை உள்ளிருத்தி கலியையழித்துக் கடிய தர்மமாகவேதான் வலியயுகமாளுதற்கு வைகுண்டா வாவெனவே நிற்பாய்த் தவசு நீ போவென அனுப்பி நற்பாக நீங்கள் நற்றவசு செய்யுமென்று சற்பமதுக் கரசு சங்குவெள்ளைச் சாரைதன்னை பற்பக் கிரிதனிலே பைம்பொன்னிறபொய்கையில் வம்பையழித்து வாய்த்த தர்மராச்சியத்தில் அன்பரோடேயரசு ஆளத்திருமால் வரவே வேணுமென்று நிட்டை விரும்பிச்செய்யென்றேதான் ஆணுவ நாதன் அதற்கு விடைகொடுத்தார் அன்னப்பட்சியான அதிகப்பறவைகளும் பொன்னம்பலகிரியில் போய்த்தவசு பண்ணுமென்றார் சாத்திரமாமறையைத் தானெடுத்து மாமுனியும் சூத்திர நெஞ்சத்து உள்ளிருத்தி வைத்தனராம் இருத்தி ஸ்ரீரங்கம் ஏகவென்றெம்பெருமாள் கருத்திலுறயிருத்திக் கட்டாய் வருகையிலே ஞானமுனிவரோடு நல்ல கலைமுனிவன் தானமுள்ள மாமுனிவர் தலைகவிழ்ந்தே தவசு சடைத்து முகம்வாடித் தானிருக்கு மப்போது திடத்தமுடன் நல்ல திருமாலருகேகி நன்றியுள்ள மாமுனியே நல்ல கயிலாசமதில் கண்டதுண்டு உங்களையும் காட்டில் வந்த வாறேது அப்போது மாமுனிவர் ஆதி பதம்பணிந்து செப்போடு வொத்தத் திருமாலே நாங்களுந்தான் கயிலாச மீதில் கறைக்கண்டர் பாதமதை ஒயிலாகப் போற்றி ஒழுங்காயிருந்தவர்காண் இருக்குமந்த நாளையிலே எங்களிருபேர்களையும் தருக்குகந்த ஈசர் தன்னையவர்வருத்தி மாயன் மேல்பிறக்க மண்ணுலோகந்தனிலே காயமிழந்து காணாதுருவெடுத்து மறைந்திருக்கிறாரெனவே வானோர்கள் சொல்வதினால் சிறந்தபுகழ் மாயனுக்குத் தேருஞ்சிங்காசனமும் மண்டபங்கள் மேடை வாய்த்த நீராவிகளும் பண்டையுள்ள நல்ல பைம்பொன்னிறப்பதியும் உண்டுகாண் துவாரகா யுகத்திலே யென்றுசொல்லி கண்டுகொண்டானானால் கலியன் ஆண்டுகொள்வான் முன்போய்த் தானீங்கள் உவரிதனை வருத்தி இன்பமுள்ளவகைகள் எல்லாமதினுள்ளே வைத்து வைகுண்டரங்கே வந்தாலிதைக்காட்டி மெய்கொண்டவுங்கள் இடத்திலே போவுமென்று அல்லாதே போனால் அக்கினியாலுங்களையும் இல்லாதே செய்வார் என்று சொல்லிவாருமென்று அனுப்பினாரெங்களையும் அதற்காக இங்கு வந்தோம் துனுப்பாக வாரிதனைச் சொல்லியே சட்டம் வைத்து ஏகினோங்கயிலை இடைவழியில் மாநீசன் தாவி வரக்கண்டு தவலோகமே மறைந்து கர்ம விதிப்பயனால் கலக்கமிகவடைந்து தர்மச்சிறப்பில்லாது தலை கவிழ்ந்திருந்தோமென்றார் அப்போது அச்சுதரும் அந்தமுனி தங்களையும் இப்போது கூட்டி ஏகின்ற அப்பொழுது கருங்குரங்கு காரானை கரியகடுவாய்புலியும் இருங்கருட னூர்வனமும் எறும்பு ஈ மூட்டைகளும் கள்ளக்கசடுள்ள கரிய மிருகமதும் கொள்ளைகொண்ட ஊர்வனமும் குசலான பட்சிகளும் தரந்தரமாய்க்கூடித் தாமே திரளாக வரவே கண்டெம்பெருமாள் மாமுனியைத் தான்பார்த்து ஏதேது மாமுனியே இந்த வழிதனிலே ஈதேதெனவே எனக்கேட்க மாமுனிவர் நீசனுதிரம் நீதிகெட்ட இம்மிருகம் வாசமுள்ள பட்சிகளும் மாநிலத்திலூர்வனமும் பிறந்துதித்து வந்து பேருலகிலம்மானை சிறந்தறிந்து எம்பெருமாள் செவியிலே கையறைந்து விலகியே போக வேணுமென்றெம்பெருமாள் மலகிய மாமுனிவர் மாயனடி போற்றி எங்களுக்கெங்கே இருக்கவே சொல்வீரென்று அங்கந்த மாயவரின் அடிதொழுதாரம்மானை அப்பொழுதெம்பெருமாள் அந்தமுனிக் கேதுரைப்பார் இப்பொழுது நீங்கள் ஏகுங்கோ செந்தூரில் செந்தூர்ப் பதியில் சிறந்த வாரிக்கரையில் நந்த கோபால நாராயணாவெனவே மாய நீசக்கலியை வதைசெய்து தர்மமதாய் ஞாயமுடன் வைந்தர் நாட்டையொரு சொல்லதுக்குள் ஆளவர வேணுமென்று அருந்தவசு பண்ணுமென வேழமொத்த மாமுனிக்கு விடைகொடுத்தார் மாயவரும் விடைவேண்டி மாமுனிவர் வேலனுறைந்திருக்கும் கடலானதன் கரையில் கடுந்தவசு பண்ணினரே அப்படியே மாமுனிவர் அங்கே தவசிருக்க இப்படியே மாயன் இசைந்த ஸ்ரீரங்கமதில் போகின்ற வேளையிலே போகனென்ற மாமுனிவன் தாவுமொருமலையில் தலைசிதறிச்சாகவென்று வேகித்து மாமுனிவன் விசையாக முட்டுகையில் ஆகமுற்று எம்பெருமாள் அவனோடங்கேதுரைப்பார் மலைதனிலே முட்டி மாளவென்று மாமுனியே குலைகுலைந்து நின்றவிதம் கூறுநீ யென்றனராம் மாயவரே நானுமினி மாள்வதல்லாலிங்கிருக்க ஞாயமில்லை அய்யா நாராயணப்பொருளே தர்ம நீதமதுவும் தரணிதனில் மானுபமும் கர்மக் கலியால் கட்டழிந்து போச்சுதையா நன்மையெல்லாம் நாடுவிட்டு நடந்து மறைந்ததினால் வன்மம் வந்து வையகத்தில் வளர்ந்த படியாலும் நானிருந்த நிட்டை நாலிரண்டாகையிலே மானிபங்கள் தர்மம் மறையத்தான் போனதினால் என் தவந்தான் வம்பில் இழந்தேனேயென்றுசொல்லி தன்தலையைத்தான் சிதறிச்சாகவேணுமெனவே மலைதனிலே முட்டி மாண்டுவிட வேணுமென்று அலைமேல் துயின்ற ஆண்டியோடேயுரைத்தான் நல்லதென்று உன்றனக்கு மாளவென்றால்வேறில்லையா கல்லிலே முட்டிக் கண்தவர்ந்து சாவதென்ன சொல்லுநீ யென்று திருமாலிதுவுரைக்க அப்போது மாமுனியும் அந்தமலைப் புதுமை இப்போது சொல்லுகிறேன் என்றேவுரைக்கலுற்றான் வேதா விதித்த மேலான ஆகமம்போல் நாதாந்த வேதம் நாலுண்டு கண்டீரே கலியன் பிறந்தபின்பு கட்டான வேதமொன்று சலிவாகி வேதம் தான்விளங்கா வண்ணம்தான் இளகாமல் கற்போல் இருந்ததுகாண் வேதமது குழைவான வேதா குறியாயதையறிந்து கல்வியிளகாமல் கற்போலிருந்ததினால் பல்லுயிர்கள் வாழும் பாரிலொரு பங்காக மலையாய் வளர்ந்து வைந்தர் வருகையிலே அலைபோலிளகி அவனிதனில் பாயவென்று சபித்தார் காண்வேதா தானறிந்து வேதமது குபிந்தான மான குன்றுபோலே வளர்ந்து அன்றந்த வேதம் ஆனதினால் நானடியேன் இன்றென் சிரசை இதிலிடறி மாண்டதுண்டால் வைகுண்டங் கிட்டுமென்று மாளவந்தேனிம்மலையில் கைகண்ட வேதக் கருணாகரக் கடலே என்று முனிவனுரைக்க எம்பெருமாள் நல்லதென்று அன்று முனியை கூட்டி அவர் போகின்ற வேளை மாமுனியே நீகேளு மாச்சலாயென்னுடம்பு தாமுனியே யென்றனக்குச் சடைவாயிருக்குதுகாண் ஆனதால் கங்கைபார்த்து அதிலே குளித்துமிக போனால் சுகமெனவே போகனோடேயுரைத்தார் அப்போது நல்ல அருள்கொண்ட மாமுனிவன் இப்போது மாயவரே இதோ தெரியுகின்ற அருணகிரி மலையில் அருவியொன்றுஉண்டுமையா கருணை யிரங்கினதால் காட்டியே தாறேனென்றான் நல்லது தானென்று நல்ல முனியோடே வல்ல திருமேனி வாவிதனைக் கண்டார்காண் கண்டு திருமேனி கனத்த நீராவிதனில் சென்றிறங்கி மேனிதனில் செலங்கோரி விட்டிடவே ஆவி தனிலிறங்கி அச்சுதனார் நின்றிடவே தேவியொருபெண் செலமெழுந்து மாயனையும் வந்து பணிந்திடவே மாயனதைப் பார்த்து சந்துபயில் மாமுனியே தண்ணீரைக் காணாமல் பெண்ணாக வந்த புதுமையென்ன மாமுனியே பெண்ணோடு கேட்டால் புதுமையதுதெரியும் என்றுரைத்து மாமுனியும் ஏந்திழையோடு ஏதுரைப்பான் நன்று நன்று பெண்ணேநீ நதியாயிருந்ததுவும் பெண்ணாக வந்ததுவும் பேசுநீ ஒண்ணுதலே தண்ணீராய் நின்ற தார்குழலாளேதுரைப்பாள் அய்யாவே நானும் ஆதி கயிலாசமதில் மெய்யாக ஈசுரர்க்கு வேலையது செய்திருந்து வருகின்ற வேளையிலே மனங்குழறி நானடியாள் அரையில் கலைபூணாது ஆவியிலே சென்றிறங்கிக் குளித்தேனதையும் கொன்றையணிவோனறிந்து அழித்தேயெனையும் ஆவிபோலே படைத்தார் படைக்கும் பொழுதில் பரமனோடிச்சாபம் கடருவதெப்போதெனவே கறைக்கண்டரோடுரைத்தேன் ஆவியாய் நீ கிடந்தால் அச்சுதனாரங்குவந்து தாவிக்குளிக்க சாபமது மாறுமென்றார் என்றுரைக்கப் பெண்ணாள் எம்பெருமாளேதுரைப்பார் அன்றந்தப்பெண்ணதையும் ஆகமப்போகனையும் நானாண்டிருந்த நல்லதுவாபரயுகத்தில் தானாக ஆண்டு தானிருக்குமப்பொழுதில் சூரிய வொளிகாந்தம் துலங்கும்வைடூரியத்தில் வீரிய மான வெற்றிவிருதுக்குடையும் தங்கப்பொன்னாயுதமும் தளிருநிறச்சக்கரமும் பங்கமில்லா முத்துப் பவள நிறக்குடையும் கட்டான வைரக் கற்கோட்டை வாவிகளும் மட்டான செம்பவள வைரக்கால் மண்டபமும் உண்டுகாணத்தனையும் உடனேபோய் நீங்களுந்தான் வைகுண்டமாய் நான் வரும் வரைக்குங் காத்திருங்கோ வந்த போதுங்களுக்கு நல்லகதி நான்தருவேன் என்றுவிடைகொடுத்து ஸ்ரீரங்கமேயிருந்தார்

கலியன் செய்த மாய்மாலங்கள் மாயன் ஸ்ரீரங்கம் வாழ்ந்திருக்குமப்போது மாயக்கலி செய்த மாயங்கேளன்போரே சாத்திரத்தையாறாய் தான்வகுத்து வேதமதை மாத்திரமே நாலாய் வகுத்தனன்காணம்மானை நட்சேத் திரத்தை நல்லிருபத்தேழாகப் பொய்ச்சேத்திரமாய் பிரித்தான்காணம்மானை கோளொன்பதுக்குக் கூடுபன்னிரண்டாக நாளேழு வாரம் நாட்டிவைத்தானம்மானை பக்கமது பத்தஞ்சு ஆகப் பவம்பிரித்து தக்கமது லோகம் தானாண்டிருக்கையிலே மாந்திரத்தால் செய்த வறுமைகேளன்போரே பாந்தள்வாய்க் கட்டி பரிசுகெட ஆட்டிடுவான் சந்திரனை மங்கவைத்து சமுத்திரத்தை பொங்க வைப்பான் மந்திரத்தால் தெய்வமதை மாடுபோல் வேலைகொள்வான் கற்பைக்கலக்கிடுவான் கன்னியழித்திடுவான் வெற்பைத் தகர்த்திடுவான் வெடியைத்தடுத்திடுவான் ஆண்பெண்கள் தம்மை அலைச்சலது செய்திடுவான் கோண்பிரித்துக் கட்டிக் குடிகெடுப்பான் மானிடரை பசுவையடைத்துப் பட்டினிகள் போட்டிடுவான் கசுவை மறைத்திடுவான் கண்ணைக் கெடுத்திடுவான் மிருகமதைக் கட்டி இரையிடாக்கொன்றிடுவான் கருவை யுருவழிப்பான் கன்னி சிறைவைப்பான் மானிடர்க்குக் குட்டம் வருத்தியே கொன்றிடுவான் வீணிலே மானிடரை விசமடக்கிக் கொன்றிடுவான் மாரிதனை மறைப்பான் வருத்தவென்றாலழைப்பான் ஏரிதனை வெட்டி இயலழியச்செய்திடுவான் அடப்பமிடத்தாயை ஆளாக்கி வைத்திடுவான் குடைப்பிடிக்கப்பிதாவைக் கொண்டிடுவான் வேலையது பேயை வருத்திப் பூசை மிகக்கொடுத்து தேயமதில் மானிடரைச் செத்திறக்க வைத்திடுவான் கடலதுக்கும் மாமலைக்கும் கற்கோட்டை தாண்டவிட்டு தடவரைகளெல்லாம் தகர்த்துப்பொடிப்படுத்தி பூலோகத் தேசம் புவனமெல்லாம் பரந்து மேலோகமெல்லாம் மிகப்பரந்தானம்மானை கயிலையெமலோகம் கரியதெய்வலோகமெல்லாம் அகிலமேழும் புரண்ட அதிசயங்கேளன்போரே சிவந்தானினைத்தால் செல்லார்கள் தேவர்களும் தலந்தானிளகித் தான்வந்த தாலேதான் மூவர்களூரும் முறைமை மிகத்தவறி தேவர்களூரும் தியங்கி மிகத்தான்புரள தெய்வலோகமுறைமை திசைமயங்கித்தான்புரள மெய்கொண்டலோகமெல்லாம் மிகமயக்கமானதினால் ஈசுரனாரப்போ ஏதெனவே தான்வெகுண்டு வீசுபுகழ் நந்திதனை விரைவாய் வரவழைத்து மாமுனியே கயிலை வரம்பழியக்காரணமேன் ஓமுனியே நீயும் உள்ளதெல்லாஞ்சொல்லெனவே என்றந்த நந்தியோடு ஈசுரனார் தான்கேட்க அன்றந்த மாமுனியும் அரனாரடிதொழுது நல்லது காணீசுரரே நம்மள் தனக்கிங்கேதான் செல்லாது இங்கிருந்தால் சிவனேயெனத்தொழுது பூலோகமேழும் பொன்னுலோகமேழும் தாலோக முதலாய்த் தவலோகம்வரையும் ஈரேழு லோகம் இருபுத்தியானதெல்லாம் பாரெல்லாமிப்படியே பரந்து இருப்பதெல்லாம் சொல்லவேணுமென்றால் சிவகயிலை விட்டேநாம் நல்லபரலோகமதில் நாம்போவோமீசுரரே என்றந்த ஈசுரரை இறைஞ்சி முனிதான்கூட்டி அன்றந்த மாமுனியும் அரனாருந்தானேகி சென்றார் பரலோகச் சீமையிலே வந்திருந்து கோவிலவர் புக்கிக் குருவை மிகப்போற்றி ஆவலுடன் மாமுனியும் அருளுவாரம்மானை நல்ல பரமேசுரரே நாடுதடுமாறினதை எல்லாம் நீர்கேட்க எடுத்துரைப்பேன் நான்என்று மாமுனியுமீசுரரை வணங்கிப்பதங்குவித்து ஓமுனியும் நன்றாய் உரைப்பார் காணம்மானை கேட்டீரோ ஈசுரரே கேடுவந்த செய்தியெல்லாம் தீட்டுகிறேனென்று செப்புவாரன்போரே மாயன் வைகுண்டம் மறையவென்று பொய்ச்சடல காயமிழந்து காணாதுருவெடுத்து ஏகி வரும்வழியில் ஏந்திழையாள் தெய்வகன்னி தாவிச்சுனையாடித் தாங்கள்நிற்கும் வேளையிலே கண்டந்த மாயன் கன்னியர்மேலிச்சைகொண்டு பண்டந்த யோகமுனி பச்சைமால் தன்றனக்கு மேலோகத்தார்களெல்லாம் விஷ்ணுவின் நாதமதில் பூலோகந் தன்னில் பிதிராகுவாரெனவும் பிதிரில் தவமிருந்து பிறந்தவழிதனையெல்லாம் சதிராக வந்தெடுத்துத் தர்மயுக மாள்வாரென்று யோகமுனியிட்ட உறுசாபமத்தனையும் போகமதில் மேலோகப் பிறப்பெல்லாந் தோணவைத்து கன்னி வயிற்றிலுறக் காட்டில் மிகப்பிறந்து தன்னிகரில்லாத சான்றோரென வளர்ந்தார் வளர்ந்தவர்கள் ராச்சியத்தை வகையாக ஆண்டிருக்க இழந்த கலிதோன்றி இவன் சென்றானவ்வுகத்தில் கலியனவன் செல்லக் கைமறந்தவ்வுலகில் பொலிவுள்ள தர்மம் பொன்றிச்சே நீதமதும் முன்னிருந்த சாஸ்திரமும் முறையும் மிகத்தவறி பின்னுதித்த நீசன் பிரித்தான்காண் வெவ்வேறாய் ஆனதால் பூலோகம் அழிந்து மிகத்தவறி ஊனமடைந்தார் உலகிலுள்ள சான்றோர்கள் தந்திர மந்திரத்தால் சான்றோரைத் தான்மயக்கி பந்தியழித்ததினால் பத்தினியாள் பெற்றமக்கள் ஒண்ணுக்கொண்ணெதிர்த்து ஒத்துமிக வாழாமல் பெண்ணுக்கு ஆணும் பிரிவு முறிவாகித் தாய்க்குத்தான் பிள்ளை தாழாமலே பேசும் வாய்க்குவாய் சொன்னாலும் மங்கை நல்லாளென்றிடுவான் பிதாவை மிகநம்பார் புண்ணியமென்றேபாரார் இதாகவெல்லாம் நீசன் இடறு வரச்செய்ததினால் ஆனதாலிந்த வழிவழியேயங்குளது போனதால் நீசம் பொன்னுலோகம் வரையும் ஏகிச்சு தையா இடறுநீ சக்கலியும் கோவிச்சுதையா கொடுங்கலியுமங்கேகி ஈதல்லால் பின்னும் இன்னுஞ் சிலநாளில் ஏதெல்லாமாகுதென்று ஈசுரரே பார்த்திருவும் மாயனையும் வருத்தி வார்த்தை கேளாதிருந்தால் தேயமிருள்மூடிச் சென்றிடுங்காணீசுரரே அப்போது ஈசுரரும் அதற்கேது செய்வோமென்று செப்போடு வொத்த சிவனாரும் நொந்திருந்தார் மாமுனியே மாயவனை வருத்தவென்னசெய்திடலாம் ஓமுனியே நீயும் உரையென்றாரன்போரே அப்போது மாமுனியும் அரனாரடிவணங்கி இப்போது தானதவம் இல்லையேலோகமதில் தவஞ்செய்து மாயவரைத் தான்வருத்தவென்றாலும் பவஞ்செய்த காலம் படுமோ தவமிருக்க என்றுரைத்து மாமுனியும் இன்னமொன்று சொல்லிடுவான் நன்றுநன்று ஈசுரரே நானுரைக்கக்கேட்டருளும் இருள்கொண்ட காலமதால் ஏற்றதர்மஞ் செல்லாது மருள்கொண்ட காலமதால் வம்புக்கே நேராகுமையா ஆணுவஞ்சேர்பேய்க்கண அரம்பைக்கோர் மாலைதனைப் பூணும் நீர் தவசு புரிந்தாலரிவருவார் என்று முனிசொல்ல ஈசுரனார் சம்மதித்தார் அன்று பேய்க்கணங்க அசுரமாலையையணிந்து இருந்தாரரிதான் இப்போ வரவேணுமென்று தருந்தார மார்பன் தானறிந்தேதெனவே இருக்க வகையில்லாது எழுந்து ஆகாயமதில் சுறுக்காயுதித்துத் தோன்றினார் ஈசர்முன்னே அப்போது மாயவரை ஆதியாவிப்பிடித்து இப்போது இதுவரையும் எங்கேநீர் போனீர்காண் என்றுதான் ஈசர் எய்த்திளைத்துச்சொல்லிடவே அன்றுதான் ஈசுரரை அரியாவித் தான்சேர்த்து பாண்டவர்க்கு உபகாரம் பண்ணியிருந்ததுவும் வீண்ட துரியோதனனை வெற்றி கொண்ட செய்தியதும் பொருப்பேறிப் பொய்ச்சடலம் போட்டு ஸ்ரீரங்கமதில் இருப்பதுவுஞ் சொல்லி எனைவருத்தியதேனென்றார் அப்போது அரனார் ஆதிமாலோடுரைப்பார் இப்போது கலியன் இராச்சியத்திலே பிறந்து பதிநாலுலோகமதும் பாரஇருள் மூடினதால் இதுநாள் வரையும் யானுமும்மைக்காணாமல் மனங்கலங்கிப் பேய்க்கண மாலையிட்டு நானிருந்தேன் கனங்கொண்ட மாயவரே கயிலையிருள் மாற்றுமென்றார் நல்லாயிருக்குதுகாண் நவின்றதெல்லாங்கேட்பதற்கு எல்லாமிருக்கட்டும் ஈசுரரே உம்முடைய கழுத்தில் தரித்ததையும் கழற்றியெறியுமென்றார் வழுத்திடவே ஈசர் மாலைதனைக்கழற்றி கோபத்தாலக்கினியில் குறியாயெறிந்தனரே வேகத்தால் மாலை வெடித்ததுகாண் பேய்க்கணமாய் கொள்ளைகொண்ட பேய்கள் கோடாமுக்கோடியுமாய் துள்ளிக்குதித்துச் சுற்றிக் குதித்தாடும் அப்போது பேய்கள் அரனாரடிவணங்கி இப்போது ஈசுரரே எங்கள்பசி தீர்த்து மந்திர சாலம் மாய்மால மாரணமும் தந்திர சாலம் சர்வதுமே தாருமையா கொல்லச்சாவு சங்கிலியும் கொன்றவரைத்தானெழுப்ப வெல்லப்பிழை சங்கிலியும் வெடிப்பாகவே தாரும் ஈசுரரும் தேவர்களும் எங்கபடத்துள்ளாக வீசுபல வரங்கள் விடையாகத்தாருமையா அப்போது பேய்கள் அதுகேட்டதத்தனையும் இப்போது கொடுக்க ஈசுரருஞ்சம்மதிக்க கேட்டிருந்த நாரணரும் கிருபையுடனீசுரரைத் தேட்டமுடன் பார்த்துச் செப்புவாரம்மானை ஈசுரரே பேய்களுக்கு இவ்வரங்களீந்தாக்கால் வீசுங்காண் லோகமதை விழுங்குங்காணிப்பேய்கள் தூயவரே பேய்கேட்ட சுத்தவரமத்தனையும் ஞாயமில்லையென்று நானுரைக்கப்போகாது ஆனாலும் பேய்களுக்கு அருள்வீரால் இவ்வரங்கள் ஞானாந்திரமான நாரதமாமுனியை வருத்தியே பேய்களுக்கு வரங்கொடுத்தவன்கையிலே இருத்தியணைவைத்து ஏழ்ப்பியும் பேய்களைத்தான் பேய்களுட பேரில் பிழைத்ததுதான் குற்றமென்றால் தேயக்கலி மாளுகையில் சிவவட கைலாசமதில் முனிசிறையும் பேய்களுக்கு உயிரழிவுமென்றுசொல்லி துனிவான முனியுடனே சொல்லியனுப்புமென்றார் அப்போது ஈசுரரும் அந்தமுனியை வருத்தி இப்படியே சொல்லி ஏழ்ப்பித் தனுப்பிடவே மாமுனியுஞ்சம்மதித்து வரம்வேண்டிப்பேய்களுந்தான் தாமுனிந்து பூலோகம் தன்னிலே வந்திடுமாம் பேய்ப் பூலோகமதில் போயிடவே ஈசுரரும் ஆயனாரோடே அருளுவாரன்போரே கயிலையிருளைக் கடத்தி வைக்காதிருந்தால் அகிலமதிலிருப்பு அல்லவே அச்சுதரே அப்போது மாயவனார் ஆதி தனைநோக்கி இப்போது நீங்கள் எல்லோருமிக்கவேதாம் நன்றான ஆண்டிகள்போல் நற்றாவடங்களிட்டு பண்டார வேசமதாய்ப் பதிந்திருங்கோவென்று நடந்தார் சீரங்க நகரிதனிலெம்பெருமாள் மாயனுரை மாறாமல் வாய்த்த மேலோகமுள்ளோர் ஈசர் முதலாண்டியென இருந்தார் காணம்மானை ஆனதால் கலியன் அங்கேயவன் விலகி மான மனுப்போலே வாழ்ந்திருந்தானம்மானை பூலோகமெல்லாம் பொய்யான மாகலியன் மாலோசனையிழந்து மாறியே மானிடவர் சாதியினம்பிரித்துத் தடுமாறி மானிடவர் ஊதினங்களாக ஒன்றுக்கொன்றேயெளிதாய் பிரட்டுருட்டாய் மானிடரைப் பிலமுள்ளோர் தானடித்து மருட்டும் புரட்டுடனே மாநீசனாளுகையில் மாரியதுபொழிந்து வைகையதுவுடைத்து ஏரி வழிந்து இராச்சியத்தைத்தானெடுக்க வெள்ளம் பெருகி வெம்மருண்டதம்மானை உள்ளமகிழ்ச்சோழனுக்கு உடனேதானாளோடி மனுநீதிக்காவலவா வைகையடையாதிருந்தால் இனித்தேசந்தன்னை யாம்தேட ஞாயமில்லை ஊரையரித்து உவரிதனில் கொண்டேகும் பாரை மிகஆளும் பக்தியுள்ள சோழமன்னா என்றுகுடியானவர்கள் இராசனுக்கேவுரைக்க அன்று வைகை அணையடைக்க வேணுமென்று எல்லா வகைச்சாதி இப்போ வரவழைத்து வல்லபுகழ் மன்னன் வைகை யணையில்வந்து மண்ணோடு கல்லும் மரங்கள்மிகு வைக்கோலும் எண்ணெண்ணக் கூடாத ஏதுவகையானதெல்லாம் கொண்டுவந்தேயணையில் கூறிட்டுத்தானடைக்க அன்றுஅடைபடாமல் அறிவழிந்து சோழமன்னன் அய்யோ பாழாக அவனிதான் போகுதென்று மெய்யோடு மெய்குழறி வெம்மருண்டு நிற்கையிலே கோளனென்ற மாநீசக் குலத்திலுதித்துவந்த ஈழனொரு பொல்லாதான் என்சொல்வானம்மானை மன்னவனே இந்தவைகை மலையெடுத்து வைத்தாலும் இன்னமிது கேளாது ஏலாது நம்மாலே தெய்வகுலச்சான்றோராய் சித்திர மாகாளி கையதுக்குள் பிள்ளையென கட்டாய் வளருகிறார் அந்தச்சான்றோரை அழைத்திங்கே கொண்டுவந்து இந்த அணையடைக்க ஏலுமென்றானம்மானை அப்போது சோழன் அந்நீசக் கலியதினால் இப்போது மயங்கி என்சொல்வான் மன்னவனும் மந்திரியே நம்முடைய வாய்த்த படைத்தலைவா தந்திரியே நீங்கள்சென்று சான்றோரைத்தான்கூட்டி வாருமென்று சொல்லி மன்னவன் ஏவிடவே சேருமென்று சொல்லச் சேவுகர் தாம்விரைந்து அழைத்துவந்தார் சான்றோரை அரசன் மிகக்கொண்டாடி தழைத்தபுகழ் சான்றோரே சந்தோசமாக இப்போ வைகை தனையடைக்க வழிபாருமென்றுரைத்தான் செய்கை முடிச்சான்றோர் தேசமன்னனோடுரைப்பார் நல்லதல்ல மன்னவனே நம்மோடிதுவுரைக்க இல்லையிந்தவேலை இதற்குமுன் கேட்டிலையே வெட்டாப்படையை வெற்றி கொண்டோமும்மாலே பட்டாங்கு எல்லாம் பகர்ந்தாரே சோழனுடன் மாயக்கலியதனால் மன்னவனுங்கேளாமல் ஞாயமொன்றும் போகாது நளிமொழிகள் பேசாதே குட்டையில் மண்ணெடுத்துக் குளக்கரையைதானடைக்க கெட்டியல்லாமல் வேறு கெறுவிதங்கள் பேசாதே என்றுரைக்கச் சான்றோர் இயம்புவாரம்மானை நன்று நன்று மன்னவரே நமக்கு அழகல்லவே இவ்வேலையொன்றும் எங்களோடீயாமல் எவ்வேலை சொல்வீரோ யாமதற்குள்ளதென்றார் கேட்டந்த மன்னன் கிறுக்கமுடனிறுக்கித் திட்டினான் சான்றோரைச் சினத்தான் காணம்மானை அப்போது சான்றோர் அதற்கிசையாமல் நின்றார் இப்போது சோழன் ஏதுசொல்வானம்மானை நான்வேலை சொன்னால் நகட்டுவதோ உங்களுக்கு தான்பாருமென்று தன்தளகர்த்தருடன் வேலை கொள்ளுமென்று விசைகாட்டினான் கெடுவான் தூலமறியாமல் துள்ளியே சேவுகர்கள் சூழ வளைந்து துய்யசான்றோர்களையும் வேழம் பலதை விட்டுப்பிடித்திடவே சான்றோரடுக்கல் சாரவகையில்லாமல் மீண்டகலத் தோற்று வெளியிலே நின்றிடவே அப்போது சோழன் அவனானை கொண்டுவந்து இப்போது சான்றோரை ஏறிப்பிடித்தனனாம் சான்றோர்கள் சோழனையும் தட்டப்படாதெனவே நன்றியுடன் நின்றார்கள் நாடியவன் பிடித்து குளக்கரையில் கொண்டுவிட்டு கூடையெடு என்றிடவே குளக்கரையில் என்னைக் கொன்றாலும் தொடுவதில்லை என்றே சான்றோரில் இளையவனும் சொல்லிடவே மன்றுதனையாளும் மன்னவனுமேதுரைப்பான் வைகைக்கரையிலிவன் வளர்த்தியில் குழி தோண்டி கையை கீழ் வைத்து கழுத்து வரை மண்போட்டு குட்டைதனில் மண்கோரி குலசான்றோர் தலையில் வைத்து பட்டத்து யானைகொண்டு தட்டிவிடு அவன் தலையை என்றான் ஆனைதனை விட்டு அரசனந்தச் சோழமன்னன் சேனைத் தலைவர் சிறந்த சான்றோர் தம்மில் கொன்றானொருவனையும் குளக்கரையிலம்மானை பின்னாலொருவனையும் பிடித்துவாருமென்றான் குட்டையெடென்று கூறினான் மாபாவி திட்டமுடன் நாடாண்ட தெய்வ குலச்சான்றோர் முன்னிறந்த மன்னனிலும் மோசமோ நாங்களுந்தான் இன்னமிந்தக் குட்டை யாங்கள் தொடோம் என்றனராம் பின்னுமந்தச் சோழன் பிடித்தவன்தன்னையும் கொன்றான் வைகைதனில் குஞ்சரத்தை விட்டிடறி நன்றி மறந்து நாடாண்ட சோழமன்னன் கொன்றான் காண்ரண்டு குலதெய்வச் சான்றோரை அப்போது தானும் அற்றதலை யேதுசொல்லும் இப்போ நாரதமுனியே என் தகப்பனிடமேகி சோழனவன் செய்த துட்டமெல்லாம் சொல்லி மாளுவந்த சேதி மாகாளிதனக்குரையுமென்று பொய்கையிலே விழவே புத்தர் அதையெடுத்து வைகையிலே உன்னை வந்தெடுக்கும் நாள்வரையும் கங்கையிலேயிருவென்று கிருஷ்ணரும் வைத்து விட்டு வைகைக்கரைக்கு வருகவென்றிருக்கையிலே அப்போது வித்யாதர முனிவர் தானறிந்து செப்போடு வொத்த திருமாலருகேகி மாயவரே உம்முடைய மதலையேழு பேரில் காயமழித்தான் கரிகாலச்சோழனவன் என்ற பொழுது எம்பெருமாளப்போது அன்று புட்டேயருந்தி சொக்கராக சமைந்து சென்று குமாரர்களைக் குசல் செய்ததும் பார்த்து அன்று வைகையடைத்து அடிகள் மிகப் பட்டவரும் ஸ்ரீரங்கந் தன்னில் சீருங்கோபத்தோடே சாரங்கர் வந்து தானிருந்தாரம்மானை மாகாளி தானறிந்து மக்களைத்தான் கொன்றதினால் ஓகாளி சோழன் ஊர் வறுமையாகிடவும் பன்னிரண்டாண்டு பாரில் மழை பெய்யாமல் உன்னினாள் மனதில் உடனே மழைதவறிப் பெய்யாமல் சோழன் பேருலகம் பஞ்சமதால் அய்யமது ஈயாமல் அறிவழிந்து வாடினனே இறந்த சான்றோர்களுட ஏந்திழைமார் இருவரும் சிறந்த தவம்புரிய சென்றனர் காணம்மானை சென்ற தவத்தின் செய்திகேளன்போரே அழுக்குக் கலையணிந்து அணிந்தபொன் தாளாமல் இழுக்குச் சொல்லீந்த ஈழன் பழிகொள்ளவும் இறந்த மன்னவர்கள் எழுந்திருந்தெங்களையும் சிறந்த மணத்தோடு உடன்சேர வந்திடவும் பழிசெய்த சோழனுர் பகலநரி ஓடிடவும் அழிவாகிச்சோழன் அவன்மாண்டுப் போயிடவும் வரந்தாரு மென்று மாயவரை நெஞ்சில்வைத்து பரமானப்பெண்கள் பாரத் தவசுநின்றார்

திருமால் அனந்தபுரம் ஏகல் இப்படியே மாதர் இங்கே தவசிருக்க அப்படியே மாயன் அவர் ஸ்ரீரங்கமதில் இருக்கும் பொழுது இரணியநீசக்கலியன் கருக்காக லோகம் கண்டவிடமேபரந்து ஸ்ரீரங்கமானதிலே சேர்ந்திருக்கும் வேதியர்கள் நீதங் குளறி நெறிதவறிப் போனதினால் முறைவைத்த பூசை முந்தி முறையெனவே மறையவனும் பூசை வந்தேமுகித்திடவே பொறாமல் மற்றொருவன் பூசையெனக்கென்றுசொல்லி மறையான மாயவரை வருத்தி நிஷ்டை செய்யவென்றே முப்பது வேள்வி மொகுமொகு எனவளர்த்து இப்போ நான்வீழ்வேன் இதில்மாயன் வாராட்டால் என்றவனெண்ணி ஏற்றவோமம் வளர்த்து அன்றவன் வீழ ஆர்ப்பரிக்குமவ்வளவில் மறையவனை மாயன் வந்தெடுத்துப்புத்திசொல்லி நிறையொத்த மாயன் நெடுமறையோனைக்கூட்டி ஸ்ரீரங்கம் விட்டுத் திருவனந்தம்நோக்கி சாரங்கர் போகத் தானேகும் வேளையிலே நன்றான கேத்திரனும் நல்லமறை வேதியனும் அன்றிளகிச் சென்று அரனார் திருக்கோவில் வந்த பொழுது வானமதிலுள்ளோரும் நந்தகோபால நாராயணரிடத்தில் சென்று தொழுது தேவரெல்லாந்தெண்டனிட்டு இன்று பெருமாள் இங்கே யெழுந்தருளி வந்த வகையேது மாயவரே யென்றுசொல்லி அந்தமுனி தேவர்களும் அச்சுதரோடீதுரைக்க நல்லதென்று அய்யா நாராயணர்மகிழ்ந்து வல்ல பரம ஈசுரரை மிகவாழ்த்தி ஈசுரரே யென்றனக்கு இங்கிருக்கக் கூடாமல் தேசமதைப்பார்த்துத் திருவனந்தமேகி இருக்கவேயென்று எழுந்தருளி வந்தேன்காண் மருக்கிதழுமீசுரரும் மாமுனிவர் தேவர்களும் நீசனாய்த் தோன்றி நிரந்து பரந்திருந்த தேசத் திருவனந்தம் செல்லவகையேதுவையா அல்லாமல் நீசன் அவனிடத்தில் போயிருந்தால் எல்லாமவன்றனக்கு ஈடாகிப்போகுமல்லோ கைவாய்த்து தென்று கலியனவன் கொண்டாடி மெய்வாய்த்து தென்று மேலாக மாநீசன் பரிகாசங்செய்வானே பார்முழுது மாநீசன் ஆனதாலங்கேக அச்சுதரே ஞாயமில்லை மானமழிந்தாச்சே மாகலியன் வந்ததினால் எல்லாங்கலியை ஈடழிக்கப்பாருமையா இல்லையேயானால் எங்களுக் கிங்கேதான் சென்ற இடமெல்லாம் சிறைபோலிருக்குதையா என்றுதான் தேவர் ஈசர்முதல் சொல்லிடவே அன்று அவர்களுக்கு அச்சுதருமேதுரைப்பார் நன்றுநன்று வானவரே நல்லபரமேசுரரே கலியேது நீசம் காணேது வையகத்தில் சலிவேது ராச்சியத்தில் தானேதும் நானறியேன் அனந்தபுரம் போக ஆதியிலென்றனக்குத் தனந்தசுக முனிவன் சாபமுண்டானதினால் கொஞ்சநாளானாலும் குடியிருக்க வேணுமென்று வஞ்சகங்களில்லாத மாயன்வழி கொண்டனராம் ஈசர்தனையனுப்பி எம்பெருமாளச்சுதரும் வாசமுள்ள சேத்திரனும் மறையவனுந்தேவர்களும் சங்கமதுகூடித் தத்திதத்தியாய்வரவே வங்கத் திருவனந்தம் வழிநோக்கித் தான்வரவே வழியிலோரற்புதந்தான் மாயவனார் கண்டுமிக களிகூர்ந்தவருடனே கட்டாக ஏதுரைப்பார் மாமுனியே தேவர்களே வழியிலொழுங்கொழுங்காய் ஓமுனியே நின்றதையும் உரைப்பீர் காணென்றுரைத்தார் அப்போது மாமுனியில் அருண முனிவனவன் செப்போடு வொத்த திருமாலையும்பணிந்து மாயவரே நான்முகனும் வாழும் பிரம்மமதில் ஆய கலையிருஷி ஐம்பத்தொருநான்கோர் பிரமன் பிறப்பைப் புகுந்தெடுத்திவ்விருஷி வரமான புத்தகத்தை மாறாட்டஞ்செய்ததினால் அறிந்தந்த வேதாவும் அவர்கள் தமையழைத்துச் செறிந்த ரிஷிகளைச் சிலைக்கல்லாக சாபமிட்டார் அப்பொழுதிவ்விருஷி அயனைத்துதித்து இச்சாபம் எப்பொழுதிச்சாபம் ஏகுமென்றார் மாயவரே வேதா தெளிந்து விஷ்ணு ஸ்ரீரங்கம் விட்டு தீதோர் திருவனந்தம் செல்லவரும் வேளையிலே வந்து சிலைதனையும் மாயவனார் தொட்டிடுவார் சிந்து திருக்கைதான் சிலைமேலே பட்டவுடன் தீருமுங்கள் சாபமென்று சிவயிருஷியானோர்க்கு பேருலகம்படைத்த பிரமன் விடைகொடுத்தார் அந்தப்பொழுதில் ஐம்பத்தொரு நான்குரிசி இந்தக் கற்சிலையாய் இவரிருந்தாரெனவே மாமுனிவன் சொல்ல மாயவரும் நல்லதென்று தாமுனிந்து கற்சிலையைத் தான்தொட்டாரம்மானை உடனே இருஷிகளாய் உருவெடுத்து மாலடியைத் தடமேலே வீழ்ந்து தானாவியேகுவித்து அன்று பிரமா அடியார்க்கு இட்டசாபம் இன்றகலவைத்து இரட்சிக்க வந்தவரே எங்களுக்கு நல்லகதி ஈந்து தாருமெனவே திங்கள்முக மாயருட திருப்பாதம் போற்றி நின்றார் நல்லதுதானென்று நாராயணர் மகிழ்ந்து வல்ல இருஷிகளே வாழ்வெங்கேவேணுமென்றார் மேலோக வாழ்வு வேணுமோ அல்லவென்றால் பூலோக வாழ்வு போதுமோ வென்றுரைத்தார் அப்போது இருஷியெல்லாம் அவனியிலெங்களுக்கு இப்போ வரங்கள்தந்து ஏகவைத்தால் போதுமையா நல்லதுதானென்று நல்ல இருஷிகட்கு வல்லத் திருமால் வரங்கொடுப்பாரம்மானை பிச்சையது வாங்கிப் பெருமையதாயருந்தி மிச்சமது வைக்காமல் விழிபரந்து பாராமல் சீமைக்கொரு இருஷி செல்லுங்கோ ஆண்டியென தாண்மை பரதேசி தானாகி வீற்றிருந்து பூசை பெலிபீடம் இட்டு அருந்தாதிருந்து ஆசைக் கருத்தை அறுத்து வொருநினைவாய் மாசணுகாமல் மனதில் நமைத்துதித்து ஓசையுடனே உலகமதில் நீங்கள் வைகுண்டமென்று வையகத்தேவாழ்ந்து பொய்குண்டம் நீக்கிப் பூலோக மேயிருங்கோ தந்த வரத்தில் தப்பி நடந்ததுண்டால் வந்தங்கிருந்து வருத்தியுங்கள் தம்மையெல்லாம் அவரவர்கள் செய்த அக்குற்றந்தான்கேட்டு எவரெவர்க்குந் தக்க இயல்பே தருவோமென்றார் நல்லதுதானென்று நாடிரிஷியெல்லாம் செல்லப்பரதேசிகளாய் சென்றாரே சீமையிலே ரிஷிகளையனுப்பி எம்பெருமாள் தான்மகிழ்ந்து துரிசமுடன் அனந்த சீமைநோக்கிநடக்கத் தேவர்களும் வானவரும் ஜேஜே யெனநடக்கத் தாவமுடன் அனந்தம் தானோக்கி மால் நடக்க அனந்த புரம்நோக்கி அச்சுதனாரேகுகையில் புனந்தனிலோர் பொருப்புப் பூவையுருப் போல்கிடக்க கண்டெம்பெருமாள் கால்கொண்டுதைத்திடவே குன்றுபோலேயுடம்பும் குஞ்சரம்போல் கைகாலும் துண்டு மலைபோல் துய்யமூக்கு முலையும் வாய்கண் ஒருமலையாம் வயிறுமூணு மலையாம் கொண்டை பன்னிரண்டு குறுக்கமுண்டன்போரே பண்டே திருமால் பம்பழித்தத் தாடகைபோல் நின்றாளே அண்டபிண்டம் நிறைந்த சொரூபமதாய் கண்டாரே எம்பெருமாள் கனத்த விசேடமென்று தேவர்களே வானவரே சேத்திரனே வேதியனே பாவலரே கல்தான் பரும்பெண்ணாய் வந்ததென்ன சொல்லுவீரென்று திருமாலுரைத்திடவே வெல்லும் புகழ்தேவர் விளம்புவாரம்மானை ஏமனிணையான எக்காளத்துர்க்கையிவள் சாமி சிவனார்தன் சொல்லையிவள் தட்டினதால் கோபித்திவளைக் குன்றாக சாபமிட்டார் ஏகி வரும்போது இவள்தானுமீசுரரை வணங்கியிச்சாபம் எப்போது மாறுமென்றாள் அணங்குக்கு ஈசர் அருளினது கேளுமையா அனந்தபுரமதிலே ஆனநதி மேலே வனந்தமால் பள்ளிகொள்ள வருகின்ற அவ்வழியில் உன்சாபந் தீர்த்து உன்னை உலகதிலே பின்சாபமிட்டுப் போக விடைதருவார் என்று சிவனுரைக்க இப்படியே வந்தவளும் குன்றுபோலேகிடந்தாள் குருவேயுன் பாதமதால் அவள்சாபந்தீர்ந்து ஆயிழை போல்வடிவாய் இவள்தானும் வந்தாள் எனச்சொன்னார் தேவர்களும் நல்லதென்று நாரணரும் நாரிதனைக் கொண்டாடி வல்லவளே எக்காள மடந்தையேயுன்றனக்கு ஏதுனக்கு வேணுமென்று என்னோடு கேளுஎன்றார் வாதுக்கு வல்லகியாள் மாயருடன்கேட்பாள் நாரணரே அய்யாவே நான்தான் முற்காலமதில் பாரமுள்ள செந்திருஷி பாரியாய் நானிருந்தேன் அப்போது என்றனக்கு அழகிது இல்லையையா செப்போடு வொத்த சிவகாமி போலழகு நன்றாக என்னுடைய நல்லபர்த்தாவுடனே ஒன்றாக வாழ்ந்து உறவாடிருக்கையிலே என்பேரிலிச்சை ஏமன்மிகக்கொண்டாடி வம்புசெய்தென்னுடைய மன்னவனைக் கொன்றானே ஆனதால் ஏமனுக்கு அழிவுவரவேணுமென்று மானத் தவமிருந்து வருந்தினேனீசுரரை அப்போது ஈசுரரும் அடியாள் மனந்திருத்தி இப்போது அந்தகனை இறக்கவைத்தால் ராச்சியத்தில் நருட்பெருத்துப் பூலோக நாடுதரியாதெனவே பொறுத்துக்கோ கொஞ்சம் பூவையேயென்றுரைத்தார் என்னை மனந்திருத்தி ஏமனோடே சேர்த்தாலும் மன்னனை வதைத்ததுதான் மறவாமலெப்போதும் திவசமொரு நேரம் சிவனாரை யானோக்கி பவத இயமனுக்குப் பகையாகக்கேட்டிருந்தேன் ஆனதாலீசர் அறிந்தே எனைநோக்கி ஈனமுடன்பேசி இகழ்த்தினாரீசுரரும் கொஞ்சம் பொறுவென்று கூறினேன் பெண்கொடியே மிஞ்சவல்லோ செய்தாய் எனவெகுண்டாதிபரன் மலைபோலுடம்பும் வயிறு மிகப்பெருத்து அலைபோற்பரந்த அங்கம் பெரும் உடம்பாய் கல்லது போற்கிடந்து காலனைக் கொல்லும்வகை வல்ல வகையாலும் வருந்திக்கோ என்றுசொல்லி கோபித்தார் முன்னே குன்றுபோலேகிடக்க சாபித்தாரென்னை சாமியுன் பாதமதால் தோன்றினேனென் சாபத் துயரறுத்தேன் மாயவரே வீன்றிய அந்தகனை வேரோடறுத்திடவே வரந்தாருமையா மாயவரே யென்றுசொல்லி சிரமுரத்தப்பெண்கொடியாள் தெண்டனிட்டாள் மாயவரை அப்போது மாயவரும் அவளை முகம்நோக்கி இப்போது பெண்கொடியே யான்சொல்லக்கேட்டிடுநீ அந்தகனைக் கொல்லவென்று அருந்தவசு பண்ணிடுநீ வந்தயுகமாறி வலியபெலத்தர்மயுகம் உதிக்கும் பொழுதில் உன்தவசின்படியே சதிக்குகந்ததானால் சண்டனழிவாகுமென்றார் அப்போது பெண்கொடியும் மானத்தவம்வளர இப்போ விடையருளும் என்றுகேட்டு வேண்டியவள் நின்றாள் தவத்தில் நீலியாய்ச்சண்டனுக்கு வண்டூறிக் கன்னி மன்னன் பழிவாங்க ஆதியைப் போற்றி அருந்தவசு பண்ணிடவே சோதித் திருமால் திருவனந்தம்நோக்கி நடக்கத் திருமால் நளினமுடன் மகிழ்ந்து வடக்குக் கயிலாச வழியே வருகையிலே தெய்வலோகத்திலுள்ள தேவாதி தேவர்களும் வைகுண்ட லோகமதில் வாழுகின்ற தர்மிகளும் சிவலோகம் வாழும் சிட்டர்முதல் வானவரும் தவமான வேதச் சதுர்மறையோன் தன்னுகத்தில் கருதி ரிஷிமுதலாய்க் கட்டாக நாற்புவியில் இருக்கின்ற வானவர்கள் எல்லோருமெண்ணமுற்று மான வரம்பு மகிமைகெட்டேகுமுன்னே வானமதுவிட்டு வடகயிலை போவோம்நாம் கயிலை வரம்பழிந்து கட்டுமிகத் தப்பினதால் அகிலமழிவதற்கு அடையாளமித்தனைதான் அல்லாமல் குறோணிமுதல் அந்நீசக்கலியன்வரை எல்லாஞ்சரியாகி எவ்வோர்களானாலும் கல்லாத பொல்லாக் கலியனுட மாய்கையினால் நல்லோராய் மேற்பிறந்து நளினமுற்று வாழ்வரென்று வேதா கணக்கில் விதித்துரைத்தார் முன்னாளில் நாதாந்த வேதம் நழுவிமிகப்போகாதே இப்படியே தேவர் எண்ணமுற்று வாடினரே முப்படியேயுள்ள ஊழிவிதியெனவே கடைச்சாதி யான கலிச்சாதியானதிலே படையாமல் நம்முடைய பங்கு வம்மிசத்தோராய் ஒண்ணாமதுகுலந்தான் உயர்தெய்வச்சான்றோரில் வண்ணமுள்ள வேதா மனுவாய்ப் பிறவிசெய்ய ஒன்றாக நாமளெல்லாம் உவந்து தவஞ்செய்யவென்று நின்றார் தவத்தில் நிறைவோன் பதம்போற்றி தங்கள் குலமான சான்றோர்கள் தங்குலத்தில் எங்கள் தமைப்பிறவி இப்போசெய்ய வேணுமென்று பிறந்திறந்த போதும் பின்னுமந்தப் பிதிரில் மறந்திடா வண்ணம் மனுவிலுதித்திடவும் ஆதிமகா மூலத்து ஆதிநாராயணரே நாதியாயெங்களையும் நாடிமிக வந்தெடுத்து எங்கள் துயரம் எல்லாமவர் மாற்றி சங்கடங்களில்லாத தர்மபதியருளி கிரீடமுஞ்செங்கோலும் கீர்த்தியுள்ள முத்திரியும் வீரியமாய்த் தந்து மேலோகமுமகிழ எண்ணுஞ் சாகாமல் இருக்கும் பதவிதந்து மண்ணும் விண்ணும் புகழ வரந்தாருமென்றுசொல்லி நின்றாரதையும் நெடியோனதையறிந்து கொண்டாடியேதெனவே கூறினார் தேவருடன் நின்ற நினைவை நெடுமால் தனக்குரைக்க அன்றந்தத் தேவருக்கு அலையாத புத்திசொல்லி நல்லதுதான் தேவர்களே நாடுவது காரியந்தான் வல்ல தவசு மனம்பிரியாச் செய்யுமென்றார் அச்சுதரும் தானடந்து அனந்தபுரம் ஏகுகையில் பச்சுடம்பாய் நின்ற பசுவுமோரேந்திழையும் நாராயணாவெனவே நாடித் தவமிருக்க சீராய்த் திருமால் சிறந்ததவங்கண்டருளி ஏது பசுவே ஏந்திழையேவுங்களுக்கு நேதுவில்லா வண்ணம் நெடுந்தவசு பண்ணினதேன் அப்போதுபசுவும் அச்சுதருக்கேதுரைக்கும் இப்போது மாயவரே என்னுடைய புத்திரனை கொல்லும் படியாய்க் கோதையிவள்தவசு செல்லும் படியாய்ச் சிந்தை மிகக்கலங்கி புத்திரனு மாண்டால் பிள்ளையாயென்றனக்கு உத்திரக்கன்றாய் உடன்பிறக்க வேணுமென்று நின்றேன் தவசு நீலவண்ணருண்டெனவே என்றே பசுவும் ஈதுரைக்க ஏந்திழையை நன்றாகப் பார்த்து நாராயணருரைப்பார் ஒண்டொடியே உன்றன் உற்றவழக்கேவுரை நீ அப்போது பெண்கொடியும் அச்சுதரைத்தானோக்கி செப்போடு வொத்த தேவியுஞ் சொல்லலுற்றாள் அய்யாவே எனக்கு ஆளான வீரனைப்போல் மெய்யாயொருமதலை விமலனருளினர்காண் மதலை வளர்ந்து வயதுபதினாலாகுகையில் குதலை மொழிகேட்டுக் கொண்டாடி நான்மகிழ்ந்து இருக்குமந்த நாளில் இப்பசுவின் புத்திரன்தான் உருக்கமுடனென்பேரில் உள்ளாசை கொண்டான்காண் அதட்டினேனானதற்கு ஆகட்டெனவுறுக்கி மதட்டி மதலைதனை மாளவைத்தான் மாபாவி ஆனதினாலடியாள் அறமெலிந்து தான்வாடி போனேன் பிரமா பூசாந்திரக்கணக்கில் உள்ள விதியோ ஊழி விதிப்படியோ கள்ளக் கணக்கன் கண்மாயமோ எனவே பார்த்தேன் மகன்தான் படவிதியங்குமில்லை ஆர்த்தேன் நான்கோபம் அக்கினிபோலேமீறி சிவனுக்கபயம் செவியறிய விட்டேனான் இவளுக்கு வேண்டி ஏதுசெய்வோமென்றுசொல்லி ஒருவருமென்னுடைய ஊழிவிதி கேட்கவில்லை வருவது வரட்டெனவே வந்தே தவசுநின்று மகன்பழிதான் வாங்க மாயவரே உம்மருளை அகமிருத்தி நானும் அருந்தவசு செய்தேனான் என்றுரைக்க ஏந்திழையும் எம்பெருமாளேதுரைப்பார் நன்றுநன்று பெண்கொடியே நல்ல தவம்புரிந்தால் நினைத்த படியே நிறைவேறுமென்றுரைத்து கனத்த பசுவேநீ கட்டாய்த் தவமிருந்தால் உன்றனக்குச் சித்திரனும் ஒருகன்றாய்த்தான்பிறந்து என்றன் மகனார்க்கு ஏவல்செய்ய வைத்திடுவேன் என்று பசுவதுக்கும் ஏந்திழைக்குந்தானுரைத்து அன்று திருவனந்தம் நோக்கி அவர் தானடக்க கேத்திரனும் வேதியனும் கிருஷ்ணரடிபணிந்து மூர்த்திகளுங் காணாத முதலே முதற்பொருளே உன்மகவாய் வந்துதித்த உயர்ந்த குலச்சான்றோர் தன்கமவோரங்கே தவித்துமுகம் வாடிருக்க நீசனுட குடியில் நீர்போகக் காரியமோ தேசமெல்லாம் நீசனுட செய்திகேட்டேயிருந்தும் போவதோ தேவரீர் பொல்லாதவன் குடியில் தேவரீரும்முடைய சிந்தையெள்போலறியேன் என்றுரைக்கக் கேத்திரனும் ஏதுரைப்பாரெம்பெருமாள் நன்றுநன்று கேத்திரனே நான்சொல்லக் கேட்டிடுநீ சான்றோர்க்குபகாரம் தான்செய்யுமுன்னாக பொன்றுகலி நீசனுக்குப் புத்திசொல்லவேணுமென்றும் அல்லாமற் குறோணி அவன்மாய யிவன்வரையும் எல்லாந்தான் சொல்லுக்கு இடறுவையாதபடி சான்றோர்கள் தம்மிடத்தில் சாங்கமாய்ப் போயிருந்து ஆன்றோர்தானெங்களையும் அழியவைத்தீரென்பான் ஆனதால் நானும் அதற்கிடைகள் வையாமல் ஈனமுறுநீசன் இடம்போறேனென்றுரைத்தார் அப்போது கேத்திரனும் அன்பாயகமகிழ்ந்து செப்போடு வொத்த திருமாலைத்தெண்டனிட்டு மாயனே உன்றன் மகிமையதையாரறிவார் ஆயனேவும்முடைய அளவறியக்கூடாது என்று கேத்திரனும் இயம்புவான் பின்னுமொன்று மன்று தனையளந்த மாயப்பெருமாளே பூசை புனக்காரம் பெரியதீபத்துடனே நீசனுமை நினைத்து நித்தமுஞ் செய்வானே எந்தனுக்கென்ன இலக்குக்குறியெனவே சிந்தை தெளிந்து செப்பி விடைதாரும் என்றுரைத்தக் கேத்திரனுக்குஏதுரைப்பாரெம்பெருமாள் இன்றுநீ கேட்டதற்கு இயல்புரைக்கக்கேளு கலிநீசன் மாநிலத்தில் கால்வைத்த அன்றுமுதல் சலிவாகியென்மேனி தண்ணீரறியாது எண்ணையறியேன் இலட்சுமியை நானறியேன் வண்ணத்துகிலறியேன் மறுபுடவை தானறியேன் பூசையறியேன் பொசிப்பறியேன் பூவறியேன் ஆசையறியேன் அக்கக்கிளையறியேன் மெத்தையறியேன் மேவுஞ்சொகுசறியேன் ஒற்றைபோலானேன் உட்கார்ந்திருக்கறியேன் மேடையறியேன் மகிழுஞ் சிரிப்பறியேன் தோழமையை நானறியேன் சுருதி மொழியறியேன் ஆளவை குண்டம் அரசுமேடையறியேன் இத்தனைகள் தானறியாது எண்ணமது நானறியேன் புத்தியுள்ள கேத்திரனே பூசைபூ ஏற்பதெல்லாம் மாயக்கலியறுத்து வாய்த்த நாடாள்வார்க்கு ஞாயமுள்ள பட்டம் நான்சூட்டித்தர்மமதாய் இராச்சியத்தையாளவைத்து இத்தனையுமேற்பதல்லால் அதற்குமுன் பூசை புனக்காரமுதலேற்பதில்லை இதற்குமுன்னேற்பவர்கள் எனக்காகாதே போவார் என்றந்தக் கேத்திரனுக்கு இத்தனையுந்தான்கூறி அன்றந்த நீசன் அவ்வூரிலெம்பெருமாள் நீசனிடத்தில் நீலவண்ணர் வந்ததுதான் தேசமறிய செச்சை புலச்சிகண்டு ஒளித்தாரொரு இடத்தில் ஊர்தேச முமறிய விழித்தாள் புலச்சி விதமறிந்தார் எல்லோரும்

திருவனந்தபுரத்தில் கிருஷ்ணர் நீசனறிந்து நெருங்கமணி மேடைவைத்து வீசை முறுக்கி விசையாக அந்நீசன் கோவில் சிவாலயங்கள் கொந்துகொந்தாயமைத்து பாவித்துப் பூசை பண்ணத் துணிந்தனனே மேடைக்குக்கால்கள் மிகுத்தத்தங்கத்தால் நிறுத்தி வாடை கமகமென வாத்தியங்கள் நின்றதிர தீபம் புலச்சி தீவட்டித் தான்கொடுக்க பாவக்குடும்பத்தோர் பண்ணினார் பூசையது நம்பூரி வேதியர்கள் நாடி யகமகிழ்ந்து பம்பைப்பரத்தை பகட்டுக்கை காட்டலோடு நாடி மகிழ்ந்து நல்ல அனந்தபுரம் கோடிநூறாயிரம்போல் கூண்டரிய தீபமொடு தேடரிய மாமறையோர் சிந்தைகளித்தேயிருக்க நாடதிகமாகி நல்ல அனந்தபுரம் மாத மும்மாரி வருசிக்கத் தான்பொழிந்து வாரமுடன் செந்நெல் மாறாமலே விளைந்து தென்னங் குலைசிதறித் தேர்ப்போலலங்கரித்து என்னென்ன பவிசு எல்லாமிகப்பெருத்து ஒப்பில்லாத் தேசம் உற்ற அனந்தபுரம் செப்பத்தொலையாது சிறந்தப் பெருமையது நன்றாகச்சீமை நாடோறுமே வாழ அன்றுஸ்ரீ ரங்கர் அங்கேயகமகிழ்ந்து நீசன் நினைத்த நினைவுபோலெம்பெருமாள் தேசப் பவிசும் சிறப்பு மிகக்கொடுத்து நீசன் தனக்கெதிரி நீணிலத்திலில்லையென்று தோசக்கலிப்புவியைச் சூட்டியரசாளுகையில் மதலையதில்லாமல் மனஞ்சலித்து மாநீசன் குதலையினேதுவினால் கொஞ்சஞ்சடைவாகி ஆதித்திருமால் அடியை மிகப்போற்றி சோதியே யென்றனக்குச் சிறுவனொன்று தாருமென்றான் அப்போது நாராயணர் அகமகிழ்ந்து கொண்டாடி இப்போது உனக்கு இங்கிருந்தால் மதலை கிட்டாது காசிதனில் கீர்ந்த நதிக்கரையில் திட்டமுடன் தவசு செய்யப்போயங்கிருந்தால் மதலையுட துயரம் மாறுமுனக்கு என்று பதலைமொழி நீசனுக்குப் பகர்ந்தார்காணம்மானை கேட்டந்த நீசன் கெட்டிதானென்றுசொல்லி நாட்டுக்குச் சீட்டெழுதி நருட்களையுந்தான்வருத்தி போனானே நீசன் புகழ்பெரிய காசிதனில் சேனாதிபதிகள் திக்கெங்குஞ்சூழ்ந்து நிற்க நீசன் தவசு நிற்கவொருமறையோன் வாசக் குழலோடு மருவினன்காணம்மானை கண்டந்த நீசன் காமம் பொறுக்காமல் தண்டுமீறிக்காமம் சலத்தில் விழுந்ததுவே இரைநமக்கென்று எட்டியொரு கொக்காவி விரைவாய் விழுங்க மிகுத்தகர்ப்பமுண்டாகித் தண்ணீரில் பிள்ளை தான்பெற்றதம்மானை வெண்ணிறமான மிகுத்தபிள்ளை தான்மிதந்து போகும் பொழுதில் புனலரிஷி மாமுனிவன் தாபமுடன் சிசுவை தானெடுத்தானம்மானை மதலைதனை யெடுத்து வளர்த்துப்பருவமதில் குதலைதனையாற்றில் குளியோட நீச்சலதும் தோணியேறுந் தொழிலும் சுருக்குக் கப்பலேறுந்தொழிலும் ஆணிப்பொன் முத்து அதுவளருந்தலமும் வெள்ளித்தலமும் மிகுத்த பொன்னுத்தலமும் உள்ளவித்தையான உற்றரசவாதமுதல் கள்ள உபாயக் கபடு பலத்தந்திரமும் வெள்ளை நீசன்தனக்கு விதமாயவர் வருத்தி செங்கோமட்டியெனத் தேசநசுராணிகளில் பெண்கள் இரண்டுபேரைப் பேறாய் மணமகித்து இருத்தினான் மாமுனிவன் ஏற்றசெங்கோமட்டியில் பருத்த வெள்ளைநீசன் பண்பாக அங்கிருக்க நின்ற தவசு நெறியழிந்து மாநீசன் அன்றந்தப்பாவி அனந்தபுரம் வந்தனனே வந்து சடைவாய் மாநீசன் தானிருக்க சந்துபயில் மாயவரும் தானறிந்தேதுரைப்பார் மன்னவனேயுன்றனக்கு மதலையது கிட்டினதோ என்ன விதங்காண் ஏகிவந்ததென்றுரைத்தார் அப்போது நீசன் அவனேது சொல்லலுற்றான் இப்போது மாயவரே யான்தவசு நிற்கையிலே மறையவனுந்தேவியோடு மருவினதைக் கண்டாவி இறையவரே யென்றனக்கு இந்திரியந்தானிளகி ஆனதால் தவசு அழிந்தேன் அதினாலே ஈனமுடன் மதலை இல்லையென்றாரீசுரரும் மதலையில்லாதிருந்தால் வையகத்துக் கேராது குதலையல்லோ வேணும் குவலயத்தையாளுதற்கு செங்கோலரசு செலுத்தியரசாளுதற்கும் முன்கை சிரைத்து முறைகர்மஞ்செய்திடவும் பிள்ளையில்லாதேயிருந்தால் போதுமோ புண்ணியரே வள்ளலந்த மாலும் மறுத்துரைப்பாரம்மானை சொந்தமுள்ள சோதிரியைச் சுறுக்காய் வரவழைத்து உந்தனக்குப் பிள்ளை உண்டோதானில்லையென்று வருத்திக்கேளப்போ வகைசொல்வான் சோதிரிசி பொருத்தமாயாயன் புகன்றாரே நீசனுக்கு நல்லதென்று வேதியனை நாடியவனழைத்து சொல்லவென்று நீசன் தொகுத்தவனோடேகேட்க அப்போது சோதிரிசி அந்நீசனைப்பார்த்து இப்போது கேள் நீ ஆகமத்திலுள்ளமுறை பெற்றாலுமுன்மகவு பேருலகம் ஆளாது மற்றோர் பெற்றுன் மருகன் ஆளுவான் வையகத்தை என்றேதான் சாஸ்திரமும் இசையுதுகாண் மன்னவனே அன்றேதான் சோதிரியும் அந்நீசனுக்குரைத்தான் நல்லதென்று நீசன் நாடியகமகிழ்ந்து வல்ல வகையாலும் வைத்தபங்கு கிட்டுமென்று சோதிரியைத் தானனுப்பித் துயர் நீங்கியேயிருந்தான் ஆதி முறைப்படியே அவன்மருகன்றனக்கு பட்டந்தானென்று பறைசாற்றியாண்டிருந்தான் திட்டமுடன் நீசன் தேசமதையாளுகையில் முன்னீசன் விந்தில் உதித்துவளர்ந்தேயிருந்த அந்நீசனான அசுபக்கிரிவளமை சொல்லவே நாதன் தொகுத்துக்கேளன்போரே வல்லசெங்கோமட்டி வையகத்திலந்நீசன் வெள்ளி மலையும் மிகுத்ததங்கமலையும் கள்ளமில்லா வாதம் கைகண்ட வித்தையதாய் நிதியிற்பெருத்து நெருங்கப்படைகூட்டிப் பரியானை ஒட்டகங்கள் பலபடைகள் சேகரித்து ஆளும் படையும் ஆயுதங்களஸ்திரமும் வேழும் பெரிய வெகுவாணுவங்கூட்டி தன்னோடினங்கள் சதாகோடியாய்ப்பெருத்து என்னோடெதிர்க்க யாதொருவரில்லையென்று அவன்தானொருவேதம் ஆகமங்கள் தான்பிரித்து எவர்தானெதிரியென்று எண்ணமுற்று மாநீசன் நட்சேத்திரத்தை நகட்டிருபத்தெட்டாக்கி வைத்தானே மாதம் வருசமது மாறாய் முன்னீசன் வைத்த முறைமையிலுங்கூட்டி பின்வந்த நீசன் பிரித்தானொன்றேற்றமுடன் அரிஓம்நமோ வென்ற அட்சரத்தை விட்டவனும் விரியாய் அனாதியென விளம்பினான் வையகத்தில் இப்படியே வைத்த இவன் வேதமானதுக்குள் அப்படியே மற்றோரை அகப்படுத்த வேணுமென்று பணமானதைக்கொடுத்துப் பகட்டினான் மானிடரை சிணமாக மானிடவர் சேர்ந்தாரவன் வேதமதில் இப்படியே வேதமொன்று இவன்பலத்தாலுண்டாக்கி அப்படியே தானிருக்க அவனேது தானினைப்பான் ஆணுவங்கள் சேனை ஆயுதங்கள் வெகுவாய் வாணுவங்கள் ரெம்ப வம்மிசத்தோரெம்பரெம்ப படையாலுமற்றொருவர் பணத்தாலும் நம்மையுந்தான் தடைசெய்து நம்மைத் தடுப்பவராரென்றுசொல்லி ஆராரெதிரியென்று அவன்பார்த்திருக்கையிலே பூராயமாயொருவன் போதித்தானவன்றனக்கு சோழனென்றும் சேரனென்றும் துய்யபாண்டியனென்றும் வேழமுடி மன்னர் விபரீதமாயாண்டிருந்த தேசமைம்பத்தாறு உண்டுகாண் செந்துரையே வாசமுடனாண்டு வகையாயிருக்கையிலே வேசையொரு தாசி வழிநுதலாள் தன்வயிற்றில் பேசரியவோர்மதலை பிறந்ததுகாண் மாயமுடன் மதலை பிறந்து வையகத்திலேயிருந்து குதலை வளர்ந்து குடுமி வளர்க்கையிலே சேரனுக்குஞ் சோழனுக்கும் சிறந்தபாண்டியனுக்கும் வாரமுள்ள தெய்வ மாதருட சாபமதால் அவர்கள் கிளையிறந்து ஆணுவங்கள் தானழிந்து இவர்களும் போய்க்கடலில் இருந்தார்கள் கல்லெனவே ஆனதினால் முன்னம் அவனிதனையாளுதற்கு மானமுள்ள பேர்கள் மறுத்தேதானில்லாமல் மாயமுடன் தாசி மகன்தானும் சீமைதன்னை ஞாயமில்லா வண்ணம் நாடாண்டிருந்தனனே சென்றால் தானந்தச் சீமைநமக்காகுமென்று அன்றேதான் சொல்ல அவன்கோபத்தால் வெகுண்டு வந்தானேயந்த மாநீசன் தன்பேரில் செந்தார மாயன் சேனை வருவதையும் அறிந்தே நீசன்தனக்கு அச்சுதருஞ்சொல்லலுற்றார் வெறிந்தமுள்ள நீசன் வேண்டும் படைகூட்டி நசுறாணியான நல்லவெண்ணீசனுக்கு துசுவான மாநீசன் திருமாலின் தன்னருளால் எற்றுக் கொடாமல் இவன்வெற்றி கொண்டனனே மற்றுமந்த நீசன் மாறியவன் போயிருந்தான் அப்போது அந்த அன்னீத மாநீசன் இப்போது படையையாம் வெற்றிகொண்டோமென்று கோட்டைபின்னு மிட்டுக் கொடிய விருதுகட்டி தாட்டிமையாயுலகில் சட்டமது வைத்தனனே வைக்கும் பொழுதில் மாயவரைத் தானோக்கி செய்க்கும் பெரிய திருமாலே யென்றனக்குக் கைக்குள்ளே ஏவல் கருத்தாகச்செய்வதற்கு மெய்க்குணம்போலுள்ள விதமான சாதியொன்று வருவித்து என்றனுட மணிவாசல் காத்திருக்க தருவித்து நல்ல சாதி தாரும் என்றுரைத்தான் அப்போது மாயன் அதற்கேது சொல்லலுற்றார் இப்போது உன்றனக்கு ஏவல் தொழில்கள்செய்ய ஆகின்றபேரை அழைத்துக்கோ என்றுரைத்தார் வேகுன்ற நீசன் விளம்புவானமைச்சருடன் ஆரைக் கொடுவரலாம் அருகில்விட்டு வேலைசெய்ய ஏரையொத்த மந்திரியே இயம்புமெனக்கேட்டான் அப்போது மந்திரிகள் அந்நீசனுக்குரைப்பார் இப்போது வேறொருவர் இருந்தாலாகாதெனவே நல்லவகையான நாடுஞ்சான்றோர்களைத்தான் வல்லவகையாலும் வருவித்து வைப்பீரால் ஆகுமந்தச் சாதியென்று அந்நீசனுக்குரைத்தார் வேகும் பொழுதில் வெற்றிச்சான்றோர்களுக்கு ஆள்விட்டு வருத்தி அதிக நிதிகொடுத்து வாள்கொடுத்து ஆயுத பாணி மிகக்கொடுத்து பட்டயமுங்கொடுத்துப் பாரயிறை கூலிவிட்டு சட்டைக்குல்லாகொடுத்து தலைப்பாமிகக்கொடுத்து வாசல் மணிமேடை வகையாகக் காரெனவே வாசமொழிக் கலியன் மாய்கையால் சான்றோர்கள் ஊழி விதியால் உடையோனைநெஞ்சில் வைத்து காளி வளர்த்த கண்மணிகள் காத்திருந்தார் அப்படியே காத்திருந்து அவர் வருகும் வேளையிலே முப்படியே வந்த முழுக்கலியன் தோசமதால் அந்த நீசன் தனக்கு அழிவுவரும் வேளையிலே இந்தச் சான்றோர்கள் இவர்தூக்கம் வைத்திடவே நீசனுட வம்மிசத்தோர் நேரக்கூறே யறிந்து வாசமிட்டு நீசனையும் வதைத்தாரே அவ்வினத்தோர் சீவன்போகும்வேளைச் செப்புவான் சாபமொன்று காவலாய் நீரிருந்து காட்டிக்கொடுத்தீரேயென்று கோபித்தான் சான்றோரைக் கூறழியப்பேசியவன் சாபித்தான் சான்றோரை சத்தியில்லாநீசன் என்குடும்பத்தோர்கள் இராச்சியத்தையாளுமட்டும் உன்குடும்பத்தோர்கள் ஊழியங்கள் செய்துமிக அழுந்தப்படுவாரெனவும் அந்நீசன் சான்றோர்க்கு விழுந்த மொழியாய் விரைந்துரைத்தானேநீசன் சொல்லியந்த நீசன் சோர்ந்திறந்தானவன்றன் வல்லியுடன் பிறந்த மகன்தேசம் ஆண்டிருந்தான் நீசனுட சாபம் நீணிலத்தில் சான்றோர்க்கு மாய வலையாய் வளைந்தது காணன்போரே தேவரதையறிந்து திருமாலிடமேகி மேவலர்கள் வந்து விளம்பினாரப்போது மாயவரே எங்கள் வழியில்வாழ் சான்றோர்க்கு பாவிநீசன் சபித்த பழிசாபங்கேட்டீரோ சாபத்துல்யமெல்லாம் தானுரைத்தார் அச்சுதற்கு தாமத்திருமேனி தானுரைப்பார் தேவருக்கு மன்னதியத் தேவர்களே வாய்த்தபுகழ் சான்றோர்க்கு அந்நீசன் சாபம் அதுவுங்குறிதானாச்சே வம்புள்ள நீசன் வழக்கெல்லா மேற்பதற்கு அன்புள்ள சான்றோர்க்கு அவனிட்ட சாபமது எத்தனை குற்றம் இவர்செய்து போட்டாலும் அத்தனையும் நீசன் அவனேற்கக்காரியந்தான் நல்லதுகாண் தேவர்களே நாடுஞ்சான்றோர்களுக்குத் தொல்லைவந்தாலுந்தீர தொகைவைத்தலக்குமுண்டு சோழனுக்குச் சான்றோர் செய்தநன்றி மெத்தவுண்டு வேழமிட்டிருவரை வெட்டினான் பாரறிய நீசனுக்குச்சான்றோர் நித்திரைகளில்லாமல் வாசல்நடை காத்ததற்கோ வலுதுயரச்சாபமிட்டான் எல்லாமறிவார் ஈசர்முதல் லோகம்வரை வல்லாண்மையான வாய்த்த தேவாதிகளே நாமென்ன செய்வோம் நாட்டில்விதி வந்ததற்கு போமெனத்தேவருக்குப் பெரியோன் விடைகொடுத்து மாயவருமங்கே மனஞ்சடைத்துத் தானிருக்க வாயக் கலிநீசன் வையகத்தை யாண்டிருந்தான் நீசனிட்ட சாபம் நீதிச்சான்றோர்களுக்கு மாயவினை போலே வளைந்ததுகாணன்போரே தம்பி தமையனுக்குச் சத்துருபோல் தானாகி வம்புக்குங்கோளு மாநீசனோடுரைத்து அடிக்கவே கைக்கூலி அவனுக்கே தான்கொடுத்து முடிக்கும் வரையும் முறைமுறைக்கோள் சொல்லிடுவான் இப்படியே சான்றோர் இவர்கள்நிரப்பில்லாமல் அப்படியே நீசனுட அன்னீதத்தால் வேறாய் பிரிந்துதான் சான்றோர் பெருத்த கிலேசமுற்றார் அறிந்துதான் நீசர் அவர்கள் தொக்காச்செனவே தாலிக்கு ஆயம் சருகு முதலாயம் காலிக்கு ஆயம் கம்பு தடிக்காயம் தாலமதேறும் சான்றோருக்காயம் தூலமுடனரிவாள் தூருவட்டிக்காயம் தாலமதுக் காயம் தரணிதனிலே வளர்ந்த ஆலமரம் வரைக்கும் அதிகஇறை வைத்தனனே வட்டிக்கும் ஆயம் வலங்கைசான்றோர் கருப்புக்கட்டிக்கும் ஆயம் கடுநீசன் வைத்தனனே பாழிலே சான்றோர்க்குப் படுநீசன் கொள்ளுகின்ற ஊழியங்களெல்லாம் உரைக்கக்கேளன்போரே பனைகேட்டடிப்பான் பதனீர்கேட்டேயடிப்பான் கனத்த கற்கண்டு கருப்புக்கட்டிக் கேட்டடிப்பான் நாருவட்டி யோலை நாள்தோறும் கேட்டடிப்பான் வாதுக்கு நொங்கு வாய்கொண்டு கேட்டடிப்பான் நெடுமட்டைக் கேட்பான் நெட்டோலை தான்கேட்பான் கொடுவாவெனவே கூழ்பதனீர் கேட்டடிப்பான் சில்லுக்கருப்புக்கட்டி சீரகமிட்டே வூற்றிக் கொல்லைதனில்கொண்டு வாஎன்றடிப்பானே மீச்சுக்கருப்புக்கட்டி மிளகுபலகாரமிட்டு வீச்சுடனே கொண்டு வீட்டில்வா வென்றடிப்பான் வட்டிக்கருப்புக்கட்டி மணற்கருப்புக் கட்டியொடு வெட்டக்கருப்புக்கட்டி வெண்கருப்புக் கட்டியொடு தோண்டிக்கும் பாயதுக்கும் சுமடதுக்குமோலை வேண்டியதெல்லாமெடுத்து விரைவில்வா என்றடிப்பான் காலைப்பதனீர் கண்முற்றா நொங்குகளும் மாலைப்பதனீர் வற்றக்காயும்பதனீர் கொதிக்கும் பதனீர் கொண்டுவா என்றடிப்பான் விதிக்குகந்த சான்றோர் விரைவாய்க்கொடுத்திடவே இத்தனையும் வேண்டி இவன்கொண்டு போனாலும் பத்தியுள்ள சான்றோர்க்குப் படுந்துயரமாறாதே பனையிலுள்ள வஸ்து பலநாளு மிப்படியே வினைகொண்ட பாவி வேண்டியவன் போனாலும் சான்றோர்க்கு நன்மை சற்றுசெய்ய வேணுமென்று மாண்டோர் கணீசன் மனதில் வைக்க மாட்டானே உய்கொண்ட சான்றோர் உடம்புருகுந் தேட்டையெல்லாம் நொய்கொண்ட நீசன் நோகப் பறித்தானே இப்படியே சான்றோர் இவர்தேடுந் தேட்டையெல்லாம் அப்படியே நீசன் அவன்பறித்துத் தின்றாலும் ஞாயமுள்ளச் சான்றோர் நாமமது கேட்டதுண்டால் நீசக்குலத்தோர் விரட்டி நெடுந்தூரங்கொண்டடிப்பார் பின்னுமந்தச் சான்றோரை பொல்லாதான் கொள்ளுகின்ற அன்னீதமெல்லாம் அருளக்கேளாயிளையே உப்பாலுவரா உபாயமெடுத்தவரை ஒப்பமுள்ள சான்றோரை ஊழியங்கள் கொண்டடிப்பான் குளம்வெட்டச் சொல்லிக் கூலி கொடுக்காமல் களம்பெரிய சான்றோரைக் கைக்குட்டை போட்டடிப்பான் சாணார்கள் பனையில் தான்முளைத்த ஓலையெல்லாம் வீணாக நீசன் வெட்டித்தா என்றடிப்பான் வெட்டிக்கொடுத்தாலும் வெற்றியுள்ளச்சான்றோரை கட்டிக்சுமவெனவே கைக்குட்டை போட்டடித்து சுமந்து போனாலும் தொகையெண்ணமுங்கேட்டு பவந்து மொழிபேசிப் பணமுமிகக் கேட்டடிப்பான் ஐயையோ சான்றோரை அந்நீசன் செய்ததெல்லாம் வையமது கொள்ளாதே மாதேவுன்னோடுரைத்தால் ஈசருக்கும் வேதா இவர்களுக்குந் தேவாதி வாசமுடன்பதறி வணங்கிநின்ற வேலையைப்போல் நேசமுள்ள சான்றோர் நெடுநாளுமே பதறி நீசனுக்குச் செய்த நிசவேலை யொக்குமல்லோ ஈப்புலிபோல் நீசன் ஈயைப்போலே சான்றோர் நாய்ப்புலிபோல் நீசன் நல்லாடு போல்சான்றோர் கீரியைப்போல் நீசன் கிரணமதுபோல் சான்றோர் பாரியைப்போல் நீசன் படுத்தினான் சான்றோரை பண்டுநீசன் சபித்த படுசாபந்தன்னாலே விண்டுரையாவண்ணம் விசையடக்கித் தாழ்ந்திருந்தார் இப்படியே ஊழியங்கள் எண்ணலக்கில்லாதபடி அப்படியே சான்றோர் அவனூழியங்கள்செய்து அல்லாமல் நீசன் ஆர்க்கமுள்ள சான்றோர்க்கு வல்லாண்மையான வரிசையிறைகள்வைத்து கரிவிறை பாட்டஇறை கண்டபாட்ட இறையும் தரிசிறை காணாத தரைப்பாட்ட இறையும் ஆமிசங்களில்லாத அன்னீத வம்பிறையும் நேமித்து வைத்து நிலையுள்ளச்சான்றோரை அடித்துக் கைகெட்டி ஆண்பெண் வரைக்குமிட்டு இடித்தடைத்துப் பட்டினிகள் இரவுபகல் போட்டு பெண்ணாளுடைய பெருமை மிகக்குலைத்து மண்ணாண்ட சான்றோரை வரம்பழித்து மாநீசன் சாணாரைக் கண்ணில் தான்காண வொட்டாமல் வீணாட்டஞ் செய்து விரட்டி யடித்துமிக பம்பழித்துச் சாணாரை பலசாதியிலுங் கீழாய் தும்பழித்து வேலை தூறுபடக்கொண்டனனே பறையன் புலையன் பகல்வரான் போகுமிடம் மறையொத்த சான்றோர் வந்தால் பிழையெனவே முக்காலி கட்டி முதுகிலடித்துமிக மிக்கான பொன்பணங்கள் வேண்டினான் பிழையாக சாணான்தன் வஸ்து தரணி தனக்குயிராம் ஆனாலுஞ்சான்றோர்க்கு அடியொருநாள் மாறாது கோவில் சிவாலயங்கள் கூடங்கள் சிங்காசனங்கள் நாவுலகுங்கள்ளாய் நாடியிருந்தாலும் சாணான் கள்ளேறியெனச் சண்டாள நீசனெல்லாம் வீணாகச் சாணாரை விரட்டியடிப்பான்காண் சாணுடம்பு கொண்டு தரணிமிக ஆண்டாலும் வீணுடம்பு கொண்டோர் விரித்துரைத்தோராமல் சாணான்சாணானெனவே சண்டாள நீசனெல்லாம் கோணாதுளத்தோரைக் கோட்டிசெய்தேயடித்தான் தரணிதனில் வந்து தலையெடுத்த யாவருக்கும் மரணம் வரைக்கும் வந்துதித்த அன்றுமுதல் சேனைமிக வூட்டுதற்கும் தெய்வச்சான்றோரமிர்தம் ஈனமதில்லாமல் யாபேர்க்குமீந்தாலும் பொல்லாத நீசன் பொறுதியுள்ள சான்றோரை கல்லாதான் கூடிக் காணவிடாதேயடித்தான் நீசன் குடியிருக்க நிறைந்தமணி மேடையெல்லாம் வாசமுடன் சான்றோர் வஸ்துவல்லாலாகாது அப்படியே சான்றோர் அவருதவி செய்திடினும் எப்படியுஞ்சான்றோர் இடுக்கமது மாறவில்லை எவரெவர்க்குஞ் சான்றோர் ஈந்துமிக வந்தாலும் அவர்களுக்கு நீசன் அனுப்போலுறவுமில்லை பாலரியச்சான்றோர் படுந்துயரங்கண்டிருந்து மாலதிகக்கோபமுடன் மாநீசனைப்பார்த்து கேளடா சூத்திராவுன் கிளையோடே மாளுதற்கு வாளடா சான்றோரை வம்புசெய்து வாறதுதான் உன்றனக்கு முன்கிளைகள் உள்ளோர்க்கும் நாள்தோறும் என்றனக்கும் நன்மை இன்பமுடன் செய்துவரும் சாணாரை நீயும் தடிமுறண்டு செய்கிறது வாணாள்க்கிடறு வருமடா மாநீசா தீத்தணலைச்சேர்ந்து சிவகங்கையில் பிறந்த பார்த்தன் வழிக்குலங்கள் பகைத்துன்னை சாபமிட்டால் வானமிடியாலும் வானமழையாலும் ஆனகடலாலும் அக்கினி தன்னாலும் நாட்டைமுடிக்குமடா நல்லசாணாத்தி கற்பு கோட்டையிடியுமடா கோத்திரங்கள் தான் முடியும் சேனையழியுமடா உந்தன் செல்வம் குன்றுமடா வானநட்சத்திரத்தாலுன் வம்மிசங்கள் கரியுமடா என்றுகலி நீசனுக்கு எம்பெருமாள் கூறிடவே அன்றந்தக்கலியன் அதற்கேது சொல்லலுற்றான் உன்சாபமானாலும் உயர்காளி சாபமானாலும் கன்னிசாபமானாலும் கபாலிசாபமானாலும் சிவசாபமானாலும் சக்திசாபமானாலும் சீவசெந்தெல்லாம் சேர்ந்து சாபமிட்டாலும் எந்தனிடத்தில் எள்ளளவும் வாராதே வந்தாலும் அணுகாத சிவமூலம் கருவிருக்கு என்று கலிராசன் உரைத்தான் காணம்மானை அன்றந்த மாயன் அதற்கேது சொல்லலுற்றார் முன்னுகத்தில் கேளு முடுக்கஞ்செய்திருந்தோர் உன்னோடும் பிறவி ஒருயேழு உண்டுமடா ஒண்ணாம் யுகத்துக்கு உற்ற குறோணியடா மண்ணெல்லாங்குறோணி வந்தெடுத்து விழுங்குகையில் பூதக்குருமுனிவன் புத்திசொன்னானவ்வுகத்தில் நீதமுடன் கேளாமல் நீசனவன் மாண்டான்காண் அடுத்த யுகமதிலே குண்டோமசாலினுக்குக் கடுத்தமுள்ள கோவிரிஷி கடியபுத்திசொன்னான் கேளாதே மாண்டான் கிளையோடே குண்டோமனும் பாழாகிப்பின்னும் பதிந்த மூன்றாம்யுகத்தில் மல்லோசிவாகனென்று வந்த இருவருக்கும் நல்லபல ரோமரிஷி நாடிமிகப்புத்திசொன்னார் கேளாதே மாண்டார்கள் கிரேதாயுகந்தனிலே தாழாத சூரபற்பன் தம்பியவன்றனக்கும் வீரவாகுதேவர் விரைந்துமிகப்புத்தி சொன்னார் தாராமல் சூரன் தன்கிளையோடே மாண்டான் கிரேதாயுகத்தில் வந்த அசுரனிரணியற்கு பிரகலாதனாயுதித்து செப்பின புத்திதன்னை சற்றுமவன் கேளாமல் தான்மாண்டானவ்வசுரன் பத்து தலைகொண்ட பார அரக்கனுக்குத் தம்பி விபீஷணனும் தான்சொன்னான் புத்தியது வம்பிலவன் கேளாமல் மாண்டான் கிளையோடே பின்னுந்துரியோதனனாய்ப் பிறந்தான் மறுயுகத்தில் மன்னுகந்த பீஷ்மரும் வாழ்த்திமிகப்புத்தி சொன்னார் கேளாமல் மாண்டான் கேடுகெட்ட மாபாவி தாழமலுன்றனக்கு தற்சொரூபத்தோடிருந்து நாராயணராய் நானுதித்து உன்றனக்கு சீரான புத்தி செப்புகிறேன் கேளடவா உன்கிளையோடே நீயும் உற்றார் பெற்றார்களுடன் தன்கிளையோடேநீயும் தரணியரசாளவென்றால் சாதிதனிலுயர்ந்த சான்றோரவர்களுக்கு நீதியுடனிறைகள் இல்லாமல் நீக்கிவைத்துக் காளி வளர்த்தெடுத்த கண்மணிகளானோர்க்கு ஊழியமுந்தவிரு நீ உலகாள வேணுமென்றால் அல்லாமல் சான்றோரை அன்னீதமாயடித்தால் பொல்லாத நீசா புழுக்குழிக்குள்ளாவாய் கற்புள்ள சாணாத்தி கதறியுன்னைச்சாபமிட்டால் அற்படியும் உன்கோட்டை அழிந்துபொடியாகுமடா சாணாத்தியுன்னைச் சாங்கமுடன் சபித்தால் வாணாளழியுமுன்றன் வம்மிசங்கள் தாமுடியும் தீத்தழலில் விந்து சிக்கி மிகப்பிறந்த பார்த்தன் வழிக்குலங்கள் பகைந்துனை நிந்தித்தால் கோட்டையிடியுமடா கோத்திரங்கள் தாமுடியும் நாட்டை முடிக்குமடா நல்லசாணாத்திகற்பு சேனையழியுமடாவுன் செல்வமது குன்றுமடா வானமிடிந்துன் வம்மிசத்தைக் கொல்லுமடா திடம்பெரிய சாணாத்தி தினமுனை நிந்தித்தால் கடல்வந்துன் சீமைதனை கட்டாயழிக்குமடா ஊக்கமுள்ள சான்றோர்க்கு ஊழியங்களில்லையென்று ஆக்கமுடன் பறைதான் அடித்தவனி தானறிய அல்லாதே போனால் அரசாள மாட்டாய்நீ நல்லான சான்றோர்க்கு நாட்டு மிறைதவிர்த்து இறைகூலி தானம் இட்டுக்கொடுத்தவர்க்குத் தரைமீது நன்றாய்த் தழைத்திருக்க வைக்காட்டால் குஞ்சரமுமுன்னுடைய கொத்தளமுந்தானிடித்து வஞ்சகமாயுன்றனக்கு வலியகர்மஞ்சுற்றுமடா கர்ம வியாதிகளாய்க் கண்டமாலையுடனே வர்மம்வந்து சிக்குமடா மாநீசா நீகேளு தெய்வச்சாணாத்தி தினமுனை நிந்தித்ததுண்டால் பொய்வகையால் கர்மபோகத்தால் நீமடிவாய் என்று நாராயணரும் ஏற்றபுத்தி சொல்லிடவே அன்றந்த நீசன் அதற்கேது சொல்லலுற்றான் மாயவரே நீர்கேளும் வாய்த்தசான்றோர்களை ஆயரே நீரும் அபூர்வமாய்ச்சொன்னீரே சாதியில் கீழான சாணார்கள் தங்களுக்கு வீரியமாயித்தனையும் விவரித்துச்சொன்னீரே சாணார்க்கு வைத்த தலைவீதமுள்ளஇறை வாணாளழிந்திடினும் மாற்றிவைக்கப்போறதில்லை என்சீவனுள்ளளவும் ஏற்றசாணான்தனக்கு வம்பான ஊழியங்கள் மாற்றிநான் வைப்பதில்லை நீர்தானுமிந்த நிலைபேர்ந்து சாணாரின் ஊரானதிலே உறைந்திருக்கப்போனாலும் கேட்பதில்லை சாணாரின் கேள்விநான் கேட்பதில்லை தாட்பதல்லால் சாணாரின் சங்கடங்கள் கேட்பதில்லை என்றந்த நீசன் இத்தனையும் மாயருடன் தாவியுரைக்கச் சாற்றுவார் அச்சுதரும் பாவியுனது பவிசெல்லாந்தான்மாறி ஆவிக்கு நரகம் ஆவதற்கோ என்னோடே இந்த மொழியுரைத்தாய் ஏனடா மாநீசா உன்றனுட ஊருவிட்டு ஓடிப்போவென்றனையே ஆனாலுஞ்சாணார்க்கு அடியும்பல ஊழியமும் மானாந்திர இறையும் மாற்றிவை யென்றுரைத்தார் அப்போது நீசன் அச்சுதரைத் தான்பார்த்து வெப்போடு கோப வெகுளியாய்த் தானுரைப்பான் மாலை காலை நேரம் மாயவனே உன்றனக்குச் சீலமுள்ளப்பூசை செய்துவருவதற்கு நித்தமொரு நூறுபொன் நினக்குச்செலவுமுண்டே அத்தனையுங்கிட்டிடுமோ அவனிறைகள் தான்தடுத்தால் அல்லாமலென்றனக்கு ஆயிரத்தி நூறுபொன் எல்லாத்திருப்பதிக்கும் என்றனக்கும் வேணுமல்லோ என் வேலையாக இருக்கின்ற பேர்களுக்கு பொன்பதினாயிரந்தான் போடணுமே சம்பளங்கள் இப்பொன்னுக்கெல்லாம் யானெங்கே போவேனடா அப்பொன்னுக்கெல்லாம் அவனையடித்தல்லவோ வேண்டித்தானித்தனையும் விதானிக்க வேணுமல்லோ ஆண்டியுன் சொல்லை யான்கேட்க ஞாயமுண்டோ என்னோடு தானிருந்து இந்தமொழி சொன்னாயே உன்னோடு யென்றனக்கு உறவென்ன நீபோடா முன்னெல்லாம் நீதான் உதவியோயென்றனக்கு இந்நிலத்தை விட்டு எங்கானாலும்போடா அதுக்கந்த நீசன் அடடா என்றிடவே பொதுக்கென்ற கோபமதைப்புந்திதனிலடக்கி சொல்லுவார் பின்னும் சீவனம் போலுள்ளபுத்தி பல்லுயிருக்கெல்லாம் படியளக்கும் மாலோனும் இத்தனையும் வேண்டி என்றனக்குப்பூசையது நித்தமும் நீ செய்யெனவே நின்னோடு கேட்டேனோ பூசைசெய்தாய் நீயும் பிராமண நம்பூரிகட்கு தேசமறியாதோ செப்பாதோ சாட்சியது ஏற்காதிருப்பதற்கு ஏற்ற அடையாளம் தெற்கே தலைவைத்துச் சென்றதுவுங்காணலையோ பின்னுமந்தப்பூசை புனக்காரமானதெல்லாம் பின்னுங்கடைச்சாதி புலச்சி கையெச்சித்தீதான் அறியலையோ நான்தான் அமுதேற்றிருப்பதுதான் வெறிகொண்ட நீசா மேதினிகள் சொல்லாதோ என்றந்த மாலும் இத்தனையுஞ் சொல்லிடவே அன்றந்த நீசன் அதற்கேது சொல்லலுற்றான் நான்தந்த தொன்றும் நாவில்வைக்கவில்லை என்றால் என்தொந்தமாக என்னோடிருப்பதென்ன போபோ நீதானும் போகுமிடந்தனிலே நீ போவெனவே நிகழ்த்தினான் மாயவரை

மாயன் திருச்செந்தூர் ஏகல் அப்போது மாயன் அதிகக்கோபத்துடனே தப்பான நீசனுக்கு தானுரைப்பாரம்மானை போறேன் நானுன்னுடைய புரத்தைவிட்டுச்செந்தூரில் வாறேன் நானுன்னை வதைக்கவொரு கோலமிட்டு எளியசாணானெனவே எண்ணம் வைத்தென்றனையும் நளியாகப்பேசி நகைத்தாயே மாநீசா எளியோர் வலியோர் எவெர்க்கும் வெகுநன்மைசெய்து வெளியாக உன்றனக்கு விபரம்போதித்தருளி நீயறியத் தர்மம் நீணிலத்திலே நடத்திப் பேய்வெறியைக்கொன்று பேருலகமத்தனையும் நாடாள்வார்தமக்கு நான்பட்டமுஞ்சூட்டி தாடாண்மையான சத்தியமாயென்றனையும் ஒருபுத்தியாகி உள்ளன்புகொண்டோர்க்கு புதுப்புத்தியீந்து பூலோகம் ஆளவைப்பேன் வருவேன் நானென்று வருமுன்னறிவதற்கு நிருபமதுவெழுதி நீணிலத்திலேயனுப்பி மரமறிய சீவசெந்து மலையுமிகவறிய திரமான வாயு சேடன் முதலறிய வருணனறிய வளரும் மதிமிகவறிய தருணம் வரும்போது சாணாரிடம் வருவேன் அறிந்துபல சாதிமுதல் அன்பொன்றுக்குள்ளானால் பிரிந்துமிக வாழாமல் பெரியோராய் வாழ்ந்திருப்பார் என்று அந்தநீசனுக்கு எடுத்துரைத்து எம்பெருமான் அன்று திருவனந்தம் அவனிவிட்டெழுந்தருள நீசனுட கோட்டை நெடுநெரெனத் தானிடிய தேசமெல்லாம் நித்திரா தேவியிருள்மூடிடவே ஏழுமேக முங்கூடி இராச்சியத்தைத் தான்மூடி வெளுவேளென மாரி வெண்டூளி போல்தொளிய வாயுவதுதிரண்டு வையகத்தைத் தானரிக்க வீசுவீசென்று உலாவியது வீசிடவே வாரியது கோபமுற்று வையகத்தை தான்முழுங்க மூரிபோல் மூச்செறிந்து மொகுமொகென கோபமுற்று மாநீசனிட்டிருந்த வாய்த்த கற்கோட்டையெல்லாம் தேனியீன் கூடதுபோல் செகலிடிந்ததம்மானை கோட்டைத்தளமிடிந்து குஞ்சரங்கள் தானிறந்து பூட்டை மிகப்பூட்டிப் போட்டிருந்த காவலெல்லாம் உலைந்து மிகவெருவி ஓகோவெனவுளறி கலைந்து அவரோடக் கைமறந்து நின்றனனே சிப்பாயியோட சுபேதாருந்தானோட அப்பப்பாவென்று அந்நீசன் தானோட பிராமண நம்பூரி புலம்பி மிகத்தானழுது ஸ்ரீராமனையுங்காணலையே தேசமிருளாகுதல்லோ அய்யோ கெடுத்தானே அரசன் நம்மையென்றுசொல்லி மெய்யோடே குத்தி விழுந்தழுவார் வேதியர்கள் மாயன்அனந்த புரத்திலே வாழுமட்டும் நீசனுட சட்டம் நின்றுதல்லோ ராச்சியத்தில் ஸ்ரீபத்ம நாபரிந்தச் சீமைவிட்டுப் போனவுடன் பிறிவாக நவ்வா பிடித்தானே சீமையெல்லாம் என்று பலபேர்கள் இப்படியே சொல்லிமிக அன்று புலம்பி அழுவார் சிலபேர்கள் நம்பூரி வேதியர்கள் நாம்கெட்டோமென்று சொல்லி வெம்பிடா வண்ணம் வெளியிலுரையாதிருந்தார் இப்படியே பூலோகம் எல்லாந்திணுக்கிடவே அப்படியே சிலைக்கு ஆனகுரு நாராயணரும் இன்றுபோலெந்நாளும் மன்றுக்குள்ளிருவுமென்று அன்று சிலைக்கு ஆதி விடையருளி மும்மூர்த்தியெல்லாம் ஒருமூர்த்திதானாகி அம்மூர்த்தியாகி ஆதிவைகுண்டமென்று வருவேன் கயிலை மாதரையும் மணமுடித்து தருணம் வரும்போது தான்வருவேனிவ்விடத்தில் என்று உரைத்தார் எம்பெருமாள் பொற்சிலைக்கு அன்று பொற்சிலையும் ஆதியைப்பார்த்து சொல்லும் அதுவரையும் நான்தான் அவனிதனிலிருந்தால் எதுநீசன் வந்து என்றனையும் பார்ப்பானே காளியுமென்னோடு கலந்து இருப்பாளே ஆழியடைத்த அச்சுதரே சொல்லுமென்று என்று சிலையும் எம்பெருமாளோடுரைக்க அன்று சிலைக்கு அருளுவாரச்சுதரும் கலிநீசன் வந்தால் கண்காணாதே போவான் மலையாதேயென்று வாக்குமிகக்கொடுத்து இன்றுமுதல் யானிருக்கும் இடங்களிலே சாதியெல்லாம் ஒன்றுபோலென்னிடத்தில் ஒத்துவரலாமென்று சொல்லித் திருச்சம்பதி சென்றிடவே தானடக்க பல்லுயிரும் வந்து பணிந்தது கேளன்போரே திருச்சம்பதியதிலே சென்றவர் தானிருக்க பொருச்சமது பார்த்தான் புகழுமொரு நம்பூரி அப்போது சாஸ்திரத்தில் அவனிபல சாதியெல்லாம் இப்போது சும்மா இங்குவரலாமெனவே அன்றந்த சாஸ்திரத்தில் அதுகண்டுமல்லாமல் நன்றந்தச் சாணார்கள் நல்லதேருண்டுபண்ணி தொட்டுக்கொடுத்துத் தேர்நடத்த வேணுமென்றும் மட்டும் வெகுதானம் வலங்கையுயர் கொண்டோர்க்கு கொடுக்கவேணுமென்று கூறினார் சாஸ்திரத்தை வெடுக்காக அந்த விபரிப்பெல்லாம் நடத்தி வாரிக்கரையாண்டியென வாய்த்த நாமம்விளங்க நேரியர்கள் சூழ நெடியோனங்கேயிருந்தார் திருச்செந்தூர் தன்னில் திருமாலங்கேயிருக்க விருச்சமுள்ள நீசன் வேசைநசுராணியவன் வையங்களெல்லாம் வரம்பழித்து மாநீசன் நெய்யதியச் சான்றோர்கள் நெறியெல்லாங்குலைத்து பேரழித்துத்தர்மம் பெருமையெல்லாமழித்தான் மார்வரையே கூடும் மைப்புரசு சஞ்சுவம்போல் தானமழித்துச் சான்றோரின் கட்டழித்து ஈனகுலச்சாதிகட்கு ஈடாக்கித் தான்கொடுத்து பள்பறைய நீசனுக்குப் பவளத்தார் தான்கொடுத்து கள்பறைய சாதிகட்குக் காலமிகக் கொடுத்து சாதி வரம்பு தானழித்து மாநீசன் மூதி முன்னீசன் மும்முடியுந்தவிர்த்து நவ்வா முடியெனவே நாடிவன் நாடாகவேதான் எவ்வோரறிய இவன் தேசந்தானாக்கி ஆளாக முன்னீசனையும் அவனை நாடாளவைத்து பாழாக நீசன் பழையசட்டமுமாற்றி நீசன் நவ்வாவின் நினைவுபோல் சட்டமிட்டு தேசமெல்லாம் நவ்வா செய்தானே சட்டமது மானம் வரம்பு மகிமை கெட்டுச் சான்றோர்கள் ஈன மடைந்து இருக்கின்ற வேளையிலே தேவர்களெல்லாம் திருச்செந்தூர் சென்றேகி மூவரொருமித்தனுக்கு முறையிட்டாரம்மானை ஆதி முதற்பொருளே அய்யா நாராயணரே சோதியேயெங்கள் துயரமெல்லாந்தீருமையா இத்தனை நாளும் இருந்தோமொருமானுவமாய் கொற்றவரே நாங்களினிக் குடியிருக்கப் போகாது சாதிக்கட்டையெல்லாம் தலையழித்து மாநீசன் மேதினிகளெல்லாம் மேவினானையாவே தானமழிந்தாச்சே தம்பியர்கள் சான்றோரின் மானமழிந்தாச்சே வரம்பெல்லாங்கெட்டாச்சே பூப்பியமுங்குலைத்துப் புரசியோடொப்பமிட்டு காப்பிலியனேதுவினால் கட்டழிந்தார் சான்றோர்கள் இத்தனை நாளும் யாங்கள் முறையிட்டதுபோல் புத்தியில் மட்டும் வைத்தால் பொறுக்க இனிக்கூடாதே தம்பி சான்றோர்கள் சங்கடத்தைக் கேளாமல் சம்பி முகம்வாடித் தலை கவிழ்ந்திருப்பதென்ன மக்களுட துயரம் மனதிரங்கிப்பாராமல் பக்கமாய் நீரும் பாராதிருப்பதென்ன சான்றோர் படுந்துயரம் தானிரங்கிப்பாராமல் ஆண்டோரே நீரும் அயர்ந்தேயிருப்பதென்ன இதெல்லாமெங்களைநீர் ஏற்றசான்றோர் பிறப்பாய் முதலே சான்றோருள் முடிந்துவைத்த கண்ணியினால் பாவியந்தநீசன் படுத்துந்துயரமெல்லாம் தாவிக் கயிலை சத்தி சிவன்வரைக்கும் பொறுக்கமிகக் கூடலையே புண்ணிய அய்யாவே மறுக்கமதைப்பாரும் மனதிரங்கி யெங்களுக்கு உகத்துக்குகங்கள் ஊழியங்கள் செய்ததெல்லாம் அகற்றியருள் தந்த அச்சுதரும் நீரல்லவோ மக்களாயெங்களையும் வலங்கைவுய்யோர் தாமாக ஒக்குறவு கெட்டோன் உலகில் படைத்திருந்தால் இத்தனை பாடும் எங்களுக்கென்றோதான் புத்திரராயெங்களையும் பூமிதனில் பெற்றுவைத்து நாங்கள் படும்பாடு நாரணரே கண்டிலையோ தாங்களுக்கு நெஞ்சம் சற்றுமிரங்கலையோ இப்படியே தேவர் எல்லோருமுறையமிட அப்படியே முறையமிட்டு அவரங்கே நிற்கையிலே நல்ல உமைதிருவும் நன்றாயெழுந்தருளி வல்ல பொருளான வாய்த்த நாராயணரின் அடியிலவள் வீழ்ந்து அழுது கரைந்தேதுரைப்பாள் முடியுமடியில்லா முதலே முதற்பொருளே அரிஹரிநாராயணரே அண்ணரே அச்சுதரே ஹரிஹரிநா ராயணரே கண்ணரே கார்வண்ணரே இலச்சைகெட்ட பாவி ஏமாளிக் கலியதினால் அலச்சல் செய்தெங்களையும் அகற்றிவைத்துப்போனீரோ பாவிக்கலியனுட பழிசாபச்சூட்சியினால் பூவில் மண்டூகம் பொசித்துதே காரணரே கலியனுட ஏதுவினால் கபாலியும் மைத்துனரும் சலிவாகி மேனி சடலம்மிகத்திமிர்த்து இருள்மூடிக் கண்கவிழ்ந்து இருக்கிறாரீசுரரும் உருவு சுவடில்லை உம்முடைய மைத்துனரும் நின்னயமில்லாக்கலியன் நீசன் பிறந்ததினால் என்னோடே பேச்சு இல்லையும் மைத்துனரும் வானுறவு கெட்ட மாநீசன்வந்த நாள்முதலாய் நானும் பரமேசுரரும் நலநஷ்டமுந்தெரியோம் பேசிப்பழக்கமிட்டுப் பெருத்தநாளுண்டுமண்ணே தோசிக்கலியனுட சூட்சியினால் நாங்கள்படும் பாட்டைவந்து பாராமல் பரிகாசம் பார்ப்பதென்ன நாட்டைக்கெடுத்தானே நன்றிகெட்ட மாநீசன் அல்லாமல் நம்முடைய அருமைச்சான்றோர்கள்படும் பொல்லாங்கையெல்லாம் போய்ப்பார்க்க எழுந்தருளும் வரமீறியக்கலியன் மாய்கையினேதுவினால் பிரமன் பிறப்புப் பிசகித்தலைமாறி முண்டம்போல் பிறப்பு முகங்கண்ணில்லாப்பிறவி பிண்டப்பிறவி பேருறுப்பில்லாப் பிறவி தலையுடம்பில்லாத சடலப்பிறவியைப்போல் நிலைதவறி வேதா நினைவுதடுமாறினனே சீவன் கொடுக்கும் சிவனுக்கிருநினைவாய் பாவக்குணவுயிராய்ப் பகர்ந்தார் சிவனாரும் படியளக்க நீரும் பண்புற்றிருக்காமல் குடிகேடுமாச்சே குடிக்கக் கிடையாமல் இத்தனையுங்கலியன் ஏதுவால் வம்பாச்சே அத்தனையும் நீர்தான் அறியாதவர் போலே எங்கள்மேல் பகைபோல் இருப்பதென்ன அச்சுதரே சங்கடங்களெல்லாம் தான்சொல்லக் கூடாது கயிலை சிவனார் காணாமலும்மையுந்தான் அகிலமதைப்பாராமல் அயர்ந்திருக்கிறாரெனவே ஆனதாலென்னுடைய அண்ணரே அங்கேகி மானமுள்ள புத்தியும் மைத்துனர்க்குசொல்வாரும் என்றுமையாளிப்படியே இன்பமாய்ச்சொல்லிடவே அன்று பெருமாள் அவள்முகம் பார்த்துரைப்பார் சிவனாரும் நீயும் தேசமதிலில்லாட்டால் எவனுக்கும் மலைச்சல் இல்லையே ராச்சியத்தில் உங்களால் யானும் உகத்துக்குகங்கிடந்து சங்கடங்களுற்றுத் தவிக்கத் தலைவிதிதான் நீங்களில்லையானால் எனக்கும் அலைச்சலில்லை ஏனுங்களோடே இப்பாடு யான்படத்தான் அயோத்தியா பட்டணத்தில் அரசுண்டுமென்றனக்கு கையேற்று வந்த கன்னி திருவுமுண்டு ஏனிந்தப்பாடு யான்படக்காரணந்தான் மானழுதாற் போலே மறுகுவாள் லட்சுமியும் கைப்பிடித்த நாள்முதலாய் கலந்துவிளையாடறியேன் மெய்ப்பிடித்தமான மெல்லியருமங்கிருக்க இரப்பனைப்போல்லோகம் எல்லாந்திரிந்தலைய பரப்பிரமனம்மைப் படைத்ததுமிதற்கோவென எல்லையில்லாப்பாடு யான்பட்டதுபோதும்என நல்லகுலச்சான்றோரை நான்பெற்று வைத்தேனே வைத்ததெல்லோரும் மனதறியப்பார்த்திருக்க பொய்த்தலைவனீசனை பிறவிசெய்ய ஞாயமுண்டோ நீசனுட கையதிலே நின்மக்கள் தங்களையும் பாசக்கயிறிட்டுப் பந்தடிக்கச்செய்தாரே தொட்டாலும் நீசம் தொடருமதைக் கண்டாலும் வெட்டா வெளியாய் விரட்டிப்பிடிக்குமல்லோ காதிலதைக் கேட்டாலும் கர்மம்வந்து சிக்குமல்லோ ஆரிந்த நீசனையும் அழிக்கவகை யாரறிவார் மாய்கை நினைவொழிய மறுநினைவு வாராதே மோசக்கலியனையும் முடிக்கவகை யாரறிவார் வாளாயுதத்தாலே மாளானே மாகலியன் தூளாம் பிறவி சொல்லொணா வல்லமைதான் முப்பிறவியாறும் முடித்த வலிமையெல்லாம் இப்பிறவி தன்னில் எட்டிலொன்று பாரமில்லை உகத்துக்குகம் பிறந்து ஓடித்திரிந் தவனென்றே அகத்துக்கொஞ்சம் வையாமல் அவர்மூப்பாய்ச்செய்தாரே ஆனதாலின்னமினி அங்குவர வேணுமோகாண் தானம்வைத்துப் பாராமல் சங்கையழித்தாரே எங்கேயானாலும் இருந்திடுவேனானிதற்கு சங்கையுள்ள சாணார்க்கு தங்குமிடம் வேறிலையே தாய்தந்தையில்லாமல் தயங்குகின்ற பிள்ளையைப்போல் மாயக் கலியனினால் வாடுவரே சான்றோர்கள் தகப்பனில்லாப்பிள்ளை சாணார்களென்றுசொல்லி அகப்படுத்திச் சான்றோரை அடிப்பானே மாநீசன் தாயுந்தவமிருந்து சடைப்பாளெனைக்காணாமல் ஆயுங்கலை தெரிந்த ஆயிளையும் வாடுவளே இப்படியே ஞாயம் இருப்பதாலென்றனக்கு அப்படியே வேறு வழியல்லவேயானதினால் எங்கேயினிப்போவேன் என்றெண்ணுது என்மனது உங்களுட ஊருக்கு ஒண்ணுதலே போநீயென கோபத்தால் தங்கையுடன் கூறினாரித்தனையும் வேகத்தாலம்மை விழியிட்டழுதனளே

