அலுங்காமல் நலுங்காமல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அலுங்காமல் நலுங்காமல்

சொல் பொருள்

அலுங்காமல் – அசையாமல் நலுங்காமல் – ஆடாமல்

விளக்கம்

அலுங்குதல் நிகழ்ந்த பின்னே, நலுங்குதல் நிகழும். தட்டான்கல் அல்லது சொட்டான்கல் ஆட்டத்தில் ஒரு கல்லை எடுக்கும் போது விரல் இன்னொரு கல்லில்பட்டு அலுங்கி விட்டால் ஆட்டத்தை நிறுத்திவிட வேண்டுமென விதியுண்டு. நலுங்குதல். இடம் பெயரும் அளவு ஆடுதலாம். இனி, ‘அலுங்காமல் குலுங்காமல் நடப்பாள்’ என்பதில் குலுங்குதல் நலுங்குதல் பொருள் தருவதேயாம். குலுங்கிக் குலுங்கி அழுதல் என்பதிலும், குலுக்குதல் என்பதிலும் குலுங்குதலுக்கு ஆடுதல் பொருள் உண்மை அறிய வரும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலுங்காமல்_நலுங்காமல்&oldid=1913254" இலிருந்து மீள்விக்கப்பட்டது