அடியொட்டி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

அடியொட்டி, (உரிச்சொல்).

பொருள்[தொகு]

 1. பின்பற்றி (பிறர் காட்டிய வழியிலேயே)
 2. காலில் குத்தும்படி தரையில் நட்டுவைக்கும் ஒரு கருவி


மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. in pursuance of
 2. following foot steps of the predecessors/elders
 3. a sharp pointed instrument planted on ground to pierce the feet of trespassing persons or cattle


விளக்கம்[தொகு]

 • அடியொற்றி என்னும் மூலசொல்லின் பேச்சு வழக்காக அடியொட்டி என்னும்சொல் முதற் பொருளுக்கு மட்டுமே பொருந்தும்...இரண்டாம் பொருளுக்கு மூலமும்,பேச்சுவழக்கும் அடியொட்டியே ஆகும்...
 • ஒரு காரியத்தை ஒருவர் வெற்றிகரமாகவும், சிக்கனமாகவும் செய்து முடித்தால் அதே காரியத்தை வேறொருவர் செய்யும்போது முன்னவரின் ஆலோசனையோடு அவரின் நடையை (அடியை) பின்பற்றி (ஒட்டி) செய்து முடிப்பதே அடியொட்டி நடப்பதாகும்...
 • ஒருவரின் நிலச்சொத்தில் மற்றொரு உரிமையில்லாதவர் அத்துமீறி நுழையத் தடையாக அல்லது அவருடைய கால்நடைகள் புகுந்து நாசனம் செய்யாமலிருக்க நிலத்தில் ஆங்காங்கே நட்டுவைத்திருக்கும் கூரியமுனை கொண்டக் கருவிகள்...இதன் மேல் கால் பதித்தமாத்திரத்தில் பாதங்களைக் குத்திக் கிழித்துவிடும்..

பயன்பாடு[தொகு]

 • இருக்கும் கொஞ்ச பணத்தில் வீடு எப்படிக் கட்டுவது எனப் பயப்படுகிறாயா? அதெல்லாம் ஒன்றும் பெரியதாக யோசிக்க வேண்டாம்! அடுத்தத் தெரு குமரேசன் சொற்பப் பணத்தில் அழகிய வீடு ஒன்று கட்டியிருக்கிறார்! அவரைப்போய்க் கேட்டு அவரின் அடியொட்டி நடந்து உன் வீட்டையும் கட்டிக்கொள்...ஒரு பிரச்சினையும் இல்லை!...
 • ஊர்க்கோடியில் பண்ணையாரின் தோட்டத்தில் மாங்காயடிக்க நுழைந்து விடாதே...நிறைய அடியொட்டி நட்டுவைத்திருக்கிறார்...அவர் ஆட்களுக்குதான் தெரியும் எங்கெங்கே என்று...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---அடியொட்டி--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடியொட்டி&oldid=1218824" இருந்து மீள்விக்கப்பட்டது