உள்ளடக்கத்துக்குச் செல்

அலுப்பும் சலிப்பும்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அலுப்பும் சலிப்பும்

சொல் பொருள்

அலுப்பு – உடலில் உண்டாகும் வலியும் குத்தும் குடைவும் இழுப்பும் பிறவும். சலிப்பு – உள்ளத்தில் உண்டாகும் வெறுப்பும் சோர்வும் நோவும் பிறவும்.

விளக்கம்

அலங்குதல், அலுங்குதல் – அசைதல்; இடையீடு இல்லாமல் உழைப்பவர் அலுப்படையவர். அலுப்பு மருந்தென ஒரு மருந்தும் பல சரக்குக் கடைகளில் உண்டு. முன்னே அலுப்புக்குக் ‘கழாயம்’ (கசாயம்) கொடுப்பர்; இப்பொழுது குடியே அலுப்பு மருந்தாய்க் குடிகெடுத்து வருகின்றது. சலித்தல்-துளைத்தல்; சல்லடை அறிக. உள்ளத்தைத் துளைக்கும் துளைப்பே சலிப்பாம். மனத்திண்மையை ‘இறையும் சலியா வலிமை’ என்பார் கம்பர் (உயுத்த1733)

"https://ta.wiktionary.org/w/index.php?title=அலுப்பும்_சலிப்பும்&oldid=1913253" இலிருந்து மீள்விக்கப்பட்டது