திருமால் கயிலை ஏகல் கயிலைக்கு நீர்தான் கால்வைக்காதே இருந்தால் அகிலமதொன்றாய் அழியுமொருநொடியில் நல்லகுலச் சான்றோர் நாடுங்கலியனினால் தொல்லைமிகப்பட்டுத் துயருற்று வாடுவரே நானுமென்றன் ஈசுரரும் நல்ல கயிலையிலே மானுங்கலைபோல் மறுகியிருப்போமே கயிலை முனிதேவர் கட்டழிந்து வாடுவரே மயிலனைய ஈசர்சொல்லை மறந்துமிருந்தாரே கன்னிப்பெண்ணார்களென் கற்பனையைத் தான்மறந்து உன்னுதலாய்ப் பெண்கள் ஒருவர்க்கோர் மூப்பாச்சே ஐயோ கயிலை அங்கே வரம்பழிந்து பையரவம் பூணும் பரமன் மௌனமாச்சே அண்ணரே கோவே அடியாள் தனக்கிரங்கி எண்ணமில்லாக் கயிலைக்கு எழுந்தருள வேணுமையா என்று அறம்வளர்த்தாள் இறங்கியண்ணர் கால்தனையும் சென்று பிடித்துச் செய்யத்தாள் வணங்க மனதிரங்கி எம்பெருமாள் மார்போடு தங்கையரை தனதில் பிரியமுற்றுத் தங்கையரோடேதுரைப்பார் உன்னோடு பிறந்த ஊழிவிதியானதினால் நன்னாடோடேவாழ நமக்குவிதியில்லையே உன்றனக்காகவல்லோ ஊருக்கூரே திரிந்து சந்தோசமற்று சடைக்க விதியாச்சே என்று பெருமாள் ஏற்ற பிறப்போடு இன்று கயிலைக்கு எழுந்தருள வேணுமென்று தேவர் முனிவரோடு திருக்கன்னிமாரோடு மூவருட நடுவன் முகமலர்ந் தேகூடி நடக்கவேணுமெனவே நளினமுற்றெம்பெருமாள் கடற்கரையில் வந்து காலமேதெனப்பார்த்தார் இந்தச் சொரூபமதாய் இங்குவிட்டெழுந்தருளிச் சிந்தர் குடியிருக்கும் சீமையிலேகுமுன்னே கலிமூழ்கி நாமள் கரையேறப்போறதில்லை பொலிவாக வேசம் புதுப்பிக்க வேணுமென்று என்ன சொரூபம் எடுப்போம் நாமென்றுசொல்லி அன்னப்பெருமாள் ஆலோசனையாகி மேலெல்லாம் வெண்ணீறை மிகஅணிந்தெம்பெருமாள் பாலொக்கும் நெஞ்சம் பரமனொருநினைவாய் மாமோக ஆசை மயக்க வெறியறுத்து தாமோதரனார் சடைக்கோலமே புனைந்து காலில் சிவநினைவை கழராமல் தானிறைத்து மார்பிலைந்து பூமணியை வகிர்ந்தார வேடமிட்டுக் கண்ணில் மனோன்மணியை கண்ணாடியாய்ப் பதித்து எண்ணரிய தங்கை இன்பமுடனேவளர்த்த முப்பத்திரண்டறத்தை உடலெல்லாமே பொதிந்து செப்பமுடன் கந்தை செய்யவெண்கலையணிந்து தண்டரளமானத் தடியொன்று கைப்பிடித்து அண்டர்களும் போற்றி அரகரா என்றுவர தேவர்களுங் கூடிச் சிவசிவா சிவனேயென்று தாவமுள்ள தேவரெல்லாம் தாவமிடேத்திவர அம்மை உமையாளும் அவளுஞ்சடைவிரித்து செம்மையுள்ள மாதும் சிவசிவா என்றேத்தி எல்லோருடனே எம்பெருமாள் தானடந்து வல்லோர் புகழும் வாழ்கயிலை வந்தனராம் கயிலைதனில் வரவே காரிருளுந்தான்மறைய மயிலையொத்த ஈசர் மாயவரைக்கண்டாவிச் சந்ததியைக் கண்டு தாயாவல் கொண்டதுபோல் வந்தந்த ஈசுரரும் மார்போடுறவணைத்து இத்தனை நாளும் யானும்மைக்காணாமல் புத்திரனுந்தாயைப் போகவிட்டாற்போலிருந்தேன் மாரி காணாத வாய்த்த பயிர்போலும் ஏரி காணாத ஏற்றநீர் போலிருந்தேன் இனம்பிரிந்த மான்போல் இருந்தேனுமைத்தேடி துணையில்லார் போலே துணையற்று நானிருந்தேன் என்று மகாமாலை எடுத்தாவி ஈசுரரும் சென்றாவிக்கொண்டு சிணுங்கியழுதுசொல்வார் இணையும் புறாவதுபோல் இருந்தோமே மைத்துனரே துணையுமெனைமறந்து தூரநீர் போனதென்ன என்னைவிட்டு நீரும் எழுந்தருளுமன்றுமுதல் வன்ன உமையாளின் வடிவை மிகஅறியேன் துணையிழந்த அன்றிலைப்போல் தினமும் உமைத்தேடி கணவனில்லாப் பெண்போல் கலங்கினேன் காரணரே உயிர்த்தோழமைபோல் உறவுகொண்ட நாரணரே மெய்த்தோழமையை விட்டுப் பிரிந்ததுபோல் பிரிந்து மலைந்தேன் பச்சை நிறமாலே சரிந்துபள்ளி கொண்டு சதாவருடமாச்சுதல்லலோ இத்தனைநாளும் என்னைமிகப்பாராமல் மத்திப மந்திரியே மறந்தென்னை வைத்ததென்ன கயிலைக்குமென்றனக்கும் கட்டான மந்திரிதான் அகிலமீரேழ்க்கும் அடக்கமுள்ள மந்திரிதான் நீயல்லாமல் வேறுளதோ நெடிய திருமாலே தானீதமான சர்வபர நாரணரே இந்த விதமாய் இகபர விதத்தோடும் உந்தனைப்பெறவே உயர்ந்த தவஞ்செய்தனல்லோ அப்படியே நீரும் ஆதிநாராயணராய் முப்படியே வந்து உருவெடுத்த மாயவரே கயிலைத் தேவாதிகளும் கண்ணான மாதிருவும் ஒயிலான மாமறையோர் உற்ற இருஷிகளும் கின்னரர்கள் வேத கிம்புருடர் கேதாரர் மன்னர் முனிவர்களும் மறையும்பல சாஸ்திரமும் வேதாவும் நந்தி விதரூபச்சித்தர்களும் நாதாந்த வேத நல்ல ரிஷிமாரும் இப்படியே ஓர்வசனம் அவர்களோடே கேட்டு கல்லை வலித்திழுத்துக் காலில்மிகப்போட்டவர்போல் சொல்லை மிகக்கேட்டுச் சுமந்தேன் மிகுபாரம் எல்லா விதப்பாடும் யான்பட்டதுபோதும் வல்லவனே உன்னுடைய வாக்கைக்கேளாதபடி செய்த விதத்தாலே செப்புதற்கு நாணமுண்டு மெய்யிசையு மாலே மெத்தகோபிக்கரிது எல்லாமுமது இச்சையது போல்நடத்தும் சொல்லொன்றுக்குள்ளே சூட்டி நீராளுமென்று மாலுக்கு மனது மகிழ்ச்சை வரும்படிக்கு பாலுக்கு மோரான் பகர்ந்தார் காணம்மானை அப்போது அச்சுதரும் அவரேது சொல்லலுற்றார் எப்போதும் உமக்கு இப்படியே உள்ளமுறை நானொருவன் வேடனைப்போல் நாட்டில் திரிந்தலைய ஏனோகாண் உங்களுக்கு இல்லையே சங்கடங்கள் முன்னுதித்தப் பாவி முழுநீசக் குறோணிமுதல் பின்னுந்துரியோதனனாய் பிறந்தவன் மாளும்வரை உகமாறானதிலும் உதித்தக் குறோணியுயிரை பகையாக்கிக் கொல்ல பட்டபாடெத்தனைகாண் யான்மிகப் பட்டபாடு ஆரும் படவரிது தான்பட்டதெல்லாம் தான்போதுமென்றுசொல்லி இனிமேல் பகைதான் இல்லாமல் செய்வதற்கு மனுவாய்ப்பிறக்க மக்களேழுபேரை சேர்த்தெடுத்து விந்தில் சேர்ந்துசெங்காவுதன்னில் சார்ந்து விளையாடி தான்பெற்ற பாலருக்கு எல்லோருங்கூடி ஏற்றதிரு நாமமிட்டு வல்லோராய்ப் பூமிதனில் வாழுமென்று வைத்தோமே அலுவலொழிந்தது அலைச்சல்மிகஇல்லையென்று மெலிவெல்லாந்தீர்ந்து மேவிஸ்ரீரங்கமதில் இனிதிருக்கும் போது என்னை நினையாமல் மனிதனை பூமியிலே வகுத்ததென்ன சொல்லுமென்றார் ஆறு யுகமதிலும் அதிகபலக்காரர்களாய் வீறுடனே பிறவி விதவிதமாய்ச்செய்தீரே முன்பிறந்த குறோணி முழுங்கினான் கயிலைமுதல் வன்பிறவிச் சூரனை வதைக்கவேறாருமுண்டோ இரண்டாம் யுகத்தில் நன்றிகெட்ட மாபாவி குண்டோமசாலியனாய் குதித்தான் மகாபாவி வானலோகமுழுங்க வாய்விட்டலறினதால் கோனகிரி வேந்தே கொன்றது வேறாருமுண்டோ மூன்றாம் யுகத்தில் முளைத்தானேயப்பாவி வான்றான மல்லோசி வாகனென்ற மாபாவி தேவரையுந்தெய்வ ஸ்திரிகளையும் மூவரையும் ஏவலது கொண்டு இடுக்கமது செய்தனனே முறையமது ஆற்றாமல் ஓடிப்போவென்றுரைத்தீர் சிறைப்பிடித்தப்பாவிகளைச் செயித்தது வேறாருமுண்டோ நாலாம் யுகத்தில் நன்றிகெட்ட சூரபற்பன் ஆலா விருச்சம் அதுபோல் கிளையுடனே நாட்டமுடனே நாடும் படையோடு கோட்டையதிட்டுக் கொடியமாபாவியனாய் கேட்ட வரங்களெல்லாம் கெட்டியாய் நீர்கொடுத்து தேட்டமுடன் கயிலை சீமையதுவுங்கொடுத்து இருக்க இடமற்று எழுந்திருந்து நீரோடி உருக்கமுடன் நானிருந்த உவரியிலேகி வந்தீர் தேவர்களைப் பாவி செய்த இடுக்கமதால் மூவர்முதலும்மிடத்தில் முறையிட்ட ஏதுவினால் என்னை வருத்தி ஏற்ற மொழிகள்சொல்லி சென்றவனைக் கொல்லுமென்று செய்திசொல்லி விட்டீரே விட்டவுடனவனோடே வெகுநாளாயுத்தமிட்டு பட்டபாடெல்லாம் பகர எளிதாமோ யுத்தமிட்டவனை ஒக்கத் தரம் அறுத்து செயித்தேன் பின்னவனும் செத்த யுகமதிலே இரணிய சூரனென்று எனக்கெதிரியாய்ப்பிறந்து தரணியிலவன்பேரைச் சாற்றி வழங்கலுற்றான் பின்னுமவன்றன்னை நரசிம்மயாய் பிறந்து கொன்று தரமறுத்தேன் குதித்ததுகாண் மற்றயுகம் பத்துத்தலையோடு பாவியவன் பிறந்து உற்றுஅவன் கேட்டவரம் ஒக்கநீர் தான்கொடுத்து அருகில்மிக வாழ்ந்திருந்த ஆயிளையை நீர்கொடுத்து குருவிருந்த சோதி குன்றையும் நீர்கொடுத்துப் பாவியவன் மூன்று பாரடக்கி ஆண்டனனே தேவியும் நானும் தேசமதிலே பிறந்து அவனையழித்து அந்தயுகமுங்கருக்கி சிவனேயுன் பாரிதனைச் சிறைமீட்டித் தந்ததாரு சதியாந் துரியோதனனாய்த் தான்திரும்பவேபிறந்து மதியாமலென்றனையும் மறையுமிக நம்பாமல் அன்போரையெல்லாம் அகப்படுத்தி மாபாவி வம்பான கள்ளன் மாய்மாலஞ்செய்ததினால் கொன்றவகை சொல்லக் கூடுமோ காரணரே என்னென்ன பாடு யான்பட்ட மாய்மாலம் கம்சனென்ற பாவிக்குக் கடியவரம் நீர்கொடுத்து வஞ்சகன்தான் செய்த மாய்மாலம் மெத்தவுண்டு அவனை வதைக்குமுன்னே அடியெத்தனைகளுண்டு சிவனேயுமக்குச் சூடெண்ணஞ் சற்றுமில்லை இருப்பிலிருந்துகொண்டு எனக்கலைச்சல் செய்வதுண்டு குருபரனே நீரும் வரம் கொடுத்தீர் முப்புராதிகட்கு முப்புராதி செய்த முடுக்கமதுக்காற்றாமல் அப்புரத்தோர் தம்மை அழிக்க ஒரு கோலமதாய் எண்ணரிய பீற்றல் ஏற்ற கந்தை துணியுடுத்தி மண்ணிலே அவர்கள் வலுவை மிகக்குறைக்க என்னென்ன பாடு எல்லாம் நான் பட்டதனால் பொன்னான ஈசுரரே பூரித்து எரித்தீரே பொதுவாய் இருந்த புண்ணியரே இப்போது எதிர்ப்பவரார் சொல்லும் இந்தமாய் மாலமொடு கலியென்ற சொல்லு காதில் மிகக்கேட்டதுண்டால் சலிவாகி மேனி சடலமிருளாகுமல்லோ மெய்ப்பேச வேணுமென்று மேவியிருந்தாலும் பொய்ப்பேச புத்திப் பொலியும் பொடுபொடென வாளாயுதத்தாலே வாய்த்தகணையம்பாலே பாழாக்க வென்றாலும் படாதே மாகலிதான் மற்றப்பிறவியாக வகுத்தாலும் இக்கலியை இத்தனையெண்ணம் இல்லையே யென்றனக்கு அய்யோயென் மக்கள் அதற்குள்ளாகப்பட்டாரே மெய்யோயினிமக்கள் விளங்குவதெக்காலம் தீண்டிப்பிடித்தானே செத்தகலி மாய்மாலன் வீண்டிடறு தீர்ந்து மக்கள் விளங்குவது எக்காலம் ஆறு பிறவி அழித்ததுவுமென்றனக்கு நீறுபோலெண்ணுதுகாண் நிற்கலியைப்பார்க்கையிலே என்ன விதத்தால் இவனையழிப்போமென்று வன்னச்சிவனாரே மனதுவேறேண்ணுதுகாண் நாடாச்சு தேசம் நகரியுங்கள் பாடாச்சு வீடாச்சு குண்டம் மேதினிகளங்காச்சு தேச வழிபோறேன் செல்லாது இங்கேதான் மாய்கை வலையைவிட்டு மறையவே போறேன்காண் பலபேர்களாட்டும் பாம்புபோலென்னையுந்தான் அலைவிதமாயென்னை அழைத்ததென்ன நீர்சொல்லும் அப்போது ஈசுரனார் அச்சுதரைத்தான் பார்த்து முற்பிறவி துயரம் எல்லாம் வரும்படிக்கு பண்டுவொரு சாபம் பகர்ந்தேன்நான் மைத்துனரே அன்று பகர்ந்த சாபம் அதுகேட்டுக்கொண்டருளும் குறோணியொருசூரக் கொடும்பாவி தான்பிறந்து சுறோணித மாயவரே தொல்புவியெல்லாமுழுங்கி என்னோடு ஈஸ்வரியாள் எல்லோரையும் விழுங்க நின்றானே மாயவரே நீயொருவன் தப்பிமிக என்னை நினைத்துத்தவம் இருந்தாய்நீ கீழுலகில் தென்னவனே நீயும் செய்த தவமதினால் எழுந்தருளி நானும் என்னவரம் வேணுமென்றேன் குளிர்ந்த குணமான கோவேந்தே நீமாறி கேட்டாயே சூரனுடல் கீறித்துண்டாறாக்கி தாட்டாண்மையாகத் தரணிதனில் விட்டெறிய வரந்தாருமென்று வாகாகக் கேட்டவுடன் தரந்தரமே துண்டம் தரணிக்கெல்லாம்பிறந்து மாற்றானாயுனக்கு வருமாறு யுகம்வரைக்கும் சீற்றத்துடனே செடமெடுக்கு மென்றுசொல்லி தந்த வரத்தின் தன்மையாலிந்தமுறை எந்தன்மேல் கோபம் ஏன்சொல்லப்போறீர்காண் என்றந்த ஈசர் இப்படியே சொன்னவுடன் அன்று மகாமால் ஆகங்களிகூர்ந்து ஆனாலும் நான்கேட்ட அவ்வரங்களானாலும் மானாபரஞாய வரம்பழித்துப்போட்டீரே இதற்குமுன் னேதாலும் என்னையறியாதவண்ணம் ஒதுக்கிலிருந்தோர்வளமை உங்களால் செய்ததுண்டோ மும்முறைபோலென்னை உவந்துக்கெணியாமல் அம்முறையை நீரும் அழித்ததேன் ஈசுரரே என்னைக்கெணியாமல் இக்கலியைச்செய்ததினால் நன்னமிர்த ஈசுரரே நம்மாலே கூடாது அழிப்பதுவுங் கலியை அங்கல்லால் கூடாது விழிப்பதென்ன நம்மாலே விசாரமிடக் கூடாது நம்மாலேயொன்றும் நடவாது ஈசுரரே சும்மாவென்னோடு சோலிபண்ணவேண்டாங்காண் உகத்துக்குகங்கள் ஓடித்திரிந்தலைந்து மகத்துவமாய்ச் சந்து சதைமுறிந்து நோகுதையா தூங்கி விழியாமல் திமிர்ப்போல் சரீரமது ஏங்கிமிக வாடுதையா என்திருவைக்காணாமல் பாவிகள் பண்ணிவிட்ட பாட்டைமிக எண்ணுகையில் ஆவி மிகவாடி அங்கமெல்லாஞ்சோருதையா அந்தமுழுப்பாவிகளில் அதிகமுழுப்பாவியிவன் சந்ததிக்குத் தாய்தகப்பன் தாழ்ந்து நின்றேவல் செய்தால் கொடியவனோ பாவி கொஞ்சமிஞ்சமோயிவன்தான் முடியுமோ பாவி யுத்தமிடச்சென்றதுண்டால் தன்மமறியாத சண்டித்தடி மூடர்கையில் நம்மைப்பிடித்தங்கே நகட்டிவிட வேண்டாங்காண் பட்ட அடிவூறப் படுத்திருக்கப்போறேனான் ஒட்டொழிய என்னை ஒடுக்கிவிட வேண்டாங்காண் என்றாதி நாராயணர் தானுமிப்படியே அன்றாதி நாதன் அவரோடிதுவுரைக்கச் சிவனுமிகவயர்ந்து செப்புவார் மாயருடன் புவனமதற்குடைய பொன்னேயென்மாதவமே இப்படித்தான் மைத்துனரே ஈதுரைத்தீரானாக்கால் எப்படித்தான் நானும் ஏகமதையாளுவது சுவரல்லோ மைத்துனரே சித்திரம் நாங்களல்லோ கவரல்லோ நாங்கள் கயமல்லோ மைத்துனரே மாயனல்லோ எங்களுக்கு மலையல்லோ மைத்துனரே ஆயனல்லோ எங்களுக்கு அணையல்லோ மைத்துனரே கொப்பல்லோ நாங்கள் குருவல்லோ மைத்துனரே செப்பல்லோ மைத்துனரே சிமிள்கூடு நாங்களெல்லாம் நீர்தானுமிப்படியே நெகிழ்ந்தமொழி சொன்னதுண்டால் ஆர்தானுமெங்களுக்கு அணைவுமொழி சொல்லுவது மூடிப்படிக் குலுங்க முயங்காதோ கொப்பதெல்லாம் கூடிப்படிக் குலுங்க குலையாதோ சீவனது தேவர்முனி சாஸ்திரிகள் சிறுபுத்தியைக்கேட்டு மூவருன்னைப் பாராமல் முனிந்துசெய்த ஞாயமெல்லாம் பொறுத்தருளுமென்னுடைய புண்ணிய மைத்துனரே மறுத்துரைத்தால் நானுமினி வகுத்துரைக்க ஞாயமில்லை எல்லாம் பொறுத்து இனியுமக்குத் தேர்ந்தபடி சொல்லொன்றுக்குள்ளே செலுத்தியரசாளுமென்று ஈசுரனார் சொல்ல எம்பெருமாளேதுசொல்வார் வீசுபுகழீசுரரே விரித்துரைக்க நீர்கேளும் என்னையுமோ கீழுலகில் இறந்துகிடந்தாரெனவே சொன்னவரையெல்லாம் சுறுக்காகத் தானழையும் என்றந்த மாயவனார் இப்படியே சொன்னவுடன் அன்றந்த ஈசுரனார் அழைத்தாரவர்களையும் உடனேதான் தேவர்முனி ஒக்கப்பயமடைந்து தடதடென ஓடிவந்து தாழ்ந்து நமஸ்காரமிட்டார் அப்போது மாயவனார் அவர்கள் தமைப்பார்த்து செப்புகிறாரையா திருக்கண் பொறிபறக்கக் கண்கள் சிவந்து கருமேனி தான்விறைத்து விண்களதிர வெடுவெடெனக் கோபமுற்றுத் தேவர் திணுக்கிடவே தெய்வமுனி தான்பதற மூவர் திணுக்கிடவே உரைக்கிறாரெம்பெருமாள் மண்திண்ணெனவே மலைகள் பொடிபடவே திண்திண்ணெனவே தேவர் மிகப்பதற சிவனுங்கிடுகிடெனச் சிவனுமையும்பதற நமனும் பதற நாராயணருரைப்பார் தேவரே வானவரே தெய்வமுனி சாஸ்திரியே மூவரே நானும் ஒழித்ததெங்கே சொல்லுமென்றார் ஆளுக்கொரு மூப்பாய் அரியிங்கேயில்லையென்று கோளுரைத்தீரீசர் குருமுன்னே நீங்களெல்லாம் சாத்திரத்தைப் பார்த்துச் சரியாகச்சொன்னதிட்ட சூத்திரத்தையெலாம் சொல்லுமென்றாரெம்பெருமாள் சொல்ல நாவில்லாமல் சோர்ந்து மிகத்தேவரெல்லாம் பல்வாய் சுண்டொல்கிப் பதைபதைத்து நின்றனரே கண்தலை கவிழ்ந்து கால்பேர்த்து வைக்காமல் விண்கவிழ்ந்த யோகமுனி வெட்கி நின்றாரன்போரே நின்ற நிலையறிந்து நெடியபரமேசுரரும் அன்றெந்தனோடே அறம்பாடிச்சொன்னதெல்லாம் இன்றெங்கே போச்சுதுகாண் இரண்டும்மிகச்சொல்லாமல் நின்றிங்கே நீங்கள் நினைவயர்ந்து நிற்பதென்ன பேச்சுப்பேசுங்கிளிக்குப் பின்பூனை வந்தாக்கால் கீச்சுக்கீச்சென்றுகிளி கீழ்ப்பதுங்க வேண்டியதேன் இப்படியே ஈசர் எடுத்துரைக்கத்தேவரெல்லாம் எப்படிநாம் சொல்வோம் என்றே திகைக்கலுற்றார்

வேதா சிவன் திருமால் ஐக்கியம் எல்லாமறிந்து எடுத்துரைப்பாரெம்பெருமாள் பொல்லாதார்க்கெல்லாம் பிறப்பொன்றிசைந்திருக்கு என்றுதிருமாலுரைக்க எடுத்துரைப்பாரீசுரரும் மன்று தனையளந்த மாலேயென் மைத்துனரே இதற்குமுன் செய்த இழிவெல்லாம் நீர்பொறுத்து கதுக்காக உம்முடைய கருத்தின் படியாலே நடக்கும்படிச்சட்டமெல்லாம் நாரணர்க்குத் தந்தோம் அடக்குடக்கெல்லாம் ஆதிக்குத் தந்தோங்காண் இன்று முதலும்முடைய இச்சைபோலே நடத்தி என்றும் நடத்திக்கொள்ளும் என்றே விடைகொடுத்து சட்டமெல்லாமுமக்குத் தந்தோமினிநீர்தான் இட்டசட்ட மீறி இனியொருவர் செய்யோங்காண் உம்மை நினையாமல் உகக்கலியைச்செய்ததினால் நம்மையும் நீர்தான் நடத்தும் படிநடத்தும் என்றந்த ஈசுரரும் ஏற்ற உமையாளும் அன்றந்த வேதாவும் அமரர்முனி தேவர்களும் சத்தியமாகத் தானுரைத்தார் நாரணர்க்கு மத்திய நாதன் மனமகிழ்ந்தேது சொல்வார் நல்லதுதானென்று நாட்டமுற்றெம்பெருமாள் வல்ல பரம ஈசுரரோடேவகிர்வார் கன்மம்போலொத்தக் கலிப்பிறப்பானதினால் நம்மள் முதல்மாறிப் பிறக்கநாளாகுதுகாண் ஆனதாலீசுரரே அருளுகிறேன் நீர்கேளும் ஈனமுள்ள பாவி இயன்ற துரியோதனனைக் கொன்றேனவனைக் குருநாடைவர்க்கீந்து முன்னே மறையோன் மொழிந்த சாபத்தாலே தேவர்முதல் வானோர் தேவமுனி தான்வரையும் மூவருறையும் உற்ற தெய்வலோகமேழும் மேலோர்களெல்லாம் மேதினியிலென்றனக்குப் பூலோகந்தன்னில் பிள்ளையெனவேபிறக்க வேணுமென்று மாமுனிவன் விட்ட சாபத்தாலே தாணுவே நீரறியத் தாம்பிறந்தார் சாணாராய் ஏழுலோகமதிலும் ஏற்றமுள்ள வித்தெடுத்து கீழுலகில் பெற்றேன் கீர்த்தியுள்ள சாணாராய் பெற்றுவைத்து ஸ்ரீரங்கப் பூமியிலே போயிருந்தேன் மற்றுஞ்சில நாட்கழித்து வாழுந்தியதிதனில் அனந்தபுரம்நோக்கி யானேகும் வேளையிலே புனந்தனிலே நின்று புலம்பலுற்றார் தேவர்களும் தெய்வலோகத்திலுள்ள தேவதேவாதிகளும் வைகுண்ட லோகமதில் வாழுகின்ற தர்மிகளும் சிவலோகம் வாழும் சிட்டர்முதல் வானவரும் தவமான வேதாவின் தன்னுகத்தில் வாழ்பவரும் வடக்கு கயிலாசம் வந்திருந்தார் வாட்டமதாய் நடக்கும் வழியில் நானவரைக் கண்டேதான் தாது கரமணிந்த தானவரே தர்மிகளே ஏதுகாணீங்கள் இங்குவரக் காரணமேன் என்றவரோடே கேட்டேன் ஈசுரரே கேட்டருளும் அன்றவர்களென்னோடே அருளினதை நீர்கேளும் கலியன் பிறந்ததினால் கட்டழிந்து மானுபங்கள் சலிவாகி எங்களுட தானதவங்குன்றினதால் இனியிருந்தாலென்னபலன் என்றுமிக எண்ணமுற்று கனிந்துவுமைத்தேடிக் காணவந்தோமென்றுரைத்தார் அப்போதுவுங்களுக்கு ஆகவேண்டிய வளம் இப்போதே சொல்லும் என்றேகேட்டேன் தேவருடன் சொல்லுகிறாரந்தத் தேவர்கள் தாமீசுரரே நல்லதுதானிந்த நாட்டில்கலி வந்ததினால் கலிக்குமுன்னுள்ளதுவும் கலியில்மிகக் கண்டதுவும் அலிக்கியமானதினால் அக்கலிமாளும்போது சிவன்சக்தி முதலாய்ச் சீவனுள்ள செந்துகளும் தவமுனிவராகிடினும் தரணி புற்பூண்டுவரை மட்டை மருந்திலையும் மலைகடலும் வாசுகியும் திட்டமுடன் நாரணர்க்குச் சிந்தையொத்த பேர்களெல்லாம் மேனியழுக்கறுத்து மேன்மூடிருளறுத்து யோனிப் பிறப்பும் உற்ற லிங்கப்பிறப்பும் அவரவர்க்குள்ள அதிகப்பிறப்போடும் எவரெவரும் பூமியொன்றில் இனிப்பிறக்க வேணுமல்லோ ஆகும் பிறப்பும் ஆகுவதுமிந்நாளில் சாகும் பிறப்புத் தவறுவதுமிந்நாளில் அப்படியே நீசன் அவன்பிறந்தத் தோசமதால் எப்படியும் ரண்டிலொன்று ஆகுவது திட்டமுண்டே ஆனதாலெங்களுட அக்கமதிலிப்போது மானமாய்ச் சான்றோராய் வகிருமென்றாரீசுரரே கொஞ்சம் பொறுவுமென்று கூறிவந்தேன் முன்னமே இஞ்சொல் பார்க்கும்போது இவ்வுலகிலுள்ளோரை பிறவிசெய்ய ஞாயமுண்டு பிழைமொழி சொன்னதினால் திறவி முதற்பொருளே செய்தியென்ன சொல்லுமென்றார் அப்போது ஈசுரரும் அச்சுதரைத் தான்பார்த்து இப்போது மைத்துனரே யானென்ன சொல்வதுதான் நீர்நினைத்தது போலே நிச்சயித்துக் கொள்ளுமென்று பாரனைத்துங்காக்கும் பரமேசுரருரைத்தார் அப்போது பாரளந்த அய்யா நாராயணரும் முப்பொருளுமொன்றாய் ஒத்திருந்தேதுசொல்வார் தேவரையுந்தான்வருத்திச் செப்புவாரையாவும் பாவலரே நீரும் பார்த்துணர்ந்தோராமல் மாலிங்கே யில்லையென்று மாறாட்டஞ் சொன்னதற்கு சூலின் கருத்திரண்டு தொல்புவியிலே பிறக்கும் உங்களினமாக ஒருபிள்ளை பெற்றதுண்டு அங்குபோய்ச் சாணாராய் அதில்பிறக்கப்போவுமென்று சொல்லவே தேவரெல்லாம் சிரித்துமனங்கூடி நல்லதுகாண் நாரணரே நாங்கள்பிழைத்தோமெனவே பிறக்கவே போவோம் பிறந்தாலடியார்க்கு இறக்கவிதியாகுமல்லோ இழிகலியனேதுவினால் இறந்தால் பின்னுமந்த இனத்திலடியார் பிறக்க வரந்தாருமென்று வணங்கிநின்றாரையாவை அப்போது அய்யா அரிநமோ நாரணரும் செப்பரிய நல்லகுலத் தேவர்களுக்கேதுரைப்பார் மக்களே நீங்கள் வையகத்திலே பிறந்தால் வக்கலியனேதுவினால் மாயமுங்களைச் சூழ்ந்து என்பேரு மீசர் ஏற்றஉமையாள்பேரும் தன்பேருஞ் சொல்லாதே என்று தடுத்தடிப்பான் ஆனதால் சாவுவரும் ஆனாலுமுங்களுயிர் மானமது மாறாமல் மாறியவ்வினத்திலுறும் இப்படியேவுங்களைநான் இரட்சித்துக் காக்குமட்டும் எப்படியு முங்களுயிர் இதில்விட்டகலாதென்றார் நல்லதுகாணென்று நாட்டமுற்றுத் தேவரெல்லாம் வல்ல வகையான வாய்த்த சாணாரினத்தில் தேவருயிர்பார்த்துச் சென்றுதித்தார் தேவரெல்லாம் மூவருரை மாறாமல் மோகமுள்ள தேவரெல்லாம் போகும் பொழுதில் பொன்னுலகத்தேவர்தன்னில் தாவும்பெரியவொரு சம்பூரணத்தேவன் பரதேவதையான பார்மறலி தன்னுகத்தில் உரமான தேவியவள் உடையமன்னனை நீக்கி தெய்வச்சம்பூரணனும் சேர்ந்தவளோடே நடப்பாய் மாயவளை மாய்கையினால் மாறியவன் பேசினனே நான்பிறக்கப்போணுமென்றால் நன்னுதலையென்னோடு தான்பிறக்கச்சொல்லித் தாரம்போலாக்குவீரால் நான்பிறக்கப்போவேன் நாரணரேயல்லாது தான்பிறக்கப் போவதற்குச் சங்கடங்களுண்டுமையா என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பாரெம்பெருமாள் நன்றுநன்று தேவாநீ நாணமென்ன பேசுகிறாய் உன்பிறப்பு உயர்பிறப்பு ஓவியத்தின் தன்பிறப்பு பின்பிறப்பு ஏமன் பூமிப் பிறப்பல்லவோ அப்பிறவிக்கிப்பிறவி அடுக்குமோ தேவாநீ இப்பிறவி ஞாயம் ஏனுரைத்தாய் மாதேவா

ஆனை மதமாய் அடர்ந்து மிகத்தேவா பூனையொடு வந்து புல்குமோ – பூனை நாயோடு புல்குமோ நல்லறிவில்லாத்தேவா ஈயோடு சேர்மோ ஈசல்

ஆனையொடு பூனை அணைந்து நலஞ்செய்திடுமோ பூனையொடு ஆனை புல்குமோ மாதேவா ஏனடா தேவாநீ இந்தமுறை சொன்னதென்ன வீணடா இவ்வாசை விட்டுவிடு நீதேவா கீரிக்குப் பாம்பு கிளைவருமோ வையகத்தில் ஓரிக்குச் சிங்கம் ஒக்குமோ மாதேவா இப்படியே மாயன் எடுத்துரைக்கத் தேவாதி எப்படியும் புத்தி இசையாமலேயுரைப்பான் காவலரே மாமோகம் கண்டஇடமல்லவோ ஆவலது கொண்ட இடம் அச்சுதரே சம்மதங்காண் எந்தவிதமாகிடினும் எனக்கந்தப்பெண்கொடியை தொந்தமாயென்றனக்குத் தொலையாத ஆசையதும் தந்தருளி வைத்தால் தர்மமுண்டுங்களுக்கு என்றன் பிரானே இனிமாற்றிச்சொல்லவேண்டாம் என்றுரைக்கத் தேவன் எடுத்துரைப்பாரெம்பெருமாள் ஒன்றுநீ கேட்டிலையே உன்மனது ஒத்திலையே கீழுள்ள பெண்ணை மேலாக்க வேணுமென்றால் வேழமொத்த தேவா மிகுத்த தவஞ்செய்திடுநீ மேலாக வேணுமென்று மெல்லியரும் நற்றவசு காலால் கனலெழுப்பிக் கடுந்தவசு செய்திடச்சொல் தவசு இருபேரும் தாற்பரியமாகநின்று சிவசுவாசம்பெருக்கிச் சிறந்ததவஞ்செய்தாக்கால் நின்ற தவத்தில் நிலையாய் நினைத்ததெல்லாம் அன்றுங்களுக்கு அருளுவேனானுமென்று சொல்லிடவே தேவன் சிரித்து மனமகிழ்ந்து நல்லதுதானென்று நாட்டமுற்றுத் தேவனுந்தான் பரதேவதையான பைங்கிளியைத் தான்கூட்டி விரைவாகத்தேவன் விறுமாபதஞ்சேவித்து நின்றான் தவசு நெடியோனுறுதியென்று நன்றான நன்னுதலும் நல்ல சம்பூரணனும் நினைத்துத் தவசு நிற்கநிலை தேடிநின்றார் அனைத்துயிருங்காக்கும் அய்யாநாராயணரும் ஏமனுலகமதில் இருக்கும் தபோதனரை தாமனந்தப்பேர்கள் சர்வதுமேயழைத்து வாருங்கோ பிள்ளாய் வாய்த்த தபோதனரே ஏதுங்கள் ஞாயம் என்னோடே சொல்லுமென்றார் உங்கள் குடும்பம் உடையோன் பதம்வணங்கி எங்களுட மோட்சமதில் ஏகி இருப்பதினால் ஆனதாலவர்கள் அனுக்கிரகந்தன்னாலே மானமுடனேமனுட வையகத்தில் வாழ்ந்திருந்தீர் இன்னமுன்வழிகள் என்மகவாயங்கிருக்க வன்னமுடனவ்வழிதான் வாய்த்தசாணாரினத்தில் போய்ப்பிறந்து நன்றாய்ப் புவிமீதிலே வளர்ந்து மேற்பிறவி வந்திடினும் மேவுவதவ்வழியில் இப்படியே பிறந்து என்று மிடறுசெய்து எப்படியுமெந்தன் தவத்தாலேயிருளகன்று உன்பிறப்போர் தம்மால் உதவிபெற்று வாழுமென்று எம்பெருமாள் சொல்லி இனத்தில் பிறவிசெய்தார் சொர்க்கலோகத்தாரைச் சுறுக்காய் வரவழைத்து மிக்கவுங்கள் செய்தியென்ன விடுத்துரையு மேவலரே நான்பிறவிக் கெல்லாம் நம்பிகூடப்பிறந்து என்பிறகே வந்து எனக்கேவல் செய்ததினால் இன்னம் பிறவி இனத்திலுயிரென்மகவாய் வன்னமுள்ள சான்றோர் வழியிலிருப்பதினால் காலக் கலிதான் கட்டழித்தென்மகவு மேலுகமாள விடை நிச்சித்திருப்பதினால் நீங்களும் போயங்கே நிங்ஙளுட தன்வழியில் மங்களமாய்த் தோன்றி வாழுங்கோ என்மகவாய் வாழுகின்ற நாளையிலே வருவேனானுங்களிடம் நாளும்பல ஊழியங்கள் நமக்குமிகச் செய்திருங்கோ ஏவல் கண்டுங்களைநாம் இரட்சித்தாண்டுகொள்வோம் போவெனவே சொல்லிப் புகன்றாரவர்களுக்கு பிரமலோகத்திலுள்ள பிலத்த இருஷிகளை வரவழைத்து அய்யா நாராயணர் வகிர்வார் வாருங்கோ பிள்ளாய் வாய்த்த ரிஷிமாரே ஏதுங்கள் ஞாயம் என்னோடுரையுமென்றார் அப்போது நல்ல அந்தரிஷியேதுரைப்பார் இப்போது அய்யாவே எங்களைப்பூலோகமதில் படைக்கவேணுமெனவே பகர்ந்தமொழி மாறாமல் நடக்கக்கருமமிது நாரணரே பொய்யாது முன்னமே யெங்கள் முறைவழியிலோருயிரை வன்னமுள்ளச் சாணாராய் வகுத்தீரேயும்மகவாய் அல்லாமலெங்கள்வழி ஆனரிஷி தங்களிலே பொல்லாத குற்றம் பிரமனுக்குச்செய்ததினால் அன்பத்தினாலொன்றிரிஷி அவனிதனில் போகவென்று இன்புற்ற நாரணரே ஈந்தீரவர் கேட்டவரம் ஆனதாலவர்கள் அவனிதனிலேதிரிய ஏனையா எங்களைநீர் இப்போ பிறவிசெய்தால் இனம்பிரிந்து நாங்கள் இருப்போமே பூமிதனில் கனம்பொருந்தும் நாரணரே கட்டுரைக்க வேணுமென்றார் நல்லதுதானென்று நாராயணருரைப்பார் வல்ல ரிஷிமாரே வகையாகக் கேட்டீரே அதற்கு விபரம் அருளுவேன் கேளுமென்று மதுக்குகந்த மன்னன் வழுத்துவாரன்போரே சென்ற ரிஷியெல்லாம் செடமெடுத்துப்பூமிதனில் மண்டலங்கள் தோறும் வாழுவார் கண்டீரே என்ன விதமாய் இருப்பாரென்றே யினமாய் துன்னயமாய் நீங்கள் துணிந்து நன்றாய்க்கேட்டிங்கோ மான்தோலிலேயிருப்பான் வானமதைத்தான்பார்த்து தீன்சோறருந்தாமல் செலங்குடித்து நாடோறும் கற்பமுண்டோமென்று கலியில்மிகப்பட்டுழன்று அற்பமுடன் கொஞ்சி அவன்சிலநாள் தானிருந்து பிரம்ம வைகுண்டம் பிறப்பெடுத்து நான்தானும் வரம்வைத்தவனை வதைத்துப் பின்னுன்னினத்தில் படைத்துத் தருவேன் பார்த்துக்கோ லெக்கெனவே அடர்த்தியாயைம்பத்து ஐந்து இருஷிகளும் ஆளுக்கொருவிதமாய் அருந்துவதும் இருப்பும் நாளு முறையாய் நடத்துவதும் நீகேளு ஒக்க விபரமதாய் உரைக்கநேரம்பெருகும் மிக்கத்திரட்டாய் விடுகிறேன் நீகேளு நல்ல மிளகுதின்று நவகண்டி தான்பூண்டு கொல்ல மிளகுதின்று குப்பைமேலே புனைந்து வெள்ளித்தடுக்கில் வீற்றிருப்பாரேசிலர்கள் ஆனைத்தோலிட்டு அருந்தாமல் நாடோறும் கானகத்தில் வாழ்ந்து கண்மூடாரே சிலர்கள் மரத்தைமிகக் காலிலிட்டு வார்சிலந்திக் கோர்வையிட்டு சரத்தையுள்ளே கொண்டு தானிருப்பாரேசிலர்கள் மீட்டைக் கொடியும் மிளகு வெற்றிலைக்கொடியும் இட்டமுடன் நிஷ்டை இருப்பார் சிலபேர்கள் உப்பில்லாதன்னம் ஒருபோது தான்குடித்து அப்பிலிட்டுத் தின்று அக்கினியிலே காய்ந்து இருப்பார் சிலபேர் இன்னமும் நன்றாய்க்கேளு பொருப்பிலிருப்பார் பூமியில் வரோமென்பார் கள்ளிப்பாலுண்டு கவிழ்ந்திருப்பாரே சிலபேர் கொள்ளித்தழலும் கொள்ளைகொண்ட கஞ்சாவும் உண்டோங்காண்லோகமதை விழுங்குவோமென்பார் புல்லையருந்திப் புலித்தோலின் மேலிருந்து தில்லைப்பாலுண்டு திரிவோமென்பார்சிலபேர் புகையிலைச்சாறு புகட்டுவோமென்பார்சிலர் தகையில்லாக் கற்பம் தானுண்டோமென்பார் சிலர் பூவில் படுப்போம் புகட்டுவோமாவின்பால் காவிலுறைந்து கலைதரியாதிருப்பார் சிலர் உடையுடாதே கழுத்தில் உத்திராட்சமே புனைந்து நடையொற்றைக் காலால் நடப்பார் சிலபேர்கள் இப்படியே நன்றாய் இவரிவர்க்கோர் விதமாய் அப்படியே தேசம் ஐம்பத்தாறதிலுந்திரிவார் பருப்பாரவர்கள் பழுதுகை வாய்த்துதென்று இருப்பாரவர்கள் இராச்சியத்துக்கொன்றாக இருக்குமந்த நாளையிலே யான்வருவேன் தெச்சணத்தில் ஒதுக்கிச் சன்னாசிகளை ஒன்றொன்றாய்க்கொண்டுவந்து வைக்கச்செய்வேன் வரத்தை மனுவறியச்சிலரை செயிப்பேன் பலபேரைச் செகமெல்லாமறிய வதைத்து ஒவ்வொன்றாய் மனுவில் வரத்தாக்கி நிரைத்துங்கள் தன்னோடு நிலைநிறுத்தியே தருவேன் ஆனதால் நீங்கள் அவனியிலென்மகவாய் ஈனமில்லாதுங்கள் இனத்தில் பிறந்திருங்கோ வாழுங்கோ கலியன் மாய்கையால் சாவுவந்தால் பாழுபோகாதேவுயிர் பதியுமுங்கள் தம்வழியில் நான்வந்துங்களையும் நாட்டமுடனெடுத்து மானொத்த தர்ம வையகத்தில் வாழவைப்பேன் என்று பிரம இராச்சியத்தோர்களையும் அன்று பிறவி அமைத்து அனுப்பினர்காண் அந்தப் பிறவி அவர்செய்தனுப்பி வைத்து சொந்தப்பிறவி சிவவைகுண்டத்தோரை வாருங்கோவென்று வரவழைத்தெம்பெருமாள் ஏதுங்கள் ஞாயம் இயம்புமென்றார் தர்மிகளை அப்போது தர்மியெல்லாம் அரியோனடிவணங்கி எப்போதுமெங்களைநீர் இரட்சித்துக் கொண்டவரே ஆண்ட வைகுண்டம் ஆண்டிருந்தோமித்தனைநாள் தாண்டவரேயினியுமது தயவினருளாலே என்னபடி நிச்சித்து இருக்குதோ அவ்வழியில் வன்னத் திருமாலே வகுத்தாலதுமனதாம் என்றுதர்மியெல்லாம் இசைய ஆதிநாரணரும் நன்றுபிள்ளாயுங்களுட நல்வளமை சொல்லுகிறோம் இல்லாதெளியோர்க்கு எனைநினைந்து தர்மமிட்டு பல்லுயிர்க் குன்னயிராய்ப் பார்த்தீரொருப்போலே நீத நிலையை நிறுத்தி யெனைநினைந்து சீதமாய்ப் பூமி செலுத்தியரசாண்டிருந்து வந்தீர்கள் கூட்டோடு வைகுண்ட மானதிலே சேர்ந்தீர்களாகிடினும் செய்த நன்றி தான்பார்த்து உங்களுக்கின்னாள்வரை உதவிதரவில்லையல்லோ தங்களுக்கு நன்மை தரவேணுமானாக்கால் இன்னமொரு பிறவி என்மகவிலேபிறவும் வன்னப்பிறவியென் மகவழியில் தான்பிறந்தால் ஏழுயுகக்கணக்கும் யான்கேட்டுங்களுக்கு மாளுவதில்லாமல் மறுபிறப்புமறுத்து நம்முடைய சொத்தும் நாடியுங்களுக்கீந்து மும்மடங்காய்த் தர்மம் ஓங்கிவளர்ந்தே யிருப்பீர் என்றுதர்மி தங்களுக்கு எம்பெருமாளீதுரைக்க அன்றந்தத்தர்மிகளில் ஐபேர்களேதுரைப்பார் ஆயரே எங்களுட ஆதிநாராயணரே மாயரே எங்களைநீர் மறந்தெங்கே போனீர்காண் காணாமலும்மையெங்கள் கண்கள் மிகத்தவித்து வாணாளயர்ந்து மறுகிநொந்து வாடினோமே என்றுதர்ம பாண்டவர்கள் இப்படியே சொல்லிடவே நன்று நன்றென்று நாராயணர் மகிழ்ந்து முன்னமே நீங்கள் உகத்துக்குகங்கூட என்னைவிட்டகலாது இருந்தீர்களென்னுயிர்போல் ஆனதாலிப்பிறவி அய்யா நாராயணராய் மானமாய்த் தர்மம் வளர்ந்தோங்க எந்நாளும் நிச்சித்து ஒன்றாய் நிலைநிறுத்தித் தற்சொரூபம் மெச்சித்து நானினித்தான் மேல்பிறக்கப்போவதினால் என்மகவாய் நீங்கள் ஏழிலொருவனுமாய் கண்மணிபோல் நீங்கள் கலியுகத்தில் போய்ப்பிறங்கோ என்றேதான் தர்மிகட்கு எம்பெருமாளீதுரைக்க அன்றேதான் தர்மி எல்லோருமேதுரைப்பார் தானதவஞ் செய்தல்லவோ தர்மிகள் தானாகி மான வைகுண்ட வாசலிலே வந்திருந்தோம் மானுவங்களில்லா மாளுங்கலியுகத்தில் பேய் நீசவையகத்தில் பிறக்கப்போவென்றீரே நாங்கள் முன்செய்த ஞாயநடுப்போய்விடுமே ஏங்கக் கலியனுட இருளினாலையாவே நாயநடுக்கேட்டு நடுக்கம் மிகப்பிடித்து தேயமதில் நாங்கள் செய்தமுறை தப்பிடுமே ஆனதால் நீரும் அன்று நடுக்கேட்கையிலே மானமில்லையானால் வழக்கென்ன சொல்லிடுவோம் என்றுரைக்கத்தர்மி ஏதுரைப்பாரெம்பெருமாள் நன்றுநன்று பிள்ளைகளே நானதற்குச் சொல்வதுகேள் என்மக்களேழும் இயல்கலியில் பட்டுழன்று வன்மக்கலியதனால் மாறிமிகச்செய்ததெல்லாம் நான்பொறுத்துங்களுக்காய் நானே தவசுபண்ணி வான்சிவனுக்கேற்க வாய்த்த தவமிருந்து மக்களேழு பேர்கள் வம்மிசங்களுள்ளதெல்லாம் ஒக்கவொன்று போலே உகந்தெடுத்துண்மையுடன் நாடாள வைப்பேன் நல்லமக்களேழ்வரையும் தாடாண்மையான சத்தியுமை தன்னாணை நீங்களென்ன குற்றம் நிலையில்லாச்செய்தாலும் தாங்கிப்பொறுப்பேன் தருவேனானல்லபுத்தி உங்கள்கர்மமெல்லாம் ஒக்கத்தொலைப்பதற்கு மங்களமாய்ச்சிவனை வருந்தித்தவசுபண்ணி நானுங்களுக்காக நல்ல தவசிருந்து மானுபங்கள் கெட்ட மாகலியன் தன்னுகத்தில் தாயும் தகப்பனையும் தான்பழித்த துற்கலியில் பேயுங்கலிநீசப் பிறப்பைச்சோதித்தறுத்து தாடாண்மை தர்மம் தழைக்கவைத்துங்களையும் நாடாள வைப்பேன் நம்மாணை தப்பாது என்றுரைக்க அய்யா எல்லோருஞ் சம்மதித்து அன்று பிறவி அமையுமென்றாரப்படியே நன்மையுள்ள தர்மியெல்லாம் நல்லசான்றோர் குலத்தில் மேன்மையோரெல்லாம் மேதினியில்பிறந்தார் அந்த யுகப்பிறப்பு ஆனபின் எம்பெருமாள் நந்த சிவனுகத்தோர் நாடும்வானோர்களையும் வாருங்கோ பிள்ளாய் வானோரே என்றுசொல்லி ஏதுங்கள் ஞாயம் இயம்புமென்றாரெம்பெருமாள் அப்போது வானோர் எல்லோருமே மகிழ்ந்து செப்புகிறாரந்தச் சிவனாதி தன்னோடு மாயவரே தூயவரே மற்றொப்பில்லாதவரே ஆயரே உம்முடைய அறிவின் படியாலே அமையுமமைத்தால் அதுமனதாமெங்களுக்கு சமயம் வழுவாத சாதித்திருமாலே என்றேதான் வானோர் இதுவுரைக்க அய்யாவும் நன்றெனவே மனது நன்றாயகமகிழ்ந்து காலக்கலிதான் கலிமூழ்கி வையகமும் மேல யுகம்வரையும் மூழ்கியது கண்டீரே ஆனதாலீரேழு அவனி இருள்மூடி மானமழிந்து வரம்பழிந்து மானிடரும் ஆதி முதல்சாதி அடங்கல்வரை தேவரெல்லாம் நீதி நிலைமாறி நின்றதுவுங் கண்டீரே ஆனதாலிந்த அன்னீத இருள்தனையும் ஏனமென்ன பார்த்தேன் இதையறுக்கவேணுமென்று பார்க்கும்போதிந்தப் படூரநீசக்கலியை ஆர்க்கும் செயிக்க அடங்காது கண்டீரே ஆனதால் நாமள் எல்லோருமின்னமொரு மானமாய்ப் பிறந்தால் மாளுங்கலியல்லாது கலிக்குள்ளகப் பட்டசடம் கலியழிக்கக்கூடாது பெலிக்குக் கலியையிட பிறந்தல்லாலேலாது ஆனதால் நாங்கள் அம்புவியில் வருவோம் வானவரேயுங்களுட வளப்பமென்ன சொல்லுமென்றார் அப்போது வானோர் எல்லோருமே பயந்து செப்புவதேதோ திருமாலே நாங்களினி சிவன்முதலே திருமால் திருவுக்கிதுவானால் எவனையாப் பூமியிலே நாம்பிறவோமென்பதுதான் ஆனதால் பின்னும் அடியார்ககொருவிதனம் ஈனமே கண்டு இரங்குதையா எங்கள் மனம் அவ்விதத்தைச் சொல்வோம் அடியார்க்கின்னபடி எவ்விதத்திலேயும் இசைந்தனுப்புமெங்கோவே என்று வானோர்பணிந்து இயம்புவாரன்போரே அன்றுமுதலின்றுவரை அடியார்களெல்லோரும் சிவனுக்கடிமை செய்திந்தப்பூமியிலே எவனுக்கும் பதறாது இருந்தோமே இவ்வுலகில் மாய்கையில்லை எங்களுக்கு மக்கள்பெண்டீருமில்லை சாய்கைத் துயிலுமில்லை தகையுமில்லை எங்களுக்கு இளைப்பில்லை தாகம் இல்லை பசிதாகமதும் வளப்பில்லை தேகம் மறுவில்லை நோவுமில்லை அலந்தாசையில்லை ஆணில்லை பெண்ணுமில்லை கலந்தாசையில்லை காமக் கழிவுமில்லை இத்தனையுமில்லாது ஈசனருட்செயலால் நித்தியமனப்பூவால் நிமலன் பதம்போற்றி இன்பதுன்ப மற்று இருவினைகள் தானுமற்று வன்பத்து சம்பத்து வாக்குடனே போக்குமற்று மலமற்றுச் சலமற்று மயமும் சயமுமற்று பெலன்பொறியற்றுப் பேரற்று ஊருமற்று இத்தனையுமற்று இருந்த சிவத்தொண்டரிடம் புத்திகெட்ட மாகலியில் போய்ப்பிறக்கச் சொன்னீரே சொன்னமொழி மாறாமல் சுவாமிவிண்ணப்பமென்றார் என்னவித மாகிடினும் இரட்சிக்க வேணுமையா என்றந்த வானோர் இறைஞ்சித் தொழுதிடவே நன்றென்று கேட்டாதி நாராயணருரைப்பார் நல்லதுகாண் வானவரே நானினிமேல் செய்பிறவி இல்லறத்தை விட்டுத்தவம் இல்லை வேறொன்றும் ஆனதால் பேடென்றும் அருளியிருளி யென்றும் மானமில்லாரென்றும் வாராது மேற்பிறவி ஆணுக்கொருபெண் அன்றூழி காலமெல்லாம் தோணுதலாயொன்றாய்த் தொல்லூழி காலம்வரை வாழ்ந்திருப்பாரென்றும் மக்கள் கிளையோடும் தாழ்ந்திருப்பார் பேராய்த் தழைத்தோங்க எந்நாளும் பேரு தழைக்க பெருமையாய் வாழ்ந்திருப்பார் ஊரொன்றுகமொன்று உரையொன்றுக்குள்ளாக்கி இறவாமல் பெண்ணோடு இருந்துமிக வாழ்வதல்லால் பிறவியற்று வாழ்வார் பெண்ணுடனேயல்லாது ஊர்மறந்து பேர்மறந்து உற்றக் கிளைமறந்து பார்மறந்து தேசப் பவிசு மிகமறந்து ஆடல் மிகமறந்து ஆயிழையைத் தான்மறந்து பாடல் மறந்து பக்கத் துணைமறந்து அன்னம் மறந்து அதிக மணம் மறந்து சொர்ணம் மறந்து சுகசோபனம் மறந்து நலம் மறந்து தேக நளினம் மிகமறந்து மலசலம் மறந்து வளரும் தவப்பேறுமில்லை இத்தனை நன்மைகள் எல்லாமிகக் கொண்டாடி சித்திரமாகத் திரும்பிப் பிறப்பற்றவராய் என்பிள்ளை ஏழும் எடுத்தவழி ஓரினமாய் அன்புள்ள பேராய் அரசாள்வோம் கண்டாயே என்று மகாமால் இப்படியே சொல்லிடவே அன்றந்த வானோர் எல்லோருமே யிரங்கி நன்மை பலதோடும் நன்னுதலாள் தன்னோடும் மேன்மை பலபெறவே மேற்பிறக்கச் செய்வோமென்று சொன்னீரே அய்யா சுகம்பெற்றோம் நாமளென்று பன்னீர்க் குணம்போல் பச்சம்வந்து வானோர்கள் ஆதியே எங்களையும் அதிலமைக்க வேணுமையா சோதியே என்று தொழுது நின்றார் வானோர்கள் நல்லதுதானெனவே நாட்டமுற்றெம்பெருமாள் வல்லமக்களான வாய்த்தசாணார் குலத்தில் ஏழு மக்களிலும் ஏற்றவானோர் வழியில் மாளுவந்தாலுமதிலே மாறாப்பிறக்கவென்றும் நாராயணர்புவியில் நல்லமக்களேழ்வரையும் சீராக வந்தேற்றுச் செய்தவினையும் நீக்கி ஊழூழி காலம் உயிரழியா வண்ணமும்தான் ஆழிக்கரையான்மகவு அரசாள்வாரென்று சொல்லி சொல்லிப்பிறவி செய்தார்காண் சாணாராய் நல்லதென்று வானோர் நாடியகமகிழ்ந்து சாணாராய்வந்து தானுதித்தார் வையகத்தில் வாணாளறிந்து வானோர் மிகப்பிறந்தார் அந்த யுகப்பிறப்பு ஆனபின்பு எம்பெருமாள் சொந்தப்பரலோகச் சுத்தமுனிவோர்களையும் எல்லோரையுமழைத்து எம்பெருமாள் ஏதுரைப்பார் வல்லோரே உங்கள் வளப்பமென்னச் சொல்லுமென்றார் நீங்களெனைமறந்து நீணிலத்திலில்லையென்று நாங்கள் மிகவறிய நன்றிகெட்டுச் சொன்னீரே ஆனதாலுங்களுக்கு அதிகப்பிழையாச்சுதல்லோ ஏனமென்ன பார்த்து இயம்பும் முனிவோரே அப்போது மாமுனிவர் எல்லோரும் தாம்பயந்து செப்புவதேதோ சிவனுலகோர் செய்திகண்டால் கற்பனைக்குள்ளல்லால் கடருவமோ நாங்களினி அற்பரல்லோ கற்பனைக்கு அல்லவென்று சொல்வது என்றுமுனி சொல்லி இயம்புவார் பின்னுமுனி எல்லாவுரையும் எடுத்துரைத்தீர் வானோர்க்கு நல்லாயறிந்தோம் நாதனே யவ்வகைபோல் படைத்தனுப்புமும்முடைய பாலருட தம்வழியில் நடத்தையதிகமுள்ள நாராயணப்பொருளே என்று முனிவோர் இப்படியே சொல்லிடவே அன்று பெருமாள் அவர்க்கேது சொல்லிடுவார் எல்லோருமென்மகவாய் இனத்தில் பிறந்திருங்கோ வல்லோரேயுங்களைநாம் வந்தெடுப்போமஞ்சாதே என்மக்களேழும் ஈன்றவழிச்சான்றோரை பொன்மக்களான பூமக்கள் தங்களுக்கு என்சொத்து மீந்து என்பேரையுங்கொடுத்துத் தன்சொத்தோடேயிருந்து தற்சொரூபங்கொண்டிருப்பேன் இறப்பு பிறப்பு இல்லாமலென்மகவை பிறப்பிறப்பில்லாமல் பெரும்புவியையாளவைப்பேன் ஆனதால் தர்மயுக அரசுங்களுக்கருளி மானமாய்த் தந்தோம் மாயாண்டி தன்னாணை என்றாணையாதி நாராயணர்கூற நன்றாக மாமுனிவர் நல்லதென்று சம்மதித்து அய்யாவுமது அருளின்படியாலே மெய்யாவுமது விந்து வழிக்குலத்தில் படையுமையா சாணாராய் பரமனேயென்றுநின்றார் சடையு மணிந்தமுனி தானுரைக்க அய்யாவும் நல்லது பிள்ளாய் நாடுவதுதான் கருமம் வல்லவரே சான்றோர் வழியிலுங்கள் தம்மினத்தில் பிறக்கப்போமென்று பெருமுனிவரையனுப்பி சிறக்கச் சிவனோடு செப்புவாரெம்பெருமாள்

நாராயணர் கலியழிக்க திட்டம் வகுத்தல் ஆதியே அநாதி ஆனந்த மைத்துனரே சோதியே சான்றோராய்த் தொல்புவி ஏழிலுள்ளே சங்கமுதல் தெய்வ சத்திபரலோகம்வரை அங்கவரைச் சாணாராய் அவதரித்தார் பூமியிலே என்மக்களான இப்பூமி ஏழிலுள்ள பொன்மக்களெல்லாம் பிறந்தார் சாணாராய் கலிக்குள்ளகப்பட்டோர் கடந்துகரையேறவென்றால் வலிக்கு வலுவான தர்மமல்லோ வேணுமையா தீட்டுக்குள் சென்றால் திரும்பக்குளியாமல் வீட்டுக்குள் போவாரோ மேதினியோர் நாமறிய இனிமேல் செய்தி இன்னதென்றீசுரரே கனியான மைத்துனரே கட்டுரைக்க வேணுமென்றார் அப்போது ஈசர் அச்சுதரைத் தான்பார்த்து செப்புவது நாமறியோம் செய்கருமமங்கேயல்லால் நம்மோடே சொல்ல நாரணரே ஞாயமில்லை தம்மோடே சொன்ன சத்தியத்தின்படியே நடத்தும் நீரென்று நவின்றாரங்கீசுரரும் திடத்திருமாலானோர் செப்புவார் பின்னாலே இவ்வுகமும் நீசன் இனக்குலமும் நாமழித்து செவ்வுகத்த நம்மனுவோர் சிறந்த தர்மத்தாரணியும் புதுயுகம் புதுவிருச்சம் புதுமனு புதுநினைவும் நெதிவுசற்றுமில்லாது நின்றிலங்கும்பதியும் புதுவாயு புதுவருணன் புதுமுகில் புதுமதியும் புதுமிருகம் புதுப்பறவை புதுவூர்வனங்கள்முதல் தர்மயுகத்துக்குத் தானேற்ற வஸ்துவெல்லாம் நன்மையினித்திட்டித்து நடத்திடவும் வேணுமல்லோ இப்படியே ஞாயம் இருப்பதுவுமல்லாமல் முப்படித்தானுள்ள முறைகேளுமீசுரரே துரியோதனனைத் தொலைத்துக் கலிவருமுன் பதிரங்கமேவிப் பள்ளிகொண்டு நானிருந்தேன் ஸ்ரீரங்கமீதில் சிறந்திருக்குமப்பொழுது நீதங்கள் கெட்டகலி நீணிலத்தில் வந்ததினால் நீதநெறி மானுபமும் நிசமான தர்மமதும் சாதமுள்ள வெள்ளானை தலையைந்து கொண்டதுவும் கள்ளமில்லா வெண்சாரை கடியபெல வெண்கருடன் வெள்ளன்னம் வெண்குயில்கள் வெண்புறாவெள்ளைமயில் நல்ல அனுமன் நாடுங்காண்டாமிருகம் வல்ல வெண்ணரிகள் வளரும் வெண்காக்கைகளும் ஆழியோடு சிங்கம் ஆனையிறாஞ்சிப்புள்ளும் வேளிசை வெண்கலைமான் வெண்புள்ளு வெண்ணணில்ள் வெண்கற்றா வெண்போத்து வெண்தோகை வெண் பறவை பண்புற்றபட்சி பலமிருகமூர்வனம் இத்தனையும் நீசனுக்கு எற்றுக்கொடாதபடி புத்தியறிவோடு புவனமதை விட்டேகி கானகமே நடந்து கதறியெனைவருந்தி மானுவமாய் நின்று வருந்தித் தவம்புரிந்தார் ஆனதாலூர்வனத்தில் ஐந்துதலை வெண்சாரை ஈனமில்லாமிருகம் ஏற்றவெள்ளானைகற்றா வெண்ணாடை வெண்ஞாளி வெண்முத்து வெண்மிருகம் வெண்பட்சியான மேல்பட்சியானதிலே பொன்பட்சி வெண்பட்சி பூணுநிறத் தானபட்சி தென்பட்சி அன்பட்சி செந்தாமரையின்பட்சி இப்பட்சியோடு இம்மிருக மூர்வனமும் அப்பட்சியோடே அனைத்து மனுகூலமுமாய் கூடிக் குழையும் கொடிப்பிதிருமொன்றதுபோல் தேடரிய அந்தத் தேதிதனில் தோன்றிவரும் விருச்சம் படைக்க வேணுமதுவிபரம் புரச்சமதுபார்த்துப் புகலுது ஆகமந்தான் என்பிள்ளை ஏழும் வியாபிக்க நாமீந்த மின்விருச்சமான மிகவிருச்சம் நிலையாய் வன்னமது பூகம் வாசமது விருச்சம் தென்னை விருச்சம் செறியும் புன்னைவிருச்சம் ஆதி விருச்சம் அடர்ந்த பெருவிருச்சம் சோதி விருச்சம் சுபசோபன விருச்சம் தேச விருச்சம் செம்பொன்னிற விருச்சம் ஆகமத்திலுள்ள அனேக விருச்சமதும் வந்து மிகத்தோன்றும் வைத்திருக்குந்தேதிதனில் சிந்து பயில்வானம் சிறந்தவொரு வெண்வானம் வானமதிலுறையும் வளர்நிலவும் நேராக ஈனமில்லாததுதான் இலங்குமெந்நேரம் வெளியாய் சேத்திரங்க ளொன்று தினமுமது விளக்காய் சாத்திர வேதம் சமயமொன்றாய் நின்றிலங்கும் வாயுவது பூப்போல் மலரெடுத்து வீசிநிற்கும் ஆயுங்கலைதமிழும் அறிவொன்று போல்பரவும் நம்மனுவோர் தர்மபதி நாளுமிகத் தழைக்கும் தம்மனுவோர் போலே தழைத்திருந்து வாழ்வார்கள் ஒக்க ஒருஇனம்போல் உவந்திருந்து வாழ்வார்கள் மிக்கத் திருச்சாதி மேற்சாதி சான்றோராய் இருப்பார் வயது எண்ணிக்கையில்லாதபடி பருப்பார் பழமும் பாலுமிகஅருந்தி புண்ணிய முள்ளோராய்ப் பூமிதனையாண்டிருப்பார் மண்ணெல்லாந் தர்ம வயல்போல் விளைந்திருக்கும் தர்ம புவியிலுள்ள தண்ணீர் கலைக்கியானம் நன்மைவெள்ளங்காட்ட நாடுங்கருணைவெள்ளம் இப்படியே தர்மபதி இராச்சியமொன்றுண்டாக்கி செப்பரிய பொன்பதிகள் திட்டித்து வைக்கவென்றும் முன்னமேயென்றனக்கு உகந்த துவராபதியில் பொன்னம்பதியும் பெரியதங்கப்பதியும் உண்டுகாணப்பதியும் உவரியதுக்குள்ளிருக்கு கண்டு கொள்ளார்கள் கலிமாசு கொண்டவர்கள் ஆனதாலப்பதிதான் ஆகுவது மக்களுக்குத் தானமுடனமைக்கத் தர்மசாஸ்திரத்திலுற்றிருக்கு தர்ம புவிகண்டு தானிருக்கு மக்களுக்கு வர்மமில்லை நோவுமில்லை மறலிவினை தானுமில்லை தர்மபுவி வாழ்வார்க்குச் சத்தி விதிக்கணக்கும் நம்மிடத்திலல்லால் நாட்டில் கணக்குமில்லை சாத்திர வேதம் சமயம் போதித்தருளும் சேத்திர விபரிப்புரைக்கச் செல்வான் நமனொருவன் காப்பிலியன் ஏதுவினால் கணக்கு தப்பி கொன்றதினால் சாப்பிலியன் ஆன சண்டன் அவன்தனையும் காலனெனுஞ்சித்திரக் கணக்கனெனும் பேர்களுக்கு ஏலமே தவசு இடறாக நிற்கிறாள்காண் ஆனதாலவர்கள் அழிவாகிப்போகுமையா ஊனக்கிரகம் ஒன்பது பேர்களையும் அழித்து வேரொன்றுக்குள் அருள்கொண்டிருக்கும்காண் முழித்து எழுந்து மூடு ஓன்று தானாக்கி முன்னூல் ஆகம முறைமையதன் படியே பின்னூல்புராணமொன்று போதிப்பொருவனுமாய் இந்தப்படியே யான் நிச்சித்திருப்பதினால் அந்தப்படியுள்ளதெல்லாம் ஆகுமந்தத் தேதிதனில் அதுக்குமுன்னே நாம் அமைப்பதெல்லாம் அமைத்து கதுக்கெனவே பார்ப்போம் கலியையழிப்பதற்கு என்று விசாரித்து இருக்கின்ற நாளையிலே சான்றவரைப் பெற்ற தையல்தெய்வக் கன்னியர்கள் தவத்திலவர் நின்று தலைவரையுங் கால்வரையும் உபத்திரமால் விருச்சம் உடலெல்லாமே மூடி கன்னியர்கள் ரோமம் கனத்த புவியில் வேராய் உன்னியே லோகமதில் ஓங்கிப் பரந்ததுவே நின்ற தவந்தான் நிலைத்து நிறைவேறி நன்றினியக் கன்னியர்கள் நாடுந்தவத்தருமை பார்த்தன் தவமதிலும் பத்துரெட்டிக்கூடவுண்டே ஏற்றரிய சீதை இருந்த தவமதிலும் ஒட்டிரெட்டிக் கூடவுண்டே ஓவியத்தார் தந்தவங்கள் ஏட்டிலடங்காது இவர்தவசைச் சொல்லவென்றால் பொறுத்து முகியாத பெரிய தவத்தருமை மறுத்துரைக்கக் கூடாமல் வளர்ந்து தவம் முற்றியதே சத்தி உமையாட்கும் சதாசிவமானதுக்கும் முத்திக்கும் மாலுக்கும் முகுந்தன் பிரமனுக்கும் மனதில் மிகஅறிந்து மாதுசத்தியேதுரைப்பாள் காட்டிலேழுபெண்கள் கனநாள் தவசுபண்ணி தாட்டிமையாய்ப் பெண்கள் சடைத்தார்கள் ஈசுரரே பெண்கள் தவசியல்லோ பொறுக்கமிகக்கூடலையே அங்கேபோய் நாமள் அவர்தவசுபார்ப்போமென்றாள் என்று உமையிரங்கி இப்படியே சொல்லிடவே அன்று அறம்வளர்த்தாள் அவள்பங்கரேதுரைப்பார் நல்ல உமையே நாடும்பெண்ணார் தவத்தில் செல்லவென்றால் நாரணரும் தேனேவரவேணுமென்றார் அப்போது நாரணரை அடிவணங்கி மாதுமையும் ஒப்போடுறவணங்கி உரைக்கிறாளன்போரே அண்ணரே கோவே ஆதிநாராயணரே கண்ணரே கார்வண்ணரே காட்டிலேழு கன்னியர்கள் தவசுதனிலிருந்து சடைத்தார் கனநாளாய் சிவனே அவர்கள் தவம் செப்பப்பொறுக்காது நாமள்போய்ப் பார்த்து நல்லபெண்களேழ்வருக்கும் ஆமான பதவி அருளவேவேணுமையா என்று நாராயணரை எழுந்தருளச்செய்தாள் அன்று சிவனாரும் ஆதி நாராயணரும் அம்மை உமையாளும் அரம்பை ஸ்திரிமாரும் செம்மையுடனடந்து சென்றார் வனமதிலே வனத்தில் அவர்கள்வர மாதரேழு கன்னியர்கள் இனத்திலுள்ள மாதுமையை எல்லோருங்கண்டாவி தாயேவுனது தாள்கண்டு எத்தனைநாள் வாயே புவிக்குடைய மாதாவென் தாயாரே எந்நேரமெங்களைநீர் இகழ்ந்து கடத்தாமல் தனதாக எங்கள் தயவில் குடியிருந்து கற்பகலாக்காத்த கண்ணெங்கள் மாதாவே உற்பனமாயெங்களைநீர் உலகில் தவறவிட்டு இருந்தாயே தாயே எங்கள்விதி நாயகமே அருந்தாமல் வாடினோமே அறமில்லார் தங்களைப்போல் காத்திருந்தாயென்றிருந்தோம் எங்களுட கட்டழியப் பார்த்திருந்த ஞாயமென்ன எங்களுட பார்வதியே எந்நேரமீசுரர்க்கும் என்னம்மையுங்களுக்கும் சொன்ன பணிமறந்து சொல்தப்பி நின்றோமோ ஈசருட சட்டம் யாங்கள் மிகமறந்து தேசமதில்வரவே சிந்தையிச்சித்ததுண்டோ கற்பினை மறந்தோமோ காராவைக்கொன்றோமோ அற்புதவேள் தாயே அடியார் தமக்கருளும் என்றுகன்னியெல்லாம் இப்படியே தானுரைக்க அன்று அறம்வளர்த்த அம்மை மனதிரங்கி நல்லது பெண்ணேயுங்கள் ஞாயமெல்லாமுரைப்போம் வல்ல சிவனாரே வார்த்தையொன்று நீர்கேளும் தவத்தை நிறைவேற்றித் தார்குழலாளேழ்வரையும் அகத்தே வரவழையும் ஆதியேயென்றுரைத்தாள் அப்போ சிவனார் ஆனகன்னி ஏழ்வரையும் கொப்போடு சூழ்ந்து நின்ற குழையெல்லாமேயுதிர்த்தி நிறைவேற்றித் தவத்தை நேரிழைமாரேழ்வரையும் சிறைமாற்றிப் பெண்களையும் சிவனார் வரவழைக்க வந்து மடவார் மறையொத்த மூவரையும் சந்துஷ்டியாகத் தாழ்ந்து நமஸ்காரமிட்டு கனகத் திரவியக் கப்பல்கரை சேர்ந்தாற்போல் மனமகிழ்ந்து மாதுமையை மாமடவார் முத்திமுத்திக் சென்றாடிச் சென்றாடிச் சிவனை மிகப்போற்றி கொண்டாடிக் கொண்டாடி கூறுவார் கன்னியர்கள்


வந்தனே வந்தாய் போற்றி மாதுமைக் கணவா போற்றி சந்தன மயிலே போற்றி சண்முகன் தாயே போற்றி நந்தகோ வேந்தே போற்றி நாதனே நீதா போற்றி சிந்தரென் கணவா போற்றி சிவசிவா போற்றிப் போற்றி

மாதவா போற்றி போற்றி மறைமூடி காணா வல்ல நீதவா போற்றி போற்றி நிசரூபச்சித்தா போற்றி சீதவாளுமையே போற்றி தெய்வநன்மணியே போற்றி பாதவாவனத்தில் தொட்ட பாங்கனே போற்றி போற்றி

மூவர் தேடியுமுற்றாத முதலேயுனதுபதம் போற்றி தேவர்க்கரியத் திரவியமே தெய்வ மணியே சிதம்பரமே காவக்கானகமதிலே கற்பை யழித்துக்கைவிட்டகன்ற தாவத் துணையேயென்கணவா தவமேயுனதுபதம் போற்றி

மாட்டிலேறும் மகாபரனேமாது உமையாள் பங்காளா காட்டிலடியா ரேழ்பேரும் கற்றா விழந்த பசுவதுபோல் ஊட்டி உறக்காரில்லாமல் ஊமை கண்டக்கனாவதுபோல் வாட்டமறிந்து மனதிரங்கி வந்தாய்க் கவலை தீர்ந்தோமே

தீர்ந்தோமினி எங்களைத் திரும்பக்கயிலைக்கழையாது ஈந்தோர் பிள்ளை ஏழ்வரையும்இனமுமேழுங் குறையாமல் சாந்தோரெங்கள்கணவரையும் தந்தே தரணியரசாண்டு வாழ்ந்தேயிருக்க வரமருளும் மாயாதிருக்கு மறைமுதலே

அய்யா முதற்பொருளே ஆனந்தமானவரே மெய்யான மூல மேல்வீட்டிருப்போனே தூணாக அண்டபிண்டத் தூரைக் கடந்தோனே கோணவட்டத்துள்ளே குடியிருக்குங்கோவே ஈசரே யெங்களுட இளைப்பெல்லாம் நீர்மாற்றி தேசமதில் வாழச் செல்லவரந்தாரும் பெற்றமக்களேழும் பிள்ளையதுவழியும் கொத்துக் கொடியும் குலவம்மிசமுழுதும் சான்றோர் வழிமுழுதும் தற்காத்து எங்களையும் பண்டூசல் செய்த பாரமுனிவன்பதத்தில் சேர்ந்திருக்கவுமவரின் திருப்பாதமுந்தொழுது தாழ்ந்திருக்கவுஞ்சிவனே தாரும்வரமென்றுரைத்தார் அப்போது நல்ல ஆதிசிவமேதுரைக்கும் இப்போது நாரணரே இக்கன்னி கேட்டதற்கு இன்ன விதமென்று இசைந்து வரங்கொடுவும் சொன்னவிதங் கேட்டுச் சொல்லுவார் நாரணரும் கேட்ட வரமதுதான் கெட்டிதான் ஈசுரரே நாட்டமிந்தப் பெண்களுக்கு நான்சொல்ல நீர்துணையாய் மடமாதே பெண்ணரசே மடந்தைக் கிளிமொழியே தடமான பொய்கையிலே தண்ணீர் தனைச்சுருட்டி ஈசருடமுடியில் இட்டுக் கரங்குவித்து வாசமுடன் நாடோறும் வருகின்ற வேளையிலே இன்றேநீர் கொண்டு ஏகின்ற நீரையெல்லாம் இன்றென் தலையில் இயல்பாய் விடுவுமென்றேன் இரந்து திரியும் ஈசருக்கேயல்லாது பரந்தபுவி மாயனுக்குப் படாதே எனவுரைத்தீர் அப்போது உங்களைநான் ஆகட்டெனவுறுக்கி இப்போது பாரென்று இத்தனையுஞ்செய்தனல்லோ வண்ணத்திருமால் வகையுரைக்க மாதரெல்லாம் கண்ணையவர் பொத்திக் கவிழ்ந்துமிக நாணிநின்றார் அப்போது எம்பெருமாள் அவர்களுடனேதுரைப்பார் ஒப்போடு வொத்த ஓவியங்களே கேளும் நீர்பெற்ற பிள்ளைகள்தாம் நீணிலத்திலேபெருகி வானத்தமிர்தமது பாலமுதாயருந்தி வாழ்ந்தார் சிலநாள் மன்னரெனக் கோட்டையிட்டார் ஆழ்ந்ததொரு சோழன் அவன்பழிகள்ரண்டேற்றான் பின்னுள்ள சான்றோர்க்குப் பிறகுவந்த மாநீசன் அந்நீசன் சாபமிட்டு அவர்கள் துயரமுற்றார் துயரமுற்றுச் சான்றோர் துற்கலிக் குள்ளாகி அயர்ந்து மிகவாடி ஆட்போலே நீசனுக்குத் தாழ்ந்து பணிவிடைகள் சான்றோர்கள் செய்தாலும் வாழ்ந்துமிகக்கெட்டகலி வைதுமிகஅடித்து ஆருமற்றார்போலே அலையுகிறார் சான்றோர்கள் சேருமிடமில்லாமல் தியங்குகிறார் சான்றோர்கள் அப்பனானிருக்க அவரம்மை நீயிருக்க அப்பனம்மையில்லையென்று அடிக்கிறான் நீசனெல்லாம் நீருமித்தனைநாள் நின்று விட்டீரித்தலத்தில் நானும் பரதேசம் நடந்து வந்தேனித்தனைநாள் சான்றோர் துயரம் தான்கேட்பாராருமில்லை மீண்டே நாம்கேட்கவென்று மேதினியில் போகவென்றால் இச்சொரூபங்கொண்டு ஏகினால் மாகலியன் பொய்ச்சொரூபத்துள்ளே புக்கிடுவோமல்லோ என்று நாராயணர் எடுத்துரைக்கக் கன்னியர்கள் அன்றவர்கள் தலையில் அடித்துக்கீழ் வீழ்ந்தழுதார் அழுதாரே பெண்கள் அருவரைகள் தானிளக ஒழுகான பெண்கள் ஓலமிட்டேயழுதார் அய்யோயெம் மக்கள் ஐந்திரண்டானதிலே பொய்யோ மெய்யோசோழன் பொன்றிவிட்ட ஞாயமது கற்பழியாக் கன்னியெங்கள் கற்பையெல்லாம் நீரழித்து உற்பனமாய்ப் பெற்றபிள்ளை ஒன்றுபோல் நீர்பார்த்து வளர்க்காமல் மக்களையும் மாளக்கொடுத்தீரே பழவினையோ யெங்களுட பாவக்குறைச்சலிதோ கற்பிழந்தோமென்றும் கௌவையில்லாதேயிருக்க இப்பிழை வந்தது எமக்குத் தலைவிதிதான் மக்களிருபேரை வதைத்த கொடுஞ்சோழனுட அக்கபக்கமெல்லாம் அறாதோ எம்சிவனே மாபாவிச் சோழனுட வம்மிசங்களானதெல்லாம் தீயாவிக்கொண்டு செத்திடாதோசிவனே எம்மக்கள் தம்மை இடுக்கஞ்செய்தேயடித்த வன்மக்கலி நீசனெல்லாம் வாழ்விழந்து சாகானோ பழிசெய்த சோழனூர் பகலநரி ஓடாதோ வழிசோழ வம்மிசங்கள் வன்னரகில் மாளாதோ நீசக்குலங்கள் நெருநெரெனத் தானொடிந்து தோசப்புழுக்குழியில் தோயாதோயெம்சிவனே பெற்றநாளன்று முதல் பிள்ளைகளைக் காணாமல் நித்தம் பால்சுரந்து நெகிழுதேயெம்சிவனே பெற்றபிள்ளை ஏழுடைய பேருடம்பு தன்னிறத்தை சற்று மறிந்திலமே தலையிலே எழுதுஞ்சிவனே கொதிக்குதேயெங்கள் கும்பிமிகக்குமுறி கதிக்குதே யெங்களுட கண்மணியைக் காணாமல் ஏழுகன்னிமாரில் யார்பெற்ற கண்மணியோ கோளுரைத்துப் பாவி கொன்றானோ யெம்சிவனே கொன்னவன் தானின்னம் கொடுநரகில் வீழாமல் இன்னமிருப்பானோ இறந்தானோ யெம்சிவனே பாவியவன் செத்துப் பஸ்பமாய்ப்போனாலும் ஆவியைக் கண்டாலும் ஆக்கினைகள் செய்திடுவோம் மக்கள் ரண்டு பேரும் மணஞ்செய்து வாழ்ந்தவரோ பக்குவ வயசதிலோ பாழறுவான் செய்தவினை கலியாணஞ் செய்த கண்மணிகளானாக்கால் வலியான மங்கையர்கள் மனஞ்சலித்து வாடுவரே இட்ட வுடைமை இறக்காதிருப்பாரோ கட்டின மங்கிலியம் கழற்றாதிருப்பாரோ இத்தனையுங்கழற்றாது இருக்கச்சிவன்செயலால் புத்திதனைக்கொடுத்துப் பெண்ணரசைக் காப்பாரோ ஏதென்றறிந்திலமே எங்களுட தாயாரே கோதண்ட மாதாவே கோவேயென்தாயாரே வனத்தில் வந்தெங்களுட வாட்டமெல்லாம் தீர்த்தீரென்று புனத்தில்கனி கண்டதுபோல் பிரியமுற்றோம் மாதாவே கைப்பிடித்த பண்டாரம் கட்டுரைத்த சொற்கேட்டு மெய்ப்பிடித்த மெல்லாம் மிகவுழறு மாதாவே கன்னிப் பருவமதில் கைமோசமானதினால் உன்னி மனதில் உளறியுளங்கலங்கி பாராமல் மக்களையும் பார்மீதிலே கிடத்தி சீராக வனத்தில் சென்றோமிகநாணி பாவி கெடுவான் பழிசெய்வானென்றுசொல்லி தாவியே எங்கள்மனம் சற்று மறியாதே எங்களையுமீடழித்து எம்மக்களேழ்வரையும் சங்கையழிக்கத் தலையெடுத்தாரிக்கூத்தர் நச்சுக் களையாய் நாங்கள்வாழுமிடத்தில் சச்சுருவமிட்டுவந்து சதித்தாரே பண்டாரம் எங்களுக்கென்றிவரைப் படைத்தாரோ பிரம்மன் கங்கையணி சிவனார் கேட்டு மகிழ்ந்தாரோ இத்தனைக் கூத்தும் இக்கூத்தெல்லாம்பார்க்க கூத்துவன்போல் தோன்றி கோலங்கொண்ட பண்டாரம் இனியெங்களையேற்று ஈன்றபிள்ளை ஏழ்வரையும் மனுவேழ்குறையாமல் மக்களேழுவழியும் குறையாமல் தந்து குவலயத்தை மக்களுக்கு திறவானத் தங்கத் திருமுடியுஞ் செங்கோலும் கொடுத்தெங்கள் மக்கள் குவலயத்தையாண்டிருக்க அடுத்துச் சிலநாளில் ஆக்கி வைக்காதிருந்தால் ஏழுபெண் பாவம் ஏற்பீர்காண் பண்டாரம் நாளு கடத்தாமல் நடத்திமிகத்தாரும் எங்களையுங் கற்பழித்து இந்த வனந்தனிலே மங்கள சோபனமும் மறந்து மயிர் விரித்து தூங்காமல் வாடி தினமும் மிகவுணர்ந்து ஆங்காரமே மறந்து அவனியாசையறுத்து தலைவிரித்துக் கலையைச் சதமென்று எண்ணாமல் உலையில் மெழுகதுபோல் உறுவனத்திலே நிலையாய் வெயில் பனியிலுமேகத் துளிர் விழிக்குள்ளாகி குயில் கூவும் வனத்தில் கோதையேழு பேரும் நின்றோமே காட்டில் நீர்செய்த மாயமதால் இனியெங்கள் மக்கள் ஏழ்வரையுமேழ்வழியும் அநியாய முமடக்கி ஆனமக்கள் வம்மிசத்தை கொத்தோடே சேர்த்தெடுத்துக் குறுங்கலியை யடக்கி அரசாள மக்களுக்கு ஆனபதி ஈயும்வரைக்கும் எங்களைப்போல் சுகமற்று இருப்பீர்காண் பண்டாரம் மங்களமல்லால் கலி மாளும் வரை வாராது என்று சபித்தார் ஏற்றகன்னி ஏழ்பேரும் அன்று நாராயணரும் அவர்கேட்டுத் துக்கமுற்று என்னசொல்லப் போறோம் யாம்தாமினியெனவே வன்னத் திருமேனி மனது நொந்தேது சொல்வார் பெண்ணே நீரேழ்பேர்க்கும் பிரமா அமைத்தபடி எண்ணம் வந்ததல்லால் யானென்ன செய்தேனடி ஆனால் கலியை அழித்துமக்கள் தம்வழியை நானாகச் சென்றெடுத்து நலங்கொடுக் கும்வரைக்கும் துயர மெனக்குத் தொடுக்குமெனச் சாபமிட்டீர் அசுரக்குடும்பம் அறுக்கும்வரை முன்னாளில் ஈசரிட்ட சாபம் ஈதோடே வாய்த்துதடி மாசங்கடந்து வரும்வரைக்கும் நீங்களுந்தான் எங்கே போயிருக்க ஏழ்பேர்க்குஞ் சம்மதங்காண் கொங்கையினியழகக் கோதையரே சொல்லுமென்றார் அப்போது கன்னி அவரெல்லா மாராய்ந்து செப்புகிறாரந்தச் சிவபத்தர் தன்னுடனே மக்கள்ரண்டு பேர்கள் மாண்டாரவருயிரை அக்கமது செய்தீரோ அயலோவது ஞாயமென்ன என்றுகன்னி ஏழ்பேரும் இரங்கித்தொழுதிடவே அன்று நாராயணரும் ஆதிசிவனுமையும் தாதா மனமகிழ்ந்து சதுர்முகனைத்தானழைத்து வேதாவே மக்கள் ரண்டை வெற்றியுள்ள வைகையிலே கொன்றானே சோழன் குருநன்றியை மறந்து சென்றாரே மக்கள் சென்றவுயிரெவ்விடங்காண் இறந்த பிள்ளைரண்டின் ஏற்றவுயிரானதையும் அறந்தழைக்கு மாகயிலை அறைக்குள்ளடைத்திருக்கு மால்மக்களென்று மனமகிழ்ந்து நான்பதறி வாலைமுனியுயிரும் வானவர்கள் தன்னுயிரும் ஆனதினால் பிறவி அமைக்கப்படாதெனவே நானிதற்கஞ்சி நற்பதியில் வைத்திருக்கு என்றுவேதாவுரைக்க எம்பெருமாளேதுரைப்பார் அன்று படைத்திலையே அநேக மனுவாகுமல்லோ அஞ்சுமக்கள் பிள்ளை அவனியைம்பத்தாறதிலும் மிஞ்சிப்பரந்து மேல்சான்றோர் பெருக்காய் இப்பிள்ளை யிரண்டும் ஏலமே நீர்படைத்தால் கொப்பு நூறாயிரம் போல் கூடிப்பெருகுமல்லோ பாவி கெடுத்தான் படையாமல் நீர்கெடுத்தீர் தாவிக்கெடுத்தான் சளக்கலியன் மாபாவி இனியென் மக்களுயிர் இன்பமுடன் நீர்காத்து மானுடராய்ப் பூமியிலே வைகைக் கூடதுவோடு எழுப்பவேணுமென்று யாம்நிச்சித்திருப்பதினால் வெளுப்பாக அவ்வழியில் மேலுகத்தோர் தாம்பிறந்து இன்பமுள்ள வானவரும் இவ்வழியில் வாழ்வதினால் அவ்வழியிலவ்வழிகள் அநேகம் பெருகிடவே செவ்வாக நீருமிப்போ திடீர்திடீரெனப்படையும் என்றுசொல்ல மூலம் இசைந்து நல்ல வேதாவும் நன்று நன்றென்று நருள்பிறவி செய்தனராம் இப்படியேபிறவி இவர்செய்வோமென்றுசொல்லி அப்பிறவி வேதா அமைத்தார் மனுப்பெருக உடனே நாராயணரும் உள்ளங் களிகூர்ந்து திடமான கன்னியர்கள் திருமுகம் பார்த்துரைப்பார் நீர்கேட்டதற்கு நிண்ணயங்கள் கண்டீரே இனிநான் கேட்பதற்கு இன்னதென்று சொல்லிடுவீர் உங்களைப் பூலோகமதில் உடைய வழிக்குலத்தில் நீங்களும் போய்ப்பிறக்க நிச்சித்திருப்பதினால் ஏதுபெண்காளுங்கள்மனம் ஏதென்றுடனே சொல்லும் மாதுகளெல்லாம் மனமகிழ்ந்து கொண்டாடி எங்களுட நாயகமே எமையாளும் ரத்தினமே செங்கருட வாகனவா தேவி மணவாளா நீர் நிச்சித்த நினைவு எள்ளுப்போலளவும் சீர்பரன் முதலாய்த் தெரியாத சூட்சியதே எங்களைப்பூலோகமதில் எங்கள் வழிக்குலத்தில் மங்களமாய்ப் பிறவி வகுப்போமெனவுரைத்தீர் பிறவியதுநாங்கள் பெண்மனுப்போல் பிறந்தால் இறவியாகாமல் இருக்க அருள்வீரோ அல்லாமல் பின்னும் அடியார் மிகப்பிறந்தால் வல்லாத்த நாயகமே வந்து நீரேற்கு மட்டும் மாதவிடை மாமணங்கள் மலர்ந்துறக்கமில்லாமல் சீதமாய் மனுவோடு உறவாடிச்சேராமல் மூடாமலாடை முகமினுக்கிச் சேராமல் பாடாமல் அந்திசந்தி படுத்துத் துயிலாமல் நன்மையறியாமல் நளிப்பேச்சுக் கேளாமல் தின்மையறியாமல் தீன்ரசத்தைத் தேடாமல் கொய்து புடவை குக்குளித்துச் சூடாமல் மயிரு வளர்க்க மனதுவேறெண்ணாமல் கொங்கை திரளாமல் கூறுடம்பு வீசாமல் செங்கனிவாய்த் தேமல் தேகமதில் வீழாமல் பக்குவஞாயப் பருவம்வந்து வாய்க்காமல் மிக்குவமான மிகுவாழ்வு சேராமல் சுற்றுக்கிளைகள் தொடுத்தன்பு கொள்ளாமல் ஒற்றுப்பிதற்றாமல் ஒருவர்முகம் பாராமல் அல்லல்நோய் பிணிகள் அனுப்போலும் வாராமல் தொல்லை வாராமல் சுகமுமிக வாராமல் இந்த விதிப்படியே எங்களையும் நீர்படைத்து சொந்தமுடன் வந்துநீர் தொட்டெடுத்து நன்மைதந்து இரச்சிப்போமென்று எமக்கு உறுதிபண்ணி நிச்சித்துத் தர்மகுலம் நீர்பார்த்து தான்படையும் என்றுகன்னி ஏழ்பேரும் இப்படியே சொல்லிடவே அன்றுஆதிநாதன் அகமகிழ்ந்து கொண்டாடி நல்லது பெண்ணேநீர் நம்மோடே கேட்டபடி வல்லவிதமானாலும் மாறாதெனவுரைத்தார் வாக்குரைக்க கன்னியர்கள் மனமகிழ்ந்து கொண்டாடி நாக்குரைப்பார் பின்னும் நாராயணரோடு நாங்கள்போய்ப்பிறந்தால் நம்முடைய நாயகமே தாங்கள்வருவதற்குத் தருணமேதென்றுரைத்தார் அப்பொழுது அய்யா ஆதிநாராயணருரும் செப்புகிறார் கன்னியர்க்குச் சிறந்த தருணமது ஆயிரத்தெட்டம்பலமும் ஆன திருப்பதியில் வாயிதமோரம்பலமும் வளர்பதியிலொன்றதுவும் கெங்கையுட கண்ணும் கேள்விமன்னர் தஞ்சாவும் சங்கையழிந்து தலையழிந்ததவ்வாண்டு வருவேன் தென்சுவர்க்க வடமேற்கு மூலையிலே லிங்கமொன்றிலே மூன்று இணையாகத் தோன்றி எங்கும் பிரகாசம் இட்டவ்வாண்டேவருவோம் கண்டிடநீர் நான்வருகக் காரணமநேகமுண்டு விண்டுரைக்கக் கூடாது மெல்லியரே யித்தருணம் சொன்னத் தருணம் செவிகேட்டு நீங்களெல்லாம் என்னை நினைந்து இருங்கோ வொருநினைவாய் இத்தருணங்கேட்ட இப்பொழுதே முதலாய் வடமேற்கு மேற்கும் வடக்குங்கால் நீட்டாதுங்கோ என்று தருணம் இதுவுரைத்தார் கன்னிகட்கு அன்று மடவார் அகமகிழ்ந்து கொண்டாடி நல்லது காணெங்களையும் நாயகமே நீர்படையும் வல்லப்பொருளே மறைமுதலே என்றுரைத்தார் உடனையா நாதன் ஓவியத்தாரேழ்வரையும் திடமான பூமியிலே செய்தர்ம நல்வழியில் பிறவிசெய்தார் மூவர் பிறந்தார்கள் கன்னியர்கள் திறவியொளிமாதர் தேசமதில்பிறக்க நாராயணரும் நல்லசிவனுமையும் சீராரும் நல்ல தெய்வத்திருமாதும் கயிலைதனிலேகி கட்டான மண்டபத்தில் ஒயிலாகக் கூடி உவந்திருக்குமப்போது மாகாளியென்ற வடபத்திரகாளி ஓகாளி யென்ற உயர்ந்த பலக்காரி சென்றாள் கயிலை சிவஅய்யா நாதனிடம் நன்றான கன்னி நாராயணரிடத்தில் வந்து விழுந்து மண்ணிலவள் புரண்டு சந்துபயில் மாயவரே தான்பிழைத்தேன் நானுமக்கு உன்மக்கள் சான்றோர் உற்றமக்களேழதிலே நன்மையற்ற சோழன் நாடும்பழிரண்டேற்றான் கண்டு அடியாள் கரிகாலச் சோழனுட மன்னுதனில் பன்னிரண்டு ஆண்டுமழை பெய்யாமல் சாபித்தேன் சோழனூர் தட்டழியப் பட்டுழற பாவியவ னூரைப் பகலநரி ஓடவைத்தேன் அல்லாமல் சோழனுட அக்கமறச்சாபமிட்டேன் பொல்லாத சோழன்வழி பொடிப்படவே சாபமிட்டேன் இத்தனையுஞ் சொல்லி ஈடழியச்செய்துவிட்டு புத்திரரின் செய்திசொல்ல புண்ணியரே வந்தேனென்றாள் அப்போதனாதி அய்யா நாராயணரும் செப்போடு வொத்தச் சிவனோடு சொல்லலுற்றார் கேட்கலையோயென்றன் கிருபைச்சிவனாரே ஏற்கலையே யிந்த ஏந்திழையாள் சொன்னதுதான் பிள்ளைக்கோர் தீங்கு பிழையாமலெப்போதும் வள்ளல்களை நன்றாய் வளர்ப்பேனானென்றுசொல்லி மருட்டி விழித்து வாங்கினாள் மக்களையும் திருட்டுமொழி பேசும் செய்தியைநீர் கேட்டீரோ நான்தனிமையல்லவே நால்பேருமுண்டல்லவோ தான்தனிமையாகிடினும் தப்பிதமென்றே புகல்வார் வானவருந் தானவரும் மறையவரும் சாட்சியதாய் நானவளோடே வாக்கு நவின்றல்லோ தான்கொடுத்தேன் மக்களுக்கோர் தீங்கு வந்ததேயுண்டானால் மிக்கச்சிறையுனக்கு மேவுமெனவுரைத்து ஈந்தோம் மதலை இவள்கையில் ஈசுரரே மாய்ந்தவுடனாகிடினும் வந்துரைத்தாளோ சிவனே சற்றும் பதறாமல் தானிருந்து இத்தனைநாள் புத்திமேல் நெஞ்சரிப்பாய் போவோமென்றேகி வந்தாள் தன்மதலையென்றால் தலைவைத்திருப்பாளோ என்மதலைக்கிவள்தான் இடறி விழுவாளோ ஒருவர்பிள்ளைக் கொருவர் உடைமை யிடுவாரோ கருதல் விருப்பம் காணுமோ மற்றோர்க்கு பெற்றகும்பியல்லோ பெருங்கனல்போல் மீறுவது மற்றோர்கள் கும்பி வருந்திக் குமிறிடுமோ பாவியவன் கொன்று பன்னிரண்டாண்டுவரை ஆவியறிந்திலையே ஆரும்வந்து சொல்லலையே தாய்தகப்பனில்லார்போல் தயங்கினது கண்டோமோ சேய்பரனுக்கேராத செய்த பழவினையோ என்றாதி நாதன் ஏந்திழையைத்தான்பார்த்து சென்றாதி வேந்தர் செடத்தோடு உயிர் திரும்பி எழுந்திருக்கு மட்டும் இருநீ சிறையென்று குளிர்ந்த திருமேனி கூறினாரந்தரிக்கு கேட்டுமாகாளி கிலேச மிகவடைந்து தீட்டும் வடவாமுகத்தில் செய்யவன்னி மண்டபத்தில் இருந்தாள் தவசு ஈசன் செயலெனவே வருந்தாத கூளிகணம் வாதைவிடுபேய்களெல்லாம் நாச்சியார்க்கிச்சிறையால் நமக்கென்ன கேடோ கேச்சியாய்த் தேசமதுக் கென்னகேடோ அறியோம் என்று சிலபேய்கள் எண்ணியெண்ணியேதிரியும் மூன்று முறுக்குள்ள மூளிப்பேயேதுசொல்லும் கைவாய்த்து மாகாளி கவிழ்ந்திருந்த ஏதுவினால் மெய்வாய்த்து தென்று விளியிட்டுக் கொண்டாடும் இப்படியே பேய்கள் எண்ணஞ்சில திண்ணமுமாக அப்படியே காளி அவள்சிறையிலேயிருந்தாள் நல்ல நாராயணரும் நாடுஞ்சிவனாரை வல்லப் பொருளே மறைகாணாதோவியமே காளி சிறைதான் கவிழ்ந்திருக்க ஞாயம்வந்தால் ஆழிவளை வையகத்தில் ஆர்க்குச் சுகம்வாய்க்கும் முதற்றான் கலியை முடிக்கப் பரகாளி விதத்தமுள்ள அக்கினியில் மிகவே சிறையிருக்கப் பார்த்து நாமிங்கிருக்கப் படுமோகாணீசுரரே சாற்றும் நீரின்னதென்று சத்திகொண்ட ஈசுரரே உடனேதான் ஈசர் உரைக்கிறாரன்போரே கடனோகாணென்னோடு கலங்குமொழி பேசுவது நானோ தடுத்தேன் நாட்டுக்கலி தீட்டறுக்க ஏனோகாண் மைத்துனரே என்னோடு பேசுவது எப்போ கலியழித்து எங்களுக்கு நற்பேறு எப்போ தருவீரென்று எண்ணிமிக வாடுறோமே தீட்டை மிகக்கழித்துச் சிவஞான முத்திதந்து வீட்டையெப்போ கயிலை விளக்குவீரென்றுமிக தவித்து முகம்வாடித் தானிருக்கும் ஞாயமதும் குவித்து முகம்மலர்ந்து கொள்ளுவதுங் காணலையோ

