உள்ளடக்கத்துக்குச் செல்

அண்டைஅயல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அண்டைஅயல்

சொல் பொருள்

அண்டை – தன் வீட்டை அண்டி (நெருங்கி) இருக்கும் வீட்டார் அயல் – அண்டை வீட்டுக்கு அடுத்திருக்கும் வீட்டார். அண் – நெருக்கம்; அணுக்கம்-நெருக்கம்; அணுக்கர்- நண்பர்; அணிமை – அண்மை, இவற்றால் அண்டை நெருக்கப் பொருளதாதல் கொள்க. அயலார் – பிறர்; அயவு – அகலம்; ‘திருவருட்கு அயலுமாய்’ என்பார் தாயுமானவர். அயல், அப்பால் என்னும் பொருட்டதாம்.

விளக்கம்

“கொண்டவர்கள் கொடுத்தவர்கள், அண்டியவர்கள் அடுத்தவர்கள் எல்லா மக்களும் நல்லா இருக்கணும்” என்பது வாழ்த்து வகையுள் ஒன்று.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அண்டைஅயல்&oldid=1913262" இலிருந்து மீள்விக்கப்பட்டது