உள்ளடக்கத்துக்குச் செல்

அறிஞர் அண்ணா புற்று நோய் மருத்துவமனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அறிஞர் அண்ணா புற்று நோய் மருத்துவமனை , சென்னை-பெங்களூரு நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள புற்றுநோய் மருத்துவமனையாகும்.தமிழக முதல்வராய் இருந்த அண்ணா புற்று நோயினால் இயற்கை எய்தியதனைத் தொடர்ந்து, தமிழக அரசு அவரது நினைவாக காஞ்சிபுரத்தில் இந்த மருத்துமனையினை உருவாக்கியது.சிலகாலம் சுற்றுவட்டார கிராமங்களில் புற்றுநோய் சோதனைமுகாம்களை நடத்தியது. இப்போது அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கிறது.சிறப்பாக கதிர் மருத்துவம், அறுவை மருத்துவம், வேதி மருத்துவத்துறை,மற்றும் அனைத்து மருத்துவ வசதிகளையும் கொண்டுள்ளது.எம்.ஜி ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்துடன் இணைந்த எம்.எஸ.சி. மருத்துவ இயற்பியல் பட்ட மேற்படிப்பும் நடத்தப்படுகிறது.புற்று நோய் ஆய்விற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.