மகாலெட்சுமி மகரமாதல் என்றே ஏகாபரமும் எடுத்துரைக்கஎம்பெருமாள் நன்றென்றாகட்டெனவே நாரணருங்கொண்டாடி லட்சுமியைத் தானழைத்து ஏதுரைப்பாராதிமுதல் சச்சுடராய் நின்ற தருணத்திரவியமே இதுமுன் பிறப்பு இருந்தாய் ருக்மணியாய் மதுவினியப் பெண்ணே மாயக்கலியறுக்க நான்நிச்சித் திருப்பதினால் நாயகியே நீயுமொரு பூனிரைச்சப் பொன்மகரப் பெண்மயில்போல் நீவளர அலையிலறுமுகவன் அவன்பதியினாழிதனில் நிலையிலே நின்று நீவளரு கண்மணியே நீவளரச் சூழ நிறைந்த தங்கமாமணியால் பவளக்கால் மண்டபமும் பவளமணி மேடைகளும் தேனினிய மண்டபமும் தேரும்பூங்காவனமும் சூழ அரங்குவைத்துத் தெய்வரம்பை சூழவைத்து காளமொடு பேரிகையுங் கண்ணாளர் சூழ்ந்துநிற்க அகரத் தெருவும் அரம்பையர்கள் தம்தெருவும் சிகரத் தெருவும் சேர்த்துவைப்பேனுன்சூழ நித்தம் வலம்புரிகள் நின்றுவுனைச் சூழ்ந்து தித்தியெனவே முழங்கி சேவிக்க வைத்திடுவேன் கோட்டைகள் சூழக் கோடிமண்டபமுகித்து வீட்டலங்காரம்போல் வேலையிலுந்தருவேன் உந்தனுட மேனி உரைக்கெளிதாத்தங்கமெனச் செந்தழல்போல் மகரச் சிலைபோல் வளர்ந்திருநீ கலியுகத்தை முடிக்கக் கண்ணான ஒருயிரை வலியுடனே யுன்னுடைய வயிற்றில் பிறவிசெய்து நாட்டு நருளின் நகர்சோதனைபார்த்துத் தீட்டுக் கலியறுத்துச் செவ்வுமனுதானெடுத்து நாடுன் மகன்றனக்கு நல்ல முடியுங்கொடுத்து தேடுந்தர்மச்சீமை செலுத்தசெங்கோல் கொடுத்து அரசாள வைக்கவொரு ஆண்பிள்ளை நீபெறவே துரைசானி போவெனவே சொன்னார் காணம்மையுடன் கேட்டு மகாலட்சுமியும் கிளிமொழி வாய்திறந்து நாட்டுக் குடையவரே நாராயணப்பொருளே மகரச்சிலையாய் வாரிதனில் நான்வளர்ந்தால் சிகர நற்கோபுரமே திருவுளமே நீர்தானும் வருவது என்ன விதமாகவுருவெடுத்து அருகில் நீர்வருகும் அடையாளமென்னவென்றாள் அப்போது அய்யா ஆனந்தமேபெருகி செப்புகிறோமென்று திருவோடு ஏதுரைப்பார் தெச்சணா பூமிதனில் தேசபரசோதனைக்கு நிச்சயமாய் நான்வருகும் நிசத்துக்கடையாளம் பூமியிலோர்திக்குப் பொருந்தி மிகவாழும் சாமிவேதம் மறந்து சுழல் வேதமுண்டாகும் சாதி வரம்பு தப்பி நிலைமாறும் பாரிகட்கு மூப்புப் பார்மீதிலுண்டாகும் நீசக் குலங்கள் நெளுநெளெனப்பூமிதனில் தூசியிடத் தெண்டம் தொடர்ந்து பிடிப்பார்கள் வானத் திடிகள் வருடவருடந்தோறும் நீணிலத்தில் வீழும் நின்று மலைமுழங்கும் சீமை தென்சோளம் சீர்பயிரு மேவிவரும் இலைகள் கருகும் இறைவேதம் பொய்யாகும் தலைக்கண் படலம் தட்டழிய ஓடிநிற்கும் நச்சேத்திரமுதிரும் நடக்கும் வழிகுறுகும் பொய்ச்சேத்திரக்குருக்கள் பூமிதனில் மேவிவரும் நவ்வா துலுக்கு நாட்டில் கலசல்வரும் சிவ்வாலயங்கள் தேய்ந்து சுவரிடியும் கிணறு பாழாகும் கீழூற்றுப்பொய்யாகும் இணறு பெருத்து ஏங்குவாரே மனுக்கள் மனுக்கள் தங்களுக்கு மாகலசலுண்டாகும் மாமோக ஆசையினால் மாசண்டையாகிவரும் காமோக வெறியால் கனபழிகளுண்டாகும் மாதாவைப் பிள்ளை வைப்பு நினைத்துநிற்கும் தாதாவை வேலை சந்ததிகள் கொண்டிடுவார் மாடாடு தன்வயிற்றில் மனிதர்போல் தான்பிறக்கும் கோடானதுபெருத்துக் கொல்வார் சிலபேரை காணிக்கை வேண்டல் கைக்கூலி தான்மீறும் மாணிக்கத் தங்கம் வையிரமிகமறையும் நீணிலத்தில் பேய்கள் நிரந்துமிகக்கோட்டிசெய்யும் மாநிலத்தில் வேளாண்மை மழையில் மிகக்கேடுவரும் பேதையர்கள் பிள்ளை பிறக்குமதிசயம்போல் கோதையர்கள் கொங்கை கூடாமலே வாழ்வார் கூடப் பிறப்பைக் கொடும்பகைபோல் எண்ணிடுவார் ஊடப் பிறப்பை உள் நினைப்பார் வைப்பாக வான முறுமும் மழைகீழ்ச் சொரியாது தானமழியும் சாஸ்திரங்கள் பொய்யாகும் ஈனருக்குக் காலம் ரெம்பரெம்பவுண்டாகும் வீணர் பெருப்பார் வீடதனைக் கெடுப்பார் தாணருட வேதம் தலையழிய விட்டிடுவார் பொய்வேதம் பூமிதனில் பெருத்துமிகவுண்டாகும் மெய்வேதந் தன்னை விரும்பாதிகழ்ச்சிசெய்வார் கள்ளர் பெருப்பார் கறியுப்புமேமலியும் கொள்ளையாய்ச் சம்பை கோடாமுக்கோடியுமாய் நாணியிறப்பார் நஞ்சித்தின்றேயிறப்பார் கேணிக்குள்ளேயிறப்பார் கீறிக்கொண்டேசாவார் வயிரமுழுங்கி மாள்வார் சிலபேர்கள் துயரம் பொறுக்காமல் தோயமதிலே விழுவார் ஈக்கள் பெருகும் எறும்பு மிகப்பெருகும் காய்கள் பெருகும் கஞ்சா அபின்பெருகும் சன்னாசி நிஷ்டை தவறியலைவார்கள் ஒன்னாமது சாதி உலைமெழுகு போலலைவார் கட்டழிந்து பெண்கள் கற்பு மிகத்தவறும் சட்ட மழியும் சந்தியம்பல மிடியும் கூட்டங்குலையும் குடும்பம் பகையாகும் நாட்டையரசாங்கம் நாலுரண்டு மூன்றாகும் கோட்டையழியும் குச்சிக்கட்டைமதிலாம் சீவசெந்தெல்லாம் தீனில்லாத்தட்டழியும் சூவை பெருக்கும் சூறாவளிமீறும் அக்கினியால் தண்ணீரால் அநேக சீமையழியும் முக்கியமாய் லோகமதில் வாந்தி மிகமீறும் இப்படித்தானல்லாமல் இன்னுமநேகவளம் செப்பத்தொலையாது செப்புவேன் பின்னுனக்கு நீகேட்டதற்கு நிலையாக இத்தனையும் நான்தேட்டமாக நாடியுன்னோடுரைத்தேன் மூன்று சடையில் முறுக்குச்சடையொன்றெனவும் பண்டுள்ள சூரியர்கள் பதிந்திருக்குமென்விழியில் நெற்றிதனில்பிறையும் நெடியவட அக்கினியும் சுற்றிக்கனல்மேனி துய்யமாற்றெண்ணாயிரமாம் பளிரெனவேலோகம் பதினாலுக்கோருருவாய் துளிரெனவே வாரிச் சூழல வெகுகனலாய் காதம் பன்னிரண்டில் கண்டகலியன்றெரிய தீதக்கனலாய்ச் செயகுண்டமும் பதித்து காலில் தர்மமணியைக் கலிரெனவே தண்டையிட்டு மேலில்பல வேதமதை மின்னுடம்பாக விரித்து பெண்ணரசே நான்வருகும் பெருமைக்கடையாளம் கண்ணரசே நீயுமென்மேல் கருத்திருந்தால் பிழைப்பாய் அப்படித்தானென்பிறவி அருகே வருகையிலே இப்படியே வந்து இருவருமோர் பிள்ளைபெற்று நாட்டுச் சோதனைக்கு நாமனுப்பித் தாம்பார்த்து கோட்டிசெய்த பாவி குறுங்கலியைத்தானெரித்து அதின்மேலுனக்கும் எனக்கு மிகு ஆனந்தம் அதுவாக நாம் ஈன்ற மதலை நாடாளுமடி உன்பேரால் நானும் உள்ளாசை கொண்டிருந்து உன்பேராலென்றனக்குத் தலைச்சிறைதான் மாறுமென்று சொன்னேனுனக்கு சொல்லுவேனின்னமுமே என்ன இனிப்பிறக்க ஏதுனக்குச் சங்கடங்கள் என்று பிறவிக்கு ஏற்றஅடையாளமுரைத்து நன்றினிய மாதே நடப்பதற்குச்சங்கடமேன் உடனேதான் லட்சுமியும் உரைக்கிறாளாதியுடன் திடமான கோவே செய்ய மணிவிளக்கே என்னை மகரச் சிலைபோல் பிறவிசெய்ய என்ன விதமாய் இசைவீர்காணென்கோவே என்றுரைக்க அம்மை ஏதுரைப்பாரெம்பெருமாள் நன்று நன்று பெண்ணே நமக்குத்தொழிலோகடிது அலையில் திருவையும் ஆமதியப்பொன்மகரச் சிலைபோல் வளருவெனச் சிந்தித்தாரெம்பெருமாள் வடகயிலை வாசலிலே வந்தலைந்த வாரிதிரை மடமடென வந்து வாரியெடுத்தாயிழையை செந்தூரலைவாரி திரைமேலெடுத்திருத்தி அந்தூரு வாரி அம்மைதனையெடுத்து சந்தன வாரி சமுத்திரத்தினுள்ளிருத்தி பந்தியாய் வைத்த பரமமணிக்கோட்டையதுள் தெய்வரம்பை சூழத் தேவரெல்லாமோலமிட மெய்பரமக்கன்னியர்கள் மிகுவாய்க்குரவையிட இடம்மானமெக்காளம் டகுடகாவென்றிடவே மடம்மான வாத்தியங்கள்மடமடெனவேயதிர வலம்புரிகளெல்லாம் மாதுவந்தாளென்றூத சிலம்புனைந்த ரத்தினங்கள் சில்விளக்கேந்தி நிற்க முத்துகள் சிப்பி முன்வந்தொளிவீச கொத்துக் கொத்தாகக் கோமேதகஞ்சூழ கன்னிமாரெல்லாம் கால்கவரி வீசிநிற்க தன்னிகரில்லா மறையோர் சாஸ்திரங்களோதி நிற்க மகரச் சிலையாள் மாதுதிருலட்சுமியாள் சிகரகோபுரத்தாள் திருவுருவந்தான் வளர்ந்தாள் பார்பதி மாதுமையும் பரமேஸ்வரித் தாயும் சீர்பதியுமங்கே தினமூன்று நேரம்வர ஈஸ்வரனும் வேதா இவர்கள் தினம்வரவே வாசவனும் வானவரும் வந்து நிதம் போற்றிசெய்ய செய்ய அமரரெல்லாம் சிவசிவா வென்றுநிற்க வெய்யவனுஞ் சந்திரனும் மெல்லிபதம் போற்றிநிற்க புஷ்ப மலர்தூவிப் பொன்னுலகத்தோர்சூழ செப்பமுள்ள மகரச்சிலைபோல் திருவளர்ந்தாள் மாதுதிருலட்சுமியாள் மகரச்சிலைபோலே ஒது மணியலைக்குள் ஒவியம்போலேவளர மாதை மகரச் சிலையாய் வளரவிட்டு தாதணியும் நாதன் சங்கரரோடேதுரைப்பார் கூட்டுக்கிளி போலிருந்த கொடியிடையைப்போகவிட்டு நாட்டிலிருப்பேனோ நம்முடைய மைத்துனரே சீதை மகரச் சிலைபோலங்கேவளர பாதையது தேடாமல் பதிந்திருக்க ஞாயமுண்டோ அப்போதுசிவனார் அவரேது சொல்லலுற்றார் செப்போடு வொத்த திருமாலே நீர்கேளும் நடத்தும்படியுள்ள ஞாயமெல்லாமிப்போது சடைத்து இருக்காமல் தானடத்துமென்றுரைத்தார் அந்தப்பொழுதில் ஆதிநாராயணரும் சிந்தை மகிழ்ந்து செப்புவாராதியோடு நல்லது காணீசுரரே நாடுந்தேவாதிகளில் வல்ல சம்பூரணனும் வாய்த்த எமலோகமதில் பரதேவதையான பைங்கிளியுந்தேவனுமாய் மருவனைய மாதும் மன்னவனுமாய்ப்பிறக்க உருவேற்றி நம்மை உயர்ந்ததவஞ்செய்திடவே ஆனதாலவரை அவனிதனிலேபிறவி ஈனமுடனமைக்க இதுநாளாகுவதால் நின்றந்தத் தேவனுட நிஷ்டைநிறை வேறினதோ என்றெனவே பார்க்க எழுந்தருளு மீசுரரே அப்படித்தானீசுரரும் ஆதிநாராயணரும் இப்படியே தேவனிடம் ஏகின்ற வேளையிலே தேவரெதிரே தெய்வேந்திரன் தானும் மூவர் நடுவண் முத்தனரி நாரணரின் சங்கு சக்கரம்போல் தங்கநவரத்தினத்தால் எங்கு மொளிவீசும் இரத்தினத்திருமுடியைச் சூடித்தெய்வேந்திரனும் சிவனெதிரே போகவென்று நாடியகமகிழ்ந்து நாராயணருடனே சந்தோசமாகத் தான்வருகும் வேளையிலே கண்டு சம்பூரணனும் கைமறந்து நிஷ்டையது பண்டு மையலாய்ப் பாவையோடேதுரைப்பான் மானே கேளிந்த வானவர்கோன் தன்சிரசில் தானாகியமான சங்குசரத்தங்கமுடி என்தலையிலேவைத்து ஏந்திழையே உன்னோடு தென்தலைவரத்தினச் சிங்காசனமீதில் இருபேரும் வாழ்ந்து இராசதுரைத்தனமாய் பெருக்கான தெய்வகன்னி பெற்ற மனுவழியை எல்லாமருகிருத்தி ஏற்றவொரு சொல்லதுக்குள் வல்லான நீத வையகத்தையாண்டிருந்தால் எத்தனையோ நாமள் இலங்கு மகிழ்ச்சையுடன் வர்த்தனையாய் வாழ்வதற்கு வாய்த்தமுடி ஈதல்லவோ என்றுசொல்லத் தேவன் இச்சைகொண்டு பெண்ணாளும் நன்றுநீர் சொன்னமொழி நல்லாயிருக்குதுகாண் அப்படித்தானம்மை ஆதிசிவன் படைத்தால் இப்படியும் படைத்தோர் இறவாதிருப்பாரோ என்றுபெண்ணாளுரைக்க ஏற்றசம்பூரணனும் அன்று பெருமூச்சு அலைபோலெறியலுற்றான் அந்தப் பொழுதில் ஆதி சிவமுதலுடன் வந்தங்கு நின்றார் மாகிருஷ்ண மாலவரும் கண்டந்தத் தேவன் கைமறந்த நிஷ்டையோடு தண்டமிழ்சேர் பதத்தைத் தையலும்வந்தே வணங்கி இத்தனைநாள் யாங்கள் நின்றதவம் கண்டிரங்கி சித்தமிரங்கிச் சிவனேநீர் வந்தீரோ எந்தன் பெருமானே இறையவரே வந்தீரோ நந்தகோபால நாரணரே வந்தீரோ குருவே அரிநாதா கோபாலா வந்தீரோ முருகக் குருபரனே முத்தாநீர் வந்தீரோ செல்வக் கடலே சீமானே வந்தீரோ கல்விக் கடலான கறைக்கண்டா வந்தீரோ அரவணிந்தத்திவுரித்து அணிந்தோரே வந்தீரோ பரமசிவமான பச்சைமால் வந்தீரோ இப்படியே மானாளும் ஏற்றசம்பூரணனும் அப்படியே வந்தோர் அடிபணிந்து போற்றிடவே மாய பரனும் மனமகிழ்ந்து கொண்டாடி ஆயனைப் பார்த்து அருளுவாராதியுமே மாயவரே கேட்டீரோ வாய்த்த இத்தேவனுந்தான் தூயவரே நின்றதவம் துலைத்தறுத்தானில்லையிவன் முற்றுந் தவமும் முழுதும் நிறைவேறுகையில் சிற்றின்பமாகித் திருமுடிமேலிச்சைகொண்டு வாடியயர்ந்தான் மங்கையருந் தேவனுமே நாடியிவன்தனக்கு நல்வளமையேதுசொல்வீர் அப்போது நாரணரும் அகமகிழ்ந்து கொண்டாடி செப்புகிறாரந்தச் சிவனோடு எம்பெருமாள் ஏது விதமாய் இருந்ததவமேகுறைய தீதுவந்த ஞாயம் செப்பிடீரென்றுரைத்தார் அப்போ சிவனார் அகமகிழ்ந்து தேவனோடு இப்போதுன்சிந்தை எண்ணமெல்லாஞ் சொல் என்றார் தேவனதைக்கேட்டுச் சிந்தை மிகக்கலங்கி ஆவி மறுகி அவனேது சொல்லலுற்றான் காரணரே நாங்கள் கருத்தில் நினைத்ததெல்லாம் பூரணமாயங்கே புகுந்துதோயென்சிவனே ஐயோநான் சொன்னேன் என் ஆயிழையோடல்லாது கையோ கண்ணாலே காணேனே மற்றொருவர் ஊமை மொழிபோல் ஒதுக்கிலுரைத்தாற்போல் நாமறியப் பெண்ணறிவாள் நாடறியாதென்றிருந்தோம் இவர்களறிவதற்கு யார்சொல்லிப் போட்டாரோ எவர்களும் நாம் பேசுகையில் இங்குவரக் காணோமே ஆர்சொல்லிப் போட்டாரோ அறியோமேயென்சிவனே தார்சிறந்த என்சிவனே சர்வ தயாபரனே பூரணனே வாசவனே பொறுத்தினிக்கொள்ளுமையா நாரணரே என்சிவனே நாடிப்பொறுவுமையா என்றுசொல்லித் தேவன் ஏற்ற விருத்தமதாய் நன்றினிய முப்பொருள்மேல் நற்போற்றலேபடிக்க பரதேவதையான பைங்கிளியு மப்போது திறமான தாயார் சிவசக்தி பேரதிலும் சிவநாமப் பேரதிலும் ஸ்ரீகிருஷ்ணர் பேரதிலும் விவமான ஆசிரிய விருத்தம்போல் போற்றலுற்றாள்

காரணா அரிநாரணா கவிபூரணா வெகுதோரணா கவிஞோர் தொழும் வாரணா கருணாகரத் தருணா வெகுதருணா கவிவருணா கவிமால் சிவாபோற்றி நாரணா அரிபூரணா வந்தருள் நான்செய்த குற்றம் பொறுத்து காரணா வைகுண்டம் கருத்தாய் அருள்வாயே கருணாகரா போற்றி

குணசீரா வெகுதீரா நலிவீரா புவிநாதா திருவோடுறு மார்பா சிறியார்மிக அறியாச்செய்த வெறியானதை சிறிதாக்கியே சேர்ப்பாய் முகம்பார்ப்பாய் முடிவானதையறியாமலே மோகமாய் வெகுதாகமாய் உளறித் தவங்குளறியே உன்சொற்பத மஞ்சலென ஒஞ்சிப்பதம் அஞ்சினோம் உன் செயல்தந்தருள்வாயே

இப்படியே கன்னி ஏற்ற பரதேவதையவள் அப்படியே ஆசிரிய விருத்தமொன்று பாடிடவே கேட்டு அரிநாரணரும் கிளிமொழியைத் தான்பார்த்து மெட்டுக்கொடியிடையே மின்னிடையே நீகேளு உன்புருஷனையங்கே உற்றஎமலோகமதில் இன்புருகி வாடி ஏங்கித்தவிக்கவிட்டு அவனைநீ மறந்து ஆனதெய்வப்பூரணனை இவனை மிகத்தாவி இருந்த தவமதிலும் நிறைவேற மாட்டாமல் நினைத்தகேடித்தனையால் பிறபோநீ பூமிதனில் பெரியசான்றோர்வழியில் எமவழியிலோர்பிறவி என்மகவாயங்கிருக்க அமைப்பானதற்கு அவ்வழிதானாயிழையே இந்தத் தவக்குறைக்கு இன்னமங்கே நீபிறந்து முந்தப் புருஷனுக்கு முன்வேலையுங்கழித்து அழுந்தத் துயரப்பட்டு அவனூழியங்கள் செய்து குளிர்ந்த மொழியற்றுக் கூடுஞ்சரசமற்று எந்நேர முன்றனக்குள் ஏக்கமுட னழுந்தி மின்னேகேளிந்த மிகத்தேவனுன்வழியில் கொண்ட பச்சத்தாலே கோதையரேயுனையும் கண்டிச்சை கூர்ந்து கர்மக் கடுவினையால் கருவாலுருவைக் கைக்குள் வசமாக்கிப் பருவா பருவமதில் பாவையேநீ யிவனோடு இருவரொருவரென இச்சைமிகக் கூர்ந்து குருவை மறந்து கொண்டவனைத் தான்மறந்து தாய்தகப்பன் மாமன் தமையன் தனைமறந்து வாயிற் படிமறந்து வாழ்வை மிகமறந்து சொந்த மனைமறந்து சுகசோபன மறந்து சந்தோச மற்று சகலோர்க்கும் நாணமுற்று முற்புருஷன்தனக்கு மூலக்கருக்கேடணைத்து இப்புருஷன் தானெனவே எவ்வுலகுந் தானறிய கட்டிய மங்கிலியம் காசினியோர் தாமறியக் கெட்டினாற் போலே கீர்த்தி மிகப்பிறந்து மேலும்பல தொந்தரவு மிகுநாள் வழிதோறும் கேலி மிகவாகிக் காலத்தில் கதியடைவாய் என்று சிவனாரும் எம்பெருமாளுமுரைத்து அன்று ஏமச்சண்டன் அவ்வழியிலேயமைத்தார் அமைக்க அணங்கும் அவனிதனிலேபிறக்க எமக்குலத்தில் வந்து இயல்பாய்ப் பிறந்தனளாம் மாது புவியில் வளரப்பிறந்தபின்பு தாது கரமணிந்த சங்கு சரத்தாமன் தேவனைப்பார்த்துச் செப்புவாரெம்பெருமாள் பூவுலகிலுன்றனுட பெண்பிறக்கப்போனதல்லோ ஏதுநீ தேவா இனியுனது செய்தியென்ன சீரொத்தத் தேவன் திருப்பாட்டு ஓதலுற்றான்

ஆறுசெஞ்சடைசூடிய ஐயனே அலையிலேதுயிலாதி வராகவா நீறுமேனி நிரந்தரம்பூசிவா நீ சிவாசிவ மைத்துன ராகவா வீறுசத்தி மணவாளரானவா வீரலட்சுமி மன்னரரி ராகவா ஏறுமீதிலேறிடுமீஸ்வரா எமை ஆட்கொள்ளும் நாரணா போற்றி

சீதமாங்குணச்செல்வனே போற்றி சிவசிவா சிவனே போற்றி நீதவா நட்பெய்துவா போற்றி நீசிவா சிவராகவா போற்றி மாதவா அரிகேசவா போற்றி வல்லனே அரி செல்லனே போற்றி ஆதவா அரிநாரணா போற்றி அனாதியேயுன்போற்றிப் போற்றி

அய்யனே தவம் யானிற்கும் போதிலே அந்திராணி மன்னன் இந்திரனானவன் பொய்யின் மாய்கை நினைவதினாலவன் பொற்பக்கிரீடமீதுஉற்பனதாசையால் மெய்யின் ஞானத்தவம் விட்டுவாடினேன் வித்தகாவுன் சித்தமிரங்கியே செய்யும் பாவவினை தவிர்த்தாண்டருள் சிவசிவ சிவசிவ சிவனே போற்றி

போற்றி என்றேத்தித் தேவன் பொற்பதம் வணங்கி நிற்க ஆத்தியே சூடும் வேதன் ஆகமே மகிழ்ச்சை கூர்ந்து தீத்திய ஆயனோடு செய்தியேதெனவே கேட்க நாற்றிசை புகழுந்தெய்வ நாரணருரைக்கின்றாரே

தேவன் வணங்கித் திருப்பாதம் போற்றிடவே ஆயனோடந்த ஆதிசிவமேதுரைக்கும் அச்சுதரே தேவனுக்கு ஆன வளமையது நிச்சயமாய்ச்சொல்லி நீரனுப்புமென்றுரைத்தார் அப்போது நாரணரும் உள்ளமகமகிழ்ந்து செப்புகிறோமென்று தேவனுக்கங்கேதுரைப்பார் கேளாய் நீ தேவா கீழான மங்கையரைத் தாழாத மேல்வகையில் சரியாக்க வேணுமென்று நின்றாய் தவத்தில் நினைவொன்றைத் தானாட்டி சண்டாளா நீ நினைத்த நினைவு தவத்தொத்திடுமோ சூழ வினையறுத்துச் சுருதிநேருள்ளாக்கி நீளநூலிட்டு நீதவசு நிற்கையிலே ஆசை நினைவாமோ அறிவுகெட்ட மாதேவா பாச மறுத்தல்லவோ பரகெதியைக் காணுவது ஏதுகாணுன்றனக்கு இந்நினைவு வந்ததினால் மாது பிறந்ததுபோல் வையகத்தில் நீபிறந்து இந்த நினைவதற்கு இனிப்பிறந்து நீ சிலநாள் தொந்துயர மெல்லாம் தொல்புவியிலேதொலைத்து கண்டந்த மங்கையரைக் கருவால் வசமாக்கிக் கொண்டு திரிந்து கோதையரின் தன்னாலே நஞ்சு தின்றானாலும் நாண்டுகொண்டானாலும் உன்சீவன் மாய்க்க உனக்கு மனதாகி பின்னுஞ்சிலநாள்கழித்துப் பெண்ணோடுறவாடி தன்னோடு நீ தவித்திருக்கும் நாளையிலே உன்துயரந்தீர்த்து உன்னை நான் ஆட்கொண்டு சொன்னபடி நற்பேறு உனக்கருளுவேன்என்று கர்மக்கடன் கழிக்க கலியுகத்திலே பிறக்க தர்மச்சம்பூரணனைத் தரணிப்பிறவிசெய்தார்

திருமால் கலைக் கோட்டுமுனிக்கு உரைத்தது எண்ணமினியில்லையென்று கொண்டாடி மாயவரும் கெண்டையக்கண்ணீசுரரே கேட்டீரோயென்றனெண்ணம் பஞ்சவர்க்கு அஞ்சல்செய்து பார்மீதில் நானிருக்க வஞ்சக நீசக்கலியன் வந்தது கண்டேபதறி நடுநடுங்கி நானோட நல்லகலைக் கோட்டுமுனி பொடுபொடென வந்தான் போற வழிதனிலே ஏன்காணும் மாயவரே எய்த்திளைத் தோடுவதேன் கண்காணாப் போறேனென கலைக்கோட்டுடனுரைத்தேன் என்ன விதத்தாலே என்றேயவனிசைய சொன்னதுறு கலியன் சூட்சியினாலென்றவுடன் இப்போநீ ரோடுகிறீர் இவனையழிப்பதற்கு எப்போ வருவீர் இசையுமென்றான் மாமுனிவன் மாமுனியே நீகேளு வஞ்சகநீ சக்கலியை நாமுன்னின்று கொல்ல ஞாயமில்லை கேட்டிடுநீ கலியனுட கண்ணு கண்டால் பவஞ்சூடும் திலிய அவனுயிரைச் செயிக்கயெவரால் முடியும் முன்னின்று கொல்ல மூவராலுமரிது பின்னின்றவனவனால் பேசாதே மாளவைப்பேன் வல்லமையுங்காட்டேன் மாநீசன் கண்ணின்முன்னே உற்பனமுங்கொடேன் ஒன்றறியா நின்றிடுவேன் வந்தேனெனச்சொல்வார் வரவில்லையென்றிடுவார் என்றன்பேரோகாணும் யாரோஎனச் சொல்வார் இதோவந்தானென்பார் இவனில்லையென்றிடுவார் அதோவந்தானென்பார் அவனில்லையென்றிடுவார் இப்படியே சூட்சமொன்று எடுப்போம்நாம் மாமுனியே எப்படியு முள்ளறிவோர் எனையறிவார் மாமுனியே அறிந்தோரறிவார் அறியாதார் நீறாவார் செறிந்தோர்கள் வாழ்வார் சேராதார் போய்மாழ்வார் சாத்திரத்திலுந்தோன்றேன் சதுர்மறைதாண்டிநிற்பேன் சேத்திரத்திலுமடங்கேன் செய்தவத்திலுமடங்கேன் அன்பிலுமடங்கேன் அறத்திலுமேயடங்கேன் வம்பிலுமடங்கேன் வணங்கிடிலுமடங்கேன் கும்பிடிலுமடங்கேன் குவித்திடிலுமடங்கேன் நம்பிடிலுமடங்கேன் ஞானத்திலுமடங்கேன் யோகக்கிரியை உறுசரிதையிலடங்கேன் விற்பனத்திலடங்கேன் வினோதமதிலடங்கேன் சொற்பனத்திலடங்கேன் தெரிசனத்திலடங்கேன் கனாவிலடங்கேன் கைகாட்டலிலடங்கேன் அனாவிலடங்கேன் அச்சரத்திலுமடங்கேன் இத்தனையிலுமடங்காது இருந்து பகைமுடிப்பேன் என்றுநான் சொல்ல ஏற்றகலைக்கோட்டுமுனி மன்றுதனில் வீழ்ந்து மறுகியழுதே புலம்பி

மண்ணிலுமடங்கா மரத்திலு மடங்கா மறையிலுமடங்கா பலவசத்திலுமடங்கா கண்ணிலுமடங்கா கருத்திலுமடங்கா கவியிலுமடங்கா பலவிதசெபிப்பிலுமடங்கா எண்ணிலுமடங்கா இகத்திலுமடங்கா இறையினிலடங்கா இரங்கிலுமடங்கா ஒண்ணிலுமடங்காத உனைவந்தடைந்திட உரைத்திடமருளென பதத்தடிமிசை விழுந்தான்

மறையினிலடங்கா இறையினிலடங்கா வணங்கிலுமடங்கா பலவகையிலுமடங்கா துறையினிலடங்கா தொல்வியிலடங்கா சுகயினிலடங்கா சுருதியிலடங்கா உறவிலுமடங்கா ஒளியிலுமடங்கா உகத்திலுமடங்கா ஒருவிதத்திலுமடங்கா புறத்திலுமகத்திலுமடங்கா உனையடைந்திட வகுத்துரையென பதத்தடிவிழுந்தான்

சரியையிலடங்கா கிரியையிலடங்கா சையோகத்திலடங்கா ஞானத்திலடங்கா கருத்தினிலடங்கா கலைக்கியானத்திலடங்கா கனாவிலுமடங்கா கருவிலுமடங்கா உருவிலுமடங்கா உருகினுமடங்கா ஒன்றிலுமடங்காத உனைவந்தடியாருன தருகினிலடங்கிட அருளுரைத்திடுவென அருள்முனிபதத்தடி மிசை விழுந்தான்

உகத்திலுமடங்கா ஓதிலுமடங்கா உணர்விலுமடங்கா உற்பனத்திலுமடங்கா தவத்திலுமடங்கா தழுவிலுமடங்கா தனத்திலுமடங்கா தயவிலுமடங்கா அகத்திலுமடங்கா புறத்திலுமடங்கா அசத்திலு மடங்கா புசத்திலுமடங்கா மனத்தகத் தடக்கியுன் பதத்தடி பணிந்திட வகுத்துரையருளென பதத்தடிமிசை விழுந்தான்

ஓரெழுத்து மீரெழுத்தும் உற்ற பரமூன்றெழுத்தும் ஆறெழுத்துமஞ்செழுத்தும் ஆனா அரியெழுத்தும் ஏதெழுத்திலுமடங்காது இருந்துபகை முடிப்பேனென ஓதினீரே அய்யா உலகளந்தபெம்மானே எட்டாப் பொருளே எங்கும் நிறைந்தோனே கட்டாக் கலியைக் கருவறுக்க வந்தீரால் நாங்களுமைக் கண்டு நலம்பெறுவதெப்படித்தான் தாங்கள் மனதிரங்கித் தான்சொல்ல வேணுமென்றான் அப்போமுனிக்கு அருளினது நீர்கேளும் இப்போது மாமுனியே இன்றுநீ கேட்டதுதான் ஒருவரறியாத உபதேசங்கண்டாயே கருதி வருந்தினதால் கட்டுரைப்பேன் கேட்டிடுநீ எனக்காகும்பேர்கள் இனங்கேளு மாமுனியே புனக்காரமில்லை பூசை முறையுமில்லை கோவில்கள் வைத்துக் குருபூசை செய்யார்கள் பூவதுகள் போட்டுப் போற்றியே நில்லார்கள் ஆடு கிடாய்கோழி பன்றி அறுத்துபலியிடார்கள் மாடு மண்ணுருவை வணங்கித்திரியார்கள் என்பேரு சொல்லி யாரொருவர் வந்தாலும் அன்போடவரை ஆதரிக்கும் பேராகும் இரப்போர் முகம்பார்த்து ஈவதுவே நன்றாகும் பரப்போரைக்கைசேர்த்துப் பணிவதுவே நன்றாகும் என்பேரால் முத்திரிகள் இட்டோரே நன்றாகும் அன்போராய் வாழ்ந்தாலும் அறிவுநினைவொன்றானால் நாம்வந்தோமென்ற நாமமது கேட்டவுடன் தாம்வந்து வேடமிட்டோர் சாதியது நன்றாகும் அல்லாமற் கேளு அரிய முனியேநீ எல்லா அமைப்பும் ஏலமே விட்டகுறை எச்சாதிக்காச்சோ அச்சாதி நன்றாகும் எவர்க்கு மிகஈந்து இருப்போரே நன்றாகும் அவர்க்குதவி செய்வோர் அவ்வினமும் நன்றாகும் தாழ்மையாய் வாழ்ந்த சாதியது நன்றாகும் ஏழ்மையாய் வருவோம் இரப்பன் பரப்பனென இரப்பனைக்கைகொண்டோர் எனையேற்றார் மாமுனியே பரப்பனைக் கைகொண்டோர் பரமேற்றார் மாமுனியே சினமு மறந்து செடமுழிக்கும் பேர்மனுக்கள் நினைவுக்குள்ளே நாம் நிற்போங்காண் மாமுனியே என்னத்தோடே வொத்து இருந்துமிக வாழ்ந்தாலும் சொன்ன நினைவதுக்குள் துயிலாமல் வாழ்வோங்காண் மாசுக் கலியை மனதூடாடாதேயறுத்து வாசு நினைவில் வந்துநிற்போம் மாமுனியே பின்னுமொன்று கேளு பூரண மாமுனியே முன்னுகத்தில் கேளு ஒருவர்க்கோர் வாரமுமாய் நின்றோமுனியே இனிநீசக் கலியறுக்கச் சென்றோமேயானால் செய்யுந்தொழில்கேளு காலுக்குள்ளேதிரியாம் கையதுக்குள்ளேதிரியாம் மேலுக்குள்ளேதிரியாம் விழியதுக்குள்ளேதிரியாம் கண்டெடுத்தார் வாழ்வார் காணாதார் வீணாவார் பண்டைப்பழமொழிபோல் பார்மீதிலாட்டுவிப்பேன் கண்டெடுத்துக்கொண்டோர் கரையேறுவாரெனவும் தொண்டனெனக்கண்டு சொன்னேனானுன்னோடு தாய்தமர்களென்றும் தனது கிளைகளென்றும் வாயுரமாய்ச்சொல்லும் வம்பரென்றும் பார்ப்பதில்லை அன்பாகி வந்தவரை அலைச்சல் செய்தேற்பதுண்டு வம்பான மாற்றானை வளர்த்தேயறுப்பதுண்டு எட்டியு மெட்டாத ஏழைக் குணம்போலும் காட்டியுங் காட்டாத கடிய சொரூபமதும் வேளைக்கு வேளை விதக்கோலமுமணிந்து நாளுக்கு நாளாய் நடக்கு மதிசயமாய் எங்கும் இரந்து எரிப்போம் கலிதனையும் சங்கிலிரந்து தான்வளர்ப்பேனன்போரை என்றுரைக்க நாதன் அடுத்துமுனியேதுரைப்பான் மன்றுதனையளந்த மாயத் திருமாலே இந்த விதமாய் எழுந்தருளி வந்திருக்க எந்தச் சொரூபம் எடுத்தணிவீரெம்பொருமாள் கேட்டான் முனியும் கீர்த்தியுள்ள ஈசுரரே நாட்டான மாமுனிக்கு நானுரைத்தது கேளும் இகாபரத்தை நானினைத்து ஏழுபிள்ளை ஈன்றெடுத்து மகாபரனார் செயலால் மக்களுக்குச்சொத்தீய நானுபதேசித்து நாட்டில் மிகவிருத்தி மானுவஞ் சோதிக்க மகற்கு அருள்கொடுத்து மாசுக் கலியறுத்து மக்களொருமித்தவுடன் பாசு பதங்கொடுத்துப் பாலன்கையால் விளக்கி கூப்பிடுத லொன்றில் குவலயத்தைத் தான்கிறக்கி சாப்பிடுவேனஞ்சைத் தன்பாலையாளவைப்பேன் என்று கலைமுனிக்கு இயம்பி வந்தேனீசுரரே சந்தோசமாச்சுதுகாண் சங்கரரே நீருமிப்போ வெந்தோசந்தீர்ந்துதென்று வெள்ளிக் கயிலையிலே ஒருவிடத்திலெக்கியத்தை ஊட்டிக் கனலெழுப்பி திருநடன மாடுமென்று செப்பினாரொப்புடனே அப்படியே நல்லதென்று அரனுமுமையாளும் முப்படியே மாலினிக்கு ஒன்பதாம் பேறெனவும் வேதனுக்கோராயிரம் பிறவியாச்சுதென்றும் மாது உமைக்கு வளர்பிறவி ஏழெனவும் திதுவுக்கோர் பத்தாம் செய்யப்பிறவியென்றும் சதுர்மறைக்கேழெனவும் சாஸ்திரத்துக்கோர்நான்கும் வானவர்கோன்றனக்கு வளர்பிறவி மூன்றெனவும் தானவர்க்கேழெனவும் சரசுபதிக்காயிரமாம் தொண்டர் தமக்கு சூல்பிறவியொன்றெனவும் அண்டர்கள் மெய்க்க அரனடனமாடலுற்றார்

ஈசுவரன் தாண்டவம் நாதன் முறையார்க்கு நற்பிறவி யொன்றுபத்தாம் வேதன் றனக்குப்பிறவி ஆயிரமாம் – வெண்டரள மாதுக்கு மாயிரமாம் மாதுமைக்கோரேழாம் சீதுக்குப் பத்தெனவே செப்பு

இந்திரற்கு மூன்றெனவும் இறையவருக்கேழெனவும் சந்திரற் கோரேழாம் சாற்று -நன்றியுள்ள மறையதுக்கு மோரேழாம் மானமுள்ள தொண்டருக்கு இறப்பிறப்பில்லாப் பேறென்றியம்பு

என்றிவகைளெல்லாமிப்படியே வந்ததென்று ஒன்றியுள்ள சித்தாதி ஓதினான் – பண்டையுள்ள தாவடத்தை மேவிடத்திக் கோவிடத்திலோமிடத்தி நாவிடத்திப் பூண்டாடினார்

தன்னாலே தான் முளைத்த சற்கணையின்றண்வாங்கி பின்னாலே யோர்கணைப் பீறி – பின்னாளே பீறுங் கணையதினால் பெரும்புவியெல்லாந்தோன்றிச் சீறுங் கலிவயதால் சென்றுதோ

வானத்தளவில் வளர்ந்த கம்பத்தண்ணருளால் சேனைச் செகம்படைத்த செல்வமோ -மானத்த மாகலிய னேதுவினால் வாழ்விழந்திவ்வுகமும் போகத்தருணம் வந்து பூட்டிச்சோ

நல்லாறு சாஸ்திரமும் நாலுமறை வேதமதும் பொல்லாக் கலியினால் பொய்ச்சூடி – பொல்லாப் பொடியக் கலியோடு பொன்றியடி வேரறவே இடியத்தான் வந்தொத்ததோ

பக்கம் பதினைந்தும் பார்மேடம் பன்னிரண்டும் வக்கணைக் கோளொன்பதும் மங்கி – அக்கிகொண்டு அழிந்த கலியோடு அலமாந்தழிந்திடவே சுழிந்தகனலாறு வந்து சுற்றிச்சோ

மாந்திர தந்திரத்தை வைத்திய வாகடத்தைச் சூழ்ந்திருந்த அட்சரத்தைச் சோதித்து – ஏய்ந்திருந்த இழகு கலியோடிம்முறை யெல்லாமொடுக்கிக் களவறுக்கச்சோதியொன்று காணுதோ

அய்யமிட்டுண்ணாத அரும்பாவி யாவரையும் பொய்யரையும் வெட்டிப் பெலியாக்கி – மெய்யிழந்து நையுங்கலியோடு அனலாவிக் கொண்டெரிக்க வெய்யவன் போல் சோதியொன்றுமேவுதோ

பத்தி சோதித்தே பலநாளுங்காத்திருந்த வித்தகனை வேண்டார் மேல் வீடிழந்து செத்திறந்து தீநரகச்சீக்கூட்டிலே யடையக் கொத்தியருந்தப் புழுக்கள் கொஞ்சுதோ

பாங்கலியனேதுவினால் பண்டுண்டுசெய்ததெல்லாம் மூங்கிக் கலியதனுள் மூடி – மூச்சுவிட்டு ஓங்குவதோங்கி உறங்குவது தானுறங்கி மூங்கிக்குளிப்பதுநாள் முற்றுதோ

இலச்சைகெட்ட பாவி என்றுவந்தானன்று முதல் நற்சடலங்கள் நல்வகைகள் நாடிழந்து – நாணமுற்றுப் பட்சிமுதல் மாமிருகம் பால்நரிகள் கற்றாவும் அச்சமற்றுவாழ்புவியொன்றாகுதோ

பொல்லாத்துரங்கள்கொண்ட பேய்கள் தானொழிந்து கல்லாத புல்லர் கருவொழிந்து –எல்லாம் நல்லோராய்ச் சாகாமல் நாளும் நகரொன்றானதுக்குள் சொல்லொன்றாலாள சோதியொன்று தோணுதோ

தாணுமால் வேதன் தற்பொருளாய் முப்பொருளும் ஆணுவமாயொன்றிலடங்குதோ – அஞ்செழுத்தும் ஆனா அரியெழுத்தும் ஆங்கார மூன்றெழுத்தும் ஓம்நமோ வென்றதுக்குள் ளொடுங்குதோ

ஆகாத்த வஸ்துவெல்லாம் அழித்துநரகத்திலிட்டு வாகாய்க் குழிமூட வந்துதோ – சாகாத சனங்கள் பல வஸ்துவையும் தர்மபதி ராச்சியத்தில் இனங்களொன்றாயாள ராசாவொன் றாகுதோ

பொன்னூற்றுத்தன்னூற்றுப் புரவுதன்னால் விளையூற்று முன்னூற்று யோசனை யுலாவுசுழி – பன்னூற்றுப் பாலூற்று மேலூற்றுச் சேலூற்று வாலூற்று மாலூற்று மாபதியு மாகுதோ

செப்பொத்த பொன்னும் சிவமேடைசிங்காசனமும் முப்பத்திரண்டறமும் ஓங்குதோ – ஒப்பற்ற ஊர்தெருவு மொன்றதுக்குள் ஓர்யோசனைத் தெருக்கள் சீர்பதினாயிரத்தெண் சேருதோ

தெருக்கள் பதினாயிரத்தெண் செந்திருமால் வாழ்பதிக்கு குருக்களொன்றுவிஞ்சைஒன்று கூறுதோ-மருக்கள் மாறாமல் வாழ்பதிக்கு மணங்கொடுத்து நிற்பதல்லால் வேறார்களும் பறிக்க வேண்டுமோ

பொறுமைப்பதியில் பொன்வாசலொன்றதிலே தர்மமணியொன்று தாங்குதோ –தருமமனு மணியினது கூறறிய மணிகணீரென்றதல்லால் இனியிருளில்லாதேகுதோ

அலைந்தலைந்த சூரியனும் அவனலையச்சாயாமல் நிலந்தெரிய எப்போதும் நேரே – குலைந்தலைந்த கார்மேகத்தட்டதெல்லாம் கூண்டுடைந்து வானமதில் ஊர்மேகமெல்லம் ஒருமேகமாகுதோ

தோணிக்கச் சிந்தை துலங்கிவெளி காட்டுமல்லால் காணிக்கை யென்றயிறை காணாதோ – மாணிக்கக் கல்லால் வளர்ந்தபதி காணுமொளி யல்லாது பொல்லாப்பு என்னும் பேச்சுப் போச்சுதோ

ஈசர் நடனம் இருபத்து ஒன்றதுக்குள் தேசமது தீதுநலஞ்செப்பினார்-வாசமுடன் வன்னியமர்த்தி மாதுமையை னோக்கி உன்னிச் சிவமுரைப் பார்

ஈசர் மகிழ்ந்து ஏந்திழையைத்தானோக்கி வாச முடனீசர் வகுப்பாரம்மாதோடு முன்னே மொழிந்த முற்றாண்ட வமதுக்குப் பொன்னே யிந்நேரம் புரிந்தது நீ கண்டாயே அப்பொழுது ஈஸ்வரியும் அரனை மிகப்போற்றி செப்போடு வொத்தச் சிவனே சிவபரனே ஆடினீரே தாண்டவந்தான் அநேக வளங்கள் சொல்லி பாடினீரே அய்யா பாட்டு வழுகாதே தாண்டவமாடிப்புரிந்தால் சத்தி சிவம் வரைக்கும் மாண்டாரைப் போற்கிடந்து மறுத்தெழும்ப வேணுமல்லோ அல்லாமலென்னுடைய அண்ணர் நினைப்பதிலே நல்லவரே கொஞ்சம் நானறிந்தது கேளும் காரணமாயண்ணர் கலியுகத்தைமுடிக்க நாரணர்தான் பூமியிலே நடப்பது நிசமானால் நம்மையுமிங்கிருக்க ஓட்டார்காண் நாரணரும் எம்மழையிலானாலும் எவ்வெயிலிலானாலும் கொந்தலிலானாலும் கூர்பனியிலானாலும் கந்தத் துணிகள்தந்து கையில் திருவோடுதந்து என்றனக்கு நல்ல இளங்குறத்தி வட்டிதந்து மைந்தன் சரவணற்கு மறிப்பு மிகக்கொடுத்துப் பிரமனுக்குக்கோலமிட்டுப் பிசாசுதனைவிரட்டி வரமுள்ள தேவதைக்கு மாற்றியுருக்கொடுத்து லோகமதில் நம்மையும் உகக்கோலங்களிட்டி வேகத்துடனே மேதினியெல்லாந்திரிந்து கலிகளகலக் காண்டங்கழிக்கவென்று பலிகாண வைப்பார் பரசோதனைக்கனுப்பி இப்படியே தோணுதுகாண் என்னுடைய சிந்தையிலே அப்படி மொழிந்து அவள்நிற்கும் வேளையிலே நாராயணரும் நல்ல சிவனிடத்தில் சீராக வந்து தெண்டனிட்டுத்தானிருந்து என்னுடைய தங்கையரே எனைமேனியாக்குவளே உன்னுடைய தன்பொருட்டால் உலகளந்தோனானாகி நாட்டிலென்பேரு நடத்திவைத்த நன்னுதலே கோட்டு வரையாளே கோவேயென்தங்கையரே நீயும் நம்மீசுரரும் நீணிலத்தில் போகவென்று நானும் நினைத்திருந்தேன் என்று நவின்றாயே ஈஸ்வரிக்கு மீசுரர்க்கும் இந்த நினைவானால் தேசமதில் போக வேண்டாமென்றுசொல்வாரோ நானுங்களைவலிய நாட்டிற்போமென்றிலனே தானுங்கள் தம்நினைவில் தரித்ததுபோலேபோவும் நீங்கள் நடப்பதென்றால் எனக்குவெகு சந்தோசம் தாங்கள் மனதிரங்கி சாற்றிமிகப்போவுமென்றார் அப்போது ஈசுரனார் அச்சுதரைத் தானோக்கி மைப்போடுங் கண்ணினிய மைத்துனரே யென்றாவி சொல்லு சொல்லாதபடி சொல்லுதற்கு உம்மையல்லால் அல்லும் பகலும் அலைந்தாலும் கிட்டாது போங்களென்று சொல்லாமல் புத்திசொன்னாப்போலேநீர் தாங்கியுரைத்தீரோ சத்தியுள்ள மைத்துனரே புத்தியிது நன்று புண்ணியநாராயணரே தத்தியுடனடக்க தருண மெப்போதென்றுரைத்தார் நடக்கக் கருமமிது நல்லதுதானென்றுசொல்லி அடக்க முடனே அய்யா நாராயணரும் ஒத்திருந்து தங்கள் உற்பனமாயாராய்ந்து புத்திபோல் வாசகங்கள் பூத்தானமாயெழுதி நாட்டு நருளறிய நடைசீவசெந்தறிய காட்டு மரமறிய கல்லப்பு தானறிய புற்பூ டறிய பூமிதெய்வாரறிய நற்பறிந்து பேய்கள் நடுங்கி மிகஅறிய சேடனறிய சிறுவாய்வு தானறிய மோடனுமறிய மூவருந்தானறிய தேசமறிய தெய்வேந்திரனறிய மேகமறிய மேலோர்கள் தாமறிய பூகமறிய பொழுதுசந்திரனறிய நட்சேத்திரமறிய நமனறிய கோளறிய பொய்ச்சரியை கிரியை பேர்நாலுந்தானறிய வேதமறிய விளங்கு மறையறிய வாதையறிய மன்றுபதினாலறிய சங்கறிய முத்தறிய சகலமச்சமுமறிய அங்கறிய நாம்படைத்த எல்லோருந்தானறிய எழுதி விடுவோங்காண் ஏற்றரிய புத்திவைத்து பழுதுவைத்தாரென்று பார்பலதுஞ் சொல்லாமல் நம்பேரில் குற்றம் நகத்தளவுமில்லாமல் பம்முதலாய் நாமும் பரிந்தெழுதி தான்விடுவோம் என்று திருமாலும் இறவாத ஈசுரரும் மன்று படைத்த மறையோனும் பார்வதியும் சரசுபதியும் சத்தியுள்ள லட்சுமியும் விரசு முனிமாரும் வேத மறையோரும் சாஸ்திரரும் கின்னரரும் சங்கத்துறைவோரும் பார்த்திவனுந்தெய்வ பாவாணர் தாமுதலாய் வானவரும் தேவர்களும் மற்றும் சித்தாதிகளும் தானவரும் வேதத் தம்புருக்காரர்களும் சங்கம் வரையும் தாண்டவர்கள் தாமுதலாய் எங்கெங்குமுள்ள இருஷிமுதல் தான்வருத்தி எல்லோருங் கயிலை இடம் விட்டெழுந்தருளி வல்லோர்கள் வாழும் வைகுண்டமீதில் வந்து கங்கைநதி கண்டு கறைக்கண்டர் தேவர்வரை கங்கை தீர்த்தமாடி கிருஷ்ணர் பதிபுகுந்து மேடை விதானமிட்டு மிகுமேடை பொன்னழுத்தி வாடை கமழவிட்டு வானவர்கள் பாடவிட்டு எக்காளடம்மானம் எங்கு முழங்கவிட்டு மிக்க புராணக்கலை மிகுமறையோர் போற்றவிட்டு ஆகமங்கள் போற்றவிட்டு அரம்பையர் கைகாட்டவிட்டு போகமுனி சித்தரெல்லாம் புராணகவி யோசையிட்டு மும்முதற்குத் தேவரெல்லாம் முறையிட்டு வாழ்த்தவிட்டு சங்குத் தொனிகளிட்டு சகலோரும் போற்றவிட்டு இத்தனை நற்சிறப்பும் இதமாயலங்கரித்து வித்தையருள் தண்டரள விழியாளைத் தான்வருத்த அப்போ சரசுபதி ஆனந்தமேபெருகி இப்போ எழுந்தருளி இன்பமுடன் போகவென்று கங்கை நதிமூழ்கி கிரணப்பச்சையாடைபெய்து சங்கையுடனாபரணம் சரசுபதியணிந்து குழல்முடித்து குழையில் குவிந்த தங்கத்தோடணிந்து வளையல் முறுக்குமிட்டு மாதுசந்தோசமுடன் பச்சைநிறக்காப்பணிந்து பவளமணித்தண்டையிட்டு மச்சமதில் மையெழுதி மகிழ்ந்து மூக்குத்தியிட்டுக் கொண்டைதனில் தேமலரைக் குவிய மிகச்சூடி பொற்சரிகைச் சேலை பெரியயேத் தாப்புமிட்டு அச்சரக்கைத் தோழி அரம்பையர்முன் னாடிவர அன்ன நடைநடந்து அனல்கொழுந்திட்டாப்போல் வன்ன அழகுடனே வரவே மறையோனும் உன்னித்திடமாய் உளமகிழ்ந்து மாயவனும் கன்னிதனைப்பார்த்துக் கறைக்கண்டர் தானுரைப்பார் வன்னத்திருவடிவே மறையோனினோவியமே அன்னமடமாதே அரசுக்குகந்தவளே கருத்துடைய சோதி கவியுடையீ ருந்தனையும் வருத்தின காரியந்தான் வகுக்கக்கேளொண்ணுதலே நாட்டிலொரு நீசன் நன்றியறியாப்பிறந்து மேட்டிமையாய் லோகமெல்லாம் மெய்யழித்தான் கண்டாயே கோட்டிப்பவம்பிறந்து குருநீதியைக்கெடுத்தான் கேட்டிருக்கக் கூடாது கெடுநீசன் பொல்லாங்கு நம்மை நினையாததுதான் நமக்குசற்றெண்ணமில்லை செம்மையுள்ள சான்றோரைச் செய்தபங்கமேற்கலையே தெய்வப் பிறவியல்லவோ திசைவென்ற சான்றோர்கள் மெய்வரம்பையெல்லாம் மிகக்கெடுத்தான்மாபாவி கற்பகலாப்பெண்களுட கற்புக்கிரங்காதிருந்தால் உற்பனமோ நாமள் உடையபரனென்றாமோ எளியவனை வம்பால் இடுக்கஞ்செய்தேயடித்தால் விளியிட்டழுதாலும் மேதினியிற் கேட்பதில்லை கேளாத காரணத்தால் கீர்த்திகொண்ட பேரெளியோர் நாளான நாள்வழியாய் நம்பிநம்பேரில் வைத்தார் அல்லாமல் நம்முடைய அரிநமோ மகாநாமமதை இல்லாமலே மறைத்தான் இயல்புகெட்ட மாநீசன் ஆனாலும் பாரமில்லை அன்னீதம் பொறுக்கரிது மானாபர ஞாயமதை வரம்பழித்தான் மாநீசன் ஆகமத்தைக் கூறழித்தான் அன்னீத மாபாவி தாக மடைந்தார்கள்தவசுமுனி மார்களெல்லாம் நீசப் பாசாசுநீணிலத்தைக் கொள்ளைகொண்டு தோசப் பயலோடு துணையாய்மிகக்கூடிக் கெடுக்குதுகாண் பசாசு கேட்பார்க ளில்லாமல் கொடுக்கவொன்றில்லா நருட்பார்த்துக் கொல்லுதுகாண் அதுவேயொருகொடுமை அநேகம் பொறுக்கரிது எதுவும் வரம்புதம்பி இருக்குதுகாண் வையகத்தில் ஆனதால் நாங்கள் அவனிதனிற்போயிருந்து மானமுறை சோதித்து மனுவிடுக்கந்தான்தீர்த்து நாட்டிலுள்ள குற்றம் நாங்கள் பார்த்துத்தீர்த்து ஓட்டுவதையோட்டி உறைப்பதையுறைப்பித்து நாடையொருசொல்லதுக்குள் நலமாக வாழ்விக்கவே பேடையன்ன மாமயிலே பெண்ணரசே இப்போது நாங்கள் நடப்பதற்கு நாளான நாளிதுவே ஆனதால் பாவி அவனிழுக்குச்சொல்லாமல் மானமுள்ள புத்தியைப்போல் வாசகமொன்றே யெழுதி வருவோமென அயச்சால் மாபாவி தானறிந்து கருவி குழறி கற்பனைக்குள்ளாகுவதும் என்னவோ வென்று இடும்புசெய்வதுமறிய அவனறிய விட்டதுபோல் அவனிபதி னாலறிய எவரும்புற்பூண்டுவரை எவ்வகையுந்தானறிய எழுதியொரு வாசகந்தான் இப்போவிட வேணுமென்று முழுது முன்னிங்கே ஓடிவா வென்றதுதான் அப்போ சரசுபதி ஆனஅயன் மாமயிலும் இப்போதிவ்வகைக்கு யானென்ன செய்கருமம் எல்லாங்கிருபை எம்பரனேயுன்செயலு அல்லாமலென்றனக்கு ஆகுமோ ஏதாலும் ஆட்டுவதும் நீயல்லவோ ஆடுவானும் நீயல்லவோ ஓட்டுவதும் நீயல்லவோ ஓடுவானும் நீயல்லவோ சொல்லுவதும் நீ சொல்ல வைப்பானும் நீயல்லவோ அல்லும்பகல் நீயல்லவோ அழியாதவனும் நீயல்லவோ எல்லாமுமது கிருபை யெனக்கல்லாது சொல்லீது வந்ததென்ன சுவாமியெனப் பணிந்தாள் மாது திருமால் மலர்ப்பாதம் போற்றிடவே ஆதித் திருமால் அவரேது சொல்லலுற்றார் நீயுரைக்க நானெழுதி நீணிலத்தில் விட்டதுண்டால் வாயுரைக்கக் கூடாது மற்றோர்க ளாராலும் வம்புரைக்கக் கூடாது வம்புரைத்தால் வன்னரகம் உம்பதுவேயல்லால் உறுகெதிகள் காணார்கள் ஆனதாலுன்வாக்கும் அரியச்சரமுங்காண்பித்தால் மானமென்ன வாகுமென்று வகுத்துரைத்துப் பார்ப்போம் அப்போ சரசுபதி அன்போடுளமகிழ்ந்து செப்புகிறாள் நல்ல திருவாசகம் அம்மானை


கலையொடு கலையைத்தாக்கிக்கண்ணின்மேல் கருணைநாட்டி மலையொடு மலையைத் தாண்டி வளர்ந்தவன் பதமே கண்டு சிலையொடுசிலையினாளும் சிவபரா கிருபையென்றே அலைகடல் முழக்கம் போலே அவளுரை கூற லுற்றாள்

கூறிய வாசகத்தை யிந்தக் குவலயத் தோர்கள் காண மீறிய மொழிகள் சொல்லி விளம்புவர் நாச மாகும் தேறிய பூதத் தோடு தேர்ந்துணர்ந்தவரே வாழ்வார் கூறியவாசகத்தை உள்ளங் கொண்டவர் குருவை காண்பார்

ஒருதிரு விபூதி யுண்டை ஒருயிருமிச்சமாகும் ஓருதிடத்தேங்காய்ப்போலும் ஒருமனத்திரணை போட்டுக் கருதிட வெற்றிலை பாக்கும் கனிந்திடுவோர்க்கு மூவர் வருகிட ஞாய மெய்யின் வழியிது வாகுந் தானே

மனுமொழி யிதுவாமென்று மதத்துடன் பேசுவோர்க்கு இனிதல்ல வீண்தானென்று இயம்பிய பகைஞர் தம்மை குனிதவள் துர்க்கை சென்று கொன்றவள் நரகம் பூத்தி கனிதுடன் துர்க்கை வாரி கடல் தீர்த்த மாடுவாளே

திருவாசம் - 1 எறும்பு கடை யானை முதல் 84 லட்சம் உயிர்கள், எழுகடல் பதினாலு புவிகளும் இரதிமதி சூரியர்கள் பருதி பாலாழியும் இயல் வானம் வாயு முதலாய் தெறும்பு மாமலை மாமரச் சோலையும் சேடனுந் தலை மோடனும், தென்கீழத் தேவர், மூவர், தெய் வேந்திரன், வாச முனிவோர், வேத சன்னாசி மறை ஆறு சாஸ்திரம் அறிய மண்டலம் அளந்த கை கொண்டு எழுதும் வாசகம். மண்டலர்கள் எவரும் அறிய வறும் பகல் 998 ஆம் ஆண்டில் சாம்பசிவ மூர்த்தியும் பராபர ஸ்ரீராமரும் பதியேறும் மூர்த்தியும் பார்த்திந்த கலியுகத்தில் படூர நீசக்கலியால் வரும் வாறு வண்மையாய்ப் பகர்ந்து திருவாசகம் எழுதி பல நூல் அறிந்தவர் எவராயினும் பக்தியுடன் எக்காலமும் பணிந்து திருவாசகத்தை முத்தியணைந்தோர்க்கு மிகுபலன் உண்டாம். நத்தியுடன் பூலோகக் கலியுகா தேசத்தில் நடக்கும் முறை கேளீர்.

வீரபுரந்தரத் தர்மராசா வங்கிசத்தில் நாடும் ஒரு மதலை பிறந்து, அருணாசலத்திலே வாலிபப் பிள்ளையாயிருக்கிறார். பூலோகக் கலியுகத்திலே ஆசாரமாயிருக்கிற பேர்களும் அழுக்கான புத்திமதியாயிருக்கிற பேர்களும் அவரவர் ஆங்காரமாகியே அழிந்து போவார்கள். அதின் மேல் 18 துர்க்கையம்மாள் பிறந்து அந்தக் கலியுகப் பஞ்சமிர்த ராச்சியத்தில் வருகிறார்கள். வந்தவுடன் மூன்று நாள் இருள் மூடி ஆனைத்துதிக்கை போல் மழை பெய்யும். அதிலே சில துர்ச்சனர்கள் மாண்டு போவார். அதின்மேல் பக்தியாயிருக்கிற பேர்களுக்கும் பிள்ளை யில்லாமலிருக்கிற பேர்களுக்கும் கண்ணில் லாமலிருக்கிற பேர்களுக்கும் பராபர மூர்த்தியும் சாம்ப சிவ மூர்த்தியும் ஸ்ரீராம சேயரும் தீட்சையாகித் திருமனதிரங்கிப் பக்தி காரணங்களைச் சோதித்துப் பகிர்ந்து அவரவர் கேட்ட வரங்களைக் கொடுப்பார்கள். இன்னுஞ்சிறிது நாளையிலே சிலர் தெய்வீகமாய்ப் போவார்கள். முன்னுக்கு மழை தட்டும் உலகிற் பல பல வஸ்துவும் பலிக்குமென வகுத்தார். சிலநீசர் மிகக் கறுப்பை நினைவில்லாத் தொட்டு மிகப் பாசமடைந்து அலைந்தழிந்து போவார்கள். வாலி சுக்ரீவனும் பண்டாரமாகி போவார்கள். வாச்சி கொழு கலப்பை யெல்லாம் நாசமாகிப் போய்விடும். முன்னால் துலுக்கர் தம்மை நாசம் பண்ணு றதற்காக துர்க்கை அம்மாளை பிறவி செய்து அனுப்புகிறோம். பிராமணர் நன்றாய் சுகத்துடன் வாழ்வார்கள். புவியில் முகத்து லிங்கமில்லாத பேர்க்குப் பிரம தேவரை அனுப்புகிறோம். பிரம தேவர் புவி மீதில் வந்து பக்தி காரணங்களைச் சோதித்துப் பொல்லாத பேரைத் தெரிந்து பிடித்துப் புதுக் கிராம தேசத்தில் வாழுந் தேவதைக்கு பூசை பண்ணி போடுவாரெனப் புகட்டினார். காவேரியாற்றுக் குள்ளே மூன்று பொதி மங்கிலியம் கவிழ்ந்து அடைய வேணுமென்றும் காசினி யில் ஏழு பெண்பிள்ளைகள் ஒரு ஆண்பிள்ளையை அடர்ந்து பிடிப்பார் களென்றும், அறுத்த மங்கிலியத்தை மிகுத்துக் கட்டுவார்களென்றும், இன்னுஞ் சிறிது நாளையிலே கேள்வி கேளாமலிருக்கிற பேர்களும் துர்ச்சனர்களும் வர்த்தகர்களும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டு மாண்டு போவார்கள். போன பேர்கள் போக இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷரைத் தெரிசனம் பண்ணி சர்வ பாக்கியத்தையடைவார்கள். மூன்று லோகத்துக்கு ஒரு வால் வெள்ளி யுண்டாக்கி நெருப்புப் போட்டுக் கொண்டு வருகிறோம். அதில் மானிடரெல்லாம் உறழ்ந்து உட்கொள்ளைப் பிறக்கொள்ளை யடிப்பார்கள். நாமதற்கு மேல் பூலோகக் கலியுகப் பஞ்சமிர்த ராச்சியத்திலே பண்டார வேசமாய் வருகிறோம். நாம் வருகிற போது மண்ணெல்லாம் கிடு கிடென்றாடும். மலையும் வானமும் முழங்கித் திடுக்கிடும், அதிலே அநேக துர்ச்சனர்கள் மாண்டு போவார்கள். போனபேர்கள் போக இருக்கிற பேர்கள் புண்ணிய புருஷராய் இருப்பார்கள். மந்திர தந்திர வைத்தியங்கள் மறைந்து போய்விடும். வாதை பேய்களெல்லாம் வடகயிலாசத்திலே போய்ச் சட்டுத்தீர்ந்து போவார்கள். ஏழு சமுத்திரத்திலே மூன்று சமுத்திரம் நீருள் வாங்கிப் போய் விடும். ஒரு சேர்வை விபூதி ஆறு சக்கரத்திற்கு விற்கவும், ஒரு லிங்கம் மூன்று வராகனுக்கு விற்கவும், ஒரு கழஞ்சிச் சலமெடுக்கவும், இரண்டு நாழிகை வழிக்கு ஒரு தண்ணீர் பந்தலும், மூன்று நாழிகை வழிக்கு ஒரு தர்மசாலை மடமும் நன்றாய் முடியும். தர்மம் கொடுக்கிற பேர்களுண்டு வாங்குகிற பேர்களில்லையென்று சொல்லுகிற வெயிலாள் மடக் கொடியாள் வயிற்றிலே நாடு மொரு மதலை பிறந்து பத்து வருசமாச்சு. நாங்கள் மகா அருணாசலத்திலே வாலிபப் பிள்ளையாய் இருக்கிறோம். அந்த வாலிபப்பிள்ளை என்ன சொல்கிறாரென்றால் வீரபுரந்தர தர்மராசா வழியிலே விகி நாராயணர் இங்கே வந்து 3 மாதத்துக்குத் தவசு பண்ணி 2 மாதத் துக்கு மேல் வருகிறார். வந்தவுடனே அந்நியோன்னியக் கலகத்திலே ஒருவருக்கொருவர் சத்தியமாய்ப் போவார்கள். போனவர் போக இருக்கிறவர்கள் புண்ணிய புருஷராய் இருப்பர். அவர்களுக்கு வேண்டிய பாக்கியம் கொடுப்போம்.

பாக்கியங் கொடுப்போம் நாமும் பலனுடன்வாழுவோர்க்கு நோக்கிய கருணை யுண்டாம் நோயில்லா திருந்துவாழ்வார் தாக்கிய வாசகத்தின் தன்மையை நம்பு வோர்கள் வாக்கிய வைகுண்ட வீடு வந்தவர் வாழ்வார் தாமே

தினமொரு நேரமெந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் கனிமொழி சோதி வாக்கும் கையெழுத் தாதி நோக்கும் துணிவுடன் கேட்டோருற்றோர் தொலைத்தனர் பிறவி தானே

வாசித்தோர் கேட்டோருற்றோர் மனதினிலுணர்ந்து கற்றோர் ஆசித்தன் பதமே கண்டு அவ்வழி முறையே நின்றோர் கோசித்தன் பதமே கண்டு கோமலைப்புவியின் வாழ்வும் தேசத்தின் செல்வத் தோடும் சிறப்புட னிருந்து வாழ்வார்

திருமொழி வாசகந்தன்னைத் தேசத்தில் வருமுன்னாக வருவது திடனா மென்று வழுத்தினோம் 998ல் ஒரு திருக் கூட்டமாக ஓராயிரத் தெட்டாமாண்டில் வருகென வந்து நாங்கள் அம்மானையில் வருத்தினோமே

வருத்தினோம் அம்மானை தன்னில் மானமாய்ப் புதிய தாக்கி கருத்தினுள்ளகமே கொண்டு கவனித்தோரவர்க்கே தக்கும் உருத்தில்லாக் கேட்போரெல்லாம் ஓருரை வெளியே காணார் சிரித்துரைகேட்போரெலாம் சிவபொருள்வெளியே காண்பார்

உலகில் மனுக்கள் தமிழாலே உவமையுரைத்து விட்டாப்போல் கலகமுடனேயென்மொழியைக்கண்டு பழித்து நகைத்தோரை அலகைத்துளைத்து நரகதிலே ஆணியறைந்து அவனிதனில் குலையக்குலைத்து தீநரகில் கொண்டே போடச் சொல்வேனே

எந்தன் மொழியும் என்னெழுத்தும் ஏடாய்ச்சேர்த்திவ்வுலகில் சிந்தைமகிழ்ந்தஅன்பருக்குத்தெரியத்திறமாயெழுதி வைத்தேன் எந்தன்பெருமான் திருமொழியை எடுத்தே வாசித்துரைத்தோரும் சந்த முடனே வாழ்ந்துமிகத் தர்ம பதியுங் காண்பாரே

காண்பார் தர்மக்கண்காட்சை கண்டே மரணமில்லாமல் காண்பாரென்றுங்களிகூர்ந்து கண்ணோன் பதத்தைக் காண்பார் நீதக் கண்ணாலேகருணாகரராய்க் கவ்வையற்று காண்பாரென்றுங் கயிலாசம் கண்டே நன்றாய் வாழ்வாரே

இந்த மொழியைத் தூஷணித்த இடும்பர் படும்பாடதுகேளு கந்த உலகுக் கலிபிடித்துக் கண்ணு முருகிக் காலுழன்று குந்தக் குடலும் புறம்பூற கொப்புள் சிலந்தி யுண்டாகி எந்த இடமும்அலைந்தழிவார் என்னாணை இது தப்பாதே

தப்பாதெனவே சாபமிட்டேன் சத்திபேரிலுண்மையதாய் எப்பாரெல்லாமறிந்திடவே இந்தமொழியை எழுதிவைத்தேன் ஒப்பாரொருவரெழுதார்கள் உலகில் மனுக்கள் தன்னாலே அப்பா நாதனெழுதிவைத்த அகிலத்திரட்டம்மானையிதே

என்றேயிந்தத் திருவாசகம் இயம்பச் சரசு பதிமாது கன்றே மேய்த்தோனெழுதிமிக கலியுகமதிலே விட்டிடவே நன்றோர் மறையோனிடமேகி நாட்டிலறியச் செய்யெனவே அன்றே அவனி தானறிய அனுப்பி மகிழ்ந்து இருந்தனரே


நாராயணர் செந்தூர் ஏகல் நாடறிய எம்பெருமாள் நல்லதிருவாசமிட்டு லாட மதிலிருந்து வாவுவாரீசரொடு வாரமில்லை நமக்கு வஞ்சகங்களில்லாமல் சாரமுடனே தரணிதனிலோதி வைத்தோம் அகப்போரெனவே அவனிசொல்வதில்லையினி உகப்பாரந்தீர்க்க உரைப்பீர்காணீசுரரே லட்சுமியை முன்னம் இருத்தினோஞ்செந்தூர்க்கடலில் பச்சணியுங்காளிதனைப் பாரச்சிறையில்வைத்தோம் விட்ட திருவாசகந்தான் மேதினியோர் கொள்ளாமல் கட்டங்கொடிதாய்க் காணுதே தொல்புவியில் புத்திவருமென்றிருந்தோம் பிழையாத நீசனுக்கு சற்று மனதில் தங்குமோ நல்வசனம் பார்த்திருந்தால் போராது பார்மீதில் மக்களுந்தான் காத்திருந்து வாடுகிறார் கௌவையுற்று நல்மனுக்கள் மனுவிடுக்கந் தீர்த்து வாய்த்தசொல்லொன்றதுக்குள் தோணியே வைகுண்டர் சுத்தயுகமாளுதற்கு நாளுண்டோ போவதற்கு நல்வேதச் சொல்லுமுண்டோ கோளுண்டோ வெற்றியுண்டோ கூறும் நீர் வேதவுரை அப்போது ஈசர் அகமகிழ்ந்து கொண்டாடி முப்போதுவுள்ளமுறை வியாகரரைக்கேளுமென்றார் அழைத்தார் திருமால் அதுகேட்டு வியாகரரும் பிழைத்தார்கள் போலே பொடுபொடென ஓடிவந்து தெண்டனிட்டு மூவரையும் சுவாமிவிண்ணப்பமென்றார் கண்டிருந்த அய்யா கரியமுனியைப்பார்த்து முன்பிறந்ததுமகிலம் முடிந்ததுவுஞ்சொல்லிமிக பின்பிறக்கப் போவதுவும் பிசகாமல் சொல்லுமென்றார் குறோணியொடு நீசன் கோள்பிறவி ஏழ்பிறந்து தரணியுகமாறோடு தன்னாலழிந்ததுவும் சொல்லி விரித்துச் சுத்த வியாகரரும் நல்லியல்பு கொண்ட நாரணரோடேதுரைப்பார்

குறோணி முதலாய்க் கூறுகெட்ட நீசன்வரை தரணியுக மாறுஞ் சாற்றியே -சத்தியுடன் தன்மபுவி தோன்றுவதுஞ்சாணாரை வைந்தர்வந்து நன்மையுடனாளுவதும் நாட்டினார்

கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து உற்ற நசுறாணி உடன் வந்துடனோடி மற்றொரு பத்தாண்டில் ராசவைகுண்டராசர் பரந்தான் மொழிந்தபடி உலகாள வேணுமென்று தர்ம புவியாள சுவாமிநீராகவென்றும் துர்மக் கடன்கழித்தோர் சுகமாக வாழ்வரென்றும் ஆகமத்தைப் பார்த்து ஆதிவியாசுரரும் நாராயணப்பொருளிடம் நாட்டமதாயுரைத்தார் உரைத்திட வியாசர் தான் உண்மையாய் மொழிந்ததெல்லாம் கரைத்திடாக் கயிலை மீது கல்லிலே எழுதி வையும் நரைத்திடா முனிவன் சொல்லும் நாள்வழிதோறு முற்ற உரைத்திட முனிக்கு மேலும் உதவிகள் செய்ய வென்றார்

என்று சொல்லிவேத வியாசர் இசைந்ததெல்லாம் கண்டு கயிலயங்கிரியில் கறைக்கண்டர் நாட்டிவைத்தார் மாமுனியையுமனுப்பி மாயத்திருமாலும் தாமுனிந்தீசுரரைத் தழுவியுறத்தானணைத்து கேதாரம் விட்டுக் கிரிகோவில் வந்திருந்து கோதார மாயன் கூறுவார் சங்கமதில் செந்தூர்க்கடலில் சென்றுபள்ளி கொண்டிருந்து விந்து வழிசெய்து வித்தகனை ஈன்றெடுத்து தேசபர சோதனைக்கு தெச்சணத்திலேயனுப்பி வாசமுடனிங்கே வருவோமெனவுரைத்தார் அப்போதீசுவரியும் ஆனசங்கத்தோர்களெல்லாம் இப்போது நாங்கள் ஏகுவோமும்மோடே என்றுரைக்கச் சங்கம் எடுத்துரைப்பாரெம்பெருமாள் ஒன்றுமறியாகாதே உற்றவுபதேசமதைத் தேவன் திருமுதலாய்த் தெய்வகன்னிமார் முதலாய் மூவர் முதலாய் உள்ளறியா விஞ்சையது நடந்தாலறிவார் நடக்குமுன்னேயொருவர் அடக்கமறியாத அருவிஞ்சையீதல்லவோ அந்தவகையானதினால் எல்லோருமென்கூட வந்தால் சரியல்லவே வேண்டாமென்றால் நோவீர்களே என்றுரைக்க நாதன் எல்லோருமேதுரைப்பார் ஒன்றுமறியாதிடினும் உம்முடனே வாறொமென்றார் உடனே திருமால் உற்ற லட்சுமிநினைவால் நடைமேல் நடையெனவே நல்லசெந்தூர் தானோக்கி உன்னி சிவமும் உற்றசத்தி நல்மாதும் வன்னத் தேவர்முதலாய் மாமுனிவர் கின்னரரும் சங்கமுமெங்குளோரும் சகலகலைவாணர்களும் மங்களக்காரர்களும் மாதுசத்தியைச்சூழ்ந்து திரைதிரையாய்க்கன்னியர்கள் சேவித்து ஏத்திவர ஏழு வாச்சியமும் இமலோகரேற்றிவர தொழுவார் சிலபேர் தொம்தொமெனஆடி கடலிலோர் பிள்ளை கரியமாலீன்றெடுத்து நடமாடுந்தெச்சணத்தில் நகர்சோதனைக்கனுப்பி கலியையறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்து சலிவில்லாத் தர்மபதி சத்தி மக்களை வைத்தாள வாறாரைய்யா நாதன் வைகுண்டமும்மூர்த்தி பேறானோர் காண்பார் பெரியதர்மப்புவியை என்றுசில வாத்தியங்கள் இசைந்திசைந்தூதிவர கன்றுதிரை மேய்த்தோரும் கயிலையங்கிரி கடந்தார் கடந்து திருச்செந்தூர் கடல்காணவேணுமென்று நடந்தாதி நாதன் நல்லீசர் சத்தியோடு கூடிக்குணமாய்க் கொலுவாரபாரமுடன் தேடித்திருவைச் சிணமாய் வழிநடந்தார் நடக்க மறையோர் நாற்றிசையும் போற்றிநிற்க கடற்கரையை நோக்கிக் கண்ணோன் வழிநடந்தார் வழிநடந்து மாயவரும்வல்லபரமேசுரரும் களிகூர்ந்து மாதுமையும் கந்தன் செந்தூர் கடலின் அருகேயொருகாதம் அவர்வரக்கண்டாறுமுகன் கருவி குழறி கடற்கரையோன் கலங்கி ஆறுமுகனும் அங்குள்ள தேவர்களும் வீறுமயில் வாகனனும் வெற்றிரதமேறாமல் என்னவிதமாமோ என்று மனம்பதறி மன்னனறுமுகனும் மனமயங்கித்தான்பதறி வந்து மாமன்தனையும் மாதா பிதாவையும் சந்துஷ்டியாகித் தாழ்ந்துநமஸ்காரமிட்டு இம்மூவரையும் யானெப்போ காண்பேனென்று எம்முதலே நாயடியேன் எத்தனைநாள் காத்திருந்தேன் காத்திருந்த நாளும் கரையெண்ணக் கூடாது பார்த்திருந்த கண்ணின் பாவந்தொலைந்ததின்று என்று வேல்முருகன் ஈசுரரையுந்தழுவி கன்றுதிரை மேய்த்த கண்ணரையுந்தழுவி மாதாவையுந்தழுவி மனமகிழ்ந்து கொண்டாடி சீரான தேவரையும் சிறப்பித்துக் கொண்டாடி வாருங்கோ அய்யாஎன் மண்டபச்சிங்காசனத்தில் பாருங்கோ அய்யா என் பதியினலங்காரம் நீங்களிருக்க நிறைந்ததங்க மேடையுண்டு தாங்கள் கிரிபோலே தங்கமலையிங்குமுண்டு பாடப்படிக்கப் பாவாணரிங்குமுண்டு ஆடக் கைகாட்ட அரம்பையர்களிங்குமுண்டு பாலேக்க நல்ல பாலு பழங்களுண்டு மாலேக்க நல்ல மாதுகன்னிமார்களுண்டு கண்டு களித்திருக்கக் கனகநிதிகளுண்டு உண்டு சுகித்திருக்க உற்றவகை தானுமுண்டு பல்லாக்குமுண்டு பதிபோகி மாருமுண்டு குல்லாக்களுண்டு குளிக்கத்தாம்பிராழியுண்டு சதுரங்கமேடையுண்டு சண்முக விலாசமுண்டு பதிரங்கமானப் பாலாழியுண்டுமையா மாதமொன்று தன்னில் வருங்கோடி பொன்னதிகம் போத வருங்காண் பொற்சவடியாபரணம் வருசமொன்றானதிலே மாலைவடமாயிரந்தான் கருவலங்களின்னதென்று காணாத்தொகையதுதான் காவடி கோடி காணிக்கை முக்கோடி பார்க்கோடி கூடி பலசாதி யெண்கோடி இப்படியேயென்றனக்கு இருக்குதுகாண் பாக்கியங்கள் எப்படியும் நீங்கள் இங்கிருக்க வேணுமென்றான் கேட்டு நாராயணரும் கீழ்ச்சுண்டசையாமல் நாட்டமுடனுள்ளத்து அடக்கிமறுத்தேதுரைப்பார் நல்லதுவே மருகன் நலமாயிருப்பதுதான் பொல்லாது செய்யாமல் புரிந்தாள்வதேபோதும் என்றுரைத்து அய்யா ஈசரோடேதுரைப்பார் பண்டுவிட்ட வாசகச்சொல் பற்றிச்சோ பூமியிலே வல்லாண்மைக்காரருக்கு மதமிப்படியிருக்கும் இல்லாதெளிமைகட்கு இருக்குமது மேல்தயவு என்று இருபேரும் இயம்பி மனதடக்கி நன்றெனவே கந்தனொடு நல்வார்த்தையும் பேசி அந்த முடனே எல்லோருந் தானடந்து செந்தூரலைக்கரையில் சேர்ந்தனர் காணம்மானை

கடற்கரை தனிலே வந்து கரியமாலீசரோடும் மடக்கொடி உமையாளோடும் மறைமுனி தேவரோடும் குடக்கலை பொருந்தும்வேதக்கூர்முனி ரிஷிகளோடும் கடற்கரை தனிலே வந்து கண்டனர் கடலைத் தானே

வந்தவரெல்லாப் பேரும் வட்டமிட்டதிலே நிற்க சந்தன வாரியோரம் தன்னிலே நின்று ரண்டு சுந்தர முனிவர் வந்து சுவாமிதன் பதமே பூண்டு எந்தன் பிரானேயென்று இருவரும் வணங்கிச் சொல்வார்

ஆதியேயெங்கள் அய்யா நாராயணரே சோதியேயெங்கள்தவம் சுறுக்கிட்டுருவளர்ந்து கண்டுகொண்டோமையா கமலப்பொருளேநீர் பண்டு மொழிந்தபடிப் பார்த்துவரந்தாருமையா என்று முனியிருபேர் இறைஞ்சித்தொழுதிடவே மன்றுதனையளந்தோர் மறுத்துரைப்பாரன்போரே ஏதுகாண் மாமுனியே இங்குநின்ற வாறேது தாது கரமணிந்த சன்னாசி சொல்லுமென்றார் அப்போது மாமுனிவர் அவரேது சொல்லலுற்றார் முப்போது நாங்கள் மும்முதற்சொல் மாறாமல் மேலோகம் விட்டு மேகவண்ணாவுன்செயலால் பூலோகமீதிறங்கிப் பொங்குகடல் கண்டணுகிச் சோதியுரைத்த சொல்லுரைத்து வாரியிடம் நீதியாய் நில்லுமென்று நினைவாகச்சட்டமிட்டுக் கயிலையது ஏக கண்ணோக்கும் வேளையிலே அகிலமதிற் கலியன் அவனைமிகக் கண்டேதான் மேலோகமேற மேல்வழிகள் காணாமல் பூலோகமானதிலே போயிருந்தோங் கண்கவிழ்ந்து அப்போது ஆயனேநீர் அங்குவந்து எங்களிடம் இப்போது போய் நீங்கள் என்னுடைய செந்தூரில் வாரிக் கரையதிலே வாய்த்த தவமாயிருந்து சூரியப்பிரகாச சுத்த வைகுண்டராசர் இக்கடலில் பிறந்து எங்கள் தமைக்கூட்டி பக்கமதில் வைத்துப் பதவிதர வேணுமென்று நில்லுங்கோ தவசு நினைவாகவென்றுசொல்லி பல்லுயிரும்வளர்த்த பாக்கியவானேநீரும் உரைத்தமொழி அய்யாவுன் உள்ள மறியாதோ கறைக்கண்டர் மைத்துனரே கண்ணா எனத்தொழுதார் அப்போது அய்யா நாராயணர் மகிழ்ந்து செப்போடு வொத்தாற்போல் சிரித்து மனமகிழ்ந்து நல்லதுகாண் பிள்ளாய் நாடுந்தவம்புரிந்தீர் வல்லவர்தாம் நீங்கள் வாருங்கோவென்றழைத்து அருகிலே நில்லுமென்று அகமகிழ்ந்தாரன்போரே குருவான ஈசரொடு கூறுவார் பின்னாலே நம்முடைய ஈசுரரே நாம்வந்த காரியங்கள் எம்முதலே யின்னதென்று இயம்புவீ ரீசுரரே கட்டான ஈசுரரும் காரியத்தைப் பாருமென்று மட்டான வாரிக் கரையிலே வந்திருந்து எல்லோருஞ் செந்தூர் இடமெல்லாங்கண்பார்த்து வல்லோர்களெல்லாம் வந்திருந்தார் செந்தூரில் சங்கத்தார் அங்கு அமர்ந்திருக்கும் வேளைதனில் சங்குவண்ணர் நேமித்த சம்பூர்ணத்தேவன்கதை உரைக்கிறார் அன்பர் உள்ளமறிவதற்கு தரையீரேழுமளந்த சுவாமியுரைக்கலுற்றார் சீரான நல்ல தெட்சணாபுமியிலே பாரான நல்ல பதிதாமரையூரில் தவசிக்குகந்த தாமரையூர் நற்பதியில் சிவசிவா வளரும் தெட்சணாபுரிநாடு பாண்டவரில் விசையன் பாசுபதம் வேண்டுதற்கு ஆண்ட பரமேசுரரை அகம்வைத்துப் போர்விசையன் நின்று தவமுடித்து நெடியரனை மாதுவையும் கண்டு பதம்வாங்கிக் கைகண்ட திவ்வூரு அதியரசன் முன்னாள் அதிகத் தவமிருந்து பதியரசியானப் பார்வதியை ஈன்றதுதான் இவ்வூரு தெச்சணந்தான் ஏற்றதாமரையூரு செவ்வூரு நல்ல சிறந்தமணவைப்பதிதான் வானலோகம்வாழும் வாய்த்ததெய்வேந்திரனும் தானவரைக் காணத் தவசிருந்த திவ்வூரு பஞ்சவர்க்கு முன்னம் பகவானுதவிசெய்ய அஞ்சல்செய்து நாதன் அமர்ந்திருந்ததிவ்வூரு சாம்பு சிவசான்றோர் தழைத்திருந்ததிவ்வூரு தாம்பிரவர்ணியாவி தழைத்திருந்ததிவ்வூரு பரசாரமாமுனிவன் பாரத்தவசுபண்ணி விரமான வியாசரை மிகஈன்றதிவ்வூரு தவம்புரிய வென்று தானினைத்த பேர்களெல்லாம் பவமற்ற தாமரையூர் பதியாகுமென்றுரைப்பார் தவசுக்குகந்த சந்தமுற்ற பேரூரு பவிசுக்குகந்த பாலதியத் தாமரையூர் அவ்வூருதன்னில் ஆதி யருளாலே செவ்வு மகாவிஷ்ணுவும் செய்த சடமேபிறந்து பிறந்து வளர்ந்து பெருமைப் புகழ்காட்டி மறந்திடா முன்னமைத்த மாதை யுறவாடி பூலோக மனுக்கள் பிள்ளையோடேவளர்ந்து மாலேற்கப் பூசை மனையில் மறவாமல் விட்டிணுவைப் போற்றி விளங்கவொரு பீடமிட்டு கட்டுத்தீர்க்காகக் கண்வளர்ந்தார் கலியில் ஒருவர்க்கோர் பொல்லாங்கு உலகில் மிகச்செய்யாமல் குருவை மிகக்கண்டு கொக்கரித்தே வளர்ந்தார் எதிர்த்தோரையடக்கி எல்லோர்க்கும் நல்லவராய் உருத்துக்கரியவராய் உலகில் மிகவளர்ந்தார் எச்சாதியார்க்கும் இவர் நல்லவரெனவே அச்சாதியெல்லாம் அகமகிழத்தான் வளர்ந்தார் முன்னுதித்துடன் பிறந்தோர் ஒருவர்மூப்பாடாமல் பின்னுதித்தும் பெரியோராய்ப் பெருமையுடனே வளர்ந்தார் தாய்தகப்பன் மாமன் சந்தமிந்தத் தம்பியென்றும் ஞாயவானென்றும் நாடி மிகவளர்த்தார் ஊருக்குந் தலைவன் உடையவழிக்குந் தலைவன் ஆருக்குந்தலைவனென்று அன்னை பிதாவளர்த்தார் ஞாயமிருப்பதனால் நாடாள்வானென்றுசொல்லி தாய் தமர்களெல்லாம் தாங்கி மிகவளர்த்தார் சொல்லுக்கும் வல்லவனாய் சூராதி சூரனிவன் மல்லுக்கும் வல்லவனாய் உபாயத்திலும்பெரியோன் மங்கையர்க்குமேற்றவனாய் மாமோகக்காமீகன் எங்கும்பேர் கேட்கவைப்பான் இவன்கீர்த்தி நல்வளமை பல்லாக்கும் ஏறிடுவான் பார்முழுதும் ஆண்டிடுவான் எல்லார்க்கும் நல்லவனாய் இவன்சமைவானென்று எவ்வோருங் கொண்டாட இன்பமுடனே வளர்ந்தார் அவ்வோருங் கொண்டாட அவர்வளரும் நாளையிலே எல்லாத் தொழிலும் இதமிதமாய்க்கற்றுமிக பொல்லாதாரோடு பெரும்பகை போலேசீறி நல்லாரையுள்ளில் நாளுமறவாமல் கல்லாரையெல்லாம் கண்டுகழித்தேயிருந்தார் ஈவதற்குத்தர்மனென எளியோரைக் கண்பார்த்து ஆய்வதற்கு நல்லான் என்றே மிகவளர்ந்தார் பதினேழுவயதில் பண்டமைத்த பெண்ணோடு விதியானபடியால் மெல்லியர்மேல் இச்சைகொண்டு கூடிக்குணமாய்க் கொண்டவனையுமகற்றி தேடியிவரோடு செய்யரசமாயிருந்தாள் வானுபரமேசுரனார் மாயவனாராணையிட்டு நானும் நீயுமாக நலமாக வாழ்வோமென்று ஆணையிட்டிருபேரும் அகமகிழ்ந்தன்று முதல் நாணமதில்லாமல் நாயகன்போலேவாழ்ந்தார் மங்கை காணாமல் மறுவூருதங்கறியாள் அங்கவளைக்காணாமல் அயலூருதங்கறியார் இந்தப்படியாய் இவர்வாழும் நாளையிலே எந்தநருளுங் கண்டு இவர்க்கிவளை அமைத்ததென்பார் முன்னாள் அமைத்த ஊழி விதியெனவே சொன்னாரெவரும் சுவாமியருளாலே அன்றைக்கமைத்ததுவே அவளையிவர்க்கல்லாது என்று நருளெல்லாம் இயம்பி மிகவுரைத்தார் மன்றீரேழுமறிய மங்கையொடு வாழ்கையிலே உற்ற வயசு ஓரிருபான்ரண்டதிலே சத்துராதியோர் நீசன் தானே பழியேற்க ஏற்கவே நீசன் இடறுசெய்த ஏதுவினால் ஆர்க்கம் அடக்கி அமர்ந்து பிணியெனவே எல்லோருமறிய இவரிருந்தாரம்மானை வெல்லாருமில்லா விசையடக்கித் தானிருந்தார் நொம்பலங்களென்று நொந்து மிகவுழைந்து தம்பிலங்களடக்கித் தருணம் புலம்பலுற்றார் கருவுற்றதோசம் கழிந்து சிவஞானத் திருவுள்ளமாகி திருவடியைத்தான்சேர மனதில் மிகவுற்று மாயவரை நெஞ்சில்வைத்து தினமும் வருந்தித் தீனமெனவே இருந்தார் அப்படியோர் வருசம் அங்கமதிலூறலெல்லாம் முப்படி ஞாயமதால் உலகில் கழியவிட்டு இகாபரா தஞ்சமென்று இருக்குமந்த நாளையிலே மகாபரனார் செயலால் மாதாவின் கண்ணதிலே சொற்பனம்போல் சுவாமிவந்து சொன்னாரே வுத்தரவு உற்பனம்போல் கொண்டு உற்றஅவர் மாதாவும் மகனே யின்றிரவில் மனஞ்சலித்து நான்வாடி அகம் வைத்த எண்ணம் அறிந்து சிவநாரணரும் வந்து சொன்ன வுத்தரவை மகனேநீ கேளுவென்று விந்து வழிக்கிளையோர் மிகுவாகக் கேட்டிருக்க சொல்லுகிறாளந்த சொற்பனத்தையன்போரே நல்லுறவாய்க்கேளுமென்று நவிலுவாளன்போரே ஆயிரத் தெட்டு ஆண்டிதுவாமிவ்வருசம் மாசியென்ற மாதமிது வாய்த்ததேதி பத்தொன்பது இம்மாதமித்தேதி ஏற்ற திருச்செந்தூரில் நம்மாணை கொடியேறி நல்லதிருநாள் நடக்கும் அங்குன் மகனை அழைத்துவருவாயானால் எங்குள்ளோருமறிய பிறவிப்பிணிதீர்த்து நல்லபேறுங் கொடுப்போம் நம்மாணை தப்பாதென சொல்லவே கண்டேன் சுவாமிகருமேனிநிறம் நான்கண்ட சொற்பனந்தான் நழுவிமிகப்போகாது தேன்கண்டாற் போலே சிரித்து மனமகிழ்ந்து இந்தக் கனாவதற்கு இங்கிருந்தங்கே போய் வந்தல்லாதே பிணியும் மாறவகை யில்லையல்லோ என்றுரைக்க எல்லோரும் இன்பமுடனேமகிழ்ந்து நன்று நன்று போவதற்கு நடைக்கோப்பு கூட்டுமென்றார் வேண்டும் பலகாரம் விதவிதமாய்ச் சேகரித்து ஆண்ட கருப்புக்கட்டி ஆனதெல்லாஞ் சேகரித்து தானதர்மஞ் செய்ய தனங்கள் மிகவெடுத்து தீனமானவரைத் திடமாகக் கூட்டிவந்து ஆளுமிகச் சேகரித்து அகலநல்ல தொட்டில் வைத்து நாளு கடத்தாமல் நடக்கவழி கொண்டனராம் மாதாவும் வாய்த்த மகனும் நருளுடனே பிதாவின் பாதாரம் நெஞ்சில் மிகநிறுத்தி இருந்த பதியும் விட்டு ஏற்றவொரு காதம்விட்டு வருந்த நருளோடே வழிகொண்டாரன்போரே கூடங்குளமும் விட்டுக் குளிர்ந்தசுக்குப்பாரும் விட்டு தோடவழியாறுங்கண்டு சூறாவழிக்காடும்விட்டு நடந்துவொருவனத்தில் நல்லதண்ணீராவிகண்டு கொணர்ந்த பலகாரம் கொண்டுதண்ணீர் தான்குடித்து தகையாறிக் கொண்டு தானிருக்கும் வேளையிலே வகையான நல்ல வாய்த்தமகாவிட்டிணுவும் எதிரே ஆள்விட்டு இங்கழைக்கவேணுமென்று அருகே தானின்ற ஆதி முனிவரைஅழைத்து சம்பூரணனென்னும் மேலோக உயிரிங்கே தன்தவத்தால் முக்திக்கு தானே வருகுதங்கே எதிரேபோய் நீங்கள் இங்கழைத்து வாருமென்று பதியேறும் பெருமாள் பகர்ந்து முனியயச்சார் அயச்ச முனிமார் அவ்வாயு போல்விரைவாய் பயபட்சமுடனே பகர்ந்த இருமுனியும் எந்த வழியாய் இவர்கள் வருவாரெனவே அந்தந்த வழிக்கு ஆலோட்டம் பார்த்துவந்தார் வந்து ஒருவழியில் வரவேகண்டம்முனிவர் சந்துஷ்டியாகித் தாழ்ந்து நமஸ்காரமிட்டு கண்டு குவித்துக் கனகமுனிமார்கள் வண்டுசுற்று மார்பனுட வாய்த்தகரம் இரண்டதையும் முனியிருபேர் தோளில் உயர்த்தி மிகவேந்தி துணிவுடனே மாமுனிவர் தோளின்மேலேயிருத்தி கூட நடப்போர் குதித்துக் குதித்தோடிவர வாடியிடைந்து மனுநருட்களோடிவர நல்ல பிறவியைத்தான் நன்முனிவர் கொண்டோடி வல்ல செந்தூர்ப்பதியில் வந்தனர் காணன்போரே வந்த முனிமார்கள் வாழ்த்தியந்த தேவனுயிரை சந்தனாவீதியிலே சடலந்தனை நிறுத்தி மாமுனிவர் தாமும் மாயோனை வந்துகண்டு சாமிநீர் கொண்டுவரத் தானுரைத்த நல்லுயிரை அடியாரெதிரேபோய் அழைத்துவந்தோமையாவே திடீரெனவே நாதன் சொன்னமுனியோடுரைப்பார் கொண்டுவந்தோமென்றீரே கூர்மையுள்ள நல்லுயிர் பண்டுமுறையெல்லாம் பகருவீர் மாமுனியே அப்போது மாமுனிவர் ஆதி யருளாலே செப்புகிறோமென்று சொல்லலுற்றாரன்போரே வெல்லமர்கோன் வாழும் வெற்றிதெய்வலோகவுயிர் பெரு சம்பூரணன் பெரிய திறவான்காண் அப்படியே தெய்வ லோகமதிலேயிருக்க இப்படியே யிவர்க்கு எமலோகமானதிலே இருக்கின்ற பெண்ணதிலே இசைந்த பரதேவதையென ஒருகுழலி தன்மேல் உள்ளாசையாயிவரும் அவளுமிவர்பேரில் ஆசையாய்த்தானிருந்து இவளுமிவரும் இருந்துமிக வாழ்கையிலே தேவருக்குந்தெய்வ லோகமேழுள்ளவர்க்கும் யாவருக்குமோர்பிறவி யாகுகின்ற நாளதுவாம் இவரையும் வருத்தி என்னவுன் செய்தியென்றார் அவளுடைய ஆசையினால் அல்லவென்று தான்மறுத்து இவளையுமென்னோடு இயல்பாய்ப் பிறவிசெய்தால் குவளையணி மாயவரே குணமெனக்காகுமென்றார் அப்போது நாதன் அந்தத் தேவன்றனக்கு செப்பமுள்ள புத்தி செப்பிமிகப்பார்த்தனரே அப்போதிவர் கேளாமல் அதுதானதுதானென்றார் மாயனுக்குக் கோபம் மனதில் மிகவாகி ஆயனப்போதிவர்க்கு அதிகப்பலனுரைத்தார் நல்லது நீ கேட்ட ஞாயமீட்டேற்றமதாய் வல்லவனை நினைந்து மாதோடு நீதானும் எங்களிருபேர்க்கும் இன்னம் பிறவியிலே மங்கையும் புருசனென மறவாமலாவதற்கு வரந்தாரு மென்று மனதில் நினைவேற்றி பரந்தாண்டி கண்டு பலன்பெறுங்கோ என்றுசொல்லி தவசிருக்க விட்டீர்காண் சங்கரரே நீர்கேளும் சிவசிவாவென்று தவம் செய்தவர்கள் நிற்கையிலே தவம்பார்க்க ஈசுரரும் சன்னாசி நீதனுமாய் அவடமெழுந்தருளி அங்கேகும் வேளையிலே தெய்வேந்திரன்தானும் திருமுடியுஞ்சூடி மையேந்திரனுடைய மலர்பாதங்காணவென்று அவனுமிக வந்தான் அரனெதிரே அய்யாவே தவத்துக் கிடறு தான் வருவதோராமல் தேவன் மதிமயங்கித் திருமுடிமேலிச்சைகொண்டு பாவையுட னுரைத்துப் பற்கடித்தான் தேவனுமே அதையறிந்தீசுரரும் அன்றும்முடனுரைத்தார் இதையறிந்து நீரும் ஏற்றதேவனோடுரைத்தீர் வாய்த்த தவங்குளறி வாய்க்காமல் நின்றதினால் ஏற்ற கீழுலகில் என்மகவு சான்றோரில் நல்லதர் மகுலத்தில் நன்றாக நீபிறந்து தொல்லையெல்லாந் தீர்த்து சூலின் அழுக்கறுத்து நல்ல கதிஉனக்கு நானருள்வேனெனவே உறுதிசொல்லித் தேவனையும் உற்ற சான்றோர் குலத்தில் பொறுதியுள்ள தர்மப் பிதிரில் பிறவிசெய்தீர் மாதைப் பிறவிசெய்தீர் மக்கள் சான்றோர்குலத்தில் சூத எமக்குலத்தில் தோன்றவைத்தீர் என்றுரைத்தார்

என்றிந்த விவரமெல்லாம் இயல்முனிவோர்கள் சொல்ல நன்றிந்த விவரமென்றே நாரணர் தயவு கூர்ந்து சென்றிந்த நல்லுயிர் தன்னைச்செந்திலம்பதியிலெங்கும் கொண்டந்தத் தெருவுங்காட்டி குளிப்பாட்டிவாருமென்றார்

நாலுள்ள தெருக்கள் தோறும் நடத்தியே தரையிலூட்டி பாலுள்ள பதத்தில் கொண்டு பழவினை தீரக் காட்டி மாலுள்ளம்தான் வகுத்த முன்விதி மாறாவண்ணம் மேலுள்ள சொர்க்கலோகம் அனுப்புவீர் விரைவாயென்றார்

நாராயணவைகுண்டர் அவதாரம் அப்பொழுது அய்யா நாராயணர் மகிழ்ந்து முப்பொழுதுவுள்ள முறைமையது கூறலுற்றார் ஆறுதரம் நம்மை அகம்வைத்துக்கொண்டசடம் பேறுபெற்றதில்லையே பேறுநாமீந்திலையே அச்சடலமம்மலையில் அருந்தவசுபண்ணினதே இச்சடலமீடேற இந்தநாள் வந்ததென்று வரவழைத்து வாருமென்று மறையோரைத் தானேவி விரைவாகவாருமென்று விடைகொடுத்தார் அய்யாவும் நடந்து மறையோர் நல்லமலைபார்த்து சடம் வீற்றிருந்த தங்கமலை மீதில்வந்தார் மலை மீதில் வந்து மலைப்புதுமை தான்பார்த்து அலைமீதில் வாழ் துவராபதி தன்னுடைய வடவாசல் நேரே வாழுமலையிதுதான் தடவரையிம்மலையில் தானிருக்கும் நதிகள் தங்கக்கிணர் வங்கக்கிணர் தாம்பிரக்கிணறுடனே சங்கமகிழிம்மலையின் தடாகமிது நன்றெனவே கரைகாணாத்தேவர் காட்சியிடுமிம்மலைதான் விரைவானமாமுனிவர் வீற்றிருக்குமிம்மலைதான் மரித்தோரைத்தானெழுப்பும் வாய்த்த சஞ்சீவி வளரும் பதித்தானமிம்மலையின் பகுத்துரைக்கக்கூடாது என்று சொல்லித்தேவர் ஏற்ற மலைக்குள்ளேகி நன்று நன்றென்று நாடியவர்பார்க்குகையில் கண்டாரே காயாம்பூ கண்ணர் முக்கூடதையும் கொண்டாடிக்கூடதையும் குளிர்ந்த ரதமீதேற்றிவந்தார் மாமுனி இருபேரும் மாயோனை கண்டு தொழுது தாமும் நீர் சொன்ன சடலமது தன்னையும் கொண்டு வந்தோம் என்றார் கூர்மையுள்ள நற்சடலம் பண்டுள்ள முறையெல்லாம் பகரும் நீர் என்றாரே அப்போது முனிமார் ஆதி பதம் போற்றி செப்புகிறோம் என்று சொல்லலுற்றார் நல்ல சடலம் இது நாட்டில் முதற்காலமதில் வல்ல சிவனிடமிருந்து வந்ததுவே இச்சடலம் சூரனென வந்த தோசப் பொல்லாதவனை வீரமாய் செயிக்க விமலன் அருளினாராம் அப்படியே தொடர்ந்த அசுரர் குலங்கள் யாவும் முப்படி நூல் போலும் முதல் ஈசன் சொல்போலும் கொன்று தரம் அறுத்து குவலயம் காத்த சடலம் இன்றும் வந்ததே இகக்கலியை வளர்த்தறுக்க வடந்தார மார்பன் வாய்த்த அரிநாரணரும் நடந்தார் கயிலை நாதர்திருக்கூட்டமதில் எடுத்த பிறப்புக்கு எல்லாமெனைச்சுமந்து அடுத்து மூவுலகும் அங்கங்கே கொண்டேகி பூமி கடலும் பொருப்புப் பூலோகமெல்லாம் நேமித்தெனைச் சுமந்து நேட்டமுடன் திரிந்தாய் நீசெய்த நன்றி நினக்குரைக்கக் கூடாது நானுனக்குச் செய்யும் நன்றிமிகக்கேளு இத்தனை நாளும் எனைச்சுமந்து பாடுபட்டாய் புத்திரனாய் உந்தனுக்கு பெரியதெய்வஉயிர் தந்து உன்றனக்குப்புத்தி உபதேசங்களுரைத்து என்றன் துயரமாற்ற யுகசோதனைக்கனுப்பி உன்றன் துயரமாற்றி உகத் துயரமும்மாற்றி என்றன் துயரமாற்றி ஈசர்துயரமும்மாற்றி கலியையறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்து சலிவில்லாத் தர்ம தங்க நவரத்னபதி முத்து நவரத்தின முடியுனக்குநானருளி எத்திசையுமெய்க்க ஏற்றமனுஅன்போர்கள் கட்டியங்கூறிக் காட்சியிட்டுவுன்றனக்கு எட்டுத்திக்கும் நின்றேத்த ஏற்ற குடையொன்று தந்து அரசாண்டு நீயும் அழியாத்திருவுளம்போல் வீரசான்றோர் சூழ வீரக்கொடிநிறுத்தி செங்கோற்கு தர்ம சிவசெங்கோலுமருளி எங்கோலரசு என்நாமச்சக்கரத்தால் சீமையைம்பத்தாறும் உன்சொல்லொன்றுக்குள்ளாக்கி பூமுகச் சிங்காசனமும் பொன்முகச் சிங்காசனமும் கோமுகச் சிங்காசனமும் குணமுகச்சிங்காசனமும் மாமுகச் சிங்காசனமும் மயில்முகச் சிங்காசனமும் அன்னமுகச் சிங்காசன மீதோடாகவேதான் பொன்னம்பலம்போல் பெரியசிங்காசனந்தான் முப்பத்திரண்டறம் முழுதுமுனக்கருளி செப்பொத்த மாணாக்கர் சேவிக்கவுன்றனக்கு தருவேன் நானுன் தாயார் பேராணை என்றார் வருவேனுன்னோடு நான் வழித்துணையாய் சிவனோடு அப்படி முற்சடலம் தன்னை அலைகரைதனிலே நிறுத்தி செப்படி வித்தை நாதன் செகலினுள்ளகமே சென்றார்

வானவர் தேவர்போற்ற மறைமுனி வோர்கள் பாட தானவர் ரிஷிகளோடு தமிழ்மறை வாணர் போற்ற ஞானமாம் வீணைதம்பூர் நாற்றிசையதிர வோசை ஓம்நமோ வென்று தேவர் ஓலமிட் டாடினாரே

மத்தளத்தொனிகள் வீணை மடமடென் றேற்ற வானோர் தித்திதெய் தித்தி யென தேவியர் பாடி யாடத் தத்தியாய்ச் சங்க மெல்லாம் சதுர்மறை கூறி நிற்க முத்திசேர் மாயன் தானும் மூழ்கினர் கடலினுள்ளே

கடலினுள்ளகமே போந்து கனபதி மேடை கண்டு மடவிபொன் மகரந் தன்னை வாகுடன் பூசித்தேய்த்து நிடபதி மாயன் நிறைந்த பொன்னிறம்போல் வன்னி வடவனல் போலே வீசி வந்தனர் மகரமுன்னே

மாதுபொன் மகரங் கண்டு செந்தழலெரியோவென்று செல்லிடப் பதறி நொந்து எந்தனின் மான வானோ எரிவட வாச மேர்வோ கந்தனின் மாய மாமோ என்றவள் உள்ளம் மலங்கியே கலங்கினாளே

கலங்கியே மகரந்தானும் கருத்தறிந்தேதோசொல்லும் இலங்கியே வருவோமென்ற என்மன்னர் தானோ யாரோ சலங்கியே யதிரப் பூமி சதிரெனக் கதிரு பாய துலங்கிய சுடரைப் பார்த்துச் சொல்லுவாள் மகரந்தானே

சுடரே சுடரே துலங்கு மதிசுடரே கடலே கடலே கடலுட் கனலாரே அக்கினிக்கேயபயம் அனலேவுனக்கபயம் முக்கியமாய்க் காந்தல் முனையேயுனக்கபயம் தீயேயுனக்கபயம் திரிபுரமே யபயம் நீசுட்டத் தலங்கள் நினக்குரைக்கக் கூடாது மாசற்ற ஈசன் வல்லவனோடுள்ளிருந்து காண்டாவனமெரித்தாய் கடியவில்லி கையிருந்து ஆண்ட இலங்கையெரித்தாய் அனுமன் கையிலேயிருந்து முப்புரத்தைச் சுட்டழித்தாய் முதன்மை கையிலேயிருந்து ஒப்புரவாய் நீயெரித்த உவமைசொல்லக்கூடாது அனலேவுனக்கபயம் ஆதியுனக்கபயம் கனலேயமருமையா காந்தல்தனை மாற்றுமையா மன்னரரி நாரணர்க்காய் மாறுவீரக்கினியே இந்நியல்பையெல்லாம் என்மன்னரிங்குவந்தால் சொல்லியுனக்குச் சொர்க்கம் வேண்டித்தருவேன் வில்லிக்கு வல்லவனே விலகியமருமையா என்னையென் மன்னவர்தான் இந்தக்கடலதிலே பொன்னனைய நன்மகரம் ஆகவே போகவிட்டார் வருவோமென்றநாளும் வந்ததுகாணக்கினியே தருவேனுனக்குவரம் தாட்டீகன் வந்ததுண்டால் அமர்ந்து நீ போனால் அதிகப்பலனுண்டாகும் சுமந்த பறுவதத்தின் சுகம்பெற்று நீவாழ்வாய் என்றுமகரமாது எரியைமிகக் கண்டுளறி நின்று மயங்குவதை நெடியதிருமாலறிந்து அனலை மிகவுள்ளடக்கி ஆதியுருக்காட்டி மனைவியே நீ வாவெனவே மாயனருகழைத்தார் உடனே பொன்மாது உள்ளம் மிகநாணி தடதடென வந்து சுவாமியடியில் வீழ்ந்து எந்தன் பெருமானோ இப்படித்தானின்றதுவோ சிந்தை மயக்குதற்கோ தீப்போலே வந்ததுதான் என்று மிகப்பொன்மகர இளமாது ஸ்தோத்தரித்து மன்றுதனையளந்தோர் வாநீயென அழைத்து அருகில் மிகநிறுத்தி அங்குள்ள தேர்பதியும் கருதியிருபேரும் கண்கொண்டுறப்பார்த்து வச்சிர மேடை மரகதப் பொன்மேடை எச்சரிக்கை மேடை எல்லாமிகபார்த்து மாதேவுனக்கு வளர்பிறவி பத்தெனவும் சீதேவுனக்குச் சிறந்தபேறு பத்ததிலே பலம்பேறு பேறாய் பார் மகிழவோர்பாலன் சிலம்பேறுடையவனாய் சிவனுக்குகந்தவனாய் எகாபரமுமகிழ யானும் நீயுமாக மகாகுரு வதாக மகிழ்ந்து மகிமையுடன் தன்மச் சிறப்பதிகத் தலைவன் தனைப்பெறவே உண்மையாய் நானுனக்கு உபதேசமாயுரைத்தேன் என்றுரைக்க நாரணரும் இளமகரமேதுசொல்லும் பண்டு அமைத்திருந்தால் பக்கஞ்சொல்வதோ அடியாள் சித்தத்துக் கேற்ற செயலெனவே பொன்மகரக் கற்றைக் குழலி கருதி மிகவுரைத்தாள் உடனே பொன்மகரமதை உள்ளம் மயக்கமிட்டு திடமயக்கிச் சிங்காசனத்தில் மிகவிருத்தி மயங்கியே பொன்மகர மாது மிகவிருக்க தியங்குதே லோகமுதல் திரைவாயு சேடன்முதல் ஈசர்முதலாதிமுதல் ஏற்ற தெய்வார்கள் முதல் சீதை முதல் மயங்க சீமையீரேழுமயங்க மாமோகச் சக்கரத்தை மாயவனார் தான்வீசி சீமையெழுகடலும் சிணமே மயக்கினரே மயக்கியந்த மால்மகரம் மாமோகமாயிருக்க தியக்கியந்த நாரணரும் சென்றார் மதுரமதுள் மகரத்துள் சென்று மகனை மிகநினைக்க உகரமுனி கொண்டுவந்த உத்தம சடமதுதான் சிணமே கடலுள் சென்றதே அம்மானை குணமே குணமெனவே கூண்டரியோன் தான்பார்க்க மகரத்தினுள்ளே மாயோனின் சடம்செல்ல அகரத் தெருவறையில் அலங்காரத்தட்டதில் காலொன்றாய் நிற்கும் கனத்தபொன்மேடையதுள் நாலொன்றாய்க் கூடும் நல்லசிங்காசனத்தில் தங்கவைடூரியத்தால் தானிறைந்த மண்டபத்துள் எங்கும் பிரகாசம் இலங்குகின்ற மண்டபத்துள் முத்துக்கள் சங்கு முழங்குகின்ற மண்டபத்துள் பத்தும் பெரியோர்கள் பாவித்த மண்டபத்துள் தங்கநீராவித் தான்வளருமண்டபத்துள் சங்கு முழங்கிநிற்கும் சதுரமணி மண்டபத்துள் மூவாதி கர்த்தன் உகந்திருக்கும் மண்டபத்தில் தேவாதி தேவர் சிறந்திருக்கு மண்டபத்தில் ஆயிரத் தெட்டு அண்டம்நிறை மண்டபத்தில் தாற்பிரிய மான தாமிரவர்ணி மண்டபத்தில் எண்ணக்கூடாத இயல்புநிறைமண்டபத்தில் மண்ணளந்தோர் தனக்கு மகவாய் தான்சமைந்தார் கண்ணான மகற்கு கனத்ததங்கச்சட்டையிட்டு எண்ணவொண்ணா ஆபரணம் எல்லாமெடுத்தணிந்து தங்கக் குல்லாவும் தலைமேலே தூக்கிவைத்து பங்கமில்லாத் தைலப் பதத்தில் மிகமூழ்கி வைகுண்ட வெள்ளை மான்பட்டொன்றேயெடுத்து கைகொண்டு பாலனுக்குக் கண்ணர் மிகச்சூடி மேலுகளொக்க மினுமினுக்கப்பச்சையிட்டு காலுகளுக்குத்தங்கக் கழராப்பணிகளிட்டு மகனையெடுத்து மடிமீதிலேயிருத்தி உகமாள வந்தவனோ உடையவனோ என்றுசொல்லி கண்ணைத் தடவி கரிய முகமுந்தடவி எண்ணும் வளர்வாயென இசைந்த முகத்தோடணைத்து நடக்கக் கருமம் நவின்றிடவே நாரணரும் அடக்க முடனே அருளுவாரன்போரே நல்லவுபதேசம் நன்மகவுக்கேயருளி வல்லத்திருநாதன் வகுக்கிறாரன்போரே

தேடிய மறைநூல் வேதன்தேவியர்க் கமல நாதன் நாடிய இறையோன் ஞானி நாச்சிமார் தேவரோடும் கூடிய ரிஷியோர் வானோர் குவலய மறியா விஞ்சை தேடிய மகனார்க் கென்று செப்பினாரொப்பில்லானே

மகனேவுனது மனமறிய மறையோரறியாவிஞ்சைசெய்து அகமேயருளித் தருவதெல்லாம் அனுப்போலசலில் விலகாதே உகமே முடிந்த தின்பிறகு உதிக்குந் தர்மயுகத்தில்வந்தால் செகமேயறியச் சொல்லிமிகச்சிறந்தே வாழ்ந்து வாழ்வோமே

ஆண்டாயிரத்து எட்டதிலே அதனே மாத மாசியிலே நான்றாங் கடலின் கரையாண்டி நாராயணனே பண்டாரம் கூண்டாந்தெச்சணாபுரியில் கொண்டோம் பள்ளி தர்மமுற்று ஒன்றாம்விஞ்சையிதுமகனே உரைப்பேனிரண்டாம் விஞ்சை

