அனுமன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

விக்கிப்பீடியாவின்
கட்டுரையையும் காண்க:

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)
அனுமன்
அனுமன்

அனுமன், பெயர்ச்சொல்

பொருள்[தொகு]

  1. இராமனின் தலைசிறந்த சேவகரான ஹனுமார்..

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. lord hanuman, the most obedient servant of hindu god lord rama

விளக்கம்[தொகு]

  • இராமாயணத்தில் இராமபிரானின் ஒப்பற்ற சேவகராக திகழ்ந்து, இராவணனுடனான போரில் செய்தற்கரிய பணிகள் செய்து என்றென்றும் இராமனின் தாசனாகவே திகழ்ந்த ஹனுமான் (அனுமார்) என்னும் வானர முகம்கொண்ட கடவுள்... இவரைத் தனியே ஓர் ஒப்பற்ற கடவுளாகக் கொண்டாடுவோர் ஏராளம்... ஒவ்வொரு பெருமாள் கோவிலிலும் இவருக்கு தனியே சந்நிதி உண்டு...தனிப்பட்ட கோவில்களுமுண்டு... இவரை வழிபட்டால் ஞானம் புத்தி, தைரியம், கல்வி, அபரிதமான பலம் ஆகியவன கிட்டுவதோடு, காத்து, கருப்பு, பேய், பிசாசு ஆகிய தீய சக்திகள், நோய் நொடிகள் அண்டாமல் இருக்குமென்றும், இவருடைய பக்தர்கள் மீது பில்லி சூனியம் முதலான தீய செய்கைகளைச் செய்யமுடியாது என்றும் மிக திடமாக நம்பப்படுகிறது... திருமாலின் அவதாரமான இராமனுக்கு மிக நெருங்கியவராதலாலும் அவரால் அனுக்கிரகிப்பட்டவராயும் இருப்பதால் இவருக்கு 'சிறிய திருவடி' என்ற சிறப்புப்பெயரும் உண்டு... சாகா வரம் பெற்று இன்றும் சிரஞ்சீவியாக வாழ்ந்துக் கொண்டிருப்பவர்...'ஹனுமான் சாலீஸா' என்னும் இந்தி மொழியிலுள்ள இவருக்கான துதியை தினமும் படிப்போர் ஏராளம். இவருக்கு பக்தர்கள் செய்யும் வேண்டுதல்களில் சிறப்பானவை 'வடை மாலை' அணிவித்தல் மற்றும் சந்தனக் காப்பு அணிவித்தல் ஆகும்.


( மொழிகள் )

சான்றுகள் ---அனுமன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அனுமன்&oldid=1986304" இலிருந்து மீள்விக்கப்பட்டது