அரக்கப்பரக்கவிழித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அரக்கப்பரக் கவிழித்தல்

சொல் பொருள்

அரக்கல் – முகம் கண் கால் கை முதலியவற்றைத் தேய்த்தல். பரக்கல் – சுற்றும் முற்றும் திருதிருவென அகல விழித்தல்.

சொல் பொருள் விளக்கம்

குழந்தை அழும்போதும் அச்சத்தால் ஒருவர் மருளும் போதும் முகம் முதலியவற்றைத் தேய்த்தலையும் ‘திருதிரு’ வென அங்கும் இங்கும் மருண்டும் வெருண்டும் பார்த்தலையும் கண்டு ‘அரக்கப்பரக்க’ விழிப்பதாகச் சொல்லுவர். அறியாப் புதிய இடத்தில் திகைப்போடு இருப்பவனையும் ‘அரக்கப் பரக்க’ விழிப்பதாகச் சொல்லுவர்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அரக்கப்பரக்கவிழித்தல்&oldid=1913258" இலிருந்து மீள்விக்கப்பட்டது