வேண்டாம்வேண்டாங்காணிக்கை மிகவே வேண்டாங்கைக்கூலி ஆண்டார் நாராயணன்தனக்கு அனுப்போல்வேண்டாங்காவடி வேண்டாமென நிறுத்தல்செய்து வாய்த்த சிறையாய்க் கவிழ்ந்திருநீ இரண்டாம் விஞ்சையிதுமகனே நவில்வேன் மூன்றாம்விஞ்சையதே

கொற்றவர் தானுமாண்டு குறும்புகள் மிகவே தோன்றி உற்றதோர் துலுக்கன் வந்து உடனவன் விழுந்துவோடி மற்றதோராண்டுதன்னில் வருவோமென்றாகமம்போல் முத்தலத்தோருங் காண உரைத்தனர் மூன்றாம் விஞ்சை

நல்ல மகனே நாலாம் விஞ்சைகேளு வல்ல நடுஞான வாய்த்த வைகுண்டமது பிறந்து கொண்டிருக்கெனவும் புதிய நட்சத்திரத்தில் அறந்தழைக்க நன்றாய் அதுகுதிக்கு மென்றுசொல்லு மாழுவது மாண்டு மனதுகந்ததே முழிக்கும் முழுவதை நீக்கி முழிப்பதுவே கண்டுகொள்ளும் ஒரு நெல்லெடுத்துடைக்க நாடு கேட்டுக்கொள்ளும் இரு நெல்லெடுத்துடைக்க நாடு தாங்காது மலைகளுதிர்ந்துவிடும் வானமழிந்துவிடும் தலைநட்சத்திரமும் தானுதிரும் ஆலங்காய்போல் சத்தமொன்றானதிலே தானிதெல்லாமாகுமென்று சித்த முடனே செப்பியிரு என்மகனே ஆயிரத் தெட்டு அதில்வாழுந் தேவருக்கு வாயிதமாய் விஞ்சை வகுப்பேன்கேளென்மகனே நாட்டுக்குடைய நாராயணர் தானும் ஆட்டுக் கொடைபூசை அனுப்போலும் வேண்டாமென்று சொல்லியே தர்மமுற்றுச் சிறையாகத் தானிருக்கத் தொல்லுலகி லாரேற்கார் பார்ப்போமென்று சொல்லிடுநீ தூறான பேய்களுக்குச் சொல்லு முறைகேளு வாறான நாரணர் தான் வாய்த்ததர்மமே நினைத்துக் கவிழ்ந்து சிறையிருக்குங் காரணத்தாலோகமெல்லாம் உவந்து திரியும் உயிரிப்பிராணி யாதொன்றையும் இரத்த வெறிதீபம் தூபமிலைப் பட்டைமுதல் சற்றும் பலிபாவம் தான்காண ஒட்டாதென தர்மம் நினைத்துத் தவசிருக்கேன் நாரணனும் உற்பனமாயறிந்தோர் ஒதுங்கியிருங்கோ வெனவே வீணப்பசாசறிய விளம்பியிரு என்மகனே நாணமறியாமல் நன்றிகெட்ட நீசர்குலம் மட்டையெடுத்தடிப்பார் மண்கட்டி கல்லெறிவார் சட்டமசையாதே தன்னளவு வந்தாலும் நாட்டைக் கெடுத்த நவின்ற கலிச்சக்கரத்தில் ஓட்டைக் கலத்ததிலும் உக்குமிரும்பதிலும் முழியாதே யென்மகனே மும்முதற்கும் நாயகமே அழிவாகிப் போகும் அன்புகெட்ட நீசருடன் பொய்யரோடன்பு பொருந்தியிருக்காதே மெய்யரோடன்பு மேவியிரு என்மகனே வர்மமதை வதைக்க வந்தேனெனச்சொல்லிமிக தர்மமதை வளர்க்கத் தரணியில் வந்தேனென்று இம்முதலேயாறு இருப்பே தவசுபண்ணி மும்முதலோனாகி முறைநடத்து என்மகனே மூக்குச் சுழியும் முச்சுளியும் முத்திமுத்தி நோக்குச் சுழியாய் நேர்நில்லு என்மகனே பரமான பட்டணத்தில் பார்வைகொண்டேநாட்டி சிரமானது விரித்துச் சிறையேயிருமகனே ஏற்பதுபால் பச்சரிசி இருப்பது பார்மேலாகும் காப்பதுமா தர்மம் கண்ணே திருமகனே சந்தன வாடை சாந்துசவ்வாதுபுஸ்பம் எந்தன் திருமகனே எள்ளளவும் பாராதே வாடைபூ தீபம் மகிழாக் கலியுகத்தில் நாட்டையழித்து நல்லயுகமேபிறந்தால் சொல்ல வொண்ணாத சுகந்தருவேனென்மகனே கண்டாயோ மகனே கரிய பவிசுஎல்லாம் கொண்டாயோ விஞ்சை கூடுபிரகாசமதாய் அப்போது தான்பிறந்த அந்தவைகுண்டருரைப்பார் இப்போதென்பிதாவே என்னையீன்றேயெடுத்து பருவமதாய் வளர்த்துப் பகர்ந்தீரே ஞாயமெல்லாம் உருவுபிரகாசமதாய் உபதேசஞ்செய்தீரே தங்க முடிவேந்தே தகப்பனேநீர்கேளும் பொங்குகடல்துயின்ற புண்ணியரேநீர்கேளும் இன்னுங் கலியுகத்தில் இருக்கப்போச்சொல்லீரே உன்னையறியாமல் ஊன்கலியிலுள்ளோர்கள் என்னை மிகப்பழித்து ஏசுவானே நீசனெல்லாம் அல்லாமல் முன்பெற்ற அவர்களுட பேரைச்சொல்லி பொல்லாத நீசனெல்லாம் பேசியடிப்பானே சூத்திர விஞ்சை தொழிலையறியாமல் யூத்திர நீசனெல்லாம் ஒழுங்கு தப்பி மாள்வானே நம்முடைய சான்றோர் நம்மைமிகக் காணவந்தால் செம்மைகெட்ட நீசன் சிதற அடிப்பானே ஆனதால் நம்சான்றோர் அகலநின்று வாடுவரே ஏனமென்ன சொல்லுகிறீர் என்னுடைய நாயகமே முன்னென்னைப் பெற்ற மொய்குழலார் வம்மிசங்கள் என்னேதுவாலே இயல்புபெற வேணுமல்லோ அல்லாமல் முன்னம் அணங்கொரு பெண்ணிணங்க நல்லோர் மனசு நல்லணங்குக்கே கொடுத்து மேலும் பதவி மிகக்கொடுக்க வேணுமல்லோ இப்படியே நல்ல இயல்பு பெறஅருளி எப்படியு மென்னைவந்து ஏற்கவரும் நாளும் எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமென்றார் பொல்லாத பேர்மாளப் போவதுவுஞ் சொல்லுமென்றார் அந்த வுடனே ஆதிநாராயணரும் சிந்தை மகிழ்ந்து திருமகனையாவிமிக கட்டி யெடுத்துக் கமலமுகத் தோடணைத்து திட்டித்த நாதன் சொல்வார் மகனுடனே

எந்தனின் தவத்தாலேக இகபரமுனக்குள்ளாகித் தந்திடு மகனே நானும் தனதுள்ளமமர்ந்தேனானும் உந்தனைக் கண்டால் மூவர் ஒஞ்சியே மகிழ்வர் கண்டாய் சிந்தர்களெவரும் போற்றச் செயல்பெற்ற மகனும் நீயே

மகனேநீ கேட்டதற்கு வகைசொல்ல வேணுமென்றால் தவமூணுண்டேநீ தரணிதனில் போயிருந்தால் அல்லாமல் பின்னும் அதின்மேல் நடப்புவளம் எல்லா முனக்கு இயம்பித்தருவேன்மகனே முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே தத்தமுள்ள ரண்டாம் தவசுசாதிக்காமே மூன்றாந் தவசு முன்னுரைத்த பெண்ணாள்க்கும் நன்றான முற்பிதிரின் நல்ல வழிகளுக்கும் இப்படியே மூவிரண்டு ஆறு வருசமதாய் எப்படியும் நீதவசு இருக்கவருமென்மகனே ஓராறு ஆண்டு உற்றதவமேயிருந்து பாராறுங் காண பார்கண்டு கண்டிருநீ வத்துவகை சொத்து மனைவீடு வாசல்முதல் சற்றுமனதெண்ணாமல் தானிருந்தென்மகனே நன்மையோடு தண்மை ஒன்றுமிகப்பாராமல் கந்தைத் துணியுடுத்து கைநிமிர்ந்து காட்டாமல் எந்தப் பேரோடும் இனிப்புமொழி பேசாமல் பாலல்லால் வேறு பண்டமது ஏராமல் காலல்லால் சுத்தம் கழுவ நினையாமல் மூக்கு நடுவே மும்முதலு முத்திமுத்தி நாக்குச் சுழிதாங்கி நாரணன் நானெனவே எகாபரத்தைக் கண்டு இரண்டாண்டு ஓரிருப்பாய் மகாபரனை நெஞ்சில் மறவாமலெப்போதும் கண்டிரு என்மகனே கருத்தொன்று தானாட்டி கொண்டையமுதுண்டு குவிந்திரு என்மகனே இப்படியே ஆறாண்டு இருநீ யுகத்தவசாய் அப்படியே நீயிருந்து ஆறாண்டேகழித்தால் நினைத்ததெல்லாமுனக்கு நிசமாய் முடியுமப்பா உன்னைத்தள்ளி வேறே ஒருமூப்புகத்திலில்லை என்ன நினைத்தாலும் எத்தனைதான் செய்தாலும் வன்னத் திருமகனே வகையதுதானென்மகனே நானீயேயல்லால் நடப்பதுவும் வேறில்லையே நீசெய்த தெல்லாம் நிரப்புத்தானென்மகனே ஒக்கவுனது உள்ளம் நினைத்தபடி மிக்க நடத்தி விரும்பியிரு என்மகனே எண்ணிறந்த கோடி இயல்பாவஞ் செய்தோர்க்கும் நண்ணியே மோட்சம் நவிலவென்றாலுன் மனந்தான் முக்கோடி தர்மம் உவந்தளித்த அன்போரை தக்கோடி நரகமதில் தள்ளவென்றாலுன் மனந்தான் உனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகனே எனக்கேற்க நின்றவரை இரட்சிப்பது முன்மனந்தான் சிவனும் நீ வேதனும் நீ திருமாலும் நீமகனே தவமும் நாதனும் நீ சங்கமுதலெங்கும்நீயே அப்படியே அய்யா அரிநாதனுமுரைக்க முப்பொருளோர் மெய்க்கும் முதலோன்மகிழ்ந்துரைப்பார் ஆறு வருசம் அதிகத் தவம்புரிந்தால் வாறுமேலென்ன வகுப்பீர்காணையாவே அப்போது நாதன் அன்பாயகமகிழ்ந்து செப்புகிறார் நல்ல திருமகற்கு அன்போரே அதிகத் தவசு ஆண்டாறு தான்கழித்தால் இதின்மேல் நடப்பு இயம்பக்கேளென்மகனே இம்மூணு தவமும் இயல்பாய் நிறைவேறி மும்மூவருக்கும் முதல்வனாய் வந்தாக்கால் தானானாய் நீயும் தலைவனும்நீ என்மகனே சாணாரின் நாயகமே சாதித்தலைவன்நீயே எந்தப்படி நீ எண்ணி நினைத்ததெல்லாம் அந்தப்படி செய்து அவனிதனிலே சிலநாள் சொந்த விளையாட்டு தொல்புவியிற்கொண்டாடி சிந்தாத நன்மையோடு செகத்திலிரு என்மகனே அதின் முன்னாக அன்னீத மாபாவி ஏதுவினை செய்தாலும் எண்ணம் வையாதே மகனே தாழ்ந்திரு என்மகனே சட்டைக்குள் ளேபதுங்கி சார்ந்திரு என்மகனே தனதில்மிக நினைத்துக் கோபமாய் விள்ளாதே குவியச் சிரியாதே பாவத்தைக் காணாதே பாராக்கிரமங்காட்டாதே ஆக்கிரமமெல்லாம் அடக்கியிரு என்மகனே தாக்கிரவானாகிடினும் சற்றும் பகையாதே எல்லா முன்னருகே இருந்துகேட்டுக்கொள்வேனான் பொல்லாதாராகிடினும் போரப் பகையதே வாரஞ்சொல்லாதே வழக்கோரம் பேசாதே சாரமறிந்து தானுரைநீ சொல்லுரைகள் ஆய்ந்து தெளிந்து அருளுநீ யென்மகனே ஏந்து நீ தர்மம் இடறு நினையாதே ஈனமில்லாத் தேடு எமக்காகுஞ்சாதியின்மேல் மானமாய் வருந்தி மகிழ்ந்திரு என்மகனே அன்பான அவ்வினர்க்காய் அறிவில் வருந்தியிரு தன்பாலே வந்தவுடன் சரியாச்சு தென்மகனே மகனே நானுனது மனதுட் குடியிருந்து சிவமே பொருந்தி செப்புவது முத்தரவே துல்லியமுங்காட்டேன் சூட்சமதுவுங் காட்டேன் நில்லு நினைவில்நீ சரித்துக்கொடு என்மகனே பேயன் பயித்தியக் காரனெனப்பேசியுன்னை நீசக் குலங்கள் நின்னையடிக்க வருவார் சரித்துக் கொடுமகனே சற்றுங்கலங்காதே ஒருவரோடும் பிணங்கி உரையாதே என்மகனே எல்லாம் நான்கேட்டு ஆட்கொள்வேனென்மகனே வல்லாண்மை பேசாதே மாதிரி போடாதே ஏழையாயிருநீ என்னுடைய கண்மணியே ஆழமனதுடைய அதிகமகனேவுனது விதங்களறியாமல் வீணாவார் வம்பரெல்லாம் மதங்களடக்க வாக்கெனக்குகேள் மகனே தந்தேனானுனக்கு தரளமணி முத்திரியும் கந்தைத் துணியதிலே காட்டாதேவைத்துக்கொள்ளு மகனேவுனது மனறியக்காட்டினதை அகமேநீ வைத்து அகமகிழு என்மகனே பொறுதிதானென்மகனே பெரியவராகுவது உறுதிமிக வுண்டாகும் உகநாதா என்மகனே தருமச் சிறப்புத் தான்கண்டாயோ மகனே பொறுமை பெரிது புவியாள்வாயென் மகனே கண்டாயோ என்மகனே கரியமண்டபச் சிறப்பு பண்டையுள்ள தேரும் பதியுமிகக் கண்டாயோ தேட்ட முடனுனக்குச் செப்பும் விஞ்சையானதிலே நாட்ட மறவாதே நாரணா என்மகனே அப்போது ஆதியுடன் அம்மகவு ஏதுரைக்கும் இப்போது என்றனக்கு இத்தனையுஞ் சொன்னீரே கலியுகத் தைமுடித்துக் கட்டானத் தர்மபதி வலியுகத்தைக் காண்பதெப்போ மாதா பிதாவேயென்றார் அப்போது மகனை ஆவிமுகத்தோடணைத்து இப்போது சொல்லுகிறேன் என்மகனே கேட்டிடுநீ நீபோய்த் தவசு நீணிலத்தில் செய்திருக்க நான்போய் நடத்தும் நல்வளமை கேட்டிருநீ ஆயிரத்தெட்டு ஆனதிருமண்டபத்தில் வாயிதமாயாண்டொன்றில் வைத்தமண்டபங்களிலே நூற்றிப்பன்னிரண்டு நொடிப்பேனோராண்டதிலே தோற்றுவிப்பேனார்க்கும் தூது மிகநடந்து பத்தாண்டுக்குள்ளே பலசோதனை பார்த்து வித்தார மேலே விசாரிப்பேன் கண்டாயே அங்கங்கே நாட்டிவைத்த ஆணிவேரத்தனையும் எங்கெங்குமொடுக்கி யானுன்னிடமிருந்து ஒக்க வொருகுடைக்குள் உன்கையிலே வேருதந்து துக்கக்களையறுத்துச் சுத்தமரையாளாக்கி உன்மூப்புயர்மூப்பாய் உல்லாசமே தருவேன் பின்மூப்பில்லாமல் பெரியோனின் நாமமதாய் அடக்குடக்கெல்லாம் அன்றுனக்கு நான்தருவேன் வடக்கு வெளிவாசல் மலைமீதிலோர் புதுமை உண்டாகு மகனே உனக்கு நற்காலமதே தண்டாயுதத்தோடே சத்தமொன்றேபிறக்கும் மேலக்கால் மண்டபமும் மேல்மூடி தான்கழன்று காலத்தால் காணும் கண்மணியே யுன்காலம் தெச்சணா மூலை தென்பாற்கடலருகே மெச்சும் பதிமூலம் விளக்கெரியக் கண்டுனது காலமிதுமகனே கன்னிதிரு தென்திசையில் கோபுர மண்டபமும் கொடிமரமும் வீதிகளும் தாபுரமாய்த் தன்னால் தலங்களதுதுலங்கும் கண்டதுவே காலம் கனத்தவலு சூரியனும் பண்டு முறைதப்பிப் பருதிரத்தக் கண்வெறியாய் மகனேவுனக்காகா மாநீசப்பாவியெல்லாம் அகமே கனல்தாவி அன்றாடம் தானழிவார் அந்தக் கனல் மக்கள்மேல் அதுதாவாதிருப்பதற்கு எந்த விதம்செய்ய என்னோடுரையுமென்றார் உச்சிக்காலம் பாடச்சொல்லு உளமகிழ்ந்து என்பேரில் அச்சமயம் நான் வருவேன் அனல்மாற்ற என்மகனே உகமீதே தர்மம் உனக்கெனக்கென்றேகுதிக்கும் மகனேவுனது மாதவத்தோர் காலம் நன்று காலமிதுமகனே கண்மணியே கேட்டிடுநீ தூலமுரையாதே துலங்கும் நாளாகுமட்டும் எளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே வலியாரைக் கண்டு மகிழாதே என்மகனே தாழக் கிடப்பாரைத்தற்காப்பதே தருமம் மாளக் கிடப்பார் மதத்தோர்களென் மகனே இவ்வகைகளெல்லாம் என்மகனேயுன்காலம் அவ்வகைகளெல்லாம் ஆராய்ந்து பார்த்திருநீ

இனத்திலும் மதத்திலும் இருப்பது இறையல்லவே மனதில் வேறென நீ வைத்துக்கொள் என்மகனே

நாலு வேதமதிலும் நான்வருவேன் கண்டாயே தூல வேசமிட்டு சுற்றுவேன் கேட்டிடுநீ தியங்காதே யென்மகனே சீருள்ள கண்மணியே மயங்காதே மகனே மாதவங்கள் பெற்றவனே அவரவர்கள் மனதில் ஆனபடியிருந்து எவரெவரையும்பார்த்து இருப்பேனானுன்னிடமே லிங்கமொன்றே குதிக்கும் இணையாக ஓர்சோடாய் தங்கநவரெத்தினங்கள் சமுத்திரத்திலேகாணும் ஆனையொரு கன்றீனும் அதினாலுலகமெல்லாம் தானாக ஆளும் தலைவனும் நீயல்லாது மலையடி வாரம் வளருமொரு விருச்சம் அலையதிலும் பெரிதாய் அதுதழையுங்கண்டாயே சிலையுள்ளே தோன்றி சிவதோத்திரமாக நிலையொன்றாயாகி நீயாள்வாயுன்காலம் வாரிக் கரையில் மண்டபமொன்றே வளர்ந்து நாரியர்கள் கூட நாடெங்கும் வாசமிட்டு ஒருகுடைக்குள்ளாள்வாய் உன்காலமென்மகனே தருமமதாய்த் தாரணியில் தன்னந்தன்னால்வாழ்ந்து பொறுமைப் பெரியோராய்ப் பூதலமெல்லாம்வாழ்வார் வாரிமூன்று கூடி வளைந்திருக்குமோர் தீவை சாதியொரு நிரப்பாய்த் தானாள்வாயென்மகனே கோடுபல வாதும் கோள்நீசப் பாவிகளும் கேடு வருங்காலம் கிருஷ்ணாவுன்நற்காலம் வானமது வெள்ளிமாறிவெறும் வானமதாய் மேன் முகிலற்று வெறுவான மாய்த்தோன்றும் நல்ல மகனே உனக்குவரும் நற்காலம் சொல்லத் தொலையாது சூல்மகனே என்கணக்கு ஒக்க அடக்கி உரைத்திருக்குவுன்னிடத்தில் நிற்க நிலைக்க நினைத்ததெல்லாமங்காகும் பொறுமை பெரிது பெரிய திருமகனே தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே எல்லாமுனது இச்சையது போல் நடக்கும் நல்லார்க்குமோர் நினைவே நலமாகுமென்றுசொல்லி எல்லார்க்கும் விளம்பி இருநீ என்மகனே பொல்லாதாரோடும் பொறுமையுரை மகனே தன்னாலேயாகுமட்டும் சாற்றியிரு என்மகனே வந்தாரறிவார் வராதார் நீறாவார் இன்னமுன்காலம் இயம்புவேன் கேள்மகனே தன்னந்தன்னாலே சாதிக்குச்சாதிமாளும் நல்ல நினைவோர்க்கு நாளெத்தனையானாலும் பொல்லாது வாராமல் புவிமீதில் வாழ்ந்திருப்பார் நாட்டிலொருஅனுமன் நல்லவனை நானயச்சு கோட்டி செய்யென்றுரைப்பேன் கோமகனே வுன்காலம் முறைதப்பியாண்ட முகடன் வெறும் நீசன் குறைநோவு கொண்டு கூடிழப்பானுன்காலம் அதிலே சிலபேர் அரசுனக்கெனக்கெனவே விதியையறியாமல் வெட்டிக்கொண்டே மாள்வார் அத்தருணமுன் காலம் அதிகமகனேகேளு இத்தருணமல்லால் இன்னமெடுத்துரைப்பேன் எல்லோருங் கைவிட்டு இருப்பாருனைத் தேடாமல் நல்லோர் மனதில் நாரணா என்றுரைப்பார் கோல விளையாட்டுக் கொஞ்சமெடுப்பேனான் தூல மறியாமல் தொல்புவியெல்லாமயங்கும் அன்போர்களெல்லாம் ஆவியே தான்மறுகி இன்ப முடனே ஏங்கியேங்கியழுவார் இத்தனை நாளும் இவரைநம்பி நாமிருந்து புத்தியது கெட்டோம் என்றுமிகப் பேதலிப்பார் அப்போது ஆகா அன்னீத மாபாவி இப்போது கண்டுதென்பார் ஏலமே சொன்னதெல்லாம் ஏய்த்தானென்பான் அன்பரை இடுக்கஞ்செய்தடிப்பான் சூட்ச முடனே சொரூபமொன்று நானெடுப்பேன் அதுதானொருகாலம் அதிகமகனேகேளு இதுபெரிய சூட்சம் என்மகனே கேட்டிடுநீ அதின்மேலே அன்போர் அதிகப்பெரியோராய் இதின்மேலே தாண்டும் எல்லோரும் வல்லோரே பின்னுமொரு சூட்சம் பிரமாணமாயெடுப்பேன் பன்னுமணியே பராபரமே கேட்டிடுநீ குளத்தைத்தடதடெனக் கொந்துகொந்தாயுடைத்து சுழற்றக் கனலக்கினியும் துர்க்கை மாதுர்க்கையையும் விட்டயச்சு மாநிலத்தில் விளையாடியே திரியும் கட்டணங்களாக கனமாய்க் குழுகுழென ஓடுவார் பதறி விழுவாரறமெலிந்து நாடும் பெரியோர் நலமாக வாழ்ந்திருப்பார் என்மகனேவுன்காலம் இன்னும் வகுப்பேன்கேள் பொன்மகனே பூமியிலே பின்னுமொரு காரணங்கேள் கெட்ட நசுறாணி கெம்பிக்கடைக்காலம் மொட்டைத்தலைவருவான் முளையனவனோடிடுவான் ஆடிக் கொண்டாடி அங்குமிங்குந்தானலைந்து ஓடிக் கொண்டோடி ஒன்றுபோலே மாள்வான் மகனேயுன்காலம் மகிழ்ந்திரு நீஎன்மகனே உவமையொன்றுசொல்கிறேன் உற்பனமாய்க்கேள்மகனே புத்திரனுக்கே குருவும் புகன்றதெல்லாம் புகன்றாலும் சுற்றுமொரு சூட்சத் தொழிலுண்டு ஆசானுள் அத்தனையுமென்னுள் அடக்கமில்லை யென்மகனே முத்தியெனை யீன்றோர் முதனாளோர் விஞ்சை வைத்தார் அவ்விஞ்சை மாத்திரமே யானுனக்கீயவில்லை இவ்விஞ்சையீவதுதான் எப்போதெனக்கேளு சீமையரசு செலுத்தவரும் நாளையிலே மேன்மை முடிதரிக்கும் வேளையிலென் மகனே சொல்லுகிற விஞ்சை சுத்தமனே கேட்டிடுநீ பல்லுயிர்களுக்கும் படியளக்கும் விஞ்சையது எல்லாமுனக்களித்தேன் என்னுடைய நாரணனே அல்லாமல் நானுனக்கு அருளுகிற விஞ்சையைக்கேள் பெரியோர்க்கு வாழ்வு பெருகிச் சிறந்தாலும் மரியாதையே யிருக்கும் மகனே கேட்டிடுநீ சற்றோலே வாழ்வு சகடருக்கே வருகில் கற்றோரே யாகிடினும் கண்டறிவேன் போநீயென்பான் முள்முருக்கம் பூவு மினுக்குமூன்றுநாளை கள்ளருக்கு வாழ்வு காணுமது போல்மினுக்கு நல்லோர்க்கு வாழ்வு நாளுங்குறையாமல் வல்லோர்க்கும் நல்லோராய் வாழ்ந்திருப்பார் கண்டிருநீ விள்ளாத ஞாயம் மேல்ஞாயமென்மகனே துள்ளாத யானை துடியானை யென்மகனே அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே கடக்கக் கருதாதே கற்றோரைக்கைவிடாதே நன்றி மறவாதே நான்பெரிதென்றெண்ணாதே அண்டிவந்த பேரை அகற்ற நினையாதே ஆபத்தைக் காத்து அகலநீ தள்ளாதே சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும் கோபத்தைக் காட்டாதே கோளோடிணங்காதே பாவத்தைக் காணாதே பகட்டுமொழி பேசாதே பசுவையடைத்துப் பட்டினிகள் போடாதே விசுவாசமதிலே விரோதம் நினையாதே எளியோரைக் கண்டு ஈந்து இரங்கிடுநீ அழிவென்ற பேச்சு அனுப்போல் நினையாதே தொட்டுப்பிடியாதே தோர்வை வைத்துக்காணாதே விட்டுப் பிடியாதே வெட்கமதைக் காணாதே வரம்பு தப்பாதே வழிதவறி நில்லாதே பரம்பூமி கண்டு பாவித் திருமகனே இத்தனை புத்தி எடுத்துரைத்தேனென்மகனே புத்தி விபரீதமாய்ப் பின்னுமாராயாதே சட்ட மறவாதே தன்னளவு வந்தாலும் நட்டங் காணாதே நாராயணா நாடாள்வாய் என்மகனே நானுனக்கு இன்னமொரு விஞ்சைசொல்வேன் பொன்மகனேயுன்னுடைய புத்தியிலே வைத்திருநீ இச்சட்டந் தன்னில் எள்ளளவு தப்பினதால் தீச்சட்டம் காய்க்கத் தேதிவருமென்மகனே அனுப்போல் மறவாதே யான்வைத்த சட்டமதில் மனுப்போலென்றிராதே மனதெண்ணமாயிருநீ பஞ்சமிர்தே யென்னுடைய பாதைதப்பி நீ நடந்தால் கொஞ்சுங்கிளியே கொன்னெழுப்புவேனுனையும் பதறியிரு என்மகனே பம்மியிரு கண்மணியே பொறுதி மகனே பெரியோராயாகுவது உறுதி மகனே உலகமதையாளுவது மகனே நானெத்தனையோ மகாபலங்கள் கற்றவன்காண் உகமீதே சொல்லத் தொலையுமோ வுத்தமனே எவ்வுகங்களுக்கும் இப்படியே தர்மமில்லை செவ்வு மகாவிஷ்ணுதான் என்றுசொல்வார் தேசமதில் இப்போது என்மகனே இக்கலியன் மாய்மாலம் செப்ப எளிதல்லவே செயிக்க ஏலாதாராலும் இப்போதுன்னோடுரைத்த விஞ்சைக்குள் அகப்படுமே அப்பனே பம்மலிலே அகப்படுங்காணிக்கலியும் கலியென்றால் எலியல்லவே கணையாளி வேண்டாமே வலிமாய நினைவு மாய்மாலமென்மகனே ஆனதாலாயுதங்கள் அம்புதடி வேண்டாமே மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே இன்னமொரு விஞ்சை இயம்புவேன் கேள்மகனே முன்னம்வகைக்காரனொடு மோதிப் பகையாதே பகைத்தாலிருக்க வொட்டான் காணவ்விடத்தில் உகத்தடக்கு முன்னே ஒருவரையுஞ் சீறரிது சார்ந்திருக்க வென்றால் சர்வதுக்குந்தாழணுமே ஓர்ந்திருக்க வென்றால் ஒருவர்பகையாகாதே ஆனதால் நீயும் அவனைப் பகையாதே நானவனைக் கேட்பேன் ஞாயக்கேடாகிடினும் வலியோர்க் கொருவழக்கு வைத்துநீ பேசாதே மெலியோர்க் கொருவழக்கு வீணாய்ப்பறையாதே சொத்தாஸ்தி வஸ்து சுகமென்று எண்ணாதே வத்தாஸ்தி பெண்ணு வகையென்று எண்ணாதே நீயெண்ணாதேயிருந்தால் நீணிலங்களுமயங்கும் தானிதின்மேலெண்ணம் தங்குதங்காதேயிரு சத்துருவோடும் சாந்தமுடனேயிருநீ புத்திரரோடும் பேசியிரு என்மகனே அன்போர்க்கு மீந்திரு ஆகாப்பேர்க்குமீந்திருநீ வன்போர்க்கு மீந்திரு வழிபோவார்க்குமீந்திருநீ வலியோர்க்கு மீயு வழிபோவார்க்கு மீயு மெலியோர்க்கு மீயு மேன்மையாயென்மகனே ஆர்க்கு மிகவீந்தால் அந்தத்தர்மமே கொதிக்கும் போர்க்கு நினைத்தாரைப் பெலிகொடுக்குந்தர்மமது தன்மந்தான்வாளு சக்கரங்களல்லாது தின்மையது கேடு செப்பக்கேளென்மகனே சாதி பதினெட்டும் தன்னாற்கேடாகுமட்டும் நீதியழியாதே நீசாபங்கூறாதே

மகனேவுனக்கு வைத்தவிஞ்சை மனதிலறிந்து கொண்டாயோ அகமே வைத்த சட்டமெல்லாம் அதுபோல் நடந்து அல்லாமல் உகமேயழியு முன்னாக ஒருசொல்லிதிலே குறைவானால் சகமோரறியத் தீமூழ்கிச்சதியாய் மறுத்து முழிப்பாயே

நல்லோர் மகனேவுனக்கு நானுரைத்தவிஞ்சையெலாம் வல்லோனான திருமகனே மனதிலறிந்து அறிந்துநட எல்லாம் நமதுள்ளாச்சுதென்று எண்ணி நடப்பொன்று சொல்லால் தாண்டிநடப்பீரால் தீயேகுளித்துவருவாயே

கொடுக்கும் வரங்களும் கொடுத்த வரத்தை பறிப்பதற்கு உடக்கு வரமுந்தந்தேனான் உன்றனாணைத்திருவாணை அடக்குமுடக்குந்தந்தேனான் ஆதி சிவனாரவராணை நடக்கும் படியே சட்டமெல்லாம் நாராயணனே தந்தேனே

தந்த வரங்கள் தவறாது தருணஞ் சடையுந்தரைமீது எந்தன் மீது மறவாதே என்னாண்டருளுமிறையோனே அந்தன் மீது மறவாதே ஆயானெனவே அறிவில்வைத்துச் சிந்தைமகிழ்ந்துமுறைநடந்தால் சிவனுமுனக்குள் வசமாமே

தாயாரோடு சிவமாது சரசு பதியே பொன்மாது நேயா மாதர் மடமாது நீணில மறிய வந்துனது பூசா பலன்கள் சொல்லிமிகப்புலம்பித் திரிவார் துயர்தீர மாயாதிருக்கு மகனேவுன் மனமே மகிழ்ந்து மகிழ்ந்திருவே

சொல்ல எளிதோ என்மகனே சொல்லாதனேகம்தோன்றுமினி வெல்ல எளிதோ என்மகனே மேலோரா ராராலும் கொல்ல எளிதோவுன்னை கோவேங்கிரியின் கோனாலும் வெல்ல எளிதோவுனை மகனே மேலாங்கண்ணே மிகவளராய்

இந்தப்படியே நாரணரும் இயம்ப மகவு ஏதுரைக்கும் கந்தனுறு வேலென்றகப்பா கடியா வுனது படிநடக்க எந்தப்படியோ நான்றமியேன் ஏதோஅறியப்போறேனெனச் சிந்தை மகிழ்ந்து தகப்பன் திருத்தாள்பிடித்துசெப்பலுற்றார்

தன்னம் பெரிய தாட்டீக வைகுண்டரும் என்னசொல்வீரென்றனக்கு என்றகப்பா நீரெனவே வணங்கிப் பதம்பூண்டு மாதாவையுந்தொழுது இணங்கியிவர்கேட்க ஏதுசொல்வார் நாரணரும் நாராணா வைகுண்டா நன்மகனே என்னையினி வாரணமே நீவணங்கி மகனே கைசேராதே நீகை குவித்தால் எனக்குமிகத் தாங்கரிது தானீதனான சர்வபரா என்மகனே ஒருவருந்தாங்கரிது உன்கை குவித்தாக்கால் குருதெய்வம் நீயே கோவே குலக்கொழுந்தே இன்னமுனக்கு இயம்புகிற விஞ்சையதும் பொன்னான மகனே பூராய மாய்க்கேளு சாதி பதினெட்டும் தலையாட்டிப்பேய்களையும் வாரி மலையதிலும் வன்னியிலுந்தள்ளிவிடு வரத்தை மிகவேண்டி வைத்துக்கொள் ளென்மகனே சரத்தை மிகவாங்கித் தானனுப்புப்பேய்களையும் உட்கோள் கிரகம் உறவுகெட்ட பேர்முதலாய்க் கட்கோள் கருவைக் காணாதே சாபமிடு செல்வம் பொருந்திச் சிறந்திரு என்மகனே கொல்லென்ற பேச்சுக் கூறாதே என்மகனே ஒவ்வொன்றைப் பார்த்து ஊனு ஒருசாபம் செவ்வென்ற பேச்சு செப்பியிரு என்மகனே உரைத்த விஞ்சையெல்லாம் உனக்குப்போதுமோ மகனே விரைத்தமுள்ள வைகுண்டா விற்பனவா நீகேளு நீபோயிருக்கும் இடங்களில் என்மகனே அன்பான பஞ்சவர்கள் அங்கேவுண்டென்மகனே முன்னே பிறந்த உகத்துக்குகங்களெல்லாம் என்னைவிட்டகலாது இருந்தார்கள் பஞ்சவர்கள் ஆனதாலிப்போது யானும்நீ யானதினால் மானமுள்ள பஞ்சவரை மகனேமுன் விட்டுக்கொள்ளு அல்லாமற்கேளு அரிநாரணா என்மகனே நல்லோராய்ப் பெண்கள் நாடியெண்ணக் கூடாது வல்லோராய் நந்தன் வம்மிசத்தில் வந்திருந்தார் அப்பெண்ணார்க்கெலாம் அதிகப்பலன்தாறோமென்றேன் இப்பெண்ணார் சிலர்கள் இன்னமங்கே தோன்றிவந்தால் ஆனதால் பெண்ணார்க்கு அழகுகொடு என்மகனே நின்ற தவசு நிறைவேறினால் மகனே ஒண்டொடியார் சிலரை உன்பாரிதானாக்கி நன்மைகொடு என்மகனே நாரணா நாடாள்வாய் உன்னை நினைத்தோர்க்கு உதவிகொடு என்மகனே கட்டை விடாதே கருத்துள்ள என்மகனே சட்ட மறவாதே சாஸ்திரத்துக் குற்றவனே பெண்பாவம் பாராதே பேணியிரு என்மகனே கண்பாரு கண்மணியே கன்னி கணவருக்கு இன்னமொரு சூத்திரம் இயம்புகிறேனென்மகனே துன்னமறியத் தோற்றுவிப்பேன் சாதிதோறும் அன்புவன்பு பார்க்க ஆராரிடத்திலும்போய் உன்புதுமை சொல்லி உடலை மிகஆட்டி சாதிசாதிதோறும் சக்கிலி புலச்சிவரை ஆதிச்சாதிமுதலாய் ஆராதனை காட்டுவிப்பேன் காட்டுவிக்குஞ் சொரூபம் கண்டிரு என்மகனே ஆட்டுவிப்பேன் நால்வேதம் அதிலும் நான் மாயமிட்டு துலுக்கன் வீடானதிலும் சூதாட்டுப் பார்த்திடுவேன் கிலுக்கமொன்று செய்வேன் கீழுமேலும் நடுவும் பதறித் தெளியும் பார்த்திரு என்மகனே நீபெரிது நான்பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று வான்பெரிது என்றியாமல் மாள்வார்வீண் வேதமுள்ளோர் ஒருவேதந் தொப்பி உலகமெல்லாம் போடுஎன்பான் மறுத்தொரு வேதஞ் சிலுவை வையமெலாம்போடுஎன்பான் அத்தறுதி வேதம் அவன்சவுக்கம் போடுஎன்பான் குற்ற முரைப்பான் கொடும்வேதக்காரனவன் ஒருவர்க் கொருவர் உனக்கெனக்கென்றேதான் உறுதியழிந்து ஒன்றிலுங்கை காணாமல் குறுகி வழிமுட்டி குறைநோவுகொண்டுடைந்து மறுகித்தவித்து மாள்வார் சிலபேர்கள் ஓடுவார் சிபேர் ஒழிவார் சிலபேர்கள் கேடு வருமே கேள்விகேளாப் பேருக்கெல்லாம் அதன்மேல் மகனே யானுனக்குச்சொல்வதுகேள் இதின்மேலுனக்கு ஏகவியாழம்வரும் சந்தோசமாகுதுகாண் உனைச்சார்ந்த அன்போர்க்கு எந்துயரமெல்லாம் ஏகுதுகாணென்மகனே அதுவரையும் நீதான் அன்பா யிருமகனே எதுவந்தாகிடினும் எண்ணம்வையாதே மகனே சுறுக்கிட்டுயானும் ஒவ்வொன்றாய்த் தோன்ற வைப்பேன் இறுக்கும் இறைகளெல்லாம் இல்லையென்று சொல்லிடுநீ வேண்டாமிறைகள் வேண்டாமென்று சொல்லிடுநீ ஆண்டார் மகனே அதிகத்திருமகனே நல்ல மகனே நான்வைத்த விஞ்சையெல்லாம் செல்ல மகனேவுன் சிந்தையிலே பற்றினதோ போதுமோ விஞ்சை புகலணுமோ என்மகனே சாருமொரு விஞ்சை தான்சொல்வேன் கேள்மகனே முவ்விஞ்சை வைத்தேன் உலகமறியாதவிஞ்சை இவ்விஞ்சை மாத்திரமே இனம்பிரித்துச்சொல்லாதே பெற்றோர்கள் கண்டுகொள்வார் பேசரிய என்மகனே கற்றோர்கள் கண்டுகொள்வார் கண்ணே திருமகனே

கண்ணே மகனே திருமகனே கமலப்பூமா கரிமகனே எண்ணேயெழுத்தேஎன்மகனே இறையோர்தொழ வருமகனே ஒண்ணே மகனே உயர்மகனே உடைய மகனே கண்மணியே தண்ணே மகனே தவமகனே சாகா திருக்குஞ் சலமகனே

மகனே தவமே மரகதமே மாதவம் பெரிய மலரோனே தவமேயுனதுள் வைத்தவிஞ்சை தானே போதுமோ மகனே இகமேழ்மகிழ வந்தவனே என்றன் மகனே வளர்வையென உகமேழளந்தோருரைத்திட உயர்ந்தமறையோர் வாழ்த்தினரே

அய்யா நாராயணரும் ஆதிவைகுண்டமென மெய்யாயுரைத்து விளங்கவே வாழ்த்தலுற்றார் மகனேவுன்தேகமதில் வைத்த நிறங்களெல்லாம் உகமழியுமுன்னே ஒருவர்கண் காணாதென அகமே வைத்து அகமகிழு என்மகனே வைகுண்டமென்றுமிக வாழ்த்தக்குருநாதன் மெய்குண்டத் தோர்கள் மேலோர்கள் வாழ்த்தலுற்றார் மகரவுந்தி விட்டு வைகுண்டந்தான்பிறந்து சிகரமுனி தேவருட சிறப்பதிலே வந்தவுடன் தேவர் திருவானோர் சென்றெடுத்து வைகுண்டரை மூவர்தேவர்மகிழ்ந்து முதலோனைக் கைகுவித்து ஏந்தியெடுத்து இளந்தொட்டில் மீதில் வைத்து சாந்தி கழித்துத் தவலோகச் சட்டையிட்டு சீதை மயக்கமெல்லாம் தீர்ந்திடவே சாபமிட்டு வீரரையும் வந்து வீரலட்சுமியெடுத்து மடிமீதில் வைத்து மாதுசரசோதியுடன் குடியான பேரும் கொண்டங்ககமகிழ்ந்து பொன்தொட்டி லிட்டுப் பொற்சீதை தாலாட்ட பைங்கொடியாள் சரசு பதிமாது தாலாட்ட தேவரிஷி வானோர் தேவரம்பை மாதரெல்லாம் சீவசெந்தெல்லாம் திருப்பாட்டுப்பின்பாட ஈசர்முதல் சங்கம் எண்ணி மனமகிழ சார்சரசுபதியாள் தாலாட்டவே துணிந்தாள்

வைகுண்டருக்கு சரசுபதி தாலாட்டு பொன்மணிப் பதியினுள்ளே புனலரி கிருஷ்ணர் பெற்ற தண்மணிப் பாலன் தன்னைத் தங்கமாந்தொட்டி லிட்டு மின்மணி கொடிசேர் கன்னி விளங்கிய சோதி மாது கண்மணி வைந்த ராசர் கண்ணுறத்தாலாட்டினாளே

தார தரதர தாராரோ தார தரதர தாராரோ நாராயணர் தானோ தாராரோ நல்ல நாராயணவைகுண்டமோ காரணர் தானோவைகுண்டமோ கயிலாச நாதக் கண்மணியோ செல்வ முதலான சீமானோ சிவசிவ சிவ சிவமுதலோ அல்லலகற்றியே அரசாளும் அரியோன்மிகப்பெற்றஅரிதானோ தெய்வப்பெருமாள்பெற்றகன்றோ சீதை மாதுதான்பெற்றகன்றோ மெய்யனரிநாதன் பெற்றகன்றோ விஷ்ணு மகாபரன் பெற்றகன்றோ ஈசர் மைத்துனர் பெற்றகன்றோ இறவா திருமாது பெற்றகன்றோ மாயத் திருவுளம் பெற்றகன்றோ மான வைகுண்ட ராசக்கன்றோ வேதக் குருநாதன் பெற்றகன்றோ வீர லட்சுமி ஈன்றகன்றோ சீதக் குருதாயாரீன்றகன்றோ தெய்வ வைகுண்ட ராசக்கன்றோ கிருஷ்ணமகாநாதன் பெற்றகன்றோ கிருபை குருநாத கண்மணியோ விஷ்ணுமகாநாதன்பெற்றகன்றோ வீரலட்சுமி ஈன்றகன்றோ நாட்டுக் குடையதோர் நாரணரின்நல்ல பாலனோ வைகுண்டனோ ஏட்டு முதலானோ தாராரோ ராச வைகுண்ட ராசர்தானோ மூலச் சிவநாதன் பெற்றகன்றோ உலகையொருகுடைக் காள்வானோ நாலு வேதமும் தாண்டிமுறை நடத்தியொருகுடைக்காள்வானோ ஒருமை மனத்துடை யுத்தமர்க்கு உற்ற பதவிகள் கொடுப்பவனோ தருமத் திறவானோ தாராரோ தங்க வைகுண்டத் தாட்டீகனோ மகரச் சீதையாள் வயிற்றிலுற்று வளர்ந்த வைகுண்ட மாமணியோ அகரச் சிவகோபுரழகுபதி அதிகப் பதிகெண்டு வந்தவரோ தங்கக் கோபுரம் தளிர்மரமும் சதுர மேடைகள் கண்டவரோ சங்க மகிழவே வந்தவரோ சகல கலைதமி ழாய்ந்தவரோ உலகம்பதினாலுமொருகுடைக்குள் ஒருசொல் மொழிக்காளவந்தவரோ இலகு பிரகாச சுவடுகொண்டு இலங்கும் பதியாளப் பிறந்தவரோ வம்புக் கலியுகக் குலமறுத்து வைந்தப் பதியாள வந்தவரோ அம்புக்கணையொன்றுமில்லாமல் அறுக்க வந்தாரோ கலிதனையும் கூடப் படைகள்துணை யில்லாமல் குறும்பை யடக்கவே வந்தவரோ சாடத்தலையாரியொன்றில்லாமல் சதைக்க வந்தாரோ கலியுகத்தை வாளு மாயுத மெடுக்காமலே வதைக்கவந்தாரோ கலியுகத்தை கோளு பேய்களைக் கிரகங்களை கொல்லவரம்பெற்றவைகுந்தரோ சாணாக் குருநாத வைகுண்டரோ சாதி தற்காக்குந் தலையாரியோ காணாக் கருவான கருமூலமோ கர்த்தன் கர்த்தாதி கடவுள்தானோ நீசக் குலங்களைக்கருவறுக்க நெடிய நாரணர் பெற்றகன்றோ தோசப் புழுச்சாதி குலமறுக்கத் திருமால் நாரணர் பெற்றகன்றோ சீமைமைம்பத்தாறுதேசமெல்லாம் சொல்லொன்றுள்ளாள வந்தவரோ நாமம் பெரியதோர்வைகுண்டரின் நாமம் பெறவோங்க வந்தவரோ தெய்வப் பாலர்கள் சிறந்துபோற்ற சீமையரசாள வந்தவரோ மெய்வரம்பதின் முறைநடத்தி மேன்மைச் செங்கோல் முடிதரித்து பொறுமைபெரிய வைகுண்டனோ பெரிய பூமேடைக் கொலுவீரனோ தரும வரம்புகள் தவறாமலே தரணி யரசாளும் வைகுண்டரோ திராசு நிறையிலுந் துல்லியமாய் செங்கோல் செலுத்தவேவந்தவரோ மிராசு மூவர்க்குமுதன்மைதானோ மூலச் சிவமணி குருநாதனோ சான்றோர் கைகட்டிச் சரணங்கூற தரணி யொருகுடைக் காள்வானோ ஆண்ட மணிநாதன் நாரணர்க்கு ஆன மதலையாய் வந்தவரோ வையமளந்ததோர் நாரணர்க்கு மதலை யெனவந்த வைகுண்டரோ தர்மப் பதியாளும் வைகுண்டரோ சாணர்க்கனுகூல மானவரோ அலைந்துமலைந்தசான்றோர்க்கு அதிக விதிகொண்டு பிறந்தவரோ சாணாக்குடிகுல நாயகமோ தர்மந்தழைக்கவே பிறந்தவரோ தோணாதுறைகொண்டுவந்தாரோ துவரா பதியாளப் பிறந்தவரோ ஏழு யுகபரக் கணக்கையெல்லாம் எடுத்து நடுத்தீர்க்கப் பிறந்தவரோ ஆளும் வைகுண்டப் பதியாளவே அரிய வைகுண்டம் பிறந்தவரோ வீர வீராதி வீரன்தானோ வீர சூரனாரீன்றகண்ணோ சூர சூராதி சூரன்தானோ சூர சூரனார் பெற்றகண்ணோ நாத நாரணர் பெற்றகண்ணோ நாக மணிநாதன்பெற்றகண்ணோ சீதக்குணநாதன்பெற்றகண்ணோ சீதை மணவாளர்பெற்றகண்ணோ மேக நிறத்தண்ணலீன்ற மேலோர்போற்றும் வைகுண்டகண்ணோ ஏகச் சிவநாதன் பெற்றகண்ணோ இறவாதிருமூர்த்தி பெற்றகண்ணோ

சந்திர சுந்தர தந்திர மந்திர சாமிசீர் பாலகனோ தாயக மாயக நாயக மாகிய தாண்டவ சங்கரனோ சுந்தர சந்திர யந்திர குஞ்சித சூரியப்பிர பாலகனோ சூரனோ வீரனோ மாதனோ நீதனின் சூலகலாதிபனோ

தந்திர மந்திர இந்திர சுந்தரின் சந்ததி சந்ததியோ சகடவலி சண்டரை அகடவலி செய்திடும் சுக்கிரவிக்கிரனோ கொந்தரி சந்ததின் தந்திர சுந்தர கோசல நாயகனோ கொடுகலியறவொரு கடுமுனைகொண்டருள் குலவேங்கிட குண்டமோ

சுத்தனோ கர்த்தனோ நித்தனோ அத்தனோ துலங்கும் தங்கரனோ சூரனோ வீரனோ தீரனோ நாதனோ சூரியப்பிரகாச வீதனோ வீரனோ காரனோ தாரனோ சாரனோ வெங்கிட ரங்கிடனோ விகடக டகடக டகுடட டடமருள் வேதவிக்கிர சுக்கிரனோ

தீரனோ காரனோ சீரனோ வீரனோ செந்திலம்பதிவளர் சந்திரனோ திகதிக தரிகிட செகமுக மருள்புரித்திக்கிர விக்கிரனோ நீதனோ கீதனோ வீதனோ மாதனோ நீதவல் கோகுலனோ நெகிடுகலி யகடற விகடுகுடல் கருவற நெக்கிர விக்கிரனோ

இப்படி ஒளவை மாது இயல்பு தாலாட்டக் கண்டு செப்படி முனிமாரெல்லாம் சிவவைந்தர் பதத்திற்சென்று முப்படி முறைபோல் தேவர்முக்கந்தன் பள்ளி கொள்ள அப்படித் தேவரெல்லாம் அவரிசை கூற லுற்றார்

பல்லவி பள்ளியுணராய்-சிவமருகா நீ பள்ளியுணராய்

சரணம் பள்ளியுணராய்நீ தெள்ளிமையாகவே பாற்கடல் மீதினில் தாக்குடனுதித்தவா வெள்ளியுதித்திடப் பள்ளியுணர்த்தவும் வேதநாராயணர் சீதகோபாலர்க்குக் கொள்ளி யெனவந்த வைகுண்டக்கோவனே கோவேங் கிரிவளர்ஈசர் மருகோனே வள்ளி மணவாளர் வளர்செந்தூர் வாரியில் வந்து பிறந்து நல் தெச்சணம் புகுந்தவா (பள்ளி)

வேக முடனொரு சந்தத்துள்ளாடியே மேதினியோர்க்கு உபகாரங்கள் செய்யவே ஆகாத பேர்களை அக்கினியில் தள்ளவும் ஆகின்ற பேர்க்கு உபகாரங்கள் செய்யவும் தாகத்துக்கானதோர் தண்ணீர் கொடுத்து சஞ்சல நோய்பிணி யஞ்சற்குத் தீர்க்கவும் ஏகத்துடனாளும் நாரண வேந்தர்க்கு எம்பியெனவரும் தம்பிரானானவா (பள்ளி)

மூர்க்கன் கலியுக ராசனைத் தட்டியே முடுமுடுக்கஞ்செய்த மூர்க்கரை வெட்டியே ஆர்க்கமுடன் புவியைம்பத்தாறு சீமையும் அடக்கியொரு சொல்லுக்குடைக்குள்ளே யாளவும் காக்காமகா தர்மகற்பையுங் காக்கவே கர்த்தனரி கிருஷ்ணர் புத்திரராய் வரும் தாக்கத் திறம்வளர் வைகுண்ட ராசரே தர்மமதி லுறையும் பொறுமைக் குலதீரா (பள்ளி)

தம்பிலமான குறோணி குண்டோமனைத் தத்தியாத் தில்லைமல்லாலனை சூரனை வம்பு இரணிய ராவண சூரனை மகோதரனான துரியோதனப் பாவியை கொம்பிலுங் கெம்பிலும் அம்பினாற் கொன்றதோர் கோபால கிருஷ்ண குழந்தை வைகுண்டரே நம்பின அன்பருக்கு உபகார சாலியே நாரணா சீமைக்கு அரிவிதியானவா (பள்ளி)

பள்ளிதானுணர்த்தத் தேவர் பரிவுடன் கேட்டு வைந்தர் தெள்ளி வைகுண்ட ராசர் சிந்தையிலன்பு கூர்ந்து நள்ளிய தேவரார்க்கும் நயமுடன் தயவுமீந்து துள்ளியே தகப்பன் பாதம் தொழுது வணங்கிச்சொல்வார்

தேவர் துயரமெல்லாம் தீர்ப்போங்காணென்று சொல்லி மேவலர்கள் போற்றும் விசய வைகுண்டராசர் தகப்ப னுட பதத்தில் சரணமிகப்பணிந்து உகப்பரனார் நோக்கி உரைக்கிறாரன்போரே என்னை பிதாவே மாதாவே யென்தாயே எல்லா விவரமதும் எடுத்துரைத்தீரென்றனக்கு நல்லோரே நானினித்தான் நடக்க விடைதாரும் பண்டுள்ள ஆகமம்போல் பால்வண்ணர் பெற்றிடும் வைகுண்டர் தெச்சணமே கொள்வார்தான் பள்ளியென ஆதியாகமப்படியே அனுப்பிவையும் அம்புவியில் சோதிமணியே சுவாமி எனத்தொழுதார் உடனே மகனை உவந்துமுகத்தோடணைத்து கடலின் சிறப்பைக் கண்டாயோ என்றுசொல்லி மகனேவுனைவிட்டு மறுவூரு வாழ்வேனோ நகமுஞ்சதையும்போல் நான் வருவேனுன்கூட எத்தனை கோடி இயல்தர்மஞ்செய்துவுன்னை பெற்றெடுத்தேனுன்கூட பிறகே வருவேனப்பா நீயொருவனெனக்கு நிலையென்று காணுமுன்னே தாயில்லாப் பிள்ளையைப்போல் தட்டழிந்தேனென்மகனே மகனேவுனைக்கண்டு மனச்சடவெல்லாந் தீர்ந்தேன் சுகமேபோய் வாவெனவே சொல்லியனுப்புவேனோ உன்கூட நானும் ஓடி வருவேனப்பா என்கூடவுன்தாயும் ஏகி வருவாள்காண் என்று தாய்தகப்பன் இவர்கள் வழிகொள்ளவே கண்டு வைகுண்டர் கனமாய் மனமகிழ்ந்து நீங்கள் வருவதுதான் எனக்குவெகு சந்தோசம் தாங்கி வருவேன் தமியேனுங்கள் பாதமதை அப்போது நாராயணர் மகனையாவிமிக இப்போதென்பாலகனே இயம்புகிற புத்தியைக்கேள் சீமையதுகாணச் செல்லோங்காணுன்கூட வாமை மகனே வருவோமுன் கண்காண மகனே நீ நடக்க வைகுண்டம்வைகுண்டமென உகமீரேழுங்காண உரைத்துவிடு யாமமது முன்னடந்து யாமம் மொழிந்துநட என்மகனே பின்னடந்து நானும் யாமம் பிசகாமல் நடத்திவைப்பேன்மகனே நல்லமணி மரகதமே அடத்திவிட்ட யாமமது அனுப்போல் பிசகாமல் காட்டுவிப்பேன் மகனே கண்ணேநீ முன்னடநீ தாட்டிமையாயுன்வாக்கால் தானுரைத்தயாமமெல்லாம் நடத்திவைக்க வாறேன் நன்மகனேவுன்பிறகே கடல்திரைவாய்ப் பதிகள் கண்டுசென்று தானிருநீ தண்ணீர் மண்ணீந்து தானிருபோ என்மகனே கண்ணி லுருக்காணும் கைக்குளொருகிள்ளை வரும் பகைவன் மடிவன் பைங்கிள்ளையங்காகும் உகவன் வருவன் ஒருவனறிவான்காண் பகவான் சுழற்றும் பாருலகமும் பழுக்கும் அகங்காணும் பாந்தள் அஞ்சாட்சரங்காணும் மூசிர சீர்சிரசு முகாசிரசு முன்காணும் பார்சிரசு கண்டு பாலகனே நான் வாறேன் திகையாதே முன்னட நீ சந்தமுனி தன்கூட பகையாதே என்மகனே பஞ்சவரைக் காத்துக்கொள்ளு அஞ்சுபூக்கொண்டு ஆசாரஞ் செய்தோர்க்கு வஞ்சகமில்லாத வாழ்வுகொடு என்மகனே மகனே நீவாற வழியின் பவிசுகண்டு தவமுடித்து நீயும் தாண்டியிரு என்மகனே என்றுவைகுண்டருடன் இசைந்த முனிரண்டு விட்டு கொண்டயச்சுக் காத்திருங்கோ குண்டருட பக்கமதில் சாட்சியாய்ப் பார்த்திருங்கோ தரணி வளப்பமெல்லாம் காட்சி கொடுத்திடுங்கோ கண்ணரியோன் முன்னிருந்து கோபங்காட்டாதுங்கோ குணமுனிவரேகேளும் சாபங் கொடாதுங்கோ சாஸ்திர முனிவர்களே நாராயணர்பெலங்கள் நன்றாயறிவீர்களே சீரான பொறுதி செய்வதுநீர் கண்டிருங்கோ வைகுண்ட மாமுனிதான் வாழுந்தலத்தருகே மெய்குண்டமாய் மேற்கு மேன்மூலையோர்தனுக்கு வடகீழ் மூலை மாமுனியே ஓர்தனுக்கு இடமிதுவே சொன்னேன் யார்க்குந்தெரியாதிருங்கோ இந்தப் படிகாத்து இருங்கோ தருணம்வரை சிந்த முனிவர்களே செல்லுமிவர் கூட என்று முனிகளுக்கு இயம்பச் சிவநாதன் நன்று நன்றென்று நன்முனிவர் சம்மதித்தார் உடனேதான் வைகுண்டர் உள்ளம் மிகமகிழ்ந்து கடலை மிகத்தாண்டி கரையிலே செல்லுமுன்னே தேவாதி தேவரெல்லாம் திருமுறைய மிட்டனரே ஆவலாதியாக அபயமிட்டார் தேவரெல்லாம் வைகுண்டருக்கேபயம் முறையமிட்டார் மாதேவர் கைகண்டராசருக்குக் காதிலுற அபயமிட்டார்

நாரணருக்கேயபயம் நாதனுக்கேயபயம் தோரணருக்கேயபயம் சுவாமியுமக்கபயம் நாராயண நாதாசிவ நாதா உமக்கபயம் நாடுங்கலி கேடுவரும் நாதா உமக்கபயம் சீராய்ப்புவி யாளவரு வாயே உமக்கபயம் சிவசிவனேசர சரணம்மகா சிவனே உமக்கபயம் பாராயேழை முகமேபராபரமே உமக்கபயம் பாலர்தெய்வச்சான்றோர் படுந்துயரந்தனை மாற்றும் நாராயண தீராநல்ல நாகந்தனில்துயில்வாய் நலமோவுனக் கிதுநாள்வரை நாங்கள் படும்பாடு கடலில்துயில் கண்ணா கனிகண்டே கன்றையெறிந்தாய் களமேபெலி கொளவேகூளி களிக்கஇலங்கையழித்தாய் குன்றைகுடையாக்கி முப்புரகோட்டையெரித்தாய் கோனினிடை மாதரிணைக் கோனாகவே வளர்ந்தாய் காடேகாலி மேய்த்தாய்ப்புனல் களியன் தனைவதைத்தாய் கம்சனை வதைத்தாய் சப்தபெலக்காரரை வதைத்தாய் மாடேமேய்த்துத்திரிந்தாய் வலு மாபலிசிறைவைத்தாய் கோசலாபுவியாண்டாய் வலுக்குகனை மிகக்கண்டாய் குறோணியை வதைத்தாய் குண்டோமனைக்கொன்றாய் தில்லை மல்லாலன் கொடுஞ்சூரன்தனைவதைத்தாய் ஈடாய்வலு இரணியன்குடல் ஆறாயோடக் கொன்றாய் இரக்கமற்ற துரியோதனன் அரக்கர் குலமறுத்தாய் இன்னங்கலி நீசக்குலம் கொல்ல வரம்பெற்றாய் ஏழைக்குடி சாதிகட்கு மீள விடைகொடுத்தாய் எழுந்துதெட்சணாபுவியில் இரங்கி வரவேணும் மாளக்கலி தாழநரகம் வீழ வரம்பெற்றாய் வாய்த்தகுல சான்றோரவர்க் கேற்ற வரம்பெற்றாய் வரவேணுந் தெட்சணாபுரி மலைபோலுயர்ந்துபோகு தேசக்கலி தீதுஅநியாயம் பொறுக்கரிதே சிவனே வைந்த ராசே தெச்சணபுவியில் போவோம் கேட்பாரில்லை யெனவேபேய்கள் கீழும் மேலுஞ்சாடுது கிருஷ்ணாமகா விஷ்ணுவுன் கிருபை யிரங்கவேணும் தாண்மைக்குலச்சான்றோருனைத்தவத்தால் தேடிவருந்த தாயுமவர் தகப்பன் சுவாமி தானே யல்லாலுண்டோ சர்வபரா சுவாமிசிவ சுவாமி யுமக்கபயம் சாணார்படுந் துயரங்கண்டு சுவாமி யெழுந்தருள்வாய் ஆற்றிலலைக்கோரைபோல் அலைவதுந் தெரியாதோ அணைப்பாருன்துணையே யல்லால்அவர்க்கேதுமுண்டோ பலநாளவர் படும்பாடெல்லாம் பார்த்தேயிருந்தாயோ பயமோ அவரிடம் போகினுஞ் செயமோ சொல்லுமையா பாலரவ ருமக்கேயல்லா பாரா திருப்பாயோ ஆருமற்றார் போலேயவர் அலைவதுந் தெரியாதோ அரனே உனக்கபயம் சிவமருகாவுனக்கபயம் அவரால்நாங்கள்படும் பாடெல்லாம் அறியல்லையோசாமி ஆதிமுறை யாகமத்தை அழித்துச் சொல்லுறோமோ அதுதான்பொய்யோ மெய்யோ என்றாகமந்தனைப்பாரும் அண்டரண்டந்தொழவே வரும் ஆதியுமக்கபயம் அரகராசிவ அரனேசிவ அரசே யுமக்கபயம் ஆதிசிவ னாதிதவ மோதியுமக்கபயம் ஐயுங்கிலி சவ்வுங்கிண அரனே யுமக்கபயம் அம்மாஆதி அய்யாசிவ மெய்யா உமக்கபயம் அரசே தெச்சணாபுவியில் வரவேணு முமக்கபயம் அந்தக்கலி திந்தெய்யென்று அறவே வரவேணும் அத்திடக்கலி செத்திடக்கலி அறவே வரவேணும் அய்யக்கலி தீயாவியே அறவே வரவேணும் அவகடக்கலி சவகேடாக அழிக்க வரவேணும் ஐம்பத்தாறு சீமையொரு குடைக்குள் ஆள்வாயுமக்கபயம் அத்தாவுமக்கபயம்சிவ முத்தாவுமக்கபயம் ஆதிநாராயணர்க்குப் பாலனானகுணதீரா ஆதியுமக்கபயம் சிவ சோதியுமக்கபயம் அரனேசிவனார்க்கு மருகனான குணபாலா அலைவாய்க்கரை மடமாம்பதி ஆள்வாயுமக்கபயம் அய்யா வைகுண்டா அலை கண்டாயுமக்கபயம் தாணுமாலயனாய்ப்பேரு தழைக்க சிவமுளைக்க தானாயொரு குடைக்குள் தர்மத் தரணியாளவந்தாய் சாணாக்குரு வேதக்குரு தானானாயுமக்கபயம் தாண்டும்பதி கூண்டப்பதி தானானாயுமக்கபயம் தவமேதெச்சணாபூமியில் தானே வருவாயே

தெச்சணமீதே வந்து தெய்வமாயிருந்து கொண்டு மிச்சமாய் புதுமை காட்டி மேதினியெவருங்காண உச்சமே சான்றோர்க் கீந்து உதவியுஞ் செய்வாயென்று பச்சமாய்த் தேவரெல்லாம் வைந்தரின் பதத்தில் வீழ்ந்தார்

வீழ்ந்திடக் கண்டு வைந்தர் விடையுள்ள தேவர்தம்மை சோர்ந்திட மொழிகள் சொல்லி தேவரே பதற வேண்டாம் ஓர்ந்திட எனக்கு முன்னே உள்ளது தானேயென்று கூர்ந்திடவுரைத்தவர்க்கு குணமுடன் மகிழ்ந்துசொல்வார்


தெய்வ மாதர்கள் தாம்பெற்ற தேவரே சான்றோர்க்கெல்லாம் மெய்வரம் பதுபோல் ஞாயம் விளம்பிடப் பேறு பெற்றேன் பொய்வரம் பசாசு எல்லாம் பொன்றுற வரங்கள் பெற்றேன் அய்வரைக் காத்துத் தர்ம அரசுக்கும் பேறு பெற்றேன்


ஒருகுடையதற்குள்ளாள ஒருவிஞ்சையதிகம் பெற்றேன் கருவுடையோர்க்குங் காண கனவரம்பெற்றே னானும் மறுகிநீர் தவிக்க வேண்டாம் வருவேனான் சான்றோரண்டை குறுகலியதனைத்தாண்டி கொள்வேனென் குலத்தைத்தானே


என்னைக்கெணியா வண்ணம் ஏழையாயிருந்த சான்றோர் தன்னையே பழித்தோரெல்லாம் சளமது துயரங்கொண்டு அன்னீத நரகந்தன்னில் அகப்படத் தள்ளிக்கொன்று சான்றோர்க் கெல்லாம் கொடுப்பேன் மேற்பவிசு தானே

எல்லாஞ் சான்றோர் கையாலே எள்ளும் நீரும் கலிக்கிறைத்து பொல்லாக் கலியை நரகமதில் புக்க அடித்துப்பேயோடு கொல்ல விடை கொடுப்பேன் கூண்ட சான்றோர் கையதிலே வல்லோர் புகழுந் தேவர்களே மனமே சடைக்க வேண்டாமே

வேண்டாமென தேவருக்கு விடைகள் கொடுத்து வைந்தரும் கூண்டாங் கடலின்கரைதாண்டி குதித்தே கரையிலோடிவந்து மாண்ட பூரணனை முன்பெற்ற தாய்க்கோர் சடலவுருக்காட்டி ஆண்டாராணை எவருக்கும் அகலாதே எனஆணைகொண்டார்

நானோ பிறந்த சமுத்திரத்தின் நடுமேற்கடலிலன்னா பார் ஏனோ பதியும் மேடைகளும் எண்ணிப் பாரு தேர்நிறமும் மானோ பொன்னோ மண்டபமோ வறடேயுனக்கு சாட்சியிது யானோ காட்டுஞ் சொரூபமெல்லாம் யாதாயிருநீ மறவாதே

பதமோ பதமோ பாற்கடலின் பாலையகமே கொள்ளுஎன இதமாய் இதமாய்ச்சொல்ல இசையா வண்ணம்வீழ்ந்திடவே உதயம் உதயம் வெளிதிறந்த உருவை ஒருவர்க்குரையாமல் இதையே மறந்து எனை நீ இளப்பம் பேசிநெகிழாதே என்றார்

வைகுண்டம் பிறந்து வார்த்தையொன்றோர் குடைக்குள் பொய்கொண்ட பேரைப் பலிசெய்தரசாள விஞ்சை கொண்டு போறேன் நிதானமாய் நீ பாரெனவே அன்று வைகுண்டர் அவர்நடந்தார் தெச்சணத்தில் கெங்கைக் குலத்தாயை கிருஷ்ணர் வரவழைத்து நங்கையே யென்னுடைய நாமமது கேட்டதுண்டால் பால்போல் பதம்போல் பாவந்தீரன்பருக்கு சூல்புத்தி வம்பருக்குச் சூதுசெய் மங்கையரே என்றுவைகுண்டர் இப்படியாமம் கூறி இன்றுதெச்சணம்போக எழுந்தருளியே வந்தார் சகலவுலகோரும் சந்தோசங் கொண்டாட புகல எளிதில்லாத பெரியநாராயணர்க்கு வைகுண்டம் பிறந்து வார்த்தையொன்றோர்குடைக்குள் மெய்கொண்டமுப்பொருளோர் மேனியொன்றாய் திரண்டு எல்லா வரமும் இவர்க்கு மிகக்கொடுத்து நல்லோர்க்குக் காலம் நலமாகுமென்றுசொல்லி வானலோகம் வாழும் வானவருந்தானவரும் தானே முன்னாகமங்கள் தப்பாதிடை முனிவர் வகுத்திருந்த ஆகமங்கள் நிறைவேறி வந்ததென்று மாமுனிவரெல்லோரும் மாசந்தோசங் கொண்டாடி நாமுமெதிரேபோய் நல்லவைகுண்டர்பதம் கண்டுகொள்வோமென்று கனமுனிவரெல்லோரும் கொண்டு மலர்ப்பூக்கள் கோமான்கால்மீதே சொரிந்து கொற்றவரும் மாண்டு குறும்பு மிகப்பெருத்து உற்ற துலுக்கன் உடன்வந்துடனோடி மற்றொரு பத்தாண்டில் வருவோமென்றாகமத்தின் வர்த்தமானம்போலே வந்தவைகுண்டரென எல்லோரும் போற்றி எதிர்நின்று வாழ்த்திடவே நல்லோராயெங்களையும் நாராயணர்மகனே உன்கிருபைதந்து உதவிதருவாய்மேலும் முன்கிருபையெல்லாம் உனக்குள்வசமாச்சுதல்லோ முப்பொருளும் நீதானாய் உருவெடுத்தாயானதினால் எப்பொருளைக் கண்டு இயல்புபெறப்போறோங்காண் வைகுண்ட மாமுனியே மனதிரங்கிக் காக்கவேணும் மெய்குண்டர் பதத்தில் வீழ்ந்து நமஸ்கரித்தார் அப்போது வானோர்க்கு ஆதிவைகுண்டருரைப்பார் இப்போது வானோரே எனையறிந்த தெந்தவிதம் என்று வைகுண்டர் இயல்பறியச்சொல்லிடவே அன்று வானோர்கள் எல்லோருமேதுசொல்வார் கயிலயங்கிரியிலுள்ள கணக்குமுதலுள்ளதெல்லாம் ஒயிலாகப்பிறப்பு உயர்கணக்கானதுவும் தத்துக் கணக்கும் சஞ்ச முதற்கணக்கும் பத்துக் கணக்கும் பலன்பெற்றோர் தங்கணக்கும் மோட்சக் கணக்கும் முன்னுள்ள யுகக்கணக்கும் வாச்சக் கணக்கும் வைகுண்ட நற்கணக்கும் நரகக் கணக்கும் நடுத்தீருவைக் கணக்கும் தருமக் கணக்கும் சகலக்கணக்கு முதலாய்ப் பொறுமைப் பிரமா பூசாந்திரக்கணக்கும் எல்லாக் கணக்கும் எடுத்துமிகத்தேவரெல்லாம் வல்லான கயிலைவிட்டு வருவதுகாண்டே யடியார் தியங்கி மனங்கலங்கித் தேவரோடே கேட்டோம் மயங்கிமிகக் கேட்டிடவே மாதேவரேதுரைப்பார் நாராயணர்க்கு நல்ல வைகுண்டம் பிறந்து சீராயுலகமெல்லாம் சிறந்தே வொருகுடைக்குள் ஆளவருவதினால் அவர்கைக்குள்ளிக் கணக்கு நீள அயன்சிவனும் நெடிய மருகோனும் இந்நாள் முதலாய் ஏழ்ப்பிக்க வேணுமென்று சொன்னார் காணெங்களையும் சுருதிக்கணக்கையெலாம் பொன்னுலோகம்புகுந்து பெட்டகத்தோடேயெடுத்து வாருமெனஅயச்சார் மகாபரனும் மாலோனும் சேரும் வைகுண்டம் சிணம்பிறந்தாரென்றுசொல்லி ஆனதினாலிப்போ யாங்கள் கொண்டு போறோமென்றார் நானதுகள் கேட்டு நன்றாயறிந்தோமென்றார் அப்போது வைகுண்ட ராசர் மிகவுரைப்பார் இப்போது வானவரே எல்லோரு மென்கூட வாருங்கோ வென்று வைகுண்டர் சொல்லலுற்றார் சீருங் கோபால சிவனே செயலெனவே வானவர்கள் தேவர்முதல் மறைமுனிகள் சாஸ்திரிகள் தானவர்க ளுங்கூட சங்கீதம் பாடிவரச் சந்திர சூரியர்கள் தம்மானக் குடைபிடிக்கச் சுந்தரஞ்சேர் வைகுண்டம் தோன்றிவந்தாரெனவே வேத மறையோரும் விசய முனிவர்களும் நாதாந்த வேதமதை நன்றாய்த் தெளிந்தெடுத்து கோமான் வளரும் கோவேங்கிரிதனிலே நாமாது வாழும் நல்லதிரு மண்டபத்தில் தங்க நிறத்தூணில் சதுர்மறையோர் தாங்கூடி எங்கு மகிழ எழுதினாரம்மானை.

வைகுண்டஅவதாரம் - திருவாசகம் -2 ஏகம் ஒரு பரமானது. “இம்” என்றொரு வாயுவில் சக்தி விளைந்தது. சக்தியில் சிவம் தோன்றியது. சிவத்தில் சக்தி தோன்றியது. சக்தியில் நாதம் தோன்றியது. நாதத்தில் விந்து, விஷ்ணு தோன்றி, ருத்திரர் மயேசுரர் உலகம் தோன்றியது. உலகில் அண்டம், பிண்டம் தோன்றியது. பிண்டத்தில் அசுரன் குறோணி தோன்றி வானலோகம் விழுங்கினான். விஷ்ணு குறோணியை 6 துண்டாய் வெட்டி உலகில் தள்ளினார். துண்டம் ஒன்றில் குண்டோமசாலி பிறந்து சுக சோபன மண்டபம் மலைய விளித்ததும் திருமருகர் தேவாதிகளை நாங்கிலாக்கி வரையைத் தூண்டிலாக்கிக் கடலை ஓடை யாக்கிக் காயாம்பு வண்ணர் ஓடமேறி கறைக்கண்டர் ஓணி தள்ள கன்னியிலே தூண்டலிட்டு குண்டோமசாலியை வதைத்தார். மறுயுகத்தில் தோன்றிய தில்லை மல்லாலன் மல்லோசி வாகனென்ற இருபேருடைய அநியாயம் பொறுக்காமல் சங்காரம் செய்தார். அடுத்த யுகத்தில் சூரபத்மன் சிங்கமுகாசூரன் செய்த அநியாயம் பொறுக்காமலே ஆதித்திரு நெடுமால் ஆறுமுகக் கடவுளென நாமமுங்கூறி அவனை சங்காரஞ் செய்தார். அவ்வுகத்தில் பிறந்த இரணிய அரக்கனை வதைத்து அந்த யுகமும் அழித்தார். அடுத்த யுகத்தில் இராமனாக அவதரித்து அரக்கன் ராவணனை சங்காரம் செய்து சீதாதேவியின் சிறைமீட்டி, தென்னிலங்காபுரி அரக்கரை கொன்று அக்கிளையொழிய அரக்ககுலம் அறுத்தார். துவாபரயுகத்தில், பஞ்ச பாண்டவர்க்கு உபகாரியாகி பகைத்த துரியோதனனை வதைத்து, பஞ்சபாண்டவர்க்கு குருநாடு பட்டம் சூட்டி அரசாள வைத்தார். கலி வருவானெனக் காற்று வீசினதைக் காதிலே கேட்டுக் கானகவழி நடந்து பஞ்ச பாண்டவர்களுடைய பாரப் பெலன்களை வாங்கி, பச்சமாலை சுமந்திருந்த பாயமாயக் கூட்டைப் பர்வதாமலை உச்சியிலே கிடத்தினார். கங்கையில் குளித்த சப்த கன்னிமார்களுடைய கற்பை சோதித்து கயிலையங்கிரி சென்று ஏழு லோகம் புகுந்து ஏழுலோக வித்துமெடுத்து இருதய கமலத்திலிருத்தி எரியுங் கட்டையெனக் கிடந்து ஏந்திழைமாரைச் சூழ வளையும் படியாகக் கொந்தலை எழுப்பி ஏழு பெண்களுக்கும் ஏழுமதலை கொடுத்தார். தவசுக்கு கன்னிமாரை அனுப்பி பத்திர மாகாளியிடம் பாலரை கொடுத்து ஸ்ரீரங்கம் போய் செகமறியும் படி பள்ளி கொண்டிருந்தார். தேவாதி களுடைய வாக்கினை நம்பி ஈசுரர் தாமே கலியன் கலிச்சியை பிறவி செய்தார். கலியன் கலிச்சி இருநூற்று முப்பது நூறாயிரம் வருஷமாகக் கட்டங்கொடுமை செய்து அவனியரசாண்டு கன்னி மக்களாகிய சான்றோர் படுகிற மறுக்கம் பொறுக்காமலே, வியாசர் இடை முனிவர் வகுத்த ஆகமப்படி மகாபர நாராயணர் தாமே வைகுண்டமாய் 1008 ஆம் ஆண்டு மாசி 20 தேதியிலே அவதரித்தார். அவதரித்து அவனியில் மனு நிறமாக வந்திருந்து சாதி 18ம் ஒருதலத்தில் வருத்தி தர்மமாய்த் தாரணியாபேர்க்கும் சஞ்சல நோய் பிணி தண்ணீரால் தீர்க்கவும், சந்ததியில்லாதவர்க்குச் சந்ததி கொடுக்கவும், தனமில்லாத பேர்க்குத் தனங் கொடுக்கவும் சாதை வாதை பேய்களைச் சரிவிலே எரித்துக் கரியச் செய்யவும் தரணியேழு கணக்கை கேட்டு சத்தியாய் அன்பு மனிதருக்காக தரணியில் நாலு தரம் சளங்கள் படவும் சாஸ்திர வேதநூலுக்குச் சரியொத்த பேர்களுக்கு உபகாரங்கள் செய்யவும்; சண்டையாய்க் கலியனைத் தன்னாலே போக்கவும் தர்மமாகத் தரணியோர் குடைக்குள் ஆளவும் தங்க நவரத்தினத் திருமுடிசூடி சகலமாபதி மேடைகள் பாவிக்கவும் தவசு கிருபை பெறவும், தங்கமணி சக்கராயுதக்கொடி ஒற்றைக்கொடி கட்டவும் சகலரும் புகழ வரும் தர்மராசாவாகவும் சங்க விருதுக்கொடி ஒத்தக்கொடி கட்டவும் அஷ்டதிக்கும் பதினாலு லோகமுமறிய அசையா மணியொன்று கட்டி ஒரு குடைக்குள் அரசு பாவிக்கவும், ஆதி சர்வேஸ்வரனாகி அவனியைம்பத்தாறு சீமையும் அடக்கி அரசாளவும் ஆதிசர்வ காலமும் அழியாத் திருவுளமாயிருந்து அரசாள்வாரெனவும் ஆதிராமச்சந்திர சூரிய நாராயணர்க்கு ஆதியாகமத்தின் படி ஆதிவைகுண்டம் பிறந்தாரெனவே, அண்டர், முனிவர், தேவர், சகலமாமுனிவர் எல்லோருங் கூடியிருந்து ஆராய்ந்து தொண்டர் தமக்கென்று வளர் கொன்றையணி சிவகயிலையங்கிரியில் மண்டலம் புகழச் சிவனாருடைய கிருபை யினாலே என்று எழுதினர்.

என்றிந்த விவரமெல்லாம் கயிலை செகத்தூணில் தரித்து நன்றிந்த ஆழ்ச்சை வெள்ளி நற்கதிருதிக்கும் வேளை பண்டிந்த மூலந்தன்னில் பஞ்சமி நேரந்தன்னில் குண்டத்தின் அரசு கோமான் குவலயமதிலே வந்தார்

சென்றந்தக் கயிலை செகத்தூணிலேதரித்து அன்றந்தத் தேவர்முனி எல்லோருந்தாங்கூடி வைகுண்டர் பாதமதை வாழ்த்திக் குவித்துவந்தார். மெய்கொண்ட நாதன் வேலவன்செந்தூரணுகி நடக்க அறுமுகனும் நடுங்கி மிகப்பதறி வடக்குமுகமாய்விழுந்து வைகுண்டரைப்போற்ற அப்போது வேலவனை ஆதிவைகுண்டர்பார்த்து செப்புகிறார் குண்ட சிவநாதகண்மணியும் நாடுகேட்கப்போறேன் நாரணன் நான்தானும் கேடு வருமுனக்குக் கேள்விகேளாதிருந்தால் இத்தனை நாளும் என்னைக் கெணியாமல் புத்தியறியாதவர்போல் புலம்பினீரித்தனைநாள் இனிவைகுண்டம்பிறந்து ஏகமொரு குடைக்குள் மனுவொரு சொல்லாள மகாதர்மமேநினைத்து மாய்கையறுத்து மாற்றான் கருவறுத்துத் தோயக் குழிமூடி தொல்புவியைத்தானாள நல்லோர்களெடுக்க நான்போறேன் கண்டாயே கல்லார் தமக்குக் கசப்பினிமேல் கண்டாயே தர்மவைகுண்டம் தான்பிறந்தேன் இப்போது தர்மச் சிறப்புத் தானினிமேல் கண்டாயே நன்மையினிக்காணும் நாரணன்கண்ணல்லாது தின்மையென்ற சொல்லு ஆகாது கண்டாயே ஆனதாலுன்றனக்கு யானினிமேல் சொல்லும் புத்தி வானஞ்சூழ் வையகங்கள் வாழுகின்ற மண்டபங்கள் எத்தனையோ அத்தனையில் இருக்கின்ற தேவரெல்லாம் அத்தனை பேரும் அறியும் படிசொல்லுவேன் காணிக்கைவேண்டாதுங்கோ கைக்கூலி கேளாதுங்கோ மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ பூசையேராதிருங்கோ பெலிதீப மேராதுங்கோ ஆசைவை யாதிருங்கோ அவகடஞ் செய்யாதுங்கோ ஞாயமுறை தப்பி நன்றி மறவாதுங்கோ மாய நினைவு மனதில் நினையாதுங்கோ வைகுண்டா வென்று மனதில் நினைத்திருங்கோ பொய்கொண்ட தேரோட்டம் புனக்கார மேராதுங்கோ தாதி கைகாட்டல் சப்பிரங்க ளேறாதுங்கோ மோதிப் பேசாதிருங்கோ மோகம்பாராட் டாதுங்கோ ஆலத்தி கைவிளக்கு ஆராட்டுப் பாராதுங்கோ சாலத்தீ பாராதுங்கோ சகலபூ ஏராதுங்கோ கொழுந்து மஞ்சணைமாலை குப்பையொடு சந்தனமும் விழுந்து நமஸ்காரம் வேண்டாமென்று சொல்லிடுங்கோ கூவென்றுரையாதுங்கோ கொக்கரித்துப் பேசாதுங்கோ ஓவென்றுரை யாதுங்கோ ஓமமுறை யேராதுங்கோ தீபரணை காணாதுங்கோ திருநாளைப் பாராதுங்கோ ஆபரணம் பூணாதுங்கோ அன்னீதஞ் செய்யாதுங்கோ எல்லாம் வெறுத்திருங்கோ இதனைபோலுள்ளதெல்லாம் அல்லாமல் மீறி யாரொருவர் செய்ததுண்டால் வல்லாத்த கோபம் வரும் வல்ல வைகுண்டருக்கே நல்லோரே யாகவென்றால் நியாயமதிலேநில்லும் என்று வைகுண்டம் இயம்பக் கந்தனுரைப்பான் மன்று தனையளந்த வைகுண்ட நாரணரே நீருரைத்த சட்டமதில் நிலைதவறோம் நாங்கடியார் காரும்நீ ரென்று கந்தன் அடிதொழுதான் அப்போது வைகுண்ட ராசர் மிகவுரைப்பார் இப்போது சொன்னதெல்லாம் எனக்குநிசமாகவென்றால் உன்கோபுரத்தில் உயர்ந்தவட மேல்மூலையில் பின்கோபுரங்காணப் பிளந்து போடென்றுரைத்தார் அல்லாமலுன்னையென்று அவனியுண்டாக்கிவைத்த செல்லாச் சிலையைத் திருப்பிவிடு தெற்குமுகம் உலகோரறிய ஒருவாயிலுமடைத்துக் கலகமாய்க் கண்மூடிக் கவிழ்ந்திருப்பாயோவென்றார் அல்லாதெனைமறந்து அழிச்சாட்டமாய் நடந்தால் பொல்லாதவனே உனக்கு பெருவிலங்கு சிக்குமென்றார் அப்போது கந்தன் ஆவி மிகக்கலங்கி இப்போது சொன்னதெல்லாம் யானினி செய்வனென்று ஆதி யுரைத்ததுபோல் அடியார் நடப்போமென்றார் சோதி வைகுண்டம் சொல்வாரவரோடு நிலையழி யாதிருங்கோ நீதியாய் நின்றிடுங்கோ உலகறிய நானும் ஒருநெல்லுடைக்குமுன்னே பலசோதனையும் பார்த்து நடுத்தீர்ப்புசெய்வேன் விடியும் பொழுது வேசம் பலதணிவேன் பிடியு மனுவுடனே பெரியயுகமாள வருவேன் வருவோமொருநெல் மாறியெடுக்குமுன்னே கருதியிருங்கோ கருத்தயர்ந்து போகாதுங்கோ என்று வைகுண்டம் இத்தனையுங் கந்தனுக்கும் மன்றுக்கு மென்றும் மறவாதுங்கோ என்று அதைவிட்டவர்நடக்க ஆகாயங் கொண்டனரே இதைவிட்டவர்நடந்து ஏகமயமாகிவர

அண்டரொடு தெண்டனிட்டு எண்டிசைகள் நின்றுவரும் ஆதவனைச் சூழ்கணம்போல் அரிஹரி அரஹரா சிவசிவா என்றுசிலர் ஆடியே பாடி வரவே தொண்டரவர் கண்டுவைகுண்டரடி கண்டு தொழ சூழவளைந் தேழியல் படர்தே சூரர்பதி நாராயணர் வீரர்பத மோதிவரச் சூராதி சூர ரெனவே செண்டையொடு தண்டைமணி டண்டடம டண்டமெனத்தேவர்சேவித்து வரவே சிவநமசிவாயமென ஓம்நமசிவாயமென சேவித்திருபுறம் வரவே அண்டமுர செண்டுமணி டுண்டும் டுண்டுமென ஆகாய மீதில் வரவே அனவரத கோலாகல ஆதிநாரா யணாவென அமரரிசை கூறி வரவே மத்தள முடுக்குபல வாத்திய மடடென வானமதில் நின்ற திரவே மலர்மாரி சலமாரி தினமாரி தூவியே வானவர்களிசை கூறவே தத்தளங் கிடகிட தொம்மெனத் தொம்மெனச்சங்கீதக்காரர் வரவே சகலகலைக்கியானவேத சாதிமுறை யோதிமிகு சாஸ்திரக் காரர் வரவே தித்தங்கிண தித்தங்கிண தித்தங்கிண தித்தியெனச்சிலதேவர் கூறி வரவே சிவசிவ சிவசிவ சிவவென்று சிலதேவர் சேவித்தியல்கூறி வரவே நித்தங்கிண சித்தங்கிண உத்தங்கிண தித்தியென நேரியர் சீரியல் கூறவே நீலங்கிரி வாலங்குரு நீயென்குரு தாயென்குரு நீதென் குருவெனப் போற்றினார் பண்டைமுறை யின்றுவெனக் குண்டமெனக் கண்டுவரும்பலவாங் கிரி குண்டமே பசுவாமனே சிசுபாலனே பலமானனே தலமானனேபசுவா கிய நிசமே தொண்டர்தனக் கென்றுவருகுண்ட வைகுண்டமனாய்த்தெச்சணாபதி பூபனே துளபமணிகளபமேனி அழகொழுகு கிருபைமிகு துவாரகா பதிக்கரசே சண்டன்வலி துண்டப்பட கொண்டக்கணை விண்டத்தொடு துச்சா வில்லு வீரா சாமியுன் றாளோ எங்கள் தலையின்மீது தலையின்வழி தானே நடவாயே துண்டப்பட வண்டச்சரம் கண்டப்படிபொண்டத்தொடு துச்சா வில்லு தீரா சுத்தா வுனக்கேற்றார்தமை வித்தாக்கினாய் வித்தாய் துவாரகாபதிக்கரசே எனப் போற்றினார்.

தேவர் தொழுது திக்கெங்கும் போற்றிவர தாவமுள்ள வானோர் சங்கீதம் பாடிவர வேத மறையோர்கள் வேதக்கலை யோதிவர நாதமொடு சங்கு நகரா முழங்கிவர மத்தள மேலோர் மடமடென்றேற்றிவரத் தித்தி தித்தியெனத் தேவரெல்லாம் பாடிவர சாத்திர வேத சாதிமுறையோதிவர நாற்றிசையும் போற்றி நற்சாதியும்வரவே அரம்பையர்களாடி ஆலத்தியேந்திவர வரம்பகலா மாமுனிவர் வரிசைமிகக் கூறிவர நாதாந்த வேதம் நவில்வோர் நெருங்கிவர மாதவர்களெல்லாம் மலர்மாரி தூவிவர கண்டங்ககமகிழ்ந்து கண்ணான நாரணரும் கொண்டாடித் தேவரொடு கூறுவாரன்போரே மனுக்கண் காண வரவேண்டாம் என்பிறகே தனுக்கான ஏகமதில் சகலத்தோருமறிய வாருங்கோ என்னுடனே வானவரே தேவர்களே வானமதில் நின்று வாத்தியங்களேற்றிவர தானவர்கள் முதலாய்ச் சங்க முதல்வரவே ஆகாச மீதில்நின்று எல்லோரும் போற்றிவர வாகான சூரியனும் வந்து குடைநிழற்ற பழுதிலாதெச்சணத்தில் பரமன்எழுந்தருளும்வேளை வழுவின்றி நின்று வாழ்த்தினார் தேவரெல்லாம்

ஆதியாம் கடவுளான அச்சுதர் பச்சமாலும் சாதிகள் தமக்கு வேண்டி சந்தனச் செந்தூர் தன்னில் வாரியில் மனுவாய்த் தோன்றி வளர் கன்னி நகரில் மாயன் நீதியை மனதில் எண்ணி நெடியோனும் வருகின்றாரே

வருகிறபோதே மாயன் மனமது மகிழ்ந்து கொண்டு கருதியே ஈசர் தம்மை கட்டுடன் வணங்கி வேண்டி சுருதியாய் நமது கைக்குள் சிவாயி ஏவலாக பருதி போல் ஐந்து வீரர் படைத்து நீர் அனுப்புமென்றார்.

ஆயனார் உரைத்தபோது அரனுமே மனதுள் மெச்சி உபாயமாய் வீரர் தம்மை வரவழைத்திங்கே கொண்டு ஞாயமாய் பிறவி செய்து நாரணர் கைக்குள்ளாக்க நேயமாய் மனதில் எண்ணி நடத்தினர் ஈசர் தானும்.

ஆடுகோழி இலைப்பட்டை அடக்கி உண்டிடும் கடியசேவகனும் கயிலை பையனும் அக்கினியேறியாம் மாயப்பலவேசம் அத்திவாக்கனும் காத்தவராயனும் ஒன்றாய் அன்று கந்தன்தேரதனை ஆனபஞ்சதேவர்களும் நின்று இழுக்கையிலே நெடியநாராயணர் அறிந்து வாருங்கோ பிள்ளாய் வாய்த்த பஞ்ச தேவர்களே சீருங்குணநாதன் மகரத்துள் அவதரித்து பாருகத்தோர்காண பகவானருளாலே தேருவிடுவதற்கு தெச்சணம்போகவாரும் என்று நாதனுரைக்க ஏற்றபஞ்சதேவர்களும் நன்று மொழியுரைத்தீர் நடந்துமெள்ளப்போவுமென்றார் அப்போது மாயன் ஆதிதனைநினைத்து இப்போது தேரை நீர் இழுப்பதைப் பார்ப்போமென்று மாயனும் தேரின்மேல் மேருபோல் சமைந்தாரே ஆயனுடகோலம் அறியாத தேவர்கள் முப்போதுகாளியிடம் முறையிட்டார் அம்மானை அப்போதுகாளி அபயமதையமர்த்தி காளியும் காரணத்தைக் கருத்தாககேட்கையிலே ஊழிக்காலம் வரையும் உள்ளதெல்லாம் சொல்லியபின் பண்டாரமொருவன் பகட்டாக வந்திருந்து வேண்டாம் நீர்தேரை இப்போது இழுக்காதீர் கூண்டோடே வாரும் தெச்சணத்தில் போவோமென்று இருந்தாரே தேர்மேலே எம்மால் இயலவில்லை தேருவோடி வருவதற்கு சீருசொல்லவேணுமம்மா என்று பஞ்சதேவர் கெஞ்ச ஏதுரைப்பாள் மாகாளி மன்றுதனையளந்த மாயவரேயல்லாது வேற்றொருவர் தேரேற வீரியங்கள் காணாது போற்றியவர் அடிதொழுது புதுவரங்கள் கேளும்நீர் என்றுரைக்க காளி ஏதுசொல்வார் ஐபேரும் இத்தனை நாளும்உமக்கு ஊழியம்செய்தநாங்கள் கந்தையணிந்தஆண்டி கைக்குள் ஏவல் செய்வதில்லை இன்றைக்கே நாங்கள் இறந்திடுவோம் அக்கினியில் என்றுரைத்து ஐபேரும் ஏகுகின்ற வேளையிலே குன்று போலமாயன் கொடுந்தணலாய் நின்றாரே அக்கினியில் ஐபேரும் அலறியே வீழ்ந்திறக்க தக்கென மாயனெழுப்பி மறுபிறப்புதான் கொடுத்தார் கருடன் சிமிளரென்றும் கத்திக்காரன் சிப்பாயென்றும் மொரடரென்றும் ஐபேரை முகுந்தனும் கூட்டிக்கொண்டு தந்தை அயச்சிருந்த தாமரையூர் போவோமென சிந்தை மகிழ்ந்து சிணமாக நடக்கலுற்றார்

வைகுண்டர் மணவைப்பதி ஏகல் நன்றான வைகுண்டர் நல்லசெந்தூர் தானும் விட்டு வண்டாடுஞ் சோலை வாய்த்த வனங்கள்விட்டு சோலைத் தெருக்கள்விட்டுச் செந்தூர் தலங்கள் விட்டு ஆலயத்தெருக்கள் விட்டு அந்தூர் பதிகள்விட்டு மண்டப மேடைவிட்டு மடங்கள் மிகக்கடந்து தண்டமிழ்சேர் செந்தூர் தலத்தைவிட்டுப் போவதற்கு நிற்கின்ற போது நிலையுள்ள மாமுனிவர் நக்கன் மருகனுட நல்லடியில் வீழ்ந்து செந்தூர் தலத்தைவிட்டுத் தெச்சணாபூமியிலே இந்த வேளைதனிலே எழுந்தருள வேண்டியதேன் இங்கே பகைத்ததென்ன என்னுடைய நாயகமே சங்க மகிழ்வேந்தே தானுரைக்க வேணுமென்றார் இப்போது கேட்டதற்கு இயல்புரைக்கக்கேளும் என்று அப்போது நாராயணர் அகமகிழ்ந்தேதுரைப்பார் கேள்வி கேளாநீசன் கெடுவதறியாமல் நாள்வழியாய்ச்சான்றோரை நியாயமில்லாதடித்தான் சொன்னேன்புத்திநீசனுக்குத் திருவனந்தமேயிருந்து என்னையும் பாராமல் இளப்பமிட்டான் சான்றோரை ஆனதால் நீசனுக்கு யானதிகக்கோபமுற்று நானவ் வூரும்விட்டு நாடிவந்தேன் செந்தூரு இங்கே யிருந்தேன் யான்சிறிது காலமெல்லாம் வெங்கப் பயல்சிலர்கள் வேசையுடனாசையினால் என்னைக் கெணியாமல் என்கோவிலுள்ளேதான் சன்னைசொல்லிப் பெண்களுடன் சரசமிட்டெச்சிலிட்டான் இருபேரு மொத்து இருந்தாலும் பழுதல்லவோ ஒருவன் பெண்ணாளை ஒருநம்பூதிரி பிடித்து எனக்கேவல் பண்ணி ஏந்திழையாள் போகுகையில் மனக்குழலி தன்னுடைய மார்பின் கலைபிடித்து இழுத்து வலித்து இழிக்கேடு செய்யவென்று பழுத்துச்சழிந்த பருநம்பூதிரியவன் மேல்தலையிலிட்ட முத்திரி கழற்றாமல் மால் மயக்கத்தாலே மனங்கலங்கி நம்பூதிரி மங்கை மனங்கலங்க வாரிப் பிடித்திழுத்துக் கொங்கைதனைப் பங்கமதாய்க் கூறழிய வேகிழித்து வேதனைகள் செய்ய மெல்லியவள் கோபமுற்று மோதியென் பேரில் ஒருசாபங்கூறினளே நாரணா கந்தா நானுனக்கு ஏவல்பண்ணிக் காரணங்களாச்சு கடைசிநாள் தானாச்சு உனக்குமிந்தப்பதிதான் உறவுகேடாச்சுதையா எனக்கு மொருபிறவி இன்றுவந்து வாச்சுதென்று செந்தூர் தலங்கள் சிலநாள் செல்லுமுன்னே மண்தூர்ந்து போகுமென்று மாதுமிகச்சாபமிட்டாள் சாபமிட்டு மங்கை தக்கென்று கீழ்விழுந்து சீவனதுவிடவே சிவனைக் கண்ணோக்கினளே நம்பூதிரி பங்கத்தாலேஅந்த நாயகிதானும் உம்பர்கோனூரில் உயிர்விட்டாள் மாமுனியே தவறாத மங்கை தானுரைத்தச் சாபமதால் இதறாயெனக்கங்கு இருக்கமனங் கூடாமல் எங்கேயினிப் போவோமென்று இதைவிட்டெழுந்திருந்து மங்கைசொன்ன நாள்முதலாய்த் தெற்குவாரியிலிருந்தேன் அல்லாமலிங்கே அழிமதிகள் ரெம்பரெம்ப வல்லாண்மையாக வலுஞாயங்காணுதுகாண் முன்னடப்பு மங்கையர்கள் முங்கிக் குளித்துமிக என்னடையில் வந்து ஏந்திழையாராடுவது ஆட வரும்போது அசுத்தத்தோடுவாறாள் பாடவரும்போது பண்ணுறாளசுத்தமது கோவிலிலே பூசைசெய்யும் குறும்பர் மிகத்துணிந்து தேவியருக் கீயத் திருடுகிறாரென்முதலை கணக்கன்முதல் நம்பூரி கள்ளப்பெண்ணார்களுக்கு இணக்க மதாயிருந்து என்முதலைக் கொள்ளைகொண்டு எடுக்கிறார் பெண்கள் எச்சியாட்டு மாடி ஒடுக்கிறார் பெண்கள் ஒண்ணுக்கொண்ணொத்திருந்து பம்பை பரத்தை பகட்டுக்கை காட்டலெல்லாம் எம்பரனுக் கேற்ற இயல்பல்ல மாமுனியே ஆனதாலிவ்வகைகள் யான்வேண்டாமெனவே மானமழியுமுன்னே மாமுனியே தெச்சணத்தில் பள்ளிகொண்டு நானிருந்து பார்த்துச் சிலநாள்கழித்து கள்ளியாட்டுக் காவடி கைக்கூலி தான்முதலாய் நிறுத்தல்செய்ய வேண்டிய தெல்லாமிகநிறுத்தி பொறுத்தரசு தர்மப் புவியாளப்போறேனினி மாமுனிக்குச் சொல்லி வழிகொண்டார் தெச்சணமே தாமுனிந்தையா தவறாத மாமுனியும் தெச்சணத்துக் கேகவென்று திருச்சம்பதியிருந்து உச்சமது கொண்டு உகச்சாபமுங்கூறி நடந்து வரவே நல்லசெந்தூர் தானும்விட்டுக் கடந்து தருவைக் கரைவழியே தேவரெல்லாம் சங்கீதங் கூறித் தாமேயவர்வரவே மங்கள நாதன் மனுச்சொரூபமேயெடுத்து நருட்கள் மிகக்காண நாற்றிசைக்கு மேவிவந்தார் மருட்கள் மிகவந்து வாசமிட்டுக் கூடிவர கீழநடை விடாமல் கிருபையுள்ள வைகுண்டரை தாழநடை விடாமல் சற்பூதமேந்திவர அப்போது பூதமதை அல்லகாணென்றுசொல்லி மைப்போடுங் கண்ணர் மாபூதமதைவிலக்கி நீங்களெனைச் சுமந்தால் நீணிலத்துச் சோதனையில் தாங்கள் மீறிநடந்தால் தகுமோநான் கேட்பதற்கு வேண்டாங்காண் நாரணர்க்கு வேதாளாவுன்வேலை பாண்டவர்களானப் பஞ்சவர்களுண்டெனக்கு என்று வைகுண்டர் இசைந்து திசைநடந்தார் தொண்டு செய்யாமல் சூல்பூதமாடிவரப் பூக்கொண்டு வந்து போட்டுத் தொழுவாரும் தீக்கொண்டு வந்து தீபரணை காட்டுவாரும் மலர்வீசிக் காற்று மரைவீசி நிற்பதுவும் சிலம்பொன் துளிபோல் சிறப்புடனே தூவிவர மதியுங் குடைபிடிக்க வாயு மரைவீசத் துதியும் வழிதீய்க்கத் தேவர்மிகவோலமிட இத்தனை நற்சிறப்பும் இயல்பாய் முழங்கிவர புத்தியள்ள நாரணரும் புறப்பட்டார் தெச்சணமே நதியிற் பிறந்த நாராயண மூர்த்தி பதியி னலங்காரம் பார்த்து வழிநடந்தார் கெங்கை தனிற்பிறந்த கிருஷ்ண மகாநாதன் கங்கை வழிநோக்கிக் கண்ணோன் வழிநடந்தார் நடந்து வருகும் நல்லவைகுண்டர்முன்னே கடந்து முன்போன காண்டா மிருகமொடு சிங்கமி யாளி செங்கருடனங்கனுமன் பங்கமிலாறாஞ்சி பால்நிறப் பட்சிகளும் ஐந்தலை நாகம் அஞ்சுபஞ்சாச்சாரை செந்தலைக் கருடன் செய்ய காண்டாமிருகம் கலியன்கண் காணாதே காடோடி வாழ்ந்திருந்த சலிவில்லா மாமிருகம் சந்தவர்ணப் பட்சிமுதல் தரும வைகுண்டர் தான்வந்தாரென்றுசொல்லி பொறுமைக்குலங்களெல்லாம் புறப்பட்டகமகிழ்ந்து வந்து வைகுண்டர் மலரடியைப்பூண்டுகொண்டு சிந்தர் குலமன்னர் தெய்வப் பெருமாளே வைகுண்டரெப்போ வருவீர் வருவீரென்று கைகண்ட நிதியும் காணாதார் போலிருந்தோம் கப்பல்கரை கண்டாற்போல் கண்டோமேயும்மை செப்பத் தொலையாத திருவடியைப்போற்றிசெய்ய வாறோங்காணும்முடனே வைகுண்டப்பெம்மானே தாறோங்காணெம்முதுகு சாமியுன் பாதமதுள் என்றிவைகளெல்லாம் இரங்கித் தொழுதிடவே நன்றென்றந்த நாராயணருரைப்பார் ஒருவிளி பொறுங்கோ உண்மையிது தப்பாது இருவிளிக்குள்ளே என்னிடத்தில் வந்திடுங்கோ இருங்கோ முன்னயச்ச இடத்திலே போயிருங்கோ கருதியிருங்கோ கருத்தயர்ந்து போகாதுங்கோ அலைய விடாதிருங்கோ அஞ்சுபஞ்சமதையும் குலைய விடாதிருங்கோ குருநினைவையுள்ளேற்றும் என்று அவைகளுக்கு எம்பெருமான் சட்டமிட்டு அன்று அவைகளையும் அனுப்பி மிக நடந்தார் நடந்துபல திக்கும் விட்டு நல்ல வனவாசம் விட்டு கடந்து சில ஊரும் விட்டுக் கடல்வழியே தானடந்தார் இரசகனிகளேற்று இரவும் பகல்கடந்தார் விசைகொண்ட ராசர் விசயாபதி கடந்தார் வாரிக்கரைவழியே வரவேணுமென்று சொல்லி சூரிய புஸ்பத் துல்யக்குறி பார்த்து கடலுட்பதிகள் கண்டுகண்டே நடந்தார் மடமடென அட்டவணை வாரி தீர்த்தமாடி கடற்பெம்மான் வாறார் காணுவோமென்றுசொல்லி திடமுடனே வாரிசென்று கண்டு தான்தொழவே முத்துக்கள் சங்கு முன்வந்து தெண்டனிட்டு வத்துப் பெரிய வைகுண்ட மன்னவரே இத்தனை நாளும் இயல்கலியனேதுவினால் சற்றும் வெளிகாணாதே சமுத்திரத்தினுள்ளிருந்தோம் தர்மப் பெருமானே சாமிநீர் வந்ததினால் நன்மையுடனாங்கள் நாட்டிலே வாறோங்காண் ஒருசொல் வரைக்கும் உவரியிலே வாழ்ந்திருங்கோ இருசொல்லாகு மட்டும் இங்கிருங்கோ என்றுரைத்து நடந்து வைகுண்டர் நாடி மிகவரவே கிடந்த நிதியும் கீழ்க்கிடந்த காசுகளும் ஒக்க உயர வந்து உளமகிழ்ந்து தானிருக்கும் திக்கென்று நாதன் சேடன் தனையழைத்து கயிலாசந் தன்னைக் கட்டாய் வரவழைத்து ஒயிலாக இத்தனையும் உள்ளேநீ கொண்டுசென்று காவல் செய்து கொள்ளு கயிலாசமென்றுரைத்தார் தேவன் சட்டமிட்டுத் தெச்சணம் போகவென்று நடந்தார் துரிதமுடன் நாரணனார் தெச்சணத்தில் நல்லநாராயணரும் நாடி வழிநடக்க வல்ல பெலமான மாமுனிவருங்கூடி எல்லோருங் கூடி இயல்வாரிக்கரையே நல்லோர்களாக நடந்தார் காணம்மானை வாதைபேயானதெல்லாம் வைகுண்டர் பாதமதை சீதமுடன் போற்றித் தீபரணைக் காட்டிவர காட்டுகின்ற தீபமெல்லாம் காணாதவர்போலே நாட்டுக்குடைய நாராயணர் நடந்தார் நல்ல குலதெய்வம் நாட்டமதையறிந்து எல்லைக் குடைய ஈசர் வந்தாரெனவே இன்றுமுதல் வம்பருக்கு இயல்பகைதான் சூழ்ந்ததென்றும் நன்று மனத்தோர்க்கு நல்லநாள் வந்ததென்றும் முற்கலியன் சட்டம் முதன்மையின்றுமுதலாய் துற்கலிபோலாகிச் சுற்றுக் குலைந்துதென்றும் கொண்டாடி நல்ல கூளி கணங்கள்சொல்லி கண்டாருடனேயும் கைதொழுத மனுவோடும் இன்றுமுதலெங்களுக்கு ஏற்கும்வகையில்லை கண்டுகொள்ளுங்கோவென கண்காட்டிப்போய்மறைந்தார்

நானில மரசு ஆள நாரணர் விஞ்சை பெற்று வாறார் தானித மான அன்பாய்ச் சகலருங் கேட்டுக் கொள்ளும் மாநிலத்தோரே யென்னை வருந்தியே தேட வேண்டாம் நானினிச் செய்ய ஆகாதென நவின்றவர் தெய்வம்போனார்

தெய்வங்களுலகிலெல்லாம் தெரிசனங்காட்டிக் காட்டி மெய்வரம் புள்ளோரெல்லாம் மேதினிவிட்டுப் போந்தார் பொய்வரம் பசாசு எல்லாம் பொன்றிய வகையாராமல் மெய்மறந் துரைகள் சொல்லி மேதினியொழிந்தாரன்றே

கண்ணான நாதன் கமலக் குருநாதன் வண்ணமுள்ள நாதன் வழிநடந்தாரம்மானை நடந்து பகவதியாள் நல்லகடலும்பார்த்துக் கடந்து பகவதியைக் கண்காட்டித் தானழைத்து நன்மையுடைய நாயகியே சுந்தரியே பொன்மோகினியே பிள்ளாய்நான் சொல்வதுகேள் வைகுண்டம் பிறந்து வார்த்தையொன்றுக்குள்ளான உய்கொண்டோர் குலத்தை உருவேற்ற வந்தேனென எந்தன் திருச்சம் பதியுமிதுமுதலாய் எந்தெந்த நாட்கும் இனிக்காணிக்கை நிறுத்தல் ஆனதினால் நீயும் ஆதியிலென்னோடு தேனினியத் தங்கையராய்த் திட்டித்த ஏதுவினால் உன்னோடு இத்தனையும் உபதேசமாயுரைத்தேன் பொன்னாடு தெச்சணத்தில் போறேன் தவசிருக்க என்று பகவதிக்கு இயம்பி வழிநடந்தார் அன்று பகவதியாள் அறைக்குள்ளடைந்திருந்தாள் நாராயணரும் நல்லசங்கத்தாருடனே சீராய் மணவைப் பதிநோக்கித்தான்நடந்தார் தென்காசி யென்ற தெச்சணா பூமியிலே கண்காட்சி சூழக் கண்ணர் மிகநடந்தார் நடந்தெம்பெருமாள் நல்ல கடல்வழியே திடந்தெளிந்த தேவர்களும் செயசெய எனநடக்க கண்டார் துவரம்பதியின் கண்ணோட்டமெல்லாம் பண்டைப் பதியின் பவிசெல்லாமே பார்த்து ஆன பதியின் அகலநீளம்பார்த்து மான பதியின் வாசலெல்லாம் பார்த்தவரும் நாடுகுற்றங் கேட்க நல்லதவஞ்செய்வதற்குத் தேடும் வடவாசல் சீவிவளர் மலையின் நேரும்வாசல்தனக்கு நிகரில்லையாமெனவே தவசுக்குகந்த தலங்களிது நன்றெனவே உபசீவனம்வளரும் உகந்தபுவியீதெனவே என்று மனதிலெண்ணி என்றன் பெருமானும் அன்று வேதமுனியை அழைத்துமொழி கேட்கவென்று வாநீ முனியே வல்லகலைக்கியானமொழி தானீகரமாய்ச் சத்தியாய்க்கற்றவனே மான முனியே மறைநாலுங்கற்றவனே ஓம்நமோ வேதம் ஓயாமலோதுவோனே பின்முன் நின்று இயம்புரைகேட்டே யுரைநீ நான் தவசிருக்க நாடுரைநீ மாமுனியே மான்தவசுக்குகந்த மாமுனியே என்றுரைத்தார்

