அனுமார் வடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
பூசையின்போது வடைமாலை அணிவிக்கப்படும் அனுமார்

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

பொருள்[தொகு]

அனுமார் வடை, பெயர்ச்சொல்.

  1. அனுமனுக்கு மாலையாக அணிவிக்கப்படும் வடை

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. the black gram+pepper mixed, thin indian donut fried in oil and offered to the hindu deity lord hanuman in worship, in the form of a garland

விளக்கம்[தொகு]

  • அனுமனுக்கு பக்தர்கள் செய்யும் பூசைகளில் வடைகளால் கோர்க்கப்பட்ட மாலையை மூல விக்கிரகத்திற்கு அணிவித்து வழிபடுதல் ஒரு சிறப்பான முறையாகும்...இது வடைமாலை சார்த்துதல் எனப்படுகிறது...இதற்கு முழு வெள்ளை அல்லது கருப்பு உளுந்தை நன்றாகத் தண்ணீரில் ஊறவைத்துக் களைந்து வடிக்கட்டி எடுத்து, மிளகு, உப்பு சேர்த்து, தண்ணீர் விடாமல் மைய கல்லுரலில் அரைத்துக்கொள்வர்...பிறகு மிக மெல்லியதாக உள்ளங்கை அல்லது சுத்தமானத் துணியில் தட்டிக் கடலையெண்ணைய்யில், நீர் வற்றிப் போகுமளவுப் பொரித்து எடுப்பர்...இந்த வடைகளை வாழைநாரில் மாலையாகக்கட்டி அனுமனுக்கு அணிவித்துப் பூசை செய்வர்...பூசை முடிந்த பிறகு வடைகளை அனுமான் பிரசாதமாக அனைவருக்கும் பகிர்ந்தளிப்பர்...இதுவே அனுமார் வடை ஆகும்...சாதாரணமாக வீடுகளில் நொறுக்குத்தீனியாக இவ்வகை வடைகள் தயாரிக்கப்பட்டால் அவை மிளகு வடை எனப்படும்...அனுமனுக்கு படைக்கப்பட்ட வடைகள் மாத்திரமே அனுமார் வடை ஆகும்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=அனுமார்_வடை&oldid=1220733" இருந்து மீள்விக்கப்பட்டது