அதரப்பதற

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அதரப்பதற

சொல் பொருள்

அதரல் – நடுக்கமுறல் பதறல் – நாடி, துடி மிகல்.

விளக்கம்

அதிர்வு-நடுக்கம்; அச்சம் உண்டாய போது உடல் நடுக்கமும் உள நடுக்கமும் ஒருங்கே உண்டாம். உளநடுக்கத்தால் உரைநடுக்கமும் மேலெழும். கட்புலனாகும் உடல்நடுக்கம் அதரல் எனவும், கட்புலனாகாத நாடித் துடிப்பு மிகுதலும், உரைப்பதற்றமும் பதறல் எனவும் சுட்டப் பெற்றனவாம். ஒடுங்கிய உடம்பு, நடுங்கிய நிலை, மலங்கிய கண், கலங்கிய மனம், மறைந்துவருதல், கையெதிர் மறுத்தல் என்பவை அச்சமுற்றோர்க்கு உளவாதலைச் சிலம்பு சொல்லும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அதரப்பதற&oldid=1913260" இலிருந்து மீள்விக்கப்பட்டது