வெள்ளாசனத்தில் விரைவாசியை நிறுத்தி கள்ளமானதையகலக் காடகற்றி-விள்ளரிய வெள்ளமாங் கருணைபெறு வேதமுக மாமுனியே உள்ளதெனக் கின்னதென்றுரை

பூரணத்தினாடிபுகழ்ந்துமுனி கொண்டாடி வாரணத்தின் கோடுவரை தேர்ந்து-காரணத்தின் கட்டுரைத்து நாடுவளம் விட்டுரைப்பேனென்றுமுனி தொட்டுப் பதங்குவித்துச்சொல்லுவான்

அய்யாவே வேத ஆதிநாராயணரே மெய்யாயுருவாய் விளங்குவோனே கேளும் பராசர மாமுனிவன் பாலனென முனிவன் விரைவாகவே பிறந்து வெள்ளிமலை நாதனிடம் தாதாவுடனே தான்வரக்கண்டீசுரரும் வாராய் முனியே மதலையுனக்கிங்கேது அப்போ முனியும் அரனடியைத் தான்பூண்டு இப்போதிவ்வாண்டு இம்மாதமிந்நாளில் பஞ்சகருணாதி பன்னிரண்டொன்பதுவும் வஞ்சக மில்லாமல் வந்தாரொருவீட்டில் பூரண நாளும் பிரிந்துறையும் நேரமதும் நாரணம் பிறந்த நல்ல நட்சேத்திரமும் யோக பலன்கள் ஒத்திருக்கும் நேரமதும் ஆகமக் கூட்டம் அடங்கிருக்கும் நேரமதும் மதிசுழி போலாகி வந்து ரதமேறுகையில் துதிமுகவன் சரசோதி பிறந்ததன்றும் இவ்வாறு கூட்டம் எல்லாமெழுந்தொருநாள் அவ்வாறு தான்கண்ட அந்நாழிகைதனிலே துற்கந்த முலாவும் தோகையொருபெண்ணிடமே நற்கந்தமுலாவி நான்சேர்ந்தேனப்பொழுது சேர்ந்த பொழுது திரண்டுநாதம்வளர்ந்து காந்தற்றழுப்பாய்க் கன்னியுடலாகிப் பெற்றாளிவனைப் பேரு வியாசரென கர்த்தா அறியக் கண்டேனிவன்தனையும் ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரமுதல் வாசு நெறிதேசு வழியறிந்த மன்னவன்காண் ஏகச் சுழிமுனையும் இகமுகி வாம்வரையும் ஆக முடம்பறிவும் அண்டபிண்டத்தறிவும் முன்பின்னாராய்ந்து மூதுணராகமங்கள் தன்னன் பிறப்பும் சாற்றத்திறவான்காண் கல்லாத கல்வி கலைக்கியானக்காண்டம் எல்லாமறிந்த இயல்முனிவனென்றுரைக்க நல்லதுதானென்று நன்முனிவனை ஈசர் வல்லமையாமென்று மாமுனியைக் கொண்டாடி என்பிறப்பு என்மாது இதுமுன் பிறப்புமுதல் பின்பிறப்பு முதலாய்ப் பேசென்றாரீசரரும் அப்போது வேத வியாசரகமகிழ்ந்து செப்புகிறோமென்று சிவனை மிகத்தொழுது மூல முதலை முத்தி முகந்துகொண்டு காலமே நின்ற கடவுளே தஞ்சமென்று ஆதிமுதலந்தம் அடங்கல் மிகவுணர்ந்து சோதி பதம்போற்றிச் சொல்லுவான் மாமுனியும் மும்மூர்த்தியான முதல்மூர்த்தி தோன்றியதும் அம்மூர்த்தி தன்னில் ஆயிளையாள் தோன்றியதும் சத்தியிலே நாதம் தான்தோன்றி வந்ததுவும் வித்தியாய நாதமதில் விந்துமிகத் தோன்றியதும் விந்திலே விட்டிணுவும் விரைவாகத் தோன்றியதும் அந்த முறைமுதலாய் அண்டபிண்டம்வரையும் சொல்லி யுகமதுதான் தோன்றும் வகைகூறலுற்றான் சல்லிக் கொடிய சண்டக்குறோணிமுதல் நீசன் பிறப்புவரை நிகழ்த்தினான் மாமுனியும் பாசனீசன்வரைக்கும் பாருலகவாறதையும் சொல்லி விரித்து சுத்தஏழாம்யுகந்தான் நல்ல யுகமதுதான் நாடுவதுஞ்சொல்லிமிக வல்ல யுகத்தில் வளரும் மனுவளமும் எல்லாமே சொல்லி ஏற்ற வைகுண்டமுதல் அந்நாட்டைச் சொல் ஒன்றுள்ளரசாளப் பொன்னான நாராயணர் பெரிய மகேந்திரனும் நல்ல வைகுண்டம் நற்பிறவியாய் வளர்ந்து வல்ல கலியுகத்தில் வாய்த்த தெச்சணாபுவியில் அடிகல்லெறிகள் அம்புவியில் அவர்பட்டு குடிதாழ்ந்த பேர்க்காய்க் கோபமதையடக்கி நல்லோர்க்காய்ப் பாடுபட்டு நல்ல உபதேசமதாய் பஞ்சகருணாதிகளைப் பம்மலாய்த் தானடத்தி கொஞ்சநாளுங்கழித்து குதித்துதித்தே வளர்ந்து ஆடவராய்ச் சமைந்து ஆண்பெண்போலேயிருந்து தேவ அறிவார்க்குத் திரவியம்போலேயிருந்து பச்சைக் குழந்தை பருவமுன்னாகியவர் மெச்சக் கொடியாட்கு மேவும்பருவம்போலும் சுத்தக் கிழவரைப்போல் சூரப்பிராயமுமாய் மெத்தப் புலம்பி விழலும்பிராயம்போலும் நாலு பிராயம் நாளதுக்குள்ளேயெடுத்து கோலு கையேந்திக் குன்னும்பிராயம்போலும் பார்க்கப் பிராயமுமாய்ப் படுக்கக் கிழவனுமாய் தார்க்கத் திறவனுமாய்ச் சந்திக்கிசைந் தவனுமாய் காக்கக் கருத்தனுமாய்க் கர்த்தாதி கர்த்தனுமாய் ஏக்கத் திருத்தனுமாய் இவர்சமைந்திவ்வுகத்தில் தர்மத்தால் கலியைத் தன்னந்தன்னால் கரைத்து கர்மத்தை யீடழித்துக் காந்தக்கோலுமெடுத்து நேரோரைக் காத்து நிசமாகவேயெழுப்பி ஏராரைக் கொன்று ஏழ்நரகத்தும் பூத்தி உகத்துக்குகம்வழக்கு எல்லாமொருதலத்தில் தொகுத்து நடுத்தீர்ப்புச்செய்து மிகத்தெளித்து ஆகாத்த பேரை எல்லாம் நரகமதில் வாகாகத் தள்ளி வாசல்தனைப் பூட்டி சித்தத்துக் கேற்ற செடத்தோரைத் தானெழுப்பி பத்தரைமாத்துற்றப் பைம்பொன்னிறப்பதியில் சாகா வரங்கள் சனங்களுக்கேகொடுத்து வாகாக நல்ல வரிசை மிகக்கொடுத்து ஆண்பெண்ணுடனே அதிகவாழ்வுங்கொடுத்து காணக் காணக்காட்சிக் கனமாய் மிகக்கொடுத்து செல்ல வைகுண்டர் சீமையைம்பத்தாறதையும் அல்லலகற்றி அரசாள்வாரீசுரரே மும்மூர்த்தியெல்லாம் ஒருமூர்த்தியாயிருக்கும் எம்மூர்த்தியெல்லாம் இயல்மூர்த்தி போலிருக்கும் வைகுண்டப் பெம்மான் வாய்த்த செந்தூர்க்கடலில் மைகொண்ட நாதன் வந்து பிறப்பதுதான் வளர்ந்துதவம் செய்வதுவும் வாய்த்த புவிதெச்சணமே குழந்தை வைகுண்டர் குமாரப்பிராய மட்டும் கோலாகலனாய்க்குருவாய்ச் சமையுமட்டும் நாலாஞ்சொரூபம் நடத்தும்வரை தெச்சணமே பொல்லாதெல்லாமழிந்து பூவர்கொலுவாகுமட்டும் எல்லா வழக்கும் இருப்புந்தெச்சணாபதியே

ஆதியிலுதித்த வாறும் அரிசிவன் பிறவி வாறும் ஓதினான்யுகங்கள் வாறும் ஒவ்வொருஅசுரன் வாறும் நீதிய மனுக்கள் வாறும் நீதமாங் குண்டர் வாறும் தீதிலாத் தர்ம ஞாலச் சிறப்புட வாறுஞ் சொன்னான்

அறம் பழுத்த கனிரசமே கலியறுக்க மானிடராய் மகரமதுள் வைகுண்டர் தோன்றி திறம்பெருத்தோமென்று கலிபிடித்து அவரவரே நமக்குமேல் ஒன்றுமில்லை யென்றார் பரம்கனிதான் கலியதனுள் ஐந்து ஒன்று தவம் கழித்து கலிதன்னால்சாக மனம் பொறுத்த சான்றோரைக் காப்பேனென்றார் வான்முனியும் நான்முகனும் வரமேயீன்றார்

இவ்வாறு எல்லாம் எடுத்துமிக மாமுனிவன் அவ்வாறெல்லாமுரைத்து அகன்றானே மாமுனிவன் துதிகொடு தன்னால் சிவகோவேங்கிரியில் பதியச்சிவமும் பதியென்றாரன்போரே நந்தீசுரரும் நாட்டினாரவ்வுரையை இந்தப் பழமொழிபோல் இசைந்தப் புவிமகிமை தெச்சணா பூமி சிவபூமி நல்லதுதான் மிச்சம் வியாசர் முன்மொழிந்த தலமுமிது ஆனதாலிப்பூமி ஆகுந்தவசிருக்க கோனாங்குமரி குடியிருக்குமிந்நகரு சங்குத் துறைமுகத்து சதாகோடியற்புதங்கள் எங்கு மகிழ இயல்புபெற்ற திந்நகரு மங்கைப் பதிநகரு மணவைப்பதிநகரு கங்கைக் குலநகரு கண்ணாளர் தன்னகரு பஞ்சவர்களஞ்சு பார்மன்னர் தன்னகரு சஞ்சீவி தன்னகரு தவத்தோர்க் குருநகரு தெய்வகுல மன்னர் சிறந்தக் குருநகரு சைவ முனிமார் தவத்துக்கிதுநகரு மேலோகக் காட்சி விளங்கிருக்கு மிந்நகரு சாலோக சாமி சார்ந்திருக்கு மிந்நகரு அரம்பை ஸ்திரீமார் ஆராடுஞ் சுனைநகரு பரம்பெரிய சேடன் பவிசுக் குருநகரு வாவியுறைநகரு வைகைக் குருநகரு தாவிக்குலாவும் சந்தப்பட்சி தன்னகரு சொல்லஎளிதல்ல தெச்சணாபூமிவளம் நல்லதிந்த நாடு நமக்குகந்த நன்னாடு பசுவும் புலியும் பாவித்திருந்தநகரு கசுவு மெந்நேரம் கரைபுரளும் நன்னாடு அந்நாடு நாடு அரனாட்டுக்கொப்பிடலாம் பொன்னாடு நாடு புரந்தரநாட்டுக்கீடாம் தவம்பெற்றோர் வாழ்ந்த தண்மைக்குருநாடு பவமற்றோராகி பாவித்த தின்னாடு நல்ல மலைவளரும் நாஞ்சில் வளநாடு சொல்லுருசியானச் சிறந்த குருநாடு ஒருநாடு மிந்நாட்டுக் கொவ்வாது வுத்தமரே திருநாடு ஈசர் தினமுறையும் நன்னாடு சம்பத்துக் கேற்ற சகல குருநாடு இன்பம் வளரும் இசைந்த குருநாடு ஆதியொருமுனிவன் அடவில் தவசிருக்க நீதியறியவென்று நிலமலனுந்தேவியுமாய் கற்றாவுங் கன்றதுபோல் கறைக்கண்டர் வேசமிட்டு பற்றாண்மை பார்க்கப் பாரில் மிகமேய்ந்து அந்த முனியடுக்கல் அன்றிராப் போயடைந்தார் சிந்தனருளால் சீறி யொருகடுவாய் பசுவையுங் கன்றதையும் பார்த்து மனமகிழ்ந்து இசுவாக வந்தீர் இரையாய் நமக்கெனவே என்று கடுவாய் இயல்பசுவின் கன்றதையும் தின்றுவிட வென்று சென்றுப் பிடித்திடவே அப்போ பசுவும் அந்த முனியடுக்கல் இப்போதென்கன்றை இந்தக் கடுவாய்பிடிக்கு மாமுனியே நீயும் வந்தொரு சத்தமிட்டால் தாம்பயந்து கடுவாய் தன்னாலொதுங்கிவிடும் வந்துசொல்லாதாலும் மாமுனியேயிங்கிருந்து உந்தித்தொனியால் ஒருசத்தங்கூறினையால் என்பிள்ளையென்றனக்கு இப்போது உதவுமென்றார் உன்னுள்ளமுமேற்று உடையோன் பதம்பெறுவாய் என்று பசுவும் ஈதுரைக்க மாமுனியும் ஒன்றுமுரையாடாது உள்ளங்கவிழ்ந்திருந்தான் கடுவாயுங்கன்றைக் கயிலையங்கிரிதனிலே வெடுவாகக் கொண்டு விட்டது காணம்மானை பசுவும் வனமறைந்து பார்முனிவன் காணாமல் விசுவாசமாக மேலோகஞ் சேர்ந்ததுவே பின்னுஞ்சில நாள்கழித்துப் பேர்முனிவன் சிந்தையிலே முன்னும் பசுமுறையால் முகுந்தன்பதங்காணாமல் இத்தோசங்கழிக்க இன்னுஞ்சில நாள்வரையும் சித்தத்தோடொத்தத் தெச்சணாபூமியிலே இரந்து குடித்து இத்தவமேபுரிந்தால் பரந்தணியும் வேதன் பதமடையலாமெனவே உத்தரித்து மாமுனிவன் ஒருநொடியிலேயிறங்கி திருப்தியுடனேகித் தெச்சணா பூமிவந்தான் வந்து இரந்து வருசமொன்றானதின்பின் முந்து நின்ற காவில் உவந்து தவசுநின்று பரமன் பாதாரப் பவிசு மிகவடைந்து வரமருளப்பேறுபெற்று வாழ்ந்திருந்தானம்மானை அப்படியே தோசம் அகன்று அறம்வளரும் உற்பனம்போலொத்த உகந்ததெச்சணாபதியே

தெச்சணா புரியினீதம் செப்பிடத் தொலையாதையா மிச்சமாம் புவியிதாகும் மேவலர்க் குகந்த நாடு பச்சமால் மகனே நீரும் பண்ணுறத் தவசு ஏறும் அச்சமும் வாராதையா என்றடிபணிந்து நின்றான்

நல்லது தானேயென்று நாரணர் தயவு கூர்ந்து வெல்லமர் மணவை வாரி மேன்முகமதிலே நின்று அல்லல்நோய் பிணியலாம் அறமதால் தண்ணீர் தன்னால் தொல்லைநோய்த்தீர்த்திடதெச்சணாபுவியில் வந்தார்

வந்தவர் தலமும் பார்த்து வழியினற்குலமும் பார்த்து சந்தமாய் மகிழ்ச்சை கூர்ந்து சாமியும் முனியைப் பார்த்து இந்த மாநகரில் வாழும் இராசனுமறிய வென்றே விந்தையாயறிவுவொன்று எழுதியே யனுப்புமென்றார்

கலியரசனுக்கு வைகுண்டர் வருகையை உணர்த்தும் நிருபம் - திருவாசகம்-3 வாலராமச்சந்திர சூரிய நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றி, தர்மம் நித்திச்சு, காணிக்கை கைக்கூலி காவடி என்றே திருச்சம்பதி முதலாய் வேண்ட அவசியமில்லையென்று நிறுத்தலாக்கி, உகஞ் சோதித்து ஒரு குடைக்குள்ளாள 1008 ஆம் ஆண்டு மாசி 20ல் கடற்கரையாண்டி நாராயணம் பண்டார வைகுண்டமென நாமம் கூறி, எளிய கோலமெனப் பாவித்தார். தெச்சணம் பள்ளி கொண்டிருந்து, தர்மமாகத் தரணி யாபேர்க்கும் தண்ணீரினாலே சஞ்சல நோய் கர்மம் வற்மம் வாதை கோதை பயங்களையும் பிறவி நாசமும் பொய் வினை சஞ்சாரமும், பீடை கோடை வாடை தீர்க்கவும், பிள்ளையில்லாத பேர்க்குப் பிள்ளை கொடுக்கவும், கண்ணில்லாத பேர்க்குக் கண் கொடுக்கவும், தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுக்கவும், சாம்ப சதாசிவ சாமி மூவரும் சற்குணமாகியே தன்னாலொரு பண்டார வேசமாகிச் சமைந்து, சாதி உயர்கொண்ட சக்திமாதர் வழியிலே வந்த சான்றோர்களை தர்மமாய் வைத்தாள சகலகுண நாராயண தீரசம்பன்னர் சாதி வைகுண்டமாய் பிறந்திருக்கிறார். ஆனதினால் பூமியிலே அடிபிடி அநியாயம் இறை தெண்டம் கைக்கூலி அவகடம் பொய்ப் புரட்டு அவர் செவியில் கேட்க வொண்ணாது. மகாகோடி தர்ம பாக்கிய சாலியாய்ப் பூமியிலே அதிகப் பாசமாய் விரித்து அவரருகிற் சூழ அலங்கார தர்ம மணியாய் நிறுத்தி அந்தர வீடு லாடந்திறந்து அதன்வழி அரன் நடனம் திருநடனம் ஆடல் பாடல் அங்ஙனே கண்ணோக்கி சகலதும் பார்த்து ஆராய்ந்து இருப்பதால் அவரவர் நினைவில் இருக்கிற தெல்லாம் அவருக்குத் தெரியும். அது கண்டு பதறி அவர் இட்டிருக்கிற சட்டம் போல் நடந்து கொள்ளவும். அங்ஙனே நடக்கவில்லையெனில் அவர் நிச்சித்திருக்கிற தேதியில் நடக்கும் படியே வரும். அன்பான மனுக்களுக்கு கொல்லம் ஆண்டு 1008 மாசியில் தெச்சணம் பள்ளிகொண்ட அய்யா நாராயண வைகுண்டர் தர்மம் நித்திச்சு எழுதின அறிவென்று அவனி அறியும்படி மாமுனி எழுதி அயச்சான். அய்யா நாராயணர் தர்மம் நிச்சயித்து தவசிருக்கிற படியினாலே, இன்று முதல் அவர் நிச்சியத்திருக்கிற நாள் வரையும் பூசை,புனக்காரம், சேவித்தல், அர்ச்சனை, ஆராட்டு, நீராட்டு, தீபாரணை, சாந்தி, காளாஞ்சி, கைவிளக்கு, காவடி, காணிக்கை, தெரு முகூர்த்தம், கோபுர முகூர்த்தம், திருநாள் முகூர்த்தம், தேரோட்ட முகூர்த்தம், திருக்கொடி முகூர்த்தம், கொடிமர முகூர்த்தம், குரு முகூர்த்தம், குரவை, குளாங் கூட்டம், கொலுவாரபாரம், ஆயுதம், அம்பு, அச்சுநடை, ஆனைநடை, அலங்காரம், மஞ்சணைக் குளி நீராடல் முதலுள்ள நன்மை சுபசோபனம் வரையும் அவர்க்கானதல்ல. ஆனதால் இதற்காக வீணில் செலவிடாமலும் விறுதாவில் நரகில் விழாமலும் இருக்க கடவுள் நாராயண வைகுண்டசாமி திரு வாக்கு உபதேசக் கருணை வாசகம் என்று எவரும் அறியவும்.

நாதன் குருநாதன் நாராயணநாதன் மாதவனுந்தெச்சணத்தில் மாமருந்து மாவடியில் மணவைப்பதிமுகத்தில் மாதுகன்னிப் பார்வையிலும் இணையானப் பஞ்சவரில் ஏற்ற அரிச்சுனனும் மணமான நாதன் மகாபரனைத் தானாடி வணங்குந்தவத்தால் வந்ததாமரைப்பதியில் தெச்சணா மூலை தென்வாரியற்றமதில் மிச்சமுள்ள தேவர் முழங்கிக் குரவையிட தேவர் திசையெட்டும் செயசெய எனநெருங்க மூவரதிசயமாய் மோடுவழி தாள்திறந்து ஆரபாரத்துடனே அவர்கள் வந்து பார்த்துநிற்க வீரநாராயணரும் வித்தாரத்தெச்சணத்தில் பள்ளிகொண்டாரென்று நாமம் பரந்திடவே துள்ளியே சொரூபம் சுற்றினாரம்மானை வைகுண்டமென்று மனுவோரறிந்திடவே மெய்கொண்ட நாதன் மேவிநின்றார் தெச்சணத்தில் யாம மிகக்கூறி அதிகத்திசை எட்டிலுள்ள ஓமப்பசாசுகளை ஒதுங்கவுபதேசித்தார் மேல்நடப்பையெல்லாம் வித்தார நாரணரும் தூல்நடப்பாகத் துறந்துதுறந்தே படித்தார் கண்டவர்களெல்லாம் கருத்தோடறியாமல் வண்டப் புலப்பமென வாக்குரைத்தே போனார் பத்துமாதம்வரையும் பார்நடப்புள்ளதையும் முற்றுமொருகுடைக்குள் உலகாள்வதும் படித்தார் எல்லா நடப்பும் இவர்படித்ததின்பிறகு வல்லாண்மையான வைகுண்டப்பெம்மானும் உகஞ்சோதிக்க உற்றார்காணம்மானை தவமே தவமெனவே தானிருந்து வையகத்தில் பொறுதி சதமாய்ப் புண்ணியனார் தானிருந்து உறுதியுடனையா உகஞ்சோதிக்கலுற்றார் நாராயணரும் நல்லவைகுண்டமெனப் பேரானதுநிறைந்து புண்ணியனார் தெச்சணத்தில் மனுநிறமாய் வந்துமனுவைச்சோதித்தெடுக்கத் தனுவையடக்கித் தவசிருக்காரம்மானை

உலகினில் மனுவாய் வந்த ஓரேழு லோகத்தார்க்கும் தலைமுறைவினைகள் போக்கிச் சடலத்துள்ளூற லோட்ட மலைசெந்தூரலையினுள்ளே மகரத்துள் விஞ்சை பெற்று அலைகடற்கரை ஆண்டி வைந்தரெனப்புவியில் வந்தார்

வந்தந்த நாட்டி லுள்ள வன்குற்ற மதனைக் கேட்க நந்தகோன் விபூதி சாற்றி நாடிய தவங்க ளேற்றி முந்தநாள் மூவர்க்கெல்லாம் முதன்மையாய்ச்சாதித்தேறி சந்ததஞ் சாகாவிஞ்சைத் தலைவனாய்ச்சமைய வென்றே

நீதிய ரோமம் வீசி நினைவொன்றைக்கருணை வாசி சாதிகளுரைக ளாற்றிச் சடத்துற வாசையற்று வாதியாங் காரமற்று மலசல மதங்களற்று ஆதியைக் கருணை நாட்டி அவர்தவம் புரிந்தாரையா

ஆசையாம் பாச மற்று அனுதாரக் குளாங்களற்று மாசதாம் வினைகளற்று வாக்கலங் காரமற்று நீசமாம் கலியையற்று நீணிலத் தாசையற்று ஓசையாம் வெளியைத் தாண்டி ஒருவனைக்கண்டாரே

கண்டவர்ப்பாலேற்று கண்சுழி முனையில் நாட்டிப் பண்டவர் செகலில் பெற்ற படிமுறை தவறாநாட்டிக் கொண்டவர் லோகந்தன்னைக் குவியவோர் தலத்திலாக்கி இரண்டது மறியவென்றே இவர்தவம் செய்யலுற்றார்

மனுஅவதாரங் கொண்டு வந்தவர் தவமே செய்தார் தனுமனு வோர்களெல்லாம் தழைத்து நீடூழி வாழ்ந்து வனுதர்மப் புவியைக் கண்டு மாள்வரா வாழ்வு வாழ துணிவுடன் மனதிலேற்றி சூரியத்தவசு நின்றார்

முற்பிதிர் வழிகளெல்லாம் முதன்மைபோலாகவென்றும் கற்பினைப் படியே தோன்றிக் கலியுகமதிலே வந்த அற்புத மடவா ரோடும் ஐவர்தம் குலங்களோடும் செப்பியச் சாதியெல்லாம் செயல்பெறத் தவசியானார்

இத்தவமதில் ஈதெல்லாம் இயல்புடன் வசமே யாகக் குற்றமே செய்வோனீசக் கொடுகலி வழிகள் சாகக் கர்த்தனாதி கர்த்தனாகக் கலியுகத் தீர்வையாக உற்ற வைகுண்ட சுவாமி ஒருகுடைக்கரசும் பெற்றார்

நாராயணரே நல்ல வைகுண்டமென சீராக தெச்சணத்தில் சிறந்த தவஞ்செய்யலுற்றார் ஆறு வருசத்துள்ளே அவர்தாம்நினைத்த வாறு வகையெல்லாம் வந்து வழிப்படவே நின்றார் தவசு நெடியநாராயணரும் குன்றாக் கடலில் கொண்ட வழிப்படியே கடலில் மிகவே கண்டதெல்லாம் விள்ளாமல் உடலுள் சூட்சம் ஒருவருக்குங்காணாமல் அகமதுவே பூசித்து அதிகத் தவமிருந்தார் தவப்புதுமை சொல்லித் தானுரைக்கக் கூடாது ஈசர் முன்னாளில் இருந்தாரொருதவசு வாசக்குழலுமையை மதலையுருவாக்க வேட்டுவனுக்கீந்த விஞ்சையை நெஞ்சில்வைத்து கூட்டுக் கிளியைக் குழந்தையுருவாக்கவென்று அத்தவந்தான் போதாது அய்யா இவர்தவத்தே கற்றைக் குழலுமையாள் கரியமுற்காலமதில் சூரனெனவந்தத் தோசப்பொல்லாதவனை வீரத்தனமாய் வெட்டிச் சரமறுக்க ஆறு முகமாய் அரியுமோர் ஆண்பிள்ளையாய் பேறுடனே நமக்குப் பிறக்கவேணுமெனவே சரவணப் பொய்கையிலே சாம்புவனை நினைந்து அரகரா அவள்தான் அன்று நின்ற தவமும் இவர் தவத்துக் கொவ்வாது ஈசரரிலும் பெரிதாய் அவர் தவமுமொவ்வாது அய்யா இவர் தவத்தே சீதை தவசியதும் செப்பவொண்ணாதித்தவத்தே நாத அரிச்சுனனும் நாட்டத் தவத்ததிலும் எத்தனையோ கோடி இவர் தானிருக்கும் தவம் வித்தரிக்க வென்றால் வெகுமணிகள் சென்றிடுங்காண் சொல்ல எளிதல்லவே சொன்னாலுலகிலுள்ளப் பொல்லாதபேரும் பொருந்தியிதைக் கேட்டாக்கால் பாவந்தொலைந்திடுமே பாவிகட்குமோர்நினைவாய் நாமிருப்பதுவோ நாலு திரையதனுள் ஆமவரே கண்டு அறிந்தாலதுவீரம் இச்சொரூபத்துள்ளே இதுவிதிக்க வொண்ணாது வச்சுகந்து பார்ப்பீரால் வழிதெரியுமிவ்வேட்டில் என்னமோவென்று எண்ணம்வைத்துக் கேட்பீரால் அன்னமுதலற்று ஆக்கினைக்குள்ளாவீர் நல்லவர்கள் நல்லாவார் நானுரைக்கக்கேளம்மானை செல்லத் திருகேட்கச் செப்புகிறார் நாரணரும் சீமையைம்பத்தாறு தேச நருட்களையும் நேர்மை யொழுங்காய் நிமைப்பொழுதில் வந்திடவே செல்லவைகுண்டச் சீமானுமப்பொழுது வல்ல தவமும் மனதுளராதேமுடித்து உலக நருட்கள் ஒக்கவொருமிக்கவரத் தலமளந்த நாதன் தானினைத்தாரம்மானை வடக்குக் கிழக்கு வடமேற்கு நேர்மேற்கு நடக்கும் படியே நல்லதிக்கும் நாற்றிசையும் அடங்கல் குடியிருக்கும் ஆட்களெல்லாம்வரவே சாணார் முதலாய்ச் சாதிபதினெட்டையுமே நாணாமலோடிவர நாராயணர் நினைத்தார் நினைத்தவுடனே நிமிசம் பொறுக்காமல் தினந்தோறும் வந்து சேரும் நருட்களது எண்ணக் கூடாது எவராலுமன்போரே திண்ணமுள்ள சாதி செப்பொண்ணாதம்மானை சாணாரிடையர் சாதி வணிகருடன் நாணாத காவேரி நல்லதுலுப்பட்டர்முதல் சூத்திரன் பிரமா தொல்வணிகன் பறையன் ஊத்திர நீசன் உழவனுடன் குறவன் கம்மாளனீழன் கருமறவன்பரவன் வெம்மா நசுறாணி வேகவண்டரிடையர் சக்கிலியனோடு சாதிபதினெட்டுகளும் முக்கியமாக ஓடிவந்தாரம்மானை ஆகாயங்காணாது அறைக்குள்ளடைத்திருந்த வாகா ஸ்திரீமாரும் வந்தார் காணன்போரே கிழவன் முடவன் கெற்பஸ்திரீமாரும் இளவயசு கொண்ட ஏந்துபசலை முதலாய் ஒக்கவே வந்தார்கள் உடையவனார் தன்னிடத்தில் வந்த நருட்கெல்லாம் வாய்த்த வலுவியாதிமுதல் சிந்தையுடன் தன்னால் தீர்த்தாரே தர்மமதாய் ஐம்பது வயதாய் அரைதளர்ந்தப்பெண்ணாட்கும் சம்பத்துக் கேற்ற சந்ததிகள் தான்கொடுத்தார் உடல்தனமில்லாது உருவழிந்த பெண்ணாட்கும் சடலமுருக்கொடுத்துச் சந்ததியுங்கொடுத்தார் பிறவிக்குருடூமை பேச்சறா நாக்குழறல் திறவியொளிபோல் திறமும் மொழிகொடுத்தார் தர்மமில்லாப் பாவிகட்குத்தாண்மை மிகக்கொடுத்தார் கர்ம வியாதிகளால் கால்கள் மொட்டிக் கைகள்மொட்டி அந்தமொட்டியெல்லாம் அறத்தாலதைத்தீர்த்து சந்தமுடன் கைகால் தானாக்கித் தான்கொடுத்தார் உடலையுருக்கும் உற்ற சயஇருமல் குடலைப்புரட்டும் குன்மவாய்வு முதலாய் தீர்த்துக் கொடுத்தார் தேசத்தோர் கண்டுமிக பார்த்து மகிழ்ந்துப் பச்சமுற்று வந்தனர்காண் கர்த்தாதி கர்த்தன் கடவுளாரென்றுசொல்லி எத்தேசத்தோரும் இங்கு வந்தாரன்போரே பதிணென்சாதிகளும் பண்பாயொருதலத்தில் விதிவந்துதென்று மேவிக்குலாவியிருந்தார் மேவிக்குலாவி மிகவேயொருதலத்தில் ஆவிநீருண்டு அகமகிழ்ந்தாரம்மானை நொம்பலங்களெல்லாம் நிசமாகத் தீருவதும் அன்பாயுலகில் ஆனதேசத்தோரும் ஒருதலமாய் வந்து ஒன்றாய்க் குவிகிறதும் கருதினமாய்ப் பார்த்து அவர்கள் மிகவுரைப்பார் முன்னாள் மொழிந்த முறையாகமம்போலே இந்நாள் சமைந்திருக்குது என்று மகிழ்ந்துரைப்பார் வைகுண்டராசர் வருவார்தான் பூமியிலே மெய்கொண்ட ராசர் மேதினியில் வந்தவுடன் சாதிபதினெண்ணும் தலமொன்றிலே குவிந்து கோதிக்குளிக்கும் ஒருகிணற்றிலல்லாது கர்மவியாதி செவிடு கண்குருடூமையெல்லாம் தர்மத்தால் தீர்ப்பார் சகலவுயிரானதுக்கும் செல்வமுண்டாகும் சீமானார் வந்தவுடன் அல்லல் மிகத்தீரும் அவரையறிந்தவர்க்கு எளியோர் வலியோர் எல்லாமொருப்போலே பழியான பேச்சுப் பாரினில் கேட்கவிடார் தேசமெல்லாம் பரக்கும் சீமானார் வந்தசெய்தி தோசமெல்லாமகலும் சுத்தமாய்க் கண்டவர்க்கு சார்ந்தவர்க்கு சாந்தனுமாய்த் தர்மங்கொடுத்தருள்வார் சேர்ந்தவர்க்கு நல்ல செல்வமுண்டாகுமென சொல்லியிருந்தாகமத்தின் துல்லியச்சுருதிப்படி நல்ல வைகுண்டர் நாட்டில் வந்தாரென்று சொல்லி சாதிபதினெண்ணும் சடல வரவுமற்று ஆதிவைகுண்டர் அடிவீழ்ந்தேத்தியவர் எல்லாமொருதலத்தில் இரண்டு மனுப்போலே அல்லோரும் வந்தோர் ஆவிநீருண்டிருந்தார் அல்லாமல் முன்னாள் ஆகமத் தின்படியே எல்லாமுன் வியாசர் எழுதின சொற்படியே தெய்வச்சான்றோர்களுக்குச் சேர்ந்த வியாழமது மெய்வகையாய் வந்து மிகத்தோன்றியே யிருக்க இன்னமிவர் வழியில் இயல்பாய் மணமுகித்து மன்னர் வைகுண்டர் மகராசராகியவர் சீமையைம்பத் தாறும் சொல்லொன்றுக்குள்ளாக்கி மேன்மைச்சான்றோர்க்கு முத்திரி செங்கோல்கொடுத்து தாழ்வில்லாச்சான்றோரைத் தர்மபதி மீதில்வைத்து ஆள்வதுவும் நிசமே ஆதியாகமப்படியே நாராயணர்க்கு நாள்பகையாய் வந்தவர்க்கு போராதக்காலமென புராணமுரைக்குதுஎன்று சொல்லியுலகோர் தொல்புவியில் கொண்டாடி பல்லுயிருமறிந்து பண்பாய் மகிழ்ந்திருந்தார் மகிழ்ந்து சிலநாள் வைகுண்டர் பாதமதில் மிகுந்துபல சாதிமுதல் மிகவந்துரை கேட்டார் வந்த நருளறிய வைகுண்டர் வாய்திறந்து சொந்தமுடன் வசனம் சொல்லிமிகக் கூறலுற்றார்

திருவாசகம் 4 கொற்றவரும் மாண்டு குறும்புகள் மிகத்தோன்றி, உற்ற துலுக்கன் உடன் வந்துடனோடி, மற்றொரு பத்தாமாண்டில் வைகுண்டமாக வருவோமென்ற ஆகமத்தின்படி 1008 ஆம் ஆண்டு மாசி 20ல் கடற்கரையாண்டி நாராயண வைகுண்டம் பிறந்து கொண்டிருக்கும் நட்சத்திரத்தில் குதிச்சிக்கொள்ளுந் தன்னே. மாளுவது மாண்டு கொள்ளும், முழிக்கப்பட்டது முழிச்சி கொள்ளும், முழிக்கப்பட்டது கண்டு கொள்ளும். ஒரு நெல் எடுத்து உடைக்க நாடு கேட்டுக் கொள்ளும், இரு நெல் எடுத்து உடைக்க நாடு தாங்காது, வானமும் பூமியும் கிடுகிடென்று ஆடும், வானத்திலிருக்கிற வெள்ளிகள் ஆலங்காய் போல் உதிர்ந்திடும். மலைகள் இளகிடும், பதி எழும்பிடும், முழிக்கப்பட்டது கண்டு கொள்ளும் என்று நருட்களறியும் படி உபதேசித்தார். அதை உலகோர் அறிந்தும் கேட்டும் முன்னுள்ள ஆகமமும் இவர் சொல்கிறதுஞ் சரியென்று ஒத்துக் கொண்டு இவர்தான் வைகுண்ட சுவாமி யென்று கேட்டறிந்து, இவர் தலத்திலே வந்தார்கள். நாராயண வைகுண்ட சுவாமி, பேய் பல சீவசெந்து ஊர்வனம் புற்பூண்டு கற்காவேரியறிய உபதேசித்தார். வல்லாத்தான் வைகுண்டம் பிறந்து, தர்மம் நித்திச்சு நாடு குற்றங்கேட்க நாராயணம் சிறையிருக்கும்போது, காவடி காணிக்கை கைக்கூலி ஆடு கிடாய் கோழி பன்றி இரத்தவெறி தீபதூபம் இலைப் பட்டை இது முதலானது வேண்ட அவசியமில்லை அதையறிந்து நீங்களும் ஒதுங்கி இருங்கோ வென்று உபதேசித்தார். உடனே அதுகளெல்லாம் அய்யா ஆணை நாங்கள் ஒன்றும் ஏற்க மாட்டோமென்று சொல்லிப் போனார். நாராயண வைகுண்ட சுவாமி ஒன்றரையாண்டு கழித்து உகஞ் சோதித்து வரும்போது, பேய் செய்கிற அநீதம் பொறுக்காமல் மானிடர் வைகுண்டசுவாமியிடம் வந்து ஆவலாதி வைத்தார். உடனே வைகுண்டர் திட்டிச்சுப்பார்க்கும் போது பேய் செய்கிறது அநீதம் என்றறிந்து பேய்களுக்குள்ள முன் ஆகமக்கணக்கைச் சோதித்து பேயை எரிக்க மனதிலுத்தரித்தார்.

நாரணவைகுண்டர் பேய்களை எரித்தல்

பேய்கள்தான் பிறந்தவாறும் பெருவரம் பெற்ற நாளும் மாய்கையால் உலகில் பேய்கள் வந்தநாளும் பார்த்து ஞாயமாய் நடுவுங் கேட்டு நாமதை யெரிக்க வென்றே ஆயர்முன்னெழுத்துங் கொண்டு அருமுனிவாயென்றார்

வரவென வுரைத்த போது மறைமுதல் வேதன் வானோர் துரகத மீதோடாவிச் சீக்கிரம் வந்தாரங்கே பரமருள் வைந்த ராசர் பார்த்தவர் தன்னை நோக்கி விரைவுடன்பேய்க்கு முன்னாள் விதிதனைப்பாரு மென்றார்

விதிதனைப் பார்த்து வேதன் விளம்புவார் வைந்தரோடு துதிகொடு எழுத்து மென்றன் சுருதியுங் கேண்மோ அய்யா ஆதிநாராயணர் தானிந்த அழிகலியுகத்திலேதான் பதி வைகுண்ட மென்று வந்தன்றே யவர்கள் போனார்

பேயொடு பிசாசு கூளி பொறாமையுங்கலியும் நீசம் மாய்கையொடு கபடு கள்ளம் மனக்கறுப் புகங்கள் தீர்ப்பு பொய்யொடு வஞ்சம் பிழை பொல்லாப்பென்றதெல்லாம் வாயொடு வாயால் கெட்டு மறுபிறப்பில்லாப் போனார்

நாரணர் வைகுண்டமாகி நாட்டினில் வந்த அன்றே காரண மெல்லாமாச்சு கலியுகமழிந்து போச்சு பூரண வேத நூலும் புராணம் முன்னாகமங்கள் சாரமுங் கெட்டுப் போச்சு சதாசிவம் வைகுண்ட மாச்சே

அழிவதையழித்துப் போட்டு அவரொருசொல்லுக் குள்ளாய் சுழிவரை யெழுத்தையூனி தெய்வமாதவருமாகி வழிதனில் வன்னியாகி வகுத்திடும் மகவோராகி அழிவில்லாப் பதியாள்வது ஆகமத்துரைதானென்றார்

ஆனதா லாகாதென்ற அவ்வகைக்கிதுநாள் சாக ஏனமுமிதுதா னென்று இயம்பிட வேதன் தானும் மானமாய்க் கேட்டு வைந்தர் வானவர் சாட்சி யென்று தானவர் கணக்கி லூனி சத்தியாய்ப் பதித்தாரன்றே

கணக்கிலேயெழுதிக் கொண்டு கருத்தினிலடக்கி வைத்து இணக்கியேயவரையெல்லாம் இலக்கதிலே கொல்வோம் பிணக்கியேகொல்லேனான் பிசகில்லாவழியே செய்வோம் குணக்கில்லாச் செய்வோம் பாரும் கோகிரித்தேவரெலாம்

உகசிவா வானோர் வேதன் ஒருவரும் போக வேண்டாம் வகையுடன் நான் செய்யும் வழிதனைப்பார்த்துக்கொள்ளும் இகபரன் முதலா யிங்கே இருமெனச் சொல்லி வைத்து பகைசெய்த கழிவையெல்லாம் எரிக்கவே பரனங்குற்றார்

ஈசர்முதல் வானோர் எல்லோரும் போகரிது வாச மலரோனும் மற்றோரும் போகரிது என்று இவர்களையும் இவர்சூழ அருகிருத்தி அன்றுபேயெல்லாம் அவர் கொண்டுவர நினைக்க உடனேயுலகமதில் ஊர்ந்து திரியும்பேய்கள் திடமே குளறி சிந்தை மிகக்கலங்கி பேய்களொருதலத்தில் பிரமாணமாய்க்கூடி மாய்கைத்தொழில் குளறி மனது மிகஅளறி சீலமுடனுரைத்த சிவவைந்தராசர்மொழி ஏலமேநாம் கேட்டு இருந்திலமே எல்லோரும் என்னவோவென்று எண்ணி நினைத்ததெல்லாம் சன்னைபோலாகாமல் சாக விதியாச்சே அய்யோ கெடுத்தோம் அவர்பேரில் குற்றமில்லை பொய்யென்றிருந்தோமே பெரியோருரைத்ததெல்லாம் நம்பேரில் குற்றமல்லால் நாரணர்மேல் குற்றமில்லை தம்பேரில் குற்றமல்லாமல் சாமிமேல் குற்றமில்லை நமக்கு முன்னாளில் நாரத மாமுனிவர் எமக்கு யாமியங்கொடுத்து அதிகவரம் வேண்டித்தந்தார் அவரிடத்தில் நாமள் எல்லோரும் போயுரைத்தால் சிவனிடத்தில் வந்து செய்திகேட்டேயுரைப்பார் போவோம் வாருங்கோ பேய்களொருப்போலே கோவேங்கிரிதனிலே குடியிருக்கும் மாமுனிவர் அண்டையவரணுகி அபயம் முறையமென்றார் கண்டந்த மாமுனிவர் கழிவையெல்லாமமர்த்தி அபயமிட்டதேது அலகைகளே சொல்லுமென்றார் கௌவை துயரமுற்ற கழிவெல்லாஞ்சொல்லலுற்று மனுவுருப்போல் வையகத்தில் வைகுண்டம் வந்திருந்து இனியுங்களையெல்லாம் எரிப்போமிப்போதெனவே வரங்களையும் வைத்து மாண்டுபோங்கோவெனவே துரத்தனமாயெங்களையும் துடர்ந்து பிடிக்கிறார் பதறியிங்கோடிவந்து பாட்டையும் மோடுரைத்தோம் இதறுதனைத் தீர்த்து இரட்சிப்பீரென்குருவே என்று பேயெல்லாம் இப்படியே சொன்னவுடன் அன்று தலையோடு அந்தமுனி தானடித்து வைகுண்டம் பூமியிலே வந்து பிறந்தாரென்றால் மெய்கொள் சிவன்முதலாய் மேல்பிறக்க வேணுமல்லோ சத்தி சிவன் வரையும் செத்துப் பிறக்கணுமே பொல்லாப் பிசாசுகளே புத்திகெட்டுப் போனீர்களே வல்லாத்தானல்லோ வைகுண்டமாபொருளும் ஆரவர்நாமங்கேட்டால் அல்லவென்று சொல்வதுதான் சீர்பரன் முதலாய்ச் சிந்தை பதறணுமே உங்களுட மூப்பு உகத்திலினி வாராது எங்களுட மூப்புவரை இல்லையென்று போகுதுகாண் எல்லா மவர்மூப்புக் குள்ளேயடங்குதுகாண் பொல்லாப்பசாசுகளே பொன்றவிதியுங்களுக்கு ஆனாலுமீசர் அமைப்புக்கணக்கெடுத்து நானேயிதுமேவித் தாறேனென்றிப்போது இந்தக் கணக்கும் ஏழு யுகக்கணக்கும் எந்தக் கணக்கும் இருப்புமவரிடத்தில் ஆனாதால் கணக்கை அவரிடத்தில் நாமள்போய் நானாகச் சொல்லி நற்கணக்கும் பார்த்து அறிந்து கொள்ளவே எல்லோரும் போவோமென்று நாரத மாமுனியும் நாட்டில் பேயத்தனையும் காரண வைகுண்டர் காலில்வந்து தெண்டனிட்டார் தெண்டனிட்ட போது சொல்வார் முனியுடனே பண்டாகமப்படியே பிசாசையெல்லாமெரிக்க என்மனதிலுற்றேன் இங்கேவந்து வாய்த்ததென்று நன்முனியே பேயை நகன்றிடாக் காருமென்றார் முன்னேநீ பேய்க்கு முதல் யாமியங்கொடுத்து இந்நேரங்கூட்டி என்னிடத்தில் கொண்டுவந்தாய் வந்தது நல்லதுதான் வாய்த்தமுனியே யிப்போ இந்தாப் பேய்க்கணக்கை எடுத்துரைக்க கேட்டிருநீ பொல்லாக் கலியன் பிறந்தநாளன்றுமுதல் எல்லாம் பேய்களுக்கு ஈந்தவரமானதினால் நீசன் கொடுமை நீணிலமெல்லாம்பரந்து தேசச் சிறப்புச் சிதறிக்குலைந்ததெல்லாம் மாய நாராயணரும் வைகுண்டமாய்ப்பிறந்து ஞாய நடுகேட்டு நாட்டுக்குற்றந்தீர்த்து ஆகாத்த தெல்லாம் அழித்து நரகத்திலிட்டு வாகாய் நரக வாசல் தனைப்பூட்டி நல்லோர்க்கு வரங்கள் நாலு கொடுத்தேயெழுப்பி பொல்லாரை நரகில் போட்டுக் கதவடைத்து வல்லோரைச் சொல்லொன்றுள் வைந்தர் அரசாள பிறந்து பூமிதனிலே பேறாக வந்தவுடன் இறந்ததுகாண் பேய்கள் இவர்க்காகாப்பேர்களெல்லாம் என்று பேய்களுக்கு ஈந்துவரம் கொடுத்ததெல்லாம் அன்று பேய்க்கணக்கு வாசித்தாராதியுமே இம்மணியிலித்திவசம் ஈந்தவரமல்லாது எம்மணியுமிப்பேய்க்கு எள்ளளவுமில்லையென்றார் உண்டோகாண் பேய்க்கு ஒருமணிதானானாலும் கண்டோ முனியே கணக்குண்டோ சொல்லுஇனி கேட்டு முனியும் கெஞ்சிமிக வாய்புதைத்து நாட்டுக்குடைய நாராயணருரைத்தால் எவர்தானெதிர்த்து இல்லையென்று சொல்லுவது மூவருமங்கே ஒடுங்கியிருக்கையிலே அல்லாமல் நீசன் அழிவாகு முன்னதியாய் எல்லாமவனோடுளது ஏலமே சாகணுமே நீசன் வலுவெல்லாம் நேர்முன்னே தானறுத்து ஓசையொன்றுக்குள்ளே உகங்கேட்க நிச்சயித்தீர் நன்றிகெட்ட நீசன்வேர் நாள்வழியே நீரறுத்து ஒன்று விளிக்குள் உகமழித்துத் தீர்ப்புசெய்து நல்லோரையெழுப்பி நகரொருசொல்லுள்ளாள வல்லோராய் நீரும் வரம்பெற்ற மாதவமே ஆனதினால் பேய்கள் அந்நீசக்குலமதினால் வானக்கனலில் மாளுமிக்காலமிதாம் என்று முனியுரைக்க ஏற்றவைகுண்டமுதல் நன்று முனியே நம்பேரில் குற்றமில்லை முன்னுள்ள ஆகம முறைநூற்படியாலே என்னூலொழுங்கில் எரிக்கிறேனிப்பேயை மாமுனியே நீசாட்சி மாயாண்டி நீசாட்சி நாமுனியே சாட்சி நல்லவரே நீசாட்சி எல்லோருஞ் சாட்சி என்பேரில் குற்றமில்லை வல்லாத்தான் வைகுண்ட மாலவருஞ்சாட்சி என்று நாராயணரும் எரிக்கலுற்றார் பேய்களையும் பண்டு அந்தப்பேயைப் பார்மீதில் கொண்டாடும் நருட்கள் மிகப்பார்த்து நாலைந்து தான்தாக்கி கருக்கிவிட வென்று களிவைத் தலையாட்டி மனுக்களறிய மனுநருளைத்தானாட்டி தனுக்கள் மிகவாங்கத் தானினைத்தாரம்மானை அப்போ நருள்பேரில் ஆடும்பேயேதுசொல்லும் இப்போது சுவாமி எங்களொக்கத் தானெரித்து தனியேயரசாள சாதியொன்று தானெடுத்து சொல்லொன்றுக்குள்ளாள சுவாமி வரங்கள்பெற்று கொல்லென்றெங்களையும் கொல்லத் துணிந்தீரே என்றுபேயெல்லாம் எண்ணியெண்ணித்தானழுது அன்று அழுது அவர்வரங்கள் வைக்கலுற்றார் காந்தலிடியும் கனத்தவலுச்சக்கரமும் சூழ்ந்து குத்தல்கண்டு சுருண்டு மிகப்பேய்கள் ஐயோ சுவாமி அடியார்க்குத் தந்தவரம் வையோரறிய வைக்கிறோமென்றுரைத்தார் உடனே வைகுண்ட உற்ற நாராயணரும் திடமுடனே பேயோடு உரைக்கிறார் சீமானும் அணியில்லாப்பேயே அன்றுதந்த வரத்திலொரு மணியிருக்கு தானால் மாறியென்னோடுரையும் அப்போது பேய்கள் எல்லோருந்தானழுது இப்போது நாழிகையும் இல்லைமணி நேரமதும் உம்முடைய தர்மம் உண்டானாலெங்களையும் தம்முடைய கருணை உண்டாற் பிழைப்போம்யாம் என்று பேயுரைக்க ஏகபரனேதுரைப்பார் அன்று நானுரைத்து ஐமூன்று மாதம்வரை பார்த்து இருந்தேன் பிசாசுகளே யுங்களுக்காய் காத்து இருந்தேனே ஆண்டொன்றொரு கால்வரையும் என்பேரில் குற்றமில்லை என்று சாட்சிவைத்து உன்பேரில் குற்றமதால் ஒடுக்கிறேனுங்களையும் என்று பேயோடு இப்போவரம் வையுமென்றார் அன்றுபேயெல்லாம் அறமெலிந்து தான்வாடி என்னமுறை சொல்லி இப்போவரம் வைக்கவென்று வன்னப் பொருளே வகையாகச் சொல்லுமென்றார் அந்தப்பொழுதில் அய்யாநாராயணரும் இந்தப்பொழுதில் இம்மணியிந்நேரமதில் அய்யாவுமங்கே ஆகமத்தைத் தான்பார்த்து கைவாய்த்து தென்று கழிவோடுரைபகர்வார் திட்டிச்ச அய்யாணை சேர்ந்து வரங்கள்வைத்து விட்டுருந்தச் சாவுபிழை சங்கிலிகள் தானும்வைத்து மலையேறி யொக்க மாண்டுபோவோமெனவே விலையாய்ப் பலகையிலே விரித்தடியுஞ்சத்தியமாய் அய்யா வுரைத்த ஆணை தவறாமல் மெய்யாகப் பேய்கள் விளம்பிவைத்ததம்மானை அய்யாணை அய்யாணை திட்டிச்ச அய்யாஆணை மெய்யாணை எங்கள் மிக்கவரங்கள் வைத்தோம் தந்தபிழை சாவு சங்கிலிகளானதுவும் எந்தன் குலமுழுதும் இப்போ வரமும் வைத்து அய்யாணை நாங்கள் அருமலைகள் தானேறி மெய்யாக அக்கினியில் விழுந்துசாவோமெனவே சொல்லிப்பேயெல்லாம் சுத்தவரமத்தனையும் பல்லுயிருமறியப் படித்துவரம் வைத்ததுவே வைத்த உடனே வைகுண்டர் முறைப்படியே மெய்த்தபுகழ் சான்றோர் மெய்வாயுங்கையாலும் ஆகாத்ததெல்லாம் அழித்திடுவாரனவே வாகாக முன்னூல் ஞாய வழிப்படியே வாணாள் மறுகி வாதைவரம் வைத்தவுடன் சாணானொருவிரலால் சற்றேதொட வைத்தனரே தொட்டிடவே பேயும் சுற்றுமனு நருளும் பட்டு விழுந்தாற்போல் பாரறிய தான்விழுந்தார் உடனே மனுவழியில் உடைய தர்ம சீடரவர் படபடெனத் தூக்கிப் பதங்கோரி விட்டிடவே அசதி தீர்ந்தாற்போல் அந்த நருள்முழிக்கும் செய்திதனையெல்லாம் சீமை நருளறியும் கண்டு கொண்டாடிக் காரணத்தின் ஞாயமென்று மன்று பதினாலும் கண்டு மகிழ்ந்திருந்தார் இப்படியே பேய்கள் எல்லாம் வரங்கள்வைத்து அப்படியே பேய்கள் அருமலைபோய் மாண்டதுவே மலைதனிலே வந்து மாண்டசெய்தி தானறிய இலையி லாடிட்ட இடையர்மிகக் கண்டுளறி அய்யோபேய் மலையில் அலறிக்கரிவதுதான் மெய்யாகக் கண்டு மிகப்பதறு தெங்கள்மனம் அழுதுமுறையிட்டுப்பேய் அக்கினியில் சாடுவதும் முழுது மலைகள் முழக்கிக் கிடுகிடென ஆடு மிகப்பதறி அம்மலையில் மேயாமல் சாடுதுகாண் தரையில் சாரங்கர் சீமானே என்று இடையர் இயம்பக் கேட்டெம்பெருமாள் அன்று நருளறிய அவர் போதித்தார் சாட்சி கேட்டு மனுநருட்கள் கெட்டிகெட்டியிந்தமுறை நாட்டுக்குடைய நாராயணரிவர்தான் மன்றுதனையளந்த மாயத்திருநெடுமால் என்று பலரும் இயல்பாயறிந்திருந்தார்

மந்திரங்களை செயலிழக்கச்செய்தல் ஆகமப் படியே பேய்கள் அதினுட வரங்கள் வாங்கி லோகங்கள் அறியக் காட்டி யுகபர சாட்சி நாட்டி வேகத்தில் மந்திர தந்திர விசையெல்லாமடக்க வென்று நாகத்தி லுண்டு வாழும் மலையரசனை வருத்தவென்றார்

வருத்தவே வேணுமென்று மகாபரன் மனதிலுன்ன விருத்தமாய் மலையில் வாழும் மிருகங்கள்கோபமுற்றுத் துரத்தலைக்கண்டு மெத்தத் துயரமுற்றயர்ந்து மந்திர வருத்தலைச்செய்து பார்த்து மலைந்தனனரசன் தானே

மந்திர தந்திர மாமுனிவன் சாத்திரங்கள் விந்தைசெய்யு மாய்மால விசையடக்க வேணுமென்று நினைத்தவுடனே நெடுமலையில் தான்வாழும் அனர்த்தமிடும்மிருகம் ஆனை புலிகடுவாய் கடுகிக்கரடி கனத்த மந்திக்குரங்கும் முடுகியெழுந்து மூச்சுவிட்டே விரைவாய் சீறி யெழுந்து சென்றுமலையில் வாழும் கூறித் தொழில்கடிய குன்றரசர் தங்களையும் விரட்டத் தொடுத்ததுகாண் மிருகம் மிகக்கூடி அதட்டுப் பொறுக்காமல் அந்த மலையரசர் ஓமந்தனை வளர்த்து ஒருகோடி பூச்சொரிந்து ஆமா அரியெனவே அட்சரங்கள் தானெழுதி புவனவலிச்சக்கரங்கள் பீடமதில்நிறுத்தி நமனை அழைக்கும் நல்ல வலுச்சக்கரமும் சத்தி நிறுத்தி சதாகோடிப் பீடமிட்டு சுற்றிவர வோமம் சுழலக்கனலெழுப்பி வேண்டும் படைப்பு விதம்விதமாய் படைத்து கூண்டு மலையரசன் குறளிகளைத் தான்வருத்த சேவித்தான் மூன்று நாளாக மந்திரங்கள் கோபித்துப் பார்த்தான் குறளிகள் தன்பேரில் சற்றும் பலிக்காமல் சடைத்துமந்திரத்தோனும் கற்றத் தொழிலும் கருவுங்கலைகலைந்து என்ன விதமோ என்று மிகக்குளறி மன்னன் மலையரசன் மார்கள் மிகநடுங்கி எங்கேயினிப்போவோம் என்று மனம்பதறி சங்கையழிந்து சருவில் மிகஇறங்கி தட்டழிந்து வாடி தவித்துநின்றேதுரைப்பார் பட்டபாடேதெனவே பண்பாகக் கேட்பதற்கு குறத்தியொன்று காண்கிலமே குறிகேட்டுப்பார்ப்பதற்கு உரைத்து அவரிருக்க உடையவனாரருளால் குறத்தி யொருத்தி குறப்பெட்டியுமிடுக்கி விறைத்துரைத்து வந்தாள் விசாரமிடுவோர்முன் கண்டார் குறத்தியையும் கலிதீர்ந்தோமென்றுசொல்லி வண்டாடுஞ் சோலை வனத்தில்வா என்றழைத்து அருகிலிருத்தி அவளைமிக ஆதரித்து சரிவிலுள்ள மாங்கனிதேன் தகையாறவேகொடுத்து பசிதீர்ந்து குறத்தி பகர்வாளொருவசனம் விசியாயெனதுடைய பசிவிசாரந் தீர்த்தீர் உங்களுடதுயரம் ஓட வழிகேளீர் தங்களுக்குமெங்களுக்கும் சகலவுயிரானதுக்கும் நாயகமாய் வந்து நாட்டில் மிகஇருக்கார் வாசமணக்குதுகாண் வையகங்களீரேழும் பேரு வைகுண்டர் பெரிய திறவான்காண் நேராயிருப்பவர்க்கு நிச்சமாய்க் கைகொடுப்பார் அவரைநீங்கள் கண்டு ஆனதுயரம் உரைத்தால் தவிருந் துயரமெல்லாம் சுவாமியவர் நல்லருளால் என்று குறத்தி ஈதுரைக்க நாகராசர் நன்று குறத்தியுடன் நம்துயரஞ் சொன்னோமோ சொல்லாதிருந்திடினும் சொன்னாளே நம்துயரம் எல்லாத்துயரமதும் இதினாலே தீருமென்று சந்தோசங்கொண்டு சற்குறத்தியையனுப்பி வந்தார்கள் தெச்சணத்தில் வைகுண்டர் வாழ்பதியில் கண்டு வைகுண்டரையும் கரங்குவித்தே பணிந்து பண்டுபட்ட பாட்டைப் பகர்ந்தாரவருடனே கேட்டு வைகுண்டர் கிருபையுடனேதுரைப்பார் நாட்டுக்குடைய நாராயணர் பாலன் பிறந்து வைகுண்டம் பெரிய யுகமாள சிறந்து தவசு செய்யுமுறைமையினால் துக்கக்களையறுத்துச் சுத்தமரையாளாக்கி பக்கக்களையறுத்துப் பகைஞரொன்றில்லாமல் ஒருசொல்லுக்குள்ளே யுகமழித்துகமெழுப்பி இருசொல்லுக்குள்ளே இராச்சியத்தையாளுதற்கு பிறந்துகொண்டிருக்கும் பெருமைக்கடையாளம் இறந்ததுகாண் பேய்கள் இப்போது தந்திரமும் போக நினைத்தேன் பெரியதெய்வமுங்களைத்தான் வேகந்தனிலே விடுத்ததுகாணென்முன்னே நல்லது கைவாய்த்து நமக்குவிதி தானாச்சு பொல்லாததெல்லாம் போக விதியாச்சு உந்தன் துயரம் ஒக்க இப்போ தீரவென்றால் எந்தன் மொழிகேட்டு இசைவீரோ நீங்களெல்லாம் அப்போது மலையில் வாழு மலையரசர் இப்போது சுவாமி என்னநீர் சொல்வீரோ அதுக்கெல்லாம் நாங்கள் அல்லவென்றுசொல்லோங்காண் பொதுக்கெனக் கேட்டுப் புகல்வார் வைகுண்டர் மாந்திர தந்திர மாமுனிவன் சாஸ்திரமும் உபாந்திர வாகடமும் உபாயச்சமூலமதும் மாயக் கருவும் மாரண வித்தையதும் உபாயக் கருவும் உயர்ந்த கருமோடிகளும் தம்பனவுச் சாடனமும் சல்லியம் பேதனமும் வம்புசெய்யு மாஞால மந்திர மட்டகர்மம் எட்டு மடக்கி இதுமுதலாய் மந்திரமும் கட்டுடனே யிப்போ கருசமூலத்துடனே ஒக்கவைத்தோமென்று ஓருடக்காயுடக்கி மிக்க என்முன்னே மேதினியீரேழறிய ஆணையிட்டு வையும் அருமலையில் வாழரசா நாணமிட்டுப் போகுமுன்னே நம்முன்னே வையுமென்றார் உடனே மலையரசர் ஒக்க மனதலைந்து குடலே மருண்டு குறுக முழிமுழித்து வம்பறுக்க வந்த மாயக்கூத் தனெனவே தம்பெலங்களற்றுத் தலைசாய்ந்துடனயர்ந்து மாட்டோமென்றோமானால் மலைமிருகங்கேளாது வீட்டைப் பிரித்தெறிந்த மிருகம் விலகாது குடியிருப்பு நமக்குக் குன்றுமேலங்குமில்லை படியீரேழளந்த பரமனம்மையிங்குவிடார் அய்யாவுரைத்த ஆணை வழிப்படியே மெய்யாக வைத்து வீடுமட்டும் போயிருப்போம் அல்லாதே போனால் அம்மலையிலிருப்புமில்லை எல்லாமறிந்து இனிப்போவதுமரிது என்று மலையரசர் எல்லோருஞ்சம்மதித்து அன்று வைப்போமென்று அடிபணிந்து தெண்டனிட்டு ஐயாவே யெங்களுட ஆதிநாராயணரே கையார வைக்கக் கருவுகொண்டு வந்தோமில்லை ஏடுகொண்டு வந்தோம் இல்லையே யெம்பரனே வீடுவரைப் போயெடுத்து விரைவாக வாறோம்நாம் என்றுரைக்க மந்திரத்தோர் எம்பெருமாளேதுரைப்பார் நன்று அதுதூரம் நம்முடைய கைக்குள்ளொரு சூட்சமுண்டு பிள்ளாய் சொல்லக்கேள் நீங்களெல்லாம் மாச்சல் படவேண்டாம் மலையரசா நீங்களெல்லாம் எல்லா விதத்தொழிலும் இந்திரமாஞாலமுதல் எல்லாம் வைத்தோமென்று ஆணையிட்டாற்போதும் நல்லது யென்று நாடி மலையரசர் வல்ல விதத்தொழிலும் மந்திரமாஞாலமுதல் எல்லா மடக்கி இப்போது வைத்தோமென்றார் அய்யாணை யிட்டு அவர்முன்னே வைத்தார்காண் மெய்யாணையிட்டப் பொழுதே மலையரசர் எங்கள் பிழைப்பு இப்போதே போச்சுதையா சங்கடங்களொன்று தானிருக்குதையாவே இதினால் பிழைப்பு என்றிருந்தோமித்தனைநாள் விதியால் குறைந்ததுகாண் வித்தை பிழைப்பெல்லாம் மலையில் பயிரிட்டு வயிறு பிழைப்பதற்கு உலைவில்லா நொம்பலமும் உலாவுமிருகச்சிறையும் இல்லாமலே விலக்கி இப்போ தரவேணும் நல்லாப் பயிர்விளைந்து நாங்கள் பிழைக்கவேணும் என்று இவர்கேட்க இதுதந்தோமென்றுரைத்தார் அன்று அவரனுப்பி அவர்மலைக்கேகுகையில் வைத்த தொழிலை மலையரசா நீங்களெல்லாம் செயித்ததறியாமல் திருப்பியே செய்ததுண்டால் நரகமதுபிடித்து நாள்வழியேகொன்னுகொன்னு துரோகமடைந்து தீநரகில் மாள்வீர்கள் என்று சபித்தார் எம்பெருமாளானவரும் அன்று அவர்கேட்டு அப்படியே வந்ததென்றால் சொன்னபடி நரகில் செத்திறந்து போவோமென அன்னப் பெருமாள்முன் ஆணையிட்டுப்போனார் போனாருலகில் பிச்சைவேண்டிக்குடித்து வானோரறிய மந்திரமாஞாலமற்று மந்திர வித்யா மாமுனிவன் சாஸ்திரமும் தந்திரமும் போச்சுதென்று சகலோருங் கொண்டாடி வைகுண்ட சுவாமி வாய்த்த கணக்கதிலே மெய்கொண்ட வானோர் மிகஅறியத்தானெழுதி மேலோகமான வைகுண்ட ராச்சியமும் பூலோக முமறியப் பெரியோனெழுதினரே

மாந்திரங்கழிவு சூன்யம் மாரணக் கருவு கோளும் உபாந்திரக்கேடு தீதோடு ஊறியப்பொய்பொல்லாங்கு ஏந்திய நினைவு பாசம் இதுமுதல் வினைகளெல்லாம் சாந்தியிலெரித்து நீற்றித் தர்மத்தை வளர்க்கலுற்றார்

நல்ல நாராயணரும் நாமமணி வைகுண்டராய் செல்லத் திருவுளமாய்ச் சீமைக்குறுதியுமாய் மனிதவதாரமெடுத்து வைகுண்ட வாசவனும் பனிதவழும் பத்தினியாள் பாலருட வம்மிசங்கள் உய்வுற்று வாழ்ந்து உலகமதை ஆள்வதற்கு குண்டணிப்பேய் பொய்யும் குறளிக்கரு வைத்தியமும் ஆகாதெனஎரித்து அப்பிறப்புமறுத்து வாகாகத் தர்மபதி வாழுங்கோ மானிடரே என்று சொல்லித் தர்மம் எம்பெருமாள் நினைத்து மன்றுபதினாலறிய வாய்த்ததர்மங் கூறினரே இன்று முதலெல்லோரும் இகபராதஞ்சமென்று ஒன்றுபோலெல்லோரும் ஒருபுத்தியாயிருங்கோ காணிக்கையிடாதுங்கோ காவடி தூக்காதுங்கோ வீணுக்குத் தேடுமுதல் விறுதாவில் போடாதுங்கோ வைகுண்டருக்கே பதறி வாழுவதல்லாமல் பொய்கொண்டமற்றோர்க்குப் புத்தியயர்ந்தஞ்சாதுங்கோ அவனவன் தேடும்முதல் அவனவன்வைத்தாளுங்கோ எவனெவனுக்கும்பதறி இனிமலைய வேண்டாமே என்று வைகுண்டர் இராச்சியத்திலுள்ளோர்க்கு கன்றுக்குமாதாஇரங்கிக் கற்பித்தது போலுரைத்தார் எல்லோருங்கேட்டு எங்கள்வினை தீர்ந்துதென்று நல்லோர்கள் முன்னே நவின்றிருந்த சொற்படியே வருவார் வைகுண்டர் வந்தாலிருப்பவர்க்கு தருவார் கெதிகள் சாகாத வாழ்வுகளும் என்றுசொல்லி முன்னோர் எங்கள் காலமதிலே நன்று திருமொழியை நாங்களுமே தான்கேட்க எங்கள் கலிதீர்ந்தது எம்பரனேயென்றுசொல்லி சங்கையுடனேபல சாதியெல்லாமறிந்தார் நருளறிய தர்மமிதை நாட்டியேயெம்பெருமாள் துரிதமுடனே தொல்புவியில் வாழுகின்ற பட்சி பறவைகட்கும் பலசீவ செந்துகட்கும் அச்சு அரிமுதற்கும் ஆனமிருகங்களுக்கும் ஊர்வனங்களானதுக்கும் உதித்த புற்பூண்டுகட்கும் கார்சேட னாறுகட்கும் கரடு கல்லானதுக்கும் உத்தரவாய்த் தர்மம் உரைக்கிறாரன்போரே மிருகமொடு மிருகம் மிகமகிழ்ந்து வாழ்ந்திருங்கோ உங்களுக்குப்புற்பூண்டு உண்டு மதைப்புசித்து சங்கையுடனோர்தலத்தில் தண்ணீர் குடித்திருங்கோ வாழ்ந்திருங்கோ நீங்கள் வைகுண்டருண்டெனவே தாழ்ந்திருங்கோவென்று தங்கள் கிளைபோலே மிருக இனத்துக்கு இதுவுரைத்துப் பட்சிகட்கு உறுதியுடனே உரைத்தார் வைகுண்டருமே பட்சியெல்லா இனமும் பண்பாயொரு இனம்போல் கட்சியுடனே களிகூர்ந்து வாழ்ந்திருங்கோ சிறிது பெரிது என்றுமிகச் சீறாமல் உறுதி பெரிது உடையோனே தஞ்சமென்று கூடிக் குலாவி குணமாய் மகிழ்ந்திருங்கோ நாடியுரைத்தார் நல்லபட்சி தங்களுக்கு புல்பூடானதுக்கும் பொறுதி மிகவுரைத்து கல்வாரி தனக்கும் கனத்த சேடன்தனக்கும் தங்கள் தங்களுக்கு தாழ்மை மிகவுரைத்து மங்களமதாக மனமகிழ்ந்து வைந்தருமே நாட்டுக்கு நம்முடைய நல்ல தர்மத்தின்படியே கூட்டுக்கு ஏற்றக் குருவுபதேசம்போலே எய்யாமல் நாதன் எல்லோருந் தானறிய செய்த தர்மஞாயச் செய்திகேளம்மானை

அன்னீதத்தாலே லோகம் அவனியீரேழும் வாடி குன்னியே கலியில் மூழ்கிக் குறுகியே யலைதல் கண்டு கன்னிகள் மதலையானக் கற்பகக் குலங்கள் வாழ மன்னிய மனுப்போல் மாயன் மகரத்துள் உதித்தார் தாமே

உதித்தாராயிரத் தெட்டாண்டில் உவரிசெந்தூர் கடலுள் குதித்தாண்டருள்மாசியில் தெச்சணா குருநாட்டினில் பதித்தாமரை யூரினில் பள்ளிதான் கொண்டந்நாள் விதித்தாரிதைத் கருத்தாய் அருளுரைத்தாரறவுரையே

பொய்யில்லை பிசாசுஇல்லை பில்லியின் வினைகளில்லை நொய்யில்லை நோவுமில்லை நொம்பலத் துன்பமில்லை தொய்யில்லையிறைகளில்லை சுருட்டு மாஞாலமில்லை மையில்லை உலகத்தோரே வாழுமோர் நினைவாயென்றார்

இத்தனையெல்லாமில்லை என்றரி நாதன் சொல்ல புத்தியிலறிந்து மண்ணோர் புதுமையென்றன்பாய்கண்டு முத்தியிலிவரைக் கண்டு முயன்றவர் பேறு பெற்றார் பத்தியில்லாதாரெல்லாம் பாழெனச் சொல்லி நின்றார்

இப்படி மனுடரெல்லாம் இவர்மொழி தர்மங்கண்டு ஒப்புடன் கூடி வந்து ஒருவனே தஞ்சமென்று செப்பிடத் தொலையாதையா சீர்பதம் பதமேயென்று நற்புடன் மனுடரெல்லாம் நாடியே மகிழ்ந்திருந்தார்

நீசன் வைகுண்டரை கொடுமை செய்தல் நாடியே யுலகிலுள்ள நருட்களோர் தலத்தில் வந்து கூடியே நிற்கும் போது குறோணிதன் கொடியால் வந்த சாடிகளதினால் நீசன் சாகிறதறியா மீறி பாடிய வைந்தர் தன்னைப் படையேவிப்பிடிக்க வந்தான்

வந்தவன் சுசீந்திரந்தன்னில் வளைந்து கூடார மிட்டு மந்திரி மாரை நோக்கி வகையெனப்புகல்வானீசன் இந்த மாநிலத்திலென் எதிரிதானாரோ சொல்வீர் விந்தையா யவரைச்சென்று விருதிட்டு வருக என்றான்

நாடுங் குறோணி நாதவழி யாய்பிறந்து மூட மடைந்த முழுநீச மாபாவி இருந்த நகர்விட்டு எழுந்திருந்து தானேகி வருந்தப் படையோடு வந்தான் சுசீந்திரத்தில் ஆனைத் திரள்கோடி அதிகப் பரிகோடி சேனைத்திரள் கோடி சென்றார் சுசீந்திரத்தில் சேவுகக் காரர் திலுக்கர் துலுக்கருடன் ராவுத்தர் கோடி ராட்சதர்கள் முக்கோடி சரடன் கரடன் சவுனி கெவுனியுடன் முரட னுடனே மூர்க்கர் முழுமூடர் படைகளலங்கரித்துப் பாரவெடிதீர்த்து குடைகளலங்கரித்துக் கொடிகள் மிகப்பிடித்து வாள்காரர்கோடி வல்லயக்காரர்கோடி தோள்காரர் கோடி சுரண்டிக்காரர்கோடி அம்புக்காரர் கோடி ஆயுதக்காரர்கோடி வம்புக்காரர்கோடி வந்தாரவன்கூட வெடிக்காரர்கோடி வேல்காரர்கோடி அடிக்காரர்கோடியென வந்தார்பலகோடி இத்தனையார பாரத்துடன் நீசன் தத்தியுடன் நடந்து தமுக்கு மிகஅடித்து வந்து கூடாரம் இட்டான் சுசீந்திரத்தில் தந்து தந்தாகத் தங்கள் மிகக்கூடி கொந்து கொந்தாகக் கொடும்படைகள் கூடிவர மந்திரிமாரோடு வந்திருந்தேதுசொல்வான் கேளாய்நீ மந்திரியே கிருபையுடனோர் வசனம் வாளாற்பெரிய மன்னர்கள் அந்நாள் முதலாய் நமக்காயிருந்ததுகாண் நம்முடைய நாளையிலே துடுக்கான வெள்ளை நசுறாணியவன்தனக்காய் ஆச்சுதே நாடு அவனுக்கேயாகிடினும் பேச்சு நாமல்லால் பின்னொருவர் காணாதே ஆனதாற் பூமியிலே ஆரொருவரானாலும் மானமறவே நமக்கு மாற்றானாய்க் கண்டதுண்டால் ஆய்ந்து விசாரித்து அறிவித்துச்சொல்லென்றான் தேர்ந்து நின்று மந்திரியும் தீநீசக்குலமதினால் பொல்லாத சூத்திரப் பிசாசுக் குலமதினால் கல்லாதான் கூடிக் கண்டுதேர்ந்தேதுரைப்பான் வேறொருவரையும் மேதினியில் நாம்காணோம் வாறோர் ஞாயமாற்றம் வையகத்தில் காணுதிப்போ நமக்கு இறையிறுத்து நாடூழியங்கள்செய்யும் குமுக்காயினம்பெருத்த கூண்டசாணாரினத்தில் வைகுண்டமாக வந்து பிறந்தோமென்று மெய்கொண்ட பூமியெல்லாம் வேறொருவராளாமல் நான்தான் முடிசூடி நாடுகெட்டி ஆள்வேனென தானுரைபகர்ந்து சாதிபலதும் வருத்தி ஒருதலத்திலூட்டுவித்தான் உற்ற நீரானதையும் அருகிருக்குஞ் சாணார்க்கு அதிகவிதி தோணுதென்றும் ஆகாத்தப் பொல்லாரை அழித்துப்போடுவேனென்றும் சாகாவரங்கள் சாணாருக்கீவேனென்றும் சொல்லியிருக்கிறான் சுவாமிவைகுண்டமென்று தொல்லுலகிலிந்தச் சொற்கேட்கு ராசாவே என்றவன் மந்திரிகள் இத்தனையுஞ் சொன்னவுடன் ஒன்றுமுரையாடாது உட்கார்ந்தயர்ந்தேதுரைப்பான் ஏதுகாண் மாயம் இதுஞாயம் வந்ததென்ன வாதுக் கொருவர் வருவாரைக்ணோமென்று நினைத்ததற்கோ இந்த நேருசொல் வந்ததுகாண் மனதயர்ந்து பார்த்து மந்திரியைத்தானோக்கி ஏதுகாண் மந்திரியே எல்லாரிலுமெளிய சாதியிலேவுள்ளவன்தான் சாற்றுவனோ இந்தமொழி ஏதோவொரு சூட்சம் இருக்குதுகாணிம்மொழியில் ஆராய்ந்து பார்ப்போம் எல்லோருங்கூடிருந்து பாராய்நீ மந்திரியே பாரிலொரு சாஸ்திரியை என்றந்தப் பேர்கள் எல்லோரும் சம்மதித்து அன்றந்த சாஸ்திரியை அவன்வருத்திக் கேட்கலுற்றான் சாஸ்திரியே யிந்தத் தர்மராட்சியந்தனிலே வேற்றொருவரென்றனக்கு வீறிட்ட துண்டோகாண் எதிரியுண்டோ பாரு என்னுடையச்சோதிரியே கருதி மிகப்பார்த்து கடியச்சோதிரி புகல்வான் தர்ம முடிவேந்தே சாற்றக்கேளுமரசே கர்மக் கலிதோசம் கமண்டலங்களேழ்வரையும் சுற்றிப் பரந்ததுகாண் தோசத்தால் பூமியெல்லாம் கர்த்தனரி கிருஷ்ணர் கடியகோபம்வெகுண்டு பூமியிலே வந்து பிறந்திந்தத் தோசமதை சாமிதர்மத்தாலே தோசமதையழித்து நற்பூமியாக்கி நாடெங்குமோர் குடைக்குள் சொல்லொன்றுக் குள்ளாள சுவாமி மகாவிட்டிணுவும் மனுப்போலவதரித்து வைகுண்டமென்றுசொல்லி தனுவையடக்கித் தவசு மிகஇருந்து நல்லோரையெல்லாம் நாடி மிகஎடுத்து வல்லோராய்ச் சாகாமல் வரங்கள் மிகக்கொடுத்து ஆள வருவார் அவர்வரும் நாளிதுதான் என்றுமிகச்சோதிரியும் இந்தக் குறியுரைக்க நன்று நன்றென்று இராசன் மிகமகிழ்ந்து சொல்லக்கேள் சோதிரியே சொன்னதெல்லாஞ்சரிதான் எல்லையுண்டோ அவர் வந்திருக்குமினங்களென்ன சொல்லி விரி நீ சுத்தமுள்ளச் சோதிரியே நல்லியல்பு பெற்ற நற்குறியோனுரைப்பான் இன்னவகைச் சாதியிலே இவர் வருவாரெனவே சொன்னக் குறியே சூதாய்த்தியங்குதுகாண் தருமங் கொண்டு சுவாமி தரணியில் வருவதினால் பொறுமைக்குலமாயிருக்கும் பெரியவழியாயிருக்கும் நம்மாலே சொல்லி நவிலக்கூடாதிதுவே சும்மாஎனை நீங்கள் சோலிபண்ண வேண்டாமே என்றந்தச் சோதிரியும் இணங்கி வணங்கி நின்றான் மன்று தனையாளும் மன்னன் மறுத்தே புகல்வான் அப்படித்தானானால் ஆதிமகாவிட்டிணுவும் இப்படியே வந்து இவர்பிறக்க வேணுமென்றால் போற்றி நம்பூரி பிராமணசூத்திரக்குலத்தில் ஏற்றிப் பிறக்க இயல்பில்லாமலிந்த பிறர்தீண்டாச் சாணார் குலத்திலவதரித்து பிறக்க வருவாரோ பெரியநாராயணரும் சும்மாயிந்தச் சாணான் சுவாமி சமைந்ததெல்லாம் பம்மாத்தாய்க் காணுதுகாண் பராக்கிரம மந்திரியே இப்போதொருநொடியில் இந்தச்சாணான்தனையும் மெய்ப்பாகக் கொண்டு விடவேணுமென்றன்முன்னே என்று மந்திரிமாரை ஏவுந் தறுவாயில் அன்று அருகிருந்த ஆவிடையர் தம்வழியில் ஒருவனெழுந்து உற்றரசனை நோக்கிக் கருதனம்போல் புத்தி கற்பித்தானம்மானை

கேட்டீரோ முன்னாளுள்ளக் கெறுவித வளங்களெல்லாம் தாட்டிமையாகச் சொல்வேன் தமியனும் வணங்கி நின்று பூட்டியே மனதில் வைத்துப் புத்தியென்றெண்ணி நீரும் நாட்டினில் நன்மை செய்து நலமுடனரசு செய்யும்

மாயனோ உபாயத்தாலே மனுவது போலேயாகி ஆயனக் குலமுந்தோன்றி அவனியிலிருப்பன் கண்டீர் மாயத்தை யறியா நீரும் மாளவே போகவேண்டாம் ஞாயமாயுரைத்தேனையா நம்முட அரசுக்கேகும்

எளிமையாங்குலங்களென்று எண்ணுறமனுவேயல்ல பழியென ஆதி நாதன் பார்க்கவே மாட்டாரையா அழிவது யுகத்துக் காச்சு ஆனதால் வருவார் திட்டம் வழியிது இல்லையையா மாறியே போவோம் வாரும்

தசரதன் மகவாய் மாயோன் அயோத்தியில் வந்து தோன்றி புசமுடப் பிறப்போர் கூடப் பிறந்ததுங் கேட்டிலீரோ வசையுடன் மனுதானென்று வாதிட்ட அரக்கன் தன்னை விசையுடனறுத்த செய்தி விளம்பியுங் கேட்டிலீரோ

தெய்வகி வயிற்றிலுற்று ஸ்ரீகிருஷ்ணன் எனவே தோன்றி வைவசு தேவன் பெற்ற மனுவென வளங்கள் நாட்டி நெய்யிடை வழியிற் சேர்ந்து நெருட்டிமா ஞாலஞ் செய்து செய்வதுங் கஞ்சன் தன்னைச் செயித்ததுங் கேட்டிலீரோ

ஐவர்க்குத் தூதனாகி அங்குமிங்கோடிச் சென்று மைக்குழலார்கள் தம்மை மணங்களு மிகவே செய்து மெய்ப்புடன் கிளைகளோடு மேவியே குழாங்கள் செய்து செய்துரியோதனனைக் கொன்றசெய்தியுங் கேட்டிலீரோ

இப்படி மாயன் தானும் இருமூன்று யுகங்கள் தன்னில் ஒப்புடன் மனுப்போல் தோன்றி உவமைகள் பலதுஞ் செய்து அப்படி யுகங்கள் தன்னால் அழிந்திடா வரங்கள் பெற்ற செப்பிடக் கூடா மாயன் செய்தியுங் கேட்டிலீரோ

சாணாகுலத்தில்மாயன் சார் வரோ என்றெண்ண வேண்டாம் பாணனாய்தோன்றி நிற்பார் பறையனாய் தோன்றி நிற்பார் தூணெனத் தோன்றி நிற்பார் தோலனாய்த்தோன்றி நிற்பார் ஆணெனத் தோன்றி நிற்பார் அவருரு கேட்டிலீரோ

குசவனின் குலத்தில் வந்தார் குறவனின் குலத்தில் வந்தார் மசவெனக் குலத்தில் வந்தார் மாடெனக்குலத்தில் வந்தார் விசுவெனக் குலத்தில் வந்தார் வேடனின் குலத்தில் வந்தார் அசுவெனக் குலத்தில் வந்தார் அவருரு கேட்டிலீரோ

எவ்விடந் தானாய் மேவி இருப்பவர்க் கெந்தச்சாதி அவ்விட மாகாதென்று அவர் தள்ள மாட்டாரையா செவ்விட மாயோன் சூட்சம் செப்பிடத்தொலையாதையா இவ்விடம் விட்டு நாமள் ஏகுவோம் நம்மூரென்றான்

என்றவன் சொன்ன போது இராசனு மிகவே கேட்டு பொன்றுற விதங்கள் சற்றும் புத்தியிலறியா வண்ணம் மன்றலத்தோர்க்குமேற்கா வார்த்தையையுரைத்தாயென்று கொன்றவன்தன்னைப்போடும் கோபமாயுரைத்தானீசன்

வேதமாங் கலைகள் தேர்ந்த மேற்குலமதிலே மாயன் சீதமாய்ப் பிறவா வண்ணம் சிறுகுலம் புக்கு வானோ ஆதரவில்லா வார்த்தை ஆர்க்குமே யேற்கா போடா பாதகா எனக்குப் புத்திப் பகரவே வந்தாய் மோடா

நித்தமும் முன்னால் லட்சம் நேடிய பொன்களிட்டுச் சத்திரச் சாலை தோறும் தர்மமு மளித்து நாமள் சித்திரத் திருநாள் நித்தம் செய்கிற குலத்தைத் தள்ளி நித்தியம் வேலை செய்யும் இழிகுலம் புக்கு வானோ

பிரமனை யொப்பாஞ்சாதிப்பிராமணக் குலத்தைத்தள்ளி சிராமனு மற்றோர் குலத்தில் சேர்வது திடனோ இல்லை வராகமா யுதித்த மாயன் மனுவெனப்பிறக்க மாட்டான் இதாரடா இந்த வார்த்தை என்முன்னேசொல்லி நின்றாய்

காரண மான மாயன் கலியுகம் வரவென்றெண்ணி நாரணன் பயந்து வோடி நல்மலை யேறி மானாய் வாரண நாதனம்பால் வல்வேட னெய்து செத்து தாரணி வாறேனென்று தவலோகஞ்சேர்ந்தான் மாயன்

அப்படிக் கொத்த மாயன் அவனியில் மனுப்போல் வாரான் இப்படியிவன்தான்சொன்ன இகழ்ச்சியை எங்கே கண்டோம் கப்பிடிச் சாணான் கையில் கைக்கூலி வேண்டிக் கொண்டு இப்படி மழுப்ப வந்தாய் ஏதடா செய்தி யென்றான்

மழுப்பில்லை கேளுங்கேளும் மாண்டு நான்போனாலென்ன வழுப்பில்லையுனக்குத் தூண்டல் வளருதே யவரிடத்தில் கழுத்திலே யுனது கையால் கத்தியை வாங்கி வைப்பாய் முழுத்திலையானாலென்சொல் மேல்வீசையரிந்துதாறேன்

ஆனையும் படையுமுன்றன் அரண்மனைக்கோவில் காலும் சேனையுங்குடையும் வியாழச்செல்வம் சிறப்போடெல்லாம் ஏனமு மிகவே தோற்று எரிந்துநீ கரிந்து சாவாய் நானிதைச் சொல்லவில்லை நாரணருரைத்தாரென்றான்

என்றிவன் சொன்ன போது ஏங்கியே வுளறிப்பின்னும் பொன்னுற வகையினாலே புத்தியிலறியா வண்ணம் கொண்டிவனைப் போடுங்கொடுவிலங்கதிலே சிங்கத் தண்டிகை யெடுத்து வாரும் சாணெனச் சாமி பார்க்க

பார்க்கவே போவோமென்று பார்முடி வேந்தன் சொல்ல தார்க்கெனப் பாவி நீசச்சறடனு மேதோ சொல்வான் ஆர்க்கிது ஏற்குஞ் சாணான் அவனிடம் போவ தென்ன கார்க்கதி கௌட சாஸ்திரி கடியனையனுப்பு மென்றான்

அனுப்புமென்றுரைத்த போது அரசனுமேதோ சொல்வான் துனுப்புடன் சாணான் தன்னை சூழ்ந்துநூற்கயிற்றாற் கட்டி கனிப்புட னமது முன்னே கட்டுடன் கொண்டு வாரும் வனிப்புடன் போவாயென்று வரிசையுங்கொடுத்தானீசன்

கொடுத்திடும் வரிசைதன்னை குவித்தவன் வேண்டிக் கடுத்தமாய்க் கௌவுட சாஸ்திரி கடும்படைக்கோலமிட்டு தடுத்திடும் வீரர் தம்மைத் தானிங்கே வாருமென்று நடுத்தர மதிலே நின்று நல்லணி வகுக்க லுற்றான்

பரிநடைக்காரர் தம்மைப் பக்கமு முன்னே விட்டான் கரிநடைக் காரர் தம்மைக்காவலாய் முன்னே விட்டான் சரிபரி யேறிக் கௌவுட சாஸ்திரி முன்னே நின்று வரிபடைக் கவசம் போர்த்து வந்தனன் படைக்கு முன்னே

அம்பெடுத் தெய்வேனென்று அவனொரு அணிகள் சாட கம்பெடுத்தடிப்பேனென்று காலசன் மிகவே சாட கொம்பெடுத்துதைப்பேனென்று குஞ்சரத் தலைவரோட பும்படக் கொல்வேனென்று போயினன் கௌவுடன் தானே

இந்தநேரந்தனிலே ஏகியந்தச்சாணானை குந்தமது கொண்டிடித்துக் குண்டிக் கயிறிறுக்கி இங்குகொண்டு வாறேன் என்று கௌடனுமே துங்க விருதுபெற்றுச் சூழப் படைவகுத்து ஆயுதம் அம்பு அணியீட்டி தான்பிடித்து வாயுதக் கணைகள் வகைவகை யாயெடுத்துப் பரியை விதானமிட்டுப் பாய்ந்துக்கௌடனுமே கரியைச் சூழநிறுத்தி கனபடைகள் பின்னிறுத்தி நீசன் விடைவேண்டி நீணிலமுமறிய பாசக் கயிறுடனே பாவியந்தக்கௌடன் வாற விதமதையும் வைந்தப் பொருளறிந்து காரணிக்க மொன்று கருத்தில் மிகநினைத்து இப்போ பதறி எழுந்திருந்து வோடவென்று அப்போது மாயன் அறிந்தேகும் வேளையிலே நன்மையாய்ச் சொல்லி நாடுவதுமெச்சாதி தின்மையாய்ச் சொல்லிச் சிரிப்பதுவுமெச்சாதி என்பதை நாம் பார்ப்போம் என்று மனதிலுற்று பண்டுதாம் பிறந்த பாற்கடலைநோக்கி ஓடத் துணிந்தார் ஒருவேசமும்போட்டு ஆடத் துணிந்தார் ஆகாசத் தேதேவர் ஆடையணியாமல் அரைக்கயிறுமில்லாமல் நாடைக்கெணியாமல் நடந்தார் கடல்நோக்கி நல்ல மனுச்சாதிநாராயணாவெனவே செல்ல மக்களெல்லாம் சிவசிவா என்றுசொல்லி கூடத் தொடர்ந்துக் குவித்துப் பதம்போற்றித் தேடரிய நல்லோர் சேவித்துப் பின்வரவே ஆகாத நீச அநியாயச்சாதியெல்லாம் வாயாரப்பேசி வம்புரைத்தே நகைத்தார் பதறியிவன் போறான் படைவருகுதென்றுசொல்லி கதறிமிக ஓடுகிறான் கள்ளச்சுவாமியிவனும் சாமியென்றால் நருட்குத் தோற்றுயிவன் ஓடுவானோ நாமிவனை நம்பி நடந்ததுவும் வீணாச்சே பேயனுட பேச்சைப் பிரமாணமாய்க்கேட்டு ஞாயமது கெட்டோம் நாமெல்லாமென்றுசொல்லி நீசக் குலத்தோர் நெடுந்தூரம் வைதார்காண் தேசமதையாளும் செல்லவைந்தர் சூட்சமதை அறியாமல் நீசரெல்லாம் அப்போநன்றியுமறந்து வெறிகொண்ட பேயனென மேதினியில் பேசினர்காண் நல்ல மனுவோர் நாரணா தஞ்சமென செல்ல மனுவோர் திருப்பாதமுந் தொழுது கூடி நடந்தார் குருவே குருவேயென நாடி நடந்தார் நல்லபதியேற்றுவரென கண்டு கொள்வோமென்று காட்சையுடன் நடந்தார் பண்டு அருள்பெற்றோர் பச்சைமாலுடன் நடந்தார் அப்போது வைகுண்ட அரசர் மனமகிழ்ந்து எப்போதும் வாழ்வார் எனக்கான மக்களெல்லாம் வம்புரைத்த நீச வழிமுழுதுஞ் செத்திறந்து முன்பு விதியால் முழுநரகமே வீழ்வார் என்று சபித்து எம்பெருமாள் தானடந்து பண்டு பிறந்த பால்கடலுள் சென்றனரே

சென்றனர் தேவரோடு செகல் கரைதனிலே நின்று நன்றினந் தன்னைப் பார்த்து நவிலுவார் வைந்தராசர் பண்டெனைப் பெற்ற தாதா பாற்கட லுள்ளே யென்னை சென்றிட அழைக்கிறார் நீர் செகல்கரைதனிலே நில்லும்

நில்லுமென்றினத்தையெல்லாம் நிறுத்தியே கடலினுள்ளே பல்லுயிர் யாவும் ஆளும் பரமனு மங்கே செல்ல வெல்லமர் தேவரெல்லாம் மேகனற் குடைகள் போட வல்லவன் தகப்பன்பாதம் வணங்கிய வைந்தர் சொல்வார்

அப்பனே வொப்பில்லாதா அலைகடல் துயின்ற மாயா செப்பவுந்தொலையாநாமம் சிமையில்விளங்கப்பெற்றாய் தப்பர வில்லா என்றன் தகப்பனே கேண்மோவையா எப்போநான்விளங்கியுன்றன் இரத்தினசிம்மாசனமேறுவேன்

ஆண்டு இரண்டாச்சே மாதம் அயிருபதினாலாச்சே வேண்டுதலின்னங் காணேன் வெம்புறேன் கலியில் மூழ்கி கூண்டுநீர் முன்னேசொல்லிக் குருவுப தேசம் வைத்த ஆண்டின்னம் வருகிலையோ அப்பனே மெய்யுள்ளோனே

இப்படி மகன்தான் சொல்ல இருகையால் மகனை யாவி முப்படித் தவத்தால் வந்த முதலெனத் தழுவிக் கூர்ந்து எப்படி யென்றோ நீயும் ஏங்கவே வேண்டா மப்பா ஒப்பில்லாச் சிங்காசனம் உனக்கென வளரு தப்பா

ஏங்கியே பதற வேண்டாம் எனது மகனே நீகேளு மூங்கிக்கலியை விட்டகன்று முழித்துக்குதித்து வுதித்தன்று தாங்கி யுனைநான் வந்தெடுத்துனது தாயையிடம் நிறுத்திப் பாங்கிலுதித்த மகனுனக்குப்பட்டந் தரிப்பேன் பதறாதே

வண்ணபதியினலங்காரம் வகைகளின்னதென்று சொல்லி எண்ணத்தொலையாதுமகனே இரத்தினசிங்காசனப்பவிசு கண்ணைப் பறித்து நீசனுட கருவையறுத்துக் கலியழித்து எண்ணும்வளர்ந்து வாழவைப்பேன் என்னாணை மகனே

மண்ணிலுள்ளோர் தாமறிய மனுவோர் சீவ செந்தறிய கண்ணேயிவர்கள் கண்காணக் கலியிற் காட்சி மிகநடத்தி புண்ணிற்கதிருபட்டாற்போல் பொல்லாநீசன்கண்டுழைந்து எண்ணியறியா நீசனெல்லாம்ஏங்கி மாள வைப்பேனே

மகனே நீயும் தவமிருக்கும் வாய்த்தஇடத்தில் சென்றால் உகமே யறியக் கலிநீசன் ஓடி வந்து உனைப்பிடித்துச் செகமே ழறிய உன்கையைத் திருக்கிப்பின்னே கட்டி பகையே செய்து மிகஅடித்துப் பாரவிலங்கில் வைப்பானே

வைப்பான் மூன்றே முக்கால்மாதம் வாய்த்தவிலங்கிலிருந்து செய்ப்பாய் கலியையறுப்பதற்குத் தெய்தி இதுவே கைவாச்சு போய்ப்பாரென்பான் பின்னுமவன் பெரிய குற்ற மிகவேற்று மெய்ப்பாயவனுரைத்ததுபோல் மெள்ளவுரைத்து இருந்திடுநீ

மனுவை யடித்ததுபோலே வசைகள் சொல்லி மிகஅடிப்பான் தனுவை யடக்கிக் கொண்டிருநீ சற்றும் புதுமை காட்டாமல் இனிமேலறிவாயென்று எண்ணி மனதிலெனை நினைந்து கனிபோல் மகிழ்ந்துயிருநீ கண்ணே யெனது கற்பகமே

அன்பாயுன்னை யடுத்திருந்த ஆதிச்சாதி யவ்வினர்க்கு தன்பாலருந்துஞ் சாதிகட்குத் தவத்துக்குறுதி தான்கொடுத்து என்பாற் கடலின்கரைதனிலே ஏழுமணிக்கு விடைகொடுத்து பின்பாலவரை யருகழைத்துப்புசத்திலடுக்க இருத்திடுநீ

கண்டாய் கண்டாயுடன் புதுமை கண்ணேவுனக்கு நற்காலம் கொண்டாய் பத்தறையில் கோவில் காலும் சிவலாயமும் தண்டா யுதத்தால் வாகனமும் சத்தி மாத ரிருபுறமும் பண்டோர் காட்சியுனக்குள்ளே பண்பாய்காணும் மகனே

காட்சிச் சிறப்புங் கலியாணம் கவரி வீசிக் கொலுவாரம் சாட்சிக் கணக்கு முன்வருத்திச்சாந்த வர்ணக்கொடிநிறுத்தி வாச்சி யுனக்குத் திருநாளும் வாய்த்த டம்மான முழங்க காட்சி யுனது கண்முன்னே காணு மகனே கலங்காதே

பல்லக் கேறி தெருவீதி பகலத் தேரு நீ நடத்திச் செல்லப் பதிகள் முகித்துத்திருநாள் கண்டு மகிழ்ந்திருநீ வல்லக் கொடி மரம் நிறுத்தி வருவாய் நித்தம் வாகனத்தில் பொல்லாக்கலியன் கண்டுழைந்து நித்தம் நித்தம் மடிவானே

இப்படிச் சிறப்பு எல்லாம் உனக்கிது மகனே மேலும் எப்படி மலங்கி யென்னோடு இதுவுரைத்தேது பிள்ளாய் சொற்படியெல்லாமந்தத் தேதியில் தோன்றுங் கண்டாய் அப்போ நீயறிந்து கொள்வாய் அப்பனும் நீதானாமே

நல்ல மகனே நான்வைத்த விஞ்சையெல்லாம் எல்லை தனில்வந்து இகனை நடத்துமப்பா என்னென்ன பவிசு இன்னம் நடக்குமப்பா உன்னையின்னங் காணார் உலகிலொருமணிக்கு கெடுத்தானேயென்று கெடுவார் வெகுகோடி நடுத்தானம் நம்முடைய நம்மக்கள் குன்றாது புழுத்துச் சொரிவாய்ப் பூமி தனில் நீயும் கழுத்துவரை முன்னூன்றிக் கண்ணுந் தெரியாமல் ஆவியலுங்காமல் ஆடையொன்றில்லாமல் பாவிப் பயல்கள் பரிகாசஞ் செய்யவென்று கிடப்பாய்த் தெருவில் கிழவன்வேசமெடுத்து துடைப்பார் நல்லினத்தோர் தூக்குவார் நம்மினத்தோர் சாணாச் சுவாமி சாவாறு ஆகுதென்று வீணாக நீசரெல்லாம் வெகுளியாய்த்தானகைப்பார் பெண்சிலரைக் கட்டிப் பெரும்புவியோரறிய விண்சீமையோரறிய தேவியரைத் தான்கூட்டி சீமை நருளறியத் தேசந்தனிலாண்டு தாண்மை பொறுதியுடன் சாணார் விருந்தழைத்து மனுக்கள் முறைபோல் வாழ்வாய்ப் புவிமீதில் தனுக்களுனக்குள்ளே சர்வதுமே அடங்கும் எல்லாமடக்கி யானுன்னிடமிருந்து நல்லானேயுனக்கு நாட்டில் சிறப்புமெத்த காணு மகனே கலிநீசன் கண்ணுமுன்னே ஆணும் பெண்ணோடும் அன்புற்றிருக்கையிலே நல்ல திருவாளி நற்பட்டு வாகனத்தில் செல்லத் திருவோடும் செம்பவள மாலையுடன் வாகனத்தேரும் வருமாஞாலத்திருந்து கோகனகமாலே குணமாகவே கூடிக் காணுவோர் காண்பார் காணாதார் வீணாவார் தாணுவே நீயொருவன் தானாக ஆண்டிருப்பாய் இன்னம் பவிசு எண்ணத் தொலைந்திடுமோ வன்ன மகனே வாறதெல்லாங் கண்டிருநீ பதறாதே போயிரு நீ பாரத்தவசியிலே குதறாதே போயிரு நீ கூண்டத்தவசியிலே வாற நீசன் தனக்கு மலங்காதே நின்றுகொள்ளு போறநீசன் தனக்கு பொறுமையாய் நின்றுகொள்ளு என்று மகன்தனையும் எழுந்திருந்து போநீயென மன்றுதனையளந்தோர் மகனைக் கடல் கடத்தி கரையிலே கொண்டு கண்ணருடனுறைந்தார் பிதாவையனுப்பிப் பெரிய வைகுண்டப்பொருள் விதானித்து உச்சரித்து வேதவுல்லாசமிட்டு தெச்சணா பூமி சென்று தவத்ததிலே உச்சரித்து நாதன் உகந்து நடக்கலுற்றார் நடந்தாரே தெச்சணத்தில் நல்ல முனியுடனே படந்தார மாயன் பண்டு தவமிருந்த நலந்தரும் தெச்சணத்தில் நற்றாமரை குளத்து தலத்திலே வந்து சுவாமி தவமிருந்தார்

இருந்தனர் விஞ்சை பெற்று இருபுற முனிவர் சூழ பொருந்திடும் கமலமாது பூரண மதுவாய் நிற்கக் கரிந்திடும் நீசப் பாவி கயிறுவாள் வெடிகள் சூலம் புரிந்தவன் கோட்டி செய்து பிடிக்கவே வந்தானங்கே

வருமுன்னேயருகில் நின்றமக்களை வைந்த ராசர் கருதினமாக நோக்கிக் கடக்கவே நில்லும் நீங்கள் பொருதிட நீசன் வாறான் பொறுத்து நாம் வந்த போது அருகிலே உங்களை அழைத்து நாம்கொள்வோமென்றார்

முப்படியே யுள்ள முறைநூற் படியாலே இப்போது நீசன் இங்கோடி வாறான் காண் மெய்ப்பான மக்களெல்லாம் விலகிநின்று வந்திடுங்கோ செய்கிறதைப் பார்த்துத் திரும்பியிங்கே வந்தவுடன் கையருகிலுங்களையும் கட்டாய் வரவழைப்போம் என்று மக்களுக்கு இயம்ப அவர் விலகிடவே முன்குறோணி விந்திலுள்ள மூடக் கௌடனவன் கூட்டப் படையோடு கொக்கரித்தே துடிப்பாய் சாட்டை வெறிபோலே சாடிவந்தான் கௌடன் சூழப் படையைச் சூதானமாய்நிறுத்தி வேழம் பலரேவி வெடியாயுதத்துடனே வந்து வளைந்தான் வைகுண்டர் வாழ்பதியில் சிந்துக்குயிரான ஸ்ரீபத்மநாபருமே கவிழ்ந்துபதி வாசலிலே கட்டிலின் மேலிருக்க அவிழ்ந்த துணியோடே அவரிருக்குமுபாயமதை அறியாமல் நீசன் அணிவகுத்துத் தன்படையை குறியாய்ப் பிடிக்கக் கூட்டமதில் நுழைந்து சாணாரினங்கள் சதாகோடி கண்டுளைந்து வாணாள் வதைப்பானோ என்று மனதுளைந்து குதிரை மேலேறிக் கொடுஞ்சாட்டையால் வீசி சதிரு சதிராய்ச் சாணாரைத் தானடித்து அடிபட்ட போது அவர்கள்மிகக் கொக்கரித்து முடிபடவே யிந்த முழுநீச வங்கிசத்தை இப்போதொருநொடியில் இவரையெல்லாமடித்து மெய்ப்பாகக் கொன்று விடுமோமெனச்சினத்தார் ஆளுக்கொருவன் ஆவானோ நீசனெல்லாம் தூளுபோலாக்கவென்று துடியாயெழுந்திருந்தார் சான்றோர் சினத்துத் தாறு மிகப்பாய்த்து ஆண்டவரை நெஞ்சில் வைத்து ஆடை மிக இறுக்கி உடையிறுக்கிக் கட்டி உல்லாசத் தொங்கலிட்டு படைத்திரளாய்ச் சான்றோர் பண்பாயொருமுகமாய் எதிர்த்துநிற்கும் போது எம்பெருமாள் தானறிந்து பொதுக்கென்ற கோபமதைப் புத்திதனிலடக்கி பொறுத்து இருந்தவரே பெரியோரேயாகுமக்கா அறுத்திடவே வென்றால் அபூருவமோ என்றனக்கு வம்புசெய்வதைப் பார்த்து வதைக்க வந்தேனக்குலத்தை அன்புக் குடிகொண்ட அதிகமக்கா நீங்களெல்லாம் பொறுத்து இருங்கோ பூலோகம் ஆளவைப்பேன் மறுத்துரையாடாமல் மக்களென்ற சான்றோர்கள் என்னசெய்வோமென்று இவர்கைகளைத் தாங்கடித்து பின்னே விலகிப் பெரியவனேயென்றுநின்றார் நீசன் மகிழ்ந்து எதிர்ப்பாரைக்காணோமென்று பாசக்கயிறுகொண்டு பரமவைகுண்டரையும் கட்டியிறுக்கிக் கைவெடியாலிடித்து கெட்டியிறுக்கிக் கீழேபோட் டுமிதித்து தலைமுடியைத் தான்பிடித்து தாறுமாறாயிழுத்து குலையக் குலைத்ததுபோல் குண்டரைத்தானலைத்து குண்டியிலே குத்திக் குனியவிடுவானொருத்தன் நொண்டியோவென்று நெளியிலே குத்திடுவான் வெடிப்புடங்கால் சுவாமி மேலெல்லாந்தா னிடித்து அடிப்புடங்கு கொண்டு அடித்தடித்துத் தானிழுப்பான் சாணாருக்காகச் சமைந்தாயோ சுவாமியென்று வாணாளை வைப்போமோ மண்டிப் பதனிக்காரா பனையேறி சுபாவம் பட்டுதில்லை யென்றுசொல்லி அனைவரையும் வருத்தி ஆபரணந் தேடவென்றோ சமைந்தாய் நீசுவாமியென்று சாணாப்பனையேறி பனைச்சிரங்கின்னம் பற்றித்தெளியலையே உனைச்சுவாமி யென்றால் ஒருவருக்கு மேராதே ஆளான ஆளோநீ ஆளில் சிறந்தவனோ தாழாய்க் கிடந்து சாமியென்று வந்தாய்நீ நாரணசுவாமி நானென்றதும் நீயோ வாரணத்தின் காலில்கட்டி வாட்டுவோம் பாருஎன்பான் உன்னோடு நின்றவர்கள் உன்னையடிக்கையிலே என்னோடு வந்து என்னவென்று கேட்கலையே நீசுவாமியென்றால் நெகிழுவரோஇவர்கள் பாசக் கயிறு பற்றுமோவுன் கையிலே வகைதேடவென்று மனுச்சுவாமியென்றாயே புகையோடு புகையாய்ப் போறாய்நீ வம்பாலே நருளை வருத்திவிட்ட நல்லமந்திரத்தாலே மருளச்செய்தெங்களை மண்ணில் விழவை பார்ப்போம் அல்லாமலுன்கைக் கட்டும் மறுவதற்கு வல்லாமை யுண்டானால் மந்திரத்தைப் பார்நீயும் கூனைப் போலிருந்து குறுமுழி முழிப்பதென்ன நானன்னாவென்று நகைப்பாரொருகோடி ஏசுவார் கோடி எறிவாரொருகோடி பேசுவார் கோடி பேயன்வெறும் பேயனென சொல்லி நகைப்பார் சுத்தமுள்ள நாரணரை பல்லுயிரும்படைத்த பரமன்வாய் பேசாமல் கவிழ்ந்து கண்மூடிக் களிகூர்ந்தே மகிழ்ந்து சவந்தரிய நாதன் தானே நடக்கலுற்றார் வெடிகொண்டிடிப்பார் வெட்டவாளோங்கிடுவார் அடித்தடித்துத் தள்ளி அங்குமிங்குமிழுத்து வேதனைகள் செய்வார் வேத நாராயணரை சாதனைகளுள்ள சர்வபர நாரணரும் எவ்வுகத்துக்கும் இப்பாடு என்பாடு இவ்வுகத்துக்கும் இப்பாடு என்பாடு அவ்வுகத்திலுள்ள அநியாயப்பாவிகளை இவ்வுகத்தைப் போலே எரிக்காமல் விட்டேனோ என்று மனதில் இதமாய் மிகவடக்கி ஒன்று முரையாமல் ஊமைபோலே நடந்தார் நடக்கவே மாயன் நல்லன்பு சான்றோர்கள் கடக்கவந்து நின்று கண்ணீர் மிகத்தூவி ஏழைக்காயிரங்கி எங்கள்குலமீதில் வந்தீர் கோழைக் குலநீசன் கொண்டடிக்க வந்தானே பாவி நீசனாலே பட்ட துயரறிந்து ஆவுமேய்த்த நாதன் ஆளவந்தார் நம்மையுமே அய்யோ இனி நாமள் அலைந்துமிகப்போவோமென மெய்யோடே குத்தி விழுந்தழுவார் சான்றோர்கள் தாய் தகப்பனில்லையென்று தானடித்த நீசனெல்லாம் வாயயர்ந்திருந்தானே இவர்வந்த நாள்முதலாய் இனியாரு நம்மை ஏற்றுக்கை தாறதுதான் தனியானோம் நாமளினித் தலையெடுப்பதெக்காலம் என்று சான்றோர்கள் சொல்லியழுத சத்தம் கன்றுக்கிரங்கும் கண்ணர் மிகக்கேட்டு மலையாதுங் கோநீங்கள் மாமுனிவன் புத்திரரே அலையாதுங்கோ மக்காள் அய்யா திருவாணை இப்பூமி தன்னில் வந்து `இத்தனை நாள்வரைக்கும் கைப்பொருளுக்கிச்சை கருத்தில் மிகநினைத்து கைக்கூலி வேண்டிக் கருமஞ்செய்தேனானாக்கால் இக்குவலயத்தில் நானும் இனிவரேன் கண்டிருங்கோ தன்மமது நிச்சத்துத் தாரணியில் வந்ததுண்டால் நன்மைக் கடைப்பிடித்து நான்வருவேன் நானிலத்தில் ஒன்றுக்கு மலைய வேண்டாங்காணுத்தமரே என்றைக்கும் நானிருப்பேன் என்மக்கள் தங்களிடம் ஆளுவேனோர் குடைக்குள் ஆனவைகுண்டமனாய் ஆளுவோம் மக்கா வையகத்தை நாமாக

