அண்டாகுண்டா

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அண்டாகுண்டா

சொல் பொருள்

அண்டா – மிகுதியான அளவில் சோறாக்குதற்குப் பயன்படுத்தும் வெண்கல ஏனம்; கொப்பரை என்பதும் அது. குண்டா – அண்டாவில் ஆக்கப்பெற்ற சோற்றை அள்ளிப்போட்டுப் பந்தியில் பரிமாறுதற்குப் பயன்படுத்தும் ஏனம்.

விளக்கம்

கலவகையைச் சேர்ந்தவை இவை. வடிவ அமைப்பால் இரண்டும் ஒத்தவை. பருமை சிறுமையால் வேறுபட்டவை. அண்டாவிற்குக் கைப்பிடி வளையங்கள் உண்டு. குண்டாவிற்கு அவை இல்லை. உடல் நலமுறைப்படி “அண்டாச்சோறு அண்டக்கூடாது” என்பர்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அண்டாகுண்டா&oldid=1913263" இலிருந்து மீள்விக்கப்பட்டது