அல்லாடுதல் மல்லாடுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அல்லாடுதல் மல்லாடுதல்

சொல் பொருள்

அல்லாடுதல் – அடிபட்டுக் கீழே விழுதல் மல்லாடுதல் – அடிபோடுவதற்கு மேலேவிழுதல்

விளக்கம்

சண்டையில் கீழே விழுந்தும் மேலே எழுந்தும், தாக்குண்டும் தாக்கியும் போரிடுவாரை அல்லாட்டமும், மல்லாட்டமும் போடுவதாகக் கூறுவர். இனி, வறுமையில் தத்தளித்தும், ஒருவாறு வறுமையை முனைந்து வென்றும்,மீண்டும் வறுமையும் சமாளிப்புமாக வாழ்பவரை அவர்பாடு எப்போதும் ‘அல்லாட்ட மல்லாட்டந்தான்’ என்பர். போர்த் தத்தளிப்பு வறுமைத் தத்தளிப்புக்கு ஆகி வந்ததாம். வெல்லவும் முடியாமல் தோற்கவும் இல்லாமல் திண்டாடும் இரு நிலையையும் விளக்கும் இணைச் சொல் இது.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அல்லாடுதல்_மல்லாடுதல்&oldid=1913256" இலிருந்து மீள்விக்கப்பட்டது