அடுத்தும் தொடுத்தும்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அடுத்தும் தொடுத்தும்

சொல் பொருள்

அடுத்தல் – இடைவெளிப்படுதல் தொடுத்தல் – இடைவெளிப்படாமை.

விளக்கம்

அண்டை வீடு, அடுத்தவீடு என்பதையும், அண்டியவர் அடுத்தவர் என்பதையும் கொண்டு அடுத்தல் பொருளை அறிக. தொடர், தொடர்ச்சி, தொடர்பு, தொடலை, தொடர்வண்டி, தொடர்கதை, தொடர்பொழிவு இவற்றால் தொடுத்தல் பொருளை அறிக.

“ அடுத்து முயன்றாலும் ஆகுநாள் அன்றி எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா” – மூதுரை

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடுத்தும்_தொடுத்தும்&oldid=1913264" இலிருந்து மீள்விக்கப்பட்டது