ஒன்றுக்கு மலையவேண்டாம் உகபரநாதனாணை என்றுக்கு மலையின் மீதில் ஏற்றின தீபம் போலே கன்றுக்குப் பாலு போலும் கண்ணுக்குப் புருவம் போலும் என்றுக்கு மக்கா வுங்கள் இடமிருந்தரசு ஆள்வேன்

முன்முறை விதியாலிந்த முழுநீசப்பாவி கையால் என்விதிப் படவே வுண்டு இரப்பன் நான்என்றதாலே பின்விதி யெனக்கு நன்றாம் பெரும்புவியாள்வோமக்கா உன்விதி நல்ல தாகும் ஒளிவறா வாழ்வீர் தாமே

என்று மகிழ்ந்து எம்பெருமாளுள்ளடக்கி மன்று தனையளந்த மாலோன் நடக்கலுற்றார் கெட்டினக் கெட்டைக் கிறுக்க முடனிறுக்கி கட்டினக் கட்டோடே கடுநீசன் தானடத்த ஏசுவார் மாயவரை எறிவார்காண் மாயவரை பேசுவார் மாயவரைப் பேயனென்பார் மாயவரை இப்படியே நீசக் குலங்களெல்லாம் மாயவரை அப்படியே பேசி அடித்து மிகநடத்தி நீசக் குலமிருக்கும் நெடுந்தெருக்களூர்வழியே பாசக் கயிறோடு பகற்கள்ளனைப்போலே தெருவுக்குத் தெருவு சிறுகுழந்தை நீசர்குலம் வருகின்ற மாயவரை மண்கட்டி பேர்த்தெறிவார் தலையைப் பிடித்திழுப்பார் சடைப்பேயன் பேயனென்பார் இலைசருகு போலே எரியுகின்ற சாதியெல்லாம் குண்டியிலேயொருவன் கோல்கொண்டு குத்திடுவான் நொண்டியோ வென்று நெளியிலே குத்திடுவான் நம்மள் குலத்தை நாணங்கெடுக்கவந்த பம்பக்குறும்பேயன் பம்பைதனைப்பின்னுமென்பார் அதிலுஞ் சிலபேர் அடடாபோ என்றிடுவார் மதிலேறி வந்து மாமட வார்சிலர்கள் இவன்தானடியோ என்னையும் ஆடவைத்து சவந்தனை சுட்டதுபோல் தான்சுட்டப் பேயனிவன் தலைமயிரைப் பனையில் தான்பங்கு வைத்திறுக்கி குலையக் குலையக் கொன்னகொடும் பாவியிவன் என்று எறிவாள் இவர்கள் சிலரம்மானை அன்றதுகள் கண்டு அதிலுஞ் சிலமடவார் ஆமடியோவுங்களையும் அழைத்தானோ வீட்டில்வந்து ஓமடியோ இந்த இறுமாப்புப்பேசாதுங்கோ அன்றைக்கவனை அடிபணிந்து நின்றுகொண்டு இன்றைக்கவனை எறியத் தொடர்ந்தாயோ என்று சிலபேர் எறியாதே யென்றுரைப்பார் நன்று நன்றென்று நாரணருமுள்ளடக்கி ஒருத்திக்கொருத்தி உரைத்திடுங்கோவெனவே கருதிமுகம் பாராமல் கண்ணர் மிகநடந்தார் பாவிக் குலங்கள் பச்சைமால் நாரணரை தாவிச் சுசீந்திரத் தலம் நோக்கிக் கொண்டுசென்றார் கொண்டுபோகும்வேளை கொடும்பாவி நெட்டூரன் விண்டுரைக்கக் கூடாத வேதனைகள்செய்யலுற்றான் அய்யய்யோ மாயவரை அன்னீத மாபாவி செய்த வினையெல்லாம் சொல்ல முடியாதே கொண்டுவிட்டான் மாயவரைக் கூண்டகலிராசன்முன்னே கண்டு கலிராசன் கருத்தில் மிகத்தேர்ந்து பார்ப்போம் பரிட்சை பயித்தியக்காரனுடனே தாற்பரியமாகத் தன்விரலின் மோதிரத்தை கழற்றியொருவர் காணாமல் கையடக்கி சழத்தி வருவது தானறியா நீசன்வன் ஏதடா என்றன் கைக்குள்ளிருப்பதையும் ஓதடா வுன்றன் உற்ற வலுவாலே அப்போது மாயன் அடக்க மிக அறிந்து இப்போதுரைத்தால் இந்தநீசக்குலங்கள் கண்டு பிடித்துக் கட்டுவார் நம்மையுமே தொண்டு செய்யுஞ் சான்றோர் துயரமது மாறாது நாம்நினைத்தக் காரியமும் நடந்திடாதானதினால் ஏனிதைத்தான் சொல்லப் போறோமெனஅடக்கி எல்லாம்படைத்த ஏகனுக்கே தெரியும் அல்லாமல் நானுரைத்தால் ஆகுமோ ஏதாலும் என்று உரைத்தார் எம்பெருமாள்மாயவரும் அன்று கலியரசன் அய்யாவைத் தாம்பார்த்து இப்போதொரு மருட்டாய் இவன்சமைந்தான் சாமியென்று முப்போது உள்ளமுறை உரைக்க ஏலாதான் தருணச்சாமி யிவனும் தருணத்துக்குஆகாது மருளிதுதானென்று மனமது நொந்துரைப்பான் கொண்டுபோங்கோ சறடன் கூண்டவன் முன்பதிலே என்றுரைத்த போது ஏவல் சீவாயிகளும் நடத்தியிழுத்து நாராயணரையுமே கடத்திச் சறடன் கண்டிருக்கக் கொண்டுவிட்டார் உடனே சறடன் உபாயமதைப் பார்ப்போமென்று தடதடென தானெழுந்து சாராயமானதிலே அஞ்சுவகை நஞ்சு அதில்கலந்தான் மாபாவி நஞ்சில்லை இதுதான் நல்லபாலென்றீந்தான் பாலென்ற போது பச்சைமால் நாராயணரும் காலனைக் காலாலுதைத்தக் கடவுளார் தஞ்சமென்று வேண்டியகமேற்றார் வேதநாராயணரும் ஆண்டியானதினால் அஞ்சாதிருப்பதையும் பார்த்துச்சறடன் பண்பாயகமகிழ்ந்து வேற்றொரு சூட்சம் வேறேயுண்டாகுமென என்னமோ என்று இவனுணர்ந்துப்பாராமல் பொன்னர் மயக்கம் பெரிய மயக்கமதால் கொடுபோங்கோவென்று கூறினான் சேவகரோடு வெடுவாகக்கொண்டு வெறு நீசன் டாணாவில் அடைத்து வைத்தானங்கே அன்னீத மாபாவி திடத்தமுடன் நாரணரும் சிந்தைமிக மகிழ்ந்து இருந்தாரேயங்கே ஏழைக்காகஇரங்கி தருந்தார மாயன் தருமமதைஎண்ணி சான்றோருக்காகத் தடியிரும்பிலுமிருந்தார் மாண்டோரையுமெழுப்பும் மாயவலுவாண்டி அய்யய்யோ அவரை அடைத்துவைத்தேயிருந்த பொய்யோ புரைக்குள் பொறுக்குமோ கண்ணுகண்டால் மோளுக்குழியும் மொய்த்தத்தெள்ளினங்களுமாய் தோளுவழியே சொரியுதே தெள்ளினங்கள் அட்டை மிதக்க அரியத்தேள் ஈமிதக்க விட்ட நரகு மிகுவாய்ப் புழுமிதக்க நாற்றத் துறைகள் நரகத்துறைபோலே பார்த்த இடமெல்லாம் பலபுழுக்களுஞ்சரிய ஐயோ அய்யாவை அடைத்தப்புரையதிலே கையாடி நிற்கக் காரணமோ மாயவர்க்கு சான்றோருக்காகத் தர்மக்குருநாதன் மீன்று முழியாமல் முகமலர்ந்தங்கிருந்தார் ஏழைகளைக் காக்க இருமூன்று யுகங்கள் தோன்றி கோழைக் குலமறுத்து யுகதர்மம் காத்த மாயன் இவ்வுகத்துக்கு இப்புரையில் இருந்து அழுந்தவென்று செவ்வு மகாவிட்டிணுவும் சிவனே எனவிருந்தார் இருந்தாரே மாயவரும் ஏழைகளுக்காகயிரங்கி கருந்தார மார்பன் கருத்தில் மிகவடக்கி எல்லாமடக்கி இவரிருக்கும் நாளையிலே பொல்லாக் கலியன் புறப்பட்டான் அனந்தபுரம் இப்பேயன்தனையும் அங்கேகொண்டு வாருமென்று அப்போது சொல்லி அவனடந்தான் மேற்கெனவே உடனே சிவாயி உற்ற நாராயணரைத் திடமாகக்கூட்டிச் சிணமே நடக்கலுற்றான் கொண்டு போனாரே கோட்டாற்று ஊரோடே கண்டுபெரும் பாவியெல்லாம் கட்டிகொண்டு தானெறிய எறிவார் சிலபேர் ஏசுவாரேசிலபேர் வெறிப்பேயனென்று விரட்டி மிகஎறிவார் எல்லாம் பொறுதியுடன் எம்பெருமாளுமடக்கி கல்லாரையெல்லாம் கசக்கியறுப்பேனென்று மனதிலடக்கி மாய நெடுமாலும் கனகத் திருமேனி கண்கவிழ்ந்தே நடந்தார் நடந்தாரே கோட்டாறு நல்ல பிடாகைவிட்டு கடந்தாரே சுங்கான் கடையெல்கைத் தானும்விட்டு பத்மனாபபுரத்தெல்கைப் பார்த்துத் தெருவோடே உற்பனமாய் மாயன் உள்தெருவோடே நடக்க ஆகாத பாவியெல்லாம் அவரைக்கண்டே நடக்க வாயாராப்பேசி வைதாரே நீசரெல்லாம் அதிலுமன்போர்கள் அவரைக்கண்டே பணிந்து இதுநாள் வரையும் இவர்நடந்த சட்டமதில் பொல்லாங்கு செய்தாரெனப் பேச்சுநாம் கேட்டதில்லை எல்லாங் கடைதலைக்கு இட்ட தர்மமே காக்கும் என்றன்போர் சொல்லி அவரழுது நின்றனராம் அன்றந்த நாதன் அதுகடந்துப் போயினரே போனாரே தக்கலையின் புரைக்குள்ளேயுமிருந்து மானான பொன்மேனி வாலராமங் கடந்து வாரிக் கரையும் வாய்த்த நதிக்கரையும் சீரிய நாதன் சென்று கண்டே நடந்தார் நடந்துத் திருவனந்தம் நல்லபுரத்தெல்கைகண்டு அடர்ந்த மரச்சோலை அடவிவனங்கள் கண்டு கொண்டு எம்பெருமாள் கண்கொள்ளாக் காட்சியுடன் பண்டுநாம் சீரங்கத்தைப் பார்த்தகன்றே நடந்து இவ்வூரைக் கண்டு எத்தனைநாளாச்சுதென்று செவ்வுமகா விட்டிணுவும் சிந்தைக்குள்ளேயடக்கி அவ்வூரைப் பாராமல் அந்த வனமானதுக்குள் எவ்வுயிர்க்குந் தானாய் ஈயுகின்றபெம்மானும் நாட்டுக் கலியனுக்காய் நற்சோதனையெனவே நீட்டின காலில் நீசனிட்ட விலங்கோடே ஏழைகளுக்காக இருந்தார்பாராவதிலே கோழைக்குடும்பக் குறும்பர் தமைவதைக்க மனுப்பாராவதிலே மாயாண்டி தானிருந்தார் தனுப்பாரமடக்கித் தாழ்மையுடனேயிருக்க ஆகாத நீசன் அழியும் நினைவதினால் போகாத படிக்குப் பேயன் தனைவிலங்கில் போட்டுவையென்றும் புள்ளிப்பதனமென்றும் கோர்ட்டுக்காரர் தமக்குக் கொடுத்தானே உத்தரவு அந்தக் கலிராசன் அவனுரைத்த உத்தரம்போல் சந்தமுனி மாயனையும் தான்விலங்கிலிட்டு வைத்தான் அப்போது மாயன் அதிக சான்றோர்களுக்காய் இப்போ பொறுதிகொண்டு இருக்கேனென இருந்தார் நாட்டுச்சோதனைக்காய் நாராயணர் விலங்கில் நீட்டின காலோடே நிலம்பார்த்தே யிருந்தார் சாணான் பால்வைத்துச் சந்தோசப்பாலேற்று நாணாமலெம்பெருமாள் நற்சோலையிலிருந்தார் சோலையில் வாழ்பறவை சாமிவந்தாரென்றுசொல்லி ஏலேலமுங்கூறி எந்நேரமுந்தொழுது நன்றான மாமுனியும் நற்பறவையானதுவும் கொண்டாடிக் கொண்டாடிக் கொஞ்சிவிளையாடிருக்கும் இந்தவனச் சோலையிலே எம்பெருமாள் தானிருக்க சந்தமுடனருட்கள் சதாகோடியாகவந்து தொழுது நமஸ்கரித்துத் தூயோன் பதம்பூண்டு முழுது முன்பாதமென மொய்குழலார் சிலர்கள் நாற்பது வயசாய் நான் சேயில்லாதிருந்தேன் காப்பதுன் பாதமெனக் கண்டு தொழுதபின்பு தந்தாரேயெங்களுக்குச் சந்ததி தழைத்தோங்க வந்தாரே நாயடியார் வாழுமனையிடத்தில் என்ன உபகாரம் இவர்க்குநாம் செய்வோமென்று கன்னல் கதலிக் கனிகள் கொடுப்போமோ தர்மமதால் தீர்த்தச் சஞ்சலங்களானதையும் அம்மம்மா சொல்ல ஆராலுமுடியுமோடி குட்டம் பதினெட்டும் குடித்தபதமொன்றாலே கட்டம் முதலாய்க் காணாப் பறந்ததுவே இப்புதுமை செய்தவர்க்கு இப்போதொருபுதுமை கொப்பளிக்கு முன்னே கூடாதோஇவரால் ஏதோவொருதொழிலாய் இவர்பம்மலாயிருக்கார் சூதால் கொடுமைவந்து சுற்றுங்காண் நீசனுக்கு என்று சிலபெண்கள் ஏழைபங்கோனருளை கண்டு தொழுது கருத்தகலாநின்றுடுவார் அப்படியே நருட்கள் ஆதிநாராயணரை செப்படிபோலவர்க்குச் செய்தநன்றி சொல்லியவர் கூரைக்குப் போகக் கூறநினை வில்லாமல் நாரணரைச்சூழ்ந்து நமஸ்காரஞ் செய்து நிற்பார் சூழ்ந்து நருட்கள் தொழுதுமிக நிற்கையிலே தாழ்ந்துசாகுங்கலியன் சறடன் தனைநோக்கி பேயனொரு சாணானைப் பிடித்துக்கொண்டு வந்து தூய இரும்பு விலங்கிலே போட்டு வைத்தோம் சாமியென்று பாவித்தச் சாணானை நாமும் காமியத்தால் பெருத்தக் கடுவாய் தனைவருத்தி ஏவிவிட்டுப்பார்த்து இருவகையுந்தானறிந்து போவெனவே சொல்லிப் பேயன் தனையனுப்ப வேணுமேயிப்போ விவரமென்ன என்றுரைத்தான் ஆணுவ மூர்க்க அரசனிதுவுரைக்க நல்லது தானென்று நாட்டமுற்றுச்சறடன் வல்ல பலச்சேவுகரை வாவென்றருகழைத்து இப்போதொரு நொடியில் ஏழுமலையுந் தேடி வெற்போடு வெற்பெல்லாம் வேகமுடன்தேடி வேகம் பெரிய வேங்கை கடுவாய் பார்த்து நாகமதிலுங் கடிய நல்லகடுவாய்பார்த்து நாழிகை ஏழதுக்குள் நம்மிடத்தில் கொண்டுவர தூளியது பறக்கும் சூறாவளியதுபோல் கொண்டு வாவெனக் கூறிச் சறடனுமே விண்டுரைப்பான் பின்னும் வீரியமாய்ச் சேவுகர்க்கு நன்று மொழிகேளும் நல்வீரச்சேவுகரே இன்றேழு மணிக்குள் இங்கேகொண்டு வராட்டால் தூக்கியே வுங்களையும் தூண்டலில் போட்டிடுவேன் ஆக்கினைகள்செய்துவுங்கள் ஆமிசத்தை வாங்கிடுவேன் என்று சொல்லிச்சேவுகரை இறுக்கமுடனிறுக்கி இன்று போமெனவே ஏற்றவரிசை கொடுத்து அனுப்பினான் சேவுகரை அந்த வேளைதனிலே பனிப்பிசினும் வெயிலைக் கண்டு பதறினாற்போல் பதறியே சேவகர்கள் பண்பாகச் சட்டையிட்டு குதறியே வந்து கூண்டுரைப்பார் மாயனோடு நாராயணரே நாங்கள்போகும் கருமம் பேராய் பலிக்கவேணும் பெரிய திருமாலே உம்மைச்சோதனைபார்க்க வலுக்கடுவாய்பிடித்துவர செம்மையுள்ள ராசன் சிணமேயனுப்பினர்காண் ஆனதினால் கடுவாய் அடியேங்கள் கையதிலே போனவுடன் சிக்கிடவும் புண்ணியரே வரந்தாரும் என்றுரைக்கச் சேவுகர்கள் எம்பெருமாளுள்ளமதில் நன்று நன்றென்று நாராயணர் சிரித்து விடைகொடுத்தார் கடுவாய் விரைவாய் சிக்கிடவும் படைச் சேவுக்கத்தார் பாரமலை தானேறி கடுவாய் கிடக்கும் கனமலைகள் தான்தேடி முடுகித் தலையாரி முடிச்சு வலைவளைந்து காடு கலைத்துக் கடுநாய்கள் விட்டேவி வேடுவர்களெல்லாம் விரைந்து கலைத்தனரே கலைக்க வொருகடுவாய்க் கடுங்கோபங்கொண்டெழுந்து வலைக்குள் நுழைந்தது மாயவனார் தன்செயலால் உடனே தான் சேவுகர்கள் ஓடிமிக வளைந்து அடவுடனே வலையை அமர்த்தி மிகப்போட்டு உபாயத்தாற் சென்று ஒருகூட்டுக்குள்ளடைத்து கபாடத்தால் கட்டிக் கனகூடு தானெடுத்து தாமரை குளத்துச் சன்னாசி பாதமதால் நாமளும் மன்னனுக்கு நாடிப்பிழைத்தோமென்றார் நல்லவென்னியுண்டு நற்சாணாச்சுவாமியிடம் வல்லவர் தானென்று மாதயவாய்க் கொண்டாடி தேடித்திரியாமல் திக்கெங்கும் வாடாமல் ஓடித் திரியாமல் உயர்சாணாச்சாமியினால் நாமும் பிழைத்தோம் நற்கடுவாய்க்கொண்டு வந்தோம் சீமையாளுமரசன் செப்பின வாக்குப்படியே கடுவாயைக் கொண்டு காலமே போவோமென வெடுவாகக் கூடதுக்குள் வேங்கைதனையமர்த்தி சுமந்துகொண்டு வந்தார் துடியான சேவுகர்கள் அமர்ந்த கடுவாய் அதறுகின்ற வோசையினால் நருட்கள் மிகப்பதறி நாற்கரைக்குமாட்கள் விட்டு வருகின்ற வேளை மாகோடியாய்ச்சனங்கள் சாமியென்ற சாணானைச் சோதிக்க வேணுமென்று ஆமியமாய்க் கடுவாய் அதோகொண்டு வாறாரென பார்க்க வருஞ்சனங்கள் பலசாதியுங்கோடி போர்க்குத் திரள்போல் போறவகைபோலே எண்ணிறந்த நருட்கள் இதிற்கூடி வந்தனரே மண்ணளந்த நாதன் மனமகிழ்ந்தேயிருக்க சாமியருகில் சூழ்ந்திருந்த சான்றோர்கள் நாமினித்தான் செய்வதென்ன நாதனே யென்றுசொல்லி கேட்டு நாராயணரும் கீழ்ச்சுண்டுக்குள்மகிழ்ந்து நாட்டுக்கரிவிதிநான் நாராயணனும்நான் பட்சி பறவை பலசீவசெந்துக்களை நிச்சயமாய்ப்படைத்த நீலவண்ண நாதனும்நான் மண்ணேழளந்த மாயப்பெருமாள்நான் விண்ணேழளந்த விஷ்ணு திருவுளம்நான் ஏகம் படைத்தவன்நான் எங்கும் நிறைந்தவன்நான் ஆகப்பொருள் மூன்றும் அடக்கமொன்றானதினால் நாதக்கடல்துயின்ற நாராயணனும் நானல்லவோ சீவசெந்துக்கெல்லாம் சீவனும் நானல்லவோ இந்நீசனெல்லாம் என்னையறியாதிருந்தால் மின்னிலத்தில் நான்படைத்த மிருகமறியாதோ என்றேயடக்கி ஏகந்தனை நினைத்து ஒன்றுக்கு மஞ்சாதே உற்றமக்கள் சான்றோரே பதறாதே யென்றனுடப் பாலகரே யென்றுசொல்லி இதறாதே மாயவனார் இருந்தார் காணம்மானை அப்போதவரிருக்க அம்மிருகமானதையும் வைப்போடு நெஞ்ச மாநீசராசனிடம் கொண்டு வைத்தாரந்தக் கோபக்கடுவாய் தனையும் கண்டு கலிராசன் கனத்தசந்தோசமுடன் அன்று சிப்பாயிகட்கு ஆனவரிசைகொடுத்து இன்றுகடுவாய்தனை இப்போது கொண்டுசென்று கூட்டிலடைத்துவைத்துக் கோபமதுவருத்த ஈட்டிமையாயதற்கு இரையொன்றும் போடாமல் இன்றைக்கு வைத்து இதுநாள் கழிந்ததன்பின் சென்றந்தப்பேயனிடம் செல்லவிடலாமெனவே அடைத்து வை போவெனவே அரசன் விடை கொடுக்க திடத்தமுடன் சேவுகர்கள் சென்றடைத்தார் கூடதிலே அன்றிராச் சென்று அடுத்தநாள் சென்றதற்பின் இன்று கடுவாய் திறந்து இகழ்ச்சியது பார்பபோமென்று வந்தானே யந்த மாநீசப்பாதகனும் தந்தாய்ச்சறடன் சௌனி கௌடனுமே கவுடன் வெகுடன் கீர்த்திதுரைசானிகளும் மகுடவர்த்தனர் முதலாய் மந்திரிமார்களுமே துலுப்பர் சலுப்பருடன் சிப்பாயிமார்களுமாய் அலுப்பர் பட்டாணிகளும் ஆனகரிகாலாளும் காலாளும் வீராளும் கருமறவர் சேகரமும் சூலாளும் தோலாளும் சூழ்ந்தபடையாளர்களும் ஒக்கத்திரண்டு ஒருமித்தாங்காரமுடன் மிக்கத்திரண்டு வெடியாயுதத்துடனே ஆனைக்காரர்கோடி அதிர வந்தாரங்கே சேனைக்காரர்கோடி திரண்டுவந்தாரம்மானை இந்தப்படையோடும் எச்சாதி தன்னோடும் வந்து வளைந்தார் மாகடுவாய்க்கூட்டையுமே அப்போது ராசன் அருகில் தலையாரிகளை இப்போது இந்த ஏற்றகடுவாய்தனையும் குண்டியிலே கம்புகொண்டு கோபம்வரகுத்துமென்றான் கண்டு கடுவாயதுவும் கம்பதுக்கேபதறி அதறி மிகமுழங்கி அதுகவிழ்ந்து தான்படுத்து பதறியது கிடந்து படுக்கையிளகாமல் நீசனவன் குத்த நெடுஞ்சறடன் ஆகாமல் வாசப்பொடிவருத்தி வன்னப்பொடிநிறைத்து மட்டாய்க் கடுவாய் மாறியிளகாமல் கிடந்ததுகாண் அய்யா கிருபையதினாலே தடந்தெரியா வண்ணம் சனங்கள் மிகப்பார்க்க ஈட்டியெடுத்து இனிக்குத்தவேணுமென்று மேட்டியொருவன் விசையாகக் குத்திடவே எட்டிக் கடுவாய் ஈட்டி தனைப்பிடித்து விட்டிடவே யருகில் நின்றதொருவேதியனை குத்திச்சே யீட்டி குடல்பீற அம்மானை கத்தியும் பட்டுக் கதறியொருவன்சாக பார்த்திருந்த நீசப் பாதகனேதுரைப்பான் நாற்றிசைக்குமேராதே நல்மறையோன் பட்டதுதான் ஆயிரம் பசுவை அடித்துமிகக் கொன்றாலும் தோசமீதல்லவொரு வேதியனைக்கொன்றதுதான் என்னபோலாச்சு யாம்நினைத்த காரியங்கள் மன்னன் கலிராசன் மாசறடனுமயர்ந்து ஞாயமீதல்லவென்று நடந்தானரண்மனைக்கு தோசமொன்றேற்றோமென சொல்லி மிகப்போனான் அப்போது சனங்கள் அல்லோருமேதுரைப்பார் இப்போதிப்பேயனுக்கு இதுவுமொரு நல்லதுதான் என்று சொல்லி நீசன் ஏற்ற சறடனுமே ஒன்றுமுரையாடாமல் உள்ளபடையத்தனையும் கூட்டிக்கொண்டு போனான் கோட்டையதுள்ளம்மானை வேட்டைப்பலித்துதில்லை வெற்றிதான் பேயனுக்கு பார்க்க வந்த சனங்கள் பலதிசைக்குமிவ்விசளம் ஆர்க்குமிகவே அறிவித்தகன்றனரே அப்போ சுவாமி அருகில் மிகவாழும் மெய்ப்பான சனங்கள் மெத்த சந்தோசமதாய் இண்ணத் தறுவாய் ஈசுரனார் காத்ததுதான் அண்ணல் காயாம்பு அச்சுதனார் காத்ததுதான் என்று மனமகிழ்ந்துஎம்பெருமாள் நாரணர்க்கு அன்று விவரம் அறிவித்தாரன்போர்கள் கேட்டு நாராயணரும் கீழ்ச்சுண்டுக்குள் மகிழ்ந்து ஆட்டுவோமாட்டுவோங்காண் அல்லாமல் வேறுளதோ இப்படியே சொல்லி இருக்குமந்த நாளையிலே முப்படித்தான் ஈசர் மொழிந்தநாளதுவரைக்கும் இருப்போமெனச்சொல்லி இருந்தார் காணம்மானை அருப்பான நீசன் அவன்சிலநாள் சென்றதன்பின் என்ன விசாரம் இப்பேயனுக்குகெனவே தன்னேயிருந்து தானினைக்கும் வேளையிலே முன்னேயொருயுகத்தில் மூவரிய நாரணர்க்கு அன்னமொடு பாலும் அருந்த மிகக்கொடுத்த ஆயர் குடியில் அவதரித்தக் கோமானில் தூயவொரு கோனும் துணிந்தங்கெழுந்திருந்து பத்தியுள்ள நாரணரைப் பாராவது இளக்க உத்தரித்துக்கோனும் உலகமதையாளுகின்ற மன்னவன் முன்பில்வந்து நின்றங்கு ஏதுரைப்பான் தன்னதியமானத் தலைவனே கேட்டருளும் நம்முடைய ராச்சியத்தில் ஞங்ஙளிடதன்னினத்தில் எம்முடைய ஆளாய் இருக்கின்ற இச்சாணான் சாணானில் நல்ல தன்மைவெகுமானமுள்ளோன் கோணாமனதுடையோன் குணமுடைய நல்லவன்காண் நேர்மையொழுங்கோன் நேர்சொல்லொருவாக்கன் ஓர்மையுடையோன் உபகாரக்காரனிவன் ஆனதாலெங்களுக்காய் அரசேநீர் தாமுருகி ஈனமிலாதெமக்காய் இரங்குமெனத்தொழுதான் அப்போது அரசன் அவன்மனது தானிளகி இப்போதிவனை யாமனுப்பி விட்டிடுவோம் விட்டாலவனும் மேலுமிருக்குமுறை கட்டாகச் சொல்லிக் கைச்சீட்டெழுதிவைத்துப் போகச்சொல் லென்று போகண்டனார்க்குரைக்க ஆகம் மகிழ்ந்து ஆயன்மறுத்தேதுசொல்வான் என்ன விதமாய் எழுதிவைக்கும் வாசகங்கள் மன்னவனே சொல்லுமென மாறியவன்தொழுதான் அப்போதரசன் எல்லோருமேகேட்க இப்போதிவனினத்தில் எத்தனைபேர்க்கானாலும் ஒப்போடுறவாய் ஒத்திருந்து வாழ்வதல்லால் சற்பம்போலொத்த சகல சாதிதனக்கும் உத்தரவு சொல்லாமல் உபாயமாய்த்தானிருந்து மற்றுமொரு சாதிகளை வாவென்றுரையாமல் தன்னொரு சாதி தன்னோடிருப்பதல்லால் பின்னொரு சாதி பிதனம்வைத்துப் பாராமல் இனத்துடனே சேர்ந்து இருப்போம் நாமென்றுசொல்லி கனத்தோடவனும் கைச்சீட்டெழுதிவைத்து பின்னவன் எல்லையிலே போகச்சொல்லென்றுரைத்தான் மன்னன் கலியுரைத்த வாக்கின் படியெழுதி ஒப்பமிடச் சொன்னார் உலகளந்த பெம்மானை செப்பமுடன் நாரணரும் சிரித்து மனமகிழ்ந்து நம்மாலே சொல்லி நகட்டப்படாதெனவே சும்மா அவன்வாயால் சொல்லிச் சுமைசுமந்தான் இதல்லோ நல்ல இயல்காரியமெனவே அதல்லோ வென்று அரிமாலகமகிழ்ந்து கைச்சீட்டை சுவாமி கைகொண்டு தான்கீறி வச்சுக்கோவென்று மண்ணில் மிகப்போட்டார் கீறிவிட்ட ஓலைதனைக் கெடுநீசன் தானெடுத்து மாறிக்கொருத்து வைத்தான் காணம்மானை வைகுண்டர் தாமரைப்பதி திரும்புதல் உந்தன் இல்லிடத்தில் உடனேநீ போவெனவே குன்னுடைய நீசன் கூறினானம்மானை அப்போது மாயவனார் ஆகட்டென வுறுக்கி இப்போது நீ நினைத்த இலக்கதிலே போவேனோ தேவனினைத்தத் தேதியுண்டவ்வேளை போவேனெனச் சொல்லிப் பெரியோனகமகிழ்ந்து நல்லவரே மக்காள் நாம் நினைத்தத் தேதியது வல்லவரே வருகும் மாசிபத்தொன்பதிலே கிழக்குநாம் போவோம் கிரணமாய் நீங்களெல்லாம் விளக்கொளி போலே வீரமதாயிருங்கோ என்றுரைக்க நாதன் இசைந்த மக்களெல்லோரும் நன்று நன்றென்று நாதன் பதந்தொழுதார் தொழுது அவரிருக்கத் தூயத்திருமாலும் பழுதில்லாத் தெச்சணத்தில் பரமன் நமக்கருளி தந்தயச்சிருந்த தாமரையூர் நற்பதியில் சிந்தை மகிழ்நாதன் சீக்கிரம் போகவென நினைத்துத் திருமால் நிண்ணயமாய் உள்ளடக்கி கனத்த புகழ்சான்றோர் கைக்குள்ளே நிற்பவரை பய்யவேயின்று பயணமெனவுரைக்க உய்யமிகக் கொண்டோர் உல்லாசமே யடைந்து சந்தோசங்கொண்டு சங்கடங்கள் தீர்ந்துதென்று வந்தோர்களெல்லாம் மாயவரைத் தொட்டில்வைத்து ஏந்தியெடுத்து இயல்வாகனம்போலே ஓர்ந்து வருக உற்ற அனந்தம்விட்டு கண்டுநீசப் பாவி கர்த்தாவைத் தானிகழ்ப்பாய் கொண்டுபோகுஞ்சாணாரைக் கூடிமிகச்சிரிப்பார் சாமியென்றோன்பட்ட சளங்களெல்லாம் பார்த்திருந்தும் வாய்மதத்தால் பின்னும் வழுங்கல் சுமப்பதுபார் பிழைப்பில்லை யென்றோ புத்திகெட்டச் சாணார்கள் உழைக்க மதியற்று உளத்துகிறான் சுமந்து பேயனைச் சுமந்து புலம்பித்திரிவதற்கு நாயன் முன்னாளில் நாட்டில் படைத்ததுபார் என்று தூசணிப்பார் இசைந்தபுகழ்ச் சான்றோரை அன்றதிலே சிலபேர் அல்லகாணென்று சொல்லி நம்மளுக்கென்ன நட்டம் வந்து போச்சுதென சும்மா அவனினத்தோர் சுமந்துகொண்டு போவதல்லால் ஏனிந்தப்பேச்சு யாம்சொல்லப் போறோமென தானிந்த வார்த்தை சனங்கள்சிலர் சொல்லிடவே சொல்லன்புவன்பு சுவாமி மிகப்பார்த்து நல்ல அனந்தம்விட்டு நாடும்வாலராமம் விட்டு செல்ல அரியும் சிறப்பாயகமகிழ்ந்து வல்ல வழியில் வாழுகின்ற ஊரும் விட்டு பள்ளிவாசல் விட்டுப் பார்வதியகரம் விட்டு துள்ளிக்கோட்டாறு சுசீந்திரத் தலமும்விட்டு வேகமடக்கி விளியிட்டு வண்டுறுக்கி ஆகமத்தின் தேதி அடுத்தாலாகட்டெனவே சொல்லுவேன் வெள்ளித் தோன்றி வருகையிலே வெல்லுவேனென்று விசையடக்கி எம்பெருமாள் தொட்டிலிலிருந்து சுவாமி விளியுமிட்டு மட்டிலிருந்த வளர் தாமரைப்பதியில் வந்தார் வந்து பதிகண்டு வட்டமிட்டுத் தானாடி விந்து வழிகளுக்கு மேற்கெதிகளாகுதென்று இன்றுமுதலெனக்கு ஏற்றவெகு சந்தோசம் பண்டு எனக்குப் பகர்ந்த மொழிபோலே சான்றோரை நல்ல தவத்துக்கனுப்பிடவும் பண்டோர் நமக்குப் பகர்ந்தபடி மாதர்களை நாடு மணங்கள் நல்ல கலியாணமுதல் வீடுவகை சொத்து விருது வேடிக்கையுடன் தேரு திருநாள் திருக்கல்யாணக் கொலுவும் பாரு புகழப் பாவாணர் கீதமுடன் நாட்டில் மனுக்கள் நல்லோர்கள் வாழ்வதிலும் மேட்டிமைகளாக மிகுவாழ்வு சேர்க்கையுடன் வேண்டும் பவிசு மிகுவாய்ப் பவிசுகளும் தாண்டும் பெரிய சனங்கள் மிகக்குழைவும் கொடியுமிகக் கட்டிக் கொக்கரித்திகனையுடன் வெடியெக்காளமுடன் வெற்றியிடம்மானமிட்டு நாட்டில் சிறப்பதிகம் நாமினிமேல் செய்யவென்று தாட்டிமையாய் நாதன் சான்றோர் தமக்கப்போ அறிவில் வினோதம் அதிக நேருத்தமமாய் குறியாய் மனதில் குறிக்கும் படியருள அருளான விஞ்சை அருள்கொடுக்கு மாலோனும் மருளாமல் சாணார் மனதிலுருவாக மூணுநேரந்துவைத்து உச்சி யொருநேரமதாய் வேணும் பச்சரிசி வெற்றிச்சிறுமணியும் வேகவைத்து நன்றாய்விரைவாய் மணலிலிட்டு தாகமில்லாமல் தவசிருக்க வேணுமென்று பெண்ணுடனே ஆணும் பிறந்தபிள்ளை தன்னோடும் கண்ணான கட்டில் கலருங்கிழவிவரை சூலியிளம்பிள்ளை திரண்ட மடமாதும் மாலினருளால் வஸ்துவகை தான்மறந்து வீடு மனைமறந்து விற்று விலைகள்செய்து ஒண்ணிலரைப்பாதியென ஒக்கவிற்றார் சொத்ததனை மண்ணு மறந்து மாடாடு தான்மறந்து ஆண்ட பண்டமெல்லாம் அகல மிகமறந்து கூண்ட பண்டமெல்லாம் கூசாமலே மறந்து அனுபோகமற்று ஆண்பெண்ணிகழாமல் இனிபோக மற்று இருந்தார் தவசெனவே எல்லோருமிக்க இருக்கத் தலம்பார்த்து அல்லோருமேக அவர்கள் மனதிலுற்று நாதனரிநாதன் நாராயணநாதன் சீதக்குருநாதனிடம் சென்றாரவர் பதத்தில் சென்றே அவருடைய சீர்பாதந் தெண்டனிட்டு இன்றேக எங்களுக்கு இப்போ விடையருள்வீர் என்றே சனங்கள் எல்லோரும் போற்றி நிற்க அன்று பெருமாள் அகமகிழ்ந்து கொண்டாடி நாம் நினைத்தது போலே நடந்தது காரியந்தான் தாம்நினைத்தது போலே தாம்நடத்துவீரெனவே உத்தரவு சொல்ல உடைய வழிச்சான்றோர் சித்தருட அருளால் சென்றார் தவமதுக்கே

தவமது செய்ய வென்றுசடுதியிற் சான்றோரெல்லாம் உகமது அளந்தோன் பாதம் உண்டென மனதிலாக்கி வகைபொருளாசையற்று மனைவிகள் மக்கள் கூட திகையது நோக்கி வாரி துவரயம் பதியிற் சேர்ந்தார்

மண்ணுடன் மனைகளாசைமாடுடன் வீடு மாசை பெண்ணுடன் பொருளினாசை பூதலப்பொன்னினாசை எண்ணுடன் எழுத்தி னாசை இடறுபொல்லாசை வேசை ஒண்ணுடன் ஆசை நீக்கி உடையவனாசை கொண்டார்

கொண்டுநல் மனதிற் பூண்டு குருபரா தஞ்சமென்று பண்டுநல் துவாரகையின் பதிவாட வாசல் தன்னில் தெண்டிரை வாவை சூழ்ந்த செகற்கரை தனிலே வந்து கண்டுநற் பதியில் புக்கி கருத்துடன் இருந்தாரன்றே

இருந்தவர் தலமும் பார்த்து ஏகநல் வெளியுங் கண்டு பொருந்திடும் ஞானவான்கள் புண்ணியமனதிலெண்ணி வருந்திடக் கனிவே காணும்வாவைநற் பதியி தாகும் தெரிந்திடக் கடலில் மூழ்கிச் சிவகலை யணிந்தார் தாமே

அணிந்தவர் பெண்ணுமாணும் அன்புடன் மகிழ்ச்சை கூர்ந்து துணிந்தவர் தங்கள் தங்கள் துயரங்க ளறவே நீக்கப் பணிந்தவர் நாதன் தன்னைப் பரிவுடன் மனதுள் ளாக்கித் தணிந்தவர் கோபவேகத் தகுளியைத் தள்ளிவாழ்ந்தார்

வாழ்ந்தே தவசு வாகைப் பதியதிலே தாழ்ந்தே சனங்கள் சந்தோசமாயிருக்க அந்திசந்தி யுச்சி ஆகமூ ணுநேரம் நந்தியருளால் நல்ல துணிதுவைத்து உவரிநீரில்துவைத்து உவரி நீரைக்குடித்து உவரிநீர் தன்னில் உற்றன்னமே சமைத்து உச்சியொருநேரம் உணவு மிகஅருந்தி மெச்சிப் புகழ்ந்த விடிய வொருசாமம் உகப்பாட்டுமோதி உற்ற அபயமிட்டு வகையாய் விடிய வரும் நாழிகையேழில் துணிகள் துவைத்துத் தோயமதிலிறங்கி கெணியாய்க் குளித்துக் கிருஷ்ணர் பதம்போற்றி இப்படியே நித்தம் இவர் மறவா வண்ணமே தான் அப்படியே வாரி அலைவாய்க்கரையிருக்க வாரிப் புறமாய் வளர்காற்று வாடைமிக நீரிறைத்தாற் போலே நித்தமந் தத்தவத்தோர் பேரிலிறைத்துப் பெருவாடை யாய்வீச சீருகந்த நாதன் செயலாமென இருந்தார் இருந்தார் தவசு ஏற்றரிய சான்றோர்கள் அருந்தாமல் மற்றொன்றும் அன்னமொரு நேரமுமாய் வாரிநீரல்லால் மறுநீரறியாமல் சீரியல்பாய்ச் சான்றோர் செய்தார் தவமதுவே பவமானது நீக்கும் பச்சைநாராயணரும் முன்னாறு வருசம் உவந்திருந்த நற்றவத்தை பின்னொரு வருசம் பேணி நடத்துமுன்னே நீசனிடையில் நிறடுசெய்தானதினால் தோச மவன்பேரில் சுமக்கச்சாபம் புரிந்து ஆறு வருசம் அதிற்குறைவு வராமல் வாறு தவசு வகுத்து முடிக்கவென்று புரிந்தார் தவசு இலக்குத் திகைவதுமுன் சான்றோர் தவத்தைத் தான்பார்க்க வேணுமென்று ஆன்றோர் மனதில் அன்புமிகக் கொண்டாடி அலைவாய்க் கரையில் அமர்ந்திருந்த சான்றோரை நிலைபார்க்க வேணுமென்று நிச்சயித்தெம்பெருமாள் உகத்துக்குத் தக்க உபாயமினிச் செய்யவென்று மகத்துவ நாதன் மனதில்மிகவுத்தரித்து தெள்ளு தனக்குச் சிணமே விடைகொடுத்தார் விள்ளுறவே செய்து விடுநீ சிணமெனவே ஆதி விடையருள அதுவெல்லாமே சமைந்து மோதி யொருமித்து உற்ற அந்தத்தெள்ளினங்கள் வந்து வளைந்துதல்லோ வாய்த்த தவத்தோரருகில் பொந்து பொந்துள்ளும் போடுந் துணியதுள்ளும் வைத்தக்குடிலுள்ளும் வளைந்தனவே தெள்ளினங்கள் மெய்த்த புகழ்ச் சான்றோர் மெலிவாய் மிகச்சடைத்து மாடாடு கோழி வளர்ப்பில்லா நம்மிடத்தில் ஏடாவிடமல்லோ இதுசெய்யு மாய்மாலம் இருக்குமிடத்தில் எண்ணக்கூடாதபடி பொருக்குப் பொருக்கெனவே பொன்றக்கடிக்குதென்ன மூணுநேரந்துவைக்கும் உற்றகலையானதிலே கோணியலில் பற்றும் குறுந்தெள்ளு வந்ததென்ன படுக்க இருக்கப் பண்புசற்றுமில்லாமல் முடுக்கமாய்த் தெள்ளு முடுக்கிமுடுக்கிக்கடிக்க இதல்லால் சான்றோர்க்கு இன்னம்விட்டுப் பார்ப்போமென சதமில்லா மூட்டை தன்னினங்களைவருத்தித் தவத்தைக் குலைத்துச் சான்றோரைத் தான்விரட்டி பவத்துமாய் நீங்கள் பாவிப்பீரென்றுசொல்லி மூட்டைக் குரைகள் மொழிந்தார் முகுந்தனுமே சேட்டைசெய்வோமெனவே திரண்டு மிகச்சூழ்ந்து வந்து வளைந்தார் வாழரியச் சான்றோரை முந்து பரிந்த மூண்டதெள்ளினங்ளோடு கூடிக் குலாவிக் கூட்டமிட்டே திரளாய் தேடிச்சான்றோரைச் செகலதுக்குள்ளே விரட்ட வேணு மெனவே விசும்புகொண்டவ்வினங்கள் பூணு முடைமை போர்த்துந் துணியிலிருக்கும் குடிக்கின்ற வெள்ளமதில் கும்பல் கும்பலாய்க்கிடக்கும் முடிக்குந் தலையில் முச்சிறங்கை போல்கிடக்கும் அன்னத்திலே மிதக்கும் அண்டைக்கல்லிலே வாழும் முன்னெற்றி மயிரில் மிதந்துமிக முன்னுதிரும் இடைக்குள்ளிருந்து இடைவிடாதேயரிக்கும் உடையிலிருந்து ஓயாமலேயரிக்கும் மேலெல்லாமிதந்து மிகச்சரியும் கீழ்வழியாய் காலெல்லாந்தெள்ளு கனமாய் மிகஅரிக்கும் மாறியிவரெடுக்க மனதுசற்றுமில்லாமல் ஆவிப்பதறி அசையாமல் தாமிருப்பார் வாரிக்கரையில் வளர் நண்டு சேகரமாய் மாரித்துளிபோல் வந்து வளைந்துமிக பாண்டத்துக்குள்ளே பதிந்திருந்தே வாழும் காண்டமாய்க் கண்டு கைநீட்டலாகாதென தடவி யெடுத்துத் தன்னாலே போநீயென வடவிப் போகாமல் வளர்ப்பார்கள் போலிருப்பார் இப்படியே தெள்ளு ஈ மூட்டை நண்டினங்கள் அப்படியே கூடி அவரலைச்சல் செய்திடவே அல்லாமல் சான்றோர் அவரவர்க்குத் தேகமதில் பொல்லாத வங்குப் பெரிய சிரங்குடனே வெகுவாய்ப்பெருத்து மேலிலிடை காணாமல் தகுவாய்ச் சடைத்துச் சனங்கள்மிக எல்லோரும் எங்கேயினிப்போவோம் எல்லோரு மென்றுசொல்லி சங்கையுடன்கூடிச் சமுத்திரக்கரையருகில் போயிருக்கும் வேளை பொங்குகடல் கோபமதாய் வாயிதமாய்த்திரைதான் வந்து கோபித்தடித்து பாலதியப் பெண்கள் பண்பாயுடுத்திருந்த சீலைரண்டு தன்னைச் செகற்கொண்டு போயினதே அய்யோ கடல்தான் அங்குசெல்லக் கூடுதில்லை செய்ய விலகவென்றால் தெள்ளுநம்மை விட்டுதில்லை வீட்டுக்குள் செல்ல விட்டுதில்லை மூட்டையது ஊட்டுகின்ற அன்னமதில் உயரவந்து நண்டிருக்கும் தேகமதிற்சிரங்கு சொறிச்சல் பொறுக்குதில்லை தாகத்துக்கேற்ற தண்ணீர் கிடைக்குதில்லை பாகமுட னுண்ணப் பற்றுதில்லை தீனதுவும் இனியெங்கே போவோம் எல்லோரு மென்றுசொல்லி மனுப்புகழுஞ் சான்றோர் மாதமொரு ஆறாய் இருந்தாரதிலே ஈசன் செயலெனவே திருந்தார மார்பன் திரும்பவொருதலத்தில் கொண்டுபோய்ப் பார்ப்போம் குலதெய்வச் சான்றோரை பண்டு வொருசாணான் படுத்திருக்குமவ்வேளை சொர்ப்பனம்போல் உற்பனமாய் சுவாமி மிகவுரைத்தார் இதின்நேர் தெற்கு இருக்கு மொருபதிதான் அதின்நோக்குஞ் சொல்ல ஆராலுமேலாது துட்டர் தமைவென்று சுற்றுமதில் கோட்டையிட்டு முட்டப்பதி நாடு முகுந்தன் ஆண்ட தலம் அலங்கார நற்பதியின் அழகுசொல்லக்கூடாது வலங்காரமான வாய்த்த கடலதினுள் தேரு பொன்பதிகள் சிங்கார மேடைகளும் நீருக்குள்ளேயிருக்கும் நிறங்கள் சொல்லக் கூடாது கன்னிமாராடும் கரிய நல்லப் பூஞ்சுனைகள் பொன்னினாலே படிகள் பூஞ்சப்பிரக்கொலுவும் மாணிக்கக் கல்லால் வளர்ந்தமணி மண்டபமும் ஆணிப்பொன் தன்னால் அழகுபூம்பந்தல்களும் வகையின்ன தென்று வகுக்க முடியாது தொகையின்னதென்று தொகுக்க முடியாது இப்பதியில் நீங்கள் இந்தநேரம்போனால் அப்பதியிலுங்களுக்கு அதிகப்பலன் கிட்டுமென்று தூக்கமதில் சொர்ப்பனம்போல் சொன்னாரே வுத்தரவு ஆக்க முடனே அவனெழுந்து சொல்லிடவே கேட்டு எல்லோரும் கெட்டிதானென்று சொல்லி ஆகட்டு மெனவே எல்லோருஞ் சம்மதித்து நடக்கத் துணிந்தார் நாரணருண்டெனவே அடக்கமுடனிதிலே ஆறுமாசம் வரைக்கும் இருந்தோமே நன்றாய் இனிநடப்போமப்பதியில் வருந்தாமற் போவோம் மகாபரனாருண்டெனவே போவோமெனவே பெண்ணாணுடனெழுந்து தாவமுள்ள முட்டப் பதிதலத்தில் வந்தனரே

வந்தனர் பதியின் கூறும் வாரியின் செயலுங்கண்டு சந்தன வாரி போலும் தலமிது நன்றதாகும் இந்தநற் பதியில் நாமள் இருந்துதான் தவசு செய்தால் செந்தமிழாயன் பாதம் செயல் பெறவாழ்வோமென்றார்

வாழ்வதிற்குறை வராது மக்களுங்கிளைகளோடு தாழ்வதில்லா வண்ணம் தவமது வளர்வதாகும் நாள்வழிப்பலனுண்டாகும் நாரணரருளினாலே ஆள்வது திடனாமென்று அதிலவரிருந்தாரன்றே

என்றே மிகமகிழ்ந்து எல்லோருமோர் முகமாய் அன்றே மிகமகிழ்ந்து அதிலிருந்தாரம்மானை சூழ அணியாய்ச் சுற்று மதில்போலே நீள அரங்குவைத்து நெருங்கப்புரைகள் வைத்து வைத்தோர் திசையில் வாசலொன் றாகவிட்டு மெய்த்தே தினமும் மிகவே துணிதுவைத்து அன்ன மதற்கு அவித்தநெல்லே யுடைத்து வன்னமுள்ள காய்கனிகள் வகையாய்த்தான் வகுத்து நல்லநீர் தன்னில் நாடி மிகத் துவைத்து எல்லா வகைக்கும் இசைந்த நீரேயருந்தி அந்திசந்தி உச்சி ஆதிதனைத்துதித்து தந்திரமதாகத் தவசு மிகப்புரிந்தார் கண்டிருந்த மற்ற கலிநீசச் சாதியெல்லாம் பண்டிலமைத்ததுவோ பனையேறுஞ்சாணார்க்கு மூணுநேரந் துவைத்து உச்சியொரு நேரமதாய் வேணும் பகுத்தாய் வெகுவாயலங்கரிக்க வேதனவர்க்கு விதித்த விதிப்படியோ நாதனவர் பங்கில் நாடிமிக வந்ததுவோ எப்போமீனுண்டு என்றே மிகப்பார்த்து அப்போததை வேண்டி அரக்குரக்காயவித்து வாயிலெடுத்திட்டு வயிறுவளர்க்குஞ் சாணார்கள் புகையிலையும் மறந்து பெண்ணாணுமோர் மனதாய் இந்தப் படியாய் இருக்க இவர்களுக்கு முந்தை விதித்த விதிவந்தொத்ததுவோ அவர்களுடுக்கும் ஆடையழுக்கில்லாமல் இவருடுக்கச் சற்றும் எண்ணமொன்றில்லாதார் மூணுநேரந் துவைக்கும் உற்றதுணி பொன்னிறம்போல் தோணுதலாயவர்கள் தேகம் பழபழென இந்த விதமாய் இவர்கள் பாவித்திடவே சொந்தத் திருமால் சேர்ந்தாரவரிடமே ஆதி மகாமால் அவர்பங்கிலில்லாட்டால் ஓதியுணவருந்த ஒன்றுந்தெரியாதிவர்க்கு போற்றி நம்பூரி பிராமணர்கள் தஞ்சீலை மாற்றித் துவைப்பு மங்கலாய்க் காணுதுகாண் இந்த சாணார் சீலை எரி சூரியன்போலே பந்த வொளிபோலே பழபழெனத்தோணுது காண் பிராமணர் சூத்திரர்கள் பேணியிவர் தமக்கு நிராதனமாய்க் காய்கனிகள் நித்தஞ்சுமக்கிறார்கள் பாக்கியங்கள் வந்துதென்று பனையேறுஞ் சாணார்க்கு நோக்கமது வந்துதென்று நீணிலத்துள்ளோர்கள் எச்சாதியும் புகழ்ந்து இருந்தார் காணம்மானை அச்சாதியெல்லாம் அப்படியே சொல்லிமிக சாதிமற்றோரெல்லாம் தலைகவிழ்ந்திருக்கையிலே நாதித்திருமால் நாடுகின்ற சான்றோரை இவர்க்கருளுமாண்டு இலக்குத் திகைந்துதல்லோ அவரவர்கள் வீட்டில் அனுப்பிவிட வேணுமென்று தோணித்தாரவர் மனதில் சொப்பனம் போலெம்பெருமாள் மாணிக்கச் சான்றோர் மனமறியத் தாம்பார்த்து இனிநாமளிப்போ இருந்த தலமும்விட்டு தனியானோம் நாமளங்கே சார்ந்தோமேயானாக்கால் நம்முடைய சாதி நகைத்திழிவு பேசுமல்லோ எம்முடைய தவமும் இல்லையென்றுபோயிடுமே முன்னிருந்த வீடும் மூண்டிருந்த பண்டமுதல் தன்னிருந்த சொத்தும் தலத்தையிழந்து வந்தோம் இனியங்கே போனால் இருக்க இடமுமில்லை இனியங்கே போவதைக்கால் இந்தக் கடலதிலே விழுந்தோமேயானால் மேலும் பதவியுண்டு அழுந்தலுடன் நினைத்து எல்லோருமேயிருந்தார் அப்போ அரிநாதன் ஆகட்டெனவுறுக்கி இப்போநீர் போவும் என்றே விடைகொடுத்தும் இன்னமிவர் போகலையே என்றே மனதிலுற்று அன்னமதைக் குறைத்து ஆழாக்கரிசியிட்டார் ஆழாக்கரிசி அலர்மலர்ந்த கோவையுடன் தாழாமல் சனங்கள் சடையாமலேற்றனரே துவையல் முடங்கவில்லை தொழுதுநிதஞ்சேவிப்பதும் உகப்பாட்டோதுவதும் ஓயாமல் செய்தனரே இன்னம் போனாரில்லையே இப்படியே செய்திடினும் இன்னமொருவிசனம் இப்போது செய்யவென்று உன்னித் திருமால் உற்ற வைசூரியைத்தான் ஏவினார் சான்றோர் ஏந்திழைக்கும் பிள்ளைகட்கும் மேவியே சான்றோர் மிகமெலிந்து தான்வாடி பற்றி யிருந்தப் படுசிரங்கு மாறலையே முற்றுங் கண்ணொளிவு முழுதுந் திறக்கலையே கும்பிக்குளிரக் குடிக்கக் கிடைக்கலையே வெம்பு மிலைகனிகள் மிகப்பறிக்கக்காணலையே ஐயோ நாமெல்லாம் அலைந்து மலைந்திருக்க வையமதிலில்லாத வைசூரி வளைந்துதல்லோ என்று சனங்கள் எண்ணம் பெரிதாகி சென்ற சனத்தில் சிலபேர் மடிந்திடவே பதறி நடுங்கி பரனே நீ தஞ்சமென்று குதறியுலகில் கூச்சமிகவடைந்து எங்கே யிருந்தாலும் ஈசன் செயலெனவே சங்கை வழுகாமல் தாமோதரனுடைய நினைவுமயராமல் நிலைதவறிப் போகாமல் தன்னுடைய வீட்டில் தான்போவோம் நாமளென்று போகு முன்னாகப் பெரியோன் பதமணுகி பாங்குரைத்து நாமள் பட்டசளமுமுரைத்து உத்தரவு வேண்டி உற்றிடத்தில்போவோமென புத்தியுடனே பெரியோனடிசேர்ந்தார் சேர்ந்து வாகைப்பதியின் செய்தியெல்லாமுரைத்து பேர்ந்து வந்த முட்டப் பதியின் பெருமைசொல்லி ஊணுகிடையாததுவும் உயிரழிவு வந்ததுவும் கோணுதல் எல்லாங் கூறி விடைகேட்டார் அப்போது நாதன் எல்லோரையும்பார்த்து இப்போது உங்கள் இல்லிடத்திலே போவீர் நாராயணக்குருவை நாளுமறவாமல் பேராகவேயிருந்தால் பேறுங்களுக்கே கிடைக்கும் அன்னமளக்கும் ஆதித் திருநெடுமால் முன்னவன் தன்பேரால் முத்திரிகளிட்டதினால் சென்ற இடமெல்லாம் சிறப்பதிகமுங்களுக்கு என்றைக்கும் நல்ல இயல்பேயருள்வோமென நல்ல விடைகொடுத்து நாராயணரனுப்ப வல்ல வளர்சான்றோர் வாழ்த்தியவர்போனார் அவரவர்கள் வீட்டில் அன்பாகப் போனவுடன் இவரிவர்க்கு நல்ல இயல்புசெய்ய வேணுமென்று ஏகபர நாதன் எம்பெருமாளானவரும் லோகமதில் ஏற்ற ஒருசொரூபங்கொள்ளலுற்றார் இரப்ப வடிவாய் எடுத்தாரொருவேசம் பரப்ப வடிவைப் பாருள்ளோர் கண்டுகண்டு கோட்டைக் கணக்காய்க் குளிர்ந்தநெல்லேயெடுத்து சாட்டமுடன் காய்கனிகள் சகல வகையுடனே பழங்கள் முதலாய்ப் பப்படமும் பாயசமும் வளங்க இலையிட்டு வற்றல்வகை சீனியுடன் அன்ன முதல்தானம் ஆடையொடு பொன்தானம் சொர்ணத் தானமுதலாய்த் துவையல்காரர்க்கெனவே சான்றோரினத்தில் சார்ந்தன்பு கொண்டோர்கள் ஆண்டோனருளால் அன்னவஸ்த்திரங் கொடுத்தார் நித்தம் நித்தமன்னம் நீங்களுண்ணு மென்றுசொல்லி சித்தமிரக்கமதால் துவையற்காரர்க்கெனவே இடைவிடா தபடியே ஈந்தாரே அன்னமது வடவெல்லாந் தீர்ந்து மகிழ்ந்திருந்தார் துவைத்திருந்தோர் நாலு திசையதிலும் நடந்துபிச்சை தான்குடித்து பாலு பவிசுடனே பாவித்திருந்தனராம் இப்படியே சான்றோர் இனமாயிருந்தவர்கள் அப்படியே பிச்சையிட்டு அன்பாய் மகிழ்ந்திருந்தார் பாங்கான துவையல் பண்டாரங்களெல்லாம் பூங்காரமாகப் பிச்சையமுதுண்டிருந்தார் இந்தப்படியே இவர் வாழும் நாளையிலே சொந்தத் திருமால்க்கு சுவாமியுரைத்தபடி ஆண்டாறு சென்று அதிகத் தவமதுதான் கூண்டாய் முடித்துக் குருநாதக் கண்மணியும் இனிநாம் செய்யும் இயல்பென்ன என்றுசொல்லி மனிதவ தாரன் மனதில் நினைத்திருக்க நன்றான முட்டப் பதிதலத்தில் நாரணரும் மன்றாடும் நல்ல வாய்த்தபரமேசுரரும் வேதப் பிரமன் விளங்கு மறையோனும் நாதரிஷிமாரும் நல்ல சங்கத்தோர்களுமாய் சத்தி யுமையும் சரசு பதிமாதும் வித்தை முகத்து வேழ முகத்தோனும் எல்லோரும் வந்து இருந்தார் கடலருகே அல்லோரும் வந்து அங்கேயிருந்துகொண்டு ஏற்ற முனியில் இரண்டு பேரைவருத்தி சித்த முடனே திடீரெனவே நீங்கள்சென்று நம்முடைய பாலன் நல்லவைகுண்டரையும் எம்முடைய அருகில் இப்போ கொண்டுவரவே சொல்லியயைச்சார் சுவாமிதானென்றுசொல்லி நல்லியல்பாய்ச் சொல்லி நாரணனையிங்கழையும் வாருங்கோ முனியே வாய்த்த தவத்தோரே சேருங்களங்கே திடீரெனவே யிப்போது என்று விடைகள் இருவருக்குங்கொடுக்க அன்று முனிகள் அவ்வாயு போல்விரைவாய் கடிதாய் நடந்து கரியமால் நற்றவசு முடிவாகச் செய்த முகுந்தன் பதியில் வந்தார்

முட்டப்பதி விஞ்சை வந்தனர் வைந்தர் பாத மலரிணை முனிமார் கண்டு செந்தமிழ் ஆயன் பெற்றச்சேயிது கண்ணோவிண்ணோ கந்தரக் கலியை வென்றுக் கனதர்மப் புவியை யாள முந்தநல் தவங்கள் செய்து முடித்தவா போற்றிபோற்றி

பொல்லாக்கலியில் வந்து பெண்ணோடவனிப்பொன்னாசை மண்ணோடுண்ணுமதத்தாசை மாய்கைவிழியார்மருட்டாசை பண்ணோர் தவத்துளணுகாமல் பவமே அறுத்துப்பார்வைவிழி கண்ணோஞானக்கருவிருத்தி கண்டாய் பொருளைக்கண்டாய்

அய்யாவுமது தவமதுவால் அரம்பை மாதரன்றுபெற்ற மெய்யாஞ்சான்றோர்கதிகள் பெற்றார்தேவர் மிகப்புகழ்ந்தார் பொய்யாங்கலியனுயிரிழந்து போனானரக மீழாமல் அய்யா முட்டப்பதிதனிலே அழைத்தாருன் அப்பனென்றார்

அழைத்தாரென சொன்னவுடன் ஆதி முனியை மிகநோக்கி பிழைத்தார்போல் மனமகிழ்ந்து பின்னுமுனியோடுரைப்பார் இழைத்த கலியினுள்ளிருத்தி என்னைக்கலியன் செய்தவலு சழத்த மறிந்து வந்தாரோ சமயமிதுவோ தானுரைப்பீர்

நல்ல முனியே நம்மைக் கலியதனுள் செம்மைகெட்ட நீசத் தீபாவிக்கையதிலே கண்ணியிட்டு வைத்துக் கடக்கே நகண்டிருந்த புண்ணியவானின்று பிழைத்துக் குதித்தாரோ நான்பட்ட பாடு நாடுபதினாலறியும் ஏன்பட்டா யென்று இன்றுகேட்க வந்தாரோ ஏதோ தெரியலையே என்னுடைய நாயகமே பாதகன்தான் செய்த பாராத்தியங்களெல்லாம் பார்க்கும் படியாய்ப்பாரிக்கிறேனெனவே ஆர்க்க முடனே அந்நீசன் செய்தபடிக் கட்டுங் கயிறும் கையில் விழுந்திடத்தில் முட்டுக்கு மேலே ஊற்ற மிகநினைத்தார் வெடிப்புடங்கு தன்னால் விலாவிலிடித்திடத்தில் துடிப்புடனே ஊற்றம் தோன்றும் படியே வைத்தார் மேலில் பிரம்பால் மிக்க அடித்திடத்தில் சீல முடனே சிணந்தோண வைத்தனரே கன்னமதில் கம்பால் கனக்க அடித்திடத்தில் உன்னிதமாக உடன்தோண வைத்தனரே கூண்ட முடியைக் குலுக்கியசைத்திடத்தில் வேண்டு முடியை மிகக்கழிய வைத்தனரே இப்படியே நீசன்செய்த இடறதுபோல் அப்படியே தோணவைத்து ஆங்காரங் கொண்டனரே பால்மாட்டை நீசன் பற்றிக்கொண்டே யடைத்து மால் பாலேற்கும் மாதிரியைப்பார்ப்போமென இந்தநாள் வரைக்கும் இருபத்தொன்றானதுக்குள் அந்த நீசன்தான் அநியாய மாகவேதான் கொண்டு அடைக்க கோவேங்கிரிநாதன் அன்றுமுதலிருபத் தொருநாளதுவரைக்கும் கோலமெடுத்துக் குருச்சமைந்த நாரணரும் பாலல்லால் வேறு பண்டமொன்றேராமல் இருக்குந் தறுவாய் இதுநல்லதாகுமென அருக்காக நீசன் அவன்செய்த வேதனைபோல் எல்லாமுறைபோல் எடுத்தார் சொரூபமது நல்ல முனிமார் நாரணா என்றுநிற்க கைக்குள்ளே நின்ற கரியசீசன்மாரில் மெய்க்குள்ளறிய விளம்பினாரெம்பெருமாள் இன்றைத் திவசம் இசைந்த முட்டப்பதியில் நன்றின்றுப் போக நல்மணிகளாகுதென சொல்ல அறிந்து சீசன்மார் தாமகிழ்ந்து நல்லதெனச் சொல்லி நாடியவரிருக்க அன்றிரா தன்னில் ஆருமறியாமல் நன்றினிய சீசன் நாலுபேர் தாமறிய வந்த முனியும் வளர்ந்த இருமுனியும் சொந்தமுடன் நாதன் தொட்டில் மிகஏறி சீசன்மார் காவிச் சிணமாய் மிகநடக்க வாசமுள்ள மாமுனிவர் வலமிடமுஞ் சூழ்ந்துவர துடியாகத் தொட்டில் சுவாமி மிகஇருந்து வடிவான முட்டப்பதிதலத்தில் வந்தனரே முட்டப்பதியில் முகுந்தனரிநாதன் கிட்ட வருகும் கிருஷ்ணர் வந்து சேர்ந்திடவே மகனை மிகக்கண்டு மாவிருப்பத்தோடிளகி உகமாள வந்த உடையமகனேயுனது சடமெல்லாம் வாடி சடைப்பானேனென்மகனே வடவெல்லாமென்னோடு வகுத்துரைநீ யென்மகனே கண்ணே மணியே கருத்துள்ள நாயகமே விண்ணே வொளியே வேதத்திருவிளக்கே கலியில் மிகஇருந்து கலக்க மிகஅடைந்த மெலிவெல்லாஞ் சொல்லி விளம்புநீ யென்மகனே அடித்ததாருன்னை அவனிதனில் பேயனென்று கடுத்தமது செய்தக் கலக்கமெல்லாஞ் சொல்லுவென்றார் சொல்லென்று மாலும் சிவமுமெடுத்துரைக்க வல்லபெலமான வைகுண்டரேதுரைப்பார் செந்தூர்க் கடலில் செகலதுக்குள்ளெனைவைத்து முந்த எனக்கு மொழிந்தவுபதேசம் தப்பாமலாறு வருசந் தவசாக மெய்ப்பாவின் பாலருந்தி வீடுசொத்தெண்ணாமல் கலிக்காசின்ஆசை கனாவில் நினையாமல் அலிக்கியானப்பெண்ணின் ஆசையணுகாமல் பக்கக்கிளையாசை பாவித்தினிதாசை அக்கத்தினாசை அனுப்போல் நினையாமல் நல்ல துணியாசை நளின மொழியாசை சொல்லினிய ஆசை தீன்பண்டத்தினாசை தேய்ப்புக் குளிப்புச் சிறந்த பொருளாசை தாற்பரியமானச் சந்தோசத்தினாசை பூமியாசைமுதலாய்ப் பேராசையும்வெறுத்து சாமியுமதருளால் தொல்புவியிலுள்ளோர்க்கு தண்ணீரால் மண்ணால் வந்த சர்வவியாதி எல்லாம் மண்ணிலுள்ளோர் யார்க்கும் வாய்த்த தர்மமாக நோய்தீர்த்து வைத்ததல்லால் நேட்டமொரு காசறியேன் வாழ்வில்லாப் பேர்க்கு வாழ்வு மிகக்கொடுத்தேன் தாழ்வடைந்தோர்க்குத் தாழ்வை விலக்கி வைத்தேன் பிள்ளையில்லார்க்குப் பிள்ளை மிகக்கொடுத்தேன் கள்ளமெல்லாம் நீக்கிக் கழிவை வரத்தை வைத்தேன் வரம்வேண்டி நம்மிடத்தில் வைத்தந்தப் பேய்களையும் குரமாய் மலையில் கொண்டு எரியவைத்தேன் ஆயிரத்தெட்டு ஆன திருப்பதியில் வாயிதமாய் வாழும் வாய்த்ததேவர்தமக்கு ஞாயமில்லை பூசை நல்லாடு தீபவெலி தேயமதிலுங்களுக்குத் தேரோட்டம் முதலாய் ஏற்கப்படாதினிமேல் இராச்சியத்திலுள்ளவர்தாம் மார்க்க வைகுண்ட வல்லாத்தான் வந்ததினால் பூசை படைப்புப் பெலிதீபமேராமல் வாசமுடனே மறைந்திருங்கோ நீங்களென சட்டமிட்டு வைத்தேன் தரணிபுற்பூண்டுவரை மட்டை மருந்திலையும் மலைகடலும் வாசுகியும் வையகத்தையாளும் மாநீசனுமறிய மெய்யாய் விரித்து விளம்பிமிகச் சட்டமிட்டேன் இத்தனை சட்டம் இட்டவர்த்தமானமெல்லாம் மத்திய மாய்வைத்த மாமுனியோடேகேளும் அல்லாமற் பூமிதனில் அவர்களறியாதபடி வல்லாண்மையாய்க்காசு வழங்குமிலை பாக்குவரை நானாசை கொண்டு நருட்களிடம் வாங்கினதை வானாசையுள்ள மாமுனியோடேகேளும் சதுராய் நருளறிய நல்லவெகு அற்புதங்கள் இதுக்காய் கிணற்றில் ஏகாச்சிலையுங்காட்டி இருந்தேன் தவசாய் என்னுடைய நாயகமே பொருந்தாத காரியங்கள் புத்திக்குளறிமிக செய்துமிகக் காணாது செய்ய மணிவிளக்கே நிசமிதுவோ என்று நீரவரோடே கேளும் இத்தனையுந் தர்மமதாய் யான்செய்திருக்கையிலே புத்திகெட்ட நீசன் பொல்லாதான் வந்தெனையும் கட்டியடித்துக் கைவெடியாலிடித்து இட்டிறுக்கி வைத்தான் இரும்பு விலங்கதிலே நஞ்சிட்டுத் தந்தான் நாடுஞ்சாராயமதில் கொஞ்சுங்கடுவாய்க் கூட்டிலடைக்கவென்றான் நீசனவன்சாதி நிசமாகத் தான்கூடி ஏசியெனைப்பழித்த இடறுசொல்லக் கூடாது ஐயோ அவர்கள் அடித்த அடிகளெல்லாம் வையம் பொறுக்காதே மாநீசன் செய்தவினை மாந்திர தந்திரத்தால் வஞ்சனைகள் செய்தெனையும் கோந்திரமாகக் கொல்லவகை செய்தார்கள் பாவிகள் செய்த பவவினைகள் சொல்லவென்றால் தாவு முலகில் தாலமதிலோலையில்லை என்னைத் தவத்துக்கு இருத்தியிது நாள்வரையும் இன்னமிரங்கலையோ என்தவசு காணலையோ அன்றருளித்தந்த ஆண்டு திகையலையோ இன்று முதற்கலியில் யான்போக வில்லையையா நம்மாற்கலியில் நனின்றிருக்கக்கூடாது சும்மா எனைநீங்கள் சோலிபண்ணக் கூடாது நன்றிசற்றுமில்லா நாறவெறுங்கலியில் கொண்டென்னை வைத்துக் கோலமது பாராதேயும் இனியென்னாற்கூடாது இக்கலியிலேயிருக்கப் பனிதவழுமாயவரே பகர்ந்தமொழி மாறாமல் ஆறு வருசம் அவனித் தவசிருந்தேன் தாறுமாறுண்டானால் சாட்சியோடேகேளும் என்று வைகுண்டர் இத்தனையுஞ்சொல்லிடவே நன்றினிய மகனை நல்லமுகத்தோடணைத்து

கண்ணே மணியே கருவூலமே கனக மணியே ரத்தினமே விண்ணேவொளியேகற்பகமே வேதச்சுடரே விளக்கொளியே மண்ணேழளந்தமலர்பதத்தில்வந்து குதித்த மலர்க்கொழுந்தே இண்ணே முதலாயுனக்கு நல்ல இயல்பேயாகுதென்மகனே

மகனே தவத்துள்ளிருக்கையிலே வருமோ செல்வமாரார்க்கும் செகமேழறியத் தவமுடித்துச் சென்றால் சிவனுக்ககமகிழ்ந்து தவமே முடித்த நினைவதுபோல் சகல கருமங் கைகூடும் அகமே யுனக்கு அருளினது அனுப்போல் தவறாதருள்மகனே

செல்ல மகனே சீமானே நீகேளு நல்ல மகனே நாரணாநீகேளு தவவேடம் பூண்டு தவமாயிருக்கையிலே சிவஞானமல்லால் செல்வம்போல் காணாது தவசு நிறைவேறித் தமோதரர்க்கேற்று பவிசு மிகவேண்டிப் பலன்பெற்று வாழ்வார்கள் மகனே நீயிருந்த மகாதவத் தின்பெருமை செகமீதே சொல்லத் தொலையுமோ என்மகனே கள்ளயுகத்தைக் காணாமலேயறுத்து உள்ள நடுஞாயம் உகத்தீர்ப்புச் செய்துமிக ஆகாத்த தெல்லாம் அழித்து நரகிலிட்டு வாகாய்க் குழிமூடி வாசல் தனைப்பூட்டி மாறியதில்லாமல் வங்கிஷமுந்தானொழித்து வேறுவகை செய்து மேலுமொரு நல்லுகமாய் தருமயுகமாய்த் தாரணிக்கமாயருளி பொறுமை மனுவாய்ப் பெரியசான்றோர்வழியை அன்பாக வைத்து ஆள முடிசூடி பண்பாக வேண்டும் பவிசு மிகவாக சாகாவுலகத் தர்ம பதியாள வாகாய்த் தவசு வகுத்து முடிக்கையிலே ஆங்கார மாமோ ஆணுவங்களங்காமோ ஓங்கார மாமோ உற்ற தவசதுக்கு தவசு நிறைவேறி தான்வந்த தாலேயினி பவிசு வுனக்குப் பகருகிறேன் கேளெனவே அருகில்வைத்த மாமுனியை அழைத்தார் திருமாலும் துரிதமுடன் மாமுனிகள் சுவாமியெனத்தொழுதார் இந்தநாள் வரைக்கும் இவரிருந்த நற்றவசு சந்தமோ வீணோ தாமுரைப்பீர் மாமுனியே அப்போ முனிகள் ஆதி யடிபணிந்து தப்பொரு நாளில்லை தவத்துக் குறுதியுண்டு நூலொழுக்கமல்லாமல் நுண்ணிமைகள் தப்பவில்லை மாலொழுக்க மல்லாமல் மனதுவேறில்லையையா தப்பாத தவத்தில் சண்டித்தடி நீசன் சிப்பாயி விட்டுச் சுவாமிதனைப்பிடித்து முடித்தலையைப்பின்னி முழுநீசப்பாவியவன் அடித்து விலங்கில் அவன்கொண்டு வைத்தனனே வைத்துப்பல வேதனைகள் மாநீசன் செய்ததல்லால் மெய்த்தபுகழ் மாலே இவர்மேலே குற்றமில்லை என்று முனிமார் இசையத் திருமாலும் கொண்டுபோய் நீசன் கோட்டிசெய்த அநியாயம் இருக்கட்டுமந்த இழிநீசன் செய்ததெல்லாம் குருக்கட்டு முறையின் குணத்தைச்சொல்லுமென்றார் உடனே முனிகள் உள்ள மிகமகிழ்ந்து படபடென நின்று பணிந்து மிகப்போற்றி தப்பில்லையையா தவத்திலொருபங்கமில்லை நற்பல்லால் வேறு ஞாயக்கேடு ஏதுமில்லை என்று முனிகள் இகபரத்துக்கு உத்தமமாய் அன்று உரைக்க அதிகத்திருநெடுமால் நல்லதெனவே நன்மகனைத் தானாவி செல்ல மகனே செகலத்துகுள் வாநீயென மகனை மிகக்கூட்டி வாரிக்குள்ளே நடக்க தவமுனிவரெல்லாம் சங்கீதம் பாடிவர பாவாணர் பாட பரமுனிவர் தாம்பாட நாவாணர் போற்ற நாராயணர்மகனை பாற்கடலிலுள்ள பாலமிர்தந்தான்வருத்தி ஆர்க்க முடனே அருமைமகனை மூழ்க்கி அழுக்கைத் துடைத்து அஞ்சாட்சர மருளி முழுக்காட்டி மகனை உகந்தமுகத்தோடணைத்து வேதப் புரோகி விளங்கி மிகவாழ்த்த நீதம் நிறைந்த நீலநிற மண்டபத்தில் தங்க மணியரங்கில் சமையக் கொலுவதிலே மங்காத ஈசுரரும் மாதவனுந்தேவர்களும் சத்தியுமையும் சரசுபதிமாதும் முத்தியுள்ள தேவர் முனிமார் ரிஷிமாரும் எல்லோரும் நன்றாய் இறைஞ்சி முறையுமிட நல்லோர்களெல்லாம் நாடி மிகஇருக்க வல்ல திருமால் மகனை முகம்நோக்கி செல்ல மகனே சிறந்ததேதி வந்ததினால் திருநாள் நடத்தித் தெருவீதி தான்வரவும் ஒருவாரந் தன்னில் ஒருநாளிடைவிடாமல் நித்தந் திருநாள் நீ நடத்தியென்மகனே சத்தகன்னிமாரைத் தான்வருத்தி மாலையிட்டு கலியாண மங்களங்கள் காட்சித் திருநாளும் சலியாமற்காசுத் தந்தவர்களுண்டானால் வேண்டிநீ தர்மம் விரைவாய் நடத்தியிரு ஆண்டத் திருநாள் அதுமுடக்கம் வராமல் பிச்சிவெள்ளை பச்சரிசி மிளகிலை தேங்காயும் மிச்சம்பழஞ் சந்தனமும் மிகுபன்னீர் வாடைகளும் மேற்கட்டி கட்டி மிகுவாயலங்கரித்து மாற்கட்டுச் செய்து மகிழ்ச்சைடம்மானமிட்டு இந்தப்படியாய் ஏழுநாளுந் திருநாள் அந்தப்படிசெய்து அவனியிலாடிக்களித்து எல்லாமுறையும் இயல்பாகக் கொண்டாடி நல்லாண்டு தேதி நல்ல திவசம்பார்த்துத் தெய்வகன்னிமாரைத் தெய்வச்சான்றோரிடமே மெய்வரம்பான மனுமுறைபோல் தான்பேசிக் கொடுக்கல் வாங்கல்முறையும் கூறி மிகக்கேட்டு துடுக்கான நல்ல தோகைக்குணமும் பார்த்து பார்த்துன்னருகில் பணிவிடைகள் செய்யுகின்ற தோற்றுகின்ற சீசனுடத் தொல்முறையும்பார்த்து பரிய முறையும் பாவையர்கள் தம்முறையும் சரியாயுலகோர் சங்கையதுபோலே தங்க நிறமானத் தர்மத் தலைவாநீ மங்களமதாக மாலையிடு என்மகனே என்னோடு கன்னி ஏலமே சொன்னபடி தன்னோடினங்கள் தலைவன்மாரேழ்வரையும் எடுத்துக்கொடுத்து இளமுலைப்பால் தானூட்டி கொடுத்து இகனைக் கூறிக்கோ என்மகனே இப்படியே பெண்கள் இன்னுஞ்சில பேர்களுண்டு அப்படியே அவரவர்க்கு அந்தந்த வேடமிட்டு வகைவகையாய் வேசம் மாறியுருவெடுத்து திகையாமலவர்க்குச் சொல்லு முறைபோலே கலியாணக் காட்சி கணக்குத்தீர்வைமுறையும் வலியானக் கலியில் வாழ்வைமிகக் கொண்டாடி சாம்பசிவக் கோலம் சாருமஞ்சணைக்கோலம் ஆம்பக் குறக்கோலம் ஆடிமிகக்கழித்து முற்றுந் திருநாள் முழுது மிகநடத்தி பத்தும் பெரிய பாலர் தங்கள் வீடேகி விருந்து மிகவும் விரைவாகத் தானருந்தி திருந்து புகழ்கிளைபோல் சிலவீட்டமுதருந்தி பிச்சை போலுமருந்தி பெண்வழிச்சோறுமருந்தி மிச்சமாய்ப் புவியில் வேண்டும் பவிசுடனே வெற்றியிடம்மானம் விருதுக்கொடிகள்கட்டி புத்திரரானோர்க்குப் பிழைக்கும்வலு புத்திசொல்லி பாடித்தீர்வைதீர்த்துப் பரசோதனைபார்த்து ஆடித்தீர்வை தீர்த்து ஆண்பெண் மிகவேகண்டு நல்லாண்டு கண்டு நாடும் மங்கையரை செல்லக் கலியாணம் செய்து சிறப்புடனே செந்தாமரையாள் உடனே சிறப்பிருந்து கொந்தார்க் குழலை கூடி மிகப்புரிந்து ஆனை கன்றீணி அதினாலுலகமெல்லாம் தானாக நீயும் தலைவனெனச் சமைந்து முரணிக் கலியழிய முச்சுடருமொன்றாவாய் தரணியீரேழும் தடதடெனத்தானசைத்து நீயதின்மேலாளும் நிண்ணயத்தைக்கேள்மகனே தங்க முடிசூடிச் சான்றோர்க்கு நால்வரமும் அங்கவர்க்குத் தானருளி அழகு மிகக்கொடுத்து நல்ல தர்மமாக நாடும் புவியதிலே அல்லல் வினையற்று அவனியதை நீயாள்வாய் அப்போ நீயரசு ஆளுகின்ற நாளையிலே செப்பொண்ணாச்செல்வம் சிறப்புமிகவுண்டாகும் பூமடந்தை வீட்டில் புகுந்து கொலுவிருந்து தாமுனிந்து நீயும் தரணிதனில் வந்தவுடன் நான்வந்து உன்னை நாடி மிகஎடுத்து தான்மகிழச்செல்வத் தலைவனுனையாக்கி சொல்லவொண்ணாத சுகந்தருவேனென்மகனே எல்லைக்கணக்கும் ஏழுயுகக்கணக்கும் தீர்த்து உனக்குத் திருவம்பலமருளி தோற்றும் பதிகள் துலங்கும்வெகுரத்தினமாய் எல்லாமருளி ஏழுமாதர் தாஞ்சூழ வல்லோனாய் நீயும் வாழுவாயென்மகனே மலங்காதே யென்மகனே மாதவங்கள் பெற்றவனே கலங்காதே யென்மகனே கண்ணேயென் கற்பகமே என்று மகனுக்கு ஈதுரைக்கு மிவ்வளவும் மன்று குலுங்காது வாரி யலுங்காது மேகங் குடைநிழற்ற மேவலர்கள் போற்றிநிற்க யோக முனிமார் ஓதித் தமிழ்கூற ஈசர் மகிழ்ந்து இரத்தினமதிலிருக்க வாசவனுந் தேவர்களும் வாய்பொற்றித் தாழ்ந்துநிற்க இப்படியே சங்கம் எல்லா மகிழ்ந்துநிற்க அப்படியே விஞ்சைஅருளினாராதியுமே

விஞ்சையும் பெற்று வைந்தர் விரைவுடன் தகப்பன் பாதம் அஞ்சையும் புணர்ந்தசோதி அரனையும் வணங்கிப்போற்றி நெஞ்சையு மொன்றுள்ளாக்கி நிர்மலத்தாயைப் போற்றி கொஞ்சையுங்குணத்தினாதன் கூறுவார் குருவைப் பார்த்து

என்னையாட் கொண்ட நாதா எங்குமாய்நிறைந்த நீதா உன்னையான் கண்டு போற்ற உன்னருள் கிருபை தந்தாய் இன்னமுங்கலியில் போய்நான் இந்தமுறைகள் செய்தால் என்னையாட் கொண்டு ரத்தினக் கிரீடமதெப்போ தீவீர்

கிரீட மெப்போ தீவிரெனக் கேட்ட வைகுந்தா அரிவிரி கொண்டே சூடி அணியிடை மாரைத்தோய்ந்து தரிவிதியான போதும் தாமரைக்கைநிகழ்ந்த போதும் பரிவலம் வந்த போதும் பார்மகளடைந்தாயன்றே

உன்விதியதனால் முன்னூல் ஊறிய அமிர்தந் தன்னால் என்விதி தன்னால் வந்த இகபர முனக்குள்ளாகி மன்முறை தெளிந்த தன்றும் மான்கன்று ஈன்ற தன்றும் பொன்மகளகன்ற தன்றும் பூமகளடைந்தாயன்றே

பூமகளுன்னைச் சேர்ந்து பின்னாறு வரைக்கு மேலே நானுகந் தன்னாற் போக்கி நகரொரு பகற்குள்ளாக்கித் தானுனைத் தங்கமானத் தயிலமாம் பதத்தில் மூழ்க்கி வானுனை மகிழரத்தின மகிழ்கிரீடமருள்வேனென்றார்

மகனேயுனக்கு மகாசெல்வமாகிவரும் சுகமே போயிரெனவே சொல்லியனுப்பலுற்றார் அனுப்பத் திருமால் அருமைமகவான மனுப்புகழப் பெற்ற வைகுண்ட மேதுரைக்கும் பாவி வெறுநீசன் பண்ணிவைத்த பாட்டையெல்லாம் ஆவியறிந்தென்னுடைய அங்கமெல்லாஞ்சோருதையா என்று வைகுண்டர் இசையத்திருமாலும் அன்று மகனுக்கு அருளினது கேள்மாதே இந்நீசன் நமக்கு இந்தயுகம் வரையும் மன்னீதங்கெட்ட மாற்றானாய் வந்ததினால் செய்தானதினால் திருமகனேயஞ்சாதே மைதானமான வாக்கு நமக்காச்சுதென கைவாய்த்துதென்மகனே கலிநீசனயறுக்க மெய்வாய்த்து நம்முடைய மேன்மைக்குலத்தோர்க்கு அன்பான சீமை அரசாள நாளாச்சு தன்பாலடைய சரியாச்சு தென்மகனே மலங்காதே போநீ வாழுகின்ற நற்பதியில் கலங்காதே போயிருநீ கண்ணே திருமகனே மூன்று நாட்கழித்து ஏற்ற திருமாலும் அன்று விடையருள வைந்தர் விடைவேண்டி அலைவாய்க் கரையில் ஆதி வருகுமுன்னே நிலையான சான்றோர் நிரம்ப வந்து கூடினரே கண்டந்தச் சான்றோரைக் கரியமாலுமகிழ்ந்து நன்றென்று சொல்லி நாராயணர் கூட்டி பண்டிருந்த நல்ல பதியில் வந்து சேர்ந்தனரே கண்டெந்தப்பேரும் கனபிரியமாய் மகிழ்ந்து தாமோதரனார் தலத்தில் மிகச்சேர்ந்து நாமூர் முனிகூட நாடி மிகஇருந்தார் இருந்து மிகப்பாலும் ஏற்றநல்ல பச்சரிசி திருந்து சிறுமணியும் தேங்காய்ப்பூ தன்னுடனே கொல்ல மிளகு கூண்டப்பொடியுடனே நல்லாக இவ்வகைகள் நாடியொரு நேரமதாய் காவி மிகப்புரிந்து கனத்த ருத்திராட்சமிட்டுத் தாவமுடன் மாத்திரைக்கோல் தானிதுவோடேயிருந்தார் கொஞ்சநாள் கழித்து கூண்டதிவசம்பார்த்து பஞ்சகருணாதிகளைப் பண்பாகத்தானிறுத்திக் கந்தை மிகச்சூடிக் காவித்தொட்டில் மீதிருந்து விந்தையுடனுகத்து விவரிப்பெல்லாமெடுத்து கூறினாரந்தக் கூண்டரியக் காரணத்தை பேறிருக்கும் நல்லோர் பெரிய பெருமானும் நாடழியப்போறதுவும் நன்னாடு தோன்றுவதும் பாடழிய நீசன் படப்போற செய்தியதும் நல்ல மனுவோர் நாடி முழிப்பதுவும் வல்லபுவி தர்மம் வாழ்வதுவுஞ் சிறப்பும் சொல்லி விரித்தார் சிறந்ததொட்டில் மீதிருந்து எல்லோருங் கேட்டு இப்போதோர் காரணந்தான் நடத்துகிறாரென்று நல்லோர்கள் சொல்லிடுவார் சடத்தமுள்ள நீசச் சண்டாளப்பாவியெல்லாம் காசு மிகவேண்டக் கபடுசெய்கிறானெனவே பேசியிவனும் பிதற்றுகிறானென்றுசொல்லி நகைப்பார் சிரிப்பார் நன்றிகெட்ட நீசர்குலம் சிகப்பானதுவால் தெய்வகுலச் சான்றோர்கள் கூடிக்குவித்து குணமாக வேகூடி தேடிவைத்த பண்டம் சுவாமி தனக்கெனவே நம்முடைய சஞ்சலங்கள் நாடும்பிணி தீர்த்தவர்க்கு தம்முடைய பாலு தாங்கொடுக்க வேணுமென்று பசுவைக் கொடுப்பார் பாலாடு தான்கொடுப்பார் கசுவிரக்கமாகக் காசு பணங்கொடுப்பார் கஸ்தி மிகத்தீர்த்த காயாம்பு வண்ணரென்று வஸ்திரங்கொடுப்பார் வழங்குமிலை கொடுப்பார் நெல்லு சிறுமணிகள் நெய்த்தேங் காய்கனிகள் நல்லமைப்புச் சான்றோர் நாடி மிகக்கொடுத்தார் கொடுக்க அன்பரெல்லாம் குணமாய் மிகவேண்டி அடுக்க அவரருகில் அன்பாக நின்றவர்க்கும் பணிவிடைகள் செய்வோர்க்கும் பரிந்து மிகஈந்தார் மணியாம்பரனும் மகிழ்ந்துபாலேற்றனரே ஏற்று உகத்துக்கு உகத்தீர்ப்பும்புரிந்து சாற்று மொழிகூறித் தானிருக்குமப்பொழுது மாயத் திருமால் மால்வேசமே யெடுத்து தேயமதில் நம்முடைய தெய்வகுல மாதர்களை வருவிக்க வென்று மாஞால வித்தையினால் உருவிக்கவென்று உலகநருனானதிலே தாக்கி உடலுள் தமனிய மாய்ப்பொதிந்து நோக்கு முறைகாண்டம் நேர்மை மொழிமொழிந்து பெண்ணாண் வரைக்கும் பெருங்கிழவி தான்வரைக்கும் கண்ணான மதலை கைக்குழந்தை முதலாய் பாட்டு வித்தேசம் படிப்புவித்தேசமுதல் ஆட்டுவித் தேசம் ஆட்டி மிகவருத்தி முன்னமைத்த பெண்ணை எல்லாமிகப்பார்த்து சொன்ன முறைபோல் சிணம் செய்யலாமெனவே இட்டாரொருசூட்சம் ஈசர்முதலெல்லோரும் மட்டாரும் சூட்சம் வையகத்திலேயாவி சாதிபதினெட்டும் ஆராட்டுப்பார்த்தனரே ஆதிச்சா திதனிலே அமைப்புபோலுள்ளவர்கள் தானிறைந்தாடித் தண்மை மிகக்கூறி வானிறைச் சோதி மயமாய்க் குதித்தனரே இப்படியே சான்றோரில் ஏற்றபெண்ணாண்வரையும் அப்படியே நன்றாய் ஆராதனையாகி ஊருக்கூரேயிருந்து உற்ற நருட்களெல்லாம் பாருகங்காணப் பண்பாகக் கொண்டாடி உமைபார்வதியெனவும் உற்ற முத்தாரெனவும் இமையோர் புகழும் இலட்சுமி நானெனவும் சத்திகன்னி மாதரென்றும் தார்குழலார் தோழியென்றும் பத்தியுள்ள நல்ல பரமேசொரியெனவும் மண்டைக்காட்டாளெனவும் மாதுநல்லாள் தோழியென்றும் பண்டையுள்ள ஈசொரியாள் பாக்கியவாட்டியென்றும் வள்ளிதெய்வானை வாய்த்த பகவதியெனவும் பூமடந்தையென்றும் பெரிய பிராட்டியென்றும் பார்மடந்தையென்றும் பத்திரமாகாளியென்றும் நாகக்கன்னியென்றும் நல்லதெய்வக் கன்னியென்றும் பாகைக் கைகாட்டும் பைங்கிளிமார் நாங்களென்று இப்படியே நல்ல ஏந்திழைமாரெல்லோரும் அப்படியே நல்ல அவனிப்பெண்ணார்பேரில் ஆராதனையாய் அங்கங்கு தான்கூடி சீராகக் கூடிச் சேர்ந்து வருவார் தினமே ஆண்பிள்ளைகள்பேரில் ஆனசிவன் மாலெனவும் நான்பிரமாவென்றும் நல்ல அனுமனென்றும் காலனென்றும் ஏமனென்றும்கடியபெலக்கந்தனென்றும் மாலவனின் மக்களென்றும் மாமுனிமார் நாங்களென்றும் தேவரிஷியெனவும் சிமிள்கருட சேவனென்றும் தாவமுள்ள நல்ல சன்னாசி மார்களென்றும் ஆராதனையாய் அவர்கள் மிகஆடி சீராகக் காண்டம் செப்பிமிகப்படிப்பார் வருவார் தினமே மாயோனிடமதிலே கருவாயுதித்த காண்டம் கூறிமிகப்படிப்பார் இப்படியே பெண்ணாணும் யாமமுறைப்படியே அப்படியே வந்து ஆடி மிகப்படிக்க நல்ல நாராயணரும் நாட்ட மிகஅறிந்து வல்லப் பொருளும் மனதுளறிந்திருப்பார் அறிந்து சிலநாள் அகமகிழ்ந்து தான்பார்த்து செறிந்த குணநாதன் தேதி கணக்கதிலே இகனை நடத்த எண்ணமுற்றிருக்கையிலே உவமை பலசொல்லி உற்றதெய்வக் கன்னியர்கள் அனைவோரும்புகழும் அரன்கயிலை வாழ்ந்ததுவும் சுனையாடப்போனதுவும் தூயோனடத்தினதும் பிள்ளைதனைப் பெற்றதுவும் பெருவனத்தில் சென்றதுவும் வள்ளல் சிவனை வருந்தித் தவம்புரிந்து உலகில்மிகத் தோன்றும் உள்ளவர்த்தமானமெல்லாம் சிலைநுதலிக் கன்னி சொல்லி மிகப்படிப்பார் அப்போ திருமால் அடக்கி மிகமனதில் செப்புவதெல்லாம் சிந்தைதனில் கொண்டிருந்தார் உமைமண்டைக்காட்டாள் உற்ற பகவதியாள் இமையோர் புகழும் ஏற்றகுல பார்பதியாள் சீதை மடந்தை சேயிழைமாரெல்லோரும் மாதவனை நோக்கி வளங்கூறியே படிப்பார் பாவிக்கலியன் பழிநீசன் தோன்றினதால் மேவிக்கலியில் மிகமூழ்கி மாயமதால் மாயக்கலியை வதைக்குமந்த நாளையிலே தேசமதிலெங்களையும் திருக்கல்யாண முகித்து எங்களுட நாயகனார் இங்குவருவோமெனவும் எங்களையுமிங்கே இக்கோலமாய் வரவே சொல்லியயைச்ச சுவாமிநீர் வந்தீரோ பல்லுயிரும் பணியும் பரமனேநீர் வந்தீரோ என்று மடவார் இப்படியேயிசைய பண்டு முறைபோல் பிரப்பிரமமாயிருக்கும் எண்ணித்திருமால் இருதயத்திலேயடக்கி மண்ணிலுள்ளோர்கள் வந்துமிகக் கூடிநிற்க மேலோகத் தார்கள் இறைஞ்சிமிகப்பார்த்து நிற்க பூலோகமெல்லாம் புதுமையெனப் பார்த்து நிற்க அப்போது மாயாதி ஆகமத்தின்படியே செப்போடு வொத்த தேசத்திருப்பதியில் வாழுகின்ற தேவரையும் வாகாய் வரவழைத்து நாளுக்கு நான்சொன்ன ஞாய முறைப்படியே நடத்தாமலிப்போ ஞாயமீறி நீங்கள் அடத்தமாய்ச்செய்வதென்ன எல்லோருஞ்சொல்லுமென்றார் உடனேயெல்லோரும் உள்ள மிகத்தளர்ந்து திடமே குளறிச்சொல்லவாயில்லாமல் புத்தி மயங்கிப் பொறியழிந்து தேவரெல்லாம் சத்திகெட்டார் போலே தானே விறுவிறுத்து நின்ற நிலையை நெடிய திருமாலறிந்து குன்றுதனில் கொண்டு கொழுவிலங்கில் தான்சேர்த்து மன்று ஒருகுடைக்குள் வைகுண்டம் ஆளவரும் இன்றுமுதல்லக்குவரை இருங்கோ பாராவதிலே வைத்தாரே நல்ல வடவா முகமதிலே செய்த்தான் விதியெனவே தேவரெல்லாமிருந்தார் அந்த அவதாரம் அதிக முடனடத்தி சந்தானமான சப்தகன்னிமாரையினி மாமணங்கள் செய்து மாதரேழு பேர்களுக்கும் தாமதங்களின்றி சந்ததிகள் தாங்கொடுத்து இராச்சியமுங்கொடுத்து ஏற்றபவிசுங்கொடுத்து இராச்சியமாளச் செய்யவேணுமெனவே நினைத்துத் திருமால் நின்றிதயத்தே யடக்கி தனத்தனங்கள்பாடித் தந்தனங்கள் போடலுற்றார் தினத்தினங்கள் பாடித் திருவேடம் போடலுற்றார்

முன்னே குருநாடைவருக்கு மீண்டு கொடுத்து மிகக்கலியால் பொன்னோர்மானாயுருவெடுத்து பொருப்பேறி முனிகையால் சென்றோங் கூடு மிகப்போட்டு ஸ்ரீரங்க மேகச் செல்வழியில் மின்னார்களேழ்வரையும் மேவிப்புணர்ந்தோமவ்வனத்தில்

வனத்தில் புணர்ந்து மாதர்களை மக்களேழும் பெறவருளிப் புனத்தில் காளிதனைவருத்திப்பிள்ளையேழு மிகஈந்து இனத்தில் பிரிந்தமானதுபோல் இவர்களேழு மடவாரை வனத்தில் தவசு மிகப்புரிய மனதைக்கொடுத்து மீண்டோமே

மீண்டோங் கயிலை இருந்து பின்னும் மெல்லியர் தவம்பார்க்க ஆண்டோர் சிவனாருமையாளும் யாமுந் தவத்துக் கருள்புரிந்து சான்றோரிடமேபிறவிசெய்து தரணிதனிலேநாம்வருவோம் என்றே விடைகள் கொடுத்தயைச்ச இளமா மாதர் வந்தனரே

முற்பிறவி செய்த மொய்குழலார் வந்தாரென நற்பிறவி கொண்ட நாராயணர்மகிழ்ந்து ஆடரம்பைமாரை அருமைமணஞ் சூட்டவென்று வேடமதிட்டார் வீரநாராயணராய் நாராயணராய் நல்ல திரு வேடமிட்டு சீரான காவிச் சீலை மிகப்புரிந்து ஒருதோளில் பொக்கணமும் உத்திராட்சமாலைகளும் துரிதமுடன் சிரசில் துளசிமாலை புனைந்து கையிற் பிரம்பும் கனத்த சுரைக்கூடுடனே மெய்யில் வெண்பதமும் உத்திராட்சமுமணிந்து மாலு நிறமாய் வாய்த்ததொட்டில் மீதிருந்து ஆகமத்திலுள்ள அறிவுஞானம்பேசி பாகமதில் நிற்கும் பாலதியச்சான்றோரை பார்த்து அருகழைத்துப் பச்சைமாலேதுரைப்பார் நாற்றிசை யுமறிய நல்லகுலச் சான்றோரே உங்களுட தாய்மார் உற்றகன்னிமார்களை நான் எங்களுடவிதியால் இப்போமணஞ் சூட்டுதற்கு விதி வந்திருக்குதுகாண் வேளையி தானதினால் பெரியவுங்கள் தாய்மாரைப் போயழைத்து வாருமென்றார் நால்திசையும் நீங்கள் நடந்துமிக சத்தமிட்டு மாலதியப் பெண்ணை வரவழைத்து வாருமென்றார் சீரான நூல்முறைக்கு தேனயெங்கள் தாய்மாரே நாராயணர்க்கு நல்லமணஞ்சூட்டுதற்கு நாளான நாளிதுவாம் நன்னுதலே தாய்மாரே தாழாமல் வாருமென்று சத்தமிட்டழையுமென்றார் இப்படியே சொல்லி ஏற்றபுகழ்ச்சான்றோர்கள் அப்படியே சொல்லி அழைத்தாரே சத்தமிட்டு பாலருட சத்தம் பாவையர்கள் கேட்டுமிக சீலமுடனெழுந்து தெய்வமடமாதர் வந்தார் வந்துமிக நாரணரை வாழ்த்தி மிகவணங்கி சந்துஷ்டியாகத் தங்கள்தங்கள் வாக்கில்நின்று முன்முறைகள் சொல்லி மொழிந்து மிகப்படித்தார் தென்பதிகளான தெச்சணாபூமியிலே நான் வந்திருந்து நானிலத்துள்ளவர்க்கு தீனம் பலதீர்த்து ஸ்ரீபண்டாரமெனவே நாமமிகக்கூறி நாட்டிலிருப்போமெனவே சொல்லியெங்கள்தம்மைத் தொல்புவியில் வாருமென்று நல்லவராய்ச் சான்றோருள் நாடிப்பிறவிசெய்தீர் பிறந்து வளர்ந்து என்பேரு கேட்டவுடன் மறந்திடா வண்ணம் வாருங்கோ என்றுசொல்லி பிறவிசெய்த நாயகரே பெரியவரே வந்தீரோ கங்கை திரட்டி கறைகண்டர் தன்சிரசில் பெண்களேழுபேரும் பிரியமுடன் வாழ்ந்திருந்து எங்கள் கற்பெல்லாம் ஈடழியவே துணிந்து சங்கையழித்த தலைவனேநீர் வந்தீரோ எங்களுட பிள்ளை ஏழுமினவழியும் அங்கங் குறையாமல் அவ்வழிகள் தாமுழுதும் கொத்தோடே சேர்த்துக் குடும்பத்தோடேயடக்கி பெற்றோர்க்கு எல்லாம் பெருவாழ்வு தான்வகுத்து எங்களையுஞ் சேர்த்து இராட்சியமுமருளி மங்களமாய் வாழ்வோமென்ற மாதவரே வந்தீரோ இனியிப்போதேழ்வரையும் ஏற்ற மணம்புரிந்து வனிதவழு மாயவரே வைத்தாளுமென்றுசொல்லி பாடியே மாமடவார் பாதம் பணிந்துநிற்க நாடியேயெம்பெருமாள் நல்லதாகட்டெனவே அருகில் மிகநிற்கும் அன்பான சான்றோரை வருக அழைத்து வார்த்தைமிகக் கூறலுற்றார் எந்தனக்கு முன்னமைத்த இளங்குழலாரேழ்பேரும் வந்தனரேயிவர்கள் வளப்பமென்ன சொல்லுமென்றார் கன்னிதானோயிவர்கள் கள்ளிகளோ பாருமென்று உன்னி மனதுள் உபாயமாய்த்தானுரைத்தார் நடையுடைகள் பேச்சு நாரியர்கள் தங்குணங்கள் மடமயிலின் சாடை மாதிரியைப்பாருமென்றார் அப்போது சான்றோர் எல்லோருமே மகிழ்ந்து இப்போது எங்களுக்கு ஏதுந்தெரியாது படைத்தவர்க்கேதெரியும் பாவையரின் தங்குணங்கள் செடத்தமெல்லாமெங்களுக்கு தெரியாதெனவுரைத்தார் மாயவர் தான்பார்த்து மாதுகளைத் தாம்நோக்கி தூயவர் தான்வார்த்தைச் சொல்லுவார் பெண்களுடன் நானெப்போதுங்களையும் நடுவனத்தில் கண்டதுதான் தானெப்போ வந்தேன் தார்குழலே நானறியேன் காட்டிலே வந்ததெப்போ கற்பையழித்ததெப்போ பேட்டிசெய்து பிள்ளை பெற்றதெப்போ நானறியேன் ஒன்றுந் தெரியாது உங்களைநான் கண்டதில்லை பெண்டுகளே யிப்பேச்சுப் பேசாதே போய்விடுங்கோ மாயமாய் நீங்கள் மருட்டி விழியாதுங்கோ பாயமாயுங்கள் பகட்டிலடங்கேனான் பண்டாரத் தோடே பழிமொழிகள் பேசாதே அண்டாது உங்கள்மொழி அகலநின்று போய்விடுங்கோ என்று அடாத்தியமாய் இவர்தான் மிகமொழிந்தார் நின்று நினைத்து நேரிழைமாரெல்லோரும் அடர்ந்து மடவார் ஆகத்திரண்டே கூடி தொடர்ந்து நெருங்கித் தொட்டுப்பிடிக்கவென்று தார்குழலில் மூத்த சாத்திரத்தாளேதுரைப்பாள் வாரணியுங் கூந்தல் மடவாரென் தங்கையரே கள்ளக்கவுலாய்க் கண்மாயஞ்செய்துஅன்று மெள்ள நெகிழ்ந்த மெக்குவாய்த்தாதனையம் சென்று பிடித்துச் செய்தியென்ன கேளுமென்று தன்றுபுகழ் சாத்திரத்தாள் தங்கையரைக் கண்காட்ட மடவார்க்ளெல்லாம் மாகோபமாய்வெகுண்டு அடவாக மாயவரை அடர்ந்து பிடிக்கலுற்றார்

தேன்மொழிமாரே யென்றன் சித்திரத்தங்கை மாரே கான்வனமதிலே நம்மைக் கைகலந் திழிவு செய்த மான்முனிகண்டோம்வார்த்தையில் குழைக்கார்சோற்றை வான்முனிதனைநீங்கள்வளையுங்கோசிணமே யென்றாள்

செப்பிட மூத்த கன்னி தேவியராறு பேரும் அப்படி ஒன்று போலே அவர்வளைந்தாதி தன்னை முப்படி யெங்கள் தம்மை மொய்வனமதிலே வந்து கற்பினை இகழச் செய்தக் கள்வரே யென்று சூழ்ந்தார்

சூழ்ந்தே நமது துகிலைமுன்னம் சுழியஞ் செய்த மாமுனியைப் பூந்தே நெருங்கித் துகிலுரியப் பிடித்தே யிழுத்து நாமீன்ற சான்றோர் மக்களேழ்வரையும் தரவே யென்ன செய்தியென்று ஓர்ந்தே கேட்போமென்றுசொல்லி ஒன்றுபோல் வளையலுற்றார்

வளைந்த போது மாயவரும் மனதுளுபாயமொன்றெடுத்து இளந்த மொழிகள் சொன்னாக்கால் இளப்ப மிதுவே யாகுமென்று குழைந்த வார்த்தை மிகக்கூறி குழந்தை யேழு மினவழியும் நுழைந்தேயெடுத்து நொடிப்பொழுதில் கொண்டு தாறோமென்றார்

தரு (பல்லவி) பிள்ளையை நாம்தாறோம்-நீங்கள்பெற்ற பிள்ளையை நாம்தாறோம்

அனுபல்லவி பிள்ளையை நாம்தாறோம் கிள்ளை மடவாரே கள்ள மொழியில்லை உள்ளதைச் சொல்லுகிறோம் (பிள்ளை)

சரணம் காட்டு வனத்திலே கண்டுங்கள் தம்மையும் லோட்டுகள் பார்த்துநீருடுகலை தோற்றதும் மேட்டுக ளாயென்னை யெரிக்கத் துணிந்ததும் பூட்டுகள்சொல்லாமல் பெண்ணேநீர்பெற்றிடும் (பிள்ளை)

அருவன மீதினில் அமிர்தவாழ் கெங்கையில் சொரூபமாய் நீங்கள் சுனையாடும் வேளையில் வரும்வழி மீதுங்கள் வாய்மொழி மதங்கண்டு கருவது கொண்டுநீர் காட்டினிலீன்றிடும் (பிள்ளை)

உறுவன மீதிலென் உபாயத்தை யறியாமல் முறுவல்செய் தென்னைநீர் மொழிந்தது கண்டுநான் இறுவான மேலோக எழுபுவி உயிரெனப் பெறுகநான் செய்திடப் பேணியே நீர்பெற்ற (பிள்ளை)

மடமயில் மாதே நீங்கள் வந்தென்னை நெருக்க வேண்டாம் தொடவும்நீர் ஞாயமில்லை தூரவே யகல நின்று அடவதில் பெற்ற பிள்ளைக்குஅடையாள மறியச்சொன்னால் உடனிப்போ மதலைதந்து உலகமுமருள்வோமென்றார்

அய்யனே குருவே யெங்கள் ஆதியே சோதியான மெய்யனே வொப்பில்லாத வேதநன் மணியே கேள்மோ வெய்யநல் மதலை யீன்று வெட்கமு மிகவேயாகிக் கையது தப்பி யோடக் கண்டமோ மதலை யென்றார்

தரு(பல்லவி) மதலையைத் தாருமையா –நாங்கள் பெற்ற மதலையைத் தாருமையா அனுபல்லவி மதலையைத் தாருமெங்கள் வயிறெல்லாங் கொதிக்குது குதலைமொழிகள்கேட்டுக் கொஞ்சிக் குழைந்திருக்க

சரணம் பெற்ற நாளன்று முதல் பிள்ளைதனைக் காணாமலே மெத்த மனதுநொந்து மெய்யுந்தளருதையோ வாலைப்பருவத்திலே வனத்தில் மயக்கமிட்டு கோலமழித்தவேத கோலகால மாமுனியே (மதலை)

பாலர்பெற்ற நாள்முதலாய்ப் பன்னிரண்டு ஆண்டுவரை காலதிழகாமலே காட்டில் தவசிருந்தோம் ஊணு உறக்கமில்லை ஒருவரின் தஞ்சமில்லை மூணுநாலு காலம்வரை மூண்டத்தவசிருந்தோம் (மதலை)

சிங்கங்கரடிபுலி திரியும் வனத்தினூடே நங்கைமாரேழ்பேரும் நாடித்தவசிருந்தோம் இத்தனை நாளுந் தவம்இருந்து பின்னாங்களெல்லாம் பெற்ற நல் மனுவயிற்றில் பிறந்து உதித்துவந்தோம் (மதலை)

முன்னிருந்த செல்வமென்ன மூதூர்சிறப்புமென்ன மன்னுகந்த மாதுமையை மறந்து கலியில் வந்தோம் ஆண்டச் சிறப்புமென்ன அருஞ்சுனை யாடலென்ன காண்டம்நிறை வேறுதற்கோகலியிலுதித்துவந்தோம் (மதலை)

