அற்றை(அத்தை)ப் பட்டினி அரைப்பட்டினி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அற்றை(அத்தை)ப் பட்டினி அரைப்பட்டினி

சொல் பொருள்

அற்றைப்பட்டினி – ஒவ்வொரு நாளும் ஒரு வேளையோ இரு வேளையோ சோற்றுக்கு இல்லாமல் பட்டினி கிடத்தல் . அரைப்பட்டினி – ஒவ்வொரு வேளையும் வயிறார உண்ண வழியின்றி அரைவயிறும் குறைவயிறுமாகக் கிடத்தல்.

விளக்கம்

அற்றைப் பட்டினி ‘ பொழுது மறுத் துண்ணல்’ என நற்றிணையில் சொல்லப்படும். ஒரு வேளையுண்டு ஒரு வேளையுண்ணாத வயிற்றை, ஆற்றில் மேடு பள்ளமாய்ப் படிந்துள்ள மணல் வரிக்கு உவமையாகச் சொல்கிறது அது. வயிற்று மேடு பள்ளம், மணல் மேடு பள்ளம் போலக் காட்டப்படுகிறது. உண்ட வயிறு மேடு; உண்ணாத வயிறு பள்ளம். பட்டுணி-பட்டினி.