உண்டிருந்த செல்வமென்ன உடுத்ததுகில் ஞாயமென்ன கொண்டிருந்த விதிப்பயனோகூறுகலி மீதில்வந்தோம் பந்தடிக்கும் வீரமென்ன பூத்தொடுக்கும் சாரமென்ன முன்னுரைத்து விட்டதுபோல் மூண்டகலிமீதில்வந்தோம் (மதலை)

கன்னியழியுமன்னே காதல்தனைப்பெற்றதினால் நின்னுபிள்ளைப் பாராமலே நெடுகநடந்துவிட்டோம் கண்டுபிள்ளைத்தானெடுத்துக்கமலமுகத்தோடணைத்து பெண்டேழும்பால்கொடாமல் பெருகவனத்தில் சென்றோம் (மதலை)

பாலிளகி நல்லமிர்தம் பாலாய்ச்சொரியுதையோ மாலழகா எங்களுட மனக்கவலையைத்தீர்க்க வர்ண நிறமதுவும் மக்களுட சாயலதும் கண்ணதிலே கண்டறியோம் கையதிலே தாருமையா (மதலை)

அங்கமெல்லாஞ் சோருதையோ ஆவிமெத்த வாடுதையோ தங்கமணி நாங்கள் பெற்ற தவமணியை எம்கையில் மங்காத தெய்வகுல மக்களேழுமேழ்வழியும் சிங்காரமாக இப்போ சீக்கிரம்நீர் தாருமையா (மதலை)

மதலையுந் தந்து எங்கள் மனச்சடவெல்லா மாற்றி குதலைகள் தமக்கு இந்தக்குருமுடி சூட்டித் தர்ம பதியுக மதிலே யெங்கள் பார்முடி மன்னராக நிதமிருந் தரசேயாள நின்மக்கள் தருவீ ரென்றார்

தருவீரெனவுரைக்கும் மடமாதே நீங்கள் சந்ததியைப் பெற்றிடத்தில் தயவாய்ப் பாரும் பெருகியே வாழ்ந்திருப்பார் அங்கே சென்று பெற்றிடத்தைப் பார் குகையிலுண்டுமங்கே மருவி யென்னைக்கேளாதே காட்டினூடே வாழ்ந்திருப்பார் கண்டுகொள்வீர் திட்டஞ்சொன்னோம் சருவியென்னை நெருங்காதே மடவீரெல்லாம் சந்ததியைத் தேடிவனஞ் செல்லுவீரே

செல்லுவீரெனமொழிந்த தேனே கண்ணே சீமானே நாமாது புரக்கு மாலே பல்லுயிரு மிகப்படைத்தப்பாக்கிய வானே பருவனத்தி லெங்களை நீர் பற்றி வந்து தொல்லைவினை செய்து நாம் சுமந்து பெற்ற சுத்தகுல மானதெய்வச்சான்றோர் தம்மை இல்லிடத்திலிப்போது தருகிலானால் இழுத்து வும்மைச் சந்தியிலே ஏற்றுவோமே

சந்தியிலேற்றுவோ மென்ற மாதேகேளு தருவதுண்டோ முன்கடன்கள் தந்ததுண்டோ பந்தியழித் துங்களுடப் பேச்சை நானும் பகருவே னுங்களைப் பார்பழித்துப் பேச முந்தியிதை யுரைத்திட்டே னோடிப் போங்கோ உலகநருள் அறிந்தாக்கால் சிரிக்கலாகும் சிந்தனைக்கே டாகும்வரை நிற்க வேண்டாம் தேன்மொழியே மறுவிடம்போய்த் தேடுவீரே

தேடுவீரெனமொழிந்த இந்திர ஜாலம் தெய்வமட மாதரொடு செலுத்த வேண்டாம் நாடுபதி னாலறியு முமது கள்ள ஞாயமது எங்களொடு நவில வேண்டாம் வீடுவழி தோறும் விருந்துண்டு முன்ன மெல்லிமட வார்சிலரைக்கொள்ளை கொண்டு பாடுபட்ட பாட்டையினிநாங்கள் சொன்னால் பாரிலுள்ளோருமைப்பேசிப் பழிப்பர் காணும்

பழிப்பரெனச்சொன்ன இளம்பாவை மாரே பாரிலுள்ளோரறிவார்கள்பச்சை மாலின் களிப்பதுவுங் காண்டமுறை நூல்கள் தோறும் காரணத்தைச் சொல்வார்கள்கருதிக்கேளு சுழிப்பதுவு மமைப்பதுவும் நமக்குள்ளாகும் தோகையரே யிதுஎனக்குச் சொந்த வித்தை குளிப்பதுவில் சுனையாடி மதலை யீன்றக் கோலமதைச் சொன்னாக்கால் குறைவதாமே

குறைவதாமெனச்சொன்னக் குறவா கேளும் கோவேங்கிரிவாழுங்குலமா மாதர் மறைமுதல்வனான சிவனார்க்கு நாங்கள் வந்துசுனை யாடிகெங்கைத்திரட்டி யேக துறையறியாக் களவாண்டுத் தேய்ந்த கள்வா தொல்புவிக ளறியாதோவுன் சுத்தக் கள்ளம் இறையளவு மெய்யில்லாப் பொய்யே சொல்லும் ஏமாளிக் கள்ளரென எவருஞ் சொல்வார்

கள்ளரெனச் சொல்லிவந்த மாதே நீங்கள் களவாண்டீர் கயிலையதிலீசர் முன்பில் வெள்ளமது திரளாமல் கள்ளத்தாலே வெம்மருண்டு நின்றவித வெட்கங் கண்டு வள்ளல் சிவனாரறிந்துக் கலியில் சான்றோர் மேல்வழியில் பிறக்கவென்று சபித்தார் முன்னே உள்ளதெல்லாஞ் சொல்லிடுவேன் ஓடிப் போங்கோ ஓகோகோ வெனச்சொல்லி யுறுக்கினாரே


உறுக்கி நீருரைத்தசுணையுமக்கேயல்லால் ஓவியங்க ளேழ்பேர்க்கு முண்டோ சொல்லும் இறுக்கிவைத்த நீரிளகச்செய்த கள்ளம் ஈசர்முத லெல்லோருஞ் சொல்லு வார்கள் சிறுக்குமிடை மாதருட வீட்டில் வெண்ணெய்த் திருடியுண்டக் கள்வரெனச்சொல்வா ரும்மை பொறுக்க இனி மாட்டோங் காணுமதுஞாயம் புகன்றிடுவோ மினியண்டம் பொடியத் தானே

பிட்டுக்காய் மண்சுமந்து வைகை தன்னில் பிரம்படிகள் பட்டதுவும் போதா தென்றோ கெட்டுமிகப் பட்டீரே இடைச்சி கையால் கேள்வியில்லா முப்புரத்தில்கிழவன் போலக் குட்டுமிகப் பட்டுமது மீசைதன்னில் குறுங்கண்ணி போட்டிழுத்துக் குனிய வைத்தப் பொட்டதுவுங் குலைத்திடுவோம் நாங்கள் பெற்ற பிள்ளைதனை தந்துபுவியாள வைப்பீர்

ஆடெடுத்தக் கள்வரல்லோவுமக்குச் சூடு அணுவளவுந் தோற்றாமலலைந்து எந்த நாடடுத்த இடமெல்லாம் வேசம் போட்டு நாணமதொன்றில்லாமல் நாரி மார்தம் வீடடுத்த மனைதோறும் மிரட்டிக் கொஞ்சி வேசியொடு கூடிவிளை யாடுங்கள்ள கூடெடுத்த மறையல்லோ எங்கள் தம்மை குவலயத்தில் கள்ளியெனக் கூறினீரே

இன்னமுண்டு வுமக்குவெகு பங்கந்தானும் எடுத்துரைத்தாலிப்போது இளப்பமாகும் முன்னமைத்தப் பாலரையும்இனத்திற் சேர்க்கை முழுவதையுந் தந்து புவியாள வைப்பீர் இன்னமிப்போதாராமல் இருந்தீரானால் ஈரேழு யுகமறிய இழுத்து உம்மை அன்னமது அருந்தாமல் இழுத்துக் கொள்வோம் அதுவறிந்து பாலரைத் தந்தாளுவீரே

பாலரைத்தந் தாளுவீரெனமொழிந்த பாவைமாரே பகற்பொழுது கழித்துவெள்ளியுதிக்கும் நாளை காலமே நீரெல்லோரும் வந்தீரானால் கதிரவனும் போயடைந்து கங்குலாகும் சீலமுடன் தென்றலுக்கும்மழைக்கும் நானோர் சீட்டெழுதித் தேவரையும் வருத்தியிங்கே கோலமணமுங்களைநான் புரிந்து கொள்வேன் குடிலதுக்குப் போயமுதுகுடித்து வாரும்

வாருமென மங்கையர்க்கு விடையருளி மாயன் வருணனுக்குந் தென்றலுக்கும் வான லோக ஊருமிக அறிவதற்கு ஓலை தானும் உடனெழுதி அழைச்சிடவே வந்தார் வானோர் பாருடனே சங்கமது திரண்டு கூடி பாவாணர் கீதமுறைப் பாடி நிற்க சீருடனே கதிரவன் போயடைந்து மீண்டு தினகரனு முதித்துவெள்ளி தோன்றிற்றன்றே

தோன்றிய பொழுதே வானோர் ஈசர்மாது துதிமுகனும் நான்முகனுந் தொல்வி மாதும் கூன்றிருஷி தேவரிஷி வேதமான குணயிருஷி கிணயிருஷி குலமாமாது தான்று சரசோதி பகவதி மாமாது சதாகோடி தேவரம்பை சங்கமாக மன்றுபுகழ் நாரணர்க்குந் தெய்வ கன்னி மடவார்க்கு முகூர்த்தமென வந்தாரங்கே

வானமதில் டம்மான முழக்கத் தேவர் மலர்மாரி சலமாரி வானோர் தூவ நான்முகனும் வேதமுறை முகூர்த்தங்கூற நாரிமார் குரவையிட நமனு மாற தானமுறை மாமடவார் சமனங்கூற தரணிதனில் நாரணர்க்கு தையலான மேனமுகில் மாதருக்கு மணமாமென்று மேலோகப் பந்தலது விண்ணோரிட்டார்

பந்தலுக்கு நமனாதி காலதாக பக்கம்பதினைந்தும் வளை பரப்பதாக சந்தமுடன் மேற்கட்டிமறையதாகச் சாருமேல் மேய்ந்ததுவே சமயமாக அந்த முறை சூரியனும் விளக்கதாக அலங்கிருதம் வானக்காயதுவேயாக சொந்தமுள்ள சிவமதுவே பீட மாக தேவரெல்லாஞ்செய்துபந்தல் சிறப்பித்தாரே

சிறப்பித்தோமென்று மகாதேவரெல்லாம் திருமாலினடிபணிந்து சொல்வாரப்போ பிறப்பித்தப் பெம்மானே யெவர்க்கு மாய்ந்து பேணியமுதளித்துவுயிரனைத்துங் காக்கும் உறப்பித்த மாலோனே அய்யா வுந்தன் உதவியினால் பந்தலது விதானஞ் செய்தோம் நிறப்பித்த மணமதுக்கு நாங்கள் செய்யும் நிசவேலை யின்னதென நிகழ்த்துவீரே

தேவருரை யதனைமிகக்கேட்டு மாயன் திருமனது மகிழ்ந்துவாய் திறந்து சொல்வார் மூவருரை மாறமலெனக்கு முன்னே மொழிந்ததெய்வ மாதர்களை முகூர்த்தஞ்செய்ய நாவதுரை வருணனொடு வாயு தானும் நளினமலர் தூவியது குளிர வீச தேவருரை செய்துமிக நில்லு மென்று தெய்வமடவார் வரவே சிந்தித்தாரே

சிந்தித்தவுடனே யந்தத்தேன்மொழி மாதரெல்லாம் வந்தவரடியைப் போற்றி வணங்கியே நாங்கள் பெற்ற சந்ததி யேழு பேரும் தன்னுட கிளைகளொக்கத் தந்துநற் புவியையாளத் தருவீரென் தலைவா என்றார்

தருவீரென மொழிந்தகுல மாதே பெண்ணே தலைவருங்கள் மக்களையுந்தருக வுங்கள் மருவினியக் கருவதிலே யுதிக்க ஈன்ற மனுவழியை யென்முன்னே வருகச்செய்தால் தருமினிய சொத்தாஸ்தி பொன்னுங் காசு தாறதுவுங் கொடுப்பதுவும் சபையிற் பேசி பெருகவுங்கள் தம்மைமணஞ் செய்து நீங்கள் பெற்றபிள்ளை தந்து புவியாள வைப்பேன்

புவியாள வைப்பேனென வுரைத்தீரெங்கள் பொன்மானே கண்மணியே புரந்தமாலே கவிஞோர்கள் போற்றுமதக் கன்றே தேனே காயாம்பு மேனியரே கடவு ளாரே இவிலோகக் கலியதிலே பிறந்ததாலே இதுநாளும் வரையன்னம் ஈந்த பேர்கள் செவியாலுன்பதமடைந்தால் அவர்களேது செய்வார்களெங்களொடு சேர்க்கை தானோ

சேர்க்கையுண்டோ எனமொழிந்தமானே பொன்னே தேன்மொழியே யுங்களுக்குத் தெரியாவண்ணம் வார்த்தையிது சொல்லாதே நமது வாழ்வும் மக்களுட வாழ்வதுவுமொன்று போலே மார்க்கமுடன் வைத்தரசு ஆள நானும் மனமதிலே நினைத்திருக்கும்வளமையாலே கோர்கையிது அவர்கொடுக்கல் வாங்கல் தன்னை கூறிமிகக் கேட்டு மணங்கூடுவேனே

மணங்கூடுவேனென உரைக்க மாயன் மனுவழியிலுதித்தகுலச் சான்றோரெல்லாம் அணங்குஇன வழிபோலே அவர்கள் வந்து ஆயனடிப் போற்றிமிக அன்பாய் நிற்கக் குணங்குறிகள் கண்டுமிக அரியோன் மெச்சி கொடுப்பதென்ன இவர்களைநான் மணங்கள் செய்தால் பணங்கள்மிகப் பொன்காசு ரெம்ப ரெம்ப பாவையர்க்குச் சீதனங்கள் பகருவீரே

பகருவீ ரெனமொழிந்தஅய்யா நீரும் பரிசமென்ன எங்களுக்குப் பண்பாயீவீர் உகருமெனச்சொல்லிடவே சான்றோரெல்லாம் உடையகுலச் சொக்கருமே உரைப்பார் பின்னும் தகருமோ நான்தருகுந் தங்கக்காசு சதாகோடியெண்ணமது தானோ இல்லை நிகருவீர் நீங்கள்தருஞ் சொத்தையெல்லாம் நினக்கறியச் சொல்லிடுங்கோ நிசமாயென்றார்

ஆண்டவரேயிப்பரிசந் தருவீரானால் யாமடியாராளுகின்ற வஸ்துவெல்லாம் கூண்டபண்டம் பொன் உடைமையாடுமாடு குருபரனே யாங்கள்வரை உமக்குச்சொந்தம் மீண்டடிமை முக்காலும் உமக்கு நாங்கள் விலையடிமை யானோங்காண் விரைய மாலே பாண்டவரைக் காத்துரெட்சித்து ஆண்டாப்போலே பாவையரும் மக்களும் உம்பக்கந்தானே

பக்கமது என்றவுடன் மாயன் தானும் பதறாதே உங்களையுங் காத்துக் கொள்வோம் ஒக்கவெனக் குங்களையும் ஆண்டு கொள்வோம் ஒன்றுபோ லிருந்துபுவியாள்வோம் நாமும் தக்கமதொன்றில்லையப்பா இந்த வார்த்தை தந்ததுவு மீந்ததுவுந் தவறோ இல்லை மிக்கதெய்வக் கன்னியரை மணங்கள் செய்ய மெல்லிகையைப் பிடித்தெனக்குவிடுகு வீரே

கைப்பிடித்துத் தாருமெனவுரைத்தீரையா கணவரல்லோ முன்னவர்க்குக்கருணை மாலே மெய்ப்பிடித்த மெல்லியருந் தேவியல்லோ மேதினிகளறிய அவதாரஞ்செய்தீர் எப்படித்தானாங்கள் கையை பிடித்து ஈய இவ்வுலகிலவதார இகனை தானோ எப்படியோ அறியோங்காணென்று சொல்லி ஏந்திழைமார் கைப்பிடித்தங்கீயலுற்றார்

ஈந்திடவே மாயவருந்தங்கத் தாலே இரத்தினவொளி போல்வீசுந்தாலிதன்னை மாய்ந்துமிகப் போகாமல் தாலி வாழ மகாதர்ம யுகம்வாழ மாதும் வாழ ஏந்துபுவி தர்மமது தழைத்து வாழ ஈசர்முதலெல்லோருமிருந்து வாழ சாந்தகுலச் சான்றோர்கள் தழைத்து வாழ தாலிமிக வாழவென்று தரித்தார் தாலி

தாலிமிகத் தரிக்குகையில் மாதரோடு தமனிய நாதன் மகிழ்ந்து தானே சொல்வார் கேலிமிகவுரையாதீரெனக்கு இன்னம் கெணிமடவாரநேகமுண்டு மணங்கள் செய்ய சோலியல்லோ ஆச்சுதென்று நினையாதுங்கோ தொல்புவியை யரசாள்வீர் நிசமே சொன்னோம் மாலினுட சூட்சம் மகாகோடி யுண்டு மனதுசடை யாமல் மிக வாழுவீரே

வாழுவீர் கூடுவிட்டுக்கூடு பாய்வேன் மறுவூரு பாய்ந்துவுங்கள் மனதில் வாழ்வேன் மாளுவேன் முழித்துப்பின் வருவேனுங்கள் மனதலைந்து எனைஇகழ்ந்து மாளாதுங்கோ தோளிலே யிருந்துபல சூட்சஞ் செய்வேன் தோகையரே நீங்களெல்லாமெனது பாயம் நாளிலே யறிந்துமிகக்கண்டு கொள்ளும் நாரணரினடப்பிதுவே ஞாயஞ் சொன்னோம்

சொன்னமொழி தனைமறந்து நீங்களெல்லாம் தூசணித்து எனைக்கபட மெண்ணாதுங்கோ என்னுடையத் தொழிலிதுவே உங்களோடு இருந்துதர்ம முடிசூடி யாளு மட்டும் பொன்னுடைய நாடதற்கு வானோர் தம்மை போகவிடை கொடுக்க அவர் போனாரங்கே கன்னிமட வார்கையைப் பிடித்துக்கொண்டு கருணைபதித்தெருவீதி வருகின்றாரே

தெருவீதி நாம்வருவோம்-எந்தன் தேவியரே கன்னிநாயகமே மருவினிய கன்னியரே-பதி வலங்கள்சுற்றி நாம்வருவோம் கண்மணியே காரணரே-ஓகோ காயாம்பு மேனியரே மண்ணேழ ளந்தவரே-ஓகோ மாயவரே பதிவலம்வருவோம்

பெண்ணரசே மாமயிலே-நமது பொறுமைப்பதி வலம்வருவோம் தண்ணமுள்ளத் தேவியரே-நமது தருமபதி வலம்வருவோம் ஆண்டமணி நாயகமே-உலகு ஆண்டருளுங் கண்மணியே காண்டம்நிறை வேற்றவந்த-எங்கள் கணவனாரே வலம் வருவோம்

பொறுமைப்பதி வலம்வருவோம்-கலி பொடியயாமம் போட்டிடுவோம் தருமமது தழைக்கச்செய்வோம்-பதி தானேவலம் நாம்வருவோம் பொல்லாத வகையழித்து-சுவாமி புதுப்பூமி தோணவைத்துக் கல்லாதார் கருவறுத்து-சுவாமி கதியபதி வலம்வருவோம்

நாடும்பதி தலங்கள் வாழும்-பெண்ணே நம்முடைய இனங்கள் வாழும் கேடுகலி கோடுஅறும்-பெண்ணே கிளர்ந்தபதி வலம்வருவோம் ஆகாத பேரையெல்லாம்-சுவாமி அக்கினிக்கு விருந்தளித்து வாகாகத் தர்மபதி-சுவாமி வாழும்பதி வலம்வருவோம்

முன்குறோணி உதிரமதால்-பெண்ணே உதித்து வந்த குலங்களெல்லாம் தன்குணத்தால் மாண்டுபோக-பெண்ணே தர்மபதி வலம் வருவோம் மாற்றானொழியவேணும்-சுவாமி மக்களெல்லாம் வாழவேணும் காத்தோரைக் கைவிடாமல்-நாமள் கருணைபதி வலம்வருவோம்

தெண்டமிறை பொய்களவு-பெண்ணே செய்யும் வண்ட குலங்களெல்லாம் கொண்டகலி கூடமாள-குரு நாதர்பதி வலம்வருவோம் வீணான கலியுகத்தை-சுவாமி வெய்யோனுக் கமுதளித்துச் சாணாரை வைத்தாள-சுவாமி தர்மபதி வலம்வருவோம்

நாடும்பதி துலங்குதடி-பெண்ணே நல்லசிலை குதிக்குதடி ஆடுமாடு அருகுதடி-கர்த்தா ஆவினங்கள் தோணுதடி நல்லபதி துலங்கணுமே-சுவாமி நாடுதர்ம மாகணுமே பொல்லாப்பு ஒழியணுமே-சுவாமி புத்தியொன்றாய்க் குவியணுமே

கோவில்தெரு துலங்கணுமே-நம்மள் கோட்டைவெளியாகணுமே தேவருட நல்திருநாள்-பெண்ணே தினமும் வந்து கூடணுமே தங்கத்தொட்டில் தண்டாயமும்-சுவாமி தாண்டும்பதி வீதிகளும் சங்கமுடன் டம்மானமும்-சுவாமி தலத்தில் வந்து தோணணுமே

கோட்டையிட்டு கொடியுங்கட்டி பெண்ணே கொத்தளமாய் மேடைசெய்து நாட்டையெல்லாம் தான்கிலுக்கி-பெண்ணே நமக்குப்பதி யேறணுமே நம்பினோரைக் காக்கணுமே-சுவாமி நாடுகட்டி யாளணுமே அம்பலங்க ளேறணுமே-சுவாமி அவதாரங்கள் நடத்தணுமே

சிங்காசன மேறணுமே-பெண்ணே தீவட்டிகள் போடணுமே கண்காட்சை காணணுமே-நானும் கன்னியரைக் கைப்பிடித்தால் பாக்கியங்கள் பெருகணுமே-சுவாமி பாரிலுள்ளோர் காணுதற்கு ஆக்கிநாங்கள் படைக்கணுமே –சுவாமி அமுதருந்தி வாழணுமே

மக்கள் பெற்று வாழணுமே-பெண்ணே வந்துவென்றன் கால்பிடித்து ஒக்க நின்றாடணுமே-பெண்ணே உற்றபள்ளி மெத்தைசூழ பால்பவிசு பெருகணுமே-சுவாமி பஞ்சணையில் கொஞ்சணுமே தூலருமை யறியாமலே-கலி தொல்புவியு மயங்கணுமே

சமுசாரி யாகணுமே-பெண்ணே தலையிற்சோறு சுமக்கணுமே ஓவுதாரிகேட்கணுமே-பெண்ணே உங்களைநா னடிக்கணுமே அயலூரு போகணுமே-சுவாமி அழைக்கநீரும் வரவேணுமே கயல்விழிமா ரொருவர்க்கொரு-சுவாமி கத்துதல்கள் கொள்ளணுமே

நானும்வந்து நிரத்தணுமே-பெண்ணே நல்லமொழி சொல்லணுமே தேனும்பாலும் போலநாமள்-பெண்ணே தேசமதில் வாழணுமே கண்டுஇந்த நீசர்குலம்-சுவாமி களிப்புச்சொல்லி யேசணுமே பெண்டுகட்கு வீங்கியென்று-சுவாமி பொல்லாப்பயலேசணுமே

காரணத்தை யறியாமலே-பெண்ணே கலிப்பயல்கள் தானகைத்தால் மாரணத்தின் தீர்வைதன்னில்-பெண்ணே மடுநரகம் பூத்திடுவேன் செம்பவள நற்பதியின்-சுவாமி தெருவலங்கள் சுற்றிவந்தோம் பொன்பதிக்குள் நாமள்புக்கி- மறு பொழுதுவந்தால் வருவோமையா சோபனம் சோபனமே சோபனமே- சுவாமி திருநடன சோபனமே தேவர்குரு நாரணர்க்கும்-அவர்தேவியர்க்கும் சோபனமே பூமலர்ந்த ஈசுரர்க்கும் அவர் பொன்தேவி மாதுமைக்கும் காமனந்த நாரணர்க்கும் தெய்வக்கன்னியர்க்கும் சோபனமே

பூமடந்தை நாயகிக்கும் பொன்னுமண்டைக் காட்டாளுக்கும் பார்மடந்தை நாயகிக்கும் சிவ பகவதிக்குஞ் சோபனமே தெய்வானை நாயகிக்கும் நல்ல சிறந்த வள்ளிமடந்தைக்கும் அய்வர்குல நாரணர்க்கும் கன்னிஅரிவையர்க்குஞ் சோபனமே

துடியிடைக் கன்னிமாரைத் திருமணந் திருமால் செய்து குடிபுகழ்ச் சான்றோர் மக்கள்குரவைகள் முழக்கத்தோடு திடிரெனத் தெருக்கள் சுற்றித்தேவியுமன்னராகப் படிமிசைப் பதியி னுள்ளே பதிந்துவந்திருந்தாரன்றே

மாதுநல்லாளேழ்வரையும் மணமுகித்து மாயவரும் தீதகலும் நற்பதியில் சிறந்தங்கினிதிருந்தார் கன்னிமாரேழ்வரையும் கைப்படித்தோம் நாமுமினி பொன்னம்பதியில் புகழ்ந்த திருநாள்நடத்தி நித்தந் திருநாள் நிதம்நடந்த வேணுமென்று சித்தமதில் நாரணரும் சிந்தித்தாரம்மானை எத்திசையுமுள்ள ஏற்றபுகழ் சான்றோரும் முத்தியடைந்தோம் மோட்சமது பெற்றோமென நம்முடைய தாயார் நல்லதெய்வக் கன்னியரை செம்மைத் திருமால் திருமணங்கள் செய்ததினால் குற்றமில்லை நம்முடைய குலத்துக்கினியெனவே சித்தமதில் நாரணனார் செயல்நமக்குண்டெனவே வந்துமிக எல்லோரும் வாழ்த்தி மிகப்பணிந்து சிந்துபுகழ் தெய்வமடவாரையுந்தொழுது நல்லபண்ட மானதுவும் நாடும் நிதியானதுவும் வல்லகுலச்சான்றோர் மாதா பிதாவதுக்கும் கொடுத்தாரே நல்லக் குவலயத்தில் மக்களெல்லாம் விடுத்ததெல்லாம் வேண்டி மிகவேற்றார் மாயவரும் பலன் பெற்றோமென்றுப் பாலதியச்சான்றோர்கள் குலமெல்லாம் வந்து கூடினார் மாயனிடம் அப்போது நாதன் ஆனந்தமே புரிந்து இப்போ திருநாள் இகனைநடத்த வென்று நாளான நாளிதுதான் நாயன் பிறந்தநாள் தாழாத ஞாயிறுவே சுவாமி பிறந்ததினால் இந்நாள் முதல்திருநாள் இன்பமுடனடத்தி பொன்னான நாரணரும் பூரித்தாரம்மானை ஞாயிறாழ்ச்சைத் திருநாள் நாம்பார்க்கப் போவோமென தேசமதிலுள்ளத் தெய்வகுலச் சான்றோர்கள் பாலுக்கு நெல்லும் பண்பாய்ச் சிறுமணியும் மாலுக்கு நல்ல மகிழ்ந்துபிச்சி மாலைகளும் கொழுந்துபன்னீர் சந்தனமும் குலுங்கா விடலைகளும் தென்னங்காய் மாம்பழமும் திகட்டாப்பலாக்கனியும் வாழைக் கனியிலையும் வகிர்ந்த கமுகின்குலையும் நாளைத் திருநாள் நமக்குமுந்திப் போவோமென இத்தனையுங் கொண்டு இசைந்ததிரு நாள்வகைக்கு பத்துமூ ணேழு பணமு மிகஎடுத்துக் காதுக்கு நல்ல கனத்த நகைகளிட்டு மாதுக்கியல்வாய் வளர்கோர்வையு மணிந்து பெட்டிச் சீலையுடுத்துப் பெரியநாமப்பொட்டுமிட்டு கட்டன்னமும்பொதிந்து கண்ணர்திருநாட்கெனவே மக்கள் மணவாளன் மனைவி கிளைகளுடன் சிக்கெனவே நாதன் திருநாட்கு போவோமென வருவார் கிழமை மாதந்தவறாமல் திருமால் அகமகிழ்ந்து திருநாள் முறைநடத்த கொட்டகை யிட்டுக் குவிந்தமணி மேடையிட்டு பட்டால் மேற்கட்டி பழங்கனிகள் தாந்தூக்கி பிச்சிமாலைதூக்கிப் பெருவாடை தான்தொளித்து மிச்சம்பழந்தூக்கி மிகுவாடை தான்தொளித்து சந்தனங் கஸ்தூரி சவ்வாது புனுகுடனே சிந்தரெவரும் போற்றத் தேன்கனிகள் மாங்கனிகள் வெற்றிலை பாக்கு மிகுவாய்ப் பழங்களுடன் தத்திதத்தி யாகச் சதாகோடியாய்க் குவித்து பால்பாயாசம் வைத்து பாவித்து நற்பதிக்குள் மாலாயிருந்து மகிழ அலங்கரிப்பார் தெருவிற் காளாஞ்சித் தீவட்டியும் பிடித்து மருவினிய மாதர் மகாகுரவை மலமலென டம்மானம் நாகசுரம் நல்லவாணவெடிகள் மும்மான முழக்கம் போலே மிகமுழங்க கன்னிமார்க்கெல்லாம் காவிப்பட்டாடைகொண்டு பின்னு மடவார்க்குப் பெரியருத்திராட்சமிட்டு நாமப் பொட்டிட்டு நல்ல எத்தாப்புமிட்டு மாமடவாரெல்லாம் மகிழ்ந்து தெருவில்வர எந்தன் பிரானும் எடுத்தாரொருசொரூபம் கந்தைக்காவி பூண்டு கழுத்தில் தாவடம் பூண்டு கையதிலே மாத்திரைக்கோல் கமூக்கூட்டிலே பிரம்பும் மெய்யதிலே வெண்பதமும் மினுக்கமுடனணிந்து உச்சிக்கொண்டை கோர்த்து உயர்ந்த சுரைக் கூடுமிட்டு மெச்சுந்துளசி மிகுமாலையுமணிந்து பிச்சிமாலை யணிந்து பெண்கள்மிகச்சூழ்ந்துவர சச்சி சச்சியாகச் சனங்கள் சான்றோர்கள்வர கைக்குள்நின்ற சீசர் காவிவஸ்திரமணிந்து மெய்க்குருவைப் போற்றி மேலில் ருத்திராட்சமிட்டு கையதிலே மாத்திரைக்கோல் கனத்தசுரைக்கூடுமிட்டு மெய்யதியப் பொக்கணமும் மேலதிய நாமமிட்டு அய்யா குருவேயென்று அவர்கள் மிகப்போற்றிவர துய்ய துவையல் துவைத்தபண்டாரமெல்லாம் காவி ருத்திராட்சம் கனத்தசெம்புக்கடுக்கனிட்டு நாவிற் சிவாவெனவே நாட்டமிக வாய்வரவே ஆராதனையாய் அருள்கொண்டப் பெண்ணாணும் நாராயணர்பேரில் நற்கீதம் பாடிவர தங்கரத்தினத் தொட்டில் சுவாமி மிக இருந்து பெண்கள் மிகநன்றாய்ப் பெருகக் குரவையிட சங்கு தொனிக்கச் சகலோர் மிகப்போற்ற சிங்கமுகலெட்சுமியும் திருமுகத்தில் நின்றிலங்க சான்றோர்கள் தொட்டில் தண்டாய முஞ்சுமந்து ஆன்றோர் பதியை அலங்கிருதமாகிவர கன்னிமார் நாதன் கைக்குளொழுங்காய் வரவே மின்னும் பதித்தெருவும் மிக்க இந்தப்பவிசாய் உலாவி வரவே உற்றதெய்வ வானோர்கள் குலாவி மகிழ்ந்து கிருபையுள்ள நாரணர்க்கு பூமாரி பொன்மாரி பெரிய சலமாரி நாமாரி வானோர் நாடி மிகத்தொளிக்க எல்லோரும் பார்த்து இத்திருநாள் நல்லதென்று அல்லோரு மெச்சி அகமகிழ்ந்தாரம்மானை நல்ல திருநாள் ஞாயிறாழ்ச்சை முழுதும் செல்ல மறுநாள் திங்களுதித்தவுடன் காட்சி நடத்திக் கரிய திருமாலும் நாச்சிமார் கூட நாதன் பதிபுகுந்தாரம்மானை நாதன் பதிபுகுந்து நருட்கு விடைகொடுத்து மாதரோடு நாரணரும் மகிழ்ந்திருந்தாரன்போரே இப்படியே திருநாள் இகனை மிகநடத்தி நற்புடனே நாதன் நாயகிமார் தம்மோடு கூடியிருந்து குலாவியிருக்கையிலே வேடிக்கை யாக விதியின் படியாலே நல்லபுகழ் சீதா லட்சுமிக்கு நாரணரும் செல்லப்பட்டானதுவும் சிவந்த தங்கக்காறையதும் இட்டுக் கலியாணம் இலட்சுமியைச்செய்யவென்று மட்டு நிகரில்லா மாயன் மனதிலுற்றார் தங்கத்தால் காறை தானதியப்பட்டதுவும் அங்கே மிகவருத்தி ஆயிழைக்குத் தான்கொடுத்து திருநாளிகனைத் திடிமன் முழக்கமொடு பெருமாளும் லட்சுமியைப்பேறாய் மணமுகித்து தெருவலங்கள் சுற்றிச் சிறந்த பதிபுகுந்து மருவினிய நாதன் மாதரோடு வீற்றிருந்தார் நல்லரிய நாதன் நன்றாயிருக்கையிலே வல்ல தெய்வத்திரு மடவார்களேதுரைப்பார் ஐயாவே யெங்களையும் ஆண்டத் திருமாலே வையமளந்த மாயத்திருமாலே எங்களை நீரிப்போ இவ்வுலகந்தானறிய மங்களமும் செய்தீரே மக்களையுந்தாருமென்றார் அப்போது மாயன் அவர்களோடே புகல்வார் இப்போது மாதர்களே என்னோடு கேட்டதற்கு நல்லத் திவசம் நமக்கு வருமந்நாளில் வல்ல வகையாலும் மக்களையுந் தாறோமென்றார் அதுவரையும் நீங்கள் அதட்டாமலேயிருங்கோ இதுவுரைக்க நல்ல ஏந்திழைமாரெல்லோரும் சந்தோசமாக சுவாமி தனக்கவர்கள் வந்தே நிதமும் வாய்த்ததொண்டு செய்துமிக வாய்த்தபுகழ் லட்சுமியும் மாதுமடவாரேழும் ஏற்ற தொண்டுசெய்து எப்போதும் வீற்றிருந்தார் நாரணருந் தேவியரை நாடியகமகிழ்ந்து காரணருமெச்சிக் களிகூர்ந்தினிதிருந்தார் நன்றாக இப்படியே நாச்சிமாரோடிருக்க எண்டிசையிலுள்ள ஏற்ற புகழ்ச்சான்றோர்கள் வந்து அவர்பதத்தை வாழ்த்தி மிகப்போற்றி சந்துஷ்டியாகத் தாழ்ந்து நமஸ்காரமிட்டு மனதில் நினைத்ததெல்லாம் மாயவரோடேவுரைத்து தனதுள் விடைவேண்டி சங்கடங்கள் தீர்ந்திருந்தார் தெய்வமுமவராய்த் திருவுளமுமவராய் வைய மகிழ மனுப்போலுமிருந்தார் வத்துவகையும் மாடாடு சொத்துக்களும் ஒத்து மிகவாழ்ந்து உடைய பரனிருந்தார் இப்படியே ஒத்து இவரிருக்கும் நாளையிலே நற்புடைய தெய்வ நாயகிமார் கேட்டபடி மதலை கொடுக்க மனதிலுற்றெம்பெருமாள் குதலையினத்தைக் கூறி மிகவுரைத்தார் ஏழினமுமாதருக்கு இனமிட்டே தான்கொடுத்து நாளுவந்தபோதே நாரணருங்கொண்டாடி வாய்த்த திருநாள் மகிழ்ச்சையுடனடக்க ஏற்ற குலச்சான்றோர் எல்லோரும் வந்துநிற்க பிள்ளைதனையெடுத்துப் பெண்ணார்களேழ்பேர்க்கும் வள்ளலந்த மாலும் மனதுற்றிருக்கையிலே கண்ணான தெய்வக் காரிகைமாரெல்லோரும் விண்ணாணமாக வீரநாராயணரை மண்ணெங்கு மளந்தமாலே மகாபரக் குருவே நீரும் இண்ணெங்கள் மதலையேழும் எடுத்துடன் தாருமென்றார்

கண்ணரே கரியமாலே காரணக் குருவே அய்யா இண்ணெங்கள் மதலையேழும் எடுத்து நீரினமதாக விண்ணெங்கு மகிழத்தந்து வெற்றியாயாண்டுகொள்ளும் மண்ணெங்கு மளந்தமாலே மகாபரக் குருவே யென்றார்

நாதக் குருவே நாடுமெங்கள் மன்னவரே மாதவரே யின்று வந்தநாள் நன்றெனவே இப்போ மதலை எடுத்து மிகத்தாரும் செப்போடு வொத்த திருமாலே யென்றுரைத்தார் நல்லதுதான் பெண்ணே நாட்டு நருளறிய முல்லை வனத்தில் முன்னேநீர் பெற்றுவைத்த மதலைகளேழும் வளர்த்து இத்தனைநாளும் குதலைப்பிராயமதாய்க் கொண்டுதிரிந்தே வளர்த்தேன் பாலமுதூட்டாமல் பருவனத்தில் நீங்கள் விட்டுக் கோலவனத்தூடே குதித்தோடி மீண்டு வந்தீர் என்னென்ன பாடு யானிந்தப் பிள்ளையினால் பொன்னனயக் கன்னியரே புகலவுந்தான் கூடிடுமோ தெய்வேந்திரன்பசுவைத் திரையாகக்கொண்டுவந்து மொய்வனத்தில் பாலுகொண்டு மிகக்கறந்து மக்களுக்கு ஊட்டி வளர்த்தேன் உம்பர்கோனுமறிந்து மாட்டிடவே யென்னை மாபடைகளோடுவந்தான் தப்பியவன்றனக்குத் தான்வளர்த்தேன் பிள்ளைகளை ஒப்பரியப் பாலமிர்தம் ஒருநாளொழியாமல் மைப்பெரிய தாலம் வகுத்து மிகவளர்த்தேன் மக்களுக்காய்ப் பாடுபட்டு வைகைமண்ணுஞ்சுமந்து சொக்கரென சமைந்தேன் சொந்தமக்கள் வாழவென்று பின்னுமிப்பிள்ளைகளை பெரும்புவியாளவைக்க துன்னுகெட்ட கலியில் தோன்றிக் குதித்துவந்தேன் வந்தான் சாணாரினத்தில் மாயனென்று மாநீசன் பின்தாக்கிக் கையைப் பிடித்து மிகஇறுக்கி சாட்டைகொண்டேயடித்துத் தடியிரும்பிலிட்டுவைத்து கோட்டி மிகச்செய்து கூறி மிகஅடித்து அரங்கு மணிமேடையானதிலே யென்னைவைத்து பரங்குவிய நித்தம் பாதம் பணிவேனென்றான் சாணாரிடத்தில் தான்போகாதபடிக்கு கோணாமலெங்களுடன்கூடியிரு என்றுடித்தான் பெற்றபிள்ளையெல்லாம் பெருகலைந்து போவாரென இற்ற விலங்கில் இருந்தேன் மிகக்கவிழ்ந்து சாலமுட னீசன் தான்படுத்தும் பாட்டையெல்லாம் பாலருக்காய் வேண்டிப் பாரறியப்பட்டேனான் பெற்றது போதுமென்று பெண்ணே நீரேழ்பேரும் மெத்த தெளிந்து மேவிவந்தீரிப்போது என்றுரைக்க மாலும் ஏந்திழைமாரேழ்பேரும் மன்றுள்ளோர்களறிய மாதருரைக்கலுற்றார் பிள்ளைகள் நன்றாய்ப் பெருகி மிகவாழ வள்ளலெங்கள் மாலே மாறாத்தவசிருந்த காரணத்தைச் சொன்னால் கணக்கிலடங்கிடுமோ பூரணத்தின் ஞானப் பெரிய திருமாலே ஆருமொருவர் ஆராட்டங் காணாத மேருநிறைவனத்தில் மெல்லியரேழ்பேரும் ஒருவர்முக மொருவருக்கு ஒருரூபங்காணாமல் கரிய அவரவர்கள் காடு வடவுகளில் உடுகலைகள் கொய்து உற்றமுடி தான்விரித்து கடுகெனவே வூசிதனில் கைவிரலைத்தானூன்றி ஆசை யுறவற்று அக்கபக்கத் தாசையற்று மாசைக் கருவறுத்து மயக்கவெறி தானறுத்து பாசமறுத்துப் பக்கத் துணைமறந்து வாச மணமும் வாக்குப்பேச் சுமறந்து காடு நினைவறுத்துக் கனாப்பயங்கள் தானறுத்து வீடு நினைவறுத்து வெளிவீடு தான்திறந்து மலசலங்க ளற்று வாயுவுடப் போக்குமற்று குலதலமு மற்றுக் கூறுகின்ற பேச்சுமற்று பேச்சற்று மூச்சற்றுப் பெருவனத்திலும்மருளால் ஏச்சதூச்ச மற்று ஈராறு காலம்வரை நிற்க வுடம்பை நெடும்புற்று தான்மூடி பக்கமால்முளைத்து புறாவினங்கள் தான்கூடி முட்டையிட்டுக் குஞ்சு மூன்று நேரம் பொரித்து வட்டணியாய்க் காடு வளைந்தெங்களைச்சூழ்ந்து கடுவாய் புலிகரடி கனத்தகுட்டிகளீன்று கடுகிமிகப் புற்றுக் கரையில் மிகவாழும் ஆனையது குட்டி அதுஈன்றெங்களுடத் தானநிறை புற்றருகில் தன்னால் மிகவாழும் பிள்ளையால் நாங்கள் பெருகத் தவசிருந்த உள்ளமைகளெல்லாம் உரைக்க எளிதாமோ நாணமற்று ஊணுமற்று நாலுமூணு ஆண்டுவரை தாணருட தஞ்சமெனத் தவசு மிகப்புரிந்து பிள்ளைகளாசையினால் பேருலகில் வந்தோம் வள்ளலெங்கள் மக்கள்தம்மை மாயவரே தாரும் தந்து புவியாளத் தலைவரேயும்முடைய விந்துவழி மக்களையும் விரைவாய் மிகத்தாரும் தாருமென மாதரெல்லாம் தாழ்மையுடனீதுரைக்க ஆருநிக ரொவ்வா அச்சுதருமேதுரைப்பார் மாதே நானிந்த வையகத்தில் வந்தவுடன் பாரேழில் நம்முடைய பஞ்சவர்கள் தம்வழியில் தேர்ந்துந்தன் மக்களிலே சீசனென நான்தெரிந்து கூர்ந்தெந்தன் கையதுக்குள் கொள்ளுகிறேன் வேலையது இன்னாபாரென்று ஏழுபேரையுமெடுத்து நன்னகரி பார்க்க நாதனிடுப்பில்வைத்து வட்டமிட்டு ஆடி மாதரொவ்வொருவர்க்கொரு கிட்டவிட்டுக் காட்டிக் கிளிமொழிமார் கைக்கொடுத்தார் பாலரையும் பார்த்துப் பாவையரைப் பார்த்தவுடன் சீலமுள்ள லெட்சணமும் சிற்றிடையு மொப்பனையும் ஒப்பமென்றெல்லோரும் உம்பருந்தாமகிழ்ந்தார் செப்பமுள்ள மாதர் சிரித்து மனமகிழ்ந்து அன்றுபெற்ற பிள்ளை ஐந்திரண்டானதிலே மன்றுதனையாளும் மாபாவிச் சோழனவன் கொன்றானிரு பேரைக் கூடைதலை மீதில்வைத்து சொன்னீரே சுவாமி தோன்றியிப்போ வந்தாரோ தேன்மொழியே மாதே சொன்னபிள்ளை ரண்டுடைய மானதிய மக்களென மாயவருந்தானுரைக்க அப்போது பெண்கள் அச்சுதரைத் தான்பார்த்து இப்போ வரவில்லையே எப்போ வருவார்கள் மைப்பெரிய கண்ணே மாதரென் தேவியரே செப்பினீரே நீங்கள் சென்றமக்களெப்போவென்று பொல்லாத நாட்டுப் பொன்று கலியைமுடித்து நல்லதர்ம நாடு நான்தோன்ற வைக்கையில் நடுஞாயங் கேட்டு நடுத்தீர்ப்புச் செய்யுகையில் கெடுவேலை செய்த கேள்வியில்லாச் சோழனையும் ஆக்கினைகள் செய்து ஆழநரகமதிலே தாக்கியும் மக்களைநான் சடத்தோடெழுப்பிமிகத் தருவேன் குருசுவாமி தன்னாணை மாதர்களே மருவினிய மாதே வாக்கிதுவே தப்பாது என்றாதி நாதன் ஈதுரைக்க மாதரெல்லாம் நன்றாய் மகிழ்ந்து நாடிமக்களையெடுத்து மடிமீதில் வைத்து மலர்ந்தமுகத்தோடணைத்து கண்ணோ மணியோ கரடராசன்மகனோ விண்ணோர்கள் மெச்சும் வேதப்பரஞ்சுடரோ தோணார்க்கரியத் துய்யதிருமாலீன்ற சாணாரோ நாயகமோ சகலகலை கற்றவரோ தெய்வ யுகக்கன்றோ திசைவென்ற சான்றோரோ வையம் புகழவந்த மக்களே என்றுசொல்லி சந்தோசமாகத் தார்குழலாரேழ்பேரும் புந்தி மகிழ்ந்து பூரித்தகமகிழ்ந்தார் நாங்கள்செய்த தவத்தில் நாலிலரைப்பங்குவரம் வாங்கினோமையா மாயவரே யின்னமுண்டு நாடாள வைக்க நல்லவரந் தந்ததுண்டு தாடாண்மை யுள்ள சங்கரரும் வந்திருந்து என்றுரைக்க மாதர் எம்பெருமாள் நல்லதென்று இன்று உரைத்ததுவும் இலக்கதிலே ஆகுமென சீதைக்கு நல்ல சிறந்தமகனையெடுத்து மாதுக்குத் தான்கொடுத்தார் வையகத்தோர் காணாமல் மணமுகித்து மாதருக்கு முன்வகுத்த மைந்தரையும் குணமுடனே காட்டிக் கொடுத்தாரேயெம்பெருமாள் நல்ல திருநாள் நாள்கழித்து மற்றாம்நாள் வல்ல கதிரோனும் வந்ததுகாணம்மானை கதிரோனுந்தோன்றிக் கங்குல்வெளியாகுகையில் திருநாளிகனை செய்து நிறைவேற்றி மக்களெல்லாஞ்சூழ வந்து மிகப்பணிந்து மிக்கஅவர் வீட்டில் விடைவேண்டித்தாம்போனார் கைக்குள்ளே நிற்கும் கரிய சீசன்மாரோடும் மைக்குழலாரோடும் மகிழ்ந்திருந்தாரம்மானை பின்னுஞ் சிலநாள் பெரிய திருநாள்நடத்தி மன்னுகந்த நாரணரும் மாதரொடு வீற்றிருந்தார் பெண்களவரவர்க்குப் பெரிய அரங்குவைத்து தங்கள் தங்களுக்குச் சாமான்களுங் கொடுத்து பால்பவிசுங் கொடுத்துப் பாக்கியங்கள் மிகுவாய் மாலவர்கள் மனையில் வந்து அமுதருந்தி இன்றொரு வீட்டில் ஏற்ற அமுதருந்தி அன்றிரா அங்கே அனந்தமால் பள்ளிகொண்டு பின்னுமொரு மாதருட பொன்னரங்கில் வந்திருந்து அன்று அமுதருந்தி அன்றிரா அம்மனையில் பள்ளிகொண்டு இப்படியே பாவையர்கள் வீடோறும் துள்ளியே மாயன் திருவிளையாட்டுமாடி மங்கையர்கள் காணாமல் மறுமனைகளும்புகுந்து கொங்கைமடவாரோடு கூடிவிளையாடிடுவார் மாயன் விளையாட்டை வகைப்படியே சொல்லவென்றால் நேயம் கெட்ட கலியில் நெடும்பனை ஓலையில்லை கூடி மடவாரோடு குவிந்து விளையாடுகையில் நாடி மடவார்கள்நாயகிமார் தங்களுக்குள் ஒருவர்க் கொருவர் உபாயமாய்ப் பார்த்திருந்து திருமருகரோடே தெய்வமடவார் வெகுவாய் சண்டை பிடிப்பார் தந்தது போராதெனவே கண்டமடவாரோடும் கனிவாகப்போறீரென அவள் வீட்டில் போறீர் அவளோடதிகமுமாய் உபகாரஞ் செய்யுகிறீர் உள்ளாகத் தானிருந்து என்னோடு பேச்சு இப்படியே செய்வீரென மின்னோவியங்கள் வெகுவாகக் கத்திடுவார் சாமியொடு வெகுவாய்த் துரைத்தனங்கள் தான்பேசி நாமகலப் போவோம் எனநடந்து மக்களுட வீட்டிலவர் போவார் வீரமால் தானறிந்து கூட்டி வரப்போவார் குளிர்ந்த மொழியுரைத்து அள்ளித் தருவேன் அனந்த வராகன் பணமும் வெள்ளியும் பொன்னும் மேன்மையுள்ள சீலைகளும் உந்தனக்குப் போதும் உடைமை மிகத்தருவேன் அந்தப் பெண்ணார்க்கு அதுக்கதுபோலே கொடுப்பேன் எழுந்திருநீ யென்று எட்டிமிகக் கைப்பிடித்து குளிர்ந்த நயவார்த்தைக் கோதைமின்னார் தாங்கேட்டு சிரித்து மகிழ்ந்து தேற்றலிது நன்றெனவே உருத்துமிகச் செய்வதெல்லாம் ஓவியமுமறிவேன் ஏன்காணுமும்முடைய இந்திரசாலமெல்லாம் கோன் கிரிவேந்தே கொஞ்சமெனக்குத்தெரியும் மருட்டாதேயுங்காண் மாய்மால முந்தெரியும் உருட்டாதேயும் போம் உமதுதொழிலுந்தெரியும் எனக்கேற்ற வார்த்தை இதமதிமாய்ப் பேசிடுவீர் தனக்கேற்க நெஞ்சம் தானறியாதே யிருக்கும் கன்னியுமதுடைய கருத்தெல்லாம் நானறிவேன் நின்னு சடையாதேயும் நீர்போவுமென்றுரைப்பாள் அப்போது மாயன் அதுக்கினிய வார்த்தை சொல்லி இப்போது நீயும் எழுந்திருந்து வாவெனவே மாயனழைக்க மாது மெழுந்திருந்து நாயன் பிறகே நடந்து மிகவருவார் வந்து வளர்பதியில் வாழ்ந்துண்டினிதிருப்பார் சந்தோசமாகத் தண்மை வெகுகுணமாய் இப்படியே பெண்களோடு இகனை மிகநடத்தி ஒப்புரவாய் மாயன் உகந்துண்டிருக்கையிலே செந்தூரலையில் தேவனுதித்தன்று வந்து முந்துமூலப்பதியில் உவரிக்கரையிடத்தில் சென்றங்கிருந்து சிவலிங்கந்தானமைத்து மன்றுக்குள் கொஞ்சம் மறைத்துவைத்து மாயவரும் நான் தவசிருந்து நாட்கள் கொஞ்சமே கழித்து வான்புதுமையற்புதங்கள் மாநிலத்தோர் தாமறிய செய்துதெய்வ மாதர்களைச் சிறந்த மணமுகித்து தெய்திதனிலிங்கே திருநாளைக் கொண்டாடி வருவேனெனச்சிலைக்கு வாக்குமிகக் கொடுத்து திருவேற்றி வைத்த தேதியின்று வந்ததென சும்மா இவரைத் திருப்பதியில் வாநீயென்று நம்மாலுரைத்தால் ஞாயமில்லை யென்றுசொல்லி கொஞ்சமொரு சூத்திரம் கூர்மையாய்ச்செய்யவென்று அஞ்சலெனச் சாமளா தேவிதனையழைத்து கன்னியிலே ரண்டு பேரைக் கலக்கமிட்டு என்னுடைய மக்களிலும் யாம முறைப்படியே கொஞ்சமது வாந்தி கொடுத்துயிரைத் தான்வாங்கி மஞ்சறையில்வைத்து வாகாகக் காருமென்று விடைகொடுக்க நாதன் வேண்டினாள் தேவியவள் திடமுடனே சொன்ன சொல்வாக்குரைப்படியே கன்னியரில் ரண்டுபேரைக் கடத்தினாள் மாதேவி மின்னினொளி மதலை வீரத்தனமாக நாலுமூணுபேரில் ரண்டை நகட்டினாள் மாதேவி மாலுடையதேவி மடந்தை கிளிமொழியும் நகட்டி அறையில் வைத்து நாயகியும் காத்திருந்தாள் திகைத்து மனுக்களெல்லாம் தியங்கி மிகமயங்கி உடைய பரனே உம்முடைய தஞ்சமென்று தடமேலே வீழ்ந்து சுவாமி அபயமென்றார் அவதாரத்தின்படியே அன்றமைத்த பெண்கொடியை உபகார மாமணங்கள் உடையவரே நீரருளி வையகத்தோரெல்லாம் மனமகிழ்ந்திருக்கையிலே செய்ய இந்த மாயம் செய்வாரோ மாயவரே ஆரார்க்கு ஏற்கும் அரிவையர்கள் மக்களுந்தான் போராவழியானப் பொல்லாப்புச்செய்தாரோ ஆதியேயவர்கள் அநியாயஞ்செய்ததென்ன சோதியேயென்று தொழுதார் மடவார்கள் அப்போ தொருமகன்றான் அஞ்சாறு நாளதுமுன் சொப்பனங்கள் கண்டதுவைச் சொல்லாமல் தட்டழிந்து அன்றைப்பொழுது அவன் வந்தடிதொழுது நன்றினிய எங்கள் நாரணரே நாயகமே பத்து நாளுண்டும் நான் படுத்திருக்குமவ்வளவில் பெற்றுச்சழிந்தவர்போல் பெரியபூவண்டர் வடிவாய் வந்தென்றனோடு வளப்பமென்ன சொல்லலுற்றார் சந்தமுடன் நானுரைத்தச் சட்டமறவாதபடி கொஞ்சநாள் தோப்பு குளிர்ந்த பதியானதிலே அஞ்சிரண்டாண்டு அதில்வாழ்ந்திருந்து பின்னும் மூலகுண்டப்பதியில் மிகஇகனை செய்யெனவே ஏலமே சொன்னதெல்லாம் எண்ணமதிலில்லாமல் பெண்களைக் கண்டவுடன் பூத்தானமாய்மகிழ்ந்து கண்ணாட்ட மறந்து கலியை முடிப்பதற்கு நினைவுமயர்ந்து நிலைபேர்ந்திருக்குகிறான் நாட்டுக்குற்றங் கேட்க நானயைச்சு வைத்தற்கு கோட்டு மடவாரைக் குறிப்பாக எண்ணிமிக எண்ணியிருக்குகிறான் இப்போது அங்கேசென்று நண்ணிமூலப்பதியில் நாடிவரச்சொல்லிவிடு வரவில்லையானால் மாதருடன் மக்களையும் சரமதையும் வாங்கிடுவேன் சுவாமியுடன் போயுரைநீ என்றுசொல்லி நாளும் எட்டுரண்டாச்சுதையா அன்றுவுரைக்க அய்யாமிகக் கோபமுற்று பாவிப்பயலே பகராமலித்தனைநாள் மேவியிருந்தாயே மெல்லியிழந்தேனே தீட்டிவைத்த சொற்பனத்தை சொல்லாதிருந்ததினால் கூட்டில் மிகவாழ்ந்த கிளியைமிகத்தோற்றேனே முந்திவந்து நீயும் மொழிந்ததே யுண்டானால் என்றனிளமயிலை இழந்துமிக வாடேனே பூவண்டரானால் பெரிய பிதாவல்லவோ மாவண்டப்பயலே வந்துசொல்லாதிருந்தாய் இப்போதப்பதிக்கு எழுந்தருள வேணுமென்று மைப்போடு வொத்த மாதரொடு மக்களுமே கூடி நடந்தார் கூண்டரிய பொற்பதியில் தேடிமூலப்பதியின் சிறப்பெல்லாந்தான் பார்த்து ஏலமே இப்பதியில் எட்டுநாட்குள் வந்திருந்தால் மாலவரின் மக்களுக்கு மாய்வுசற்றும் வாராதே கெடுத்தானே சொர்ப்பனம் கெணித்தவுடன் சொல்லாமல் கொடுத்தோமே நம்முடைய குலமக்கள் மாதரையும் இப்பதியில் வந்தால் எள்ளளவுந்தோசமில்லை எப்பதியுமிப்பதிக்கு ஒவ்வாது என்றுசொல்லி எல்லோருடனேயும் எம்பெருமாளும் மகிழ்ந்து அல்லல் வினைதீர்ந்து அதில் வாழ்ந்திருந்தனராம் தோப்புப்பதிபோல் தொட்டிக்கட்டம்பலமும் கோப்புப்புரையும் குளிர்ந்த மணியரங்கும் பள்ளி யறையும் பார்சவுக்கை மண்டபமும் துள்ளியிகனை சுகசோபனம் வரவே பூம்பந்தலும் பெரிய புகுவீர மேடைகளும் ஊண்புரையும் நல்ல உகத்தீர்ப்பு மேடைகளும் சிணமாகச் செய்து சிறந்து மிகஇருந்து குணமாக மாயன் கோதையொடு வாழ்ந்திருந்தார் வாழ்ந்து திருநாள் ஞாயிறாழ்ச்சைமுதலாய் ஆழ்ந்த திருமால் அவதாரக் காட்சியுடன் கும்மியிகனை குவலயத் தீர்ப்புமுரைத்து தம்மியல்பு கொண்டு சுவாமி வெண் பட்டுடுத்தி தங்கக்குல்லா அணிந்து தாமரிய நீராளம் எங்கு மகிழ எம்பெருமாள் தானணிந்து ஆயிழைமாரவர்க்கு அழகு வெண்பட்டுடுத்தி வாயிதமாய் மாயன் மகிழ்ந்து மிகக்கொண்டாடி மங்களமாயிகனை மகாயிகனைத் தான்கூறி சங்க மகிழ சுவாமி திருநாள் நடத்தி பாக்கியங்களோடே பவிசாகயிருந்து தாக்கமிக மாயன் சந்தோசமாய் மகிழ்ந்தார் ஊண்புரையும் நல்ல உகத்தீர்ப்பு மேடைகளும் தாணூமாலயன் மாலை மணம் செய்யும் மண்டபமும் சிணமாய் முடித்து சிறந்ததொட்டில்மீதிருந்து குணமான வைகுண்டர் கும்மி போட்டிருக்கையிலே முந்து மூலப்பதிக்கு மூவரும் தான்கூடி வந்து வைகுண்டரிடம் வளப்பமென்ன சொல்லுமென்றார் அப்போது வைகுண்டர் ஆதியைத் தானோக்கி இப்போது சொல்லுகிறேன் என்வளமையத்தனையும் முன்னுவரியில் சொன்னபடி முறையுள்ள மாதர்களை நன்னூல் முறைப்படியே நானும் மணம்புரிந்தேன் நின்று இகனைகள் நித்தம் நடத்தி வந்தேன் முன்பே மூலப்பதிக்கு முன்கூட்டிவாராமல் பெண்டுமுதல் பிள்ளைவரை பெருங்கலியில் தோற்றேன் நின்று பாராமல் நேரே நடந்து வந்தோம் தோப்புப்பதி போல் தொட்டி கட்டம்பலமும் கோப்புபல செய்து கோடிதர்மம் வளர்த்து இன்றுவரை இருக்கேன் எனமொழிந்தார் வைகுண்டர் நன்று மகனே நடந்ததெலாம் நல்லதுதான்

வைகுண்டர் தெய்வமாதர் இகனைத்திருக்கல்யாணம் இன்னொரு விஞ்சை ஈயுகிறேன் நீயேற்று பண்ணுமணியே பராபரமே இக்கலியில் பார்வதியுமிங்கே பகவதியாய் வந்திருக்காள் சார் சரஸ்வதியும் தலைக்காட்டில் கொலுவிருக்காள் வள்ளி தெய்வானையும் வந்திருக்கார் செந்தூரில் தெள்ளிய மாதர்களை சீக்கிரத்தில் கொண்டுவந்து ஆவலுள்ள ஆண்டவராய் அவரவர்க்கு நீசமைந்து நாவலர்கள் மெய்க்க நல்மணங்கள்செய்யுமென்றார் பொல்லாக் கலிநாடு பொன்றிவருங்காலமதில் வல்லாண்மையான வாய்த்த பகவதிக்கும் மாது உமைக்கும் மண்டைக்காட்டாள் பார்வதிக்கும் தீதகலும் வள்ளி தெய்வானை நாயகிக்கும் கலிமுடியும் முன்னே கலியுகத்தோர் கண்காண வலியான மாதர்களை மணமுகிக்க வேணுமென்று முன்னுரைத்த ஆகமத்தின் முறைநூற்படியாலே நன்னூல் வழியாய் நாமுகிக்க வேணுமென்று உள்ளில் மிகஅடக்கி உன்னித் திருமாலும் வள்ளலந்த மாகுமரி வாழும் பகவதியை மாயமாய்க் கொண்டு வரவேணு மென்றுசொல்லி உபாயமாய் மனதில் உடைய பரனினைத்தார் கிழவனாகச் சமைந்து கிருதஞ்செய்ய வேணுமென்று தளதளெனத் தேகம் தன்னுடம்பு மினுக்காய் மெக்குவாய் பொக்கனுமாய் முடியுமிக வெண்ணரையாய் கக்கலிருமலுமாய்க் கையதிலே கோலூன்றி தள்ளாடி மெள்ளச் சன்னை மிகப்போட்டு பிள்ளாய்ப் பகவதியே பேத்தியென்றன் பொன்மகளே கண்ணு மயிலே கனகவொளி மாமணியே பெண்பிள்ளாய்ப்பேத்தி பேரனுக்குக் கஞ்சிவிடு என்று சொல்லி மெள்ள ஏந்திழையாள் தானிருக்கும் குன்று மணிக் கோவிலுக்குள் குன்னிமெள்ளச் சென்றனரே பேத்தியென்ற சொல்லைப் பிரியமுடன் நாயகியும் காதில் மிகக்கேட்டு கன்னி மிகப்பார்த்து ஆர்காணும் நானிருக்கும் அரங்குக்குள் வாறதுதான் பாரழியும் நாளோ பையரங்குக்குள்ளே வந்தாய் எங்கிருந்து நீதான் எவ்வூருன்பேரேது கிங்கிலுக்க வந்தவனோ கிழவன்தானோவுரை நீ அம்மா என்பேத்தி ஆயிழையே நாயகியே சும்மா மயங்காதே சூட்சமொன்றுமில்லையம்மா பரமார்த்தமம்மா பழனிமலையென்றனக்கு விதமாற்ற மில்லை வினோதவித்தை தானுமில்லை இலாடகுருவம்மா இராமனென்றன் பேர்பேத்தி திலாடமதிலிருந்து தீர்த்தமிங்காடவந்தேன் வந்தேனான் கண்மயக்காய் வழிதப்பியிங்கேதான் உந்தன் திருப்பதியை ஒருஅகரமென்றிருந்தேன் மகளே யென்பேத்தி மாஞாலமொன்றுமில்லை செகமெல்லாந் தீர்த்தம் சென்றேனானிவ்வயதுள் உன்னுடைய தீர்த்தம் உகந்தாட இப்போவந்தேன் பின்னுமொரு பேச்சு பேசுகிறாரிவ்வுலகில் இன்றுந்தன் பதியில் இருந்திந்த ராவிடிந்தால் நின்று நின்று போயாலும் நிச்சயம்பார்த்தே மகிழ்ந்து என்னுடைய வூருக்கு ஏகவேணும்பேத்தி பொன்மகளே பேத்தி என்று போத்திசொன்னார்

பேத்தியென்றுரைத்தபோது பொன்பகவதித்தாய்மெச்சி போத்தியே யுமக்குகொஞ்சம் பொரிமாவு பிசைந்துதாறேன் ஏற்று நீரிளைப்பு மாறி இன்றிரா கழித்து ஏகும் என்று சாற்றிய மொழியைக்கேட்டு தனதுளமகிழ்ந்தார் போத்தி

அம்மா நீசொன்ன அருமையெனக்கதிகமதிகம் மும்மால்க்குமேற்று முகுந்தன் பதம்பெறுவாய் தாகமல்லால் பசிகள் தானெனக்கு இல்லையம்மா தேகமது வாடாமல் செலந்தந்தால் போதுமென்றார் பால்மோரு போலே பதங்கொடுத்து மாகுமரி காலாறிப் போமெனவே கன்னி மிகவுரைத்தாள் தாகமது தீர்ந்து தானிருக்குமப்பொழுது நாகரீகக்குமரி நாயகியுமேதுரைப்பாள் போற்றியுமக்குப் போத வயதானதினால் நாற்றிசைகளெங்கும் நடமாட்டமாயிருக்கும் ஏதேது தீர்த்தம் இகனைபல மாயுளது மாதோடே சொல்லும் மாபெரியபோத்தியென்றாள் உடனே கிழவன் உளமகிழ்ந்து நன்றெனவே மடமாதே காசி மகாதீர்த்தம் நல்லதுதான் கன்னியாகுமரி காசித்தீர்த்தம் நிகராம் பின்னு மற்றதெல்லாம் பிரமாணமப்படிதான் இப்போதொருசெய்தி இராச்சியத்தில் சொல்லுகிறார் எப்படியோ நிசமாய் இருந்தாலது மேன்மையதாம் என்றுரைக்க நல்ல இளங்குமரி ஏதுரைப்பாள் விண்டுரைத்த ஞாயமதை விளம்புவீர் போத்தியென்றாள் அப்போது கிழவன் ஆச்சரியமாய் மகிந்து இப்போது வேணும் இவளை மிகஇளக்க என்று மனதுள் இருத்தி மிகத்தெளிந்து மன்றுதனில் கேட்ட வளமைகேளென்று சொல்லி ஆயிரத்தெட்டாண்டாம் ஆனதொரு மாசியிலாம் வாயிதமாய்ச் செந்தூர் வாரிதனிலே பிறந்து வைகுண்டமென்று வையகத்தில் வந்திருந்து கைகண்ட அற்புதங்கள் கனகோடி செய்கிறாராம் தண்ணீரதுவாம் தான்கொடுக்கு முத்திரியாம் மண்ணிலுள்ளோர் யாரும் வந்து வணங்குறாராம் தண்ணீர் மண்ணீந்து சகலவினை தீர்க்கிறாராம் புண்ணிய தானங்கள் போதமிகச்செய்கிறாராம் குட்டங்குறைநோவு குருடூமையானதுவும் கட்டங் கொடியக் கர்மமுதல் தீர்க்கிறாராம் மைந்தர் கொடுக்கிறாராம் மகாதர்மஞ் செய்கிறாராம் மனுப்பேரில் பேயை மாகிலுக்க மாயாட்டி தனுப்பெலங்கள் வாங்கி சருவிலெரிக்கிறாராம் தெய்வமட வாரெனவே தேவியேழு பெண்களையும் வைய மறிய மாலையிட்டுக் கொண்டாராம் நித்தந் திருநாள்போல் நீணிலத்துள்ளோர்கள் மெத்தக் குமுக்காய் மிகவந்து கூடுறாராம் டம்மான வெடிகள் டகுடகென நாகசுரம் இம்மாத்திரமெனவே எண்ணவுங் கூடாதாம் காட்சிரெம்ப வுண்டாம் கலிமுடிக்க வந்தோமென்றும் பேச்சுமிகச் சொல்லி பிரான்யாமங் கூறுறாராம் இப்படியே பேச்சு இதுவுறுதியானாக்கால் எப்படியுங் கர்த்தன் இவரெனவே சொல்லிடலாம் அல்லாமல் கலியுகங்கள் அழியுகின்ற நாளையிலே சொல்லால் பெரிய திருமால் சொரூபமதாய் தெச்சணத்தில் வந்து திருவிளையாட்டாகுமென அச்சமறப்பேச்சொன்று ஆதியிலே கேட்டதுண்டு அந்த முறைதானோ அவனியிலே கேட்கிறது எந்த விதமோ தெரியுதில்லை யென்பேத்தி போய்ப்பார்த்தால் தெரியும் பொன் மகளே பேத்தியென்றார் வாய்பார்த்த போது மாது மிகமகிழ்ந்து கண்ணரிய போத்தி காரணத்து நற்போத்தி திண்ணமுள்ள போத்தி செப்புவதை நீர்கேளும் தெய்வ மடவாரைத் திருமணங்கள் செய்தாரென்று வையமது சொன்ன வளமுரைத்தீரென்போத்தி மாதரையும் பார்க்க மனவிருப்பமாயிருக்கு ஆதரவாய்ப் போத்தி அதுவரையும் என்னையும்நீர் கூட்டிக்கொண்டு போவீர் கிழவனானபோத்தி பூட்டியுந்தன்பிறகே பிள்ளைபோலேவருவேன் செய்தியென்னவென்று தேவி யுருக்கமுடன் கேது விளைத்து வந்த தாதனோடேயுரைத்தாள் அப்பொழுது லாடகுரு அவரேது சொல்லலுற்றார் இப்படியே சொன்னதற்கு யான்கூட்டிப் போயிடுவேன் ஓடி நடக்க ஓட்டாது தள்ளாட்டம் கூடி நடக்கக் குறுக்குப் பெலக்காது பேசி நடக்கப் பிசகுமம்மா என்னாக்கு வீசி நடக்க விழிக்குக்கொஞ்சமறைவு கக்கலிருமல் கால்பெலக்க வொட்டாது சிக்கெனவே நடந்தால் செருக்கிருமலீளைவரும் இத்தனை துன்பம் இருக்குங்கிழவனுடன் சிற்றிடையீர் நல்ல சிறுபிராயம் நடந்தால் ஒக்குமோ பேத்தி உன்னடையு மென்னடையும் பக்குவமோ நான்தான் பாதை நடப்பதற்கு நானடப்பேன் காதவழி நாலுநாள் தங்கலென நீயென்னோடே நடந்தால் நிகராமோ பேத்தியென்றார் அப்போது நல்ல ஆயிழையுமேதுரைப்பாள் நற்போடு வொத்த நம்முடைய பேராநீர் வேறாட்கள் கூடவெளியேறப்போகாது வீறாகப் போத்தி மெல்லநடையாகிடினும் உம்மோடே நடக்க உள்ளாசையாயிருக்கு எம்மாத்திரம் நாட்கள் எவ்வளவு சென்றாலும் பைய இருந்திருந்து பாதை மிகநடந்து நெய்யதியக் கன்னி நேரிழைமாரேழ்வரையும் பார்த்து வரவேணும் பண்டையுள்ள போத்தியென்றாள் சாற்று மொழிகேட்டு தாதன் மிகமகிழ்ந்து அப்படியே யானால் ஆயிழையே யுன்னருகில் பொற்பணி வேலைபுரியும் பெண்ணாரறியாமல் இங்குள்ள பேர்கள் எள்ளளவு மறியாமல் கங்கைக் கரைவழியே காணாது போய்விடுவோம் போக வென்றாலும் பொழுது புறப்படுமுன் ஏகவேணும் நாமென்று இயல்பாயுரைத்தனராம் அப்போது கன்னி ஆயிழையும் நல்லதென்று இப்போதெழுந்திரியும் இதுகடந்து போவோமென சொல்லக் கிழவன் சிரித்து மனமகிழ்ந்து நல்லகாரியமெனவே நாம்போவோமென்றுவுன்னி அரிஹரி கோவிந்தா அலைதுயின்றாய் போற்றியென்று ஹரிஹரி கோவிந்தா காரியங்கைக் கொண்டோமென்று குன்னி மிகவெழுந்து கோலு மிகபிடித்து உன்னியிருப்பும் விட்டு உடனே வெளியில் வந்து சன்னை மிகஇருமித் தள்ளாடித் தள்ளாடி பின்னே விழுவார்போல் போத்தி முன்னிற்கையிலே மாது கதவெல்லாம் வாங்கி மிகஅடைத்து கேது விளைத்துவந்த கிழவன்பின்னாலேக வந்தவளையழைத்து வாவா பிறகெனவே சந்தமுடன் லாடகுரு சாடைசெய்து முன்னடந்தார் முன்னடக்கப் போத்தி மொய்குழலாள் பின்னடக்க அன்னநடைகள் விட்டு அலைவாய்க் கரைவழியே முட்டாங்குமிட்டு முகந்தெரியாவண்ணமவள் கட்டாய்க் கவிழ்ந்து கன்னி பகவதியும் கிழவன் பிறகே கிளிமொழியாள் தானடக்க மலர்மாரியாய் தூவ வாயு மரையாய்வீச பூமி குலுங்காமல் பொருப்புமசையாமல் காமி குமரி காலசையாமல் நடந்தாள் நடக்கும் வழிதனிலே நாயகியோடு கேட்பார் வடக்கு நாடுநமக்கு வசந்தான் வழிநடப்பு தெச்சணாபூமி திசைமாற்றமாயிருக்கும் பச்சை வளையணிந்த பாவையரே பார்த்துநட திக்குத் திசைகள் தெரியுதில்லை யென்பேத்தி முக்கொரு மூலைதன்னை முன்னாடிப் போவோமென வாரிக் கரைவழியே வாய்த்தநேர் மேற்காக காரிருளாகு முன்னே கால்விரைவாய்ப் போவோமென சொல்லச் சிறுகன்னி தியங்கிமெள்ளவாயுரைப்பாள் அல்லல் வினையோ ஆண்டவன் தன்செயலோ வெளிகாணாதேயிருந்த மெல்லி வெளியில்வந்தால் வழிதான் தெரியுமோகாண் மாபெரிய போத்தியென்றாள் பதறாதே பெண்கொடியே பகவான் துணையுண்டுமடி இதறாதே நாமள் இவ்வழியே சென்றாக்கால் தெச்சணத்தில் பள்ளிகொண்டு தெய்வமடவார்களையும் நிச்சயம் மணம்புரிந்த நீலவண்ணருண்டுமடி கலங்காதே கண்ணே கடற்கரையே போவோம் விலங்காமலிவ்வழியே மேற்குநோக்கிப்போவோம் என்றுசொல்லி மாதை இளக்கியவர் போகையிலே அன்றந்த வாரி அதற்கு வடபுறமாய் இடம்மான வோசை டகுடகாவென்றுமிக இடம்மானம் நாதசுரம் இரைச்சல் மிககேட்டு சற்றே பொறுபேத்தி சத்தமொன்று கேட்குதிங்கே மெத்த இரைச்சல் மேளத் தொனிகேட்கு குரவையொலியும் குத்து வெடியுங்கேட்கு பரசாதிக்குரல்கள் பலவிதமாய்க் கேட்கு பார்த்து நடப்போம் பாதைவிட்டு விலகி சற்று வடக்கேறி தான்பார்த்துப் போவோமென என்றுரைக்கப் போத்தி இயம்புவாள் நாயகியும் நன்று நன்று கிழவா நடவும் நீர்முன்னேயென தண்டையணி மடவாள் சடைத்து முகம்வாடி கெண்டையக்கண் மடவாள் கிள்ளைபோலேயுரைத்தாள் குன்னிமெள்ளக் கிழவன் கோலூன்றிக் காலூன்றி மின்னிடையே பையவென்று மெல்லவடக்கேறினராம் வடக்கேறி மாதை வலம் விட்டுத் தான்கூட்டி நடக்கையிலே ஆளிரைச்சல் நாடி மிக்ககேட்டு அன்ன நடையழகி அமிர்தவாய்ச் சொல்லழகி சின்ன இடையழகி திசைமயங்கி யேதுரைப்பாள் கண்ணினிய போத்தி காரணத்து நற்போத்தி நண்ணினிய போத்தி நானுரைக்குஞ் செய்திகேளும் சனக்கூட்டம் ரெம்பத் தான்காணு மானதினால் எனைக் கூட்டிக்கொண்டு இதில் விட்டகலாதேயும் திக்குத் திசையெனக்குத் தெரியாது கண்டீரே பக்குவங்கள் சொன்னேன் பாத மடைக்கலமே கைக்குள் விட்டுக்கொண்டு கன்னியரைத் தான்காட்டி பைக்குள் வைத்துக்கொண்டு பகலோனுதிக்குமுன்னே என்பதியில் கொண்டு இருத்தியெனை வைத்தீரால் பொன்பதினாயிரத்தால் புனைந்தவொருதாவடந்தான் உம்முடைய மார்பில் உடனணிவேன் கண்டீரே எம்முடைய மானம் இருக்குதுகாணும்மிடத்தில் ஒருவரறியாமல் உபாயமாய்க் கொண்டுஎன்னை திருவனப்பதிக்குள் சேர்த்துவையும் போத்தியென்றாள் பேத்தி பதறாதே பெரியபதி சேர்த்து வைப்பேன் காற்று அசுங்காத கண்ணர்பதி சேர்த்துவைப்பேன் மலங்காதே பேத்தி வான்பதியில் வாழ்ந்திருக்க கலங்காதே சேர்த்துக் கண்ணாணை வைத்திடுவேன் என்றுரைக்கப் போத்தி இளவரசியுமகிழ்ந்து அன்றந்தக் கிழவன் அருகிலொண்டித் தானடந்து ஆளுக் கிடைநடுவே ஆயிழையும் போத்தியுமாய் தோளுப் பிடித்தாற்போல் தோகையரும் வந்தனராம்

வந்தனள் பதியின் சீரும் வளர்மணி மேடைக்காலும் சந்தன வாடை வீசும் தலமது நருட்கள் சீரும் செந்தமிழ் தர்மச் சீரும் சிவாலயத் தெருக்கள்நேரும் புந்தியில் மகிழ்ச்சை கூர்ந்து போத்தியை மெச்சுவாளே

போற்றி நீருரைத்ததெல்லாம் பொய்யில்லை மெய்யதாகும் சாற்றினீர் பின்னுந்தெய்வத் தார்குழலுண்டுமென்று பார்த்துநீர் நமக்குக் காட்டும் பைங்கிளி மாரையெல்லாம் சீத்துவ மாக எந்தன் சிந்தையிலறிய என்றாள்

உடனந்தக் கிழவன் தானும் உள்ளது தானேயென்று மடமயில் குமரி தன்னை வாவென அழைத்துக் கூட்டி குடதன முடையாரானக் கோதையர் கோவில் புக்கி நடைதனில் நின்று கொண்டு நாரியரிவர் தாமென்றார்

பார்த்தந்த மடவாளானப் பகவதி மாது சொல்வாள் சேர்த்திந்த மடவார் தம்மைத் திருமணஞ் செய்த மன்னர் ஏற்றெந்த இடத்தே வாழ்வார் இதுநமக் கறியக் காட்டிக் சாற்றிந்தத் தலமுங்காட்டித் தன்பதி போவோமென்றாள்

ஆதிக்கிழவா அரிவை கன்னிமார்களையும் நீதியுடன் கண்டேன் நேரிழைமார் தம்மை மணம் செய்த கணவரையும் சென்றுபார்த்தே நாமும் நெய்தரிய நம்பதியில் நாம்போவோம் வாருமையா என்றுரைக்க மாது இளங்கிழவனேதுரைப்பார் நன்று நன்று பேத்தி நாயகிமார் மன்னனையும் இன்றுநீ காண இப்போது காட்டுகிறேன் பார்த்துக்கோ நீயும் பையவா வென்று சொல்லி கோற்றுக் குருவம்பலத்தில் கும்மிமிகக்கொண்டாடி நாட்டுத்தீர்வைக் கணக்கு நவின்றிருக்கும் வேளையிலே காட்டிக் கொடுத்தார் கரியமால் நாரணரை பகவதியாள் வந்து பார்க்கின்ற அப்பொழுது சுகபதியாள் கண்ணதுக்குத் துய்யத் திருமாலும் பச்சை நிறமும் பவளவாய்க் கனியிதழும் நச்சரவில் பள்ளிகொண்ட நல்லசொரூபம்போலே தண்டையணிக்காலும் தாமரைக்கை பொன்முகமும் கெண்டையக்கண் மாலும் கிரணவொளிரத்தினம்போல் செம்பவள வாயும் சிறந்த பீதாம்பரத்துடனே அம்பலத்தே நின்றுஆனந்தமே புரிய ஆனந்தமான அழகு பகவதியும் தானந்த மான சச்சிதானந்த வடிவை கண்டந்த மாது கண்மூடா வண்ணமங்கே நின்று அவள் பார்த்து நெஞ்சந் தடுமாறினதை கிழவரவரறிந்து கிளிமொழியை விட்டகல பழவரொரு சொரூபம் பாச மிகஎடுத்து கைநெகிழ்ந்து மாயன் கனகபதி மீதில் வந்தார் மைவளைய மாது மாறிமனதே திரும்பி பார்த்தாளருகில் பண்பாக நின்றதொரு கூத்தாடித் தாதனையும் கோதைமிகக்காணாமல் பாவிக் கிழவன் பாதகங்கள் செய்தானே லாவிலாவிக்கொஞ்சம் லாவிமிகத் தேடலுற்றாள் அய்யோ கெடுத்தானே ஆதிக் கிழவனம்மை மெய்யோ னென்றிருந்தோம் வெளியேற்றி விட்டானே எங்கேயினிக் கண்டுஎன்பதியில் போவேனான் திங்களுதிக்குதல்லோ சேவல் குரலாகுதல்லோ நிலவெளிச்சமாகுதல்லோ நிற்கிழவனையுங்காணலையே குலமுழிவதாச்சே குவலயங் கேடாகுதல்லோ மானமழிந்தாச்சே வையகமும் பேச்சாச்சே தானமழிந்தாச்சே சங்கையினி கெட்டாச்சே இக்கிழவனம்மை இளக்கியிங்கே கொண்டுவந்து மொக்கை மிகக்கெடுத்து மோசஞ்செய்ய வந்தானோ என்னபோலாச்சு என்தலையின் கூறிதுவோ அன்னம் போல் வார்த்தை ஆசாரமாயுரைத்து சந்தியில் பந்தாக்கினானே சளக்கிழவன் நம்மையின்று சுந்தரியுமெத்தச் சோர்ந்து மனதே கலங்கி புலம்புவாள் தனியே பொன்னும் பகவதியும் சிலம்பணியும் நாயகியும் தியங்கிப் புலம்பினளாம் என்னைப் படைத்தவரே ஈசுரரே தஞ்சமென்று பொன்னனைய மாதும் புலம்பித் தவிக்கலுற்றாள் தலையிலெழுதுஞ் சங்கரரே தஞ்சமென உலையில் மெழுகதுபோல் ஓவியமும் உள்ளுடைந்து இனம்பிரிந்த மானதுபோல் ஈயமது போலிளகி மனம்பிரிந்து மாது மதலையழுதாப்போல் பிறப்பித்தச் சீமானே பிஞ்ஞகனே தஞ்சமென்று சிறப்பித்த மாது தியங்கி மயங்கலுற்றாள் மாது பகவதியாள் வயசுபதினாறுடையாள் சாருமிட மற்றார்போல் தனியே புலம்பலுற்றாள் கண்ணினிய சொல்லாள் கரியமகா ஈசொரியாள் எண்ணுஞ் சாகாமல் இருக்கும் பகவதியாள் தாயில்லாப் பிள்ளை தயங்கினாற்போலே நின்று வாய்குளறிக் கண்ணீர் வடிய மிகஅழுதாள் சோடு பிரிந்த துய்யப் புறாவுமிரங்கிப் போடுகின்ற சத்தம் போலே குரல்நிகழ்த்தி உள்ளுக்குள் நோக்கும் ஓவியத்தின் தன்குரலும் எள்ளுக்குள்ளெண்ணெயென இருந்து மிருக்கலைத்தான் சங்குக்குள் பிறந்த சமயத்திருமணியும் எங்கும் புகழ்பெற்ற ஈசொரியாள் மாமயிலும் தனியேயிருந்து தனதுள்ளகமடக்கி மனிதர் காணாமல் மறைந்து நின்று மாதுநல்லாள் கிழவன் தனைத்தேடி கிளிமொழியாள் பார்த்து களப நிறத்தாள் காணாமல் வாடலுற்றாள் கூட்டிக்கொண்டு வந்த கூனுக்கிழவனையும் காட்டித்தர மாட்டீரோ கன்னிகுலமாதர்களே ஆதிமகாலட்சுமியே அண்டமளந்தவளே சோதி மகாபரனே துணைசெய்ய மாட்டீரோ அன்னபட்சி மாமரங்காள் ஆவினங்காளூர்வனங்காள் என்னைமிகக் கூட்டிவந்த இளங்கிழவனைக் காட்டித் தாரீரோ என்றனுட சந்தபதி நான்போக வாரீரோ என்மனது வாட்டந் தவிர்ப்பதற்கு என்று புலம்பி இளங்குழலித் தேடுகையில் குன்றுமேல் திங்கள் குதிக்குமந்த வேளையதாம் வேளையறிந்து மெல்லி பொன்வண்டதுபோல் சூழநிற்கும் புன்னைப் பூவிலொரு சூட்மதாய் இருந்தாள் பொன்வண்டாய் ஏற்றபகலேகும்வரை தருந்தார மார்பன் சுவாமி மிகஅறிந்து பகவதிக்கு மங்களங்கள் பாடி மகிழ்ச்சையுடன் சுகம்பெரிய மாயன் சோபனங்கள் கொண்டாட ஆடிக் களித்து அகமகிழ்ந்தாரச்சுதரும் கூடிநிற்கும் பேரோடு கூறிமிக ஆடிடுவார் நாட்டையழிக்க நமக்கு வொருமுகூர்த்தம் பேட்டை தர்மந் தோணப் போகுதின்றென்றனக்கு என்று கும்மிபோட்டு இளங்குழலையும் பார்த்து இன்று இருவென்று எம்பெருமாளுமாட நல்ல பகவதியாள்நாடிப்பொன் வண்டதுபோல் செல்லப் பதுங்கித் திசைமயக்கமாயிருந்தாள் பகற்பொழுது மாறி பகவானடைந்தபின்பு உகப்படைப்பு மின்னாள் ஒருகுழந்தை போலாகி பத்து வயசுப் பிராயம் போலேசமைந்து சித்துப் பலதுடையாள் சேர்ந்தவுயிர்க் கண்மணியாள் இரண்டு பொழுதாச்சே நம்பதியை விட்டிளகி பண்டு பதிக்கேகப் பாதைசற்றுங் காணலையே நாலுதிசையுண்டுமென்பார் நமக்குசற்றுந் தோணலையே கோலூன்றுங் கிழவன் கூட்டிவந்த பாதையதும் சற்றுந் தெரியலையே தலையிலெழுதுஞ்சிவனே முற்றுமிந்த நாடு முடிமாய்ந்து போவதற்கோ நரைக்கிழவன் நம்மை நடுச்சபையில் கொண்டுவிட்டான் உரைத்திடுவாரிந்த ஊரிலொரு வசனம் மாப்பிள்ளைக்கு வீங்கி வறட்டுக்கிழவன்கூட போய்ப்பிழைத்தாளென்று புவனஞ்சொல்வாரிதுவே நம்முடைய மட்டும் நாயன் விதித்தானோ சும்மாயிந்தக் கிழவன் சோலிபண்ண வந்தானோ படைத்த பரனே பாவியே யென்றலையில் நடத்தையெழுதி நவின்றதுவுமிப்படியோ பரதவித்து மாது பலபலவாயெண்ணிமிக விரதமுற்று மாது மெல்லியிள மயில்போல் ஆளுக்கிடையேஅன்னம் போலே திரிந்து கூழு குடித்தக் குறுங்கிழவனைத்தேடி திரியும் பொழுது செய்யதிருமாலவரும் பரியேறும் பெருமாள் பகவதியைக்கண்டவரும் இனியிவளையிந்த ராச்சியத்தில் நம்முடைய மனிதப்பெண் கூட்டிலிட்டுமாலையிட வேணுமென்று நினைத்துப் பெருமாள் நேரிழையைத்தான் மயக்கி புனைத்தொருபெண்ணுடைய பொற்கூட்டுக்குள்ளடைத்து தாண்டவமாடுஞ்சபையில் சனங்களெல்லோருமறிய காண்ட மிகப்படித்துக் கன்னிப்பகவதியை மனுவறிய அண்ட வானலோக மறிய இனிமணங்களிவளை யாம்புரிய வேணுமென்று நிச்சித்தொருபெண் நிலையுங்குறி பார்த்து எச்சரிக்கையான இளமயிலாள் தன்கூட்டில் அடைத்தார் பெருமாள் ஆயிழையும் வெகுவாய் படைத்தோரருளால் பாரீரேழு மயங்கப் பாடினாள் காண்டம் பகவதித்தாய் நாயகியும் நாடியவள் படித்த நற்காண்டமானதுதான் புகன்றாலுலகம் பொடிப்போலுதிர்ந்திடுமே உகந்தான் முடிய உரைக்கிறாள் காண்டமது மனுவினுடலதையும் மாகுலுக்கமாய்க்குலுக்கி தனுவளைத்தாற் போலே சடலந்தனை வளைத்து ஆளுக்கிடையதிலே ஆட்டிச்சடலமதை தூளு மிகப்பறந்து தூசிவானமடைய சடலந்தனையாட்டித் தான்கோபமாய்க்குலுக்கி தடதடெனச்சுவாமியுட தாளடியில்வீழ்ந்து பாவிநீ யிந்தப் பாரழிக்க வந்து எங்கள் ஆவி மறுக அவனிதனிலெங்களையும் சீரழிக்கவென்றோ தெச்சணத்தில் வந்திருந்தாய் போரழிவு இல்லாமல் பொன்று கலியதிலே பொல்லாத நீசனுட பிதிரையெல்லாமழித்து சொல்லொன்றுக் குள்ளே தெய்வகன்னி மக்களையும் வைத்தாள நீயும் வந்தாக்காலெங்களுட மெய்த்தானமழிக்க மேன்மையோ வுன்றனக்கு பாவி நீ யென்னிடத்தில் பருங்கிழவனாக வந்து தேவியென்றன் மானமெல்லாம் சீரழித்துப் போட்டாயே இவ்வளமை செய்வாய் என்றேநான் முன்னறிந்தால் பொவ்வாயில் தீயெரியப் போடுவேனக்கினியை என்கோவில் வந்து என்னைக்கண் மாயமதாய் உன்கோவில் வாசலிலே விட்டாட்டுப்பார்க்கிறாயே என்னமாயமாக இங்கேகொண்டு வந்தாய் நீ பொன்னம்பலத் தீசன் பொடிப்படுவானிங்கில்லையோ பொல்லாத அகத்தீசன் பொருப்பேறி மாண்டானோ எல்லா ஆபத்தும் இத்தனைநாள் காத்து இப்போ மாண்டானோ அகத்தீசன் மாமுனியாய்ப் போனானோ வேண்டு மென்றகாலம் வேம்புமினிப்பானதுபோல் பார்வதி மாதுமையும் பரமேசொரியாளும் சீர்பதியென்னக்காள் சிறந்தமண்டைக் காட்டாளும் ஒக்கொன்றாய் சேர்ந்தாரோ ஓவியம் நான்வேண்டாமென்று அக்கறுகு சூடும் ஆதி வெறுத்தாரோ மூவாதி மூவருக்கு முன்னுதித்து வந்தவனோ தேவாதி தேவருக்கும் தெய்வமாகி நிற்பவனோ இவனுடைய மாயம் என்னசொல்லப் போறோம்நாம் சிவனுக்கு மென்னுடைய செய்தி தெரியுமல்லோ ஆருக்கு மடங்காத அதிகாரம் பெற்றவனோ பாருக்குள் வந்து பரிசு கெடுக்கிறானே போகவழி சொல்வீர்களோ பொன்னுகன்னி யெம்பதிக்கு ஏகவழி சற்றும் எனக்குத்தெரியல்லையே என்று பகவதியாள் இரைஞ்சிமிகக் கூச்சலிட்டு மன்றுதனில் வீழ்ந்து மாபுலப்பமாயழுதாள்

புலம்பிடத்திருமால் மாதை பொறுபிள்ளாய் பிள்ளாய்பெண்ணே சலம்பி நீ யுரைத்தா லோகம் தட்டுண்டு போமோ சொல்லு பலம்பெற வுனக்கு இந்தப் பருவமா மணங்கள் செய்ய நலம்பெற வரங்கள் பெற்ற நற்பரத் தீசன் நானே

நானென்ற ஈசனானால் நானிலம் பிறவார் கள்ளக் கோனென்ற இடையன் சாமிக்கோபாலனானதாலே தானென்று உலகில்தோன்றி சடாட்சர ஆட்டு மாடி நானென்று வேடம் பூணும் நாரணன் நீதானென்றாள்

நாரணன் நீதானென்று நவின்றதும் சரிதான் பெண்ணே காரண வுகத்துக் கெல்லாம் கருவுதித் தோங்கு மாதி நாரண ஈசனல்லால் நடப்புவேறாரு சொல்லு வாரணக்குயில்போல் வன்ன மயிலே என வுரைத்தார்

உரைத்திடு மொழியைக் கேட்டு உறுமியே கோபமுற்று வரைத்தடம் புலிபோல் சீறி மங்கையு மாறிச்சொல்வாள் நரைத்துமே புலச்சை கெட்ட நாரண ஈசனென்று துரைத்தனமாகசொல்லச்சுணையுண்டோ வுனக்கென்றாள்

சுணையுண்டோஎன்று கேட்ட சுந்தரப் பெண்ணேகேளு கணையுண்டோ அம்புமுண்டோ கலிமாயைதனையழிக்க இணையுண்டோ எம்மைப்போல யாருமே இல்லைஇல்லை அணையோடுஆண்மையுண்டோஅதுசாதிக்குணமென்றார்

சாதிக்குச் சாதி நீயும் சமைந்து நல் வேடம் பூண்டு தாதிக்குக் கணவன் போலும் சடமெடுத் துடல்கள் போட்டு வாதிக்குப்பிறப்பாய்ப்பின்னும் வழியுன்றன் குலமே கந்தன் சாதிக்குச் சரியே வுன்றன் தன்குல மறிவேனானும்

அறிவேனானென்ற பெண்ணே ஆதியுமெனதுள் கண்டாய் தறுமொழி சொல்ல வேண்டாம் தாணுமாலயனும் நானே உறுமொழியொருசொற்குள்ளே உகமதையாள நானும் மறுமொழி யில்லா வண்ணம் வரம்பெற்ற நாதன் நானே

அப்போதரிவையரும் ஆதி முகம்நோக்கி இப்போதுன்மருட்டு எல்லா மிகஅறிவேன் சோலிமிகச் செய்யாதே கெஞ்சுகவாய்ப் பெண்ணாரை பாதகங்களேராதே பாவையரை விட்டுவிடு தோதகமாய் வித்தைத் தோகையரோடேறாது எங்கள் கண்மயக்கம் எல்லா மிகத்தெளித்து தங்கள்தங்கள் பதிக்குத் தானேக விட்டுவிடு கேட்டந்த நாரணரும் கிளிமொழி யோடுரைப்பார் நாட்ட மடவாரே நானென்ன செய்தேன்காண் உங்களைநான் கட்டி ஓடிமிகப்போகாமல் எங்களுட பொற்பதியில் இட்டிருக்கோ பிள்ளாய்ச்சொல் போகவேணுமென்றால் பிடித்திழுப்பார் உண்டோசொல் ஏகவேணுமென்றால் எழுந்திருந்து ஏகலாமே மாயத் திருமேனி மனதுள்ளொன் றேயடக்கிப் வாய்த்திரு வாய்மலர்ந்து உரைத்திடவே பெண்ணாளும் வாயுரைத்தாற் போலே மனதுமிகச்சொல்லாதே நீயுரைத்தாய் நெஞ்சம் நினைப்புவேறாயிருக்கும் மாய மறிவாரோ மாயாதியுன்சூட்சம் உபாயமறிய ஒருவராலேலாது என்று மாகுமரி இப்படியே சொன்னவுடன் நன்று நன்றென்று நாரணர்பின்னேதுரைப்பார் பெண்ணேயென்னுடைய பேரழகிப் பொன்மயிலே கண்ணேயெனது கனியேயென் தெள்ளமுதே அமுதவாய்ச் சொல்லழகி ஆசார வீச்சழகி குமுதவாய்ப் பெண்ணே குமரிப் பகவதியே தேனே மயிலே திகட்டாத தெள்ளமுதே மானே குயிலே மரகதப்பெண்ணோவியமே கிஞ்சுகவாய்ப்பெண்ணே கிளிமொழியென் மாமயிலே செஞ்சுடரே நல்ல திரவிய மாமணியே பொன்னும் பகவதியே பிள்ளாய்நான் சொல்வதுகேள் என்னுடைய பேரில் எள்ளவுங் குற்றமில்லை கலியழிய வயது காலஞ்சரியானதினால் வலிய யுகமான வாய்த்ததர்ம நற்புவிதான் பிறப்பதினாலிந்தப் பெரும்புவியில் நாம்பிறந்து சிறப்பதுகள் செய்து செய்கருமமுமுடித்து நாடாள நமக்கு நல்லபலனானதினால் தாடாண்மையான சத்தி பகவதியே உண்மைதான் சொல்லுகிறேன் ஓவியமே நீகேளு தண்மையல்லால் வேறு தப்பிதங்கள் சொல்லேனான் கயிலையங்கிரியில் கறைக்கண்டரீசுரரும் மயிலனையாளான மாது சரஸ்வதியும் மாது உமையாள் வாய்த்தகுல பார்வதியாள் சீதுபுகழ் லட்சுமியாள் சிறந்த பகவதியாள் மண்டைக்காட்டாள் தெய்வ மடந்தையேழுபேர்கள் குன்றிலுறை வள்ளி கோதைதெய்வானைவரை பூமடந்தை நல்ல பொன்னரியத்தேவியர்கள் பார்மடந்தை கங்கை பாணி மடந்தைமுதல் எல்லோருங் கூடி இருக்க வொருதலத்தில் வல்லாரு மீசர் வகுத்ததுவே நீகேளு கலியன் வரம்பெற்றுக் கயிலைதனை விட்டவனும் திலியனவனுகத்தில் தேவியவள் பெண்ணுடனே வருமந்த வேளையிலே மாமுனி ரோமரிஷி திருஉமையாள் பங்கரோடு சென்றுநின்றேதுரைப்பார் நல்ல பரமேசுரரே நாட்டிலிந்தக்கலியன் வெல்லக்கூடாதவரம் வேண்டியிவன்போறதினால் எக்காலமையா இவன் முடிவாவதுதான் அக்காலமெல்லாம் அருளுமென்றானீசுரரை நல்ல பரமேசுரரும் நாடிமுனி கேட்டதற்கு சொல்லலுற்றார் பெண்ணே செவிகொடுத்து நீ கேளு மாமுனி கேளென்று மாயாத ஈசுரரும் தாமுனிந்து சொன்னத் தன்மை மிகக்கேளு பொல்லாக் கலியன் பொன்றியடி வேரறுவது எல்லாமறிய இலக்கறியக் கூறினராம் இவன் மாளும்போது இனத்துக்கினம்பகையாம் சிவஞான நினைவு செல்லாது தேசமதில் கொலைகளவு ரெம்பக் கோள்கள் மிகுந்திருக்கும் தலைஞான வேதம் தடுமாறிக் கைவிடுவார் நேருக்குக் காலம் நெகிழ்ந்திருக்கும்பார்மீதில் போருக்கு யாரும் புத்தியாய்த்தானிருப்பார் பிள்ளைக்குத் தாயும் பெருத்தபகையாயிருக்கும் கள்ளக் கணவருட கருத்துமிக மாதருக்காம் கூடியுடன்பிறந்த கோதையரைப்பெண்ணெனவே நாடியவரெண்ணி நாணியிறப்பார் கோடி வாரி கோபிக்கும் வாங்கும் சிலஇடங்கள் மாரி மறைந்து விடும் வாயுவது நோய்வீசும் கீழ்ச்சாதியெல்லாம் கெறுவிதங்கள் மிஞ்சியவர் மேல்சாதி தன்னை வேலைகொண்டு தான்வருவார் வம்பருக்கு நோக்கம் வாக்கில் மிகஇருக்கும் அன்பருக்கு நோக்கம் அடங்கி மிகஇருக்கும் மனுவதிலே கற்பிழகா மாதர்கற்பேயிழந்து தனுவாய்ப் புருஷனுட தன்வாக்குக்கேளார்கள் தெய்வ நிலைகள் தேசமதில் காணாது மைநெறியப் பெண்ணார் மனுநீதங் காணாது இராச நெறிநீதம் இராத்தியத்தில் காணாது பிராயம் வருமுன்னே பெண்கள் நிலையழிவார் தெய்வ மடவார் தேசமதிலே வருவார் வையமறிய மாலையிட்டு வாழ்ந்திருப்பார் பார்பதியாள் ஈசொரியாள் பரமேசொரியாளும் சீர்பதியாளான சீதாதேவி முதலாய் கன்னியா குமரி கயிலைபுகழ் மாதரெல்லாம் உன்னியவர்கள் ஒரு தலத்திலே கூடி வாழ்ந்திருப்பாரென்று வகுப்புரைத்தீரீசுரரே கூர்ந்திவர்கள் தம்மைக் கோலமணஞ்செய்கிறதார் யானறியச் சொல்லும் அரனே எனத்தொழுதான் தானறியச் சொன்னத் தன்மை மிகக்கேளு நாடுகுற்றங் கேட்டு நல்லோரைத் தேர்ந்தெடுத்து கேடுகலி நீசருட கிளைவழிகளுமறுத்துத் தெய்வ சான்றோர்களுக்குச் செங்கோல் மிகக்கொடுத்து மெய்வரம்பாய்த் தர்ம மேன்மை முடியுந்தரித்து தரும புவியாளத் தாட்டீக வைகுண்டரும் பொறுமைக்குலங்காக்க பிறக்கிறாரானதினால் நாங்களெல்லோரும் நமனுமவர்க்குள்ளாவோம் தாங்கியொருபொருள்போல் தாமிருப்போமப்பொழுது ஒருபொருளாய் வந்து உருவெடுப்பதானதினால் திருமடந்தையாவரையும் செய்யுமன்னர் தாமவராம் என்றீசர் சொல்ல இசைந்தமுனி நல்லதென்று நன்று நன்றையா நல்லகாரியமெனவே சந்தோசங் கொண்டு தானிருந்தான் பெண்ணரசே முந்தோர் மொழிந்த முறைநூற்படியாலே வந்தது காணிந்தவிதி மங்கையரே யுங்களுக்கு வந்ததுகாரியம்பெண்ணே எனையொன்றுஞ் சொல்லாதே தலையில் விதிபிள்ளாய்த் சங்கடங்கள் விட்டுவிடு கிலேசமதையெல்லாம் கிளிமொழியே விட்டுவிடு கொண்டுவந்தேன் பெண்ணேகுவிந்தவிதி எந்தலைக்குள் பண்டு அமைத்தபடி பதறாதே பாவையரே பெண்ணே நீயொருத்திப் பேர்பெரியக்கண்ணரசே கண்ணேயுனைக் காணாமல் கலங்கிமெத்த நானலைந்து வாடியிருந்தேனடி மங்கையுனைக்காணாமல் கோடியிருந்தேனடி குமரியுனைக்காணாமல் தாபத்தாலுன்னைத் தவமிருந்து கண்டேனடி கோபத்தால் கன்னி குமரியென்னைப் பேசாதே என்று மகாமாலும் இரக்கமுடன் மாதைமிக கொண்டு அணைவாய்க் குழைவாய் மிகவுரைக்க அம்மை பகவதியாள் ஆகங்களி கூர்ந்து நம்மைப் படைத்தது நாயன் முன்னாள்என்றுசொல்லி இருந்த பதியை எண்ணிஎண்ணி மாதுநல்லாள் பொருந்தும் விழியாள் பொருமிமிக நீருவிட்டு அழுதாளே சொல்லி அருவரைகள் தானிளக ஒழுகாக நிற்கும் உலக நருளழவே மாமரங்களெல்லாம் பூத்துச் சொரிந்தழவே ஐயோ நானிருந்த அம்பலமும் வீதிகளும் வையாவழித்தெருவும் மண்டபமுந் தோற்றேனே சிங்காசனமும் செகல்த்துறையும் வாவிகளும் மங்காத பொன்னு மாளிகையுந் தோற்றேனே இலாடக் கிழவன் இராத்திரியில் வந்து நம்மைக் கபாடமிகச் செய்ததினால் கனபதிகள் தோற்றேனே பொன்னாபரணமும் பெட்டகமுந்தோற்றேனே முன்னாளெழுத்தோ முத்துமண்டப மிழந்தேன் ஆண்டிலொரு தேரோட்டம் அதுவெல்லாந்தோற்றேனே வேண்டும் நருட்கள் வந்து விழுந்திறைதல் தோற்றேனே தண்டையணி சிலம்பும் தரளமெல்லாந் தோற்றேனே துணைக்கிள்ளையானத் தோழியரைத்தோற்றேனே பணப் பெட்டகமும் பைம்பொன்னரியபட்டுகளும் நவமணியால் செய்த நல்லவடந் தோற்றேனே செகமெல்லாங் கூடிச் சேவிப்பதுந் தோற்றேனே இத்தனைநாளுமிருந்து இந்தக்கெதியோஎனக்கு முத்தி பெற்ற ஈசன் முன்னெழுதி வைத்ததுவோ அய்யோநான் பிறந்த அன்று முதலின்றுவரை வெய்யோன் முகம்வரையும்செல்லியறியேனே பாவிக்கிழவன் பரிகாசஞ்செய்வானென்று ஆவியறிந்திலனே அங்கமது வாடுதையோ மூன்றுபொழுதாச்சே ஊறும் நீர் தானருந்தி மீண்டென் சரீரம் விழலாயெரியுதையோ பாலு பழமும்பருந்தேனுஞ் சர்க்கரையும் நாலுரண்டான நல்ல ருசியதுவும் பாவித்த கும்பி பருங்கனல்போல் மீறுதையோ ஆவிதடுமாறுதையோ ஆதிபர மேசுரரே என்று பகவதியாள் எண்ணமுற்றுத்தானழவே மன்றுதனையளந்த மாலுமிக அமர்த்தி தேனினிய கண்ணே தேவி பகவதியே நானினித்தான் சொல்லும் நல்ல மொழிகேளாய் நான்மணங்கள் செய்யும் நாரியர்கள் தம்மிலுமே மேன்மையதாயுனக்கு வெகுபணிகள் நான்தருவேன் பொன்பணங்களானப் பெட்டகமுந்தருவேன் என்பதியுந்தருவேன் ஏறும்பல்லாக்கருள்வேன் தண்டாயமேறிச் சனங்கள்மிகப் போற்றிவர கொண்டாடும் நல்ல குருபாக்கியந்தருவேன் திருநாள் பவிசு தினமுனக்கு நானருள்வேன் அருள்ஞானப்பெண்ணே அங்கிருந்த சீரதிலும் அய்யிரட்டியாக அணிவேனுனக்குடைமை பொய்யென்றிராதே பொன்முடியின் தன்னாணை என்று மாயாதி இப்படியே ஆணையிட்டுக் குன்று தனமின்னாள் குமரி மனமகிழச் சத்தியஞ் செய்து தலையைத் தொட்டாணையிட்டார் புத்திவந்து பெண்ணாள் பொன்னும் பகவதியாள் நாதனுட தஞ்சமென நாடியகமகிழ்ந்து மாது குமரி வாயுரையாதிருந்தாள் அப்போ திருமால் ஆனந்தமேபெருகி இப்போ பகவதியை ஏற்றமணஞ்செய்யவென்று உன்னித் திருமால் ஒருசொரூபங்கொண்டனராம் மின்னுமந்த ஈசுரராய் வேடமது பூண்டு எக்காள வாத்தியங்கள் இசைதாள நாகசுரம் அக்காலத் தேவர் ஆகாயமீதில்நின்று பந்தல் விதானமிட்டுப் பாவாணர் போற்றிநிற்க சந்தமுடன் மனிதச் சாதி மிகமகிழ்ந்திடவே தெய்வரம்பை மாதர் திருக்குரவைத்தான்பாட ஞாய மனுவோர் நற்குரவைத்தான்பாட பகவதிக்கு நல்ல பாரமணக்கோலமிட்டு சுகபரனுமாலை மணச்சொரூபமெடுத்தவரும் பிச்சிமாலைபுரிந்து பொற்கடுக்கன் மீதணிந்து மிச்சமுடன் வெள்ளி விரலாளியோடரைஞாண் பொன்தாவடங்களிட்டுப் பொன்னரிய தாலிதன்னை மின்தாவடம்பூண்ட மெல்லி பகவதிக்கு கண்ணானத் தாலி காரணத்து நற்தாலி விண்ணோர்கள் மெய்க்கவிறலோன் மிகத்தரித்தார் கண்டு தெய்வாரும் கன்னி பகவதிக்கு இன்று மணம்புரிந்தார் இறையவர்தானென்றுசொல்லி கொண்டாடிக் கயிலை குவித்துமிக வாழ்ந்திருந்தார் தொண்டரான சான்றோர் துதித்து மிகப்போற்றி கலிமுடிந்த காலம் கன்னி பகவதிக்கு சலிவில்லா மாமணங்கள் தானாச்சு நன்றெனவே எல்லோருங் கொண்டாடி இருந்தார் காணம்மானை நல்ல நாராயணரும் நாடி யகமகிழ்ந்து செல்லமட வாரோடு சேர்ந்து விளையாடிருந்தார் அந்தந்தப் பெண்களுக்கு அழகு சொரூபம் வேறாய் சொந்த விளையாட்டுத் தோகையரோடாடினராம் ஆடித் திருநாளும் ஆனந்தக் கும்மிகளும் நாடி யுகத்தீர்ப்பும் நல்ல மக்களுக்கறிவும் சொல்லி யாமங்கூறிச்சோபனங்கள் தான்பாடி நல்லியல்பாய் நாதன் நடத்தி வருகையிலே ஈசுரனுக்கேற்ற ஏந்திழையாள் பார்வதியை வீசுபுகழ் மாதுமையை வெற்றிமண்டைக்காட்டாளை மாமணங்கள் செய்ய மனதிலுற்றெம்பெருமாள் பூமணங்கள் செய்யப் பொன்னு நல்ல பார்வதிக்கும் மங்களங்கள் கூறி மாதை மிகநினைத்து திங்கள் சடையணிந்து சிவவேடமுந்தரித்து மாத்திரைக்கோல் பிடித்து மார்பில் தாவடம்பூண்டு காத்திருந்து பார்வதியைக் கருத்தாய் நினைக்கலுற்றார் மாதுமைக்கு மங்களங்கள் மயேசுரன்தான்கூற சீதுகந்த மாதுகளைச் சிவனு மிகநினைத்து கருத்தாயிருந்து காண்டமது சொல்லியவர் உருத்தாயிருந்து ஓதுவார் மோகமதாய் பெண்ணேயென்பார்வதியே பேரான மாதுமையே கண்ணே யென்பார்வதியே கனகவொளி ரெத்தினமே கூட்டுக்கிளியே கொடியிடையே நிங்களெல்லாம் நாட்டிலென்னை விட்டு நன்னகரில் வாழ்வீரோ தனியேநான் வந்திருந்து தவித்துமுகம் வாடுவது கனியேயென் மாமணியே கருத்திலறியீரோ உள்ளுடைந்து வாடி உங்கள்மேல் காதல்கொண்டு தள்ளுடைந்து நானிருக்கும் தன்மை யறியீரோ ஊணு உறக்கமில்லை உங்களை நானும் எண்ணி கோணுதலாய் வாடி கோடிமுகம் வாடுறேனே வாரீரோ பெண்காள் வயிறுபார்த்தன்னமிட பாரீரோ என்முகத்தைப் பார்த்திரங்க மாட்டீரோ அன்னங்காய் வைத்து அமுதருந்துமென்றுசொல்லி முன்னிங்கே வந்து முத்தமது தாரீரோ வாழை பழங்கனிகள் மாம்பழம் பலாக்கனிகள் கூழனைய சந்தனமும் கொண்டுவந்து தாரீரோ கண்ணரிய பெண்ணுகளே கள்ளமில்லாதோவியங்காள் பெண்ணரிய மாமயிலே பிள்ளா யென்கண்மணியே எண்ணுஞ் சிறுபிள்ளையாய் இருக்குமென்றன் பார்வதியே கண்ணு மயிலே கைக்குள்வந்து சேராயோ என்றுபரநாதனுமே இவ்விசைகள் தான்கூற மன்றல் குழலுமையாள் வாய்த்தகுலப்பார்வதியாள் வந்து திருப்பாதமதில் மாகோபமாய் மகிழ்ந்து முந்து மொழியெல்லாம் மொழிந்தாரே மாதரவர் அய்யோ ஈதென்ன அடிமாறு காலமதோ பொய்யோ கலியன் பிறக்கப்போய் நாங்களெல்லாம் இப்பாருலகில் இப்படியே வந்ததென்ன முப்படியேயுள்ள முறைநூற் படியாலே பொல்லாக்கலியுகந்தான் பொடிப்பட்டுப்போறதற்கோ வல்லாத்த மங்கையெல்லாம் மாகலியில் வந்ததுதான் என்றந்த மாதர் இதுகூற மாயபரன் நன்றென்றன் மாதர்களே நாம்நினைத்ததுபோலே வந்தீரேயின்று மணம்புரிய வேணுமென்று புந்தியயர்ந்து பூவை முகங்கோடி அண்ணர் நாராயணரும் அவனிதனில் வந்தாரென்று பெண்ணரசி நாங்கள் போய்ப்பார்க்க வேணுமென்று வந்தோமே யென்னுடைய வரம்பெரிய அண்ணரென்றாள் பிந்தாமல் மாயன் பேசுவார் மங்கையோடு அண்ணரது நீயென்றாய் ஆயிழையே இவ்வுகத்தில் இண்ணதுவே இப்படித்தான் என்னுடைய நாயகமே மனதயர்ந்து மாதர் வாயுரைக்கக்கூடாமல் தனதுள் முகங்கோடி தலையில் விதியெனவே நின்றார் மடவார் நினைவு தடுமாறி பண்டாரமாகப் பரமன் வடிவெடுத்து தாலி மிகத்தரித்தார் தாமனந்தப்பெண்ணார்க்கு ஆலித்துப் பார்வதியை அருவியுடனீராட்டி சந்தோசமாகத் தாலி மிகத் தரித்தார் வெந்தோசந் தீர்ந்து மேலோர்கள் கொண்டாட வையகத் தோரும் மனமகிழ்ந்து கொண்டாட செய்யத் திருமால் செய்சடங்குகள் முடித்து வாழ்ந்திருந்தார் பெண்களுடன் மாயபரநாதன் தாழ்ந்து மடவார் சரண மிகப்பூண்டு பூண்டு பணிவிடைகள் பூவையர்கள் செய்துமிக வேண்டும்பல பாக்கியத்தோடு இருந்துமிக வாழ்ந்தார் இப்படியே பெண்களொடு இருந்துமிக எம்பெருமாள் நற்புடைய தேர்திருநாள் நாளுங்குறையாமல் செய்து இகனை சிவசோபனம் புரிந்து பைதுவளை மாதரோடு பண்பாகவேயிருந்தார் மாதருக்கு மாதவனாய் வானோர்க்கு நாயகமாய் தாரணிக்கும் நாதனெனத் தான்வாழ்ந்திருந்தனராம் வாழ்ந்திருக்கும் நாளில் திருமால் மனமகிழ்ந்து கூர்ந்தொரு தேவி குவிந்தமண்டைக் காட்டாள்க்கு சோபனங்கள் கூறி சுத்தமங்களம்பாடி சேவரசியான மெல்லியரை நாமணந்தான் புரிவதற்குக்கோலம் புகழ்ந்தணிய வேணுமென்று மதிபெரிய மாதை மயக்கமிகச்செய்திடவே மாதுக்கு நல்ல மகாவிருப்ப மானதொரு சீதுகந்த மாதரென செம்பவள மாயவரும் காதுக்குத் தோடணிந்து கைக்கு வளையணிந்து மார்பில் வடமணிந்து வாய்த்ததண்டைக்காலிலிட்டு சேலை யுடுத்துச் சிவந்த கொசுகமுடித்து மாலை யணிந்து மார்பில் கலையணிந்து கோர்வையணிந்து குழலுமிகமுடித்துத் தோர்வை படாத தோகையெனவேசமைந்து மஞ்சணையும் பூசி பிச்சிமாலை மிக அணிந்து செஞ்சொல் மதனைச் சிந்தைக்குள்ளேயிருத்தி எடுத்தார் பெண்ணாக எம்பெருமாள் கோலமது கடுத்தகன்னி மார்கள் கன்னிக் கணவரென்று சொல்லி மகிழ்ந்து தோழிநாமென்றுசொல்லி முல்லையணி பெண்ணார் முகுந்தன்பதந்தொழுவார் நாட்டிலுள்ளோரும் நாரணர்பெண்ணானாரென்று தாட்டிமையாய்ப் போற்றி சரணம் பணிந்து நிற்பார் இப்படியே வேசம் எடுத்துத் திருமாலும் பொற்படியில் வாழும் பொன்னுமண்டைக்காட்டாளை மயக்கிக்கொடுவரவே மாமோகப்பெண்எனவே இச்சொரூபம் போலே ஏந்திழையாள் கண்ணிலொரு சச்சுரூபமாகத் தான்கண்டுரை பகர்ந்தாள் பெண்ணே யென்னக்காள் பேர்பெரிய நாயகமே கண்ணேயென் மாமணியே கனகவொளி மாதவமே கலியுகத்திலே பெரிய கண்காட்சை தன்னுடனே வலிதான நல்ல வாய்த்த பதிச்சிறப்பும் நித்தந் திருநாளும் நீலமணி மண்டபமும் சிற்றம் பலமும் திருநாள் சிறப்புடனே சப்தகன்னி மாரும் தண்டரள மாதுமையும் புத்தியுள்ள பார்வதியும் போர்மகள் பகவதியும் கங்கை மடவாரும் காட்சி மிகப்புரிந்து கொங்கை மடவார் கூடி மிகப்புரிந்து கும்மியடித்துக் குரவை மிகக்கூறி எம்வடிவு போலே ஏலங் குழலார்கள் ஆடிப்படித்து அலங்கிருதமாகியவர் சாடிக்குலாவி சனங்கள் வெகுக்கூட்டமுடன் பாலு பழமருந்திப் பாவிக்கும் பாவனையை மேலுக்குகந்தவளே விடுத்துரைக்கக்கூடாது என்றுரைக்க அந்த இளவரசிக் காட்டாளும் அன்று மதிமயங்கி ஆயிழையாள் மாய்கையொடு கூடி நடந்து கூண்டரிய நற்பதியில் ஆடிக்களிக்கும் ஆதியிகனைச்சபையில் வந்தாளே மாய்கை மண்டைக்காட்டாளுடைய சிந்தையதற்குள்ளே சென்று மிகவிருந்து திக்குத் திசைகள் தெரியாமல் தான்மயங்கி பக்குவ மாது பறிகொடுத்த பேர்களைப்போல் புலம்பித் தவித்துப் பெண்ணரசி நிற்கையிலே வலம்புரிக்கண் மாயன் மாதை மிகவருத்தி மணமுகிக்க வென்று மாயன் மனதிலுற்று குணமுடைய மாயன் கூண்டுமுன் மாலையிட்டப் பகவதிக்குள் சேர்த்துப் பாரமணஞ் செய்யவென்று சுகபதியாளந்தச் சோதி பகவதிக்குள் உள்ளாக்கிக்கொண்டு உற்ற திருச்சபையில் துள்ளாட்டமாகித் தொகுத்த காண்டம் படித்தாள் வையகத்தோர் காண வாழும் பகவதியாள் செய்ய மண்டைக் காட்டாள் சிறந்த காண்டம் படித்தாள் அய்யோநான் கண்மயக்காய் அங்கிருந்திங்குவர பொய்யோ வொருமாய்கைப் பெண்ணாக வந்ததுதான் இங்கேயிவர்போலே இருந்ததுகாண் வந்தபெண்ணும் சங்கை நமைக்கெடுக்கச் சமைந்தாரே பெண்ணாகி பெண்ணாய்ச் சமைந்து பேராசையுமருளி கண்ணான என்றன் கற்புமழிந்தேனே என்று மாதேவி இப்படியே சொன்னவுடன் ஒன்றுமறியாதவர்போல் உள்ளந்தனிலடக்கி பெண்ணே நானிந்தப் பெருங்கலியைத் தான்முடிக்க கண்ணான பெண்ணரசி கரிய சொரூபமது எடுத்திகனை கூத்து யானிங்கே யாடுறவன் முடுத்துந்தனூரில் முறைமயக்க வந்தேனோ எனக்குப்பெண்இல்லையென்று இரந்துகொள்ள வந்தேனோ தனக்கிதுவோ ஞாயம் தரணியது சொல்லாதோ நாமிருப்பிங்கே நாமமெங்குங் கேட்குதல்லோ சோமவாரமணிந்த சுவாமியுட கற்பனையோ என்று பெருமாள் இதுமொழிய மாதுசொல்வாள் குன்றெடுத்த மாயக் கோபாலாவுன்சூட்சம் எவரால் அளவெடுக்க ஏலுங்காணுன் மாயம் கவராயிரங் கோடிக் கருத்திருக்கு மாயவரே இராமனாய்த் தோன்றி இராவணசங்காரமது சிராமர் படைவகுத்துச் செய்யம்பு கைப்பிடித்து போரில் நீர் நின்று பொருதுகின்ற வேளையிலே மேரு குலுங்கி விண்தூள் மிகப்பறந்து ஆகாயத்தேகி அந்தரங்க மேகமதில் தூள்மூடக் கண்டு தேவர் மிகப்பதறி வேழதிய உன்போர் மிகுதேவர் பார்க்குகையில் போரிலும் நீர் நின்றுப் பொருது சரம் விளைக்க வாரியிலும் பாம்பணையில் வாய்த்தபள்ளி கொண்டீரே ஆயர்பாடி ஆயர் எல்லோருந் தாங்கூடி சாய்ப்பானப் பேய்களுக்குச் சருவில் கொடைகொடுக்க பேயையெல்லாமோட்டி பெரும்பூதமாயிருந்து ஆயர்கள் பார்த்திருக்க அங்குபூசாரியுமாய் தின்றாயே யத்தனையும் சிலபூதமாயிருந்து தொட்டிலாயர் மனையில் சிறுபிள்ளையாய்க் கிடந்து மட்டுப் பருவமுள்ள மாதர் மனைபுகுந்து விளையாடி நீயும் வேறாரறியாமல் குழைவாய் மதலையெனக் கூண்டதொட்டிலிலே கிடந்து சிறுகுழவி போலே சீறி மிக அழுவாய் பருவதங்களுமெடுப்பாய்ப் பாலன்போலே கிடப்பாய் உன் சூட்ச வேலை உரைக்க எளிதாமோ தன் சூட்சமெல்லாம் தானுரைக்கக் கூடாது பலவேசங்கொண்டு பார்முழுதுஞ் சுற்றிடுவாய் குலவேசம் நீரும் கொண்ட தொழிலல்லவோ ஆரோடுஞ் சொல்லி அதட்டிவிட வேண்டாமே பாரோடுதித்து வந்த பாவையொடு செல்லாது என்று மண்டைக் காட்டாள் இசைந்தமொழி கேட்டு நன்று நன்று பெண்ணே நமக்கிதுவே ஞாயமுறை பெண்ணேயுன்றன்பேரில் பேராசை ரெம்பவுண்டு கண்ணேயுனையிப்போ கலியாணஞ்செய்வதற்கு வேளையிதாகும் மெல்லியரே என்றுரைக்க மானதிய மங்கை மனதயர்ந்து வாய்குழறி தலையிலெழுத்தெனவே சத்தமுரையாடாமல் சிலைநுதலிக் கன்னி சொல்லுரையாதேயிருந்தாள் இருந்த நினைவை ஏகமூர்த்தியறிந்து பொருந்து மதியானப் பிரமாதி சொரூபமதாய் வேசமெடுத்து மேளத் தொனியுடனே வாசவருந் தேவர்களும் மலர்மாரி தூவிநிற்க தேசநருளறியத் தெய்வமடவாரறிய மாயபரனும் மகாபெரிய நூல்முறையாய் வாசக்குழலாளைமாலையிட்டாரம்மானை மாலையிட்டு நாதன் வாய்த்தசடங்குங் கழித்து சாலையதுள்ளேகித் தானிருந்தாரம்மானை மணமுகித்து நல்ல மணவறையகமிருந்து துணை பெரிய மாயன் சுருதி முறைப்படியே ஆகமத்திகனை அலங்கிருதமாய்ப் புரிந்து நாகரீக நாதன் நடத்திவரும் நாளையிலே கந்தனுக்கும் பெண்ணைக் கலியாணஞ்செய்யவென்று சிந்தித்து நல்ல திருமால் மனமகிழ்ந்து கேட்டு வரையாள் கோதைவள்ளி நாயகியை கந்தன் சொரூபம் கரியமால் தானெடுத்து எந்தன் பிரானும் ஏற்றவள்ளி நாயகியை மாலையிட்டு நல்ல மணமுகித்தார் கந்தனுமே வேலையிட்டமான வேண்டுஞ் சடங்குசெய்து நாளிட்டு வந்து நாளேழுமே கழித்து வாழட்டு மென்று வாய்த்தசடங்கு முகித்து மாதரோடெல்லாம் மகிழ்ந்திருந்தாரம்மானை தாரணியோரறிய தான்வாழ்ந்திருந்தனராம் பெண்ணார் தமக்குப் பேர்பெரிய தற்சொரூபம் கண்ணான மாயவரும் காட்டி மிகவாழ்ந்தார் பாக்கியங்கள் ரெம்பப் பவிசு குறையாமல் நோக்கியல்பாய் மாதர் நுண்ணிமையாய் வாழ்ந்திருந்தார் நாராயணர்க்கு நல்லமுது தான்படைத்து காரணருமமுது கலந்துமிகவுண்டிருந்தார் கூடியிருந்து குலாவி மிகவாழ நாடி மகிழ்ந்து நாரணருந்தேவியுமாய் வாழ்ந்திருக்கும் நாளை மங்கை பகவதியாள் சார்ந்த குழலாள் தையல்நல்லாள் தோழியர்கள் இருந்து மிகவாழ்ந்த இரணவொளி மண்டபத்தில் திருந்து பகவதியைத் தேவியர்கள் காணாமல் காணாமல் தேடிக் கானகங்களும்பார்த்து வாணாள் மறுகி வந்தாரே நற்பதியில் பதியில் பகவதியைப் பண்பாகப்பார்த்தவர்கள் விதியிதுவோ தாயே வெயிலுகந்த மாதாவே நீயிருந்தப் பதிதான் நிதானம் போதாதெனவோ நீயுமிந்தப் பதியை நினைத்துவந்த வாறேது அப்போ பகவதியாள் அவர்கள் தமைநோக்கி இப்போ நமக்கு எழுத்தின் படியாலே நடந்திருக்குப் பெண்ணே நவிலக்கூடாதினிமேல் கடந்த பொருள்காணும் கன்னியிவர் கண்டீரே தலையில் விதியெனவே சாற்றினாள் தோழியுடன் மலைவு தெளிந்து மாதே யென்தாய்மாரே எங்களுக்குத்தாயே இனியாரு நல்லதுணை சங்கடங்கள் தீரச் சாற்றுமெங்கள் மாதாவே மாதேயென் தோழியரே மன்னருக்கும் என்றனக்கும் தீதேதுமில்லாத் தேசத் திருப்பதியில் நின்றுபணி செய்து நிறைவாக நில்லுமென்று அன்றந்தத்தோழியர்க்கு அருளி விடைகொடுக்க விடைபோலே தோழியர்கள் வேதம்புகழ் பதியில் சடைவில்லாதே மகிழ்ந்து தாழ்ந்தேவல் செய்திருந்தார் நன்றாக நாரணரும் நாடும் மட வார்களுமாய் ஒன்றாக மக்களொடு ஒத்தளமாய் வாழுகையில் பெற்ற உபதேசப் பெருநூல் முறைப்படியே கற்றைக் குழலார் கனமான தேவியரை ஏக மறிய இசைந்த மணம்புரிந்து வாகாய்ப் பரனும் மகிழ்ந்திருந்தாரம்மானை இனியிந்த இவ்வுகத்தில் யாமனுப்புங்கோலமதை தனுவைக் குறைக்கத் தனதுள் மிகஅடக்கி நடத்தும் நருட்கள் நல்லன்னமீயுகிறதை இடத்தில் கொடுவந்து ஈயுங்களென்றுமிகச் சொல்லி நாம் கூட சுவாமி மிகஇருந்து நல்ல மக்களோடு நாம்கூடி வாழவென்று ஆராதனைச் சொரூபம் அடக்கினாருள் மனதுள் ஊரானதிற் பிச்சை உங்களுட மூப்பாலே இடஞாயமில்லை என்னிடத்தில் கொண்டுவந்து இடநாமுங்கூடி இருந்து தர்மமேற்றிடலாம் என்றுரைக்க நருட்கள் எல்லோருஞ்சம்மதித்து கொண்டு வந்திட்டார் கூடிருந்து நாரணரும் மாதர் மக்களொடு மாயன் மனமகிழ்ந்து தாதர் இருந்து சாப்பிட்டாரம்மானை கூடியிருந்து குலாவியமுதேற்று பாடி மகிழ்ந்து பரமன்வரும் நாளையிலே பின்னும் பெருமாள் பிள்ளைகளைத் தான்பார்த்து மன்னும் பெரிய மக்கள் மக்கள் மாதர்களே உங்களுட வீட்டில் உற்ற விருந்தருந்த மங்களமாயென்றனக்கு மாவிருப்பமாயிருக்கு நான்வந்து சிவன்பேரால் நாட்டு இணத்தாங்கல்களை தான்வந்து பார்க்கச் சந்தோசமாயிருக்கு என்றுரைக்க நாதன் இசைந்த குலச்சான்றோர்கள் நன்று நன்றெங்கள் நாராயணக்குருவே எப்போ நீர்வந்து இரட்சிப்பீரென்றுமிக தற்பரனே நாங்கள் சடைத்து முகங்கோடி மழைகாணாப்பயிர்போல் வாடியிருந்தோமையா பிழையானது பொறுத்து பிள்ளைகளை ஆண்டுகொள்ளும் ஆண்டுகொள்ளுமையா ஆதி மகாபரனே பூண்டு கொண்டோமுமது பொற்பாதம் நாங்களெனத் தொழுது வணங்கி சுவாமிவர வேணுமென்று முழுதுமவர்மனையில் முகூர்த்தமுறை பந்தலிட்டு பந்தலிட்டு நல்ல பரிமேற்கட்டிகட்டி சந்தமுடனே தலைவாழையும் நிறுத்தி அம்மைமாரவர்க்கு அரங்கு மிகவகுத்து செம்மையுடன் மாயன் சிறந்திருக்க மேடையிட்டு கட்டிமேற் கட்டியெனக் கனிபலதுங் கொணர்ந்து வெட்டியிராமிச்சி மிகுத்த பன்னீர் சந்தனமும் வாடைக் கமகமென மலர்பிச்சித் தார் தூக்கி மேடையலங்கரித்து விதானம் பலதணிந்து அய்யாவுக்கு அமுது ஆனக்கனிவகையும் மெய்யானத் தாய்மார்க்கு வேண்டுகின்ற தீன்வகையும் கூடவந்த நருட்குக் கோப்புபல சேகரித்து வாட விடாமல் வல்லபல தீனதுவும் மேளத் தொனியும் வெடிவாணக்கோப்புடனே எக்காளடம்மானம் கடிய சிறப்புடனே அய்யாவை நன்றாய் ஆனபரி மேலேற்றி வையாளி கொண்டு மாதாவைத் தொட்டில் வைத்து ஆடல் பாடலுடனே அரம்பைக் குரவையுடன் நாடதிய நாரணர்க்கு நல்ல விருந்தெனவே சான்றோரவர்கள் தாங்கூட்டி தங்களுட மீண்டே அவர் மனையில் விருந்து மிகக்கொடுத்து நாரணர்க்குச் சான்றோர் நல்ல சுருளும் வைத்து காரணர்க்கு நல்ல கனத்த பட்டுகள் கொடுத்து அம்மைமாரவர்க்கு அதிகப்பட்டுச் சேலைகளும் செம்மையுடன்கொடுத்துச் செய்வார் விருந்தெனவே விருந்து கொடுத்து மேலதிய நற்சிறப்பாய் திருந்துமவர்பதிக்குத் திரும்பக் கொண்டே விடுவார் இப்படியே மாயவரும் ஏற்ற சான்றோர்களுட மைப்புடைய வீடோறும் மாயன் பதிதோறும் விருந்தருந்தி ஆதி வேதாகமம்போலே பொருந்து மிகனை புரிந்து மிகமகிழ்ந்து இன்னமொருபெண் ஏற்ற மடந்தையரை நன்னகரி மெய்க்க நாமணங்கள் செய்யவென்று கேட்டுப்பரிசமிட்டுக் கிளர்ந்த முகூர்த்தமிட்டு நாட்டு நருளறிய நாரிமின்னாள் தானிருக்கும் ஊரிலவர் சென்று உற்றமங்களம்புரிந்து பாரிலகமகிழப் பதியில் வந்து தானிருந்தார் பதிதனிலே வந்து பாவித்தகமகிழ்ந்து விதியால் பெரிய விருதுக் கொடிகள் கட்டி சொத்தாஸ்தி வஸ்து தொகையெண்ணமில்லாமல் வத்தாஸ்தி பேரில் மனது மிகநாடி நிலங்கரைகள் சுற்றி நிறைபயிர்கள் தன்னினைவாய் தலம் புகழும் நாதன் தனதுள்ளகமகிழ்ந்து பொன்னான பெண்களுக்கு பொசிப்பும் பலவஸ்துக்களும் கண்ணான மாயன் கையாரவே கொடுத்து நடத்திப் பெண்ணாரை நல்லவொருங்காக இடத்திலிருத்தி இகனை புரிகையிலே எம்பெருமாள் நாட்டு இகனை நிறைவேற்றி பொன்பதியில் நாளேழும் புரிந்து திருநாளும் நடத்தித் திருமால் நாட்டுக் கணக்கும் பார்த்து தடத்தின் வழியாய்த் தானிருந்தாராய்ந்து வந்தநாள் வந்து வையகத்துச் சோதனைகள் இந்தநாள் வரைக்கும் இருந்து நாம் பார்த்ததிலே மிச்சமெந்தச்சாதியென்று மேலோர் மிகஅறிந்து அச்சமில்லாச் சாதி ஆதிச் சான்றோர்களையும் விலைபோட்டு ஆளடிமை மேவிக்கொள்ள வேணுமென்று மலையாமலெம்பெருமாள் மனதிலுற்றுச்சான்றோரை உயிரறிந்து நல்ல விலைகூறி ஆளடிமை மெயிதறிந்து நாதன் முழுதடிமை கொண்டனராம் கொண்ட அடிமை குலச்சாதி யானோரை அண்டமறிய ஆகந்தெளிந்தெடுத்து சேர்த்து வைத்துக் கொண்டார் சிவஞானப்பொக்கணத்துள் காத்தந்தப்பெண்களுடக் கற்பறிய வேணுமென்று பெற்று வந்தத் தீர்ப்பின் பிரமாணத் தின்படியே சித்துவொன்று செய்யச் சிந்தைதனிலுற்றனராம் உற்று மனதில் உபாயமதுவாக வத்து வகைபேரில் மகாநேட்டமாயிருந்து பொன்னு பணங்காசு பெரிய நிலமதிலும் தன்னுள் நினைவாய்த் தானிருந்தாரம்மானை

வைகுண்டர் வைகுண்டம் ஏகல் இப்படி இவர்தான் பாரில் எண்ணிய கருமமெல்லாம் ஒப்புடன் முடித்துத் தன்னால் ஊணிய தெல்லாந்தோண வைப்புடன் யாமங் கூறி மனுக்களைத்தெளித்து ஏற்று இப்புவி விட்டுக் குண்டம் ஏகிட மனதிலுற்றார்

ஏகிட மனதி லுற்று இருக்கின்ற உபாயந் தன்னை வாகிடமிருக்கு மாதர் மனைவிகள் மக்கள் சான்றோர் தாகிடச் சீசன் மார்கள் தங்களுமறியா வண்ணம் கோகிடக் குண்டஞ் செல்லக்குருவையும் நாட்ட மானார்

மனதினிலுற்று மாயன் மாதர்கள் மக்க ளோடு தனதுள மகிழ்ந்து கூடித் தயவுட னிருக்கும் போது என்துடல் காணா வண்ணம் இன்னமுஞ் சிலநாள் பாரில் தினமுடல் வாடி நீங்கள் தேடுவீ ரென்னைத் தானே

தேடியே யிருக்கும் போதுத் தேவியர் மக்கள் காண நாடியே சொரூபங்கொண்டு நான்வந்து நடுக்கள்கேட்பேன் பேடிகள் நினைத்திடாமல் பேசின நூற்போல் கண்டால் வாடியே மலையாவண்ணம் வாழ்தர்மப் புவியில் வாழ்வோம்

என்றவர் சிரித்துக் கொண்டுஇருந்ததைக் கவனியாமல் விண்டவர் நளியாய்ப்பேசிவிடுத்ததை மக்கள் சான்றோர் என்றைக்கும் ஆள்வாரென்றுஇருந்தனரவர்களெல்லாம் குண்டத்தை மனதிலெண்ணிக்குருவையும் நாட்டமானார்

குருவேயெனக்கு நீரருளிக்குறித்தஆண்டு இதுவரைக்கும் ஒருசொல் மொழி குறையாமல்உகத்துத் தீர்ப்புக்கூறிக் கலி கருகயாம முரைத்து என் மக்களைக்கைக்குள்ளெடுத்து வருகக்குண்ட மனதிலுற்றேன் வந்தே கூட்டிக் கொடுபோவீர்

ஆதியே யென்றன் அப்பு அனந்தகுரு சோதியே யென்றன் சொந்தத்திருவுளமே இந்நாள் வரைக்கும் இவ்வுலகில் பேதயிரென்று அந்நாளுரைத்த அப்புநாராயணரே இனியானுமது இலங்கும் பதியில்வர முனியானவற்கு முற்ற விடையருளும் ஆண்டாச்சு லக்கு அடுத்திருக்குதையாவே வேண்டாமுலகம் மேலுலகமேயழையும் அங்கழையுமையா ஆதிமுனியென்றனையும் தங்க இனிமாட்டேன் தரிப்பிட மங்கேயல்லால் என்று வருந்தி இவரிருக்கும் நாளையிலே மன்றுதனையாளும் மாயத்திருமாலும் வரங்கொடுத்த நாளும் வைத்தலக்கும்பார்த்து பரமிருந்து தேர்ந்து பாலன் தனைவருத்த வேணுமென்றீசுரரும் வேதத் திருமாலும் கண்ணு மகனைக் கடிய விமானமதில் ஏற்றிவைத்து மாமுனிவர் இருபுறமுஞ்சூழ்ந்துவர சாத்திரியோர் ஞான சற்குருவைத்தானனுப்பி வைகுண்ட வீட்டை வானோரலங்கரிக்க மெய்கொண்ட நாதன் விளம்பினார் மேலுலகில் வானோர்களெல்லாம் வைகுண்ட வீடதையும் தானமுடனெல்லாம் சணமேயலங்கரித்தார் சற்குருவான சடாமுனியிங்குவந்து மெய்க்குரு வான வீர விசயனுக்கு நல்லதுதானென்று நவின்றவரையும்புகழ்ந்து செல்ல அரைமணிக்கு சென்றிங்கேநில்லுமென மாதர் மனைமறந்து வாழ்வை மிகமறந்து தாதரூண்மறந்து சடலவுடைமறந்து நன்மைபல சோபனமும் நளிப்பேச்சு மறந்து செம்மைக் குருவாய் செம்மிமூலமடக்கி மூலமதிலடக்கி உடலூற்றைத்தானிறக்கிக் காலை மடக்கிக் கண்ணனூர் தானோக்கி கைக்குள்நின்ற மக்கள் கலங்கி மிகப்பயந்து நிற்கும் நினைவை நினைவிலறிந்துவைத்து நடக்கும் படியான நல்மொழிகளுமுரைத்து உடற்குள் குறியாய் ஒத்துமிக நீங்களெல்லாம் இல்லியல்பாய் வாழும் யாமுழித்து வாறோமென சொல்லிமக்கள் கையைத் திருமுகத்தோடேசேர்த்து பதறாமல் நீங்கள் பண்பாயொருப்போலே சிதறாமல் நீங்கள் செய்யஅனு கூலமுமாய் இருந்துமிக வாழும் என்றுநாமங்கொடுத்து திருந்துபுகழ் மாயன் சிறந்த ஓராயிரத்து ஓரிருபத்தாறாம் ஓங்கும் ரிசபமதில் சீரியல்பாயான தேதியிருபத்தொன்றில் பூருவ பட்சம் பூச நட்சத்திரத்தில் வாறுடைய சோமவாரம் பொழுதூர்ந்து பன்னிரண்டு வேளை பாவிக்கும் நேரமதில் மெய்கொண்ட சான்றோர் மேலாசையுள்ளிருத்தி கைகண்ட மாமுனிவர் கட்டாய் மிகச்சூழ வைகுண்ட மேக வழிகொண்டாரம்மானை வைகுண்டமானார் வாய்த்த விமானமோடு வானலோகத்தார் மலர்மாரி தாந்தூவ விமானமதிலேறி மேலோக மீதில்வர தேவாதியெல்லாம் திருப்பாட்டுக் கூறிவர மூவாதியெல்லாம் முகமலர்ந்து தாமிருக்க தெய்வரம்பை மாதர் திருக்குரவை தாம்பாட மெய்வரம்பு நாதன் மெய்குண்ட மீதில் வந்தார்

வந்த பொழுதே மறையோரும் வானோர் தேவரிஷிமாரும் நந்தன் பெருமான் மகனெனவே நாடி வணங்கி மிகப்போற்றி எந்தன்பிரனே யெங்களுக்கிரங்கியெமையாட் கொண்டவரே சிந்தரெவரும் போற்றத்திருமால் மகனைக்கண்டாவினரே

கண்டே மகனை மிகஆவி கமலமுகத்தோடணைத்துப் பண்டே செகலில் மகரமதுள் பண்பாயிருத்தியருளிவைத்த நன்றோர்மொழியுங்குறையாமல் கணக்கின் பிரகாரம் இன்றே யெழுந்திங்கேகிவந்த இளமான் கன்றென்றாவினரே

ஆவி மகனை அன்போடுறவணைத்து தாவி மகன்மேல் தயவு மிகக்கூர்ந்து மாமுனிவர் தங்களையும் வாருங்கோ நல்லதென தாமுனிந்து மகன்மேல் தயவாகத்தாயாரும் அன்பு மிகக்கூர்ந்து அருமைமகனையாவி இன்புருக நன்றாய் இருந்தாள் காண் லட்சுமியும் சந்தோசமாக சங்கரருந்தான்மகிழ்ந்து வந்தாயோ என்று மகிழ்ந்து கொண்டாரம்மானை நான்முனிவனும் வேத நல்ல தெய் வேந்திரனும் தாமுமிகமகிழ்ந்து சந்தோசங் கொண்டனராம் சரசுபதிமாதும் தாயீசொரியாளும் பரசுராமன்முதலாய்ப்பண்பாய் மகிழ்ந்திருந்தார் கயிலையுகமும் கமண்டலமேழ்புவியும் அகிலமது அறிய ஆனார்வைகுண்டமென எக்காள பூரிகையும் இடமாம் மானமுடன் முக்காலத் துள்ள முனிமார் முழக்கிமிக ஈரேழுலகும் இவர்செய்த நற்றவம்போல் ஆரேதுஞ் செய்ய அடங்காதிவர்தவந்தான் பிறவிநாசக்கலியன் பொல்லாத வையகத்தில் திறவிதனிலிருந்து செய்துதவமேற்றுவரோ கண்டாற்பவஞ்சூடும் கலியனுட வையகத்தில் தண்டரள மானதவம் தாக்கிநிறைவேற்றுவரோ கலிதொடருமுன்னே கனகதுவாபரயுகத்தில் சலியாமல் வாழ்ந்த தர்மி முதல்தவத்தோர் பதறி நடுங்கிப் படாதினிமேலென்று சொல்லி குதறி மலைந்து கொடுவான மாமுகடும் கெடுவுங் குகையும் கீழுமேலும் நுழைந்து முடுகி முன்னோடி நுழைந்தார் மிகப்பதறி அப்படியே நல்ல அறிவோர் பதறிமிகத் தப்பிவரயிவரும் சடையாமலவ்வுக்ததில் முப்பிறவி யுந்தியிலும் உதித்துக்குதித்தவராய் அவ்வுகத்துக்குள்ளே ஆண்டுமூவாறுவரை செவ்வுமகா ஞானத் திறவி வெளிநாடி பவமணுகா வண்ணம் பாரத் தவம்புரிந்து சிவமதுவைக் கண்டு செயல்பெற்று அவ்வுகத்தில் மாது கிளையோடும் மக்கள்பல சொத்தோடும் சீது மனையோடும் சிறந்தபல ஞாயமொடும் இருந்துமிக வாழ்ந்து எள்பாவஞ்சூடமால் சிறந்து வைகுண்ட சிவவீடு காண்பவரார் பெரிதெனவே கொண்டாடி பெரிய முனிவோரும் அரிதெனவே வானவரும் அகமகிழ்ந்து போற்றிநிற்க பூமிதனில் மக்கள் பெரியகுலச்சான்றோர்கள் சாமியுட தேவி சுற்றமட மாதர்களும் அன்பான தொண்டர்களும் அயர்ந்து முகங்கோடி வம்பான பேர்கள் வசையாய் மிகநகைக்க வைகுண்டமேக வழிகொண்டார் நம்மளையா என்று புலம்பி எல்லோருந் தாந்தேறி முன்று மொழிந்த மொழிப்படியே நம்மளையா நடந்தார் தானல்லால் ஞாயம்வேறில்லையென்று திடமான நெஞ்சத்தோடு தினம் தர்மம் செய்யவெண்ணி மாதத் திருநாளும் வாரமறவாதபடி நாதன் தனக்கு நாமள்செய்வோமெனவே கோவிலது வைத்துக் கூண்டதிருநாள் நடத்தி சேவைசெய்து மக்கள் தினஞ்சூழ்ந்து போற்றி நின்றார் நாதனுட தேவி நாயகிமாரெல்லோரும் சீதமண வாளருட சீர்பாதமுண்டென்று துயரமதாய் வாடி சிவனே செயலெனவே இயல்புதருவீரெனவே இருந்தார் தவமுறைபோல் நண்பரெல்லாம் வாடி நாரணா போற்றியென்று அன்பர் முறைபோல் அகமகிழ்ந்து தாமிருந்தார் பொன்மேனி இகனைகளை போற்றியே மனதுள் வைத்து கண்மணி சான்றோர்கள் கலியகற்றி வாழ்ந்து வந்தார் இப்படியே அன்பர் ஏந்திழைமாரெல்லோரும் முப்படியே சொன்ன முறையெனவேயிங்கிருக்க அப்போ கயிலைதனில் ஆனகுரு நாரணரும் மைப்போலினிய மகனைமிக முன்னிறுத்தி கூண்ட மணியே கோகுலமே கற்பகமே ஆண்ட மணியே அருளுமெந்தன் கண்மணியே என்றன் நன் மணியே என்னாத ஓவியமே உன்றனைநான் பெற்று உற்ற கலியுகத்தில் இருத்தி தவமும் ஏற்றமுறையும் நடத்தி வருத்தி நருளை மகாசோதனைப்பார்த்து களித்து கொண்டாடிக் கலிநெகிழ நல்லோரை தெளித்துவா வென்று சொன்ன முறைவரையும் இருந்துநீ யங்கே இகனை நடத்தினதை பொருந்தும் படியே புகன்றிடுநீ நாமறிய மாயவர் தாங்கேட்க மனது மிகமகிழ்ந்து ஞாயக் குருநாதன் நாடி மிகவுரைப்பார் அய்யரே கோவே அப்புவே நீர்கேளும் பொய்யர்வாழ் கலியில்புரிந்துத் தவசாக ஆறு வருசம் அதிகத் தவம்புரிந்து வாறுமுன்னீரும் வாரியிலே வந்திருந்து கேட்டு மகிழ்ந்து கெணித்ததுமேல் நல்வளங்கள் தாட்டாண்மையாய் நீரும் தாமொழிந்த சொற்படியே நித்தந் திருநாளும் நேரிழைமாருள்ளதையும் புத்திரரையுஞ்சேர்த்துப் பெண்களையுமாலையிட்டு மாலையிட்டுப் பெண்களோடு வாழ்ந்து அகமகிழ்ந்து கோலமணி மாதருக்குக் கோடிபல வஸ்துவகை தேடிக் கொடுத்துத் தேசக்கலி நாடழிய ஆடிக்களித்து யாம மிகக்கூறி நல்லோரை யெல்லாம் நாடித்தெளித்துமிக வல்லோரே யுந்தன் வைகுண்ட மீதில்வந்தேன் ஆஸ்தி பலதும் ஆயிளைமார் மக்களையும் கோத்திரமுங்கண்டேன் கூறிவைத்தலக்கில் வந்தேன் அந்தச் சிறப்போடு அங்கிருந்தேனானாக்கால் இந்தவைகுண்டம் யான்வந்து காண்பேனோ என்று குருமகனார் இசைந்தவுடன் நாரணரும் அன்று அயைச்சிருந்த ஆனமுனி தங்களையும் இருபேரை யும்வருத்தி இவர்மொழிந்த வார்த்தையதில் ஒருமொழிதானாகிடினும் உலைவதிங்களுண்டோசொல் தவறாமல் சொல்வீர் தப்பிதங்களுண்டானால் பதறாமல் சொல்வீர் பரம்பெரிய மாமுனியே எனக்கறியாவண்ணம் யார்செய்வார் மாமுனியே தனக்கறிய நீங்கள் சாற்றுவீருள்ளபடி என்று மகாகுருவும் இயம்ப முனிவோரும் நின்று வாய்புதைத்து நெடியோன் பதம்பூண்டு

கண்ணுக்குள் மணியாய் நின்ற காரணக்குருவே ஞான விண்ணுக்குளெவர்க்கும் ஞான வெளிச்சுடரானமூர்த்தி ஒண்ணுக்குளொண்ணாய்நின்று உலகீரேழனைத்துங்காக்கும் அண்ணுக்குங் கடந்த சோதி அறிவுள மறியாதேதோ

எறும்புகடை யானைமுதல் பேதா பேதம் எண்பத்து நான்குயிர்க்கும்ஏக மாக உறும்பொருளாய் நின்றகுரு நீயேயல்லால் உலகமதிலாருளதோ உடைய மாலே செறும்பொருளாமுமது மகனங்கே வந்து செய்தவசு முறையதிலும் நடத்தை மேலும் தறும்போருள்போலெங்கள் மனமறிய வொன்றும் தப்பிதங்களில்லையெனத்தாழ்ந்து நின்றார்

தப்பிதங்களில்லையையா தவத்துக் காதி தண்மைமிகுக்குணமுடைய தர்ம சீலன் உப்பரிகை மீதிருந்து அரசே யாள உன்புவிக்கு ஆசையல்லால் உலகிலில்லை மைப்பிதுக்க மானதொரு குழலாரோடும் மக்களொடும் வாழ்வோடும் வாழ்ந்த உள்ளம் நற்பிதுக்க மானகுரு நாட்டமல்லால் நானிலத்துள்ளாசையில்லை நாங்கள் கண்டோம்

நாங்கள்மிகக் கண்டோமிவர் உள்ளம்போலே நாடுபதினாலதிலுந் தவத்தோர் பார்த்தால் காங்கரிது எங்களுட கருணை நாதா கலியுகத்தை வேரறுத்த கடவுள் பாதம் ஒங்கஅவரடியிணையைப் பணிந்து நாளும் ஊழியங்கள் செய்தவர்க்கு உவந்து நிற்கப் பாங்கருளிச் செய்துமிக ஆண்டு கொள்ளும் பரமகுரு நாதனெனப் பணிந்து நின்றார்.

நின்றவரை முகம்நோக்கி மாயன் தானும் நிலவரங்களுள்ளதெல்லாம் நினக்குள்ளாச்சு இன்றிவரை நீங்கள் கொண்டு நமது குண்டத்து ஏகபதி வாசல்தெரு எல்லாங்காட்டிக் கொண்டு அந்தத் தையிலமதில் மூழ்க்கிப் பின்னும் கூட்டிக்கொண்டு வாருமென கூறவே வானோர் டுண்டும் பல மேளமொடும் தாளத் தோடும் உற்ற ரதம் மீதில்வைத்து உம்பர் சென்றார்

சென்றவர்கள் நாரணரின் குண்ட மானச் சிறப்பையெல்லாங்காட்டி மிகத்தெளிந்த சந்த தன்றமலர் வாழ்தங்கப் பதத்தில் மூழ்க்கித் தண்டிகையின் மீதிருத்தித் தயவாய் வானோர் கொண்டவர்கள் மாயனுடபதத்தில் விட்டுக் குலாவியந்த வானோர்கள் கும்பிட்டேற்ற மன்றலணி மாயவருமீசர் தானும் வைகுண்டமாமுனியென வழங்கினாரே

வழங்கியந்த மாயவரும் வானோர் தம்மை வரவழைத்து நீங்கள்மகா மேர்வு சென்று இளங்குருமானானகுரு வைந்த ராசர் இன்றுபுவி யீரேழும் அடக்கியாளப் பழங்குருநூல் முறைபோலே பாரில் தோன்றி பதியாள வந்தாரெனப் பதிப்பீ ரென்று வழங்கமிக மறையோர்கள் மேர்விற் சென்று மாயனுரை தவறாமல் வகுத்தார் தாமே

வகுத்திடவே முன்னுரைத்த முறைபோலுள்ள மகாபெரிய கிரீடமும் அவர்க்குச் சூட்டி பகுத்துடைய செங்கோலும் பரமனார்தன் பரம்பெரிய முத்திரியும் பலன்கள் யாவும் தொகுத்திடப்பொன்னீராளத் துகிலு மீந்து துதிசிங்காசனமீதில் தூக்கி வைத்து மகுத்துவமாய் வாழுமென வானோர் போற்ற மறையவரு மீசுரரும் வரமே யீந்தார்

ஈந்திடச் சிங்காசனத்தில் இருந்தவரேதோ சொல்வார் கூர்ந்திட எனக்கு இங்கே குணமெல்லாம் நலம தாகச் சார்ந்திடமருளிச் செய்தீர் தற்பரா வொப்பில் லானே ஓர்ந்திட எனக்கு அங்கே உகந்தவருண்டே முன்னம்

ஆடையும் பொன்னுங் காசும் அன்னமும்பாலு முந்தன் நீடிய உதவி யாலே நினக்கவரிதுநாள் மட்டும் வாடியே முகங் கோணாமல் மனத்தய வதனாலீந்து தேடியே மக்கள் தம்மைச் சிந்தையில் நினைக்குதென்றார்

ஐயரே இதுநாள் மட்டும் அவரெனக் களித்த செல்வம் வையகமே தரியா தென்றன் வாயினாலுரைக்கப்போமோ மெய்யெல்லா மவர்கள் பேரில் மேனியுமுருகுதையா செய்யனேயவர்களென்றன் திருப்பதம் வணங்க செய்வாய்

திருப்பதம் வணங்கச்செய்வாய் என்றெனத்தெளிந்த ஞானி கருவதிலுதித்த சான்றோர் சாதியில் கௌவை யாகிக் குருபதம் வணக்கஞ் செய்து கூறிய மொழியைக் கேட்டு மருவணி துளசி பூணும் மாயனு மகிழ்ந்து சொல்வார்

கைகண்ட மணியே யென்றன் காரணக் குலமே கன்றே வைகுண்டமணியேயுன்றன் மனமதலைய வேண்டாம் மெய்கொண்ட மணிகளான மேன்மக்கள்சான்றோரெலாம் பொய்கொண்டகலி விட்டுன் பொற்பதம்பெறுவர் கண்டாய்

கலியை யெரிக்கத்தவசிருந்த கருத்தையறிந்துன்னிடத்தில் வலிய வந்துன் பதம்வணங்கி மனதுக் கேற்க நின்றவரும் பொலிய உனக்கு அமுதுடன் புடவை பலது மீந்தவரும் ஒலியத் தான தர்மமதும் உகந்தே யளித்தோர் மிகவாழ்வார்

இரப்பன்போல் வடிவெடுத்து இருந்து கலியை முடிக்கஅங்கே உரைக்குமொழியைக்கேட்டுனக்கு உதவி புரிந்த உத்தமரும் கரைக்கும் படியேயமுதளித்து கைக்குள்ளேவல் புரிந்தவரும் மறைக்குங்குருவே யென்னாணைவந்தே சேர்வாருன்பாதம்

உடுக்கத் துணிகளில்லாமல் உலகமதிலே யெளியவனாய் முடுக்கமதுயில்லாமல் முடி விரித்துப்பேயனைப்போல் கடுக்கக்கலியை யெரிப்பதற்குக்கவிழ்ந்து சிறைநீ யிருக்க அடுக்க உதவி செய்தவர்கள் அவரே யுனக்கு மகவாமே

ஆமேயவர்களல்லாமல் அதிக மகனே நீயிருந்த ஓமேயறியா வண்ணம் உலகிலுன்னைப்பழித்தவர்கள் சாமே தீயில் தாங்கிடந்து சடமே நரகுக்குள்ளாகி வேமே யுன்றன் மேலாணை விறுமா பதத்தினாணையிதே

ஆணை மகனே அசையாதே கண்மணியே சாணாரினக்குலங்கள் தப்பாமலுன்னுடைய தர்மபதி ராச்சியத்தில் தாம்வாழ்வார் சத்தியமாய் வர்மமுனைப்பேசி வம்புசெய்த நீசர்குலம் அமுந்த நரகமதுள் ஆகுவார் சத்தியமாய் குளிர்ந்த மனதுடைய கோவேயென் கண்மணியே மலங்காமல் வாழ்ந்திருநீ வையகத்திலெப்போதும் பெலங்களதுபார்க்கப் பொய்வேசமொன்றனுப்பி மகனே நீசொன்ன மாநூல் முறைப்படியே உகமீதே யார்தான் உகந்திருக்கிறாரெனவே பார்த்துவர வோர்சொரூபம் படைத்து அனுப்புகிறேன் ஏற்றந்தச் சாதிக்கு இன்னமீ ராறுகலை அடுக்கும் வரைநீ அவர்பேரில் நாட்டமதாய் முடுக்கமுடனிந்த உற்ற சிங்காசனத்தில் தவம்போலிருந்து தானாளுகுண்டமதில் ஆளுநீ யரசு ஆண்மை குறையாமல் நாளுவரைமகிழ்ந்து நலமாக வாழ்ந்திருநீ அனுப்பும் பொய்ச்சொரூபம் ஆங்காரமற்றவுடன் மனுப்புகழ நாமள் வையகத்தின்மீதிறங்கி நிச்சித்து வைத்த நினைவானதின்படியே வச்சிருந்த நற்பதியில் வாழலாங்கண்மணியே என்றுரைத்து மாகலியில் ஏற்றபொய்வேசமதாய் குன்று தனிலிருந்து கோலமொன்று தானனுப்ப வந்தங்கு குதித்ததுகாண் வையகத்திலம்மானை நந்தனானென்பான் நாரணர்க்கோன் ராமனென்பான் முந்தச்சுவாமிகட்கு முன்னுதித்துவந்தேனென்பான் செந்தழலாய் நின்றிடுவான் சிட்டுப்போலே பறப்பான் கண்டகண்ட அற்புதங்கள் கண்ணாரக் காட்டிடுவான் பண்டையுள்ள வைப்பைப் பாரறியக் காட்டிடுவான் தீர்க்கமுட னற்புதங்கள் திடீரெனவே காட்டிடுவான் மார்க்கம் பலதணிவான் வைகுண்டமென்றிடுவான் கடலில் நடப்பேனென்பான் கனலிலிருப்பேனென்பான் மடவாரையெல்லாம் மாலையிடுவேனென்பான் இப்படியே கோடி எண்ணிறந்த அற்புதங்கள் செப்பிடுவான் பூமியிலே தேச நருள்மலங்க சூட்சமநேகம் சொல்லொணா வித்தையதாம் தூட்சமறியாமல் தொல்புவியெல்லாமயங்கும் இந்தப் படியாய் இருக்கின்ற நாளையிலே முந்த வைகுண்ட முடிசூடி வாழ்ந்திருப்பாய் சிவனுமுமையாளும் செய்யத்திருமாலும் தவமுனிவர்களும் சரசுபதி மாதுமையும் நான்முகனும் வேத நல்ல மறையோரும் தான்முனிந்தாகமத்தின் தன்மையதின்படியே தொடுத்த கலியன்று தோன்றி குதித்தவரை கொடுத்தகணக்கின்படியே கொல்லக்கலிதனையும் வானமது குழவி மண்பூமியம்மியெனத் தானமது நிரப்பாய்த் தன்னாலிருந்திடவும் உண்டானதெல்லாம் உடன்கரிந்து நிறீடவும் அண்ட ருலகம்வரை அசைந்து முழித்திடவும் மாயவரு மீசர் வைகுண்ட மாமணியும் தாய்தமர்களானச் சத்தி திருவுடனே வைகுண்டரான மகனை நடுநிறுத்தி மெய்குண்டத் தேவர் மிகுகூலமாகிவர முத்திச் செங்கோலும் முழிப்புச்சங்கும் பிரம்பும் பத்தியுள்ள நாரணர்தன் பாலனுட கைக்கொடுத்து ஆகாய மாக அவர்கள்மிக வந்துநிற்க வாகாக நாரணரும் மகனை முகம்நோக்கி நல்ல மகனே நாடுந்தவத்தோனே செல்ல மகனே திருபெற்ற கண்மணியே உந்தனக்கு ஏற்ற உற்ற மனிதர்களும் சந்தமுள்ளத் தேவியரும் தனதுகந்த புற்பூடும் ஆகின்ற பட்சிகளும் ஆன மிருகமதும் பாகுசெறி விருட்சம் பண்பான நற்பதியும் யாதாக முன்னே யாமமிட்ட நூற்படியே நீதான் வருகவென நினைத்துவிடு என்மகனே நினைத்தார் வைகுண்டர் நினைவின் படிபோலே மனத்தயவு கூர்ந்து மலமலென நல்மனுவோர் முழித்தார் வைகுண்டர் மொய்குழலார் மக்களுமே களித்தேயிருந்த கருத்தின் படியாலே பட்சி மிருகம் பலமிருகச்செந்துக்களும் அச்சுதர்க்கேற்ற ஆதி விருட்சங்களும் புதுப்பூமி புதுநிலவு புதுவானம் புதுவாயு குருபூமி யானக் கூண்டதாயகப் பொற்பதியும் பொன்பதியும் நற்றெருவும் பெரியதெப்ப வாவிகளும் அன்பதிய நல்மனுவும் அனுகூலமாயுதித்தார் எம்பெருமாள் முன்னே யாமமுரைத்தபடி வம்பரெல்லாம் மாண்டார் மனதுகந்தோர் தாமுழித்தார் தன்மயுகத்துக்குத் தானேற்ற வஸ்துக்களும் நன்மையுடன் தன்னால் நாடி மிகக்குதித்தார் நல்லயுகத்தர்ம நாடு மிகக்குதித்தால் வல்லவைகுண்டமதாய் வந்தவுடன் வாருமெனச் சொல்லியயைச்சிருத்த சுத்த மிருகமதும் நல்ல மனுவோரும் நற்பறவையானதுவும் விருட்சமதுவும் மேலுகந்த வஸ்துக்களும் வாருமெனச்சொன்ன வகையெல்லாமுழித்தார்

ஏழுயுக நடுத்தீர்ப்பு ஆருமிகவொவ்வாத அரியோனகமகிழ்ந்து சீருகந்த நாதன் திருமால்சந்தோசமதால் ஆகாத்த தெல்லாம் ஆழிதனை வருத்தி வாகாயரித்து வன்னரகில் தள்ளிமிகச் சுத்த யுகத்தைச் சுத்தி வருத்துமென்று கற்றைக் கங்கையாட்குக் கரியோன் விடைகொடுத்தார் விடைவேண்டி வாரி விமலன் மொழிந்தபடி கடல்வாரி செய்து கமலயுகஞ்சுத்திபண்ணி கர்த்தனரி நாரணரைக் கடலுமிகத் தெண்டனிட்டு முத்தனரி நாதன் முன்னுரைத்த நீசனெனக் குறோணி அவனுயிரைக் கொண்டுவந்து முன்னிறுத்தி சுறோணிதப் பாவி சொல்லடா உத்தரங்கள் ஏழு பிறவி இதுவரையுஞ்செய்துவுன்னை வாழுநீ யென்று வரமருளிப்பார்த்தேனே இக்கலியில் நானும் இரப்பனைப்போலிருந்து மிக்க உலகறிய வெறிப்பேயையுமெரித்துத் தண்ணீரால் மானிடர்க்கு சகலநோய் தான்தீர்த்து புண்ணியமாய்த் தருமம் புரிந்து மிகவருளிக் காணிக்கை கைக்கூலி காவடியும் நிறுத்தி ஆணிக்கமாக அம்புவியில் யாவரையும் ஒருதலத்தில் விட்டு உற்றபுத்தி சொன்னேனே இருபுத்தியால் நீயும் என்னைப் பிடித்தடித்தாய் கட்டியென்னைப் பேயனெனக் கடுவிலங்கில் வைத்தாயே அட்டிசெய்ய வில்லையல்லோ ஆண்டியாய் நானிருந்து பண்டாரமாகப் பார்மீதிலன்பரிடம் நன்றாகப்பிச்சை நான்வேண்டியே குடித்து தர்மமாயல்லோ சனங்களுக்கு ஞாயம்செய்தேன் வர்மமாயென்னை வந்தடிக்க ஞாயமுண்டோ அல்லாமல் முன்னே அரனிடத்திலாணையிட்டு எல்லாமினிமேல் இராச்சியத்தில் யாதொருவர் பண்டாரமென்று பாரறிய வந்தவரை அண்டேனவரை அட்டிமிகச் செய்யேனென்று ஆண்டிகளை நானும் அட்டிமிகச் செய்ததுண்டால் கூண்டிறந்து போவோம் கொடிப்பிதிரானதெல்லாம் சேனைத் தளமிழந்து செல்வமது தானிழந்து ஏனைக் குழலோடே என்கிளைகளெல்லோரும் தன்னாலிறந்து சளநரகம் போய்விடுவோம் முன்னாள் நீசொல்லி மொழிந்தாணையின்படியே பண்டாரந்தன்னைப் பதைக்க விடாதபடி அண்டாமல் நீயும் அடித்ததினால் ஞாயமென்ன சொல்லடா நீதான் சொன்னமுறைப்படியே கல்லடா நீதான் கவிழ்ந்து நிற்கும் ஞாயமென்ன பாவிநீ யேழ்பிறவி பார்மீதில் தோன்றியதில் ஆவியறிய அனுப்போலும் நன்மையது செய்ததுண்டோ சொல்லு செவியுனக்குக்கேட்கலையோ மைதரியயிப்பிறவி மிகுஇரப்பன் போல்நானும் எளிய குலத்தில் இகாபரனே தஞ்சமென சுழிமுனையை முத்தி சோமனருள் உள்ளிருத்தி உடுக்கத்துணிகளற்று உண்ணவூண் தானுமற்று படுக்க இடமுமற்றுப் பரமார்த்தமாயிருந்து சாதிபதி னெட்டதுக்கும் யாமமுறைப்படியே நீதியுடன் தண்ணீரால் நொம்பலங்கள் நீக்கிவைத்தேன் நீயறிந்துங்கண்டும் நீணிலத்தோர் தாமறிய வாயிலிடும் வெற்றிலைக்கு மனுவோர் தடவுகின்ற சுண்ணாம்பானாலும் தொட்டுநீ தந்தாயோ எண்ணாமல் நீயும் என்னை மிகப்பழித்து பாவிநீ என்னைப் பரிசுகெடத்தானடித்து மேவிநானிட்டிருந்த வெற்றிசுரைக்கூடதையும் உடைத்துத் தகர்த்தாயே உற்ற கந்தைக்காவியையும் மடத்தனமாய் நீயும் வலித்துக் கிழித்தாயே தோளிலிடும் பொக்கணத்தைக் கீழ்ப்போட்டுஎன்னை தூளிபட வுதைத்துத் துண்டுதுண்டாய்க்கீறினையே ஐயோ நீசெய்த அநியாயஞ் சொல்லவென்றால் வையமீரேழும் வழிந்து நிரம்பிடுமே பத்தினியாள் பெற்ற பாலதியச் சான்றோர்கள் மெத்த அவர்நன்றாய் விளங்கிருக்கணுஞ் சிவனே ஆடையில்லாமல் அலமாந்திருக்கையிலே நாடதிகமான நல்லபட்டு நீராளம் தங்கச் சரிகைத் தலைப்பாக்குல்லாவுடனே மங்களமாயென்னை வந்தெடுத்துத்தானுடுத்தி பாலும் பழமும் பருந்தேனும் சர்க்கரையும் மேலும் நவநிதியம் வேண்டும் பலகாரம் அன்னங்காய் சொர்ணம் அன்பாகக்கொண்டுவந்து பொன்னப்ப நாரணரே பெற்றவரே அவர்கள் வாயிலெடுத்திட்டு வளமாக என்றனக்குச் சாயத்தலையணையும் சரிகைத்தொட்டில் மெத்தைகளும் பாதங்கீழ்க்கொள்ளாமல் பாலதியச்சான்றோர்கள் ஈதலிரக்கமுடன் எடுத்தென்னைத் தோளில்வைத்து போற்றி மகிழ்ந்து பூமெத்தை மேலிருத்தி ஏற்றிப்பலகாலும் என்சொல் மிகக்கேட்டு தாங்கியிருந்த சான்றோர்களின்பெருமை நாங்களுரைக்க நாடுமிகத் தாங்காதே என்னென்ன பவிசு எமக்கவர்கள் தாமீந்து பொன்னம்பலமீதில் புகழ்ந்துமிக வாழ்வாரே பாவிநீ யென்னைப் பரிசுகெடத் தானடித்து ஏவிநீ விட்ட ஏவலாளிப்போதெங்கே ஆணுவங்களெங்கே உன் ஆனைப்படைகளெங்கே பூணுகின்ற தங்கப் பொன்னாபரணமெங்கே விஸ்தாரமெங்கேநீ வீற்றிருக்கு மேடையெங்கே சுற்றார் கிளைகளெங்கே தோகைமயிலார்களெங்கே குதிரைத்தளங்களெங்கே கோட்டையெங்கே வாசலெங்கே சதுராயணிவகுத்தத் தாண்டும் படைகளெங்கே தேரெங்கேயுன்றன் சிங்காசனங்களெங்கே ஊரெங்கே யுன்றன் ஒழுங்குதளச்சேனையெங்கே மாடமெங்கே கூடமெங்கே மணிமேடையாரமெங்கே தோடமெங்கே யுன்றன் தோழரெங்கே சூரமெங்கே ஆயுதங்களெங்கேவுன் அம்புதடிக்காரரெங்கே வாயுரங்களெங்கேவுன் வாயில் காப்போர்களெங்கே துட்டமெங்கே யட்டியெங்கே துரைத்தனங்களானதெங்கே பட்டமகங்காரமெங்கே பருங்கிள்ளாக்கானதெங்கே மாடெங்கே நீதான் வளர்த்த மிருகமெங்கே ஆடெங்கே யுன்றன் ஆடரம்பைமார்களெங்கே வேடிக்கை யெங்கே நீ விதித்த கணக்குமெங்கே ஓடியுலாவும் உற்றசாரட்டுமெங்கே வண்டியெங்கேயுன்றன் வாழ்வெங்கே மாட்சியெங்கே சண்டிப்பயலேவுன் தாடாண்மையெங்கேசொல் இத்தனையுந்தோற்று இப்போ நரகமதில் செத்திறந்து போகவுன் தலையில் விதியாச்சே உன்விதியால் நீயும் உயிரழிந்தாயல்லாது என்னதிகாரத்தால் ஆக்கினைகள் செய்கிறேனோ உன்னால் நீமாள ஊழிவிதியானதல்லால் தன்னாலே தான்கெட்டுத் தான்போவாரென்றபடி உன்னாலே நீயும் உயிரழிந்தாய் மாபாவி ஒருபிறவி தன்னிலுன்னை உயிரழிக்கக்கூடாதோ கருவருளும் நாதன் கற்பனைக்கேராதெனவே பிறவியே ழுன்னைப் பெரும்புவியிலே படைத்து திறவிப்பொருளோன் சிந்தை மிகஅறிய உகத்துக்குகங்கள் உத்தமனாய் நான்பிறந்து மகத்துவமாயுன்றன் மனதைமிகப்பார்த்தேன் எட்போலே தர்மம் ஈதலிரக்கமுடன் நட்பேதுங்கண்டிலனே நன்றிகெட்ட மாபாவி ஏழு பிறவியிலும் என்பேரு சொல்வோரைக் கோளுசெய்தவரைக் கோட்டிக்கொண்டேயடித்து சிறைக்காவல் தன்னில் திட்ட விலங்கில் வைத்து அறையானது கொடுத்து அட்டிமிகச் செய்ததல்லால் இரக்கமுடன் தயவு இல்லையே உன்னிடத்தில் அரக்கர் குடும்பம் ஆனதிலாலுன்னுடைய மனதிரக்க மாகாது மாபாவி நீகேளு முன்னாள் குறோணி உதித்துவந்த மூன்றுயுகமும் தன்னாலே நீபிறந்து தாண்டியதுகளித்து பின்னாள் பிறந்தாய்ப் பெருங்கிறேதாயுகத்தில் அந்நாளில் நீங்கள் அண்ணனென்றும் தம்பியெனும் பிறந்தீர் படைகள் பெருத்தசனக்கூட்டமுடன் சிறந்த மதிலும்பெரிய செல்வமாயாண்டிருந்தீர் ஆண்டிருக்கும்போது ஆங்காரந்தான்மீறி தாண்டி பதமறந்து தானவரையும்பிடித்து தெய்வமட வார்களையும் சிறையில் மிகப்போட்டு மெய்வரம்பு விட்டு மேலோகத்தாரையெல்லாம் ஊழியங்கள் கொள்ள உனக்கு மனதாகி நாளிலவரை நட்டிமிக அட்டிசெய்து வம்புசெய்து நீயும் வானலோகம்வரையும் அம்புவியெங்கும் உன் அநியாயமே மீறி ஈரேழுலகும் இராமாராமாவெனவே பாரேழு தேசம் பண்பாய் முறையமிட முறையமிட்ட சத்தம் உடைய பரனறிந்து இறையவரும் நம்மிடத்தில் இந்த அநியாயமதை மாற்றிவைக்க வென்று மலரோனெனையனுப்ப பார்த்துன்னை நானும் பழைய வரமுந்தேர்ந்து ஆயுதத்தாலம்பால் அஞ்சு முகத்தாலும் மாயும் படியே வகையில்லையென்று ஆறு முகமாய் ஆனபுகழ் சத்திதனை வீறுடனே நல்ல வேலாயுதமெனவே எடுத்தே சொரூபம் யானுனக்கு நல்லபுத்தி விடுத்தேயுரைக்க மிகுதூதனையனுப்பி சொல்லியுங்கேளாமல் சூரப்படைகூட்டி கொல்லுவேனென்று கூண்டப் படையோடு சண்டைக்கு நீயும் சமைந்துவந்தாயென்னோடு கண்டேயுனைநான் கருணையோடு புத்திசொன்னேன் தேவர்களை விட்டு தெய்வமடவாரை விட்டு மூவர்களை நெஞ்சில் வைத்து உகமாளு என்றேனே அப்போது நீயும் ஆக்கிரமந் தன்னாலே இப்போது பேயாண்டி யார்கேட்பாருன் பேச்சை பிச்சைக்காராவுன்சொல் பேருலகமாளுகின்ற செஞ்சொல்வள ராசனுக்குச் செல்லாது போடாயென்றாய் என்னோடேபோருக்கு எதிராக வந்தாயென்றால் உன்னோடேயுள்ள உற்ற திறத்தாலே சண்டைக்கு வாடா தாட்டாண்மைப் பார்ப்போமென்றாய் விண்டதெல்லாம் பார்த்து வேலாயுதமெடுத்து அப்போது வேலால் அறுத்தேனானுன் சிரசை முப்போது உள்ள முழுக்கிளைகளத்தனையும் சேரக்குலமறுத்து சேனையெல்லாமழித்து கோட்டையழித்துன் குவலயத்தைத் தானழித்து கேட்டேனானுன்னோடு கெறுவிதமேனென்று சத்தி வேலாலே சத்தியென்னைச்சங்கரித்தாள் புத்திகெட்ட ஆண்டி போதுமோ என்னைவெல்ல என்றாயே பாவி ஏற்றயுகமன்றழித்து அன்றேயுனையும் அதிலோர் பிறவிசெய்தேன் அந்நாளுன்பேர்தான் அசுரன் இரணியனாம் துன்ஞாயமாய்நீ தோன்றி முடுக்கமதாய் அரிநமோ வென்ற அட்சரத்தையுமாற்றி மதியாமலுன்பேரை வழங்கினாயவ்வுகத்தில் ஆதி சிவமறிந்து அசுராவுனையறுக்க மாதிரிபோலரிபத்தனை வகுத்தாரேயுன்மகவாய் மகவாயுனக்கு மாயவுருவெடுத்து உகமேழறிய உதித்து வளருகையில் பள்ளியிலே சென்று படிக்கின்ற நாளையிலே தெள்ளிமையாயுன்பேரைச் செப்பென்றான் வாத்தியானும் உடனே அவன்மாறி ஒருஅசுரன் பேரதையும் தடமே லுரைத்தால் தருணமது காத்திடுமோ படைத்த குருவின் பருநாமஞ்சொன்னதுண்டால் சடத்தை மிகக்காக்கத் தருணமுதவி செய்வார் ஆனதாற் பெரிய அரிநமோ அல்லாது மானமில்லாப் பாவி மாபாவிச் சூரனுட ஏற்ற பேரான இரணியாய நமோவெனவே சாற்றக் கூடாது தானிதுவே சொன்னவுடன் வாத்தியுன்னோடு வந்துவளங்கூறிடவே பார்த்தவனை நீயும் பற்கடித்துச்சொல்லெனவே இறுக்கி நெருக்க இசையாமல் அவன்மாறி உறுக்கிப் பெரியோன் உற்ற அரியோன்பேரை சொல்லவே நீயும் சொன்னஅரியெங்கேஎன்றாய் வல்லப் பொருளான மாய அரியோனும் எங்கெங்குமாகி எவ்வுயிர்க்கும் தானாகி அங்கெங்குமாகி அளவுக் களவாகி நிரந்தரமாயெங்கும் நிறைந்த சொரூபமதாய் பரப்பிரம்மமாய் நிற்பார் பாரஅரியென்றனனே கோணி நீவாடி குருவென்ற உன்னரிதான் தூணிலுமுண்டோ சொல் என்றவனை நீபார்த்து கேட்க உண்டெனவே கிறுங்காமலவன் சொல்லிடவே வாட்கணையால் நீயும் வாயில் நடையில்நின்ற தூண்பேரில் வெட்ட நரசிங்கமாய் நான்குதித்து வீண்கொண்டப் பாவியுனை வெய்யோனடைவதிலே இடைநடையில் வைத்து என்றன் கைநகத்தால் குடல்நெளியக் கீறிக் கொன்றேனானுன்னையுமே உயிர்நெகிழுமுன்னே உன்னுடைய கண்முன்னின்று செய்த யுத்தத் திறன் சொன்ன அப்போது உன்னாலேயென்னை உயிரழிக்க ஏலாது முன்னாலுன்னகத்தில் உற்றமலைப்பத்ததனை சேர்த்துப் பதித்துச் செய்ய நகமாக்கிக் கீற்றுநீ செய்தாய் கெறுவிதமாயல்லாது ஏலாது உன்னாலென்று இயம்பவுடனான்மாறி மேலாகப் பின்னும் விளம்பினதை நீகேளு பத்து மலையைப் பருந்தலையாயுனக்கு எத்திசைகள் மெய்க்க ஏற்றதிகக்கைத்திறமும் கைத்திறமும் வில்திறமும் கணையாளி வாள்திறமும் புத்திரருங்கூடப் பிறப்போர்கள் தந்திறமும் மெத்தப் பவிசும் வேண்டும் படையோடே கொற்றவனாயுன்னைக் குவலயத்திலேயருளி உன்னிடுக்கத்தாலே ஒருராமபாணமதால் கொன்னுன்னையன்று இன்று கூறுமொழி கேட்பேனான் என்றே யுனக்கு இருந்தவுயிருமழித்து அன்றே கிறதா யுகமுமழித்துமிகப்பின்னுந் திரேதா பெரும்புவியில் இலங்காபுரி தன்னில் பாவிநீ ராவணனாய் வாய்த்ததம்பி தங்களொடும் சேனைப் படையுடனே செல்வரோடு நீபிறந்து வானலோகம்வரைக்கும் மாபாவியாண்டனையே ஆண்டிருந்து மல்லாமல் ஆதி சீதாலட்சுமியை மாண்டிறந்து போங்காலம் மாபாவி நீயவளை கொண்டுபோயுன்னுடைய கோட்டையுள் வைத்தனையே மன்றுதனில் நானும் மாதைவிடு வென்றுசொல்லி வேண்டுகின்ற புத்தி விதவிதமாய்ச்சொன்னேனே கூண்டுன்றன் தம்பி கும்பன் விபீஷணனும் நாராயணனுடைய நல்ல சீதாலட்சுமியை ஆராலே கூடும் அருஞ்சிறையில் வைத்திருக்க பாவி நீ வம்பால் பழிக்கிரையாய்ப்போகாதே கூவுமொழி சீதைதனை கோட்டைவிட்டனுப்பிவிடு மாதை விடாது வம்புசெய்தாயானாக்கால் பாதகா வுன்னுடைய பவிசெல்லாம் போகுமென சொன்னதம்பிமாரைச் சொல்லால் மிகத்துரத்தி சின்னஞ் சிறுவன் தசரதனார் பாலனுட பெண்ணவளாஞ் சீதையென போகச்சொல்லென்றனையே மண்ணாள வேணுமென்றால் வணங்கிப் பணியென்றும் அல்லாதே போனால் அலக்கழிவாகுமென எல்லாம் பெரிதாய் என்னோடுரைத்தாயே பார்த்தால் சிறுவன் பைங்கிளியாள் தன்புருஷன் காற்றானதிற்பறக்கும் கரிய துரும்பெனக்கு அவனுடைய பெண்ணாம் ஆதிசீதாலட்சுமியாம் இவளுடையப் பேரால் இராச்சியங்கேடாயிடுமாம் ஆமோடா நீங்கள் அரக்கர் குலமோடா போமோடா என்றன் பூமுகத்தில் நில்லாதே என்றே யெனையும் இழப்ப மிகப்பேசி அன்றேயவர்பேச்சை அல்லவென்று தட்டிவிட்டாய் அப்போதவர்கள் அன்பாக என்னுடைய செப்போடு வொத்தத் திறமெல்லாஞ்சொல்லிடவே சின்னக் குழந்தையென்றுஞ் சீதையொரு பெண்ணெனவும் மன்னவனேயுன்மனதில் வைத்துமிகக் கொள்ளாதே நாட்டுக்குடைய நாரணரே ராமனென்றும் கூட்டுக் கிளியானக் கோதைசீதாலட்சுமியாள் முட்டாளாவுன்றன் முழுநீசப்புத்தியினால் அட்டாள பூமி அடக்கியரசாளுகின்ற பகுத்தைக் குலையாதே பழிக்கிரையாய்ப் போகாதே தொகுத்த வுரைபோலே சீதைதனை விட்டுவிடு என்றுரைத்தார் பின்னும் இருவருன் தம்பியர்கள் அன்றுவுனக்கு அதிகக்கோபமுண்டாகி என்னுடைய கண்முன் இப்போது நீங்கள் நின்றால் உன்னிருபேர் தங்கள் உற்றச் சிரசதையும் அறுத்து வதைப்பேன் வனமதிலே போயிடுங்கோ மறுத்து உரையாமல் வனமதிலே போயிடுங்கோ என்றாயே நீயும் இருவரையு மப்போது அன்றேயவர்கள் அயர்ந்து மிகவிருக்க அப்போது என்னுடைய ஆதிசீதாலட்சுமியை நற்போடுயர்ந்த நாயகியை நான்தேடி அனுமன்தனையும் அங்கே அனுப்பிவைத்து தனுவான வாளி தார்குழற்குத் தானீந்து உன்கோட்டை வாசலிலே உடனேநான் வந்துநின்று என்கூட்டி லான ஏற்ற சீதாலட்சுமியை விடுநீயென்றேனே வீணாய் கேளாமல் படுவதறியாமல் படையெடுத்தாயென்னோடு அப்போதுன் தம்பி அன்பான விபீஷணனும் நற்போடு என்னை வந்துமிக நவ்வியவன் பொல்லாத பாவியுடன் பிறந்ததோசங்கழித்து எல்லாம் பொறுத்து எனையாண்டு கொள்ளுமென்றான் நல்லதுதானென்று நானவனையுமேற்றுப் பொல்லாத பாவியென் பெண்ணைவிடு என்றேனே பாவிநீ கேளாமல் படையெடுத்து வந்தனையே தாவிநீ விட்டச் சரங்களெல்லாந்தடுத்து என்கையினாலே எடுத்து வொருபாணம் சங்கையுடனெய்து தலையறுத்தேனுன்றனையும் உன்னாலுன்படைகள் உயிரழிந்து மாண்டபின்பு முன்னாளுரைத்த மொழிகேட்டே னுன்னோடு அப்போது பாவி அதற்கேது நீயுரைத்தாய் இப்போது என்னுடைய ஏற்றதம்பி தானொருவன் உன்னோடு சேர்ந்து உயிர்ப்பெலங்கள் தானுரைத்துச் சொன்னதாலென்னுடைய சிரசறுத்தாயல்லாது ஏலுமோ ராமா இழப்பம் பேசாதேயென்றாய் மாலும் நானப்போ மகாகோபமாய் வெகுண்டு சுட்டிப் பயலே சுணைவந்து தில்லையென்று மட்டிப்பயலே மாறிப்பின்னேதுரைத்தேன் உன்றனுட தம்பி ஒருவன்மிக வந்தெனக்கு சிந்தையுற்ற உன்பெலங்கள் தெரியப்படுத்தியல்லோ கொன்றாய்நீ யென்று கூறினாயின்னமுனை இன்னம் பிறவி ஏற்ற துரியோதனனாய் துவாபர யுகத்தில் தோன்ற உன்னை அருளி பவராய் உனக்கு பக்கத்துணை நூறாக்கி பஞ்சவர்களென்று பாரில் பிறக்கவைத்து வஞ்சமில்லா பஞ்சவர்க்கு வாயமுடன் நானிருந்து இன்றுரைத்த பேச்சு யான் அன்று கேட்பேனென அன்றே உன்னுடைய அன்ன சுற்றம் வேரறுத்து உன்னுயிரையுமழித்து யுகதர்மம் நிலை நாட்டி என்னுடைய லக்ஷ்மியை யான் மீட்டு என்னுள் வைத்து உற்ற திரேதா யுகமழித்து உந்தனையும் சுத்த துவாபர யுகத்தில் தோணவைத்தேன் பிறந்தாய் துரியனாய் பிறப்பொரு நூறோடு அறத்தால் பெரிய ஐவர்களும் அங்கு உதித்தார் பஞ்சவரை சூதாடி பாழ்வனத்தில் துரத்திவிட்டாய் வஞ்சமில்லா பஞ்சவர்க்கு வாக்குப்படி பாதி ஈய ஈனமில்லா பஞ்சவர்க்கு இடம்கொடுக்க மறுத்துவிட்டாய் மானமுள்ள ஊரு ஐந்து மகிழ்ந்து கொடு என்றேனே அப்படியும் இல்லை என்றாய் அன்று நானும் கெஞ்சி எப்படியும் குடியிருக்க ஐந்து வீடு ஈயச்சொன்னேன் அன்று என்னை பேசி அடிக்கவும் துணிந்தாயே பின்னும் நீ என்னோடு பேசிய மொழி கேளு பதினெட்டு நாளு படைப்போர் தானும் வைத்து எதிர்த்தெங்களைக்கொன்று இடமாளு என்றாயே அப்படி உன் தம்பிகள் ஆன பஞ்ச பாண்டவரை இப்படியே எதிர்த்துபோர் செய்திட சொன்னேன் நான் வாலப்பெருமாள் தம்பி வாய்த்த வீமன் தானும் தூலக்கதை எடுத்து தொடை முறித்து வீழ்த்தினனே சங்கரித்து உன்னை சகுனி இழுக்கையிலே பங்கமாய் முன்னுரைத்த பாங்கு மிக கேட்டேன் அப்போது நீயும் அகம் மகிழ்ந்து கொள்ளாமல் என் தம்பி வீமன் தன் பலத்தால் வதைத்தான் என்றாயே நீயும் யான் உரைத்ததை கேளு உன்னை இனி தக்சனாக உலகில் பிறவி செய்து பெண்ணால் இறக்கவைத்து பேசினதை கேட்பேன் நான் என்று உன்னை நானும் அன்று சங்காரமிட்டு அன்றே தக்சனாய் அமைத்தோமே உன்னை முன்னம் பகையை வைத்து உற்ற தேவாதிகளை அன்னுகத்தில் பிடித்து ஆன விலங்கில் வைத்தாய் அப்போது தேவரெல்லாம் அச்சுதர்க்கு முறையமிட்டார் முப்போது காளிதனை முறை போல் விளிக்கவிட்டு என்மக்கள் சான்றோரை இயல் படையாய் கூடவிட்டு உன்னூரில் காளி வந்து உன்னை சவட்டி போட்டாளே முன்பு வந்து நானும் முன்னுரைத்த முறை கேட்டேன் அன்று நீ என்னோடு அறைந்த மொழி கேளு ஆணும் பெண்ணுமில்லா அலியாம் காளி கொன்றாள் வீண் மொழி பேசாதே என வீறு மொழி சொல்ல நானும் தன்னால் பிறந்து கலியால் தன்னால் நீ அழிவாய் என்றேன் அன்று சொன்ன உயரமாய் ஏற்ற சிவனும் படைத்தாரே ஆதி கரு மூலம் அண்ட பிண்ட குளிகை எல்லாம் நீதியுள்ள மாயன் சக்கரமும் நீ வேண்டி போகையிலே தேச இரப்பனுக்கும் சிறுக நீ ஈ என்றும் ஈயாதே போனால் சண்டைக்கு வா என்றேனே அப்போது நீயும் அன்று உரைத்தது கேளு இப்போது உன்னோடு இயல்பாக சண்டை இட்டால் பெண்டு சிரிப்பாள் பேயா நீ போடா என்றாய் பண்டாரமென்று பாருலகில் வந்தவரை அண்டேன் அமரிடேன் என ஆணையிடு போறேன் என்றேன் நன்று நன்று என்று நீ நம்மோடு உரைத்தது கேள் ஆராரு பேரதிலே நான் ஆணையிட வேணும் சொல்லு பாராரும் படைத்த பரமசிவன் பேரதிலும் வீரமான விஷ்ணு பிரம்மாதி பேரதிலும் காரணமாய் நீ வேண்டும் கடுவரங்கள் பேரதிலும் மண்ணதிரும் குளிகை மாறாட்டப் பேரதிலும் பெண்ணிவள் பேரதிலும் ஆணையிட்டு தா என்றேன் அப்படியே நீயும் ஆணையிட்டு தந்தாயே இப்படியே ஆணையிட்டு இடக்காக நீ அடித்தால் பெண் தோற்று நீயும் பெற்ற வரமும் தோற்று மண்தோற்று நீயும் மடு நரகம் போவேன் என்று அந்நாள் நீ எனக்கு ஆணையிட்டு தந்தபடி இந்நாள் வரை இடறு செய்யாது இருந்தாயோ தன்னால் பிறக்கவைத்து தன்னால் அழிவாய் என்று சொன்னேன் நானுன்னை சொன்ன மொழிப்படியே உன்னால் குதித்து உற்ற கலியனென இந்நாள் வரைக்கும் இருந்தாயே பார்மீதில் பார்மீதில் நானும் பரதேசிப்போலிருந்து போரேதுமில்லாமல் பொறுதியுடனிருக்க கர்ம வயசுனக்குக் காலஞ்சரியாகி வர்மம்வந்து மூடி மாண்டாயே தன்னாலே முன்னுனக்குத் தந்த முடியு மென்சக்கரமும் மன்னுகந்த நல்ல வரங்கள்மிகத்தத்துவமும் எல்லாம் நீயிப்போ என்முன்னெடுத்துவைத்து பொல்லாதவனே நகரம் புக்கிடுநீ யென்றனராம் மாறியுரைக்க வாய்மொழிகளில்லாமல் ஊறிக் கலியன் உடக்கடித்து வைத்தனனே எல்லா வரமும் வைத்து என்றன் முடியும்வைத்து பொல்லாப்பு மானதொருப்பொய்களவுமுருட்டும் தந்திரமாஞாலத் தத்துவங்களானதுவும் அந்திரமதான அன்னீத வஞ்சனையும் மாய்கை பலதும் வளக்கோர வாரமதும் சாய்கை பலதும் சர்வபொல்லாப்பானதுவும் என்னோடு கூட யானு மதுகூட வன்னகரம் புக்கிடுவோம் என்றுவரம் வைத்தனனே வைக்க அவனுடைய மாய்மால மாய்கையதும் பொய்க் கலியனுயிரைப்பொதிந்துத் திரையாக ஆயிரத்திரு நூறு அணியாய்ப் பவஞ்சூடி தீயிரத்தமான தீராதரு நரகில் சுற்றியெடுத்துத் தூக்கிக்கொண்டேயவனை இத்தனை நாளும் நம்மை இரட்சித்த இராசனென்று மாய்கையெல்லாங்கூடி வளைந்தவனைத் தூக்கி பேயலகை வாழும் புழுக்குழிக்குள்ளாக முக்கி நிமிர்ந்து மிதக்காமல் மாய்கையெல்லாம் தாக்கியிருக்கத் தடதடெனச்சேடனது நிரந்ததை மூடி நிரத்தியதேயம்மானை

தர்மயுகம் உதயம் பரந்தந்த சேடன் பாரைநிரப்பாக்கியபின் உற்ற வைகுண்டர் உறுசங்கூதினரே வெற்றியாய்ச் சங்கு விரைவாக ஊதிடவே எத்திசையிரேழுலோகம் இந்தசங்கோசைமிக கற்பு நெறியானக் கடிய பலவகையும் நல்லோர்களான நாடு மனுவோரும் நல்பூமி நல்விருட்சம் நல்மிருகமூர்வனமும் கீழ்மேல் நடுவுங் கிரணமண்டப மூன்றில் நாள்மேல் பெரிய நல்லவகையானதெல்லாம் தன்மமுதல்நீதம் தவசு நிலைமைமுதல் நன்மை பலதும் நாடிமிக வந்ததுவாம் எல்லாம் வைகுண்டர் இட்டசத்தமீதில்வந்து நல்லாகக் கண்டு நாரணரைத்தான் போற்றி வைகுண்ட சுவாமி வரவேணு மென்றுசொல்லி மெய்கொண்ட ஞான மிக்கத் தவம்புரிந்தால் வந்துசத்த மொன்றில் வரவழைப்போம் என்றுசொன்ன செந்துயிர்க் காக்கும் சிவகுண்டம் வந்தீரோ தன்ம வைகுண்ட சுவாமிவந்தார் என்றுசொல்லி நன்மை பலசெந்தும் நன்னதிகப்பட்சிகளும் பசுமைக்குணமான பலமிருகவூர்வனமும் கசுவிரக்க மானக் கற்றாவின் தன்னினமும் நால்வேத நீதம் நாடுகின்ற சாஸ்திரமும் சில்வாடை பிச்சி செந்தாமரைமலரும் தங்கநவரத்தினமும் சமுத்திரத்து நல்வகையும் கங்கைக்கண்ணாளும் கமலப்பூவாணிமுதல் தர்ம மதும் போற்றி சுவாமி யெனத்தொழுமாம் வர்மமது மாற்றிவைத்த வைகுண்டர் பதம் தொழுமாம் முழித்த மனுக்களுக்கும் மொய்குழலார் தங்களுக்கும் களித்தே விழிஞானக் கண்ணுமிகஅருளி நல்ல மனுக்களுக்கு நாலுவரமுங்கொடுத்து செல்ல மனுக்கள் தேகமது பொன்னிறமாய் கல்வித் தமிழ்ஞானக் கலைக்கியானமுதல் நல்விச்சிறப்பாய் நாடியவர்க் கீந்து தெய்வ மடவார் வரவழைத்தேழ்பேர்க்கும் பெற்ற மதலையெல்லாம் பிரமாணமாய்த் தெரிந்து தத்தியாயேழ்பேர்க்கும் தரந்தரமாய்த் தானீந்து வைகைதனிலிறந்த மக்கள்வரை நாரணரும் தையலவரேழ்பேர்க்கும் தான்தெரிந்தீந்தனரே ஏழுபேர்க்கும் மதலை இனமினமாய்த் தான்கொடுத்து வாழுங்கோ புவியில் வயதுபதினாறெனவே எல்லோரும் நன்றாய் இருந்து ஓரினமாய் நல்லோராய்ச்சாகாமல் நீடூழி காலமெல்லாம் ஆணுபெண்ணுடனே அதிகப்பல பாக்கியமும் காணக்காண நீங்கள் கௌவையற்று வாழுமென்றார் பட்சி பறவை பலசீவ செந்துகட்கும் அச்சமில்லாப்புவியில் அல்லல் வினையில்லாமல் பெற்றுப் பெருகிப் பிதிரெல்லாம்ஓரினம்போல் ஒத்து மிகக்கூடி ஒருதலத்து நீர்குடித்து வாழ்ந்திருங்கோ தர்ம வையகத்திலென்றனராம் சார்ந்திருங்கோ வென்று தாமன் விடைகொடுத்தார் நல்லபூச வாச நளிர்விருட்சமானதுக்கும் அல்லலகற்றி அமர்ந்துமிக வாழுமென்று தில்லையாடும்பெருமாள் சொன்னாரதுகளுக்கு புற்பூடுங் கூடிப் பொருந்திமிக வாழுமென்று நற்பூடதற்கு நவின்று விடைகொடுத்தார் அசையாமல் வானம் அதுநேர் நிலவுடனே பிசகானதில்லாமல் பொழுதுமிகச்சாயாமல் நேராக வாழுமென்று நெடியோன் விடைகொடுத்தார் வருணனுக்கும் நல்ல வாக்கு மிகக்கொடுத்து தருணமதுபார்த்து சாற்றியிரு என்றுரைத்தார் வாயுவதற்கு மரைபோல் வழங்கெனவே வீசு புகழ்நாதன் விடைகொடுத்தாரம்மானை நீதமது மூன்றும் நிலையாக நில்லுமென்று சீதக் குருநாதன் சொன்னாரதுகளுக்கு மானுவதர்ம வரம்பு தவறாமல் நானுபதேசம் நவின்றதுபோல் நில்லுமென்றார் பூமகள் வாணி பொருந்திக்கலைபுரிந்து சீர்முக தர்மச் சீமையிலும்வாழ்ந்து மகிழ்ந்திரு மென்று மாயனருள்புரிந்தார் குவிந்து மலர்மகளும் கொண்டாடிக்கொண்டிருந்தாள் கங்கை முதலாய்க் கனகரத்தினாதிகளும் சங்கையுடனீங்கள் தன்னால் துலங்கிமிக வாழுவீரென்று வரமுமிகக்கொடுத்து என்னென்ன பாக்கியங்கள் எல்லாமிகத்தழைத்து பொன்னம்பலம்போல் பொருந்திமிக வாழுமென்று நல்ல வகையெவர்க்கும் நாடி மிகக்கொடுத்தார் வல்ல புவிக்கு வாழ்வு வரமுங்கொடுத்து நல்ல வைகுண்டர் நாராயணர்மகற்கு வல்ல மகற்கு வாய்த்த முடியுஞ்சூடி செல்ல கலியாணம் செய்யவேணுமெனவே வைகுண்டரான வாய்த்தகுருநாதனுக்கு மெய்குண்டரான விமலக்குருநாதனுக்கு நாதக்குருவான நாராயணமணிக்கு சீதமங்கை மார்கள் தேவிதெய்வ கன்னியரை கன்னியரை நன்றாய்க் கலியாணமும்புரிந்து மன்னரவரவர்க்கும் மாலையுடன்புரிந்து பொன்னம்பலர்க்கும் பெரிய பொருளதுக்கும் தன்னம் பெரிய சதாபிரமனானவர்க்கும் நாதன்மார்க்கெல்லாம் நல்ல மணம்புரிந்து மாதவர்களான வாய்த்ததேவாதிகட்கும் ஆதவ நாதன் அரிகேசவன் தனக்கும் இப்படியே மங்களங்கள் எல்லோருங் கொண்டாடி செப்பமுள்ள நாயகிமார் சேர்ந்தங்கொருப்போலே சரசுபதிமாது தண்டரள சுந்தரியும் விரச குழலுமையும் வீரமகா லட்சுமியும் வாய்த்த பகவதியும் வாழுகின்ற பார்வதியும் ஏற்றபுகழ் தெய்வ இளங்குழலாரேழ்பேரும் வள்ளி தெய்வானை வாயீசொரி யுடனே தெள்ளிமையாயுள்ளத் தேவி பராபரையும்

இந்தமாதர்கள் வந்தபோதிலே சிந்தை ஆகியத்தெய்வமாதர்கள் முந்தநாங்களுமீன்றபாலரை முற்றுமாதவம்போல வளர்த்திடும் சிந்தர்மாமணி தெய்வநாயகி தேவி காளி வராகி சுந்தரி இந்தமங்களமானதிற்கண்டிலம் எங்கள் நாயகா என்றவர் போற்றினார்

போற்றுமாதரைப்பார்த்து நாதனும் போத மாமென வரமிது கூறுவார் சாற்றுமாதரே தையலேழ்வரே சந்தமாகிய அந்தரியானவள் பார்த்துன் மைந்தரைக் காத்திடாமலே பாலரண்டுயிர் இப்படியானதால் ஏற்றுக் கௌவையாய் வீற்றிருக்கிறாள் எண்ணந் தீர்த்தவள் தன்னையழைக்கிறேன்

பெண்ணேகேளுன்றன் பிள்ளைரண்டு தன்னுயிரை கள்ளக்கவுசலமாய்க் கரிகாலச்சோழனவன் கொன்னதினாற் காளி கூண்ட மனமிடைந்து என்னிடத்தில் வந்து இவ்வளமை யுமுரைத்து பாலர் முழித்துப்பரம் பெரிய வைகுண்டரும் சீலமுள்ள தர்மச் சீமையரசாளுகையில் வருவேனதுமட்டும் வடவாமுகமதிலே குருவே துணையென குவிந்திருப்பேன் என்றிருந்தாள் இப்போதவட்கு இங்குவரஞாயமுண்டு நற்போடு வொத்த நல்லபரகாளியைத்தான் அழைக்கிறேனென்று ஆதி நினைக்கலுற்றார் பிழைக்கிறேனென்று பெரியகுலமாகாளி உடன்வந்து நாரணரை உவந்து பதங்குவித்து திடன்வந்து நின்று சிவனை யடிதொழுது பாலரெல்லாமுன்றன் பாதமது சேர்ந்தாரென்று மாலவரேயென்றன் மனது மகிழ்ந்ததையா நாரணருமெச்சி நன்றா யகமகிழ்ந்து காரணமதாகக் களிகூர்ந்தினிதாக வைகுண்ட நாதனுக்கும் வாழ்மடந்தை மாதருக்கும் கைகண்ட நல்ல கலியாண முமுகித்து மணிவைகுண்டருக்கு மாமகுடமுஞ்சூட்டி அணியாபரணம் அநேகமெடுத்தணிந்து தங்கக் குல்லாவும் தளிருநிறச் சட்டையிட்டு பெண்கள் குரவையிடப் பொன்மாலையுஞ்சூடி பன்னீர் பரிமளமும் பவளநிறப் பொட்டுமிட்டு நன்னீர்களாடி நாரணக்கண்மணிக்கு ஆலத்தி வன்னி ஆகாயத்தீ வெட்டியுடன் கோல மடவார்கள் குக்குளித்து நீராடி பட்டுப்பணிகள் பரிமளங்க ளும்புரிந்து கட்டுமுறையாய்க் கன்னியர்கள் தாமொயிலாய் தேவர்களும் மூவர்களும் திசைவென்ற மன்னர்களும் மூவர்களும் நல்ல முழித்தபல செந்துகளும் நான்முகனும் வேத நல்ல மறையோரும் வானுகமும் மண்ணகமும் மன்னகமுமொன்றெனவே எல்லோரும் நன்றாய் ஏக மகிழ்ச்சையுடன் நல்லோர்களெல்லாம் நாரணனார் பொற்பதிக்குள் தெருப்பவிசு வந்து சிங்கார பொற்பதிக்குள் மருப்புகழுஞ் சிங்காசனத்தில் மகிழ்ந்திருக்க போவோமென பெரியவைகுண்டரையும் கோவேங்கிரிபோல் அருவைர ரதமீதேற்றி தேவாதியெல்லாம் சிவசிவா போற்றியெனச்சீவசெந்தெல்லாம் திருப்பாட்டுக் கூறிவரத் தெய்வ மடவார்கள் திருக்குரவை பாடிவர மெய்வதிந்த சான்றோர் கட்டியங்கள் கூறிக் கனகப்பொடியுந்தூவி கெட்டிகெட்டியென்றுக் கீர்த்தனங்கள் பாடிவர வாரி சங்கூத வாயு மலர்தூவ நாரி வருணன் நல்லந்தி மலர்த்தூவ இந்தக் கொலுவாய் எழுந்து ரதமீதேறி சிந்தர் மகிழச் சிவமுந்திருமாலும் கூடரதமீதில் கூண்டங்கினிதிருந்து லாடர் மகிழ நல்ல தெருப்பவிசு நேராக வந்து நெடியோன் பதிதனிலே சீராய்ப்பதிமுடுகச் செகலதுவே தானீங்கி அமைத்தலைகொண்டிருந்த அழகுபதி கோபுரமும் சமைத்து இருந்த தங்கமணி மண்டபமும் மண்டபமும் மேடைகளும் மணிவீதி பொற்றெருவும் குண்டரைக் கண்டந்தக் கொடிமரங்களுந்தோன்ற வாரியது நீங்கி வைத்த லக்கில் போயிடவே சாதிவை குண்டர் சாபம் நிறைவேற்றித் தானாய் நினைத்ததெல்லாம் தன்னந்தன்னால் யாம முறையாய் அங்கங்கே குதித்திடுமாம் என்னென்ன யாமம் ஏலமேயிட்டதெல்லாம் பொன்னம் பதிதான் புரந்தாள வந்ததினால் நிறைவேறி நானும் நிச்சித்த மெய்வரம்போல் குறைபடிகள் வராமல் குணமாக வாழுமென்றார் இப்படியே யாமம் எல்லாம் நிறைவேற்றி முப்பத்திரண்டறத்தால் முகித்தசிங்காசனத்தில் செப்பொத்த மாணாக்கர் சேவிக்க இருபுறமும் ஒப்பற்ற பொற்பதிக்குள் உயர்ந்த சிங்காசனத்தில் மறுமன்னரெதிரி வையகத்திலில்லாமல் விறுமஞ்ஞரான வெற்றி வைகுண்டருமே சிங்காசனமிருந்து தெய்வச்செங்கோல் நடத்தி பொங்காரமான புவிதர்மராச்சியத்தில் ஆளுவாரென்ற ஆகம நூற்படியே ஏழுபெண் மக்கள் இனமொன்றாய்த் தான்கூடி வாழவேணுமெனவே வாய்த்த சிங்காசனத்தில் ஆளவைகுண்டர் அவரிருந்தார் பொன்மாதே

ஆதியாம் வைந்தராசர் அருள்செங்கோலேந்தித் தர்ம சோதியினொளிபோல் ரத்தினந் துலங்கிய முடியுஞ் சூடி நீதிபோல் தர்ம ஞாய நெறிபுரிந்தரசேயாள சாதியாமுயர்ந்த சான்றோர் தம்மை வருத்திச்சொல்வார்

மக்களே நீங்களெல்லாம் வாழ்பொன்னம்பதியிற்சென்று முக்கிய மான தர்மயுகநிலமதிலே தன்னால் கக்கிய பொன்கள் சொர்ணம்கைமனங் குளிர அன்னம் பொக்கிஷம் நிறைய வைத்துப்புகழவுண்டினிதாய் வாழ்வீர்

வாழுவீர் தாழ்வில்லாமல் மக்களுங் கிளைகள்கொஞ்சி நாளுமே மகிழ்ச்சை கூர்ந்து நலமுடன் வாழும் போது நீளுமே யெனது செங்கோல் நீதியும் நெறிபோல் வந்து ஆளுமே யுங்கள் தம்மைஅன்புடனலையா வண்ணம்

உன்னிலும் பெரியோனாக ஒருவனுள்ளுயர்த்தி கண்டால் தன்னிலும் பெரியோனாகத் தழைத்தினிதிருந்து வாழ்வீர் என்னிலும்பெரியோனீங்கள் யானுங்கள் தனிலுமேலோன் பொன்னில வூற்று வீசும் பொன்பதி யுகத்து வாழ்வே

ஆணுடன் பெண்ணும் பெற்று அதிகமாய்ச்செல்வமாகி தாணுட நினைவு முற்றுத் தர்மமும் நெறியுங் கற்று வேணுநீள் காலமெல்லாம் துணையோடுநலமாய் வாழ்ந்து பூணுதல் கமல நாதன் பொற்பதம் பெறறு வாழ்வீர்

மனுக்களவர்க்கு வாய்த்தசட்ட மீதருள தனுக்கள் பெரிய சந்தமிருகங்களுக்கு ஒன்றாகக்கூடி ஒக்கவொரு இனம்போல் நன்றாகவோர் தலத்தில் நன்னீர் குடித்துமிக வாழ்ந்திருங்கோ வென்று வைந்தர் மிகச் சட்டமிட்டார் மெச்சிக்குழைந்து மேவியொருஇனம் போல் பட்சி பறவைகட்கும் பாங்காகச் சட்டமிட்டு ஊர்வனங்களுக்கும் ஒருப்போலே சட்டமிட்டு பாருகத்தில் நீங்கள் பசுமையாய் வாழுமென்றார் தேவர் தெய்வார்க்கும் தேவ ஸ்திரிமார்க்கும் மூவர் முனிவருக்கும் முக்கோடித் தேவருக்கும் எல்லோர்க்கும் நன்றாய் இயல்பாகச் சட்டமிட்டு வல்லோர்களான வைகுண்ட மாமணியும் செங்கோலுமேந்தி சிங்காசன மிருந்து மங்காத தேவரம்பை மாதரிருபுறமும் சிங்கார மாகத் தேன்போல் மரைவீச சான்றோர்களேவல் தமதுள் பணிமாற கட்டியங்கள் கூறி கவரி மிகவீச கெட்டியாய்ச் சான்றோர் கிருபையுடன் மகிழ்ந்து பாவித்து நித்தம் பரமவைகுண்டரையும் சேவித்துப் போற்றி தினமேவல் செய்திடவே கன்னியர்களோடும் காதலாய்த் தானீன்ற மன்னதியச்சான்றோர் மக்கள் மனைவியோடும் ஆதி வைகுண்ட ஆனந்த நாரணரும் நீதியாய்த் தர்மம் நேரோர் மணிதூக்கி சிங்காசனத்தில் சிவசூர்ய குடைக்குள் கங்காதரனார் கற்பினையையுள்ளிருத்தி ஆண்ட பரனும் ஆதி முறைப்படியே சான்றோர்கள் போற்ற தர்மபதி யாண்டிருந்தார்

ஆண்டிருந் தரசு செய்ய அணிவரை போலே நீதம் பூண்டிருந் தினிது வாழ பூதல மனுவோர் வாழ கூண்டிருந் தருளாய்ச்குணமுடன் மகிழ்ச்சை கூர்ந்து வேண்டிருஞ் செல்வமோங்க வேற்றுமையில்லா வாழ்ந்தார்

தருமமாய்ப் புவியிலுள்ள சனங்களும் பலது செந்தும் பொறுமையாய்வாழும்போது புரந்தரவானோர் விண்ணோர் நன்மையா யவருங் கூடநாடொன்றாய் மேவி வாழ வன்மமே யில்லா வண்ணம் வைந்தரும் புவியையாண்டார்

ஆண்டனர் புவிதிரி மூன்றினு மோரினம் கூண்டநற் குலமெனக்குலாவி வைந்தரும் தாண்டிய வோர்குடைத் தாங்கு குவலயம் மூன்றினுமோர்மொழி உவந்து வாழ்ந்தனர்

பருதியு மதியெனப் பவந்து சேவனர் கருதியு முகமனும் கமழ்ந்து கைமலர் அருதியு மலர்மகள் அணிந்து பூவினர் கருதியு முறைவழி தூக்கி வாழ்ந்தனர்

பொன்முக வருளது பொதுமி யாவியே அன்முக மதிலும் அமர்ந்து புகுந்திரு இன்முக மதிலு மிருந்து லாவியே பொன்முக வைந்தர்புயத்தில் வாழ்ந்தனர்

முதமுக வானவர் மூன்றென வொன்றினர் சதயித காலெனச் சமைந்து வாழ்ந்தனர் உதவென மனமும் உவந்துலாவியே நிதம்நினை வளர்வறாநிரந்து வாழ்ந்தனர்

சீரணி உமையாள் பங்கர் சிவமகிழ்ந் தினிது வாழ நாரணர் திருவும் வாழ நான்முக வேதன் வாழ வாரண வான லோக மாதவ ரெல்லாம் வாழ காரணக் கன்னியானக் கமலப்பூ மாதும் வாழ

பூமாது வான்பகவதியும் வாழ பொன்மாது சரசுபதி புரிந்து வாழ நாமாதுவானபூமடந்தைவாழ நாகரிகத்தேவியர்கள் நலமாய் வாழ போர்மாது வான மாகாளி வாழ பொன்னுலகத் தர்மபதி பொருந்தி வாழ சீர்மாது கொண்டபுகழ்ச் சான்றோர் வாழ சிவவைந்த ராசருமே சிறந்து வாழ

மாதுதிரு லட்சுமியாள் மகிழ்ந்து போற்றி மாயனுட முகம்நோக்கி மாது தானும் தீதகலும் நாயகமே சிறந்த மாலே தேசமதிலுமக்கெதிரித்தோன்றிற்றென்று நீதமுடன் தோன்றியங்கே யுகங்கள் தோறும் நிந்தனைகள் படுவதெனக்குஅறியச்சொல்வீர் ஈதுரைக்க மாயவட்கு மாயன் தானும் இத்தனையுமெடுத்துரைக்க இசைவாள் பின்னும்

பின்னுமந்த நாதனுட அடியைப் போற்றி பொன்மானே யென்னுடைய தேனே கண்ணே இன்றுவரைக் குறோணியுயிர் தன்னை நீரும் எழுபிறவி செய்தவனை இசைந்து பார்த்தும் நன்னியெள்ளுப் போலினிவு காணா வண்ணம் ஞாயநடுக் கேட்டவனைத் தன்னால் கொன்னீர் பின்னுமுமக்கெதிரியின்ன முண்டோ சொல்லும் பெரியகுரு வெனப்பணிந்து போற்றினாளே

போற்றுமட மயிலான சீதைப் பெண்ணின் பொன்முகம்பார்த்தருள் புரிந்து புகல்வாராயன் சாற்றுமெனக் கெதிரிவந்த வாறே தென்று தானுரைத்தாய் நீயறியத் தண்மை யாகக் கீர்த்தியுட னானுரைத்தேன் காண்ட மதாக கிளிமொழியே யினியெனக்குக் கீழுமேலும் வேற்றுமொரு எதிரியுண்டோ என்று கேட்ட மெல்லியிள மயிலனைய மாதே கேண்மோ

மாதே நீ கேளு ஈரேழு பூமி மண்ணிலுவராழிவளர் வரைசூழீதுள் சீதே நீ வரையெனதுள் அறியா மாயச் செகவீர சாலமது அனேக முண்டு பூதேயென வெகுண்டுவரம் உகங்கள் தோறும் பிறக்கவே நான்கேட்கப் புரிந்தாரீசர் வாதேயென் பகைஞ்ஞர்வழிக் குலங்கள் மாய்த்து மறுமன்னரெதிரியில்லா வண்ணம் வாழ்வோம்

இனிமேலுமெனக்கெதிரி இல்லை மானே எமது மக்களொடுங்கூடி இருந்து வாழ்வோம் மனுவோரும் முனிவோரும் வான லோக மாலோரும் என்வாக்கு வழியே வாழ்வார் இனிமேலும் பயமேதோ எமக்கு மாதே இலங்கு பதிமீதிலுனை இடமே வைத்து பனிமாறு காலம்வரை அரசேயாள்வோம் பதறமனம் வேண்டாமெனப் பகர்ந்தார் மாயன்

மாயனுரை மனமதிலே மாது கேட்டு மகிழ்ந்து முகமலர்ந்து வாய் புதைத்துச்சொல்வாள் தீயனெனனு மாகொடிய அரக்கர் சேர்க்கை திரையறுக்க நீர்துணிந்து சென்ற நாளே ஞாயநெறி காணாத அடிமை போல நடுங்கி மனதிடைந்து வெகு நாளே தேடி ஆயருமை நாயடியாள் இன்று கண்டேன் அகமகிழ்ந்தேன் எனது துயர் இழந்திட்டேனே

இழந்திட்டேனென்ற மடமயிலே மானே என்றாதியிருகையால் மாதை யாவி புகழந்திட்ட மானமணிமேடை புக்கி பூவையரையிடமிருத்திப் புகழ்ந்து வாழ மகிழ்ந்திட்ட மானமுறை நீதி வாழ மறைவாழ இறையவரும் மகிழ்ந்து வாழ உகந்திட்ட மானமுறை நூல்போல் வாழ உம்பர்சிவ மாதுலக மனுவோர் வாழ

மாதவட்குத் தானுரைத்தக் காண்டந்தன்னை வையகத்து மனுவோர்கள் அறிய மாயன் தாதணியுந் தாமரையூர்ப்பதியில் மேவித் தழைத்திருக்கும் சான்றோரில் தர்ம வாளன் நாதனருள் மறவாத இராம கிருஷ்ண நாடனக மகிழ்ந்து பெறநலமாய் வந்த சீடனரி கோபாலன் மனதுள்ளோதி செப்பெனவே நாதனுரை தொகுத்த வாறே

வாறான கதைவகுத்த நாதன் வாழ வகுத்தெழுதிப் படித்தகுல மனுவோர் வாழ வீறான தெய்வசத்தி மடவார் வாழ வீரமுக லட்சுமியும் விரைந்து வாழ நாராயணரருளால் படித்தோர் கேட்டோர் நல்லவுரை மிகத்தெளிந்து நவின்றோர் கற்றோர் ஆறாறும் பெற்றவர்கள் அகமே கூர்ந்து அன்றூழி காலமிருந்து ஆள்வார் திண்ணம்

திண்ணமிந்த அகிலத்திரட்டு அம்மானை தன்னை திடமுடனே மனவிருப்பமாகக் கேட்டோர் எண்ணமுந்த வினைதீர்ந்து ஞானமான இறையவரின் பாதாரத்தியல்பும் பெற்று வண்ணமந்தத் தர்மபதி வாழ்வும் பெற்று மக்களுடன் கிளைபெருகி மகிழ்ச்சியாக நிண்ணமிந்தப் பார்மீதில் சாகா வண்ணம் நீடூழி காலமிருந்து ஆள்வார் திண்ணம்

காப்பு

“ஏர்” அணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி காரணம்போல் செய்ததை கட்டுரைக்கப்பூரணமாய் ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி நாராயணர் பாதம் நாவினில்

பாண்டவர் தமக்காய் தோன்றி பகைதனை முடித்த மாயோன் வீன்றிய கலியன் வந்த விசளத்தால் கயிலையேகி சான்றவர் தமக்காயிந்தத் தரணியில் வந்த ஞாயம் ஆண்டவர் அருளிச்செய்ய அம்மானை எழுதலுற்றேன்

அலையிலே துயில் ஆதிவராகவா ஆண்டாயிரத்தெட்டில் ஓர்பிள்ளை சிலையிலே பொன்மகர வயிற்றினுள் விஞ்சை பெற்று திருச்சம்பதியதில் அலையிலே மகரப்பாலை உமிழ்ந்து பின் உற்ற தெச்சணமீதில் இருந்துதான் உலகில் சோதனைபார்த்தவர் வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே

திருமொழி சீதையாட்கு சிவதலம் புகழ எங்கும் ஒருபிள்ளை உருவாய்த்தோன்றி உகபரசோதனைகள் பார்த்து திருமுடி சூடித் தர்மச் சீமையில் செங்கோலேந்தி ஒருமொழியதற்குள் ஆண்ட உவமையை உரைக்கலுற்றார்.

சிவமே சிவமே சிவமணியே தெய்வ முதலே சிதம்பரமே தவமே தவமே தவக்கொழுந்தே தாண்டவ சங்கராதமியேன் எங்களுட பவமே பவமே பலநாளுஞ் செய்த பவமறுத்துந்தன் அகமே வைத்தெங்களை ஆட்கொள்வாய் சிவசிவசிவசிவஅரகரா அரகரா


............ஏகம் ஒரு பரம்...........

"https://ta.wiktionary.org/w/index.php?title=அகிலத்திரட்டு_அம்மானை&oldid=1997392" இலிருந்து மீள்விக்கப்பட்டது